படம் : குமுதம் (1961)
இசை : K V மகாதேவன்.
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..
பல்லவர் கோன் கண்ட மல்லைப் போல
பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..
பெண்ணொன்று ஆணொன்று செய்தான்
அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
கண்ணான இடம் தேடி வந்தோர்
என் கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..
பருவத்தில் இள மேனி பொங்க
ஒரு பக்கத்தில் இன்னிசை மேளங்கள் முழங்க
அரங்கேறி நடமாடும் மங்கை போல
அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..
உடலாலும் மனதாலும் உன்னை
என் உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
கடல் வற்றி போனாலும் போகும்
கொண்ட கடமையும் ஆசையும் மாறாது நாளும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்..