Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலகத் தமிழர் வைப்பகம் அல்லது நிதியம் ஒரு பார்வை(இது ஒரு சிறிய பார்வை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலகத் தமிழர் வைப்பகம் அல்லது நிதியம் ஒரு பார்வை(இது ஒரு சிறிய பார்வை)

----------------------------------------------------------------------------------------------------------

அனைத்துலக தமிழர் வைப்பகம் அல்லது நிதியம் என்ற நிறுவனம் என்பது காலத்தின் தேவைக்கானதொரு அமைப்பாக விளக்குவதோடு தமிழினத்தினது பொருண்மிய வாழ்வை உயர்த்தும் பெரும் தளமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இதனைத் தமிழினம் ஒன்றிணைந்து செய்ய முன்வருமாயின், எமது இனம் தெளிவான அவதானிப்பைப் பெறும். ஏனெனில் இன்றைய உலக ஒழுங்கு என்பதை உற்று நோக்கினால் அதன் ஆதியும் அந்தமுமாய் நிற்பது பொருண்மியத் திரட்சியே. பொருண்மியத் திரட்சியானது இன்று ஒரு காந்தமாகவும், அதனைச் சுற்றியோ அல்லது அதனது ஈர்ப்பிலோ அனைத்தும் நிகழ்கின்றது என்பதே உண்மையாகும். இதனை நாம் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற பெரும் போர்களிலும் அவதானிக்கலாம். பொருண்மியப் பலமானது தமக்கிடையேயான இசைவாக்கத்துக்கான கருவியாகவும், தம்மோடு இசைவாக நிற்போரைப் பாதுகாப்பதற்கான கருவியாகவும் உள்ளது. அதனையே உலக ஒழுங்கென்ற போர்வையில் ஏனைய வறிய நாடுகளைக் கட்டுப்படுத்தவும் சுரண்டவும் வளர்ந்த நாடுகள் பயன்படுத்துகின்றன. இந்த இசைவே கொசொவோவின்KOSOVO (2005 மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 2,2மில்லியன். பரப்பளவு4,203 சதுரமைல்)விடுதலையை மேற்கும், தென்ஒஸெற்றியா South Ossetia(2000 மதிப்பீட்டின்படி மக்கள்தொகை75,000 பரப்பளவு1,506 சதுரமைல்) அப்காசியா Abkhasia(2003மதிப்பீட்டின்படி மக்கள்தொகை216,000(அல்லது இதற்கும் குறைவு உறுதிப்படுதப்பட வேண்டும்.) பரப்பளவு3,256 சதுரமைல்) மேற்கினது எதிர்நிலை நாடாக எப்போதுமே இருக்கும் ருஸ்யா இவற்றை அங்கீகரித்துப் படைகளையனுப்பிப் பாதுகாப்புமளித்தது என்பது உலகின் அண்மைய பதிவுகளாகும்.

இலங்கையரசுகூட புலம்பெயர் தமிழர்களது பணமாற்றீடுகளாலும் முதலீடுகளாலும் குறிப்பிட்டளவு நன்மையை அடைவதைக் காணலாம். சிங்களத் தேசியத்துக்கான நிதி முதலீட்டு நிறுவனங்கள் பல உள்ளன. ஆனால் தமிழருக்கான முதலீட்டு நிறுவனங்கள் எதுவுமே இல்லை. இன்று பெரும்பாலான தமிழர்கள் என்.ஆர்.எவ்.சீ(NRFC) எனப்படும் வதியாதோர் வைப்புக் கணக்குகளில் கணிசமான முதலீடுகளை வைத்துள்ளார்கள் என்பது யாவருமறிந்த விடயமாகும். நானறிந்த குடும்பமொன்று தமது வயோதிபத் தாயாருக்கு மாதாந்தம் பணம் அனுப்பேலாது என்று நான்கு லட்சம் இலங்கை ரூபாய்களை வைப்பிலிட்டுள்ளார்கள். இதனை நாம் தவறென்றும் கொள்ள முடியாது. இதுபோல் எம்மிடையே பலர் இருக்கலாம். அதைவிட இங்கு புலம்பெயர் நாடுகளில் சீட்டுக் கட்டுதல் (ஏலச்சீட்டுகள் சில மாதம் 500பவுண்கள் என்ற தொகைகள் கூட இருக்கிறது) வட்டிக்குக் கொடுத்தல் என்ற நடைமுறைக@டாகவும் சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க அளவிலான திரவப் பண மிதப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதனையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்.

இன்று நாம் எச்.எஸ்.பீ.சீ(HSBC) எனப்படும் ஹொங்கொங் சங்காய் வைப்பகக் கூட்டு நிறுவனம் லண்டனைத் தலைமையகமாக் கொண்ட ஒரு கூட்டுநிறுவனமாகத் திகழ்கிறது. நாங்கள் இது போன்ற நிறுவனங்களது படிமுறை வளர்ச்சிகள் அவர்கள் எப்படி ஆரம்பித்தார்கள் என்பது போன்ற விடயங்களை ஆராய்வதூடாக எமக்கான திட்டங்களை வகுக்கலாம். இதற்காக பல்வேறு நாடுகளிலும் உள்ள புலமையாளர்களை ஒன்றினைத்து விவாதங்களை மேற்கொள்வதுடன் சரியான திட்டமிடலை மேற்கொண்டு ஆரம்பிப்போமாயின், எமதினத்தின் நிதிப்பலம் அடையாளப்படுத்தப்படும் நல்லதொரு ஆரம்பமாக இருக்கும். இதனை நடைமுறைப்படுத்தத் முதலில் எம்மிடம் தேவைப்படுவது பணமல்ல. நம்பிக்கையும், திறந்த மனத்துடனான செயற்பாடுமே. அந்த செயற்பாட்டிற்காகச் செயற்குழுவொன்றை நிறுவி அனைத்து விடயங்களினதும் சாதக பாதகங்கள் என்பவற்றை ஆராய்ந்து அதனை புலமையாளர்களைக் கொண்ட ஒரு திட்டமிடல் குழுவை உருவாக்கி அதனிடம் கொடுத்து ஆய்வுக்குட்படுத்தி, அவர்களது ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஒரு வைப்பகமாகவோ அல்லது நிதியமாகவோ நிறுவுதல் பொருத்தமானது. இதனை ஒரு சிறிய கைநூலாக்கித் தமிழரிடையே இது தொடர்பிலானதொரு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த நிதியத்தை நேர்மையாக நடத்திச் செல்ல ஒன்பது அல்லது பதினொரு பேர் கொண்ட சபையொன்றும் நிறுவப்படல் வேண்டும். ஊழல் கையாடல் என்பன நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தம் விதமாகச் சரியான நிறுவனமொன்றினூடாக கணக்காய்வுகள் மேற்கொண்டு உரிய முறையிலே ஆவணப்படுத்தப்பட்டடிருக்க வேண்டும். ஏனெனில் இனிவரும் காலங்களில் தமிழன் யாராலும் ஏமாற்றப்படுவதையோ சுரண்டப்படுவதையோ தவிர்க்கும் விதமான திட்டங்களும் தேவையாகும்.நாடுகள் தோறும் கிளைகள் கூட இன்று உடனடியாகத் தேவைப்படாது. அனைத்தையும் ஒரு வலையமைப்பினூடாகக் குவியப்படுத்துவதும், வளர்ச்சிப்போக்கிலே கிளைகளை நிறுவுதலும் சாத்தியமானவை.

யாழ்க் கள உறவான வொல்கானோ அவர்களது கூற்று அதாவது புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகள் தோறும் (கனடாவில் உள்ளவர்கள் தனியாக UK,USAமற்ற மற்ற நாடுகளில் உள்ளவர்களும் தனியாக) கூட நாம் முதலில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இதனூடாகக் கூட ஒரு வலையமைப்பை உருவாக்கி அதனை ஒரு வங்கியமைப்பாகவோ நிதியமாகவோ நிறுவனமயப்படுத்தலாம். புலத்திலே பெரிய அளவிலே நிதிச் செயற்பாட்டிலும் மக்கள் தொகையிலும் கனடாவை மையப்படுத்தி வட அமெரிக்காவிலும், லண்டனை மையப்படுத்தி ஐரோப்பாவிலும் இதற்கான மையங்களை நிறுவலாம்.

இன்று தமிழர்களிடையே வாகனப்பாவனை 100/99 பேரிடம் உள்ளது. வீடுவாங்குபவர்கள் தமது தேவைகளுக்கான ஆதாரமாக வைப்பகத்தையே நாடுகின்றார்கள். இன்றைய பொருண்மிய சூழலமைவானது ஒன்றில் ஒன்று தங்கிவாழும் தன்மை கொண்டதாகும். எனவே ஏன் தமிழினம், தனக்கான நிதி வலையமைப்பை உருவாக்கித் தமக்கான தேவைகளை நிறைவு செய்வதோடு, தமிழினத்தை மேன்மைப்படுத்த ஆதாரமாக இருப்பதோடு, முதலிடுவோரின் தனிநபர் வருமானத்தையும் அதிகரிக்கும் வாய்ப்புகளைக் கொண்டதென்பதும் உற்று நோக்கப்பட வேண்டியதாகும்.

யாழ்க்கள உறவுகளே!

ஏலவே ஆரோக்கியமான கருத்துகளை முன்வைத்த உறவுகளே இதனை எழுதத் தூண்டினார்கள் அவர்களனைவருக்கும் எனது நன்றிகள். தொடர்ந்தும், இது தொடர்பான ஆரோக்கியமான கருத்துகளை முன்வைப்பதும் எப்படி நகர்த்தலாம் என்ற ஆலோசனைகளை முன்மொழிவதூடாக எமக்கான தளத்தினை உருவாக்கும் முதற்படியானால் மகிழ்வே. இது தொடர்பான மேலதிக தேடல்கள் விரிவாக்கப்பட வேண்டும். அறிந்தவற்றைப் பகிர்வதூடாக ஆரோக்கியப்படுத்தலாம் என்பதே எனது எண்ணமாகும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடையத்தை நான் பல வேளைகளில் யாழ் இணையத்தில் குறிப்பிட்டிருந்தேன். சட்டரீதியான நிதிஅமைப்பு ஒன்று நம்மிடையே தோற்றுவிக்கப்படல் வேண்டும். கடந்த வருடம் ஏற்பட்ட உலகரீதியான பொருளாதார முடக்கத்தின் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன, நான் வாழ்கின்ற நாட்டில் நூற்றாண்டு காலம் இயங்கிய ஒரு துணி ஆலை ஒன்று, வெறும் ஒரு மில்லியன் யூரோக்களை மீடபுதவியாக அரசிடம் கேட்டது ஆனால் அரசாங்கம் மறுத்ததன் காரணமாக வங்குரோத்தை அறிவித்தது. எம்மிடம் ஒரு நிதிநிறுவனம் இருந்திருந்தால் சல்லிசு விலையில் ஒரு நவீன நெசவுத் தொழிற்சாலையை வாங்கியிருக்கலாம். ஏன் அமெரிக்காவில், ஐரோப்பாவில் மில்லியன் கணக்கில் பெறுமதியாகவிருக்கக்கூடிய வீடுகள் வெறும் முப்பது நாற்பது ஆயிரங்களுக்கு விலைபோனது இவற்றினைக் கூட வாங்கி விற்பதன்மூலம் பெரும் லாபங்களைச் சம்பாதித்திருக்கலாம். மேலும் கடந்த வருட ஆரம்பத்தில் எமது உறவுகளைக் காக்கும்படி புலம்பெயர் நாடுகளின் தெருக்களில் நின்று கத்திணோமே? யாராவது காதில் போட்டார்களா? எம்மிடம் பொருளாதார பலமும் அப்பலத்தால் நாம் வாழ்கின்ற நாடுகளின் அரசியல் இருப்பினைத்தீர்மானிக்கவோ அன்றேல் அந்நாட்டின் அரசியலைச் சிறிதளவேனும் பாதிக்கக்கூடியதான பலமிருந்திருந்தால் செய்தி ஊடகங்கள் எமைத்திரும்பிப்பார்த்திருக்கும். உதாரணமாக கடந்த வருடம் காசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்தபோது நான் வாழ்கின்ற நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டமொன்றினைச் செய்திருந்தனர் அதில் பெருமளவினர் பங்குபற்றியிருந்தார்கள் எனினும் அதற்கு அடுத்தநாள் இங்கு வாழ்கின்ற ஒருசில இஸ்ரேலியர்கள் ஒழுங்கு செய்திருந்த இஸரேலுக்கு ஆதரவான ஊர்வலத்தில், இஸ்ரேலியர்கள் இல்லாத இந்நாட்டின பிரஜைகளும் பெருமளவில் கலந்து கொண்டார்கள். காரணம் இந்நாட்டின் முதலாவது பணக்காரனும் ஐரோப்பியாவின் நான்காவது பண்காரணுமாக இருப்பவர் ஒரு யூதன். அன்மையில் பொப்பாடகர் மடோனா அவர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது அவரது கோடைகால விடுதியிலேயே ஒருவேளை தங்கியிருந்தார் காரணம் முதலீடுகளுக்குச் சொந்தக்காரர். நாட்டின் தலைவிதியை ஓரிரவிற்குள் மாற்றக்கூடியவர் என்பதே.

ஆகவே இனிமேலாவது நாம் விழிப்படைவோம் கடந்தகாலத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்களிமிருந்து திரட்டப்பட்ட செல்வம் இலங்கைத்தீவின் ஓரிரண்டுவருட துண்டுவிழும்தொகை இல்லாத பாதீட்டினைத் தாயாரிக்கும் அளவிற்கான தொகைத்திரட்டாகும். சற்றே சிந்தித்துப்பாருங்கள் இவையனைத்தும் ஒரு நிதிமூலகமாத் திரட்டப்பட்டு புலம்பெயர் தமிழர்களது முதலீடாக மாற்றமடைந்து அம்முதலிடுகளின் இலாபங்கள் முதலிட்டாளர்கட்கிடையே பகிரப்பட்டு அப்பகிரப்பட்ட இலாபம் நூறு வீதமும் போராட்டத்திற்குத்திருப்பி விடப்பட்டிருப்பினும், தமிழனின் சேமிப்புப் பாதுகாக்கப்பட்டிருக்கும அதேவேளை விடுதலைப்போராட்டத்திற்கான நிதிமூலம் தங்குதடையின்றி எமது முதலீட்டிலிருந்தே கிடைத்திருக்கும், மீண்டும் மீண்டும் புலம்பெயர்தமிழனது கதவினைத்தட்டியிருக்கத்தேவையில்லை. தவிர, சட்டரீதியிலான நிதிநிறுவனத்தினுடாக முதலிடப்பட்ட நிதியினை தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் சொத்துக்கள் எனும் பெயரில் சிங்களம் அபகரிக்க முயலுமோ?

இந்தியா!

தமிழர்விரோத தேசம்

என்பேரனுக்கும் பேரனின் பேரனுக்கும் இதனைக் கூறிவைப்பேன்

இறுதிவரை என்பது தனி ஒருவனின் வீர மரணம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நொச்சி இதே போன்ற கருத்தை பலதடைவைகள் யாழ்களத்தில எழுதியிருக்கிறேன்.விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியதற்கு நன்றி.நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிச் சிந்திப்பவர்கள் அந்த அரசினால் நடைமுறைப்படுத்தக் கூடிய இத்திட்டத்தைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும்.வைப்பகமானது தனது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.கொடுக்கல் வாங்கல் முறைகள் ஏனைய வங்கிகளைப் போல் இலகுவாகவும் விரைவாகவும் செயற்படுத்தப்பட வேண்டும்.

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா?

பணம் படைத்தவன் கருத்தானால் அதை மீறுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொச்சி,

உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. காலத்தின் தேவை கூட அதில் நீங்கள் கூறிய பலாபன்களை மேலும் விபரிக்க தேவையில்லை. ஆனால் எமக்குள்ள பிரச்சனை/தொடக்க புள்ளி, எப்படி தொடங்குவது என்று . புலவர் சொன்னமாதிரி (படித்தவனின்?) இந்த கருத்துக்கள் சபை ஏறுமா?

எனது கருத்து, யாழில் நாங்கள் "விருந்தினர் பக்கம்" "விருந்தினரின் பதில்கள்" அப்படி/இப்படி தலையங்கள் போட்டு எங்களின் கருத்துக்களுக்கு முகமூடி ஆணியாதவர்களிண்டம் (நொச்சி, பாவட்டை, இலவம், ....... என்றில்லாமல்) இருந்து பதில் பெறவேண்டும். எனக்கு தெரியாது எங்களை தவிர (எனக்கு என்று ஒரு தகுதியும், பின்னணியும் இல்லை இந்த வைரஸ் கம்ப்யூட்டர் ஐ தவிர) வேறு யாரும் இதுகளை பார்ப்பார்களோ / பார்த்து முன்னெடுத்து சொல்வார்களோ என.

பணம் சொத்து சம்பந்தபட்ட விடயம், மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும். பிறகு தேன் எடுக்கப்போனவன் கைநக்குவான் என சொல்லக்கூடாது. எனக்கு தெரிந்த வகையில் இப்பவே சில நிறுவனங்கள்/ கோவில்கள் கனடாவில் தமிழ் ஆட்களின் போதுசொத்தாக உள்ளது. அதுமாதிரி நாங்கள் ஒரு வங்கி/ முதலீட்டு நிறுவனம் தொடங்குவது கடினமான காரியம் அல்ல எல்லோரும் ஒத்துழைத்தால். அப்படி தொடங்கும் பொது நாங்கள் எங்கள் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு தொடங்கவேணும், இப்ப "தமிழீழ முதலீட்டு சபை" என்று பேர்வைத்தால் அதற்குரிய சிக்கல்களை நாங்கள்தான் எதிர்கொள்ளவேண்டும்.

இன்னுமொரு 5 சத கருத்து, இது அரசியல் சார்ந்தாக (வெளிப்படையாக) இருக்கக்கூடாது. மற்ற புலமையானவர்களின் கருத்துக்களையும் எதிர்பாக்கிறேன்/றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு, அருள், புலவர், வொல்கானோ ஆகியோருக்கு நன்றிகள். இது உணர்வுகளுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஆனால் தமிழினம் தனது அரசியலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பணியாக இதை முன்னெடுக்க வேண்டும். புலமையாளர்கள் தமது கருத்தையும் முன்வைப்பார்கள் என்று கருத்துக்களையும் எதிர்பாக்கிறேன்/றோம்.

இந்தத் திட்டத்தை எப்படியாவது நாம் கட்டியெழுப்புவது அவசியமானது என்பதை தமிழினம் உணர்கின்றது என்பதை "வொல்கானோ" அவர்களது கட்டுரைக்கான கருத்தினூடாக இனங்காண முந்தது. ஆனால் யாரிதைத் தொடங்குவது என்பது ஒரு பெரிய கேள்வியாகத் தொக்கி நிற்கிறது. நம்புவோம். நம்பிக்கை கொள்வோம். இது தொடர்பான விவாதங்களை பொதுவான தளங்களில், அதாவது ஆலயங்கள், மன்றங்கள், போன்றவற்றில் ஆரம்பித்து நகர்த்தி கருத்தியலை முன்னெடுத்து ஒன்றிணைக்கலாம்.

நாமெல்லோரும் அறிந்த ஒரு விடயம், அதாவது யாராவது முதற்பலியாகி வெற்றியென்றால் உரிமைகொண்டாடும் மனோநிலையில் வளர்ந்தவர்களாதலால்.... அதேபோல் இதனையும் தொடங்கி(இலாபம் வரும் என்பது நிச்சயமானது) இலாபம் வரும் என்ற நம்பிக்கை என்றால் பலரும் இணைவார்கள்.

தொடர்ந்த விவாதிப்புகளே செயலாக்கத்திற்கான முதற்படியாகும்.

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.