படம்: பணத்தோட்டம் (1963)
இசை : MSV & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : TMS
குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் –அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்
மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி (மனத்)
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி (மனத்)
ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி (மனத்)
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி! (மனத்)