Jump to content

தமிழரின் வாழ்வியல் கருவூலம்


Recommended Posts

வணக்கம் அன்பான கள உறவுகளே ,

ஓர் நீண்ட புதியதொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்சி அடைகின்றேன் . பல வருடங்களுக்கு முன் எமது மூதாதையர்கள் தூரநோக்குடன் விதைத்த விதைகளின் விளைச்சலை இன்று நாம் அறுவடை செய்கின்றோம் . ஒப்பீட்டளவில் அவர்களுடைய செயற்பாடுகளுடன் நாம் எமது வருங்கால சந்ததிக்குச் செய்வது குறைவாகவே உள்ளது . யாழ் கருத்துக்களத்தினூடாக ஒரு சிறிய நகர்வாக , எமது ஐயன் வள்ளுவனார் ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமக்கு விதைத்த விதையின் விளைச்சலைக் குறிப்பாக இளயசமூகத்திற்கு , உலகின் பெருமளவு வழக்கில் உள்ள ஆங்கில பிரென்ஞ் மொழிபெயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துழைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் திருக்குறளும் , சிவபுராணமும் ஆகும் . மனித வாழ்வின் பல்வேறு நடப்புகளைத் தெள்ளு தமிழில் இவை தொட்டுச் செல்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும் . எனதருமை நண்பர் அகோதா வேறு ஒரு பதிவில் இதைத் தொடங்கினாலும் , அவரது முன் அனுமதி பெற்று அவரின் பதிவையும் பூரணப்படுத்தி இந்த முயற்சியைத் தொடருகின்றேன் . என்னைப்பொறுத்தவரையில் இத் தொடரின் வெற்றியானது ,உங்களின் ஒத்துழைப்பாலும் , இளைய சமூகமானது எமது மொழியின் ஆளுமைகளைத் தமது வேற்றுமொழி நண்பர்களுக்குச் சொல்லும் பொழுதிலேயே பூரணப்படுத்தப்படும் .

பி . கு : தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் பின்வரும் சுட்டியை சொடுக்குங்கள் .

http://www.yarl.com/...showtopic=96396

நேசமுடன் கோமகன் .

*************************************************************************

அறத்துப்பால் - பாயிரவியல் - கடவுள் வாழ்த்து ( The Praise of God , Louange de Dieu .)

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு " 01 .

எழுத்துகளுக்கெல்லாம் முதன்மையானது அ , அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள் .

A, as its first of letters, every speech maintains;

The "Primal Deity" is first through all the world's domains.

Toutes les lettres ont pour principe ‘A’ ;

l’univers a pour principe l’Etre Primitif.

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றான் தொழார் எனின் " . 02

கடவுளின் திருவடிகளை வணங்காதவன் என்ன படித்தும் ஒரு பயனும் இல்லை .

No fruit have men of all their studied lore,

Save they the 'Purely Wise One's' feet adore.

A quoi sert le savoir, si l’on n’adore pas les pieds

de Celui qui a la vraie Connaissance parfaite.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 03

நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனது திருஅடிகளைத் தம் மனத்தால் துதிக்கின்றவர் எங்காலமும் அழிவின்றி வாழ்ந்திருப்பர்

His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain

In bliss long time shall dwell above this earthly plain.

Ceux qui se réfugient aux pieds glorieux de Celui qui est descendu dans la fleur vivront éternellement au ciel bienheureux, supérieur à tous les mondes.

Link to comment
Share on other sites

  • Replies 336
  • Created
  • Last Reply

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. 04

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

His foot, 'Whom want affects not, irks not grief,' who gain

Shall not, through every time, of any woes complain.

Ceux qui se sont unis aux pieds de Celui qui n’a ni désir, ni aversion, ne souffriront jamais des douleurs inhérentes à la naissance.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 05

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

The men, who on the 'King's' true praised delight to dwell,

Affects not them the fruit of deeds done ill or well.

Les deux fruits de l’illusion (le bien et le mal) n’approchent pas ceux qui célèbrent la vraie gloire du Seigneur.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார். 06

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

Long live they blest, who 've stood in path from falsehood freed;

His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.

Vivront éternellement ceux qui se tiennent dans la vraie ligne de conduite de Celui qui a consumé les cinq passions, procurées par les sens.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. 07

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்

Unless His foot, 'to Whom none can compare,' men gain,

'Tis hard for mind to find relief from anxious pain.

Autres que ceux qui se sont réfugiés aux pieds de Celui qui n’a pas d’égal, ne peuvent éviter les inquiétudes de l’esprit.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. 08

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,

'Tis hard the further bank of being's changeful sea to attain.

Autres que ceux qui se sont attachés aux pieds du Sage qui est l’océan de la vertu ne peuvent traverser les mers orageuses distinctes de ce dernier (richesses et plaisirs des sens).

Link to comment
Share on other sites

" கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. 09

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.

Avant son pied, «l'excellence Huit fois,« la tête déplié, qui se tient, comme le sens paralytiques, est de toutes les fonctions de morts-vivants.

" பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்". 10

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach the shore of being's mighty main.

Ils nagent sur ​​la mer des naissances, le «monarque» à pied qui gagnent, d'autres atteignent Aucun la rive d'être de puissants principal.

Link to comment
Share on other sites

இத்துடன் அறத்துப்பால் பாயிரத்தில் உள்ள கடவுள் வாழ்த்துப் பத்துக் குறள்களும் நிறைவு அடைகின்றன . இனி வருங் குறள்களின் பொழிப்புரைக்குப் பின்பு கோமகனின் ( எனது )பார்வையில் ஒவ்வொரு குறளும் எப்படியிருக்கின்றது ? என்ற பகுதியையும் சேர்க்கின்றேன் . அந்தப் பார்வையானது சிலவேளைகளில் நகைச்சுவையாகவும் ,அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டுவதுமாக அமையும் . இது சிலவேளைகளில் ஒருவரியிலும் அல்லது நீண்டும் இருக்கும் . இது எனது சொந்தக்கருத்து மட்டுமே என்றபோதிலும் , குறளின் சுயங்கள் கெடாதவாறு தொடர்கின்றேன் . உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் . பதிலிடுகின்றேன் :):) :) .

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

அறத்துப்பால் - பாயிரம் - வான்சிறப்பு ( The Excellence of Rain , Eloge de la pluie ).

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11

மழை இடையறாது பெய்வதனால்தான் உலகத்து உயிர்கள் வாழ்கின்றன . அதனால் அம்மழையே அமிழ்தம் என்று போற்றத் தகுந்ததாகும்.

எனது பார்வையில்:

அதது அந்தந்த இடத்தில நேரத்தில நடந்தாத் தான் அதுக்குப் பெருமை கண்டியளோ :) . இந்த மழையும் அதுமாரித்தான் இருக்கவேணும் . அதை விட்டிட்டு வரியம் முன்னூற்றி அறுபத்தி ஐஞ்சு சொச்சம் நாளும்

ஊத்தூத்தெண்டு ஊத்திச்செண்டுதிண்டால், இந்த மழை அமிழ்தமாய் இருக்குமோ ? இல்லை தெரியாமத் தான் கேக்கிறன் . நஞ்சாத் தான் இருக்கும் . உலகம் ஓரே ண்ணிக் காடாக் கிடக்கும் . பேந்து ஒரு சின்னத் துண்டு நிலங் கிடந்தால்க் காணும் , அதுக்கு எங்கடையள் ஆளாழுக்கு ஏ கே ஐத் தூக்குங்கள் :icon_idea: .

The world its course maintains through life that rain unfailing gives;

Thus rain is known the true ambrosial food of all that lives.

Le monde maintient son cours à travers la vie que la pluie sans faille donne;Ainsi la pluie est connu la vraie nourriture de l'ambroisie tout ce qui vit.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை. 12

உண்பவர்களுக்குச் சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து அவற்றை உண்பவர்களுக்குத் தானும் உணவாக இருப்பது மழையாகும்.

எனது பார்வையில்:

இதை நான் இப்பிடி விளங்கிறன் .எப்பிடியெண்டால் நான் ஒரு தோட்டம் செய்யிறன் . அதில ஒரு நூறு கண்டு கத்தரி நடுறன் . இது விளையிறதுக்குத் தண்ணி வேணும் . பேந்து என்ன செய்வன் , விளைஞ்சதில ஒரு ஐஞ்சாறை எடுத்துச் பொரிச்ச குழம்பு வைப்பன் . இங்கையும் தண்ணி தேள்வைப்படுது . பேந்து சமைச்சதை ரசிச்சு ருசிக்கேக்கை , பிரக்கடிச்சால் குடிக்க அங்கையும் தண்ணி வேணும் .

சரி ஒருமாரிச் சாப்பிட்டு வெத்திலை கித்திலையைப் போட்டால் , திண்ட சாப்பாடு செமிச்சு ஒண்டுக்கு , ரெண்டுக்கு எண்டு போகும் . அங்கையும் தண்ணி வேணும் . இப்பிடி எல்லாத்துக்குமே உதவிறது மழைதான் எண்டால் பாருங்கோவன் :icon_idea: .

The rain makes pleasant food for eaters rise;

As food itself, thirst-quenching draught supplies.

Pluie produit de la nourriture bonne, et elle est la nourriture.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி. 13

பருவகாலத்தில் மழை பெய்யாது தவறுமானால் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசி நிலைத்து நின்று, உயிர்களை வருத்தும்.

எனது பார்வையில்:

இப்ப கலி முத்தினால் மழை பெய்யாது எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் . அதுக்கென்ன முட்டியைத் தூக்கிக்கொண்டு கடக்கரைக்கு ஓடுறதே ? தவிச்ச வாய்க்கு தண்ணி எடுப்பம் எண்டு . அங்கை உப்புத் தண்ணி தான் கிடக்கும் ,அதைக் குடிக்கலாமோ ? சில நேரம் நீங்கள் நினைக்கலாம் கொக்கோகோலா , பன்ரா , லெமனைட் எல்லாங்

கிடக்க , கோமகன் என்ன மரைகழண்ட கதை கதைக்கிறார் எண்டு :lol: . அதெல்லாம் செயற்கைத் தண்ணி . நல்ல தண்ணியே மழைல இருந்து தான் வருது . இப்ப நிலத்துக்குக் கீழை இருக்கிற நல்ல தண்ணியும் , மழை பெய்யாட்டி கொஞ்சக்காலத்துக்குப் பிறகு அதுவுங் கோயிந்தோ தான் :icon_idea: .

.

If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.

Si les nuages, qui promettait la pluie, à tromper, et dans le ciel restera, famine, les tourments douloureux, tiges o'er océan ceinturée de vastes terre plaine.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால். 14

மழை என்னும் வருவாய் வளம் குறைந்தால் உழுது பயிர் செய்யும் உழவர்கள் நிலத்தை ஏரால் உழ முடியாமல் துன்புறுவர்.

எனது பார்வையில்:

இப்ப , நான் செய்த ஆயிரங்கண்டு பொயிலைத் தோட்டத்திலை தண்ணி இல்லாட்டி ,எப்பிடி பொயிலை வழருங்கிறேன் ? அப்ப காஞ்சு போன ஆயிரங்கண்டு பொயிலைத் தோட்டத்திலை , திருப்பியும்

காயப்போற பொயிலையளுக்காக , மினைக்கெட்டு ரெண்டு சோடி மாடுகளை ஏரிலை பூட்டித் தோட்டத்தை உழ கோமகனுக்கு என்ன மண்டைப்பிழையே :lol: ? இதுக்கு ஒரு திறம் வசனம் தாறன் .

< விழலுக்கு இறைக்கிற நீரும் வீண்தான். நீரில்லாத நிலத்தில விதைக்கிறதும் வீண்தான்> :icon_idea: .

If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.

Si les nuages ​​de leur richesse des eaux échouer sur la terre de verser, la charrue ploughers avec l'équipe de bœufs robustes pas plus.

Link to comment
Share on other sites

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும் , அவ்வாறு கெட்டவருக்குத் துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை.

எனது பார்வையில்:

ஐயா வள்ளுவர் ,இந்த இடத்தில மழையைப்ற்றி ஒரு நல்ல வியாக்கியானம் தாறார் . எப்பிடியெண்டால் , செய்யவேண்டிய ஒரு காரியத்தை அந்த நேரத்தில செய்யாமல் விட்டாலும் , அதுக்கு ஒரு பரிகாரம் தேடிறமாரி திரும்பவும் பொழிஞ்சு நல்லது செய்யிறதானாம் மழைன்ர பரவணிக்குணம் :unsure: . அப்பிடியெண்டால் , நல்லா மழை பெய் பெய்யெண்டு பெஞ்சு , வெள்ளம் வந்து அழிஞ்சு போனவங்களை திரும்பியும் பெய்யாமல் விட்டு பரிகாரம் தேடிறதும் இந்த மழைதானோ :icon_idea: ? எண்டு என்ர மண்டையுக்கை ஒரு எதிர்மறையான கேள்வி எண்டு எழும்பிக் கேக்குது . என்னதான் செய்யிறது ? இந்த மழை வந்தாலும் பிரச்சனை , வராட்டிக்கும் பிரச்சனை . நினைச்ச நேரம் மழையே வா எண்டு சொல்லிறதுக்கும் , வராதை எண்டு சொல்லிறதுக்கும் ஒரு றிமோட் கொன்றோல் இருந்தால் எப்பிடி இருக்கும் :D:icon_idea: ?

'This rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.

«Cette pluie tout fonctionne: il répand la ruine, puis fournit une aide en temps opportun, comme, dans les jours heureux avant, il offre la montée en ruine.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது. 16

மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் , அல்லாது இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியையும் காண இயலாது .

எனது பார்வையில்:

இந்த மழைமட்டும் பெய்யேலை எண்டு வைய்யுங்கோ , நிமர்ந்து மேலை அண்ணாந்து குடிக்க ஒரு உறுக்குணியும் தன்னும் தண்ணி கூடக் கிடைக்காதப்பா :) .அதோடைமட்டும் விட்டுதே , நிலத்திலை பச்சைப் புல்லென்ன ஆடு, மாடு , கோழி, கனக்க ஏன் ? நான் , இதை வாசிக்கிற நீங்கள் , எண்டு ஒரு குருவியையும் பாக்கேலாது :o . பேந்து பாக்கிறதெண்டா யமலோகத்திலதான் பாக்கவேணும் :lol::icon_idea: .

If from the clouds no drops of rain are shed. 'This rare to see green herb lift up its head.

Si les nuages ​​ne gouttes de pluie tombent. «Cette rare de voir des herbes vertes soulever sa tête.

Link to comment
Share on other sites

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின். 17

மேகமானது கடல் நீரைக் கொண்டு மீண்டும் கடலில் மழையாகப் பெய்யாவிட்டால் மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் குறைந்து போகும்.

எனது பார்வையில்:

இதை நான் இப்பிடிப் பாக்கிறன் .உங்கழுக்குத் தெரிஞ்சவிசையம் தான் :icon_mrgreen:, நாங்கள் எல்லாம் வங்கியோடை காயிற கோஸ்ரியள் . நாங்கள் அங்கை வெள்ளையாய் ,கறுப்பாய் போடுற காசுகள் நாலுவளத்தாலையுஞ் சுத்திச்சுழண்டு திரும்பவும் வங்கிக்குக் காசுகள் வரேலை எண்டு வையுங்கோவன் கதைகந்தல் தான் :o . வங்கியை இழுத்து மூடிப்போட்டு வங்கீன்ர மனேச்சர் ( நடத்துறவர் ) சோசல் காசை எடுத்துக் கொண்டு வீட்டை குந்திக்கொண்டு இருக்க வேண்டியதாப் போடும் :lol:. அதைப்போல தான் கடலிலையும் இருக்கிற தண்ணி ஆவியாகி ( பேஇல்லை ) திரும்பியும் மழையா பெய்யாட்டி அந்தக்கடலே வறண்டு போடுமாம் . ஒருக்கா தண்ணி இல்லாத கடலை கற்பனை பண்ணிப் பாருங்கோவன் :blink: .

If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domain.

Si les nuages ​​restreignent leurs dons et subventions ne pleut pas, les trésors échouer dans vaste domaine océanique.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்ட 18

மழை பெய்யாது போனால் , தேவர்களுக்காக இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் திருவிழாக்களோடு கூடிய நாள் வழிபாடும் நடைபெறாது எனது பார்வையில்:

மழை மட்டும் இல்லை எண்டு வைய்யுங்கோவன் . சும்மாவே கடவுளைத் தேடிப் போகாத எங்கடை சனம் துண்டாய்ப் போகாது :lol: .ஏன் கனக்க ,ஐயரே போகமாட்டார் . எனக்கு விளங்குது உங்கடை நக்கல் பார்வையள் <_< . அட சனமே உயிரோடை இருந்தால் தானே ? அதால பிள்ளையள் , மழை இருந்தால்தான் உயிர்கள் வாழும் ,உயிர்கள் நல்லபடி வாழ்ந்தால்தான் கடவுள்களும் வாழ்வார்கள்.அதாலை மழை இல்லாட்டி கடவுளுக்கும் சங்குதான் :D:icon_idea: .

If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adore.

Si le ciel poussent à sec, avec les fêtes et jamais plus offrant, Will hommes sur la terre les plus célestes adorent.

Link to comment
Share on other sites

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின். 19

அகன்ற இப்பெரிய உலகில் மழை பெய்யாவிட்டால் பிறருக்காகச் செய்யும் தானமும் தனக்காகச் செய்யும் தவமும் இல்லை என்றாகி விடும்

எனது பார்வையில்:

இதுக்கு எங்கடை உள்வீட்டுக்கதை ஒண்டு சொல்லிறன் . என்ரை அம்மாச்சீன்ர அண்ணை ஊரில ஒரு பெரிய விதானையாராய் இருந்தவர் :icon_mrgreen:. அப்ப ஊரில கொர்னமேந்தில வேலையெண்டால்ப் பெரிய கியாதி கண்டியளோ . இவரும் ஊரில நடக்கிற நல்ல காரியங்களுக்குப் பாத்துப் பாரமல் உதவியள் செய்யிறவர் :) . எனக்கு இப்பவும் கண்ணுக்கை நிக்குது . இவரிட்டை ஏதாவது உதவியள் வாங்க வாறவை இவருக்குச் சொல்லுவனம் , உங்களைப்போல ஆக்களாலைதான் விதானையார் ஊரிலை மழை பெய்யுதெண்டு ஒரு பிட்டைத் தூக்கிப் போடுவினம் :lol: . எங்கடை ஆளும் ஒரு சின்னச் சிரிப்போட கேட்டதை விட ஐஞ்சைப் பத்தைக் கூடக் குடுப்பர் . இதை ஏன் சொல்லுறன் எண்டால் , மழை பெய்யேலை எண்டு வைய்யுங்கோ இவையளைப் போல ஆக்களால தறுமம் செய்யேலாது .தங்களைக் தாங்கள் கொண்டு இழுக்கிறதக்கே நாக்குத் தள்ளிப்போடும் . அவ்வளவுக்கு வறுமை நிண்டு டிஸ்கோ ஆடும் :icon_idea:.

If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'

Si le ciel ses trésors liquides cesse de se passer, à travers les dons larges cessent monde, et les actes de «repentance»

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

நீர் இல்லையென்றால் எவ்வுயிரும் இவ்வுலகில் வாழ முடியாது மழை இல்லையெனில் மனித வாழ்க்கையில் ஒழுக்கமும் இல்லை என்று ஆகிவிடும்.

எனது பார்வையில்:

அரண்மனையிலை இருக்கிற மகாராசா எண்டாலும் , கொட்டிலிலை இருக்கிற சுப்பையா எண்டாலும் , தண்ணி விடாய் எண்டு வந்தால் தண்ணி குடிக்கத்தானே வேணும் ? இப்ப மகாராசான்ரை அரண்மனைக்கு கவுன்சில்காறன் தண்ணியை வெட்டிப்போட்டான் எண்டால் , மகாராசா அரண்மனையை வைச்சு என்ன நாக்கு வழிக்கிறதே :o ?அதாலை பிள்ளையள் , மழை பெய்யாட்டி தண்ணி இல்லை . தண்ணி இல்லை எண்டால் நாட்டில அவனவன் கொடுக்குக் கட்டுவன் ^_^ . இந்த சட்டம் ஒழுங்கில சனி பாக்கும் . இதைத்தானே இப்ப பாக்கிறம் முல்லைப்பெரியாறு பிச்சனையிலை சேட்டன்மாருகள் தமிழனுக்கு வகுப்பு எடுக்கிறதை ^_^:icon_idea: .

When water fails, functions of nature cease, you say; This when rain fails, no men can walk in 'duty's ordered way'.

Lorsque l'eau tombe en panne, les fonctions de cessez-le nature, vous dites; Cette quand la pluie tombe en panne, aucun homme ne peut marcher dans «de manière ordonnée du devoir».

இத்துடன் பாயிரம் அறத்துப்பாலில் வான்சிறப்பு அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் நிறைவிற்குக் கொண்டுவருகின்றேன் .

Link to comment
Share on other sites

அறத்துப்பால் - பாயிரம் - நீத்தார்பெருமை ( The Greatness of Ascetics , Grandeur de ceux qui ont renoncé au monde ).

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு. 21

ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று விட்டவரின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும்.

எனது பார்வை:

மனுசனாய் பிறந்தவன் சுயநலம் இல்லாமல் இருக்கறது தான் திறமான சீவியம் :unsure: . அதைத்தான் வரலாறுகளும் நூல்களும் கியாதியாய் சொல்லும் கண்டியளோ .இப்ப நீங்களும் இப்பிடிச் சீவிச்சியளெண்டால் , உங்களைப்பற்றியுமெல்லே நாலைஞ்சு பேர் கதைச்சு கதைச்சு உங்களைப் பற்றி யூனியிலேயே ஒரு பாடத்திட்டமாக்கிப் போடுவங்கள் எண்டால் பாருங்கோவன் :icon_mrgreen: .இல்லாட்டில் ஒரே ஒரு புத்தகம் படத்தோடை உங்களைப் பற்றி வரும் ,அதுதான் கல்வெட்டு :o.வசதி எப்பிடி ?

The settled rule of every code requires, as highest good, Their greatness who, renouncing all, true to their rule have stood.

La règle établie de chaque code exige, comme plus grand bien, leur grandeur, qui, renonçant à tous, fidèles à leur règle ont résisté.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

பற்றுக்களை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வது என்பது , உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றது அதாவது இயலாததாகும்.

எனது பார்வை:

உடனை சொல்லுங்கோ , உலகத்திலை இப்ப எவ்வளவு சனம் இருக்கு :icon_mrgreen: ? மண்டைகாயிற வேலையெல்லோ?இதுக்குள்ளை செத்தவங்களின்ர தொகையைக் கணக்கெடுக்கேலுமே :( ? இப்ப எங்கடை நாட்டை எடுத்தியளெண்டால் , கணாமல் போனவங்கடை கணக்கு வேறை சொல்லி அடங்காது :( .இதுகளை எல்லாம் கட்டுக்குள்ளை கொண்டு வந்து கணக்கு எடுக்கிறது எண்டது , மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைச் பிடிச்சுச் சிரைச்சானாம் எண்டமாரிப் போடும் :icon_idea:.அதால , மற்றவைன்ர நலத்துக்காகச் சீவிச்சவையின்ர பெருமையளை அளந்து சொல்லிறது எண்டது ஒரு கஸ்ரமான வேலை பாருங்கோ :) .

As counting those that from the earth have passed away, 'This vain attempt the might of holy men to say.

Comme compter ceux qui ont de la terre est décédé, «Cette vaine tentative de la puissance des saints hommes à dire.

Link to comment
Share on other sites

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. 23

இம்மை , மறுமை இரண்டின் கூறுகளை ஆராய்ந்து அறிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே மிக உயர்ந்ததாகும் .

எனது பார்வை:

இதைப்பாக்க எனக்கு இதுதான் ஞாபகம் வருகிது :) . எங்கடை யோகர் சுவாமிகளிட்டை ஆரும் போனால் அடிக்கடி ஒரு வசனம் ,சும்மா இரு எண்டு சொல்லுறவர் :icon_mrgreen: . சில சனம் குளம்பிப் போய் சொல்லுவினம் உந்தாளுக்கு நட்டுக்கழண்டு போச்சுதெண்டு . அவர் ஏன் சும்மா இரு எண்டு சொன்னார் எண்டால் , ஆசைகளை விட்டு பற்று அற்ரு இருந்தாலே நல்லது கெட்டது , சந்தோசம் துக்கம் , வசதி ஏழ்மை ,எண்டு எது வந்தாலுமே சந்தோசமாய் இருக்கலாம் எண்டுதான் . இது எங்கடையாக்களுக்கு விளங்கேல . நீங்களும் கண்டகடியளுக்கெல்லாம் ஆசைப்படமால் நல்ல பிள்ளையளாய் இருந்தால், உங்களால மற்றவைக்கும் ஒரு பாதுகாப்பு :lol:. நீங்கள் இல்லாத இடத்திலை உங்களைப்பற்றி நாலுபேர் கெப்பராய் எல்லோ கதைப்பினம் :icon_idea: .

Their greatness earth transcends, who, way of both worlds weighed,

In this world take their stand, in virtue's robe arrayed.

La grandeur de ceux qui, après avoir pesé et compris l’essence des deux attributs (plaisir et douleur) de la vie, ont embrassé l’ascétisme l’emporte sur tout ici-bas.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. 24

அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன் மேலான வீடுபேறு அடைவான்.

எனது பார்வை:

ஒரு பெரிய இவர்மாரிச் சொல்லிப்போட்டன் ஆசையை அடக்குங்கோ எண்டு :unsure: . ஆசை மட்டும் எண்டில்லை உங்கடை ஐஞ்சு புலன்களையும் அடக்கி ஆளுறது தான் ஆசையை விடுறதுக்கு அரிவரிப்பாடம் . ஆனால் அது வில்லண்டம் பிடிச்ச கயிட்டம் பாருங்கோ :( .அதைத்தான் ரெண்டெழுத்து ஐய்யாவும் சொல்லுறார் ,யானை எண்ட பெரிய மிருகத்தை எப்பிடி அங்குசத்தால பாகன் அடக்கிறானோ ,அப்பிடி ஐம்புலனை அடக்கோணும் எண்டு :o. இந்த ஐம்புலனுகளை வைச்சுக்கொண்டு எங்கட சனம் செய்யிற அரையண்டங்களை நாங்களும் பாக்கிறம் தானே :icon_idea: .

He, who with firmness, curb the five restrains,

Is seed for soil of yonder happy plains.

Celui qui, grâce au croc de l’energie, protège les cinq (sens) est une semence pour le champ meilleur du Ciel.

Link to comment
Share on other sites

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. 25

ஐம்பொறிகளின் வழியாக எழுகின்ற ஆசைகளை ஒழித்தவனுடைய வலிமைக்கு வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே சான்று.

எனது பார்வை:

மனிசினாய் பிறந்தவன் ஆகமிஞ்சி ஒரு அறுபது வயசு மட்டும் இருப்பான் . அதிலையும் அவன்ரை பகுத்தறிவு வேலைசெய்யிறது ஒரு இருபது வயசுக்கு மேலதான் . ஆக கூட்டிக்கழிச்சுப் பாத்தால் ஒரு நாப்பது வரியம்தான் அவன் வாழ்கையை அனுபவிக்கிறது . இதிலை போய் ஐம்புலன்களை அடக்கி இருங்கோ எண்டால் அவன் பாவைப்பிள்ளையெல்லோ :lol: ? ஆனால் இதில எனக்கு

ஒரு விசயம் இடிக்குது ? வள்வளுவர் ஐய்யா ஏன் போய் இந்திரனுக்கு உவ்வளவு சேர்ட்டிபிக்கற் குடுக்கிறார் எண்டு :o ? இந்திரன் வில்லண்டம் பிடிச்ச ஆள் . நெடுக தன்ரை ஏரியாவில ரம்பை , மேனகை , ஊர்வசி திலோத்தமை , ஆக்கடை டான்ஸ்சுகளை பாத்துக்கொண்டு இருக்கிறவர் :icon_mrgreen:. அந்த இந்திரன் போய் எப்பிடி ஐம்புலனை அடக்கினவர் எண்டு இவர் சொல்லுறார் :unsure::icon_idea: ?

Their might who have destroyed 'the five', shall soothly tell

Indra, the lord of those in heaven's wide realms that dwell.

La puissance de celui qui détruit en lui les cinq (passions produites par les sens) q été attestée par Indra lui-même, Roi des vastes régions célestes.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார். 26

செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவரே பெரியோர் ; செய்பவற்கு அரிய செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியோர்.

எனது பார்வை:

இது உண்மைலையே எல்லாருக்கும் ஒரு தேவையான பாடம் பாருங்கோ . சும்மா சாப்பிட்டம் , படுத்தம் , யாழிலை திண்ணைல வந்து ரெண்டு லோ எடுத்தம் எண்டு இருக்காமல் :lol: . எவன் தன்னைச் சுத்தி இருக்கிற ஆக்கள் தன்னாலை பிரையோசனப்படவேணும் எண்டு நினைச்சு தன்ரை அலுவலுகளைக் கொண்டு போறானோ அவன் பாருங்கோ சரித்திரத்தில ( பெரியவனாய் ) நிலையா நிக்கிறான் கண்டியளோ :). இதுக்கு எதிர்மாறாய் நிக்கிறதுகள் , என்னத்தைச் சொல்ல ஐஞ்சுசதத்துக்கும் உதவாத ( சிறியோர் ) கோஸ்ரியள் :icon_mrgreen:. இனிமேலாவது பிள்ளையள் ஒரெப்பன் துரும்பையாவது எடுத்துப்போடப் பாருங்கோ என்ன :D:icon_idea:?

Things hard in the doing will great men do;Things hard in the doing the mean eschew.

Les grands d’entre les hommes font seuls, ce qu’il est difficile de faire (le domptage des sens) ; les faibles en sont incapables.

Link to comment
Share on other sites

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 27

சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் , என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் தான் உலகம் உள்ளது .

எனது பார்வை:

அப்பிடி ஆராவது இருந்தால் சொல்லுங்கோப்பா :).அப்ப இந்த விஞ்ஞானியள் எல்லாம் இந்த ஐம்புலனுகளை பகுத்தறியாதவையே :unsure: ? இவையளால எவ்வளவு வில்லண்டம் உலகத்துக்கு ? ஒரு சின்னப்பெடியனைக் கண்டுபிடிச்சதும் ஒரு விஞ்ஞானிதானே :( எவ்வளவு சனம் அப்பவே செத்திது . இப்ப ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அணுகுண்டுக்கு மேல குந்திக்கொண்டிருக்கினம் . எனக்கிண்டா ஒண்டுமாய் தெரியேல :blink: .

Taste, light, touch, sound, and smell: who knows the way

Of all the five,- the world submissive owns his sway.

Le monde appartient à celui qui examine et connaît la nature des cinq (sensations) qui sont appelés : la saveur, la lumière, l’attouchement, le son et l’odeur.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். 28*

பயன் நிறைந்த மொழிகளையே பேசும் பற்றற்ர துறவியரின் ( சான்றோரின் ) பெருமையை அவருடைய ஆணையாக வழங்கும் மந்திரங்களே உலகிற்கு உணர்த்திவிடும்.

எனது பார்வை:

இதில எனக்கு ஐமிச்சம் இல்லை :) .ஏனெண்டால் ,உலகத்தின்ர சரித்திரத்தை பிரட்டிப்போட்ட ஆக்களைப் வடிவாய் பாத்தால் ,

இந்தப்பூனையும் பால் குடிக்குமோ எண்டமாரி வலு சாதாரணமய் ( பற்றற்று ) இருப்பினம் :icon_mrgreen: .ஆனால் , அவைன்ரை செய்கை எண்ட உராய்வு தான் சரித்திரத்தை சுத்த வைச்சிருக்கு :icon_idea: :icon_idea: .

The might of men whose word is never vain,

The 'secret word' shall to the earth proclaim.

La grandeur des ascètes dont les paroles sont riches de sens est mise en évidence par l’efficacité même des prières récitées en leur honneur.

Link to comment
Share on other sites

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது. 29

நல்ல பண்புகளாகிய குன்றின் மேல் ஏறி நிற்கும் சான்றோரின் சினத்தை ஒருகணமேனும் சமாளித்தல் முடியாததாகும் .

எனது பார்வை:

பெரிசுகள் சும்மாவே சொன்னவை சாது மிரண்டால் காடு கொள்ளாது எண்டு :icon_mrgreen: . ஐம்பத்தெட்டு கலம்பகத்தை பாத்து , கேள்விப்பட்ட ஒரு

சிறிய சாது தொடராய் மிரண்டதால தானே ஒருபெரிய தேசியப்போராட்டதை கொண்டெழுப்பீச்சுது :) :) :icon_idea::icon_idea: .

The wrath 'tis hard e'en for an instant to endure,

Of those who virtue's hill have scaled, and stand secure.

Il est impossible de résister même une seconde, à la colère des

réligieux qui se tiennent sur la colline des qualités, (renoncement,

vraie connaissance et absence du désir).

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். 30

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகும் அறிவோரே அந்தணர் என்பவராவர்.

எனது பார்வை:

இதில ஐயா சத்தியமாய் சாதி பாக்கேல :).எல்லாச் சீவனிலையும் அன்பும் பரிவையும் கொண்டு ஒழுக்கமாய் இருக்கிற எல்லாக் கோஸ்ரியளுமே அந்தணர் தான் எண்டு ஒரு நிறுவல் போடுறார் பாருங்கோ அங்கைதான் ஐயா நிக்கறார் :D :D :icon_idea: :icon_idea:.

Towards all that breathe, with seemly graciousness adorned they

live;And thus to virtue's sons the name of 'Anthanar' men give.

Ceux qui sont appelés andanars, à cause de leur conduite, pleine de vraie compassion pour tout ce qui a vie, ne sont autres que les ascètes.

Link to comment
Share on other sites

அறத்துப்பால் , பாயிரத்தில் , நீத்தார் பெருமையிலுள்ள பத்து குறளையும் முடிவிற்குக் கொண்டு வருகின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

அறத்துப்பால்- பாயிரம் - அறன் -வலியுறுத்தல் ( Assertion of the Strength of Virtue , Encouragement à la vertu ) .

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31

அறம் , வீடுபேற்றையும் சுவர்க்கம் முதலிய செல்வத்தையும் தரும்; ஆதலால் மக்கள் உயிர்க்கு அறத்தைவிட நன்மை உடையது வேறு ஒன்றும் இல்லை.

என் பார்வை:

மனிதனாகப் பிறந்த ஒவ்வருவரும் தமது வாழ் நாளில் தான தர்மங்கள் செய்ய வேண்டும் :) :) . அப்படி செய்தால் அவர்களது ஆத்மா மீண்டும் பிறவி எடுக்காது சொர்க்கத்தை சென்றடையும் :o :o .

It yields distinction, yields prosperity; what gain

Greater than virtue can a living man obtain?

Quel plus grand bien à la vie humaine que la vertu? Elle donne la grandeur, elle donne la richesse.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32

ஒருவனுக்கு, அறத்தை செய்தலினும் மேம்பட்ட நன்மையைத் தருவதும் இல்லை; அதை மயக்கத்தால் மறந்து விடுதலினும் மேம்பட்ட கேடும் இல்லை.

என் பார்வை:

இன்றைய உலகில் அறம் இல்லாததால் தான் பொய்மை என்ற கேடு தலைவிரித்தாடுகின்றது :(:( .

No greater gain than virtue aught can cause;

No greater loss than life oblivious of her laws.

Rien qui donne la grandeur comme la vertu.

Quel plus grand mal que l’oublier !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய திருக்குறள் விளக்கத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல். 33

ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவுக்கு அறச்செயல்களை இடைவிடாமல் செய்யவேண்டும் .

என் பார்வை:

நாங்கள் உழைக்கிற காசில ஒரு நாளைக்கு ஒரு யூறோ சேத்தால் மாசத்தில முப்பது யூறோ வரும் :unsure::unsure: . அதை நேசக்கரத்துக்கு குடுத்தால் ஒராளுக்கு ஒருமாசத்துக்கு தேவையானதை உங்களை நன்றியோடை நினைச்சு செய்வினம் :).இதை தொடந்து செய்யவேணுமெண்டு வள்ளு ஐயா சொல்லிறார் :icon_idea:.

To finish virtue's work with ceaseless effort strive,

What way thou may'st, where'er thou see'st the work may thrive.

Que l’on pratique donc la vertu sans cesse, partout et par tous les moyens possibles.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. 34

ஒருவன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறமாகும்.மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவையாகும்.

என் பார்வை:

உண்மையில இந்த இடம் முக்கியாமன இடம் . அறம் எண்டால் ஒருத்தன் மனத்தூய்மையாய் குற்றமில்லாதவனாக இருக்க வேணுமாம் :unsure: :unsure: . மனத் தூய்மை இல்லாத எந்தவிசயமும் சும்மா ஆரவாரமாய் இருக்கும் எண்டு ஒரு குட்டும் தாறார் :icon_mrgreen::icon_idea: :icon_idea:.

Spotless be thou in mind! This only merits virtue's name;All else, mere pomp of idle sound, no real worth can claim.

Qu’il (celui qui pratique la vertu) devienne sans tâche selon sa conscience! c’est là tout l’effet de la vertu. Le reste n’est que vanité.

Link to comment
Share on other sites

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். 35

பொறாமை , ஆசை , கோபம் , கடுஞ்சொல் ,இந்த நான்ங்கு குற்றங்களையும் விட்டு நடப்பதே அறமாகும் .

என் பார்வை:

ஒருவர் எப்படியிருதால் நல்லது என்று சொல்லுறாரோ தெரியாது :unsure::unsure: . நானும் தேடிக்கொண்டு இருக்கின்றன் இவையளைக் கடந்த மனிதரை :icon_mrgreen::icon_idea:

'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,

Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

Reprimander sans répit, les quatre maux: l’envie la convoitise, la colère et les paroles dures, c’est pratiquer la vertu.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தை நாள்தோறும் செய்யவேண்டும் . அதுவே உடம்பில் இருந்து உயிர் நீங்கும் காலத்து அழியாத துணையாக இருக்கும்.

என் பார்வை:

கர்ணன் ஒவ்வொரு நாளும் செய்த அறம் தான் அவர் சாகேக்கை கூட சீவன் போகாமல் தர்மதேவதை காத்தவா எண்டு சொல்லுகினம் :unsure::unsure::):icon_idea:.

Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise';

Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Pratiquer la vertu, sans penser qu’il sera temps de la pratiquer au moment de la mort. Lorsque l’âme se détache du corps,son compagnon indestructible est la vertu ainsi pratiquée.

Link to comment
Share on other sites

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37

பல்லக்கை சுமப்பவனிடத்தும் அதில் ஏறிச் செல்பவனிடத்தும் அறத்தினது பயன் இத்தன்மையானது என்று சொல்ல வேண்டியதில்லை ; அது நேரில் அறியப்படும் .

என் பார்வை:

தங்கடை வாழ்க்கையை நேர்மையாய் கோண்டுபோறவை :unsure:,வாழ்கையில வாற சந்தோசம் சரி , கவலை சரிஇரண்டையும் ஒரேமாதிரி பாத்து சந்தோசமாய் பல்லக்கில போறவை மாதிரி போவினம் :icon_mrgreen: இதுக்கு எதிர்மாறாய் நேர்மை இல்லாமல் இருக்கின்றவர்கள் , இந்தப் பல்லக்கு தூக்கிறாக்கள் மாதிரி சந்தோசத்திலையும் அமைதியாய் இல்லாமல் , கவலை எண்டாலும் அதை தாங்கிற சக்திஇல்லாமல் வாழ்கையை சுமையாக்கி போடுவினம் :o எண்டு சொன்னாலும் , இந்த இடத்திலை

சாதீயத்தை தொட்டுப் போட்டாரோ எண்டு ஒரு எதிர்மறையான கேள்வியும் எழும்புது :o:icon_idea: .

Needs not in words to dwell on virtue's fruits: compare

The man in litter borne with them that toiling bear!

Point n’est besoin de faire connaitre le profit de la vertu; on le constate chez celui qui porte le palanquin (chaise à porteur) et chez celui qui y est assis.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல். 38

ஒருவன் அறத்தை ஒருநாளும் விடாமல் செய்வானாகில் அச்செயலாது மறுபடியும் பிறவி வராமல் தடுக்கும் கல்லாக அமையும்

என் பார்வை:

நல்ல விசையங்களையும் அறத்தையும் ஒவ்வரு நாழும் செய்து கொண்டு வர உங்கடை வாழ்க்கை போற பாதையை சீராக்கித் தாற கல்லு ( இப்ப றோட்டு போடேக்கை கல்லுகள் எல்லாம் போட்டு படிமானங்கள் போட்டுத்தானே தார் ஊத்திறம் ) மாதிரி இருக்கும் :unsure::):icon_idea: .

If no day passing idly, good to do each day you toil,

A stone it will be to block the way of future days of moil.

La vertu pratiquée tous jours, sans qu’il y en ait un de perdu, est la pierre qui ferme le chemin des naissances futures.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் பணி .......

Link to comment
Share on other sites

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல. 39

அறத்தோடு பொருந்தி வரும் இன்பமே இன்பமாகும் அறத்தோடு பொருந்தாது வருவன எல்லாம் துன்பம் தருவனவாகும் ; அவை புகழும் இல்லாதவை ஆகும்

என் பார்வை:

வாழ்கைல ஒருத்தர் புகழ் அடையவேணும் எண்ட ஆசை இருந்தால் :unsure: :unsure: அதுக்கு முதல் தூய்மையான மனசோட நேர்மையான வழில போகவேணும் :icon_idea: ,அது தான் சந்தோசம் . நேர்மை இல்லாமல் நடந்து வாறது புகழ் இல்ல , அதோடை சந்தோசமும் இருக்காது :(:(:icon_idea: .

What from virtue floweth, yieldeth dear delight;

All else extern, is void of glory's light.

Le vrai bonheur vient de la vertu; tout le reste

est douleur et indigne d’éloge.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி. 40

ஒருவன் வாழ்நாள் முழுதும் செய்யத்தக்கது நல்வினையே ; வெறுத்து ஒழிக்கத்தக்கது தீவினையே . 'ஓரும் ' என்பன இரண்டும் அசை நிலை .

என் பார்வை:

இந்த இடமும் ஒரு முக்கியமான இடம் :icon_mrgreen: . ஒருத்தர் பிழை சொல்லுற மாதிரி நடந்து கொள்ளாமல் பாராட்டுற மாதிரி , நேர்மையான அறங்களை செய்யிறதால வாறது தான் புகழ் எண்டு அதுக்கும் ஒரு வரைவிலக்கணத்தை வள்ளு தாறார் :) :) :) .

'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.

Ce qui peut être fait à autrui est le bien. Ce qui ne peut lui être fait est le mal.

Link to comment
Share on other sites

அறத்துப்பால் பாயிரம் அறன்வலியுறுத்தல் பகுதியில் உள்ள பத்துக் குறள்களையும் இத்துடன் நிறைவிற்குக் கொண்டு வருகின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

அறத்துப்பால் - இல்லறவியல் - இல்வாழ்க்கை ( Domestic Life ,La vie familiale ).

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. 41

இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடைய பெற்றோர் , மனைவி , மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான்.

எனது பார்வையில்:

வெளி நாட்டுக்குப் போனதன் பின்பு வெள்ளைக்காறியிடம் மயங்கி வீடுவாசலை மறந்து அடுகிடைபடுகிடையாகக் கிடையாக் கிடக்காமல் :o , பெத்த தாய் தகப்பனையும் ,கட்டின மனுசி பிள்ளைகளையும் நினைத்து கடுமையாய் உழைச்சுக் குடும்பத்தைக் காப்பாற்றி :icon_mrgreen:,தானும் ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தோட சந்தோசமாய் வாழுபவன்தான் சரியான குடும்பஸ்த்தன் என்பது என்ரை இவ்வளவு கால அனுபவமும் :unsure:,இந்தக் குறள் வரிகளிலை இருந்து நான் எடுத்துக் கொண்டதும்...... :D:icon_idea: .

The men of household virtue, firm in way of good, sustain

The other orders three that rule professed maintain.

Le chef de famille le ferme soutien des (hommes des) trois autres

clases qui ont renoncé au monde (étudiant, anachorète et ascète)

en ce qu’il les aide à persister dans leur bonne voie.

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. 42

துறவிகளுக்கும் , வறுமையாளர்களுக்கும் , தன்னிடம் வந்து இரந்தவர்களுக்கும் ,( யாசித்தவர்களுக்கும் ) இல்லறம் நடத்துகின்றவன் துணையாக இருக்க வேண்டும் .

எனது பார்வையில்:

5 யூறோவுக்கு வாங்கின ஊறுகாய் போத்தில் முடிஞ்சுபோகுமெண்டு ஊறுகாயைய்ப் போத்திலைக் கட்டித்தூக்கிப் போட்டு :o ,பிள்ளைகுட்டியளை ஊறுகாய்போத்திலைப் பார்த்துச் சாப்பிடச் சொன்ன கஞ்சப் பயல் மாதிரி இருக்காமல் :icon_mrgreen: ,நல்லாய் எலாருக்கும் இருக்கிறதைப் பகிர்ந்து குடுத்து தானும் சந்தோசமாய் வாழவேணும்... :lol::D:icon_idea: .

To anchorites, to indigent, to those who've passed away,

The man for household virtue famed is needful held and stay.

Celui qui vit de la vie de famille est le soutien de ceux qui ont renoncé

au monde, des miséreux et de ceux qui sollicitent la charité.

Link to comment
Share on other sites

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43

தென்புலத்தார் , தெய்வம் , விருந்தினர் ,சுற்றத்தார் , தன்குடும்பத்தார் , என்னும் ஐந்திடத்தும் அறநெறி பேணுதல் இல்லறத்தானுடைய சிறந்த கடமையாகும் .

எனது பார்வையில்:

உங்கடை வாய் உன்னுறது தெரியுது :icon_mrgreen: .அப்ப இந்த ஜந்திடம் மட்டும் அறத்தின் படி வாழ்ந்து விட்டு மிச்ச எல்லாத்திடமும் பிறாடாக இருக்கலாமோ எண்டு வில்லங்கமாய்க் கேட்காமல் :oஉயிர்கள் எல்லாத்திடமும் அறத்தின் வழியில் வாழவேண்டும்... :D :D :icon_idea: .

The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charity.

S’acquitter sans jamais y manquer des cinq devoirs suivants: offrir des oblations aux mânes des ancêtres, faire des sacrifices aux dieux, soigner les hôtes, obliger ses parents et s’occuper de soi-même: telle est la vertu glorieuse du chef de famille.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44

பழி பாவங்களுக்கு அஞ்சி தேடிய பொருளை அனைவரோடும் கூடிப் பகுத்து உண்ணும் இல்லறத்தானுடைய வாழ்க்கை களங்கமற்றதாகும்.

எனது பார்வையில்:

அப்ப களவெடுத்த பொருளையும் இப்பிடிப் பகிர்ந்து உண்டால் பாவம் போய்விடும் எண்டிட்டு முழுநேரமாய்க் களவிலை இறங்கிறதில்லை........... :o^_^ இது வந்து நேர்மையாய் உழைச்சுத்தேடின பொருளுக்குத்தான் வள்ளுவர் சொன்னது கண்டியளோ........ :D:D:icon_idea: .

Who shares his meal with other, while all guilt he shuns,

His virtuous line unbroken though the ages runs.

Si le chef de famille mène sa vie, en redoutant la malhonnêteté dans l’acquisition de la richesse et en prenant ses repas, après avoir distribué la richesse ainsi acquise, (aux personnes pré désignées), sa descendance ne déclinera jamais.

Link to comment
Share on other sites

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. 45

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்கினால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

எனது பார்வையில்:

கலியணங் கட்டியவர்களின் பண்பும் அதின்ர பயனும் எப்படியிருக்கவேண்டுமென்றால் :unsure:, கட்டிய மனைவி பிள்ளைகளிடம் அளவற்ற அன்பும் :blink: ,தேடிய பொருளுகளை நட்பு , சொந்தம் சுத்துப்பட்டியளோடை பகிர்ந்து சாப்பிடவேணும் :icon_mrgreen::):icon_idea: .

If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain.

La vie domestique remplie d’amour et de charité est parfaite et utile.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன். 46

ஒருவன் அறநெறிப்படி இல்வாழ்க்கையை நடத்தினால் அதைவிட அவன் வேறு நெறியில் போய்ப் பெறத்தக்கது ஒன்றுமே இல்லை.

எனது பார்வையில்:

இது எனக்கு கொஞ்சம் இடிக்குது :unsure: :unsure:.அப்பிடியெண்டால் ஏன் அதிக சனம் கட்டினவள் வீட்டை இருக்க இரண்டாவதுக்குப் பாயினம் :icon_mrgreen::o?????????ஏதோ ஒன்று இருக்கிறபடியாலை தானே :icon_idea: .

If man in active household life a virtuous soul retain,What fruit from other modes of virtue can he gain?

Si la vertu est pratiquée dans la vie familiale, quel avantage y a-t-il d’efforcent de vaincre les sens.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.