Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்மநாதனை கைது செய்ய இன்டர்போலுக்கு சென்னை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

Featured Replies

குமரன் பத்மநாதனை கைது செய்ய இன்டர்போலுக்கு சென்னை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது: ஜயலத்

ஆயுதங்கள், வெடிமருந்துகளை பயன்படுத்தியமை, கிரிமினல் சதி, மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரத ஆயுத கொள்வனவாளரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு சென்னை நீதிமன்றமொன்று இன்டர்போலிடம் பிடியாணையொன்றை பிறப்பித்திருந்தது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன நாடாளுமன்றத்தில் வியாழனன்று தெரிவித்தார்.

இத்தேடுதல் ஆணையின் பிரதியொன்றையும் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது, ஜயலத் ஜயவர்தன, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அண்மையில் தான் சென்னைக்கு விஜயம் செய்தபோது, இலங்கை அரசாங்கத்தின் காவலில் கே.பி. இருப்பது குறித்து சென்னை; பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தான் தெரிவித்ததாகவும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கூறினார்.

இக்குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை வைத்திருப்பது ஒரு குற்றமாகும் எனவும் அவர் கூறினார்.

எனினும் இப்பிடிவிறாந்து எப்போது பிறப்பிக்கப்பட்டது என ஜயலத் ஜயவர்தன எம்.பி. கூறவில்லை.

இப்பிடிவிறாந்தில் கே.பியின் பெயர் தர்மலிங்கம் சண்முகம் குமரன் எனவும் அவரின் பிறப்பிடம் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை அவர் பேசக்கூடியவர் எனவும் தலைமயிரை பக்கவாட்டில் சீவியிருப்பது அவரின் அடையாளம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன் 2009 ஆம் ஆண்டு மலேஷியாவில் வைத்து இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நேர்டோ) எனும் அமைப்பை ஸ்தாபித்து நடத்தி வருகிறார்.

http://www.tamilmirr...2-19-33-29.html

Edited by akootha

  • தொடங்கியவர்

சட்ட ரீதியாக இது கூட அரச பயங்கரவாதமே !

இக்குற்றங்களில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை வைத்திருப்பது ஒரு குற்றமாகும் எனவும் அவர் கூறினார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலத்தின் கண்ணுக்கு டக்ளஸ் புலப்படவில்லையா?

கொலை குற்றம் சாட்டப்பட்ட டக்ளசை பிடித்து விசாரிக்க முடியவில்லை என்பது பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

  • தொடங்கியவர்

போர்குற்ற நெருக்கடிகளில் இருந்து தப்ப முதற்கட்டமாக 'சில இராணுவத்தினரை ' காட்டிக்கொடுக்க மகிந்த கூட்டம் முனைகிறது. அதற்குள் சில இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு ஓடி சென்று மகிந்த கூட்டத்தை 'போட்டுக்கொடுக்கின்றனர்'.

அடுத்த கட்டத்தில் ' தமிழ் கறிவேப்பிலைகளை' கூட மகிந்த கூட்டம் மாட்டிவிட யோசிக்கும். முடிந்தால் முன்கூட்டிய மகிந்தா கூட்டத்தை 'போட்டுக்கொடுப்பதே' புத்திசாலித்தனம் :rolleyes:

Edited by akootha

என்னவோ சென்னையிலிருக்கும் நீதிபதிக்கு குமரன் பத்மநாதன் இலங்கையில் மந்திரி பதவிக்கு காத்து கொண்டிருக்கிறார் என்பது தெரியாது போலை.

சும்மா ஒரு ஆள் கொணர்வு மனுவை இலங்கைக்கு அனுப்பி பார்க்கிறதுதானே, என்ன நடக்கிறது என்று பார்க்க. என்ன தலையா போய்விடும்?

எல்லாருக்கும் சோனியாவுக்கு பயம். அதானாலை சினிமாப் படத்து கதை மாதிரி இண்டர்போல் தான் நினைவுக்கு வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.