Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. துளசி

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    7
    Points
    8892
    Posts
  2. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34974
    Posts
  3. தமிழ்சூரியன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    5566
    Posts
  4. தயா

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    5
    Points
    11015
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/27/13 in all areas

  1. நான் இதுவரை இந்த திரியில் எழுதவில்லை.நான் எனது வலைப்பதிவில் எழுதியதை இங்கே சிலர் பதிவிட்டிருக்கிறார்கள்.இவன் ஆர் எழுதுவதற்கு? சின்னவன் பெரியவன் என்ற காழ்புணர்ச்சி இல்லாமல் நேர்மையோடு நான் எழுதியை படித்தால் நான் சொல்ல வந்த விடயம் தெளிவாகப் புரியும். நான் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் அங்கே என்ன நடந்தது என்ற பலவேறு தரப்பிலும் தகவல் சேகரித்து சமவ்பங்களை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் தான் என்னுடைய வலைப்பதிவில் எனது கருத்தை எழுதினேன். ஜெயபாலன் மட்டுமல்ல இன்னொரு எக்சோ வையோ போய் தமிழ் முசுலிம் ஒன்றுமை பற்றிப் பேசினால் இதுதான் நடக்கும். ஜெயபாலன் கைது அல்லது கடத்தப்பட்டார் என்ற செய்தியின் மூலம் அவருக்கு விளம்பரம் கிடைத்தாக சொல்லிக் கொண்டாலும் ஒரு கவிஞனை கடத்தினார்கள். கருத்துச் சொன்னதற்காக கைது செய்தார்கள் அங்கே சனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் கிடையாது என்று எல்லைகளற்ற ஊடகர் அமைப்பு, கருத்துச்சுதந்;திரத்துக்கான அனைத்தலக அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்கா அரசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றன. ஜெயபாலன் நல்லவரா கெட்டவரா சுயவிளம்பரம் தேடுபவரா என்பதற்கு அப்பால் அங்கே இயல்பு நிலை திரும்பிவிட்டது சிங்ப்பூர்மாதிரி வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு சுற்றுலா சென்று மகிந்த அரசின் பொருளதார சுமையை குறைப்பவர்களுக்கு அங்கே போனால் கைது செய்யப்படுவிர்கள்.கடத்தப்படுவிர்கள் என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்பட்டிருக்கிறதே.இதைத் தானே சிறீலங்காவை புறங்கணி புறக்கணி என்று நாங்கள் சொல்லக் கொண்டிருக்கிறோம். இதைத் தானே நான் எழுதினேன்.இது ஏன் நெடுக்காலபாவான் என்ற பெயரில் எழுதுவபருக்கு குத்தல் குடைச்சலைக் கொடுக்கிறது. எனக்கு வரும் 12ம் திகதி 59 வயது ஆகிறது அவருக்கு நான் சின்னவன். எனக்கு தெரியும் அவர் என்ன அர்த்தத்தில் என்னை சின்னவர் என்று சொன்னார் என்பது. நான் எழுதிய கருத்து தவறு என்றால் சிவா சின்னப்பொடி எழுதினது பிழை.இது தான் உண்மை.இது இ;ப்படித்தான் இருக்கவேண்டும்.என்று வெளிப்படையாக எழுதுவது தானே ஆக்கபூர்வமான விமர்சனம். தமிழ் முஸ்லீம் முரண்பாட்டின் சூத்திரதாரிகள் அமிர்தலிங்கமும். இராஜதுரையுமே. செல்வநாயகத்தக்குப் பின் தமிழரசுக்கட்சிக்கு தலைமை தாங்குவதில் அமிர்தலிங்கத்துக்கும் இராஜதுரைக்கும் பனிப் போர் நடந்தது.அஷ;ரப் அப்போது தீவிரமான தமிரசுக்கட்சி செயற்பாட்டாளர். இராஜதுரையை மட்டம் தட்ட அஷ;ரப்பை அமிர்தலிங்கம் தூக்கிப்பிடிக்க கிழக்கில் தனக்கு போட்டியாக அஷ;ரப்பை வந்துவிடக் கூடாது என்பதற்காக இராஜதுரை அவரை மட்டம் தட்ட இந்த அரசியல் சதுரங்க விளையாட்டு இரண்டு சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக பர்ணிமித்தது.சிறீமா அரசாங்கம் அதற்கு தூபம் போட்டு வளர்த்தது. எப்படி அமிர்தலிங்கம் இயங்கங்கள் தன்னை மிஞ்சி வளரக் கூடாது என்று வடக்கில் காய் நகர்த்தினாரோ அதே வேலையைத்தான் கிழக்கில் அரசியலில் செய்தார் இறுதியாக எனது பதிவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு ........ (ஜெயபாலன் ஓட்டுக் குழு உறுப்பினன்;…. ரோ ஏஜண்ட்… சுய விளம்பரம் தேடும் பிழைப்புவாதி… என்று சேறடிப்பதன் முலம் இந்த கருத்து கந்தசாமிகள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? யாரை காப்பாற்ற விரும்புகிறார்கள்) நெடுக்காலபோவான் பதிலழித்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஜெயபாலன் மீதான காழ்ப்புணர்ச்சியால் மகிந்த அன் கொம்பனியை அவர் மறைமுகமாக நியாயப்படுத்தியிருக்கிறார்.
  2. எனக்குத் தோன்றுவது ஒன்றுதான்.. வன்னிக்குள் போனவரை யாரென்று சரியாக அறியாதவர்கள் பிடித்துவிட்டார்கள். மேலிடத்துக்குச் சொன்னதும், மரியாதையுடன் அனுப்பி வைத்துள்ளார்கள். கவிஞரின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது..
  3. சிவா அண்ணை... கவிஞர் தனக்கு இருக்கும் இருந்த அச்சுறுத்தலை மீறி ஊர் போனார் அரசியலமைப்புகளை சந்தித்தார் என்பதுவே போதுமானது அவரின் போர்க்குணத்தையும் துணிவையும் சொல்ல.... !!! விமர்சகர்களில் இரண்டு வகை.... புலிகளை விமர்சிப்பவர்களையும் கூட அப்படி வகைப்படுத்தலாம்.... ஒண்று அரசாங்கத்தை அண்டி நிண்டு கொண்டு தங்கள் தரப்பை நியாயப்படுத்த விமர்சிப்பது... மற்றது புலிகள் மீது அதிகப்படியான ஈடுபாட்டால் வருவது... கவிஞர் புலிகளிடமே போய் புலிகளை விமர்சிக்கும் இரண்டாவது வகை.... !! அதில் சந்தேகம் கிடையாது... இலங்கை அரசு எந்தக்காலத்திலும் கருத்து சுதந்திரத்தையோ தனிமனித சுதந்திரத்தையோ மதிப்பது கிடையாது... இது அனைவருக்கும் தெரிந்த ஒண்று... அங்கு சுதந்திரமாக போய் அரசியல் வேலை செய்யலாம் எண்று கவிஞர் நினைத்து போய் இருந்து இருப்பார் ஆகில் இது அவரின் மிகப்பெரிய தவறு... இல்லை இணக்க அரசியல் செய்து தமிழ் மக்களுக்கு வேண்டியதை பெற போய் இருந்து இருப்பார் ஆயின் அவருக்கு இந்த நிலை வந்து இருக்க வாய்ப்பே இல்லை.... இண்டைக்கு கவிஞர் வெளியால் விடப்பட்டதுக்கும் கூட தமிழ் ஊடகங்களே மிகமுக்கிய காரணம்... கவிஞரின் கைதை செய்தவர்கள் எந்த சீருடையிலும் வரவில்லை என்கிறது தகவல்கள்... வளக்கமான காணமல் போனோர் பட்டியலில் போய் இருந்து இருக்க வேண்டியவரை முக்கிய செய்தியாக்கி காப்பாத்திய அனைத்து ஊடகங்களுக்கும் முதலில் நண்றி...
  4. சிவா அண்ணை ..! எனக்கு நீங்கள் சொல்வதில் பூரணமாக உடன் பாடு இருக்கிறது... ஆனால் உள்ளுக்குள் பலரை போல் கேள்வியும் இன்னும் பதில் இல்லாமல் இருக்கிறது... அதை அவர் திரும்பி வரும் போது அவரிடமே காரசாரமாக கேட்கலாம் எண்று இருந்தேன்... அதை பொதுவாக கேட்கிறேன் திரும்பி வந்து அவர் பதில் அளிக்கட்டும் ... அவரின் மீதான மரியாதையை நிலைத்து வைத்திருக்க எனக்கு இதற்கு பதில் வேண்டும்... !!! கேள்வி 1 ஊர் அறிந்த அரசியல் செயற்பாட்டாளர், உலகறிந்த கவிஞர் எந்த பாதுகாப்பு முனேற்பாடும் இல்லாது ஏன் இலங்கை போனார்...??? இலங்கையில் இராணுவத்தால் நடந்த நடக்கும் கொடுமைகளை இந்த தமிழ் சர்வதேச ஊடகங்கள் சொன்னவைகளையும் அவர் நம்பவில்லையா...?? இதில் விடுதலை புலிகளின் முன் யோசனையும் தந்திரமும் போதாது எண்ற கவிஞருக்கு இப்படி என்பதை நம்பமுடியாமல் இருக்கிறமையை தவிர்க்க முடியவில்லை... கேள்வி 2 கைது செய்த பின் கவிஞரின் பேட்டியை கேட்டேன்... தனது கைதை அவர் எதிர்பார்த்து இருந்து இருக்கவில்லை என்பது புலப்பட்டது... இப்போ கேள்வி என்ன எண்றால் புலிகளை விமர்ச்சித்து புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் போய் வந்த போது புலிகள் கொடுத்த அதே மரியாதையையும் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் தனக்கு தரும் எண்று எதிர்பார்த்தாரா...??
  5. [size=5]யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. [/size] [size=5]உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. [/size] [size=5]சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.[/size] [size=5]ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம். எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்களும் ஒன்று சேர்ந்து , சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டை கைவிடுங்களென்று வலியுறுத்துவதை, ஏற்கமாட்டோமென உறுதிபூணும் நாளே இம்மாவீரம்தினம். மாவீரர்கள் போராடிப்பெற்ற இறைமையை, உலகறியச் செய்வோம் என்பதனை உரத்துச் சொல்லும் நாள் இது. 13 இற்குள் இணைந்து போதல், 19 இற்குள் சரிந்து போதல் சரியென்று வாதிடுவோர் மாவீரர்களை நினைவுகூரத் தேவையில்லை. 77 இல் மக்கள் இட்ட ஆணை, போர்நிறுத்த காலத்தில் அங்கீகரிக்கப்படாத அரசாக பரிணாமம் அடைந்தது. அதன் இறைமையை ,சமாதானம் பேசிய வல்லரசாளர்களும் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் ,போராடிப்பெற்ற இறைமையை, பேசிக்கொண்டே அழித்தார்கள். 'முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமை' என்கிற பேரினவாத அரசியல் கருத்தியல், தமது பிராந்திய நலனுக்கு தேவையாக இருப்பதால், தமிழ்தேசிய இனத்தின் இறைமையை சிதைப்பதற்குத் துணை போனார்கள். ஆனாலும் அழிக்கப்படவில்லை எம்மினம் போராடிபெற்ற இறைமை. இதன் நீட்சியே தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்ட நகர்வாக இருக்க வேண்டும். அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பன தேசிய இன முரண்நிலையைத் தீர்க்கும் என்போர் , தமிழ் தேசத்தின் இறைமையை மறுப்பவர்களாகவே கருத வேண்டும். சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வதுதான் அதிகாரப்பகிர்வா?.[/size] [size=5]ஒற்றையாட்சி என்பது , சிங்களத்தின் முழு இலங்கைக்குமான இறைமையை ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்படுவது. ஆகவே ,'சிங்களத்தின் ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி' என்பது அடிப்படையில் தவறான அரசியல் கருத்தியல் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமல்ல .[/size] [size=5]இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையில் சுயாட்சி பற்றி பேசலாம். ஆனால் அதற்கும் சிங்களம் இணங்காது என்பதைப் புரிந்து கொள்ளாமல் ,இணக்கப்பாட்டு அரசியல் முயற்சிகளில் ஈடுபடும் தமிழர் தரப்புக்கள் ,எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதனை பல ஒப்பந்தக் கிழிப்புகள் எமக்கு உணர்த்துகின்றன.[/size] [size=5]விலைபோகாத கல்லறைகள் எமக்கு இடித்துரைக்கும் செய்தி இதுதான். 'போராடினால் பெறுவாய் விடுதலை' என்பது வரலாறு எமக்களித்த வரம்.[/size] [size=5]'சுயநிர்ணய உரிமை கோரும் பயங்கரவாதிகள் ' என்பதே வல்லரசாளர்கள் எமக்கு வழங்கும் கலாநிதி பட்டம்.[/size] [size=5]ஆகவே கல்லறைச் செய்திகள் சொல்லும் , எளியோரை வலியோராக்கும் சாத்தியங்களைத் தேடுங்கள்.[/size] [size=5]மக்கள் சக்தியின் முன்னால் , மாபெரும் சாம்ராஜ்யங்கள் அடிபணிந்து போனதை கவனியுங்கள்.[/size] [size=5]இயங்காமல் இருப்பது மாற்றத்தைக் கொண்டு வராது. இயங்கு தளத்தினை அழிப்பதுதான் ஒடுக்குமுறையாளனின் நோக்கம்.[/size] [size=5]அடிபணிவு அரசியல் முழு இனத்தையும் அழித்துவிடும். எம்மினம் அழியப்போகிறதா ,இல்லையேல் மீண்டும் நிமிரப்போகிறதா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது. நம் மாவீரர்கள் பற்றிப்பிடித்தது, ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமையை. அவர்களின் இலட்சியம் தோற்கடிக்கப்படவில்லை. இலட்சியம் நிறைவேறும் போதுதான் அவர்களை வரலாறு பதிவு செய்யும்.[/size] [size=5]அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?.[/size] [size=5]- ஆக்கம் இதயச்சந்திரன் [/size]
  6. பொயட்டே விரும்பவில்லை.. தன் கைதை சிறீலங்கா அரசிற்கு எதிராக பாவிக்க. அந்த வகையில் தான் அவரது செயற்பாடுகள் இருந்தன. நான்.. ஹக்கீமோடு பேசி இருக்கிறேன்.. பசில்லோடு அவர் பேசி இருக்கிறார்.. எல்லாம் நல்லா போய்க்கிட்டு இருக்குது.. நான் இன்ன உயர் அதிகாரியோடு அமைச்சரோடு தொடர்பில் இருக்கிறேன்.. கைதில் இருந்தாலும்.... ஊடக வாயிலாக..வெளி உலகத்தோடு தொடர்பில் இருக்கிறேன்.. எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை.. எவரும்..எந்த அசெளகரியமும் தரவில்லை... இப்படியான வாக்குமூலகங்களை அளித்துக் கொண்டிருக்கும்.. ஒரு கைதின் அடிப்படையில் சிறீலங்கா அரசிற்கு.. எதிராக என்ன பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியும் என்பது.. சின்னவருக்கே வெளிச்சம்..! இதனை உதாரணமாகக் காட்டினால்.. சிறீலங்காவில் கைதிகள் மேற்குலக தரத்திற்கும் மிக மேலாக சகல உரிமைகளோடு கையாளப்படுப்பவதாக எல்லோ உலகம் கருதும். மேலும்... விசா விதிகளை மீறிய தமிழர் ஒருவர் மீது கூட.. இவ்வளவு இலகு வழியில் நெகிழ்வோடு.. கண்ணியத்தோடு..சிறிலங்கா அரசு நடந்து கொள்கிறது.. அங்கு என்ன இனத்துவேசம் இருக்கு என்று தான் உலகம் நினைக்குமே தவிர.. இதனை எப்படி சிறீலங்காவிற்கு எதிராக பிரச்சாரப்படுத்த முடியும்..???! இவை உள்ளதைக் கெடுக்கும் நடவடிக்கையாக அமைவதோடு உண்மையான உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான மக்களை பெரிதும்... ஆபத்தான சூழலில் தள்ளிவிடுவதையே செய்யும்..!!! இருந்தாலும்.. இத்தனைக்குள் இருந்தும்.. இந்தக் கைதை வெளியில் இருந்தவர்கள் சிறீலங்கா அரசிற்கு எதிராக பயன்படுத்தத் தவறவில்லை. ஆனால் சின்னவர் அவர்களையும் விடுவதாக இல்லை. ஒரே படத்தில் நடித்து விருது தட்டிச் சென்றது போல.. ஒரே கைதில்.. சிறீலங்காவிற்கு நல்ல விருதை வாங்கியும் கொடுத்திருக்கிறார் பொயட். எல்லாம் நன்மைக்கே..! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகினை..???!
  7. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 33 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  8. 25.11. இன்றைய திகதியில் மாவீரர் ஆகிய இந்த 35 மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.