Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அந்த போர் பற்றியோ அனுபவித்த வேதனைகள் பற்றியோ சிந்திக்கவே விரும்பவில்லை': ஒரு சிறுவனின் குமுறல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'அந்த போர் பற்றியோ அனுபவித்த வேதனைகள் பற்றியோ சிந்திக்கவே விரும்பவில்லை': ஒரு சிறுவனின் குமுறல்கள்

[ சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010, 08:53 GMT ] [ கி.வேணி ]

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்திற்கும் இடையேயான போர் உச்ச கட்டத்தை அடைந்த காலமான அக்டோபர் 2008ம் ஆண்டில், தங்கள் குடும்பமே மொத்தமாக வீடுகளை கைவிட்டு வேறு வழியின்றி முல்லைத்தீவு காடுகளுக்குள் சென்றதை துயரத்துடன் குறிப்பிடுகிறான் தற்போது கிளிநொச்சியில் மீள் குடியேறி வசித்து வரும் 15 வயதுச் சிறுவன் ராகவன் சின்னதுரை.

அச்சிறுவனது உணர்வுகளை பதிவு செய்துள்ளது ஐ.நா.சபையின் மனிதார்ந்த திட்டங்களுக்கான பணியகம். அதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் கி.வேணி .

ராகவன் சின்னதுரை என்ற சிறுவன் மேலும் கூறியுள்ளதாவது,

தற்போது தான் போர் பற்றியோ அந்த நேரத்தில் அனுபவித்த வேதனைகள் பற்றியோ சிந்திக்கவே விரும்பவில்லை என்றும், தன் பெற்றோர்களை இந்த போரில் இழந்து விட்டதாகவும் அதை விட மோசமானது எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளான்.

அக்டோபர் 2008 தன்னுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ஒரு மோசமான மாதம் என்றும் தனக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் வசித்த பலருக்கும் வாழ்க்கையில் மிகப் பெரிய துன்பத்தை அனுபவித்த நேரம் அது என்றும் இந்த சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

2008ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் போர் மிகவும் குருரமான நிலையை அடைந்திருந்ததாகவும் குண்டுகள் வீசி தாக்கப்பட்டதில் ஏராளமான மக்கள் உயிரிழந்ததாகவும் தற்போது தனக்கு யாரை குற்றம் சொல்வது எனத் தெரியவில்லை என்றும் அது மிகவும் வலிகள் நிறைந்த காலகட்டமாக இருந்தது என்றும் தொடர்ந்து கூறியுள்ளான்.

தற்போது தான் கிளிநொச்சியில் தன்னுடைய மூத்த சகோதரன் வீட்டில் தங்கியிருப்பதாகவும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

தன் எதிர்கால வாழ்க்கைக்காக நல்ல கல்வியை பெற முயன்று கொண்டிருப்பதாகவும் பாடசாலை நாட்கள் பலவற்றை இழந்து விட்ட பின் தற்போது தான் பாடசாலைக்கு சென்று வந்தாலும் கூட மோசமான சில நினைவுகள் வரும் போது மிகவும் சிரமமாக இருப்பதாக குறிப்பிடுகிறான்.

தற்போது கிளிநொச்சியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கும் அவசியத் தேவை வீடுகள் என்றும் போரின் போது தாங்கள் வாழ்த்த வாழ்க்கையை விட இது பரவாயில்லை என்றாலும் கூட இன்னும் நல்ல சூழல்களுடன் கூடிய தரமான வீடுகள் தேவை என்றும் அதற்கு தங்களுக்கு உதவிகள் அதிகமாக தேவைப்படுவதாகவும் கூறியுள்ளான்.

அடிக்கடி தன் பெற்றோரை பற்றிய ஞாபகங்கள் தனக்கு வருவதாகவும் ஆனால் தினமும் அதை நினைப்பதால் என்ன பயன் என்றும் சிறுவன் கேள்வி எழுப்புகிறான்.

தன் மூத்த சகோதரன் இதிலிருந்து மீண்டெழ நாம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என தன்னிடம் கூறுவதாகவும் அதன் படியேதான் தன் வாழ்க்கையும் நகர்ந்து செல்வதாகவும் மேலும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.

* இந்த கட்டுரையை எங்கும் மீள் பிரசுரம் செய்பவர்கள் - இது புதினப்பலகை இணையத் தளத்திற்காக கி.வேணி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

http://www.puthinappalakai.com/view.php?20100403100834

  • கருத்துக்கள உறவுகள்

எமது மண்ணில் மாபெரும் மனித அவலம் நடந்து முடியும்வரை வாழாவிருந்த ஐ.நா இப்போது பாதிக்கப்பட்டவர்களை பேட்டியெடுத்து பிரசுரிப்பது தனது நன்மைக்கே.

பிரச்சினைகளுக்கான காரணிகளைக் கண்டறிந்து தீர்க்க முயலாத அல்லது மனித அவலங்களை நடத்திய அரசைக் கண்டிக்காத ஐ.நா வல்லரசுகளின் தாளத்துக்கு

ஆடும் செயற்திறனற்றதும் நீதியற்றதுமான ஒரு நிறுவனமான மாறிவிட்டது. இப்படியான ஒரு பதிவு ஐநாவின் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளிவந்திருந்தால்

அதன் தொடுப்பை இங்கே இணையுங்கள்.

ஆனால் இங்கு பலர் வடம் பிடிப்பபோம் மீண்டும் தேர் இழுப்போம் என்ற கொள்கையில் தானே இருக்கினம். எவனின் தலை உருண்டாலும் காரியம் இல்லை எம் அகதி வாழ்வு சிறப்பாய் இருநதால் சரி என்று புலம்புகின்றனர்

ஆனால் இங்கு பலர் வடம் பிடிப்பபோம் மீண்டும் தேர் இழுப்போம் என்ற கொள்கையில் தானே இருக்கினம். எவனின் தலை உருண்டாலும் காரியம் இல்லை எம் அகதி வாழ்வு சிறப்பாய் இருநதால் சரி என்று புலம்புகின்றனர்

உங்கட குறைகளை ஏனப்பா நாடற்ற நாடோடிகளிடம் சொல்லுறீங்கள், அகதி இன்னொரு அகதியை எப்படியப்பு காப்பாற்றுவது???

போராடும் பலமிழக்கப்பட்டதனால்தான், இந்த மனநிலை. இது யாவரும் உணரக் கூடிய யதார்த்தம். இவர்களுக்குக் கைகொடுக்க வேண்டியதுதான் இப்போதைய தேவை. குழம்பிய நிலையில் போராடுவதற்கு மனமுமிருக்காது. துணிவுமிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அச்சிறுவனது உணர்வுகளை பதிவு செய்துள்ளது ஐ.நா.சபையின் மனிதார்ந்த திட்டங்களுக்கான பணியகம். அதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் கி.வேணி

இந்த செய்தியில் ஐ.நா சபையின் மனிதாந்த திட்டங்களுக்கான பணியகம் குறிப்பிடப்பட்டிருக்கும் இஸ்தாபனத்தின் இணையத்தில் இதுகுறித்த பதிவு வந்திருந்தால் அந்த செய்தி மூலத்தின் தொடுப்பை இங்கே யாராவது தரவும்.

இந்த செய்தியில் ஐ.நா சபையின் மனிதாந்த திட்டங்களுக்கான பணியகம் குறிப்பிடப்பட்டிருக்கும் இஸ்தாபனத்தின் இணையத்தில் இதுகுறித்த பதிவு வந்திருந்தால் அந்த செய்தி மூலத்தின் தொடுப்பை இங்கே யாராவது தரவும்.

http://www.irinnews.org/Report.aspx?ReportId=88667

humanitarian news and analysis

a project of the UN Office for the Coordination of Humanitarian Affairs

SRI LANKA: Ragavan Sinnathurai, "We have to move on”

KILINOCHCHI, 2 April 2010 (IRIN) - Ragavan Sinnathurai, 15, was a resident of Kilinochchi during Sri Lanka’s decades-long civil war between government forces and the now defeated Liberation Tigers of Tamil Eelam (LTTE), who had been fighting for an independent Tamil homeland for more than two decades.

When the conflict intensified in 2008, he and his family fled their homes and escaped into the jungles of Mullaitivu. Today he is one of thousands of returnees to the former rebel capital looking to rebuild their lives.

"I don’t even want to think about the war now or the things we endured. It was really very bad. I lost my parents and I don’t think anything can be worse than that.

"October 2008 was probably one of the worst months of my life. It was a month that changed my life, as well as the lives of so many others.

“The war was particularly fierce between October and December. People were dying mainly because of shell attacks.

"I do not know who is to blame, nor do I want to blame anybody now. It was a painful period.

"I am sitting for my exams next year and now living with my older brother in Kilinochchi. I am lucky to have him. I’m trying to get a good education; to have a good future. I am going to school but sometimes it’s hard with all the bad memories.

"I missed out on a lot of school, but it was a really bad time.

"Today the big thing around here is housing. That’s our main need now. We need better housing conditions. Although it is better than conditions we have lived in, we need a lot of help.

"Of course I miss my parents a lot. But what can I do by thinking about them everyday...

“My brother tells me that we have to move on and that is what I will do. Move on."

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் குளக்காட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.