Stop loss இனை குறைக்க முடியாவிட்டாலும் Position size கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன்,
Risk of Ruin என்பது உங்களது trading system உங்களது trading account இனில் உள்ள காசு முழுவதும் இழக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதா என தெரிவிக்கும் அத்துடன், குறிப்பிட்ட எண்ணிக்கையான trade பின்னர் உங்களது கணக்கின் எதிர்கால நிலுவையினை தெரிவிக்கும்.
இந்த திரியில் முன்னர் ஒரு தளத்தின் இணைப்பினை இணைத்திருந்தேன், அத்தளத்திற்கு சென்று MS EXCEL தரவிறக்கிக்கொள்ளலாம்.
எனது AUDNZD trade இல் 1 break even மற்றது stop loss. பல்லடியம் உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பித்த போது விலை எகிறும் என Fundamental analysis இல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விலை தொடர்ச்சியாக இறங்கி வருகிறது, கடந்த 3 மாதகாலமாக விலை இறங்குகிறது, 1900 விலையில் வாங்குவதற்கு தீர்மானித்துள்ளேன் ( தற்போது 2000 இல் உள்ளது 1900 தொழில்னுட்ப ரீதியாக வலுவானநிலையில் உள்ளபடியால்).
சில நேரங்களில் உலக பொருளாதார சூழ்நிலையான Macro economics (Fundamental analysis) இற்கும் சந்தை நடவடிக்கையும் நேரெதிராக இருக்கிறது, இதனால்தான் தொழில்னுட்ப ரீதியான (Technical)சந்தை அணுகுமுறை சாதகமாகவுள்ளது.
சமீபகாலமாக Fundamental analysis இற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனூடே தொழில்னுட்ப ரீதியாக சந்தையினை அணுகுகிறேன், அத்னாலேயே AUNZD bullish market view இல் தொடர்ச்சியாக இழப்பு ஏற்பட்ட போதும் தொடர்ந்தும் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறேன்.
Trend following என்ற அடிப்படையில் AUDNZD இனை அணுகுகிறேன், இது தவறான முடிவாக இருக்கலாம்.
இந்த வகை உத்தியினை ரிச்சர்ட் டென்னிஸ் பாவித்திருந்தார், இஅவர்து வர்த்தக நடவடிக்கையில் 95% இழப்பினையும் வெறும் 5% மட்டுமே இலாபத்தினையும் வழங்கும் என கூறுவார்கள், அவரது அந்த 5% இலாப நடவடிக்கை 95% இழப்பினை ஈடு செய்வதுடன் மேலதிகமாக அவருக்கு இலாபத்தினையும் ஈட்டி கொடுத்திருக்கிறது.