Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூதர்களும் தமிழர்களும்-- ஜானமித்ரன்

Featured Replies

இன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் வழற்சிகள், ஒன்றிய சிந்தனைகள் என்பவற்றின்மூலம் இஸ்ரேல் என்ற தேசத்தினை

உருவாக்கினார்களோ அதேபோல இன்று செயற்படவேண்டும் என பல தரப்புகளிடம் இருந்து கருத்துக்களும் தற்போது வலுப்பெற்று வருவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்,

கேள்விப்பட்டிருப்பீர்கள்.இந

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்லஇ வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடிஇ நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.

ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது.

வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும்இ இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள்இ இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை."

ஆறு அறிவு உள்ள அனைத்து தமிழரும் திரும்ப திரும்ப படித்து பார்க்க வேண்டிய வசனங்கள். உலகம் இப்படித்தான் இயங்குகிறது என்ற அடிப்படை அரசியல் தெரிந்தவர்களால் எளிதாக புரிய கூடிய இந்த வார்த்தைகளில் எந்த பொய்யும் இல்லை. ஆனால் சும்மா தட்டச்சு போர்வீரர்கள் ஆகி........... வீணாண வார்த்தைகளை கொட்டுவதிலேயே நாம் குறியாக இருக்கிறோம் என்பது மிகமனவருத்தமானது.......... அதும் தற்போதைய சூழலில். மக்கள் முகாம்களில் அடைபட்ட்டுள்ளார்கள் என்பது என்னமோ உண்மைதான் அதற்காக மக்கள் முகாம்களை விட்டு வெளியாறிவிட்டால் எதோ சுதந்திரம் வந்துவிடும் என்று பிதற்றுவது நியாயமாகுமா? அப்டியெனில் யாழ். திருகோணமலை. மட்டகளப்பு மக்கள் முகாம்களில் இல்லைதானே? முhகம்களில் மக்கள் இன்னல்களை அனுபவிப்பதை யார் மறுக்கிறார்கள் ஆனால் அதையே எமக்கு சாதகமாக பயன்படுத்த கூடிய எத்தனையோ சந்தர்ப்ங்களை நாம் கடந்துகொண்டு இருக்கிறோம்.......... இப்போதும் அதை யாராவது செய்வார்கள் என்றுதான் காத்திருக்கிறோமே தவிர..... இந்த யாழ்களத்தில் கூட நாம் எந்த வினையான விவாதங்களையும் கூட முன்வைக்கவில்லை. யாரால் இந்த நிலைக்கு வந்தோம் என்று ஆராய்வதிலும் காட்டி....... இந்த நிலையில் இருந்து எப்படி மாறுவது என்று சிந்திப்பதே சிறந்தது. பின்பு யாரவது வரலாறுகளை எழுத நினைப்பவர்கள் உட்கார்ந்து இருந்து ஆராயட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை,

எனக்கும் இப்படியான ஒரு எண்ணம் இருந்தது ...எம்மவர் பலரும் இதனை மனதில் நினைத்து கொண்டிருப்பார்கள் ....எமக்கு பாரிய அழிவை ஏற்படுத்திய சிங்களவனுக்கும் உலக 'ஜனநாயக " வாதிகளுக்கும் நீண்ட கால திட்டத்தில் காலப் போக்கில் ஒரு பாரிய அடி கொடுக்க வேண்டும் ....இப்பொழுது முகாம்களிலுள்ள மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கட்டும் .....நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாடு கடந்த அரசாங்க திட்டத்தை பலப் படுத்த வேண்டும் ...எமக்கென ஒரு வங்கியை,credit union சர்வதேச நாடெங்கும் செயல்படக் கூடிய மாதிரியாக ஒரு முன்மாதிரியான நிறுவங்களை உருவாக்க வேண்டும் ....telecommunication, IT, BANKING, Credit bureaus, media என்று நமக்கென ஒரு கட்டமைப்பை சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக உருவாக்க வேண்டும் ... இம் மாதிரியான எமது நிறுவங்களின் வளர்ச்சி நிலையான தன்மையை பார்த்து வெளி நாடவரும் எமது நிறுவங்களில் முதலீடு செய்ய முன்வர வைக்க வேண்டும் .....ஏலத்தில் வரும் பெரிய நிறுவனங்களை வேண்டி எல்லா துறை களிலும் உலகளாவிய ரீதியில் காலுன்ற வேண்டும் .....

எவ்வளவு காலம் தான் மற்றவன் எமது செய்தியப் போடா மாட்டானா என்று பரதேசி நாய்கள் மாதிரி அலைவது ? அவர்களை எம்மை நோக்கி வர வைக்க வேண்டும் ....பல்கலைக்கழகம், வைத்தியசாலை , முன்னணி பத்திரிகைகள் , தொலைக் காட்சிகள் என எமது முதலீடு இருக்க வேண்டும் ....எல்லா துறை களிலும் முடிவெடுக்கக் கூடிய அதிகார வர்க்கத்தில் எம்மவர் இருக்க வேண்டும் .....

மன்னிக்க வேணும் பகல் கனவோ தெரியாது ......ஆனால் நாம் எல்லோரும் பிரபாகரன் என்ற நினைப்பு பொறுப்புணர்ச்சி , நமது இனத்துக்கு இனத்தின் விடிவுக்கு நாமே வழி சமைக்க வேண்டும் ... இன்னொருவனை இன்னொரு நாட்டை நினைத்து கொண்டிருந்தால் தமிழனின் தலை கடைசியாக எல்லாருக்கும் மாவரைக்க தான் லாய்க்காகிப் போய்விடும் ....நமை தேசிய தலைவர் பிரபாகரன் விரைவில் தோன்றி காப்ப்ரற்றுவர் ...அந்த தலைவன் முருகனுக்கு நிகரானவன் , சூரிய தேவன் , மரணத்தை வென்றவன் என்று சொல்லி அந்த ஒப்பற்ற தலைவனின் முதுகில ஏறி சவாரி செய்தது போதும் இனியும் வேண்டாம் அந்த நாதியற்ற வாழ்க்கை ...ஒரு இனத்துக்காக போராட வெளிக்கிட்டால் என்னென்ன தியாகம் எல்லாம் செய்ய வேண்டி வரும் , என்று ஒரு வரலாற்ற்யே வழிக்கட்டியாக்கி விட்டிருக்கிறார் ....அதனை பின் பற்றி அவரின் தியாகத்தை , வாழ்க்கையை முன்மாதிரியாக்கி , மாவீரத் தெய்வங்கள் போட்ட ரோட்ட தொடர்து போடுவது தான் ஒரே வழி ....20 0000 பேரை ஒரே நாளில் கொண்டு போட்டான் , 300 000 சனம் முகாமில கஷ்டப் படுகுது எண்டு ஒண்டும் செய்யாம பொறுப்ப தட்டி களிச்சொமேண்டால் நாம் இனியும் நம்மை தமிழர் என்று சொல்வதில் பிரயோசனம் இல்லை .....அந்த சனம் படும் கஷ்டத்தை எப்படி போக்குவது என்று ஆக்க பூர்வமாக யோசிக்க வேண்டும் ....இனியும் இந்த கட்சிக்காக சண்டை, தலைவனுக்காக சண்டை , கொடிக்காக சண்டை , விட்டு கொடிப்பின்மை , குழிபறித்தல் , காடிகொடுத்தல், பணத்தை குறிக்கோளாகக் கொண்டு எதுவும் செய்தல் ...போன்ற வேலைகளை தவிர்க்க வேண்டும் ....இனத்தின் பெயரால் பல நூற்றாண்டு காலமாய் பரந்து பட்டு வாழும் தமிழர்கள் ஒன்று பட வேண்டிய தருணம் வந்து விட்டது ...

இது என்னை போன்ற பலரின் சின்ன ஒரு குட்டி ஆசை ....பார்ப்போம் நிறை வெறுதா எண்டு ....

ஏதாவது தவறிருந்தால் மன்னிக்கவும் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"

ஆனால் ஜேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்பிய யூதர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு, கிறிஸ்தவம் என்றொரு மதம் தோன்றியதன் அடிப்படையே இதுதான். அப்படி ஒரு பிளவு உருவாக காரணமாக இருந்தவன் யூதாஸ். ஜேசுவைக்காட்டிக்கொடுத்தவன், ஜேசுவை கொலை செய்தவன் எனக் கிறிஸ்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டவன்.

யூதாஸ் என்ற தனி மனிதன் ஒருவன் சரிவர யோசிக்காமல் அவசரப்பட்டு செய்த ஒரு காரியம், யூதர்கள் என்றாலே காட்டிக்கொடுப்பவர்கள் என்று காலம்காலமாக உலகம் மாறி மாறி யூதர்களை பழிவாங்கும் நிலைக்கு ஆக்கியது. இதில் முக்கிமான ஒரு விடயம் என்னவென்றால், ஜேசுவும் யூதனே என்ற வாதம் முன்வைக்கப்படுவதுதான்.

இதன்மூலம் யூதர்கள் அனுபவித்த வலிகள் வேதனைகள் எராளம். இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு என்றால் அது யூதர்களுடையதுதான்

101% எமக்கும் பொருந்துகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.