Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    15
    Points
    46819
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    8910
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88030
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/22/21 in Posts

  1. சலனமில்லாத_மனம் ஒரு நாள் விவசாயி ஒருவர் தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை. நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது , அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்." என்றார். சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் . சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர். ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன்!" என்றான். விவசாயியும், "சரி! போய் தேடிப்பார்" என்றார். மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான். அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார். "நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து 'டிக் டிக்' சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன்" என்றான். அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.
  2. யாழ் நிர்வாகத்துக்கும் ,உறவுகளுக்கும் குறிப்பாக இணையவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  3. இப்ப கொஞ்சம் முதல்… பாஞ்ச் அண்ணையும், மனைவியும் தான் வந்து விட்டுப் போனவர்கள். 🙂
  4. இப்ப நான் ஒரு சம்பவம் சொல்லப்போறன் 😎 கொஞ்ச நாளாய் என்ரை நண்பன் ஒருத்தன் தன்னட்டை வரேல்லை எண்டு ஒரே முறுக்கல் முறுக்கிக்கொண்டிருந்தான். நானும் ஏலாக்கட்டத்திலை முறுக்கினவருக்கு ஒருக்கால் இறுக்கிப்போட்டு வருவம் எண்டுட்டு நேற்று 350 கிலோமீற்றர் காரிலை போய் ஒரு இறுக்கு இறுக்கிப்போட்டு வந்தன். 😜 அதிலை இன்னொரு விசயம் கார் ஸ்ரேறிங் பிடிச்சது நான்.கார் ஓடினது வேறை ஒராள் 🙃
  5. கேள்வி : உங்களின் புதிய கட்சி பற்றி விபரமாகச் சொல்ல முடியுமா? கருணா : நான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினை ஆரம்பித்ததன் ஒரே நோக்கம் மிதவாத அரசியலைச் செய்வதுதான். கிழக்கில் இன்று பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள மக்களும் எனது கட்சியில் இணைந்து இனிச் செயலாற்றமுடியும். முஸ்லீம்களும் எனது கட்சியில் இணைந்து பயணிக்கமுடியும். எனது கட்சி வெறுமனே கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது வட கிழக்கு மாகாணங்களுக்கோ மட்டுமே சொந்தமான கட்சியல்ல, மாறாக இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமான தேசியக் கட்சி. நான் பிராந்திய, மாகாண அரசியல் செய்வதற்காக இதனை ஆரம்பிக்கவில்லை. கேள்வி : வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத மிகப்பெரிய பிரச்சினை எதுவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? கருணா: வடக்கில் புலிகளாலும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும் மூளைச்சலவைச் செய்யப்பட்டு இன்றுவரை இனவாதம் பேசும் தமிழர்களின் மனோநிலையினை மாற்றுவதே எம்முன் உள்ள மிகப்பெரிய சிக்கலாக நான் பார்க்கிறேன். வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசம் தமது பூர்வீக தாயகம் எனும் போலியான கற்பனைக்குள் அவர்கள் வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னர் இந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டபோதும் ஜே வி பியினரின் நீதிமன்ற முயற்சியின்மூலம் அவை மீண்டும் பிரிக்கப்பட்டு விட்டன. கிழக்கில் வாழும் தமிழர்கள் வடக்குத் தமிழர்களுடன் இணையவே விரும்புகிறார்கள். ஆனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் தமது சனத்தொகை வீதம் வெகுவாகக் குறைக்கப்படும் என்று கிழக்கு முஸ்லீம்கள் அஞ்சுகிறார்கள். சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றே எதிர்காலத்தில் தேவைப்படும் என்று நாம் நம்புகிறேன். இலங்கை 80 வீதம் சிங்களவர்களையும் 20% வீதம் தமிழ்பேசும் தமிழர்களையும் முஸ்லீம்களையும் கொண்ட நாடு. சிங்களவர்களின் ஆதரவு இல்லாமலும், விருப்பம் இல்லாமலும் நாம் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம் என்று கனவு காணக்கூடாது. தமிழர்கள் இன்னொரு போருக்கு இனிமேல் ஒருபோதும் தயாரில்லை என்பதை நாம் சிங்களவர்களுக்கு சரியான வழியில் விளங்கப்படுத்தவேண்டும். கேள்வி : வடக்கில் இருக்கும் இதுவரை தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகள் என்ன? கருணா: வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் கடந்த 30 வருடகாலப் போரில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து விட்டார்கள். புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் போர்ச்சூழலினுள் பிறப்பதால் அவர்களுக்கு ஜனநாயகம் பற்றிய எந்தவிதமான பார்வையும் இல்லை. யுத்தக் காயங்களை ஆற்றுவதற்கு சரியான நல்லிணக்க முயற்சிகள் அவசியம். கேள்வி : கடந்த அரசாங்கத்திலும், தற்போதைய அரசாங்கத்திலும் மீளிணக்கம் என்பதே பெரும் பேசுபொருளாக இருந்துவருகிறது. இனிமேலும் இது தொடர்பாக நாம் செய்வதற்கு என்னவிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? கருணா : மீளிணக்கச் செயற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடந்துவருகின்றன. இரு அரசாங்கங்களுமே திறம்படச் செயலாற்றித்தான் வருகின்றன. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். புலிகள் அமைப்பு தமிழர்கள் சிங்கள மொழியினைக் கற்றுக்கொள்வதை முற்றாகவே தடைசெய்து வைத்திருந்தது. துரதிஷ்ட்டவசமாக தமிழரில் ஒரு தரப்பினர் இன்னமும் சிங்களம் கற்பதை எதிர்த்தே வருகின்றனர். பல ஐரோப்பிய நாடுகலில் தொழில்வாய்ப்புகளுக்காக ஜேர்மன் மொழியினையோ பிரெஞ்சு மொழியினையோ அவர்கள் மறுபேச்சின்றிக் கற்றுக்கொள்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை நல்லிணக்க முயற்சிகள் திறம்பட நடப்பதற்கு தமிழர்கள் சிங்கள மொழியினையும், சிங்களவர்கள் தமிழ்மொழியினையும் கற்றுக்கொள்வதன்மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமையினை உருவாக்கலாம் என்று நம்புகிறேன். மகிந்தவின் கடந்த ஆட்சியின்போது சுமார் 12000 முன்னாள்ப் புலிப் போராளிகளுக்கு புணர்வாழ்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு தொழில் ரீதியிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தொழில்முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. அவர்களில் பலருக்கு தாம் தவறவிட்ட கல்வியினைத் தொடரவும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இன்று அவர்கள் அமைதியான மக்களாக விளங்குவதோடு, வன்முறைகளுக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிப் பயங்கரவாதிகளுக்காக எப்போதுமே முதலைக் கண்ணீரைச் சிந்திக்கொண்டுதான் இருக்கும். புலிகளின் இனவாதக் கோட்பாடுகளை ஆதரித்துக்கொண்டும், மூன்னாள்ப் போராளிகள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதையும் அது எதிர்த்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால், முன்னாள்ப் போராளிகளின் அரசியல் வருகை பாராட்டப்படவேண்டிய ஒன்று. இவர்களை முன்னாள் அரசுத்தலைவர் மகிந்தவின் கைக்கூலிகள் என்று கூட்டமைப்பு கூறினாலும், அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னாள்ப் போராளிகளை வெளிப்படையாக நிராகரித்திருக்கிறார். ஆனால், எனது கட்சியில் அவர்கள் எப்போதும் இணையலாம், அவர்களின் ஜனநாயக அரசியலுக்கான எனது ஆதரவு என்றும் அவர்களுக்குக் கிடைக்கும். மக்கள் விடுதலை முன்னணியினரே இலங்கையில் வன்முறைக் கலாசாரத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள். அப்படியானால் முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் இணைவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? கூட்டமைப்பில் இருக்கும் சில அரசியல்வாதிகள் கூட முன்னாள்ப் போராளிகள்தான், அப்படியிருக்கும்போது முன்னாள்ப் புலிப் போராளிகள் இணைவதில் என்ன தவறு இருக்கிறது. அடுத்த முக்கியமான பிரச்சினை என்னவென்றால், யுத்தத்தில் தமது கணவன்மாரை இழந்த விதவைகளுக்கான உதவி. சுமார் 85,000 குடும்பங்கள் குடும்பத் தலைவியினாலேயே கொண்டுநடத்தப்படுகின்றன. இவர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
  6. கேள்வி : நீங்கள் ஒருகாலத்தில் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெரிய தளபதி. உங்களின் கடந்தகால செயற்பாடுகள் உங்களை திரும்பிவந்து பாதிக்காது என்று நினைக்கிறீர்களா? கருணா: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆயுதப்போராட்டம் சாத்தியப்படாது என்பதை உணர்ந்துகொண்டு நான் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியதை அனைத்துத் தமிழ்மக்களும் சரியென்றுதான் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களும் எனது முடிவினை ஏற்றுக்கொள்வதோடு, பிரபாகரனும் என்னைப்போன்றே ஜனநாயக வழியினைப் பின்பற்றி அரசியலுக்கு வந்திருந்தால் இந்த அழிவுகளையெல்லாம் தடுத்திருக்கலாம் என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் அப்பாவிகள், அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அமைதியான வாழ்வும், தம் பிள்ளைகளுக்கான கல்வியும்தான். எனது பழைய வரலாறு எனக்கு ஒரு ஆசீர்வாதத்தினைப் போன்றது. அவற்றிலிருந்து சரியான பாதையினைத் தெரிவுசெய்து நான் வழிநடக்க எனக்கு அவை உதவுகின்றன. நான் புலிகளிடமிருந்து பிரிந்து சென்றபின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டனர். தமிழர்கள் எதிலுமே வெற்றிபெறவில்லை. தெற்குச் சிங்கள மக்களும் நான் புலிகளிடமிருந்து வெளியேறி வந்போது என்னை ஆதரித்து ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும், நாம் எமது வெற்றியை ஓர் இரவிற்குள் பெற்றுவிட முடியாது. எனது கடந்த 10 வருட அரசியல் சாணக்கியத்தைப் பாவித்து தமிழர்களை சரியான பாதையில் தலைமைதாங்கிச் செல்லமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. கேள்வி : ஆனால் சில் அரசியற்கட்சிகள் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதோடு, அதனை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்வதுபற்றி உங்களின் கருத்து என்ன? கருணா : உண்மை, அதனை எவரும் முயற்சிக்கலாம். அவர்கள் அப்பாவித் தமிழர்களை இனவாதிகளாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால், உலக அரங்கில் இனவாதத்தினை அரசியலகாச் செய்துவரும் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ இன்று இடமில்லை. பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் ஆதாயத்திற்காக இனவாதம் பேசுகிறார்கள். தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் குறிக்கோள்களைத் தூக்கிப்பிடித்து என்னதான் இனவாதம் பேசினாலும், மக்கள் ஒருபோதுமே அவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. போராட்ட்த்தினால் தாம் அடைந்த அழிவுகள் இனி வேண்டாம் என்கிற நிலைக்கு அவர்கள் எப்போதோ வந்துவிட்டார்கள்.
  7. உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁
  8. சானிக்க சிறியானந்தவுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் கீழே கேள்வி : நீங்கள் ஒரு தீவிர சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர். எதற்காக உங்களின் அரசியல் நிலையினை மாற்றினீர்கள்? கருணா : நான் ஒரு மிகவும் தீவிரமான சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளன், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவே என்னை கட்சியில் சேர்த்தவர். அவரது அமைச்சரவையில்துணையமைச்சராக நான் பல சேவைகளைப் புரிந்துள்ளேன். ஆனால், கடந்த 2 வருடங்களாக வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களை சில நயவஞ்சகமான தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்திவருகின்றார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மிகவும் பொய்யான வாக்குறுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், கல்விமான்கள், சமயத் தலைவர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்று பலர் தமிழர்களுக்கு சரியான, பலமான கட்சியொன்று தேவையென்றும், அக்கட்சிக்கு என்னைத் தலைமை தாங்கவேண்டும் என்றும் தொடர்ச்சியாகக் கேட்டுவந்ததன் விளைவாகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல்க் கட்சியை நான் உருவாக்கினேன். கேள்வி : வடக்குக் கிழக்கில் பெரும் வாக்காளர் தளத்தினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவால் விடும் நிலையினை உங்களது கட்சி அடையும் என்று நம்புகிறீர்களா? கருணா : நான் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பதிவுசெய்யப்பட்ட அரசியல்க் கட்சி கிடையாது. அது பல கட்சிகளின் மொத்த அமைப்பாகும். தனிப்பட்ட அரசியல் நோக்கங்கள், இலக்குகள், கொள்கைகளுக்காக அவை தமக்குள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு வருகின்றன. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என்று கூட்டமைப்புக் கூறிவந்தாலும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் அவர்களை நிராகரித்தே வருகின்றனர். தமது சொந்த லாபங்களுக்காக கடந்த பல வருடங்களாக தமிழ் மக்களை அவர்கள் தவறாக வழிநடத்தி வருகின்றனர். தாம் தருவதாகக் கூறிய எதனையுமே அவர்கள் இன்றுவரை பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பினர் மீது தமிழர்கள் தமது நம்பிக்கையினை இழந்துவிட்டார்கள். கூட்டமைப்பினருக்கு இனிமேல் எதிர்காலம் என்று ஒன்று கிடையாது. கடந்த 2015 தேர்தலில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எண்ணிலடங்கா வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருந்தனர். மேலும், மைத்திரிபாலவின் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினையும் அவர்கள் வழங்கினர். வெறும் வாய்ப்பேச்சினால் வழங்கப்பட்ட "100 நாட்களில் தீர்வு வழங்கப்படும்" எனும் உறுதிமொழியினை நம்பி கூட்டமைப்பினர் அரசுக்கு ஆதரவளித்தனர். இறுதியில் அவர்கள் எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை.
  9. கே பி இறுதியுத்தத்தில் ஆற்றிய பங்கினைப் போலவே தயா மாஸ்ட்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதியின் பங்களிப்பும் ஆராயப்படவேண்டியது. 2006 காலப்பகுதியில் கொழும்பில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும், புலிகளின் ஊடகப்பிரிவின் பேச்சாளராக அவரே பலராலும் அறியப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. தான் கொழும்பில் சிகிச்சைபெற்று வந்த காலத்தில் புலிகளுக்கு எதிரான சக்திகளோடு அவர் நட்பினை வளர்த்துக்கொன்டிருந்தார் என்பதும், பின்னர் அவர் மீண்டும் வன்னிக்குத் திரும்பியபோது தனது புதிய நட்புவட்டாரங்களின் அன்புக் கட்டளைக்கு இணங்க வன்னியிலிருந்து புலிகளின் முக்கியஸ்த்தர்கள் பற்றீய புலநாய்வுத்தகவல்களை அவர் வழங்கிவந்தார் என்றும் நம்பப்படுகிறது. தனக்கு எஜமானர்களால் வழங்கப்பட்ட வேலையினைக் கன கச்சிதமாக முடித்துக்கொடுத்த தயா மாஸ்ட்டரும் புலிகள் ராணுவ ரீதியில் வீழ்த்தப்பட மூன்று வாரங்களுக்கு முன்னதாக சித்திரை 2009 இல் ராணுவத்திடம் சரணடைந்துகொண்டார். கே பி மற்றும் தயா மாஸ்ட்டர் ஆகியோர் அரசிடம் அடைக்கலமானதற்குக் காரணமாக இவர்கள் இருவரும் கொண்டிருந்த உடல் நலக் குறைவே காரணம் என்று அரசாலும், இவர்களின் அனுதாபிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ இதுபற்றி எவருமே பேசுவதில்லை. ஆக, இவர்களின் துரோகத்தினை மறைக்க இவர்களின் உடல்நலக் குறைவினை அன்று பாவித்தவர்கள், இவர்களின் வேலை முடிந்தவுடன் அதனைக்கைவிட்டு விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் இன்றிருக்கும் ஒரே உடல் நலக் குறை என்னவென்றால், "எதை விற்றாவது உனது உயிரையும், வயிற்றையும் பார்த்துக்கொள்" என்பதாகத்தான் இருக்கும். இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு நான் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறேன் அரசாலும் ராணுவத்தாலும் புனையப்பட்ட பிரபாகரனின் மரணம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கைக்கெதிரான எனது 5 வாதங்களை முன்வைக்கிறேன். இவை ஐந்தும் தவறென்று எவராவது எனக்கு சரியான பதிலை வழங்கினால், அரசு கூறும் பிரபாகரனின் மரணம் தொடர்பான புனைவினை நான் ஏற்றுக்கொள்கிறேன். 1. மே 17 ஆம் திகதியிலிருந்து மே 19 ஆம் திகதி வரையான 2 நாட்களில் மட்டுமே இலங்கை ராணுவமும் அரசும் பிரபாகரன் கொல்லப்பட்ட நிகழ்வினை முன்னுக்குப் பின் முரணாக பல தடவைகள் மாற்றி மாற்றிச் சொல்லி வந்திருக்கின்றன. 2. பிரபாகரன் மரணமடைந்த உண்மையான விதம் கண்டறியப்பட்டுவிடும் என்பதற்காக, தடயங்களை மறைக்கும் நோக்குடன் பிரபாகரன் அவர்களது உடல் அவசர அவசரமாக ராணுவத்தால் தகனம் செய்யப்பட்டமை. 3. இன்றுவரை "பிரபாகரனை நான் தான் எனது துப்பாக்கியால் குறிபார்த்துச் சுட்டுக் கொன்றேன்" என்று எந்தச் சிங்களச் சிப்பாயோ அல்லது தளபதியோ தனது வீரப்பிரதாபத்தை வெளியிடவில்லை. 4. உருமாற்றம் செய்யப்படாத பிரபாகரன் உயிருடன் பிடிப்பட்டதற்கான தெளிவான புகைப்படம் ஒன்று இதுவரை சிங்களத்தால் காட்டப்படவில்லை. அவர் சேகுவேராவைப் போன்றோ அல்லது முகம்மர் கடாபியைப் போன்றோ உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால், அவரது மேலாடையினைக்கிழித்து, மேல் உடலினைக் காட்டி தமது வெற்றியைப் பறைசாற்றியிருப்பார்கள், ஆனால் அதுவும் நடக்கவில்லை. 5. பிரபாகரன் மரணமடைந்து பல வருடங்கள் கடந்துவிட்ட பின்னர்கூட அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை (கோத்தாவின் யுத்தம்) பிரபாகரன் கொல்லப்பட்டது தொடர்பான தெளிவான விபரங்களோ, ஆதாரங்களோ இல்லாமல் ஓட்டை விழுந்த பொத்தலாகக் காட்சி தருகிறதே . பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நிறுவ முடியாது, ஆனால் நிச்சயம் அவர் அதைச் செய்யக்கூடியவர்தான் என்பது நம்பக் கூடியது. மேலே நான் முன்வைத்த ஐந்து கேள்விகளைக் கொண்டு, பிரபாகரன் அவர்கள் ராணுவத்தின் தூரவிருந்து குறிபார்த்துச் சுடும் வீரர் ஒருவரால் கொல்லப்பட்டார் எனும் புனைவுடன் ஒப்பிடும்போது பிரபாகரன் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார் என்பதே அதிகம் சாத்தியப்பாடு கொண்டது என்பது தெளிவாகிறது. ஆனால், நான் மேலே கேட்ட ஐந்து கேள்விகளுக்கும் இலங்கை ராணுவத்தால் தெளிவானதும், ஆதாரபூர்வமுமான பதில்களைத் தரமுடியுமானால் நான் அவர்கள் கூறும் புனைவினை ஏற்றுக்கொள்கிறேன். முற்றும்.
  10. சாண்ட்விச் சாப்பிடலாமா........! 👍
  11. அந்த பசுமையான நினைவுகள் முள்ளாய் குத்த.....💘 தஞ்சமடைகின்றேன்↓ ...
  12. இது அம்மன் கோயில் சோலைவனப் பக்கம்...
  13. இப்படி ஒரு வீட்டில் வாழ்பவர்... கொடுத்து வைத்த மனிதர்.
  14. ஏலம் விட்டிருந்தால்.... நல்ல விலைக்கு போயிருக்கும். இப்ப... அறா விலைக்கு, யாரோ வாங்கி விட்டார்களே... 🤣
  15. நீங்க சற்று தாமதமாகி விடடீர்கள் . ஏற்கனவே கொடுத்தாகி விடடது. 😄
  16. நல்லிணக்க அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதவளிக்கக் கூடாது - கருணா அம்மான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும், முன்னாள் அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இறுதியுத்தத்தில் அரச ராணுவத்தால் நடத்தப்பட்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்களை சர்வதேச அமைப்பொன்றின் மூலம் விசாரிக்கும் முயற்சிகளுக்கு தற்போதைய அரசாங்கம் அனுசரணை வழங்கக் கூடாதென்று தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணூவத்தால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதன் மூலம் இனங்களுக்கிடையே இன்று உருவாகிவரும் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். "இலங்கையில் நடைபெற்ற போர் ஒரு உள்நாட்டு விவகாரமாகும். அதில் வெளியார் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. சர்வதேச அமைப்பு ஒன்றின்மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுமிடத்து இனங்களுக்கிடையே கடந்த 10 வருடங்களாக உருவாக்கப்பட்டுவரும் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு விடும்" என்று அவர் கூறினார். "புலிகள் அமைப்பு முற்றாக எம்மால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே புலிகள் சார்பாக இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்" என்றும் அவர் சுட்டிக் காட்டினார். "புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரிக்காது, ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை மட்டுமே விசாரிப்பது எந்தவிதத்தில் நியாயம்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் உருவாக்கியுள்ள புதிய கட்சி, போரில் காணாமலாக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் எனும் அவரது நிலைப்பாடு, நல்லிணக்க அரசாங்கத்தின் எதிர்காலம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் என்று பல்வேறு விடயங்கள் குறித்து அவர் பேசினார்.
  17. சரி, இனி கோர்டண் வைஸின் The Cage எனும் புத்தகத்திற்கு வரலாம் புத்தகத்தின் பின்புற அட்டை கோர்டண் வைஸின் புகழைப் பாடுகிறது. நியூ யோர்க்கில் வாழ்ந்தவர், உள்நாட்டு யுத்தங்கள் நடந்த நாடுகளில் பணிபுரிந்தவர், பேரிடர் காலங்களில் பணியாற்றியவர், பொஸ்னியா, ஆப்கானிஸ்த்தான், சூடானின் டார்பூர் மற்றும் ஹெயிட்டி என்று பல நாடுகளில் ஐ நா வின் சார்பாக குறைந்தது 12 வருடங்க்ச்ளாவது பணியாற்றியவர் , தற்போது அவுஸ்த்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகத்தின் அதிதியாக உரையாற்றி வருபவர், தி குளோபல் மெயில் எனும் பத்திரிக்கையின் நிருபர் என்று புகழ்வதோடு இலங்கையில் நடந்த படுகொலைகள்பற்றிய தனது விசாரணை அறிக்கையாக இப்புத்தகத்தினை வெளியிடுவதாகவும் கூறுகிறது பின்பக்க குறிப்பு. ஆனால், கோர்டன் கூறும் விடயங்கள் பற்றி நான் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், அவர் தனது புத்தகத்தின் உள்ளடக்கத்திற்காக பெரும்பாலும் இலங்கை ராணுவத்தினதும், அரசினதும் தகவல்களையே பெரிதும் நம்பியிருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கை அரசின் தகவல்களை தவிரவும் அவருக்கென்று தகவல் வழங்கும் சில புலியெதிர்ப்புப் புத்தி ஜீவிகளும் இப்புத்தகத்தில் தமது பங்களிப்பினைச் செலுத்தியிருக்கிறார்கள். மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் எனும் புலியெதிர்ப்பு அமைப்பின் ராஜன் ஹூல், பணம் பார்க்கும் ஒரே நோக்கத்திற்காக புலியெதிர்ப்புக் கட்டுரை வரையும் டி பி எஸ் ஜெயராஜ் எனும் பிரபலங்கள் உட்பட பலர் கோர்டன் வைஸின் தகவல் மூலங்களாக இருந்திருப்பது அவரது புத்தகத்தின் உண்மைபற்றிய நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இப்புத்தகத்தம் எழுதுவதற்கு கோர்டன் வைஸுக்கு மிக முக்கியமான 3 காரணங்கள் இருந்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன். 1. தனது எஜமானான பான் கீ மூன் மற்றும் விஜய் நம்பியார் ஆகியோர் உட்பட இலங்கையிலும், ஐ நா விலும் பணியாற்றிய கையாலாகாத்தனமான கோழைத்தனமான அதிகாரிகளின் முற்றான தோல்வியினை மறைப்பது. 2. தமிழ்மக்களின் படுகொலைக்கான மொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் மீது சுமத்துவது. 3. கண்துடைப்புக்காக சிங்கள அரசுமீது "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீயும் அழுவது போல அழு" என்று செல்லமாகக் குட்டுவது. புலிகளை விட்டோடிய இரு துரோகிகளின் பங்களிப்பு புலிகளை விட்டோடி, அரசுடன் இணைந்துகொண்ட இரு துரோகிகளான தயா மாஸ்ட்டர் மற்றும் குமரன் பத்மநாதன் ஆகியோர் 2009 இல் இனவழிப்பில் வகித்த பாகம் பற்றியும் இங்கு பேசப்படுதல் அவசியம். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் தன்னை புலிகளின் தலைவராக பிரகடனப்படுத்திக்கொண்ட செல்வராசா பத்மநாதன் எனும் கே பி, 2009 இல் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டபோதுதான் புலிகளை விட்டோடியதாக நான் நினைக்கவில்லை. அவருக்கே தெரிந்த காரணங்களுக்காக பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதே தமிழரின் எதிரிகளுடன் அவர் கள்ள உறவில் ஈடுபடத் தொடங்கியிருந்தார் என்று அம்பலமாகியிருக்கிறது. அவரின் துரோகத்தனத்தினை நான் ஆரம்பத்திலேயே என்னுடைய இன்னொரு பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன். பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு கே பி யின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வந்த அறிக்கையிலேயே அவரின் கைங்கரியம் வெளிப்பட்டது. இவ்வாறு வெளிவந்த அறிக்கைகளில் தமிழில் அவர் கூறியிருந்த விபரங்களுக்கும் ஆங்கிலத்தில் அவர் வெலியிட்ட விபரங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "எமது தேசியத் தலைவருடன் இப்போரில் பலியான அனைத்து தளபதிகள், மாவீரர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம். இப்போரில் பலியான மாவீரர்களின் விபரங்களை விரைவில் வெளியிடுவோம்" என்று அவர் தமிழில் கூறியிருந்தார். ஆனால், அவரது ஆங்கில அறிக்கையில் தலைவர் பற்றியோ அல்லது மாவீரர்களின் விபரங்கள் பற்றியோ எதையுமே அவர் குறிப்பிடவில்லை. அவரின் கைதின் பின்னரான நேர்காணல்களில் தான் எப்போது புலிகளை விட்டு வெளியேறினேன் என்பதுபற்றியோ அல்லது தான் வெளியிடவிருப்பதாகக் கூறிய மாவீரர் விபரங்கள் பற்றியோ அவர் மூச்சுக்கூட விடவில்லை. கே பி தமிழர்களுக்கெதிரான துரோகம் 2009 இற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது என்பது புலனாவதால், புலிகளின் தலைமையின் மரணத்தில் கே பி யினால் வழங்கப்பட்ட புலநாய்வுத்தகவல்கள் நிச்சயம் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
  18. முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது, அவள் சொன்னால் ச்ச்ச்சீ.... அசிங்கம் என்று.... கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் அவ்வபோது ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்று... இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அடுப்பாங்கரையிலும், வீட்டில் யாரும் கவனிக்காத போதும் அவள் கழுத்துக்குக் கீழ் முத்தம் கொடுத்தேன், அப்போது சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்று... குழந்தைகள் வளர்ந்து திருமணம் முடித்து வைத்து... சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்து திடீரென தோன்றிய அந்த பழைய நினைவுகலுடன் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது சொன்னால் வயசு ஆயிறுச்சு தவிர இன்னும் அதே நெனப்புதா என்று... கடைசியாக அவளை வீட்டின் கூடாரத்தில் ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி, பூ, பொட்டுடன், மஞ்சள் குங்குமம் பூசி... படுக்கையில் கிடந்தவளை வாரி அனைத்தப்படியை ஒரு முத்தமிட்டேன், அவள் ஒன்றும் சொல்லாமல் உயிரை விட்டு படுத்துகிடந்தால் கிழவனுக்கு வேர வேலையே இல்லை போல என்றார்கள் கூட்டத்தில் யாரோ... இன்றும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறின் அவள் கல்லறையில் ஆயிர முத்தங்களுடன். நேசியயுங்கள்நேசிக்கப்படுவீர்கள் அவன் எவன் வழி வந்தவன் அல்ல ஊரார் முன்னிலையில் உங்களிடத்தில் உரிமை கொண்டவனே உங்கள் வாழ்க்கை துணையாக உங்களை காக்கும் தெய்வமாக வந்தவனே. கணவனை நேசிப்போம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.