Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88864
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33844
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    15827
    Posts
  4. வாலி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5077
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/01/22 in Posts

  1. நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை! *********************************** ஆதிகால மனிதனென காட்டுக்குள் அலைந்தோம் அதன் பின் ஆரம்ப மனிதராய் நாட்டுக்குள் வந்தோம் மற்றைய உயிரினத்திலிருந்து மாறுபட வைத்த -அந்த ஆறாம் அறிவு எம் கல்விக்கென்றே கிடைத்தது. கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில் பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை ஆளுமை கொண்ட ஒரு சமுதாயம் நிமிர-நல்ல ஆரம்பக் கல்வியில் அத்திவாரமிடுவோம். சொல்லில் அடங்காத ஆசிரியத் தொண்டும் சுறுசுறுப்பாய் கற்கின்ற மாணவர்கள் பங்கும் எல்லைகள் கடந்தே நல்லதைச்செய்யும்-இல்லையேல் தொல்லைகள் நிறைந்த சமுதாயமாகும். வேலைக்கு மட்டும் படிக்கின்ற பாடங்கள்-பின்பு வேதனை தந்து வீதிக்கும் வரலாம். வேலை இருக்கென படிக்கின்ற தொழிற்க் கல்வி வீட்டையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்தலாம். காற்றுள்ள போதே தூற்றுவாய் நெல்லை-அதேபோல் காலம் இருக்கையில் கல்வியைத் தேடு பாலை வனம்கூட சோலைவனமாகும்-இல்லையேல் படுக்கின்ற பாய்கூட வெறுப்பாவே பார்க்கும். பட்டங்கள் பெற்று நீ உயர்ந்து போனாலும்-கீழே பார்க்க மறக்காதே? உன்கால்கள் நிற்பதை அப்பா,அம்மா, ஆசிரியர் தோள்களில்.. அவர்களின் மகிழ்வே உன் உயரத்தின் எல்லை. ஆசிரியப் பணியை போற்றுவோம் உலகில் அவர்கள் இல்லையேல் அகிலமே இருளில் காலா காலமும் புது,புது கல்வியைக் கற்று காசினி உயர பல கடமைகள் செய்வோம். -பசுவூர்க்கோபி.
  2. டிஸ்னிலாண்டில் ஓரு இனிய மாலை நேரம்.........! 😍
  3. விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியூட்டும்........! 😍
  4. படம் : காட்டு பூக்கள் (1965) இசை :தேவராசன் பாடியவர்: KJY
  5. நன்றி அன்பரே! ஓரளவுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு, கனநாள் facebook இல் இருந்தேன். பின்னர் அது என்னை addict ஆக்கி விட்டதை உணர்ந்ததும் ஒரே அடியாய் அதை மூடி என்னுடன் தொடர்பில் இருந்த ஒரு 1500 பேருக்கு ஒரே நாளில் ராட்டா சொல்லி விட்டேன். இது நடந்து 2 வருடம் ஆகி விட்டது, facebook ஐ இன்னும் திரும்பியும் பார்க்கவில்லை.தொடர்ந்து எழுத விரும்புகிறேன். வாழ்த்தி வரவேற்றதற்கு இன்னுமொரு தரம் நன்றி. நான் இங்கே வந்து மெடிக்கல் எக்ஸாம் எல்லாம் முடித்து விட்டேன்.. என்றாலும் appointment தரவில்லை. அண்மைக்காலத்தில் இங்கு வந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இது தான் நிலைமை. என்னைப்போல் இங்கு ஒரு பத்தாயிரம் பேரின் நிலைமை இது தான்.ஆஸ்திரேலியா அல்லது யூஸ் இல் படித்து பின்னர் பட்ட மேற்படிப்பும் படித்து இருந்தால் இங்கே வேலை கிடைக்கும். ஆனால் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், ரஷ்யா டாக்டர்ஸ் நிலையோ அந்தோ பரிதாபம்.சிலருக்கு அத்தி பூத்தால் போல் வேலை கிடைக்கும். அது வரை ஆறு மாசம் சொந்த நாட்டில் doctor வேலை மிச்சம் 6 மாசம் இங்கு ஏதாவது வேலை என்று பல வருடங்கள் கழிக்க எதிர்பார்ப்புடனேயே கழிக்க வேண்டும். இதில் சில சமயம் குடும்பம் இரண்டாகி விடும், இங்கே citizenship கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும். கையில் காசும் இருக்காது, 45 வயதில் சில நேரம் வேலை கிடைக்கும், ஆனால் இப்படி ஒரு தியாக வாழ்க்கைக்கு நான் ரெடி இல்லை. Emergency service இல் டிரைவர் ஆக வேலை செய்யவில்லை. பலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். Pre hospital medical practice கடைசி பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டு விட்டது. அதில் advance care Paramedics ஆகவே வேலை செய்கிறேன். இதில் ஒரு 100 க்கு மேற்பட்ட அவசர மருத்துவ தேவைகளுக்கான medications நோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஒரு heart attack, stroke,அல்லது சுவாசம் சம்பந்தமாக ஏதும் நடந்தால் ஆஸ்பத்திரி கொண்டு போகாமலேயே வீட்டில் வைத்து சத்திர சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளையும் அளித்து நோயாளி ஓரளவு சரியானவுடன் ஆஸ்பத்திக்கு அனுப்ப முடியும், stroke வந்தால் ambulance இன் உள்ளே வைத்து MRI scan எடுத்து தலையில் எங்கே எந்த நாளத்தில் இரத்தக் கசிவு உண்டு என்று பார்த்து அதை உடன் தடுத்து பாதிப்பின் அளவை கணிசமாகாக குறைக்க முடியும். தேவையானால் இரத்தம் ஏற்ற முடியும். கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தான் இந்த தொழிலில் இவ்வளவு scope Of practice. ஒரு நாள் சம்பளம் $500 -$600. இரவு வேலை என்றால் இன்னும் கூட. இன்னும் சில வருடத்தில் Air ambulance இல் critical care para medics ஆக வர விரும்புகிறேன்.இதனால் தான் இந்த வேலையை தேர்ந்து எடுத்தேன். இதற்காக இங்கு 3 வருடம் படித்தேன். ( medical exam clear செய்த பிறகும் இதற்கு வேறு படித்து இன்னொரு எக்ஸாம் கொடுக்க வைத்தார்கள் படுபாவிகள்.)எனக்கு தெரிந்த பல இந்திய பாகிஸ்தான் டாக்டர்ஸ் இங்கு டாக்ஸி ஓட்டும் நிலை.. ஆகவே எனக்கு இது கிடைத்த வரை சந்தோசம். நான் செய்த பிழை கனடா வந்தது தான். இங்கு இந்த பிரச்னை இருக்கு என்று தெரிந்து தான் வந்தேன். எக்ஸாம் முடித்து விட்ட படியால் இவர்கள் எப்போதாவது சிலநேரம் தேவைப்பட்டால் கூப்பிட்டு எங்காவது கனடாவில் கண் காணாத தேசத்தில் appointment கொடுத்தால் நல்லம்.. இல்லாவிட்டால் ஒரு துன்பமும் இல்லை. ஏதாவது europ போய் இருந்தால் இந்த சிக்கல் இருந்து இருக்காது.. கல்யாண சம்பந்தம் அமைந்தது கனடாவில் தான்.திருமணம் செய்யும் குடும்பம் முக்கியமா எனது கனவு முக்கியமா என்ற நிலையில் முதலாவதை தேர்ந்து கொண்டு இங்கு வந்துவிட்டேன்.😉 நன்றி கிருபன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.