முதலாவது வரைபடம் நாள் வரைபடம், இரண்டாவது வரைபடம் 1 மணித்தியால வரை படம்,
fractal market analysis
உதாரணமாக இரஸ்சியன் பொம்மையினை (தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி) குறிப்பிடுவார்கள்.
குறுங்காலத்தில் நிகழ்வது போலவே நீண்ட கால அளவிலும் ஒரே மாதிரியான அமைப்பில் (Pattern) நிகழும்.
அதற்குக்காரணம் சந்தையில் பங்குபற்றும் மக்களின் மனநிலை ஒரே மாதிரியாக இருப்பதே காரணம் கூறப்படுகிறது, மற்றவர்களை சிந்திக்காமல் பிந்தொடர்வதே (Mass Psychology) இவ்வாறான அமைப்புகளை (Pattern) தோற்றூவிக்கிறது என கூறப்படுகிறது.
ஒரு முழுமையான சந்தை வட்டம் 8 அலைகளை கொண்டது.
இதுதான் சந்தையின் செயற்பாடு, 8 அலைகள் கொண்ட முழுமையான வட்டம் (Full Cycle) மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப நிகழ்வதாகக்கூறுகிறார்கள் இந்த செயற்பாட்டிற்குக்காரணம் மனிதர்களின் உளவியலே காரணம் என கூறப்படுகிறது.
கிழக்கு - மேற்கு, இனம், நிறம், மொழி, சாதி, மதம், வகுப்பு என மனிதர்களுள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் மனிதர்கள் ஒரே மாதிரியாகவே சிந்திப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
நாள் வரைபடத்தில் தங்க விலை இறங்குமுகமாக உள்ளது (Down trend)
தற்போது தங்கம் B Correction wave இல் உள்ளது (Daily chart),
C அலை (Hourly chart) 5 அலைகளை கொண்டது தற்போது 1 வது அலையில் உள்ளது 2 வது அலை விலை பின் வாங்கும் (Retrace).
அது Fib 0.382 - 0.786 வரை செல்லும் எனக்கூறுகிறார்கள் ஆனால் 1 வது அலையினை விட கீழிறங்காது என கூறப்படுகிறது (1688). தற்போது எனது தங்கம் வாங்கும் விலை 0.618 உள்ளது, எதிர்பார வெளியேற்ற விலை (Stop loss) 0.786 சற்று உயர்வாக உள்ளது (1697).
Stop loss 1688 சிறந்தது