வணக்கம் வாத்தியார்....!
மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ ,நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே....!
---திருமூலர்---
(அடுத்து எங்கெங்கே என்னென்ன பிறப்பு வாய்க்குமோ அறியேன். அப்போது உன்னைநான் மறந்தும் போகலாம்.அப்படி ஆகிவிடாமல், மறக்காமல் என்னிரு கரங்களில் சிறந்த மலர்களையும் நண்நீரையும் ஏந்தி உன்முன் வந்து வழிபாடும் வண்ணம் அருள்பாலிக்க வேண்டும் என் ஈசனே).
சிவராத்திரி தினங்களில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள் :--
--- தவம் புரிந்த அம்பாளின் வேண்டுதலுக்கினாங்க அவரை இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனது.
--- பார்த்தனுக்கு பாசுபதாஸ்திரம் அருளியது.
--- கண்ணப்பநாயனாரிடம் கண்தானம் பெற்று அவர் சத்திர சிகிச்சை செய்ய அனுமதித்தது.
---பகீரதனின் பகீரத முயற்சியால் கங்கை பூமிக்கு வர அவளை உச்சியில் தாங்கி பார்வதி அறியாமல் பதுக்கி வைத்திருப்பது.
---மார்கண்டேயருக்கு அபாயம் அளிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு , பிரம்மா விஷ்ணு அறியாத தன பாதத்தை காலனின் மார்பில் வைத்து கருணை புரிந்தது.