Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8975
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88865
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    39366
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33845
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/06/21 in Posts

  1. அமெரிக்காவில நம்பாளு ஒருத்தன் பல்வலி தாங்காமல் பல்லை புடுங்கலாம்ன்னு டென்டிஸ்ட் கிட்ட போனான். . "டாக்டர் என் பல்லைப் புடுங்கனும்னுன்னா எவ்ளோ ஆகும்" . "1200 டாலர் ஆகும்" . அந்த ரேட் அவனுக்கு அதிகமாக தோணிச்சு. . கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு அவன் அவர்கிட்ட "டாக்டர் என் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?" . "ஒரே ஒரு வழி இருக்கு. அனஸ்தீஷியா இல்லாம வேணும்னா செய்யலாம். $500 டாலர் குடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும்" . "பரவாயில்ல டாக்டர். அனஸ்தீஷியா இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க. நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்" . டென்டிஸ்ட் அவனோட பல்லை பிடுங்கிய போது அவன் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. . பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற அவனிடம் டென்டிஸ்ட் சொன்னார்: "இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையுடனும் ஒரு பேஷண்டைக் கூட இதுவரை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நீ ஒரு கேஸ் ஸ்டடி மாதிரி.. எனவே நீ எனக்கு பீஸ் தர வேண்டாம். இந்த 500 டாலரை எனது அன்பளிப்பாக நீயே வைத்துக் கொள்" என்று தனது பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். . மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கில் வந்த பேஷன்ட்டுடன் தனக்கு ஏற்பட்ட ஸ்வாரஸ்யமான அனுபவத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். . எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார். . "நீங்கள் சொன்ன பேஷன்ட் காலையில் முதலில் என்னிடம் தான் வந்தான். அவனுக்கு அனஸ்தீஷியா கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன். அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவன் சீட்டில் இல்லை. ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தான். அந்த பயபுள்ளை தான் உங்களிடம் வந்திருக்கிறான் போலிருக்கு !" என்று புலம்பித் தீர்த்து விட்டார்
  2. இறுதியாக, தான் கட்டி வந்த வீரப்பிரதாபங்களும், ராணுவப் பிரமிப்பும் இடிந்து நொறுங்கிப்போய், கருணா தப்பியோடும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருந்த வேளை அவருடன் கூடவிருந்துகொண்டு புலிகளுக்கும் அவ்வப்போது தகவல் வழங்கிக்கொண்டிருந்த அவரின் சகா ஒருவர் கருணாவை அலிசாஹீர் மெளலானா வாழைச்சேனை பொலொன்னறுவை நெடுஞ்சாலையில், வாகரைக்கு அன்மையில் அமைந்திருக்கும் நாலாம் முச்சந்தி எனும் இடத்தில் சந்திக்கவிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த தகவல் உண்மையென்பதை இறுதிவரை கருணாவின் பின்னால் திரிந்து இறுதியில் இப்பகுதியில் கருணாவால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அவரின் நெருங்கிய போராளிகளில் ஒருவரும் உறுதிப்படுத்தியிருந்தார். மறுநாள் மெளலானாவைத் தொடர்புகொண்ட புலிகள், "கருணா உங்களோடுதான் இருக்கிறார் என்பது எமக்குத் தெரியும்" என்று கூறியபோது, அதனை அவர் முற்றாக மறுத்தார். அக தொடர்ந்து இடம்பெற்றது கருணாவுக்கும் ஐ தே க வுக்கும் இடையிலான அவமானகரமான தொடர்புதான். இங்கு கருணா விட்ட இன்னொரு தவறு பற்றியும் நாம் பார்க்க வேண்டும். இனத்தின் விடுதலையில் ஒருவருக்கு இருக்கும் அசைக்கமுடியாத உறுதிப்பாடே இயக்கம் மீதான விசுவாசத்தையும், தொடர்ந்து போராடுவதற்கான உத்வேகத்தையும் அளிக்கிறதென்பது புலிகளியக்கத்தில் முக்கிய தளபதியாகவிருந்த கருணா அறியாதது அல்ல. பிரபாகரன் தனது பேச்சுக்களின்போது, "நான் எப்போது எனது இலட்சியத்தைக் கைவிடுகிறேனோ, அன்றே என்னைக் கொன்றுவிடுங்கள்" என்று தனது தோழர்களிடம் அடிக்கடி கூறியிருக்கிறார். புலிகளின் தலைமையினால் தான் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கூறியதை தனது ஆதரவாளர்கள் நம்பியிருக்கும்வரைதான் கருணாவுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கருணாவிடமிருந்து பிரிந்து மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்த நிலாவினி மற்றும் இன்னும் சில பெண்போராளிகளின் கூற்றுப்படி கருணாவை ராணுவத்தின் புலநாய்வுத்துறையே இயக்குவதை அறிந்துகொண்ட ரொபேர்ட், ஜிம் கெலி தாத்தா, துரை, விசு ஆகியோர் அதற்குப் பின்னர் கருணாவுடன் தொடர்ந்து பயணிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியவருகிறது. அதுமட்டுமல்லாமல், கருணாவின் கிளர்ச்சியின்போது அவரின் பேச்சாளராகவும், மதியுரைஞராகவும் செயற்பட்டு வந்த வரதனும் கருணா ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படுவது கிழக்கு மக்களின் நீண்டகால அரசியல் இருப்பைக் கடுமையாகப் பாதிக்கப்போகிறது என்று கூறி வெளியேறிச் சென்றார். இந்த வாதன் தற்போது வெளிநாட்டில் வசித்து வருவதுடன் புலிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் (2004). ஈ பி டி பி துணைராணுவக் குழுவினாலும், வெளிநாட்டுப் புலியெதிர்ப்பு அமைப்பினாலும் நடத்தப்பட்டுவரும் கருணாவுக்குச் சார்பான இணையத்தளமான நெருப்பு டொட் கொம்மில் ஜூம் மாதம் 4 ஆம் திகதி கருணா வெளியிட்ட கரும்புலிகள் நாள் செய்தியில் அவர் வெகுவாகக் குழம்பிப் போயிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. கருணாவின் புதிய பேச்சாளரான மாறன் கூறும்போது, "கடலில் கரும்புலிகள் புரிந்த மகத்தான தியாகத்தினாலன்றி, எமது தலைவர் கருணா அம்மாண் இன்று உயிருடன் இருப்பது சாத்தியமில்லை. அவர் இன்று இந்த கரும்புலி மாவீரர்களுக்கு தனது மரியாதையினைச் செலுத்துகிறார்" என்று கூறியிருந்தார். கருணாவின் கிளர்ச்சியின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கருணா நடக்கும் சம்பவங்களால் இழுபட்டுச் சென்றாரே ஒழிய, அவருக்கென்று தீர்க்கமான, தெளிவான அரசியல் நோக்கோ அல்லது மக்களுக்கான அக்கறையோ இருந்தது கிடையாது. கருணாவைப் பாவித்து கிழக்கில் புலிகளை பலவீனப்படுத்தி, இறுதியில் முற்றாக அழிக்க ராணுவத்தால் முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முற்றும் https://tamilnation.org/forum/sivaram/040707.htm
  3. காதலியை வாங்கினால் முத்தங்கள் இலவசம்...... மனைவியை வாங்கினால் சத்தங்கள் இலவசம்.....! 😁
  4. கருணாவின் சர்வதேச பாடசாலை குறித்த தலைவரின் அக்கறையுடனான அறிவுறை எப்படியாக இருந்தபோதிலும், இவ்விடயத்தில் தனது செயலினால் கருணா அவமானப்பட்டிருந்தார் என்பதே உண்மை. கருணாவுக்கும், மெளலானாவுக்கும், அவரூடாக ஐ தே கட்சிக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்பட்டுவந்த நெருங்கிய உறவு 2004 பொதுத் தேர்தல்கள் பற்றிய அறிவிப்பு வெளிவந்ததையடுத்து வெளிப்பட்டுப் போனது. என்னையும் (தாரகி சிவராம்) இன்னும் மூன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களையும் (பின்னர் கருணாவால் படுகொலைசெய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நடேசனும் ஒருவர்) கருணா சந்தித்தார். மாசி மாதம் 10 ஆம் திகதி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினருடனான தனது சந்திப்பை முடித்துக்கொண்டபின்னரே எங்கள் நால்வரையும் அவர் அழைத்துப் பேசினார். எம்மை பொதுத் தேர்தல்கள் தொடர்பாக பேசுவதற்கே அவர் அழைத்திருந்தார்ஃ. "மட்டக்களப்பு மாவட்ட புலிகளின் விருப்பத்தின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லீம் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக நாம் முடிவெடுத்திருக்கிறோம். எமது தலைமையும் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லீம் வேட்பாளர்களை தேசியக் கூட்டமைப்புப் பட்டியல் மூலம் நிறுத்தவே விரும்பியிருந்தது" என்று கூறிவிட்டு எம்மிடம் "உங்களுக்குத் தெரிந்த முஸ்லீம் வேட்பாளர்கள் சிலரைக் கூறமுடியுமா?" என்று கேட்டார். நாமும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரசித்திபெற்ற, வேட்பாளராகும் தகுதியைக்கொண்ட பல முஸ்லீம் நபர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்தோம். இறுதியாக கருணா எங்களைப் பார்த்து, "அலிசாஹீர் மெளலானா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். நாம் பரிந்துரைத்த பல பெயர்களை நிராகரித்துவிட்டு மெளலானா பற்றி எம்மிடம் அவர் கேட்டது அவர் இதுகுறித்து ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார் என்பதை எமக்கு உணர்த்தியது. ஆனால், தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் ஜெயநந்தமூர்த்தி இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, மெளலான ஒரு தீவிர ஐ தே க ஆதரவாளர் என்றும், கிழக்கில் தமிழ் வாக்குகளைப் பிரித்து, தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தி , முஸ்லீம்களின் செல்வாக்கை உயர்த்தியவர்களில் மெளலானா முக்கியமானவர் என்று தனது கருத்தைத் தெரிவித்தார். பின்னர் கருணாவின் ஆலோசகரான வரதன் எம்மிடம் தெரிவிக்கும்போது கருணாவுக்கும் மெளலானாவுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதன்படி மெளலானா மட்டக்களப்பில் ஐ தே க பட்டியலில் போட்டியிடுவார் என்றும், தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் அவரைச் சேர்த்துக்கொள்ளவேண்டிய தேவையில்லையென்றும் கூறினார். இது முற்று முழுதாக , "மட்டக்களப்பில் ஒரு சிங்களக் கட்சியையேனும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க மாட்டேன்" எனும் கருணாவின் நீண்டகால இலட்சியத்திற்கு நேர் எதிரானது என்பதை உணர்ந்துகொண்டோம். ஆனால் தற்போது கருணாவின் ஆசீர்வாதத்தோடு மட்டக்களப்பில் சிங்களத் தேசியக் கட்சியான ஐ தே க கருணாவின் விருப்பத்துடன் களமிறங்கிறது. கருணாவின் இந்த முடிவினால் புலிகள் கடும் சீற்றம் அடைந்திருந்ததாகத் தெரியவருகிறது. ஆனால், கருணா இதுபற்றி அதிக அக்கறைப்பட்டவராகத் தெரியவில்லை. மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக ராஜன் சத்தியமூர்த்தியை கருணா தெரிவுசெய்ததும் புலிகளுக்கு கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. சத்தியமூர்த்தியைப் புலிகள் எதிர்ப்பதன் காரணம் தனக்குத் தெரியும் என்று கூறிய கருணா, புலிகளின் புலநாய்வுத்துறையினரின் தகவல்களின்படி ராஜன் சத்தியமூர்த்தி ஐ தே க தலைமையின் நெருங்கிய நண்பர் என்றும், ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருக்கமானவர் என்றும் புலிகளின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என்று தனது நெருங்கிய சகா ஒருவருக்கு இத்தருணத்தில் கூறியிருந்தார். ஆனால், கருணா தொடர்ச்சியாக தலைமையை வற்புறுத்தியதின்பேரில் ராஜன் சத்தியமூர்த்தியின் நியமனத்திற்கெதிராக புலிகளின் தலைமை செயற்படவில்லை. ஐ தே க ஆதரவாளார் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலூடாக மட்டக்களப்பில் கருணா போட்டியிட வைத்தபோது அதன் பின்னால் இருக்கும் சதிபற்றி புலிகள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. தமது புலநாய்வுத்துறைக்குத் தலையிடியினைக் கொடுக்கவே கருணா ராஜன் ஆசீர்வாதத்தைத் தெரிவுசெய்தார் என்பதைப் புலிகள் அறிந்தே இருந்தனர். கருணாவின் கிளர்ச்சியின் பின்னைய நாட்களில் கருணாவிடம் தனித்து இயங்குவதற்கான அரசியல் தெளிவோ அல்லது நீண்டகால அரசியல் செயல்த்திட்டமோ இருக்கவில்லையென்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்துகொண்டோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோடு கருணாவுக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கத்தினையடுத்து, ஐ தே க வினருடனான தனது தொடர்பினை முற்றாக அறுத்தெறிந்தார் கருணா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களிடம் மட்டக்களப்பில் பேசிய ராஜன் சத்தியமூர்த்தி ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் கருணாவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தினையடுத்து, கருணா குழுவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு பதவியினை வழங்க சந்திரிக்கா இணங்கியிருப்பதாகக் கூறினார். இதற்கமைவாக, தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியில் கருணா குழு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தனது முழு ஆதரவினையும் வழங்குவதாகத் தெரிவித்திருப்பதாகக் கூறியது.
  5. கருணாவுக்குப் புலிகளால் அனுப்பப்பட்ட பொதுமன்னிப்புப் பற்றிய தகவல்களை கருணாவிடம் கொண்டுவந்து சேர்த்தவர்களில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதியான அலிசாஹீர் மெளலானாவும் ஒருவர். இந்தவிடத்தில் கருணாவின் பிரிவின் பின்னாலிருந்த அலிசாஹீர் மெளலானா - ஐக்கிய தேசியக் கட்சியின் சதிபற்றியும் நான் புரிந்துகொள்ளுதல் அவசியம். கருணாவும், அலிசாஹீர் மெளலானாவும் பள்ளிப்பருவத்திலிருந்தே தோழர்கள் என்கிற தவறான கட்டுக்கதைகள் பரப்பட்டு வந்தன. ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையிலான சிநேகம் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே ஆரம்பமானது என்பதே உண்மை. மெளலானா நெடுங்காலமாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலே படித்தவர். கருணாவுக்கு பல வருடங்கள் வயதில் மூத்தவர். கருணாவோ கிரானில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் உயர்தரத்திற்காக மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்கும் சென்றவர். ஆகவே இவர்கள் இருவரும் பள்ளித்தோழர்கள் என்பது தவறான தகவல். 2001 இல் கருணா கிழக்கு மாகாணத்தின் சிறப்புத் தளபதியாகப் பதவியேற்று கிழக்கில் செயற்பட ஆரம்பித்திருந்த வேளை, புலிகளின் புலநாய்வுத்துறை தமது அன்றாட தகவல் அறியும் செயற்பாடுகளில் கருணாவுக்கும் இயக்கத்திற்கு வெளியில் இருக்கும் சக்திகளுக்கும் இடையிலான சில தொடர்புகள் பற்றி அறிந்துகொண்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சில மாதங்களுக்கிடையில் கிழக்கிலிருக்கும் ஒரு பலம்வாய்ந்த ஐ தே க அரசியல்வாதியூடாக அரசாங்கம் கருணாவுடன் நேரடியாகத் தொடர்பொன்றினை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்ததும், இத்தொடர்பிற்கு தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியினை அரசு கோறியிருந்ததும் புலிகளுக்குத் தெரியவந்தது. அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதி என்று கட்டிக் கொண்டாலும், ஐ தே க அரசின் உயர் மட்ட தலைவர்களுடன் நெருக்கமான நட்பினையும் கொண்டிருந்தவர். ஆனால், தன் மூலம் கருணாவுக்கும் அரசுக்கும் இடையே உருவாகவிருக்கும் நேரடித் தொடர்பின் தாக்கத்தினை உணர்ந்துகொண்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர் இறுதிநேரத்தில் ஐ தே க அரசினால் தனக்கு விடுக்கப்பட்ட "கருணாவுடன் நேரடித் தொடர்பு" எனும் வேண்டுகோளினை ஏற்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ தே க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும், கொழும்பிலேயே தொடர்ச்சியாக வாழ்ந்துவந்தவரும், ஐ தே க வின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான ஒரு அரசியல்வாதி கொக்கட்டிச்சோலைக்கு சில கிலோமீட்டர்கள் மேற்கே அமைந்திருக்கும் மறைவிடம் ஒன்றில் கருணாவுடன் ரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக நன்கு அறிந்துவைத்திருந்த புலிகள், சில மாதங்களுக்குப் பின்னர் ஐ தே க வினர் உங்களோடு தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம், ஆகவே அவதானமாக இருங்கள் என்று கருணாவை எச்சரித்திருந்தனர், ஆனால் இதற்கான காரணத்தை அவர்கள் அப்போது கருணாவிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், புலிகளின் புலநாய்வுத்துறையின் இந்த "ஐ தே க தொடர்பு" எச்சரிக்கையினை கருணா சட்டை செய்யவில்லை. அவரைப்பொறுத்தவரை தலைவர் தன்னை முழுவதுமாக நம்புவதால், தன்பற்றிய புலநாய்வுத்துறையினரின் தகவல்களை தலைவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றே அவர் நம்பினார். "கருணா அம்மாண் எதைச் செய்தாலும் புலிகளின் நண்மைக்காகவே செய்வார் என்பதை தலைவர் நன்கு அறிவார். அம்மான் பற்றி புலநாய்வுத்துறை காவிச் செல்லும் செய்திகளை தலைவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று கருணாவுக்கு நெருக்கமான கிழக்கு மாகாண போராளி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, கருணாவுக்கும், ஐ தே க வின் தலைவர் ரணிலின் ஆலோசகரான மெளலானாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். கருணாவின் மனைவி நிராவும் அவரது இரு பிள்ளைகளும் மெளலானாவின் மனைவியான தனுஜாவைச் சந்திக்க அடிக்கடி கொழும்பிற்குச் சென்றுவரத் தொடங்கினர். இவர்களுக்கிடையிலான நெருக்கம் நாளடைவில் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்ட சர்வதேச பாடசாலை ஒன்றினைத் திறந்துவைக்கும் நிகழ்விற்கு திருமதி மெளலானாவைக் கருணா குடும்பம் அழைத்துவந்ததுவரை நீண்டு சென்றது. இந்தச் சர்வதேசப் பாடசாலையின் மிக பிரபலமான மாணவர்களாக கருணாவின் பிள்ளைகளும், அவரின் சகாக்களான துரை மற்றும் ராபேர்ட் ஆகியோரின் பிள்ளைகளும் இருந்தனர் என்பதும், இவ்விரு சகாக்களும் தற்போதுவரை (2004) அங்கேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது. கருணாவின் பிள்ளைகளும், ஏனைய தலைவர்களின் பிள்ளைகளும் சொகுசு வாகனங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பின் மேற்குப்புற காட்டுப்பகுதியிலிருந்து இந்தப் பாடசாலைக்கு வந்துசெல்லத் தொடங்கினர். இந்த நிகழ்வு கருணாவினாலும், அவரது சகாக்களாலும் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரைக் கடுமையாகப் பாதித்திருந்தது. பல பெற்றோர்கள் இதுதொடர்பான முறைப்பாடுகளை புலிகளின் தலைமைப் பீடங்கள் அமைந்திருந்த கிளிநொச்சிக்கும், புதுக்குடியிருப்பிற்கும் தொடர்ச்சியாக அனுப்பி வந்தனர். கிளிநொச்சியிலும் புலிகளால் ஒரு ஆங்கில மூலப் பாடசாலை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இயக்கத்தின் தளபதிகளினதோ அல்லது மூத்த உறுப்பினர்களினதோ பிள்ளைகளை இப்பாடசாலையில் அனுமதிப்பதில்லையென்கிற கடுமையான கட்டுப்பாடும் அங்கு நிலவிவந்தது. சமர்களில் கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பங்களிலிருந்து திறமையுள்ள பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்தப்பாடசாலைக்குச் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆகவே, மட்டக்களப்புச் சர்வதேச பாடசாலையில் தனது பிள்ளைகளைக் கருணா இணைத்துக் கற்பித்துவருவது பற்றி கருணாவிடம் பேசிய தலைவர், இது இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், கருணாவின் பிள்ளைகள் மற்றும் அவர்களைக் கொண்டு வரும் புலிகளின் போராளின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலான விடயமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். புலிகளின் மூத்த தளபதியொருவரின் பிள்ளைகள் பூரண அரச கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குச் சென்றுவருவதும், அரச புலநாய்வுத்துறையினால் அவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதும் பாரதூரமான விடயம் என்பதையும் தலைவர் கருணாவிற்குச் சுட்டிக் காட்டியிருந்தார். ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தரமான பாடசாலைகள் இல்லாமயினாலேயே தான் தனது பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலைக்கு அனுப்பிவருவதாகக் கருணா கூறியபோது, "உனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாடொன்றிற்கு அனுப்பி அங்கு படிக்கவை, நாட்டில் நிலமை சுமூகமாகி, பிள்ளைகளின் படிப்பிற்குச் சரியான ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர் அவர்களை மீண்டும் இங்கு அழைத்து வா" என்று தலைவர் கருணாவிடம் கூறியிருக்கிறார். கருணாவுக்காக இயக்கத்தின் விதிகளை அவ்வப்போது தளர்த்திய தலைவர், தொடர்ச்சியாக கருணாவின் மனம் கோணாதபடி பார்த்துவந்தார் என்று அவருடன் நெருங்கியவர்கள் கூறுகிறார்கள். தலைவரால் வெளிநாடொன்றிற்கு பிள்ளைகளையும் மனவியையும் அனுப்புமாறு கோரப்பட்டதன் பின்னரே கருணா தனது குடும்பத்தினை மலேசியாவுக்கு அனுப்பிவைத்தார் என்றும், ஆனால் இது தவறுதலாக கருணா இயக்கத்திற்குத் தெரியாமல் குடும்பத்தை அங்கு அனுப்பியதாகவும், செல்லையா ராசதுரை இதற்கு உதவியதாகவும் சில செய்திச் சேவைகள் செய்திவெளியிட்டு வந்திருந்தன.
  6. யாழ்ப்பாணம் ராணி திரையரங்கு அடிமை பெண்(1969) மலரும் நினைவுகளை கிளறுவதன்ன ரெல் மீ..!
  7. தெந்தமிழீழத்தையே அறுத்துப்போட்டான். ஆனால் போருக்குப் பிறகு மட்டக்களப்பில் முளைவிட்ட குஞ்சுகள் இவை அறியாமல் இந்தக் குடிகார குருணாவின் வாலை கவ்விக்கொண்டும் புலியைத் தூற்றிக்கொண்டும் திரியிதுகள். ஒரு சாம்பிராணியாலை ஒரு ஊரே மெல்லமெல்ல தன்னின இருப்பை இழந்து எரிந்து செல்கிறது! தங்கட ஊருக்கு தாங்களே கொள்ளி வைத்திருக்கிறாங்கள்.
  8. முதலை இருக்கும் குளத்தில் மீன் பிடிப்பதில் கவனம் தேவை.......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.