மகாஜனா கல்லூரியின் கம்பீர தோற்றம்
முகநூலில் சுட்ட சில யாழ்ப்பாணத்து படங்கள்
தாவடி சந்தியில் மிகவும் பரபரப்பான ஒரு வியாபார நிலையம்.ஒரு சிறிய கடை,ஒரு முகப்பு விளக்கு,ஒரு ஆச்சி.
மிளகாய் பொடியின் நெடியிலும்,மரவள்ளி பொரியலின் வண்ணத்திலும் எச்சில் ஊறாமலில்லை.
ஓடர் எடுத்திட்டு தான் கிழங்க சீவவே தொடங்குவா ஆச்சி,சரியான busy வேற.
அதிகமான நெடியில் ஒரே தும்மல் வர,ஆச்சரியத்தோடு ஆச்சியிடம் ஒரு வினா?
எப்பிடி பாட்டி 1 நிமிசத்துக்கே இப்பிடி தும்முதே நீங்க எப்பிடி?
"பொறுமையா எந்த தொழில செய்தாலும் எல்லாம் வெல்லலாம்!"
நிறைய போட்டோ எடுக்கவேணாம் எண்டு சிரிப்புடன் ஒரு அதட்டல்.
எங்க ஆச்சி உறைப்ப கூட்டிருவா எண்ட பயத்தில வாயில பொரியல போட்டுட்டு வந்திட்டம்.
thanks: anapayan parameswaran
சுளகுப் படையல்.
இன்று சுதுமலை அம்மனுக்கு தேர்த்திருவிழா. தேர்த்திருவிழாவின் போது இடம்பெறும்
சுளகுப் படையல் பாரம்பரியமானதும் தனித்துவமானதுமாகும். மிகச் சிறுவயதிலேயே இதனைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டதுண்டு. சுதுமலை எங்கள் அடுத்த ஊர் ஆனதால் ஓரிரு தடவைகள் போன நினைவுண்டு.
மாலையில்தான் தேர்த் திருவிழா இடம்பெறும். வீதி வலம் வேளையிலும் இருப்பிடத்தை வந்தடைந்ததும் பாரம்பரியமாக நடைபெறும் சுளகுப்படையல் இடம்பெறும்.
இச் சுளகுப் படையலில் நான் அறிய மாமிச உணவாக முட்டை படைக்கப்படுவதுண்டு, அது இப்போதும் தொடர்கிறதோ தெரியவில்லை.
படம்: Karunakaran Senthuran
வறணியில் கோழி ஏலம் கூறும் பக்தர்கள்!Photo credit: Arun Kumar
செவ்வண்ணமேனியாள்
****************************
நெஞ்சம் எங்கும்
நினைவாலே நிலைத்தவள்
நித்தம் என் நினைப்பினில் நீர்க்கமற நிறைந்தவள்
உடல் முழுதும் தழுவி
உவகை தருபவள்
உதடுகளின் இடை புகுந்து
உல்லாசமாய் நுழைந்தவள்
நாசி வழி புகுந்து சென்று
நாபிக் கமலத்தை நிறைப்பவள்
துள்ளி ஓடும் குருதியிலும்
தீர்க்கமாய் நிறைந்தவள்
அள்ளி ஆசையோடு முத்தமிடும்
அழகுச் செவ்வண்ண மேனியாள்
நிகரில்லா அவள் வனப்பின்
நினைவுகளைச் சுமக்கிறேன்
நித்தமும் அவள் மடி துயிலவே
தகிக்கிறேன் தவிக்கிறேன்
நாடிச் சென்று அவள் மேனி தழுவ
நாதியற்று நிற்கிறேன்...
#ஈழத்துப்பித்தன்
அச்சுவேலி
சுன்னாகம் ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் தேவஸ்தானம் ...
சண்டிலிப்பாய் - மாகியப்பிட்டி - அங்கணாக்கடவை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் ........ !!