இன்னொருவர் வேதனை
இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கே
இதெல்லாம் வாடிக்கை.
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை..
ஜனவரி 30, 2012 இல் 11:02 முப (சினிமா பாடல்)
திரைப்படம்; ஆசை முகம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சவுந்தரராஜன்
=================================
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு அவர்
உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார்
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
எத்தனை பெரிய மனிதனுக்கு