யாழ் சொந்தங்களுக்கு,
நன்றி. பெருநன்றி. தங்கை நிலாமதி அவர்கள் எனக்கு இன்று செய்தி அனுப்பிய பிறகுதான் வாழ்த்துக்கள் பகுதியைப் பார்க்கத் தோன்றியது. இதுவரை இப்பகுதிக்கே வராமைக்கு வருந்துகிறேன். என் நினைவாற்றல் சுமார்தான் என்பதால் இனி வாழ்த்துப் பகுதிக்கு வந்தாவது ஏனைய யாழ் சொந்தங்களின் பிறந்த நாள் முதலிய சுபநிகழ்வுகளை அறிந்து வாழ்த்துக்கள் கூறுவேன்.
இந்த எனது பிறந்தநாள் காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில். எனது மகள் முதல் முறையாக (சுமார் பதினைந்து நாட்கள்) சுவிஸ் சென்று திரும்பினாள். அவள் கணிதத்தில் ஆய்வு மாணவி. இன்னும் வரும் காலங்களில் என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் யாழ் சொந்தங்களுடன் பகிர்வேன். அவர்களையும் தெரிந்து கொள்வேன். யாழுடன் இந்த என் முதல் பிறந்தநாள் ஒரு பொன்னாள். யாழில் என் வயது ஒன்று.