Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    9976
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts
  3. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1866
    Posts
  4. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    13720
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/04/21 in Posts

  1. அப்பா பிரிந்த பின்.. அப்பாவின் சொத்தை பங்கு போட்டு பிரித்த பின் மிஞ்சியிருந்தது அம்மா மட்டும் தான் பிள்ளைகள் அவரவர்களுக்கு சேர வேண்டியதை எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள் ஆனால் அந்த பிள்ளைகளுக்கு தெரியவில்லை அப்பா பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த சொத்து அம்மா என. 🌷
  2. கிராண்ட் மாஸ்டரை தமிழில் பேய்க்காய் என்று போடுங்கோ. வெட்டரணை தமிழில் பழசு என்று போடுங்கோ.
  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9. அவற்றின் அமைவிடங்கள் ஆவன, 1) பனிக்கன்குளம் வான்பொல்லம் A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீரற்ற அகழி இருந்தது. இதற்கான நுழைவுவாயில் எங்கிருந்தது என்பதை என்னால் அறியமுடியவில்லை. இதன் முதன்மை கீல் கல்வீதிப்பாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். 'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்' 'மணலாலான 5- 6 அடி உயரமுள்ள மண்ணரணை அம்புக்குறி சுட்டுகிறது' 'எதிரெதிர் திசையில் அமைந்திருந்த குறுக்காப் போகும் கீல் கல்வீதிப்பாவு. இது மிகவும் சிறியதாக உள்ளதைக் காண்க' 'ஓடுபாதை மணலால் உருமறைக்கப்பட்டுள்ளதை கவனிக்குக' 2) நிவில் பகுதி வான்பொல்லம் B-69 பூநகரி பரந்தன் சாலையில் உள்ள நிவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 200m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான வெள்ளை மணலாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீருள்ள அகழி இருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். வெளிப்புறத்தில் ஆங்காங்கே பனங்கூடல்களும் வயல்வெளிகளும் இருந்தன. 'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்' 'வெள்ளை மணலாலான மண்ணரண் கீல் கல்வீதிப்பாவு 3) அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: வடக்கில் இருந்து கிழக்காக 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 25m 4) கேப்பாப்புலவு வான்பொல்லம் முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. 1.5 கிமீ நீளத்திற்கு கல்வீதிபாவு போடப்பட்டிருந்தாலும் மேலும் 1கிமீ நீளம் அகட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டிருந்தது, கல்வீதிப்பாவு போடுவதற்கு. மொத்த நீளம்: 2.5km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்." "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்." இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன. பறவாடி: பறவாடி உட்புறம்: பறவாடியின் உறுப்புகளை விளக்கும் விளக்கப்படம்: படிமப்புரவு: dossier on ltte weapons. pdf மேலுள்ள 4 வான்பொல்லங்கள் நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. 5) அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. மொத்த நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு. ஆனால் தொடர் சிங்கள வான்படையின் குண்டுவீச்சால் இது புதுபிக்கப்பட்டுக்கொண்டே வரப்பட்டது. இது சிங்களவரை ஏமாற்றுவதற்காக கட்டப்பட்டதாகும். "2003-2004 ஆண்டு கால செய்மதிப் படம்" 6) அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்தின் வடகிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிப்பாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். கீல் கல்வீதிப்பாவு நீளம்: 300m 7) பிரபந்தனாறு வான்பொல்லம் மொத்த நீளம்: 2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இது நாற்சதுர வடிவிலான மண்ணாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அம்மண்ணரணில் ஆங்காங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். ஓடுபாதையிலிருந்து மண்ணரண் வரை புற்றரையும் அதற்கு வெளியே சூழ்ந்ததுவாக அடவியும் இருந்தது. மேலுள்ள எஞ்சிய 3 வான்பொல்லங்களும் நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. பிற்சேர்க்கை (08/12/2020): மேலும் இரண்டு வான் பொல்லங்கள்(air strips) புலிகளின் வான்புலிகளிடம் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. இவை எதையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றும் வரை கண்டு குண்டு வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அவையாவன.. 8 )புத்துவெட்டுவான் கிழக்கு வான்பொல்லம் இது வான்பயிற்சிக் கூடமாக இருந்தது. கீல் கலவீதிப்பாவு நீளம்: 800 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50 m 9)மன்னகண்டல் மேற்கு வான்பொல்லம் இது புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு வீதியில் மன்னகண்டல் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 650 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 35 m இவற்றில் வான்புலிகளின் தளமாக இயங்கியது இரண்டுதான். மீதி அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில வான் பயிற்சிகளை மேற்கொள்ளவும் எதிரிகளை ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவரை இலங்கை படைத்துறை உண்மையான வான்பொல்லத்தை அடையாளம் கண்டு தாக்குதல்தல் நடத்தவே இல்லை! அத்தனை சிறப்பாக உருமறைக்கப்பட்டிருந்தன. --> முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர் "வானூர்திகள்... ஓட்டி வந்த வீரர்களைப் பார்த்துப் பார்த்து... விசிலடித்து... ஆடுகிறோம்... மாலைகளைக் கழுத்தில் போட்டு" --குத்தாட்டம் போடுடா பாடலிலிருந்து. --------------------------------------------- உசாத்துணை: YouTube Sri Lanka troops seize rebel airstrip, refugees flee Troops capture LTTE's last airstrip in Mullaitivu Iranamadu Airport - Wikipedia https://idsa.in/TWIR/9_5_2008_SriLanka Strip ( படிமப்புரவு(Image courtesy) YouTube நிகழ்படம்(video) YouTube eelam.tv ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  4. பிரபாகரன் தற்போது கால்முறிந்த வாத்தாக மாறிவிட்டார், அவரால் ஒரு போதுமே இன்னுமொரு போரினை ஆரம்பிக்க முடியாது - கருணா ஆங்கிலமூலம் : வோல்ட்டர் ஜயவர்டின இணையம் : லங்கா வெப் காலம் : கருணா ராணுவத்திற்காக இயங்கத் தொடஙியிருந்த காலம். பிரபல சிங்கள நாளிதழான திவயினவுக்கு, வன்னிப் புலிகளுக்கு சிம சொப்பனமாகத் திகழும் கருணா அம்மான் அண்மையில் வழங்கிய செவ்வியில் , கிழக்கு மாகாணத்தின் பெருமளவான புலிகள் இயக்கப் போராளிகள் தனது கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளதனால் வன்னிப் புலிகளின் தலைவரான பிரபாகரன் தற்போது எழுந்து நடக்கமுடியாத நொண்டி வாத்தாக மாறிவிட்டார் என்று கூறினார். "அவரால் இனிமேல் ஒருபோரை ஆரம்பிப்பது குறித்து நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. கிழக்கில் அவரது கட்டளைகளும் விருப்பங்களும் இனிமேல் எக்கட்டத்திலும் நிறைவேறப்போவதில்லை" என்று அவர் கூறினார். "பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கிழக்கில் செல்லுபடியாகாது. ஆகவே கிழக்கிற்கென்று தனியான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை நாம் தயாரிக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார். உலகின் அதிக அளவிலான தற்கொலைத் தாக்குதலாளிகளைக் கொண்டிருக்கும் புலிகள் இயக்கத்தின் பெரும்பாலான தற்கொலைக்குண்டுதாரிகள் இன்னமும் பிரபாகரனின் அணியில் இருப்பதாகவும், புலநாய்வுத்துறையின் பெருமளவு போராளிகள் இன்னமும் பொட்டு அம்மானின் கட்டளையின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் கூறிய கருணா, கிழக்கின் புலிகளின் ராணுவப் பிரிவு தனது கட்டுப்பாடின்கீழேயே இருப்பதாகக் கூறினார். ஆகவே, தனது ராணுவக் கட்டமைப்பு புலிகளைக் காட்டிலும் பலம் வாய்ந்தது என்று புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற "ஜெனரல்" கருணா கூறினார். "பொட்டு அம்மானின் கீழ்த்தரமான செயற்பாடுகளினால்த்தான் நாம் பிரிந்துசெல்ல நேரிட்டது. கிழக்கு மாகாணப் போராளிகளின் பலம்பற்றி பிரபாகரனும் பொட்டு அம்மானும் நன்கு தெரிந்தே வைத்திருக்கிறார்கள், அதனாலேயே எம்மீது தாக்குதல்களை நடத்த அவர்கள் அஞ்சுகிறார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதென்பது அவர்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு விடயம். பல்லாயிரக்கணக்கான கிழக்குத் தமிழர்கள் புலிகள் இயக்கத்துக்காக தமது உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால், புலிகளின் தலைமை அவர்களுக்கான நீதியினை ஒருபோதும் வழங்கியதேயில்லை. இன்றுமட்டும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கப்போவதாக புலிகளின் தலைமை பசப்புவது கேலிக்கூத்தான ஒரு விடயமாகும்" என்றும் கருணா அம்மான் கூறினார். "நான் இனிமேல் மொத்த இலங்கைத் திருநாட்டின் அமைதிக்காக எனது வாழ்க்கையினை அர்ப்பணிக்கப்போகிறேன். இதுவரை காலமும் வன்னிப் புலிகளுக்காக தமது வார்க்கையினை அர்ப்பணித்த கிழக்கு மக்களுக்காகவும், கிழக்கின் அபிவிருத்திக்காகவும் எனது வாழ்க்கையினை அர்ப்பணிக்கப்போகிறேன்" என்றும் அவர் கூறினார். "கிழக்கு மாகாணத் தமிழர்கள் புலிகளின் தலைமையினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதன் பின்னணியிலேயே வடபகுதித் தமிழருக்கெதிரான கிழக்குத் தமிழரின் வீரியமான எழுச்சி பார்க்கப்படுதல் அவசியமாகிறது" என்றும் அவர் கூறினார். "நான் அரசாங்கத்திடம் பாதுகாப்புக் கோரியதாக வந்த வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை, நான் அவற்றை முற்றாக மறுதலிக்கிறேன். இந்த அரசாங்கம் எம்முடன் தனியான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில் எமது பலத்தினை அவர்கள் மிக விரைவில் புரிந்துகொள்வார்கள். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை நாம் கிழக்கின் தலைவர்களிடம் ஆரம்பித்திருக்கிறோம். கிழக்கிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நோர்வே மத்தியஸ்த்தம் செய்ய விரும்பினால், நான் மறுக்கப்போவதில்லை. எனது அனைத்து நடவடிக்கைகளுக்கும் மொத்த கிழக்கு மாகாண மக்களின் ஒருமித்த ஆதரவு கிடைத்துவருகிறது" என்றும் அவர் மேலும் தெரித்தார். "கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களின் கவலைகள் தொடர்பாக நான் நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். அவர்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்ட காணிகளை நான் மீளவும் அவர்களுக்கு வழங்குவேன். கிழக்கில் அனைவரும் சுதந்திரமாகவும் சமாதானத்துடனும் வாழ நான் நடவடிக்கை எடுப்பேன்" என்று அவர் கூறினார். "இறுதியாக, நான் இருக்கும் இடம்பற்றி நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் எத்தகவலையும் வெளியிட வேண்டாம், அது எமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்" என்று தனது செவ்வியினை முடித்துக் கொண்டார் கருணா அம்மான். http://www.lankaweb.com/news/items04/090304-1.html
  5. ஐரோப்பா முழுக்க சுத்தி பாக்கிறதெண்டது பொய் வேலை..... வேணுமெண்டால் ஐரோப்பா போனனான் எண்டு சொல்லலாம் 😎 எல்லாத்துக்கும் நேர காலம் சரி வரவெல்லே வேணும்? 😁
  6. எனக்கு நோர்வே செல்ல வேண்டும் என நீண்ட நாள் ஆசை. இந்த இயற்கை திருவிளையாடலை பார்க்க வேண்டும்.
  7. சமூக ஆர்வலர், ஒரு பொதுவான பெயர் என்பதால், அதை நீங்கள் தெரிவு செய்ததில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது குறித்து நியாயமாக கதைத்தால், சரி என்று சொல்வீர்கள். அது சரி, இப்ப இருக்கும் பெயருக்கு என்ன குறை? 😁
  8. தமிழுக்கும் அமுதென்று பேர்.......மேதகு.......! 👍
  9. கொஞ்சமாய்தான் சிரிக்க வேணும்........! 😂
  10. குணப்படுத்த முடியாத, சீழ்பிடித்த, சிறுகச் சிறுக இறந்துவருகின்ற புலிகள் எனும் பயங்கரவாத அபுற்றுநோய்க்குத் தலைவலியாகவிருக்கும் கருணாவின் அமைப்பினரை இலங்கையரசு கட்டுப்படுத்தவேண்டும் என்று நோர்வேஜியர்களும், யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவும் தொடர்ச்சியாக கேட்டுவருவது இயற்கையானது. வன்னிப் புலிகளுக்கெதிரான கருணாவின் நடவடிக்கைகள் தொடருமிடத்து புலிகள் மிக விரைவில் அழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதும், இலங்கை ராணுவத்தை தமது தாயகத்திலிருந்து துரத்திவிடுவோம் என்று புலிகள் கட்டிவந்த கற்பனைக் கோட்டைகள தகர்க்கப்படும்போது சாதாரண தமிழ்மக்களும் சிங்களவர்களை அனுசரித்து, அவர்கள் தரும் தீர்வினை ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள் என்பது நோர்வேஜியர்களுக்கும் கண்காணிப்புக் குழுவினருக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆகவேதான், அப்படியானதொரு நிலைமை ஏற்படுமுன்னர் கருணாவை நாம் கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். புலிகளின் வெற்று எச்சரிக்கைகளை உதாசீனம் செய்து, "கருணாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் முழு அளவிலான போரைத் தொடங்குவோம்" என்ற புலிகளின் புஸ்வானங்களை நிராகரித்து, கருணாவுக்குத் தேவையான ஆயுதங்கள், பயிற்சிகள், வளங்கல்கள் மற்றும் தார்மீக ஆதரவினை இலங்கையரசு வழங்கி, தமக்காக பயங்கரவாதி பிரபாகரனை அழிக்க மகிழ்வுடன் முன்னிற்கும் அவரை முழு மனதோடு ஆதரிக்கவேண்டிய காலம் கனிந்திருக்கிறது. கருணா அமைப்பென்பது இலங்கையில் சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியென்பதும், இலங்கை நாட்டின் நலனில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பென்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாம் காலம் தாழ்த்தாது உடனடியாக கருணாவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டும். இன்று இலங்கையரசு கருணாவுக்கு ஆதரவு வழங்குவதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தாலும்கூட, கருணாவின் வீரர்கள், புலிப்பயங்கரவாதிகளின் போர் இயந்திரத்தில் தொடர்ச்சியாக ஏற்படுத்திவரும் சேதங்களால், அப்பயங்கரவாத இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அதன் இயங்கு சக்தியும் வெகுவாகச் சேதமடைந்திருக்கிறது. ஆகவே, சிங்களவர்களுக்கான யுத்தத்தைத் தன்னந்தனியனாக நின்று இன்று செய்துவரும் கருணாவையும் அவரது வீரர்கலையும் கொலைகார மூர்க்கனான பிரபாகரனின் கொலைப்படைகளிடமிருந்து பாதுகாத்து, அவர்களைப் பலப்படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும். கருணாவும் அவரது தோழர்களும் நிலையான சமாதானத்தை வேண்டி நிற்கும் அதேவேளை கொலைகார வன்னிப் புலிகள் தொடர்ச்சியான யுத்தத்தையும், அழிவினையும், கோரங்களையுமே தமிழ் மக்களுக்குத் தீர்வாக முன்வைத்துவருகிறார்கள். பிரபாகரனின் வெறித்தனத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதோடு, ஏனைய இனத்தவர்களும் பாதிக்கப்படப்போகிறார்கள். இறுதியாக கெளரவ கருணா அம்மானின் மூலம் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையினை கெளரவமான முறையில் தீர்க்கக் கூடிய சந்தர்ப்பம் ஒன்று சிங்களவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த இக்கட்டான, ஆனால் மிகத் தீர்க்கமான தருணத்தில் கருணா அம்மான் எமது உதவியினை வேண்டி நிற்கின்றார், அவரைப் பலப்படுத்தி அவரின் பின்னால் அணிதிரள்வது ஒவ்வொரு சிங்களவரினதும் கடமையாகும். முற்றும் ! http://www.lankaweb.com/news/items06/020506-1.html
  11. மசாலா சுண்டல் (கரம் சுண்டல்) மாலையில் சைட் டிஷ்சாக மதுவுடனோ அல்லது தேனீருடனோ சாப்பிட சூப்பர் ......! 😁
  12. ஜெயசிக்குறுய் நடவடிக்கையில் 1997 எதிரியின் முட்கம்பி வேலித் தடையினைக் கடக்கும் போராளி:-
  13. உங்களுக்கும் கூடைப்பந்தில் ஆர்வம் இருக்கிறதோ??? உங்களை இயற்கை அழகைத் தரிசுக்கும் ஒரு ரசிகை என்றல்லவா மனதில் வரைந்து வைத்திருக்கிறேன். பல்கலை வித்தகரோ??? அசத்துகிறீர்கள்.
  14. ராஜீவ் காந்தியைக் கொன்றதிலிருந்தே பிரபாகரனின் அழிவுகாலம் தொடங்கியது. அவர் ஒரு சுயநலம் மிக்க கோழை - பி பி ஸி 4 சேவையில் பேட்டியளித்த கருணா காலம் : வைகாசி 18, 2009 மூலம் : வோல்ட்டர் ஜெயவர்டென பயங்கரவாத புலிகள் இயக்கித்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக ஒருகாலத்தில் இருந்தவரும், தற்போது அரசின் பிரதியமைச்சராக இருப்பவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் பி பி ஸி யின் 4 ஆம் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தலைவரான பிரபாகரனின் அழிவுகாலம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலைக் குண்டுதாரியொருவரின் மூலம் கொன்றதையடுத்தே ஆரம்பமானது என்று கூறினார். காந்தியின் கொலைபற்றிக் கூறும்போது, "அது ஒரு மிகப்பெரிய தவறு. இதன்பின்னர் குறைந்தது 20 நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன. அதற்கு முன்னர் இந்த நாடுகள் எல்லாம் திரைமறைவில் புலிகளுக்கு ஆதரவளித்து வந்தன". என்று கூறினார். ஆனால், எந்தெந்த நாடுகள் புலிகள் இயக்கத்திற்குத் திரைமறைவில் உதவின என்பதை கருணா குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டின் சிறிபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமானவர்கள் என்று கருதப்படும் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவ்வியக்கத்தின் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். புலிகளின் முன்னாள் தத்துவ ஆசிரியர் அன்டன் பாலசிங்கம் கூட ராஜீவின் மரணத்தை பாரிய தவறு என்று ஒப்புக்கொண்டிருந்தபோதும் பின்னர் புலிகள் அந்தக் கூற்றிலிருந்து விலகிவிட்டனர். இன்றைய நிகழ்ச்சியில் பி பி ஸியின் தொகுப்பாளர் அன்ட்ரே ஹொக்ஸன் பின்வருமாறு கூறினார், " கருணாவைப் பொறுத்தவரை பிரபாகரனின் மிகப்பெரிய தவறு மே மாதம் 1991 ஆம் ஆண்டு ராஜீவின் கொலையுடன் ஏற்படுத்தப்பட்டது. அன்று கிழக்கு மாகாணத்திற்கான புலிகளின் தளபதியாகவிருந்த கருணா இந்த கொலைமுயற்சி தொடர்பாக தான் எதனையும் அறிந்திருக்கவில்லையென்றும், ஆனால் ராஜீவ் கொல்லப்பட்டவுடனேயே அக்கொலை பிரபாகரனினாலும், பொட்டம்மானினாலும் தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதை அறிந்துகொண்டதாகவும் கூறினார். புலிகள் வழமையாகப் பாவிக்கும் தாக்குதல் உத்தியான தற்கொலைத் தாக்குதல் மூலமே ராஜீவ் கொல்லப்பட்டதனால், இதனை அவர்கள் இருவருமே செய்திருக்கவேண்டும் என்று தான் சந்தேகித்ததாகக் கூறினார்". "நான் பிரபாகரனிடம் நீங்கள் மிகப்பெரிய தவறொன்றைச் செய்துவிட்டீர்கள் என்று கூறினேன். அவரோ அதனை மறுத்தார், ஆனால் அதனைச் செய்தது அவர்தான் என்பது எனக்குத் தெரியும்". "அது ஒரு மிகப்பெரிய தவறு. அக்கொலையின் பின்னர் 20 நாடுகள் எம்மை பயங்கரவாத அமைப்பென்று தடை செய்தன. இதற்கு முன்னர் பல அரசாங்கங்கள் எமக்கு ஆதரவாகத் திரைமறைவில் செயற்பட்டன". இலங்கையின் தமிழர் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்காகப் பழிவாங்கவே ராஜீவைப் பிரபாகரன் கொன்றார் என்று நம்பப்படுகிறது. ஆனால் நீண்டகால நோக்கில் இந்தப்படுகொலை புலிகளின் இலட்சியத்தை மிகக் கடுமையாகப் பாதித்திருந்தது. கருணா தொடர்ந்தும் பேசுகையில் "பிரபாகரன் ஒருபோதுமே எதிரியுடன் நேருக்கு நேர் நின்று போர் செய்யவில்லை. அதே போன்றதொரு நிகழ்வே பிரபாகரனின் இறுதிக் கணத்திலும் நடந்ததது. எதிரியுடன் இறுதிவரை சண்டை பிடிக்கவோ அல்லது தனது சகாக்களுக்குக் கூறுவதுபோல சயனைட் உட்கொண்டு மரணிக்கவோ எத்தனிக்காது குண்டுதுளைக்கமுடியாத வாகனமொன்றில் ஏறித் தன்னைக் காப்பற்றிக்கொள்ளவே அவர் இறுதிவரை முயன்றார். ஆனால் அவர் தப்பிச் சென்ற வாகனம் ராணுவத்தின் ரொக்கெட் தாக்குதலில் சிதைந்துவிட்டது" என்று அவர் கூறினார். அன்ட்ரே ஹொக்ஸனிடம் பேசிய கருணா தொடர்ந்தும் கூறும்போது, "பிரபாகரனுடனான எனது 22 வருட அனுபவத்தில் அவர் தொடர்பாக ஆரம்பத்தில் நான் வைத்திருந்த மரியாதையினை இழந்துவிட்டிருந்தேன். என்னைப்பொறுத்தவரை அவர் அவமதிப்பிற்குரியவராகவே தெரிந்தார். அவர் ஒருபோதுமே போர்க்களத்திற்கு வந்ததில்லை. எமது அணிகளுக்குப் பின்னல் மிகப் பாதுகாப்பான இடம் ஒன்றில் அவர் நின்றுவிடுவார். எல்லோரும் பிரபாகரனை இரும்பு மனிதர் என்றும் பிறப்பால் வந்த தலைவன் என்றும், பெரிய மனிதன் என்றும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு கோழை" என்று அவர் மேலும் கூறினார். கருணா இப்பேட்டியில் இன்னொரு விடயத்தையும் கூறினார், " தனது குற்றங்களை பிரபாகரன் நன்கு தெரிந்தே வைத்திருந்ததனால், ராணுவத்திடம் பிடிபட்டால் தனக்கு என்ன நிகழும் என்பதை நன்கு உணர்ந்தேயிருந்தார். ஆனால், அவர் தன்னைத்தானே கொன்றாலோ அல்லது ராணுவத்தினரால் கொல்லப்பட்டாலோ, அவை இரண்டுமே இலங்கை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களே " என்றும் அவர் கூறினார். http://www.lankaweb.com/news/items/2009/05/18/in-a-bbc-radio-4-programme-karuna-amman-says-prabhakaran’s-downfall-started-after-he-got-rajiv-gandhi-assassinated/
  15. வினா..! "நீங்களும் உங்கள் நண்பரும்ம் நடுக்காட்டில் மாட்டிக்கொண்டீர்கள். திடீரென ஒரு சிங்கம் உங்களைத் துரத்த ஆரம்பிக்கிறது, இருவரில் யார் சிங்கத்தைவிட அதிக வேகமாக ஓடி தப்பிப்பீர்கள்?"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.