உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வரையறுக்கப்பட்ட விடைகள் காண்பது எளிதல்ல. என்னுமொருவிதத்தில் அவ்வாறான வரையறுப்புகளை நோக்கி பயணித்தால் அது பாதகமாகவும் முடியலாம்.
ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டம் தங்களை சிங்கள தேசிய இனமாக உருவகப்படுத்தி சிறுபான்மை மக்கள் கூட்டத்தை தமிழ் தேசீய இனமாக கருதி அவர்கள் மீது ஒடுக்குமுறையை செய்கின்றது. இவ் ஒடுககுமுறைக்கு உட்படுகின்றவர்கள் தம்மை தமிழ்த்தெசீய இனமாக உணர்ந்து ஒடுக்கு முறையில் இருந்து விடுபட போராடுகின்றனர். இவ்வாறான ஒரு கோணத்தில் தமிழ்த்தேசீயம குறித்த அணுகுமுறைகள் அமையலாம். இதற்கு உள்ளே இறங்கி அலசினால் தமிழ்த்தேசீயத்துக்கான வரையறை வரவாய்ப்பில்லை வேறு நிறைய வரும். .
பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து. கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன்.