Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19139
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    38771
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    32016
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20020
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/07/22 in all areas

  1. தங்கம் எதிவு கூறப்பட்டது போல 1800 இல் Break out போல போலியாக விலை அதிகரித்து விலை இறங்க ஆரம்பித்த நிலையில் அனைத்து வாங்கபட்டிருந்த தங்கத்தினை விற்றுவிட்டு 1808 விலை அளவில் தங்கத்தினை விற்றுள்ளேன். யாழ் முடங்கியிருந்தமையினால் தங்கம் வர்த்தகம் தொடர்பான மேலதிக விபரம் தெரிவிக்கப்பட முடியவில்லை. இந்த நிலையில் மறு நாளும் யாழ் முடங்கியிருந்தமையால் Youtube இல் காணொளியினை தரவேற்றியிருந்தேன். முன்பு கூறப்பட்ட தரவுகளில் எதிர்பார்க்கபட்டது போல விலை சடுதியாக உயர்த்தப்பட்டு Break out trader களை உள்ளிழுத்து சந்தையின் தவறான பக்கத்திற்கு கொண்டு சென்று அவர்களது Stop loss இனை கவர்ந்து தமக்கு தேவையான திரவநிலையினை (liquidity) பெற்றிருந்தாலும். நான் முன்பு கூறியது போல 1800 இற்கு மேல் அதிகளவான Short sellers இன் stop loss கவரப்பட்டதற்கான அறிகுறி காணப்படவில்லை(Big upside wick or Bearish engulfing candle). தற்போதுள்ள இந்த வர்த்த்கத்தினை 1730 பகுதியிலுள்ள தங்கத்தினை வாங்கியுள்ளவர்களின் stop loss கவர்வதற்காக விலை 1730 இனை நோக்கி சரிந்து மீண்டும் விலை அதிகரித்து பின் விலை இறங்குவதற்கான வாய்ப்புள்ளமையால் 1730 பகுதிகளில் தங்க விற்பனையினை முடித்து விட்டு பின்னர் விலை உயர்ந்த பின்னர் மீண்டு விற்பதற்கு தீர்மானித்துள்ளேன். விலை 1810 மேல் உயர வாய்ப்பில்லை அதனால் stop loss 2 (1812) அல்லது 3 (1813)புள்ளிகள் உயர்வாக stop loss இட்டு தங்கத்தினை விற்க தீர்மானித்துள்ளேன். இப்படித்தான் நிகழும் எனும் கட்டாயம் இல்லை அதற்கான வாய்ப்பு உள்ளது எனவே கூறியுள்ளேன்.
  2. வைகாசி 1958 இல் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் பரவலாக ஒரே நேரத்தில் நடத்தப்பட்டவை. இலங்கையின் பொருளாதாரத்தின்மீது தமிழ் வர்த்தகர்கள் கொண்டிருந்த செல்வாக்கினை அழிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தென்னிலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மொத்த தமிழ்ச் சமூகமுமே இத்தாக்குதலிற்குள் அகப்பட்டுப் போனது. மாகாண நகரங்களில் இயங்கிவந்த தமிழரின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டபின் தீக்கிரையாக்கப்பட்டன. சைவ ஆலயங்கள் இடிக்கப்பட்டதுடன், எல்லையோரத் தமிழ்க் கிராமங்களில் வசித்துவந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவ்வாறு தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட பூர்வீக தமிழ்த் தாயகத்தில் உடனடியாகவே சிங்களவர்கள் அரசினால் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறான திட்டமிட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே அகதி முகாம்களில் தஞ்சமடைந்த பெருமளவு தமிழர்களை ராணுவப் பாதுகாப்புடன் தமிழரின் பூர்வீக வாழிடமான வடக்குக் கிழக்கிற்கு "இதுதான் உங்களுக்குப் பாதுகாப்பான பகுதி" என்று அரசு அனுப்பி வைத்தது. இத்தாக்குதல்கள் தாம் பாதுகாப்பற்றவர்கள், ஆகவே எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், கெளரவமாக வாழவும் எமக்கான தனியான தேசம் வேண்டும் என்கிற சிந்தனையினை தமிழர்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்தி விட்டிருந்தது. மாவட்ட காணி அதிகாரியாக இருந்த வேலுப்பிள்ளை அவர்கள் சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் நடத்திவரும் அழிப்புப் பற்றியும், தமிழர் மீதான அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள தொடர்பாகவும் மாலை வேளைகளில் தனது வீட்டில் கூடும் நண்பர்களுடன் கலந்துரையாடி வருவார். "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் தந்தை செல்வாவின் சுலோகம் அடிக்கடி வேலுப்பிள்ளையின் நாவில் தவழ்ந்துகொண்டிருக்கும். தமிழரின் தாயகம் பாதுகாப்பட்டால் ஒழிய தமிழ் இனத்தின் தனித்துவத்தினைக் காப்பாற்ற முடியாது என்பதே அவரின் வாதமாக இருந்தது. பிரபாகரனின் அரசியல் பிரவேசம் இங்கிருந்தே ஆரம்பமாகியது. தனது வீட்டில் குழுமியிருந்து பெரியவர்கள் பேசும் விடயங்களை அவர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். ஆனால், அந்த பேச்சுக்களில் அவர் ஒருபோதும் பங்குகொண்டது கிடையாது. இந்த சிறப்பியல்பு அவரை சிறந்த செவிமடுப்பாளனாக உருவாக்கியதுடன், நாளடைவில் அவரது குணாதிசயங்களில் மிக முக்கியமானதாகவும் மாறிப்போனது. தமிழ்ப் பூசகரை உயிருடன் தீக்கிரையாக்கிய விடயம் அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அவரை கடுமையான சீற்றத்திற்குள்ளும் அது தள்ளியிருந்தது. "அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை அப்பா?" என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தப் பூசகரும் தமிழர்களும் திருப்பி அடித்திருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்தும் அவர்களுடன் விவாதம் செய்துகொண்டிருந்தார். அப்பூசகரால் திருப்பி அடிக்க முடியவில்லை. அன்று கால கொழும்பின் பல பகுதிகளில் சிங்களவர்கள் கூடுவதை அவர் அறிந்துகொண்டார். அக்கூட்டம் மாலையாகியதுடன் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியது. தமிழர்களின் கடைகள் முற்றாகச் சூறையாடப்பட்ட பின்னர் அவற்றிற்கு சிங்களவர்களால் தீவைக்கப்பட்டது. நகரின் பலவிடங்களில் தமிழர்களின் வீடுகளும் குறிவைத்து தக்கப்பட்டு, கொள்ளையிட்டபின்னர் எரியூட்டப்பட்டன. அதுமட்டுமல்லாமல், அரச அலுவலகங்களில் வேலைபார்த்துவந்த தமிழர்கள் அவ்விடங்களிலேயே அச்சத்தில் ஒளிந்திருந்த வேளை அவர்களை வீதிகளுக்கு இழுத்துவந்த சிங்களவர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். திருவேங்கடம் வேலுப்பிள்ளை பாணந்துரை சந்தியில் கூடிய காடையர் கூட்டம் தனது கோயில் நோக்கி வருவதை அவதானித்த பூசகர் மிகவும் பதட்டமடைந்தார். உடனடியாக தனது அறைக்குள் ஓடிய பூசகர், தனது கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டார். தாம் தேடிவந்த பூசகரை அறையினுள் கண்டுபிடித்த காடையர் கூட்டம் அவரை தலை முடியில் பிடித்து வெளியே இழுத்து வந்தது. பக்கத்தில் இருந்த எரிபொருள விற்பனை நிலையத்திலிருந்து தாம் எடுத்துவந்த பெற்றோலினை அவர்மீது ஊற்றிய அச்சிங்களக் காடையர்கள் அவர்மீது தீவைத்தனர். தனது உயிருக்காகக் கதறிக்கொண்டு பூசர் எரிந்துகொண்டிருக்க சுற்றியிருந்த சிங்களக் காடையர்கள் "பறத் தமிழனுக்கு பாடம் புகட்டிவிட்டோம், இனிமேல் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்த்தும் , தமிழருக்கு உரிமையும் கேட்கட்டும் பார்க்கலாம்" என்று எக்காளமிட்டுச் சிரித்துக்கொண்டு போனது. தமது மதகுரு ஒருவரை உயிருடன் எரித்தது தமிழ்ச் சைவர்களை வெகுவாகப் பாதித்திருந்தது. மிகுந்த இறைபக்தி உள்ள குடும்பத்தில் வளர்ந்துவந்த சிறுவன் பிரபாகரனை இது அதிகம் வேதனைப்பட வைத்திருந்தது. அவரது பெற்றோர்கள் ஊரில் கோவில்களைக் கட்டி வாழ்ந்த பரம்பரையினைச் சேர்ந்தவர்கள். வல்வெட்டித்துரையில் இருக்கும் மிகப்பெரும் கோயிலான வல்வை சிவன் கோவிலின் பிரதம நிர்வாகியாக வேலுப்பிள்ளை இருந்துவந்தார். பிரபாகரனின் மூதாதையர்களில் ஒருவரான திருமேனியார் வெங்கடாச்சலம் என்பவரால் அக்கோயில் கட்டப்பட்டது. அக்கோயில் மட்டுமல்லாமல் இன்னும் இரு கோயில்களான நெடியகாடு பிள்ளையார் கோயில், வல்லை முத்துமாரியம்மண் கோயில் ஆகியனவற்றின் கட்டுமானத்தில் பிரபாகரனின் குடும்பம் பாரிய உதவியினை வழங்கியிருந்தது. பிரபாகரனின் தாயரான வல்லிபுரம் பார்வதியம்மாளும் ஊரில் கோயில் கட்டும் குடும்பம் ஒன்றினைச் சேர்ந்தவர். இன்னொரு வடபகுதி துறைமுக நகரான பருத்தித்துறை மெத்தை வீட்டு நாகலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மிகுந்த இறைபக்தி கொண்ட அவர், தொடர்ச்சியான விரதங்களையும் மேற்கொண்டு வந்தவர். தந்தை பிரதான ஆலய நிர்வாகியாகவும், தாயார் மத அனுஷ்ட்டானங்களில் பயபக்தியுடன் ஈடுபட்டுவருபவராகவும் இருக்க சிறுவன் பிரபாகரன் இவ்வாறான மதச் சூழ்நிலையிலேயே வளர்ந்துவந்தார். அவரது வீட்டின் பூஜை அறையில் சிவனுக்கான பெரிய உருவப் படமும் முருகன் பிள்ளையாருக்கென்று சிறு படங்களும் எப்போதுமே வைக்கபட்டிருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் அனைவரும் நாளாந்தம் மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தேவாரங்களையும் பாடிவந்தனர். தீயவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் முருகனை பிரபாகரன் தனது பிரதான கடவுளாக வழிபட்டு வந்தார்.
  3. அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை ? பாணந்துரை பிள்ளையார் கோயில் பூசகரை சிங்களவர்கள் உயிருடன் தீக்கிரையாக்கிய செய்தியை தனது தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான பிரபாகரனின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, "அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை அப்பா?" என்பதுதான் அது. சமஷ்ட்டிக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவின் தீவிர ஆதரவாளரான வேலுப்பிள்ளையிடம் தனது மகனின் கேள்விக்கான பதில் இருக்கவில்லை. தமது உரிமைகளை காந்தீய, வன்முறையற்ற போராட்ட வழிகளில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவரைப்போன்றவர்கள் அதுவரை நம்பியே இருந்தனர். காலிமுகத்திடலில் கால்களை மடக்கிக் குந்தியிருந்து, தமது தெய்வங்களை நோக்கி மன்றாட்டுக்களை வைப்பதுவும், வேண்டுவதுமே சிங்களத் தலைவர்களின் கல்மனங்களைக் கரைத்துவிடும், அதன்பின் தமக்கான உரிமைகள் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். பாணந்துரை பிள்ளையார் கோயில் ஆனால், மூன்றரை வயதே நிரம்பிய, வீட்டில் எல்லாராலும் "துரை" என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிறுவன் பிரபாகரனின் இந்தக் கேள்வி அங்கிருந்த எல்லோருக்கும் நியாயமானதாகவும், தர்க்கரீதியில் சாதகமானதாகவும் அன்று தெரிந்தது. வீட்டில் தான் விரும்பியதைச் செய்யவும், கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் தனது பெற்றோரிடமிருந்தும், சகோதர சகோதரிகளிடமிருந்தும் எப்போதும் நினைத்ததை அடைந்துகொள்ளும் சிறுவன் பிரபாகரனுக்கு அவரது தாயார் பார்வதியம்மாள் சரியாகவே "துரை" என்று பெயர் வைத்திருந்தார். நான்கு பிள்ளைகளில் இளையவராகப் பிறந்த பிரபாகரன் தகப்பனாரின் செல்லப்பிள்ளையாக இருந்ததுடன், சிறுவனாக இருந்த காலத்தில் தகப்பனாருடன் தூங்குவதை வழக்கமாகவும் கொண்டிருந்தார். பிரபாகரன் யாழ் வைத்தியசாலையில் 1954 ஆம் ஆண்டு, கார்த்திகை 26 இல் பிறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தனது தந்தையாருடன் அவரது நண்பர்கள் மாலை வேளைகளில் தனது வீட்டில் நடத்தும் சந்திப்புக்களில் பிரபாகரனும் தவறாது சமூகமளிப்பார். 50 களின் இறுதிப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்று வந்த தமிழருக்கெதிரான பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. தனிச்சிங்களச் சட்டம், காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம், சத்தியாக் கிரகப் போராட்டக்காரர்கள் மீதான சிங்களக் காடையர்களின் மூர்க்கமான தாக்குதல்கள், கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கும் பரவிய தமிழர் மீதான வன்முறைகள், கல்லோயாக் குடியேற்றவாசிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள், பண்டா செல்வா ஒப்பந்தமும் அதன் தோல்வியும், 1958 இல் அரசால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தமிழர் மீதான தாக்குதல்கள், இறுதியாக பாணந்துரை பிள்ளையார் கோயில் பூசகரின் கொடுமையான கொலை என்று பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. சிறுவனாக தலைவர் பிரபாகரன் அந்த நிலையில் இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பாரிய பிளவொன்று தோன்றியிருந்ததுடன், ஒருமித்த இலங்கை எனும் கோட்பாட்டையும் அது பலவீனப்படுத்திவிடும் என்கிற நிலைமையினையும் தோற்றுவித்திருந்தது. தமிழரின் பூர்வீக தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை ஊடறுத்து அரசால் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்கள் இரு இன மக்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. மேலும் ஏறத்தாள பத்து லட்சம் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையினைப் பறித்த நிகழ்வு சிங்களவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதனையும் தமிழர்களுக்கு மிகவும் தெளிவாகவே உணர்த்தியிருந்தது. தமிழ் மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து கொடுக்கப்பட மாட்டாது என்கிற சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு ஏற்கனவே கொதிநிலையில் இருந்த தமிழரின் உணர்வுகளை மேலும் அதிகமாக்கி விட்டிருந்தது. இந்த மூன்று காரணங்களையும் முன்வைத்து தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்ட தமிழருக்கான தனி அதிகாரம் மிக்க நாட்டினை இலங்கைக்குள் உருவாக்குவதெனும் கருத்தினை தமிழ் மக்களிடையே உறுதிப்படுத்தியதுடன், 1948 இல் முதன்முறையாக செல்வாவினால் முன்மொழியப்பட்ட இக்கருதுகோள் 1956 தேர்தல்களில் தமிழ் மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் பட்டது. அன்றிலிருந்து ஆனி 1956 முதல் வைகாசி 1958 வரையான காலப்பகுதிவரை தமிழர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களால், தமிழரின் பாதுகாப்பு எனும் நான்காவது காரணமும் தமிழ் - சிங்கள பகையுணர்விற்கான காரணங்களுடன் சேர்க்கப்பட்டது. ஆனி 5, 1956 இல், இரு அரச பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் சென்ற சிங்களக் காடையர்கள் அன்றைய பாராளுமன்ற முன்றலில், காலிமுகத்திடலில் அமைதிவழியில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட சுமார் 250 தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலினை மேற்கொண்டதுடன், தமிழர்களை மிகவும் கேலவலமாக நடாத்தி அவமானப்படுத்தியது. இத்தாக்குதலினை சுற்றியிருந்து பார்த்து ரசித்த ஏனைய சிங்களவர்கள் தமிழர்கள் மீது கற்களை எறிந்து எள்ளி நகையாடியதுடன், கிழக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்த தமிழர்கள் தமது ரயிலுக்காக புகையிரத நிலையத்தை நோக்கி ஓடுவரை வீதிகள் தோறும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார்கள். காலிமுகத்திடலில் தமிழர்கள தாக்கப்படுவதை ரசித்த அரசு, மறுநாள் கொழும்பின் பல பகுதிகளிலும் தமிழர்கள் மீது தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியது. இதன் ஒரு கட்டமாக, கல்லோயா குடியேற்றம் என்று சிங்களவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழரின் பூர்வீக நிலமான பட்டிப்பளையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீதும் அரசு தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் சிக்குண்டவர்கள் போக ஏனையவர்கள் இரவோடு இரவாக அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலிருந்து தமிழர்கள் வன்முறைகள் மூலம் விரட்டியடிக்கப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் ஆரம்பப்புள்ளியே பட்டிப்பளையிலிருந்தே ஆரம்பமாகியது. பட்டிப்பளை (கல்லோயாக் குடியேற்றத் திட்டம்)
  4. நான் இத்தொடரில் பின்னாட்களில் எழுதிய பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது. அவற்றைச் சேமித்து வைக்கத்தவறியமைக்காக வருந்துகிறேன். நேர விரயம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.