தற்கால தரைப்படையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தமிழ் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...படித்து மகிழுங்கள்!
இச்சொற்கள் எல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.
பிரிவு :- Unit
துணைப்பிரிவு - Sub-Unit
சூட்டணி/ சூடு & தடூக அணி:- fireteam/ fire and maneuver team = 2–4
சதளம் :- squad /crew = 8–12
பகுதி/ சுற்றுக்காவல் :- section / patrol = 8–24
நாரி/ படையினர் :- platoon/ troop = 26–55
குவவு - staffel/ echelon = 50- 90
குழாம்/ சேணேவித் தொகுதி :- Company /Artillery battery = 80–250
சமரணி :- battalion /cohort = 300–1000
படையணி :- regiment/ group= 1,000– 3000
படைத்தொகுதி/அதிகம் :- Brigade = 3000 - 5000
படைப்பிரிவு :- division/legion = 6,000– 20,000
திரள் :- corps = 20,000–50,000
களப் படை/ படை :- Field Army/ Army = 100,000–200,000
மூகை/ முனை :- army group /front = 400,000 - 1,000,000
தளம் / விளாகம்/அரங்கம் / அடிபாட்டாளர் கட்டளைப்பீடம் :- region/ theater/ Combatant Command = 1,000,000 - 10,000,000
மேலே உள்ள ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது என்பதற்கான விளக்கம். பாமரனிற்கும் புரிய வேண்டும் என்னும் கூட்டத்தினர் இவற்றை வாசிக்க வேண்டாம். :-
பிரிவு = Unit
சூட்டணி என்றால் சுடும் அணி என்று பொருள். ஒரு சுடும் அணியில் மிகக் குறைவான வீரர்களே இடம்பெற்றிருப்பார்கள். மேலும் இச்சொல் புலிகள் காலத்தில் ஒரு fireteam குறிக்க வழங்கப்பெற்றது.
தடூகம் - தட(பெரிய) + ஊகம்(உய்த்துணர்தல், உத்தி, அறிவு, படை வகுப்பு) - பெரிய உத்தியாக அனுப்பப்படக்கூடிய படையின் உட்பிரிவு
சதளம் - இச்சொல் squad ஐ குறிக்க மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் உருவாக்கப்பெற்றது.
பகுதி - என்னும் இச்சொல்லின் பொருள் அராணுவம் என்பதே. மேலும், பகுதி = part (தற்காலத்தில்)
சுற்றுக்காவல் = Patrol (ஈழ வழக்கு)
நாரி- platoon என்னும் இச்சொல் வரிசையாகத்தொடுத்த மாலைபோன்று திகழும் படை அணி என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு குறைந்தது இவ்வளவு வீரர்கள் நிற்பார்கள் என்னும் பொருளில் இங்கு ஒழுங்கமைத்துள்ளேன்.
படையினன் - Troops எனபதைக் குறிக்க ஏற்கனவே படையினர் என்னும் சொல் ஈழத்தில் வழங்கி வருவதைக் காண்க.
குவவு - குவவு என்றால் கூட்டம் என்று பொருள்.. படைப் பொருட் பின்புலம் இச்சொல்லுக்கில்லை
குழாம் - society, company, association.
சமரணி - சமரில் ஆடும் அணி என்ற மொட்டையான பொருளில் வழங்கியுள்ளேன். இது ஆங்கிலச் சொல்லின் நேரடி தமிழாக்கம் ஆகும்.
படையணி - சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே புலிகளின் காலத்தில் Regiment-க்கு ஈடாக வழங்கப் பெற்ற சொல். சோழர் காலத்திலும் வழங்கப்பெற்ற சொல். அதையே இங்கும் கொடுத்துள்ளேன்.
படைத்தொகுதி - இச்சொல்லானது ஏற்கனவே விடுதலைப் புலிகளால் ஒரு 'Brigade' குறிக்கப் பயன்படுத்தப்படது
அதிகம் - ரெஜிமென்ரின் அளவை விட அதிகமான ஆட்கள் இருந்தால், அஃது பிரேகேட் ஆகும் என்பதுவே ரெஜிமென்ற் என்னும் சொல்லின் விளக்கமாகும். எனவே ஒரு படைப்பிரிவில் அதிகமான வீரர்கள் இருந்தால், பண்டைய காலத்தில், அது அதிகம் எனப்படும் என்று அர்தசாஸ்திரம் மூலம் அறிந்து கொண்டேன்(அர்த்தசாச்திரத்தில் இதற்கு வேறு சொல் உண்டு). அதையே இங்கும் வழங்கியுள்ளேன்.
படைப்பிரிவு- division என்பதன் பொருளும் பகுதியே. மேலும் பிரிவு என்பதன் பொருளும் அராணுவம் என்பதால் இரண்டும் ஒரே சொல்லில் வருவதால் அதை இங்கு சூட்டி விட்டேன். மேலும் இது ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்லாகும்.
திரள் - Corps என்றால் படையின் உடற்பகுதி(நடுவில் இருக்கும் திரண்ட பகுதி) என்று பெயர். அதே பொருளில் தமிழில் வழங்கும் சொல் திரள் என்பதாகும் . இதன் பொருள் படையின் ஒரு திரண்ட பகுதி . அதையே இங்கும் அதே பொருளில் வழங்கியுள்ளேன்.
களப்படை/ படை- ஏற்கனவே army என்பதன் பொருள் படை என்றுதான் வழங்கி வருகிறோம். ஆகையால் அதனையே இங்கும் கொடுத்து விட்டேன். மேலும், இது ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்லாகும்.
மூகை - மூகை என்றால் படைக் கூட்டம்(army group) என்று பொருள்.
தளம் - இதன் பொருள் ஒரு ஒரு சேனையுட்படும் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்பூதங்களிற்கான படைகளையும் துணைப்படை, எல்லைப்படை, அதிரடிப்படை, தற்கொடைப்படை போன்றவற்றையும் குறிப்பது. ஒரு பிராந்தியத்திற்குள்ளேயே பல தளங்கள் இருக்கும். இவற்றை Region என்பர் ஆங்கிலத்தில். இவையெல்லாம் இருக்கும் இடத்தையும் தேவையையும் கருத்தில் கொண்டே இதனுட்படும். இவை இருக்கும் இடத்தினால் அவ்விடத்திற்கு தளம் என வழங்கி, அதுவே பிற்கலத்திலும், பேந்து தற்காலத்திலும் 'படைத்தளம்' என்னுஞ்சொல்லில் வரும் தளத்தின் பொருளை தாங்கிற்று.
முனை - ஈழத்தில் பயன்பாட்டில் இருந்த சொல். எ.கா: வடபோர் முனை..
விளாகம் - போர் நடந்த இடமும் சூழலும் விளாகம் எனப்படும், தமிழில். ஆங்கிலத்தில் theater எனப்படும்.
அரங்கம் - புலிகள் காலத்தில் வழங்கப் பெற்ற சொல்
கடற்படை பிரிவுகள்:-
Task elements - பணிக்கடக் கூறுகள்
Squadron/ Task unit - கலமணி/சதளம்/ பணிக்கடப் பிரிவு
Flotilla/ Task group - கலத்தொகுதி/ பணிக்கடக் குழு
Division/ Task group - படைப்பிரிவு/ பணிக்கடக் குழு
Strike group/ Taskforce - அடிக்குழு/ பணிக்கடப் படை
Battle fleet - சமர் கலக்கூட்டம்
Fleet - கலக்கூட்டம்
கூடுதல் தகவல்:
உசாத்துணை:
Military organization - Wikipedia
கழகத் தமிழ் அகராதி
செ.சொ.பே.மு
படிமப்புரவு: கொம்பனி
ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்