Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87993
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8910
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/07/23 in all areas

  1. பொலீஸ் படுகொலைகள் செல்லையா குமாரசூரியரின் ஆலோசனைப்படி நடந்த சிறிமாவின் அரசாங்கம் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கிய நாளிலிருந்தே அதனைத் தடுப்பதற்கான வேலைகளில் இறங்கியிருந்தது. தமிழ் அறிஞர்களாலும், ஆர்வலர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற சர்வதேச நிகழ்வான தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை சிறிமாவின் அரசின் அனுசரணையுடன், தானே நடத்தவேண்டும் என்று விரும்பிய குமாரசூரியர், இதன்மூலம் தமிழர்களின் நலன்களைக் கவனிக்கும் நல்ல அமைச்சர் எனும் நற்பெயரினை சிறிமாவிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். மலேசியாவிலும், தமிழ்நாட்டிலும் நடைபெற்றதைப்போல, இலங்கையில் நடந்த மாநாட்டை நாட்டின் தலைவரான சிறிமாவே ஆரம்பித்துவைக்கவேண்டும் என்று குமாரசூரியர் பிடிவாதமாக நின்றார். முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்தேறியபோது அந்நாட்டின் பிரதமர் டுங்கு அப்துள் ரெகுமானே அம்மாநாட்டினை ஆரம்பித்து வைத்தார். அவ்வாறே 1968 ஆம் ஆண்டு தை 2 ஆம் திகதி தமிழ்நாட்டில் இடம்பெற்ற இரண்டாவது மாநாட்டினை இந்தியாவின் அரசுத்தலைவராக இருந்த சாக்கிர் ஹுஸ்ஸயின் ஆரம்பித்து வைத்திருந்தார். மூன்றாவது மாநாடு பரீஸில் இடம்பெற்றபோது யுனெஸ்க்கோ வின் செயலாளர் நாயகம் ஆரம்பித்து வைத்திருந்தார். நான்காவது மாநாட்டினை நடத்துவதற்கு இலங்கை தெரிவுசெய்யப்பட்டிருந்தது. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இலங்கைக் கிளை, 1973 ஆம் ஆண்டு சித்திரை மாதம் கொழும்பில் மாநாட்டினை ஒழுங்குசெய்வதற்கான குழுவொன்றினை அமைப்பதற்காக ஒன்றுகூடியது. இலங்கைக் கிளையின் தலைவரான கலாநிதி தம்பைய்யா இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதற்கு முன்னர் நடந்த மாநாடுகளில் அந்த நாட்டு தலைவர்கள் மாநாட்டினை ஆரம்பித்து வைத்ததுபோன்று இலங்கை மாநாட்டினை சிறிமாவே அரம்பித்துவைக்கவேண்டும் என்று தம்பையா தீர்மானம் ஒன்றினை முன்மொழிய, கொம்மியூனிசக் கட்சியின் பின்புலத்தில் இயங்கி வந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் அதனை ஆமோதித்தனர். ஆனால், அக்கூட்டத்தில் பங்குபற்றிய பெரும்பாலானவர்கள் தமிழரின் கலாசாரத் தலைநகரான யாழ்ப்பாணத்திலேயே இந்த மாநாடு நடைபெறுவதை விரும்பினர். யாழ்ப்பாணதில் நிலவிவந்த அரசுக்கெதிரான மனோநிலையினை நன்கு உணர்ந்திருந்த அமைச்சர் குமாரசூரியரின் ஆதரவாளர்கள், மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்தும் எத்தனிப்புக்கள் தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பின்புலத்திலேயே நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டு அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அன்றைய தினத்திலிருந்து இம்மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதைத் தடுத்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்ட அமைச்சர் செல்லையா குமார்சூரியர் அரச இயந்திரத்தைப் பாவித்து, மாநாட்டினை நடத்தும் குழுவினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எதிராக பல தடைகளைப் போட்டுவந்தார். அவற்றில் ஒன்று மாநாட்டில் பங்குபெறும் பல இந்திய நாட்டவர்களுக்கான இலங்கை வரும் அனுமதியினை இரத்துச் செய்வது. மாநாட்டினை ஒருங்கிணைப்பவர்களின் வேண்டுகோளான வீரசிங்கம் மண்டபத்தினைப் பாவிக்கும் அனுமதி மற்றும் ஒலிபெருக்கிகளைப் பாவிக்கும் அனுமதி ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை விதித்த அமைச்சர், வீரசிங்கம் மண்டபத்தினை மாநாடு ஆரம்பிக்கும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மட்டுமே பாவிக்கமுடியும் என்று கூறியதோடு, ஒலிபெருக்கிகளைப் பாவிப்பதனையும் தடுத்து விட்டிருந்தார். மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு எதிராக அரசு போட்டுவந்த முட்டுக்கட்டைகள், குறிப்பாக அமைச்சர் செல்லையா குமாரசூரியரினால் தொடர்ச்சியாக செய்யப்பட்டுவந்த இடையூறுகள், தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக தமிழ் இளைஞர்கள் கருதினர். அதனால், மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதற்கு திடசங்கற்பம் பூண்ட இளைஞர்கள் ஓரணியாக திரண்டனர். யாழ்நகர் முழுவதும் தமிழ் கலாசார முறைப்படி இளைஞர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு மின்கம்பத்திலும் வாழைமரங்கள் கட்டப்பட்டதோடு, இந்த வாழைமரங்களுக்கிடையே மாவிலைத் தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்து வீதிகளின் ஒவ்வொரு சந்தியிலும் வரவேற்பு பதாதைகள் தொங்கவிடப்பட்டன. யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பல தமிழ் ஆராய்ச்சியாளர்கள் யாழ்நகரில் அன்று காணப்பட்ட விழாக்கோலத்தினைப் பார்த்துப் புலகாங்கிதமடைந்தனர்.திருச்சியைச் சேர்ந்த தமிழ் அறிஞர் நைனா மொஹம்மட் மற்றும் தமிழ் அறிஞர் ஜனார்த்தனனன் போன்றவர்கள் யாழ்ப்பாண நகரம் பூண்டிருந்த விழாக்கோலத்தையும், மக்களின் மனங்களில் நிரம்பிவழிந்த தமிழ் உணர்வையும் கண்டு வியப்புற்று தந்தை செல்வாவின் வீடு அமைந்திருந்த காங்கேசந்துறைக்கு பேசப்போயிருந்தனர். "ஐயா, நாம் இங்கு காணும் மக்கள் உணர்வையும் உற்சாகத்தினையும் தமிழ்நாட்டில்க் கூட காணவில்லை. யாழ்ப்பாணத்து மக்கள் தமிழின்மேல் கொண்டிருக்கும் அன்பும் அவர்களின் உற்சாகமும் எம்மை வியப்பில் ஆழ்த்திவிட்டது" என்று அவரிடம் கூறினர். அதற்குப் பதிலளித்த செல்வா அவர்கள், "யாழ்ப்பாணத்து மக்கள் தமது மொழிபற்றியும், கலாசாரம் பற்றியும் அதீதமான உணர்வுமிக்கவர்கள். தாம் தமிழரென்பதற்காக அச்சுருத்தப்படுவதாலேயே இந்த உணர்ச்சி அவர்களுக்கு வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். தமிழ் ஆராய்ச்சி மாநாடு தை மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்து 9 ஆம் திகதி முடிவடைந்தது. இந்த நிகழ்வு பெரும் தமிழ் அறிஞர்களின் அறிவினைப் பறைசாற்றியதுடன் அவர்களுக்கிடையிலான அறிவுசார் சம்பாஷணைகளையும் கொண்டிருந்தது. வீரசிங்கம் மண்டபத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஆரம்பம் அமைந்தாலும், டிம்மர் மண்டபத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கும், கல்விமான்களுக்குமான மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முடிவுநாளான தை 10 ஆம் திகதி இந்த விழாவில் சாதாரண மக்களும் அனுமதிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இறுதிநாள் நிகழ்விற்கு துரையப்பா அரங்கினை பதிவுசெய்திருந்தார்கள். இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்ளவென பெருந்திரளான மக்கள் மதியத்திலிருந்து துரையப்பா அரங்கினை நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால், அரங்கத்தின் வாயிற்கதவுகள் பூட்டப்பட்டுக் கிடந்தன. வாயிலில் நின்ற காவலர்கள் யாழ் நகர மேயர் அல்பிரெட் துரையப்பாவின் ஆணையின்படியே வாயிற்கதவுகள் பூட்டப்பட்டதாகக் கூறியதுடன், அவரது அனுமதியின்றின் அதனைத் திறக்க முடியாதென்று மறுத்துவிட்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் துரையப்பாவைத் தொடர்புகொள்ள எடுத்துக்கொண்ட் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அன்றிரவு துரையப்பா அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டு ஒளித்துக்கொண்டார். துரையப்பா வேறு வழியின்றி, இறுதிநாள் நிகழ்வினை வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் இருந்த பகுதியில் நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் தீர்மானித்தனர். அவசர அவசரமாக மேடையொன்று எழுப்பப்பட்டு, மக்கள் அனைவரும் மேடையின் முன்னாலிருந்த புற்றரையில் அமருமாறு கேட்கப்பட்டனர். காங்கேசந்துறை வீதியினைத் தவிர்த்து அமர்ந்துகொள்ளுமாறு கூட்டத்தினர் வேண்டப்பட்டனர். ஆனால் நிகழ்விற்கு வருகைதந்த மக்களின் எண்ணிக்கை 10,000 இனைத் தாண்டவே, மக்களின் ஒருபகுதியினர் காங்கேசந்துறை வீதியிலும் நிற்க வேண்டியதாயிற்று. அப்பகுதிக்கு வந்த யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலீஸ் பரிசோதகர் சேனாதிராஜாவை கூட்டத்திற்கருகில் மறித்த தன்னார்வத் தொண்டர்கள், வீதியினைப் பாவிக்கமுடியாதென்றும், மணிக்கூட்டுக் கோபுர வீதியினைப் பாவிக்குமாறும் கோரினார்கள். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வாகனத்தில் போவது, அங்கு பேசிக்கொண்டிருக்கும் வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களுக்கு அவமதிப்பாக இருக்கும், ஆகவே தயவுசெய்து மாற்றுவழியால் செல்லுங்கள் என்று மிகுந்த கெளரவத்துடனேயே இளைஞர்கள் பொலீஸ் பரிசோதகரிடம் கேட்டிருக்கிறார்கள். சேனாதிராஜாவும் தனது வாகனத்தைத் திருப்பிக் கொண்டு மாற்று வழியினால் தனது பொலீஸ் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். சிறிது நேரத்தின் பின்னர் அதேவழியால் வந்த இன்னொரு யாழ்ப்பாண போக்குவரத்துப் பொலீஸாரான சார்ஜென்ட் வோல்ட்டர் பெரேராவிடமும் இளைஞர்கள், சேனாதிராஜாவிடம் கூறியதையே கூறியிருக்கிறார்கள். பொலீஸ் நிலையத்திற்குத் திரும்பிய சார்ஜன்ட் வோல்ட்டர் பெரேரா இதுபற்றி தனது அதிகாரி, பரிசோதகர் நாணயக்காரவிடம் முறையிட்டிருக்கிறார். இந்தவிடயத்தை நாணயக்கார யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சந்திரசேகரவிடம் முறையிட்டிருக்கிறார். அப்போது நேரம் இரவு 8:30 ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் முற்றான ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீஸாருடன் வீரசிங்கம் மண்டபத்திற்கு பொலீஸ் பாரவூர்தியில் வந்திறங்கினார் சந்திரசேகர. அப்போது திருச்சியிலிருந்து வருகைதந்திருந்த தமிழறிஞர் கலாநிதி நைனா மொகம்மட் பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சின் சொல்லாண்மையினையும், பிழையின்றிப் பொழிந்துகொண்டிருந்த தமிழையும் கேட்டுப் பார்வையாளர்கள் மெய்மறந்து நின்றிருந்தனர். எங்கும் நிசப்தமான அமைதி. எல்லாமே மிகவும் நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திடீரென்று ஒலிபெருக்கியூடாகக் கடுந்தொணியில் பேச ஆரம்பித்த சந்திரசேகர, மக்கள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு அறிவித்தார். பின்னர், தன்னோடு வந்திருந்த ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலீசாரை தாக்குதல் நிலைகளை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். பாரவூர்தியை மக்களை நோக்கி ஓட்டுமாறு கூறிய சந்திரசேகர, கலகம் அடக்கும் பொலீஸாரை பாரவூர்தியின் பின்னால் அணிவகுத்து நகருமாறு பணித்தார். அங்கே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த தன்னார்வத் தொண்டர்கள், மாநாட்டினைக் குழப்பவேண்டாம் என்று பொலீஸாரைப் பார்த்து மன்றாடத் தொடங்கினர். அவர்கள் மேல் தமது பாரமான சப்பாத்துக் கால்களால் உதைந்துகொண்டு பொலீஸார் முன்னேறினர். வைத்தியநாதன் மக்கள் கூட்டமாகக் குழுமியிருந்த பகுதிகளை நோக்கி பொலீஸார் கடுமையான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசத் தொடங்கினர். அவற்றில் ஒன்று மேடைக்கு மிக அருகில் விழ, அருகில் இருந்த மாநாட்டு தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் மூச்சுத்திணறி கீழே விழுந்தார். மேடையில் வீற்றிருந்த சர்வதேச தமிழ்ப் பேச்சாளர்கள் கண்ணீர்ப்புகைக்குண்டுத் தாக்குதலினால் காயப்பட்டு, பார்வையின்றித் தடுமாறத் தொடங்கினர். பின்னர் தாம் கொண்டுவந்த துப்பாக்கிகளை எடுத்து வானை நோக்கிச் சுடத் தொடங்கினர் பொலீஸார். துப்பாக்கிச் சூடுபட்டு மின்கம்பிகள் அறுந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மேல் வீழ்ந்தது. ஏழு மக்கள் மின்னழுத்தத்தால் அவ்விடத்திலேயே பலியானார்கள். காயப்பட்ட பலரில் இருவர் பின்னர் மரணமானார்கள். நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிகவும் குழப்பகரமான நிலையில் முடிவிற்கு வந்ததுடன், இன்றுவரை தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவையும் ஏற்படுத்தி விட்டது, இந்த அக்கிரமத்தை மன்னிக்கமுடியாமலும் ஆக்கிவிட்டது. இந்தக் கொலைகளுக்குப் பின்னர் அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தினையும் மன்னிக்கத் தமிழ் மக்கள் தயாராக இருக்கவில்லை. பொலீஸாரின் கண்மூடித்தனமான நடவடிக்கையினை தவறென்று ஏற்றுக்கொள்ள பிரதமர் சிறிமா மறுத்துவிட்டார். பொலீஸாரின் அடாவடித்தனத்தை நியாயப்படுத்திய பிரதமர், மாநாட்டினர் பொலீஸார்மீது தாக்குதல் நடத்தியதாலேயே தாம் திருப்பித் தாக்கவேண்டி ஏற்பட்டதாக அவர் கூறினார். அப்பாவி மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி சந்திரசேகரவுக்கும், அவரோடு அன்றிரவு மக்கள் மேல் தாக்குதல் நடத்திய பொலீஸாருக்கும் சிறிமாவினால் பதவியுயர்வு வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஆனால், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்ததையடுத்து நீதித்துறையினரூடாக விசாரணை ஒன்றை நடத்த யாழ் நீதிபதி பாலகிட்ணர் அமர்த்தப்பட்டார். ஆனால், பாலகிட்ணர் பிரேரித்த விடயங்களை அமுல்ப்படுத்த சிறிமா அரசு மறுத்துவிட்டது. நீதித்துறை மீதும், பொலீஸார் மீதும் வைத்திருந்த நம்பிக்கையினை தமிழ்மக்கள் முற்றாக இழந்தனர். அரச சாரா மக்கள் அமைப்பான யாழ்ப்பாணம் பிரஜைகள் குழு பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டது. இந்த விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஒ. எல். டி கிரெஸ்ட்டர், வி. மாணிக்கவாசகர் மற்றும் ஓய்வுபெற்ற கத்தோலிக்க ஆயர் வணக்கத்திற்குரிய சபாபதி குலேந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பங்குனி 1974 இல் வெளிவந்த அவர்களது அறிக்கையில் பொலிசாரைக் குற்றவாளிகளாக அவர்கள் அடையாளம் கண்டிருந்தனர். பொன் சிவகுமாரனின் உடைக்கப்பட்ட உருவச் சிலை
  2. ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟
  3. வணக்கம் வாத்தியார்........! பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே பெண் : மச்சான் எப்போ வர போற பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன் தினம் சொப்பனத்தில் மட்டும் தான் உன்ன நான் சந்தித்தேன் மச்சான் எப்போ வர போற பத்தமடை பாயில் வந்து சொக்கி விழ போற பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம் வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம் சோலி தேடி போன காணாத தூரம் கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம் காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும் ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும் குழு : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா முத்தம் தர போற போற போற மச்சான் எப்போ போக போற பெண் : தூரமா போனது துக்கமா மாறும் பக்கமா வாழ்வதே போதும்னு தோணும் ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும் கோழி கூவும் போதும் தூங்காம வேகும் பெண் : அங்கு நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கையோ போதும் போதும் சொல்லாமல் வந்து சேரும் பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே துணி காயுதே பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும் சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும் சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற......! --- ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே---
  4. என்னைப்போல செய்ய சொல்ல உங்களைப்போலவே செய்து இருக்கீங்களே....😊
  5. வணக்கம் வாத்தியார்........! வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.........! ---வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்---
  6. செத்தாண்டா... சேகரு. 🤣 😂
  7. தலைமறைவு வாழ்க்கை தங்கத்துரை, குட்டிமணி, பெரிய சோதி உட்பட சில உறுப்பினர்கள் பொலீஸாரிடமிருந்து ஒளிந்துகொள்ள பிரபாகரன் தொடர்ந்தும் தனது பெற்றோருடனேயே தங்கியிருந்தார். பங்குனி நடுப்பகுதியில், ஒரு நாள் அதிகாலை 3 மணிக்குப் பொலீஸார் பிரபாகரனின் பெற்றோரின் கதவினைத் தட்டும்போது அவர்கள் தேடிவந்திருப்பது தன்னையே என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன் வீட்டின் பின்வழியால் இருளினுள் மறைந்து தலைமறைவானார். வீட்டின் முன் கதவைத் திறந்த பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாள் கதவின் முன்னால் பொலீஸார் நிற்பதைக் கண்டதும் அதிர்ந்துபோனார். பிரபாகரனின் தாயிடமும், அவரின் பின்னால் ஒளிந்துநின்ற பிரபாகரனின் இரு சகோதரிகளிடமும் பேசிய பொலீஸார் தாம் பிரபாகரனைக் கைதுசெய்யவே வந்திருப்பதாகக் கூறினார்கள். அவர்களின் விக்கித்துப் போய் நிற்க, பொலீஸார் வீட்டின் எல்லாப்பகுதிகளையும் துரித கதியில் தேட ஆரம்பித்தார்கள். ஆனால், பிரபாகரனை அவர்களால் கைதுசெய்ய முடியவில்லை. அங்கு வந்திருந்த பொலீஸ் பரிசோதகர், "தீவிரவாதியான உங்களின் தம்பி தப்பிவிட்டான், ஆனால் அவனை நான் நிச்சயம் விரைவில் கைதுசெய்வேன்" என்று அவரது சகோதரிகளைப் பார்த்து கூறிவிட்டுச் சென்றார். ஆனால், சிங்களப் பொலீஸாரினால் பிரபாகரனை ஒருபோதுமே கைதுசெய்ய முடியவில்லை. அவர்களைவிட அவர் எப்போதுமே இரு படிகள் முன்னிலையிலேயே இருந்துவந்தார். அவர்களின் நண்பர்கள் கூறும்போது, பொலீஸார் அவரைத் தேட ஆரம்பித்ததன் பின்னர் அவர் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினர். பின்னாட்களில் ராமுக்குப் பேட்டியளித்த பிரபாகரனும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். "1973 ஆம் ஆண்டு நான் தலைமறைவு வாழ்க்கையினை ஆரம்பித்துவிட்டேன். தலைமறைவு வாழ்க்கையினை வாழ்வதென்பது மிகவும் சிக்கலானதொரு விடயம். ஆனால் நெடுங்காலமாக இதனைச் செய்யவேண்டியிருந்தது. நம் எல்லோருக்குமே அது ஒரு கடிணமான காலமாக இருந்தது. எம்மைச் சுற்றி ராணுவம் எப்போதுமே அக்கிரமங்களில் ஈடுபட்டுவந்த அக்காலத்தில் அவர்களின் வலையிலிருந்து தப்பி வருவது கடிணமானதாகவே இருந்தது". தங்கத்துரை குட்டிமணியுடன் இணைந்து பிரபாகரனும் தலைமறைவு வாழ்க்கைக்குள்ச் சென்றார். தனது மகன் இருக்கும் இடத்தை ஒருவாறு அறிந்துகொண்ட வேலுப்பிள்ளை அவரை வீடுதிரும்புமாறு மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டபோதும் அவர் வர மறுத்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். அவர் தனது தந்தையிடன் பின்வருமாறு கூறினார், "என்னால் உங்களுக்கோ அல்லது வீட்டில் எவருக்குமோ இனிமேல் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. நான் வீடுதிரும்பினால் உங்களுக்கும், வீட்டிலுள்ள அனைவருக்கும் பிரச்சினைகள் உருவாகும். என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வேண்டாம். என்னை எனது பாதையிலேயே போக விடுங்கள். எதிர்காலத்தில் என்னிடமிருந்து எதனையும் நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம்" என்று கூறினார். ஆனால், பொலீஸார் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. அவரைச் சுற்றி வலை இறுகத் தொடங்கியபோது அவர் குட்டிமணி, தங்கத்துரை, பெரியசோதி ஆகியோருடன் குட்டிமணியின் படகில் ஏறி தமிழ்நாட்டிற்குச் சென்றார். இலங்கைத் தமிழர்கள் அதிகம் பாவிக்கும் தமிழ்நாட்டின் வேதாரணியம் பகுதியில் அவர்கள் தரையிறங்கினார்கள். அங்கு சிலகாலம் தங்கியிருந்துவிட்டு பின்னர் சென்னைக்குச் சென்று தமக்கான அமைவிடம் ஒன்றினை உருவாக்கி தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள அவர் நினைத்தார். குட்டிமணியும் தங்கத்துரையும் சேலத்திற்குச் சென்றுவிட்டனர். பிரபாகரனும் பெரியசோதியும் தாம் தங்கியிருந்த பகுதியில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பெரும்பாலும் தயிர்ச் சாதமும், கோயில் பிரசாதமுமே அவர்களின் உணவாக இருந்தது. பலநாட்கள் வெறும்வயிற்றுடனேயே அவர்கள் உறங்கியிருக்கிறார்கள். சென்னையில் ஜனார்த்தனின் உதவியுடன் சிறிய வீடொன்றினை கோடாம்பாக்கம் பகுதியில் அவர்கள் வாடகைக்கு அமர்த்திக்கொண்டனர். பிராபகரனைக் கண்டவுடனேயே ஜனார்த்தனுக்குப் பிடித்துப்போயிற்று. அதற்கான காரணத்தை அவரே பின்னர் விளக்கியிருந்தார், "அவர் மிகவும் இளையவராகவும், கூச்சசுபாவமுள்ளவராகமும் தெரிந்தார். உங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்களைக் கொண்டிருந்தார். புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமும், செயலில் இறங்கவேண்டும் என்கிற வேகமும் அவரிடம் இருந்தது. அவர் என்னிடம் கேட்ட பல கேள்விகளைக் கண்டு நான் வியந்துபோனேன். தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றி மிக ஆளமாக அவர் புரிந்துவைத்திருந்தார். அவரை பலமுறை இரவு உணவுகளுக்காக அழைத்துச் செல்வேன். அவருடன் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமான விடயமாக இருந்தது. அவருக்கும் சுவையான உணவுகளை உண்பது பிடித்துப் போயிருந்தது". பிரபாகரனிடம் பணம் பெரிதாக இருக்கவில்லை. இருந்தவற்றையும் மிகவும் சிக்கனமாகவே அவர் பயன்படுத்தி வந்தார். பெரியசோதியே அவர்களுக்கான உணவினைத் தயாரிப்பார். பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு மரக்கறிகளுடன் அவர்கள் சோற்றினை உட்கொண்டார்கள். அசைவ உணவுகளை விரும்பும் பிரபாகரன் சனிக்கிழமைகளில் கோழிக் கறியினை அவரே சமைப்பார். எப்போதும் செயலில் இறங்கவேண்டும் என்று விரும்பும் பிரபாகரனுக்கு தமிழ்நாட்டில் அவர் வாழ்ந்த செயலற்ற வாழ்வு களைப்பினைக் கொடுத்தது. அதனால் செயல்ப்பாடு மிக்க யாழ்ப்பாணத்திற்கே மீண்டும் திரும்பவேண்டும் என்று அவர் நினைத்தார். 1974 ஆம் ஆண்டு, தனது தோழரான செட்டி அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பிவந்து சென்னையின் மைலாபூரில் தங்கியிருப்பதனை அறிந்தபோது அவரைச் சென்று சந்தித்தார் பிரபாகரன். 1973 ஆம் ஆண்டு செட்டியும், அவருடன் கண்ணாடி, அப்பையா மற்றும் சிவராஜா ஆகிய நால்வரும் அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பி வந்திருந்தார்கள். பிரபாகரனும் செட்டியும் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்ப நினைத்தபோது பெரியசோதி அதனை விரும்பவில்லை. செட்டியுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என்று அவர் பிரபாகரனை எச்சரித்தார். தனது மைத்துனரான பிரபாகரனிடம் பேசிய பெரியசோதி, செட்டி நம்பத்தகுந்தவர் இல்லையென்றும், ஒரு குற்றவாளியைப்போல இப்போது செயற்பட்டுவருவதாகவும் கூறினார். ஆனால், பிரபாகரன் பெரியசோதி கூறியதைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. செட்டி ஒரு செயல்வீரன் என்று பெரியசோதியைப் பார்த்துக் கூறினார் பிரபாகரன், "நீங்கள் உங்கள் வாழ்க்கையினை சமைப்பதிலும், உண்பதிலும் உறங்குவதிலும் செலவழிக்கிறீர்கள். உங்களைப்போன்று எனது வாழ்க்கையினையும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனக்குச் செயற்பாடுகளே முக்கியம். நான் இளமையாக இருக்கும்போதே எனால் செய்யமுடிந்தவற்றைச் செய்ய நான் விரும்புகிறேன். செட்டியும் என்னைப்பொலவே செயற்பாடுகளை விரும்புகிறவன்" என்று கூறினார். செட்டியுடன் மீள ஒன்றிணைய பிரபாகரன் எடுத்த முடிவு பெரியசோதிக்கு கவலையளித்தது. அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பும் நடவடிக்கையினை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று அவர் முயன்றார். குட்டிமணியுடனும் தங்கத்துரையுடனும் பேசி பிரபாகரன் யாழ் திரும்புவதைத் தடுத்துவிட அவர் முயற்சித்தார். பின்னர் ஜனார்த்தனன் மூலம் பிரபாகரனுடன் பேசி அவர் நாடு திரும்புவதைத் தடுக்க முனைந்தார். பிரபாகரனுடனான தனது சம்பாஷணை குறித்துப் பின்னாட்களில் பேசிய ஜனார்த்தனன், பிரபாகரன் கேட்ட கேள்விக்கு தன்னிடம் பதில் இருக்கவில்லை என்று கூறினார், "செட்டியின் சமூகவிரோத செயற்பட்டுகள் குறித்து நான் அறிவேன். அவனுடன் சேர்வதால் எனது அடையாளத்தை நான் ஒருபோதும் இழந்துவிடப்போவதில்லை" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாக ஜனார்த்தனன் கூறினார். வயதில் மிகவும் இளையவரான பிரபாகரன் தமது அறிவுரைகளை மீறி யாழ்ப்பாணம் செல்ல எத்தனிப்பதையும், தமது வட்டத்திற்குள் இல்லாத, யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டியுடன் தோழமை பூணுவதையும் குட்டிமணியோ தங்கத்துரையோ விரும்பவில்லை. ஆனால், பிரபாகரனின் உணர்வுகளையும், செயலில் அவருக்கிருந்த நம்பிக்கையினையும் த் தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறினார் ஜனார்த்தனன். 1974 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியபோது, யாழ்ப்பாண மக்கள் சிறிமாவின் செயற்பாடுகளினால் கடுமையான அதிருப்தியடைந்திருந்தனர். தமது சுயகெளரவத்தினைக் காத்திட வேண்டுமென்றால், தனியான நாட்டினை உருவாக்குவதைத்தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் நினக்கத் தொடங்கியிருந்தனர். இதற்கு தபால் அமைச்சராக இருந்த குமாரசூரியரின் அடாவடித்தனமும், கொழும்பிலிருந்த ரஸ்ஸியத் தூதரகத்தால் ஆட்டுவிக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எனும் அமைப்பினரின் எழுத்துக்களும் சிறிமாவின் இனவாதச் செயற்பாடுகளும் அன்று காரணமாக இருந்தன. 1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களின் அதிருப்தியினைத் தணியவைக்க சிறிமா இருமுறை முயன்றார். தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே இதனை அவர் செய்தார். இலங்கையின் பிரதான செய்திநிறுவனமான லேக் ஹவுஸ் பத்திரிக்கை ஸ்த்தாபனத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையில் பாரிய சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருந்தது. தமிழர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களில் ஒருவரான தொண்டைமான் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார். இதனால் கவலையடைந்த அரசாங்கத்திற்கு, தமிழர் ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி நோக்கிச் சாய்வதைத் தடுக்கும் செயற்பாடுகள் எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வழிக்குக் கொண்டுவரப்பட்ட தலைவர்கள். 1973 ஆம் ஆண்டு பங்குனி 23 ஆம் திகதி நீதிமன்ற மொழிகள் சட்டத்தினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் தமிழ் மொழி வடக்குக் கிழக்கில் அமைந்திருந்த நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக பாவிக்கக் கூடிய நிலை உருவாகியது. தமிழர்கள் இச்சட்டத்தினை அரசியல் யாப்பில் சேர்ர்குமாறு கூறியபோதும், அரசு அதனை விடாப்பிடியாக மறுத்து நிராகரித்துவிட்டது. 1973 ஆம் ஆண்டு, வைகாசி 17 அன்று, தமிழ் இளைஞர் பேரவை அமைப்பினர் யாழ்ப்பாணம் சமஷ்ட்டிக் கட்சியின் பிரதான அலுவலகத்தின் முன்னால் அமர்ந்து, தமிழர் ஐக்கிய முன்னணி உடனடியாக தனிநாட்டிற்கான போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை, தமிழர் ஐக்கிய முன்னணியின் செயற்குழு கூட்டம் ஒன்றினை நடத்தியது. கூட்டத்தில் பேசிய ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணியின் தலைவர் சுந்தரலிங்கம் தனிநாடான தமிழ் ஈழத்தை உருவாக்கும் முதன்மை நடவடிக்கைகளை தமிழர் ஐக்கிய முன்னணி முன்னெடுக்கவேண்டும் என்னும் வேண்டுகோளினை முன்வைத்தார். அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒரு சபையினை உருவாக்கி, தனிநாட்டிற்கான அரசியல் யாப்பினை வரையவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தனிநாட்டிற்கான அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு மறுத்துவிட்ட சமஷ்ட்டிக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும், எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு ஒரு அலோசனைச் சபையினை உருவாக்கலாம் என்று கூறிவிட்டன. ஆனால், "தமிழரின் பாரம்பரிய தாயகத்தில், தம்மைத் தாமே ஆழும் ஈழத்தமிழ் தேசம்" ஒன்றினை உருவாக்க தமிழர் ஐக்கிய முன்னணியின் செயற்குழு அரசியல் அமைப்புச் சபை ஒன்றினை உருவாக்கத் தவறியமைக்காக இளைஞர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர். சுய ஆட்சி என்பது சமஷ்ட்டி முறையிலான ஆட்சியே என்று அவர்கள் வாதாடினர். தமது பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாப்பதும், அதனால் வரும் அதிகாரத்தையும், சலுகைகளையும் அனுபவிப்பதுமே அவர்களின் உண்மையான நோக்கம் என்று குற்றஞ்சாட்டியதோடு, இதனாலேயே தமிழ் மக்களின் விருப்பங்களையும், அவர்களது உணர்வுகளையும் இத்தலைவர்கள் பார்க்க மறுத்துவருவதாகவும் கூறினர்.
  8. புதிய தமிழ்ப் புலிகளின் உதயம் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு தலைவனாக வரிந்துகொண்டு பிரபாகரன் களமிறங்கியபோது அவருக்கு வயது 17 மட்டுமே ஆகியிருந்தது. இவ்வயதிலேயே தனது முதலாவது வெடிகுண்டுத் தாக்குதலை ராணுவ காவல்த்துறை களியாட்ட நிகழ்வின்போது துரையப்பா விளையாட்டரங்கில் அவர் நிகழ்த்தினார். தன்னுடன் நின்று தனது இலட்சியத்தில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய வெகுசிலரான செட்டி, சிவராஜா, ரமேஷ், கண்ணாடி, சரவணன், கலபதி மற்றும் கிருபாகரன் ஆகிய இளைஞர்களோடு தனது பயணத்தை அவர் ஆரம்பித்தார். தனது இயக்கத்திற்கு புதிய தமிழ்ப் புலிகள் என்று அவர் பெயர் சூட்டினார். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ்ப் பழமைவாதிகளுக்கும் எதிர்வினையாற்றவே தனது அமைப்பை அவர் உருவாக்கினார். குட்டிமணியும் தங்கத்துரையும் தனக்கு 15 வயது ஆகியிருந்த வேளையிலேயே அவர் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினருடன் சேர்ந்தார். தனது உறுதியாலும், விடாமுயற்சியினாலும், உத்வேகத்தாலும், இலட்சியம் மீதான தீராத பற்றினாலும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாலும் அமைப்பினுள் படிப்படியாக உயர்ந்து தலைமை ஏற்கும் நிலைக்கு வந்தார் பிரபாகரன். துரையாப்பா விளையாட்டரங்கு மீதான பிரபாகரனின் பெற்றொல்க் குண்டுத் தாக்குதலில் செட்டி, பெரிய சோதி, கண்ணாடி ஆகியோரும் அவருடன் இருந்தனர். புதிய தமிழ்ப் புலிகளின் உத்தியோகபூர்வ தொடக்கநாள் எதுவென்று சரியாகத் தெரியாவிட்டாலும்கூட, அவ்வமைப்பு போராட்டக் குணம்கொண்ட இளைஞர்கள் அமைப்பாக பரிணாம வளர்ச்சிபெற்றபோது அமைக்கப்பட்டதாக துரையப்பா அரங்குமீதான தாக்குதலில் ஈடுபட்ட சிலரின்மூலம் நான் அறிந்துகொண்டேன். எது எவ்வாறிருப்பினும், துரையப்பா அரங்குமீதான தாக்குதலே புதிய தமிழ்ப் புலிகளின் முதலவாது தாக்குதல் என்று பதிவாகியிருக்கிறது. சிலர், அல்பிரட் துரையப்பா மீது 1975 ஆம் ஆண்டு, ஆடி 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே அவ்வமைப்பின் முதலவாது தாக்குதல் என்று கூறுகிறார்கள். 1978 ஆம் ஆண்டு, சித்திரை 25 ஆம் திகது தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழு வெளியிட்ட அறிக்கையினை அடிப்படையாக வைத்தே துரையப்பா மீதான தாக்குதல் புலிகளின் முதலாவது வன்முறைச் சம்பவம் என்று இவர்கள் கூறுகிறார்கள். உமா மகேஸ்வரனால் எழுதப்பட்ட இந்த மத்திய குழுவினரின் கடிதத்தில் துரையப்பாவைக் கொன்றதே முக்கிய சம்பவமாக கருதப்பட்டதால், இதனையே முதலாவது வன்முறைச் சம்பவமாகக் கருதுவோரும் இருக்கிறார்கள். இக்கடிதம் தொடர்பான இன்னொரு சுவாரசியமான கதையும் இருக்கிறது, அதனை பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். துரையப்பா அரங்குமீதான தாக்குதலின் பின்னர் தமிழ் மாணவர் அமைப்பு மீதான பொலீஸாரின் தீவிர கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், இத்தாக்குதலின் பின்னால் இருந்தது பிரபாகரன் தான் என்று பொலீஸார் அறிந்துகொள்வதற்குப் பல மாதங்கள் ஆகின. ஏனென்றால், புதிய தமிழ்ப் புலிகளின் உருவாக்கத்தில் பிரபாகரன் ஈடுபட்டிருந்ததனால், அவ்வமைப்புப் பற்றி பொலீஸார் மட்டுமல்லாமல், தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர்களே அதிகம் அறியாமலேயே இருந்துவிட்டனர். தனது அமைப்பின் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பிரபாகரன் ரகசியம் பேணிவந்ததே இதற்குக் காரணமாகும். பிரபாகரனின் அமைப்புப்பற்றி அதிகம் அறிந்திராமையினாலேயே பொலீஸார் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினரே துரையப்பா அரங்கு மீதான தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அவர்களைத் தேடி வந்தனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பினை உருவாக்குவதில் பிரபாகரனும் அவரது தோழர்களும் பெருமளவு நேரத்தைச் செலவிட்டனர். சுபாஸ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர் மற்றும் தனது தகப்பனார் ஆகியோரின் மூலம் தான் கற்றுக்கொண்ட முன்மாதிரியான ஒழுக்கங்கங்களை தனது அமைப்பினுள்ளும் ஏற்படுத்தினார் பிரபாகரன். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களை முற்றாகத் தடைசெய்திருந்த பிரபாகரன், உறுப்பினர்கள் அனைவரும் இலட்சியமான தமிழ் மக்களின் விடிவிற்காக தமது வாழ்வையே அர்ப்பணிக்கவேண்டும் என்ற இயக்க விதியினை ஏற்படுத்தினார். தென்னிந்தியாவின் மிகப்பெரும் அரசர்களாக விளங்கிய சோழர்களின் இலட்சினையான புலியையே தமது இலட்சினையாகவும் அவர்கள் வரிந்துகொண்டார்கள். புலியின் சிரத்தையே தனது இயக்கத்தின் கொடியாகவும் பிரபாகரன் தெரிவுசெய்தார். அந்தக் காலத்தில் தனது பெற்றோருடன் வல்வெட்டித்துறையிலேயே பிரபாகரன் வாழ்ந்து வந்தார். இடைக்கிடையே வீட்டிலிருந்து காணாமல்ப் போன பிரபாகரன் அந்த நேரத்திலேயே தனது ரகசிய அமைப்பினை உருவாகி வந்தார். அவரது செயற்பாடுகள் குறித்து அவரது பெற்றோர் எதனையும் அறிந்திருக்கவில்லை. தமிழ் இளைஞர் பேர்வையினரைத் தேடி பொலீஸார் வலைவிரித்து பிரபாகரனின் பெற்றோரின் வீட்டுக் கதவினையும் பங்குனி மாதம் 1973 ஆம் ஆண்டு தட்டியபோதே அவர்களுக்கு தமது மகனும் புரட்சிகரச் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது. தேசிய பாராளுமன்றத்தின் பங்குபற்றுவது என்று தமிழர் ஐக்கிய முன்னணியினர் எடுத்த முடிவு, இளைஞர்களுடன் நேரடியான பிணக்கிற்கு இட்டுச் சென்றது. தமிழ் மாணவர் அமைப்பினரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், "உங்களின் முடிவின் பின்னாலுள்ள நியாத்தன்மையினை விளக்குங்கள் பார்க்கலாம். புதிய அரசியலமைப்பு என்பது தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனம் என்று எங்களிடம் கூறிவிட்டு, இன்று உங்களின் உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் அதே அரசியல் யாப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள். எங்களை அடிமைகளாக்குவதற்காக உருவாக்கப்பட்ட யாப்பிற்கு நீங்களே அனுசரணை வழங்குகிறீர்கள். தமிழர்களை சிங்களவருக்கு அடிமைகளாக்கும் கைங்கரியத்திற்கு உங்களின் கட்சியும் துணைபோகின்றதல்லவா?" என்று தமிழ்த் தலைவர்களைக் கேள்விகேட்டிருநெதது. ஆனால், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் இளைஞர்களின் கேள்விகளுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட ஒற்றைப்பதில், "பாராளுமன்றத்தில் அமர்வதன்மூலம் அரசியல் யாப்பிற்கெதிராகப் பேசமுடியும், அதன்மூலம் தமிழர் நலன்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பதனைப் பார்க்கலாம்" என்பதாகவே இருந்தது. ஆனால், இப்பதிலை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று இளைஞர்கள் நிராகரித்தபோது, அதற்குப் பதிலளித்த தலைவர்கள், "எங்கள் அரசியல் நுட்பங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு அனுபவம் போதாது" என்று கூறினர். ஆனால், அரசினால் வழங்கப்படும் சுகபோகங்களுக்கும் சலுகைகளுக்கும் மட்டுமே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கிறார்கள் என்பதே இளைஞர்களின் வாதமாக இருந்தது. இளைஞர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், அரச பிரச்சாரத்தினை எதிர்கொள்ளவும் ஒரு சத்தியாக்கிரக நடவடிக்கையினைத் திட்டமிட்டார் தந்தை செல்வா. மகாத்மா காந்தியின் பிறந்த தினமான புரட்டாதி 2 ஆம் திகதியன்று இழக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க சத்தியாக்கிரக போராட்டமொன்றினை அவர் ஏற்பாடு செய்தார். தமிழ் இளைஞர்களின் கொதிநிலையினை ஆற்றுவதற்கு யாழ்ப்பாணத்து அரச இலட்சினையான நந்திக்கொடியினை சத்தியாக்கிரகத்தில் ஏற்றிய தமிழர் ஐக்கிய முன்னனியினர், புதிய தமிழ்த் தேசத்தின் உதயத்தினை உதயசூரிய கொடியினை ஏற்றுவதன்மூலம் குறியீடாகக் காட்ட முயன்றனர். இந்தச் சத்தியாக்கிரக நிகழ்வில் அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். மேலும், இதே சத்தியாக்கிரக நிகழ்வில் பேசிய தந்தை செல்வா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யப்போவதாகவும், அதற்கான காரணத்தை மறுநாள் பாராளுமன்றத்திலேயே தான் அறிவிக்கப்போவதாகவும் கூறினார். தனது ராஜினாமாவின் மூலம் தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உலகிற்குக் காட்ட முடியும் என்று தான் கருதுவதாகவும் கூறினார். மறுநாள், ஐப்பசி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தனது பதவியை ராஜினாமாச் செய்வதாக அறிவித்த தந்தை செல்வா தமிழ் மக்களின் மனோநிலையினை அறிந்துகொள்ள விரும்பினால் தனது தொகுதிக்கான இடைத்தேர்தலினை நடத்தி அறிந்துகொள்ளுங்கள் என்றும் சவால் விட்டார். ஆனால், தந்தை செல்வாவின் சவாலினை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசாங்கம், இடைத்தேர்தலினையும் தொடர்ச்சியாக பிற்போட்டுவந்தது. தமிழ் மாணவர் அமைப்பு எனும் இளைஞர் அமைப்பு தனது கட்டுப்பாட்டினை விட்டுச் சென்றுவிட்டதனையும், அவ்வமைப்பின் தலைவர்களைப் பொலீஸார் தொடர்ச்சியாகக் கைதுசெய்துவந்ததையும் அவதானித்த அமிர்தலிங்கம் 1973 ஆம் ஆண்டு புதியதொரு இளைஞர் அமைப்பொன்றினை ஆரம்பித்து அதற்கு தமிழ் இளைஞர் அமைப்பு என்று பெயரிட்டார். இந்த புதிய அமைப்பில் சுமார் 40 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்ததுடன், இவர்களுள் பெரும்பாலானவர்கள் பின்னாட்களில் ஆயுத அமைப்பின் தலைவர்களாக மாறினார்கள். வேறுவேறான அரசியல்ப் பாதைகளில் பயணித்த பல இளைஞர்களை இதன்மூலம் ஒருகுடையின் கீழ் கொண்டுவர அமிரால் முடிந்தது. தமிழர் ஐக்கிய முன்னணியின் ஒரு பகுதியாக இந்த இளைஞர் பேரவை அமையாவிட்டாலும்கூட, தமிழர் ஐக்கிய முன்னணியின் தீவிர ஆதரவாளர்களான மாவை சேனாதிராஜா போன்றவர்கள் இந்த இளைஞர் அமைப்பை தலைமைதாங்குவதற்கு நியமிக்கப்பட்டார்கள். அமிர்தலிங்கத்திற்கு விரும்பிய விடயங்களை இந்த இளைஞர் பேரவை செய்ய ஆரம்பித்தது என்று இவ்வமைப்பின் இடதுசாரிச் சிந்தனையுள்ள சிலர் விசனப்பட ஆரம்பித்திருந்தனர்.இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த பாக்கியநாதன் ராஜரட்ணம் இவ்வமைப்பின் செயற்பாடுகள் குறித்துப் பேசுகையில், "அமிர்தலிங்கம் எம்மிடம் சொல்பவற்றைச் செய்வதே எமது ஒரே வேலையாக அப்போது இருந்தது". என்று கூறினார். தை 14 ஆன்று உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையும் பொலீஸாரினால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட மறுநாளான தை 15 ஆம் திகதி உறுப்பினர்களான ஞானசேகரமும் ஆசீர்வாதம் தாசனும் கைதுசெய்யப்பட்டார்கள். தமிழ் மாணவர் அமைப்பின் தலைவர் பொன்னுத்துரை சத்தியசீலன் மாசி 20 நாளன்று பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். பொலீஸாரின் கடுமையான சித்திரவதைகளின்பொழுது சத்தியசீலன் இன்னும் பல உறுப்பினர்களின் விடயங்களைக் கூறியதாக வதந்திகள் உலாவின. இன்றுவரை இதனை பல ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்கள் நம்பிவருகின்றனர். தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்பான பல தகவல்களை சத்தியசீலன் அன்று பொலீஸாருக்கு வழங்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து தமிழ் இளைஞர் பேரவையின் பல உறுப்பினர்களை பொலீஸார் பங்குனி மாதத்தில் கைதுசெய்தனர். சோமசுந்தரம் சேனாதிராஜா, மாவை, ஆனந்தப்பூபதி, மற்றும் சிவராமலிங்கம் சந்திரக்குமார் ஆகியோர் பங்குனி 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட, சுந்தரம்பிள்ளை சபாரட்ணம் 10 ஆம் திகதியும், திஸ்ஸவீரசிங்கம் 16 ஆம் திகதியும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையடுத்து அப்பாத்துரை நித்தியானந்தன், சிவராமலிங்கம் சூரியக்குமார் உள்ளிட்ட இன்னும் சில இளைஞர்களை பொலீஸார் பின்னாட்களில் கைதுசெய்திருந்தனர்.
  9. வணக்கம் வாத்தியார்........! நேத்து ராத்திரி தூக்கம் போச்சிடி நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சிடி யம்மா ஆவோஜி ஆ அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி அம்மாடி ஆத்தாடி உன்னால தான் அச்சாரத்தை போடு கச்சேரிய கேளு சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபுல் ராஜா என்பேரு தான் அப்துல் காஜா என்கிட்ட தான் அன்பே ஆஜா அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தை தொட்டவுடன் ஆனந்தம் வாரே வா . அனார்கலி நான் தானய்யா அன்பே சலீம் நீதானய்யா அம்மாடி ஆத்தாடி உன்னாலதான் என்னோடு வா தூபா ஏராளம் தான் ரூபா ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு உன்ன நானும் வச்சிருப்பேன் அன்பா உன் மேல தான் ஆசப் பட்டேன் உன்னக் கண்டு நாளுங் கெட்டேன் குபேரன் உன் கைய தொட்டேன் குசேலனின் கைய விட்டேன் அந்த புறம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன் ஆசைகள் அப்பப்பா........! ---நேத்து ராத்திரி யம்மா---
  10. பின்னடித்த தமிழ் தலைவர்கள் சிறிமாவோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமிழ் இளைஞர்களின் வன்முறையின் பின்னாலிருந்த அரசியலினப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இவர்கள் அனைவருமே இவை சாதாரண வன்முறைகள்தான் என்று புறந்தள்ளிவிட்டிருந்தனர். தனது பொலீஸார் இந்த வன்முறையினை மிக இலகுவாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று சிறிமா நம்பியிருக்க, தமிழ் அரசியல்த் தலைவர்களோ தமது தளபதியான அமிர்தலிங்கம் இந்த வன்முறைகளை ஏவும் இளைஞர்களை இலகுவாக வழிக்குக் கொண்டுவந்துவிடுவார் என்றே நம்பினர். ஏனென்றால், ஒருமுறை அமிர்தலிங்கமே ஏனைய தமிழ் அரசியல்த் தலிவர்களிடம், "என்னால் அவர்களை இலகுவாகச் சமாளிக்க முடியும்" என்று கூறியிருந்தார். குடியரசு தினத்திற்கு 4 தினங்களுக்கு முன்னதாகவே காவல்த்துறை இளைஞர் தலைவர்களைக் கைதுசெய்ய ஆரம்பித்திருந்தது. தமிழ் மாணவர் அமைப்பினரின் ஸ்த்தாபக உறுப்பினரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அன்று கைதுசெய்யப்பட்டார். ஆனி 9 ஆம் திகதி சிவாநந்தனும் சிவஜெயமும் கைதுசெய்யப்பட்டார்கள். மறுநாள் நமசிவாயம் ஆனந்தவிநாயகம் ஆனி 10 திகதியும், காசி ஆனந்தன் ஆனி 15 திகதியும் கைதுசெய்யப்பட்டனர். மேலும் மயில்வாகனம் ராஜசூரியர் 30 திகதியும் சின்னையா குவேந்திரராஜா ஆடி 9 அன்றும், அமரசிங்கம் ஆடி 12 ஆம் திகதியும் செல்லையா தனபாலசிங்கம் ஆகிய செட்டி, பொன்னுத்துரை சிவகுமாரன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமை தமிழர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பரவலான ஆர்ப்பாட்டங்களும் இதனையடுத்து இடம்பெறத் தொடங்கின. இளைஞர்களின் மனோநிலையை சரியாகப் புரிந்துகொள்ள அமிர்தலிங்கம் தவறிவிட்டிருந்தார். இது 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணத்தை அவர் எடுத்தபோது தெளிவாகத் தெரிந்தது. ஐக்கிய தமிழர் முன்னணியினரை பாராளுமன்றத்தைப் புறக்கணிக்குமாறு இளைஞர்கள் கோரியிருந்தனர். அவர்களது வாதம் மிகவும் எளிமையானது. "புதிய அரசியலமைப்பினை முற்றாகப் புறக்கணித்து, அதற்கெதிராக ஆறு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து, யாப்பு பிரகடணப்படுத்தப்பட்ட நாளினை கரிநாளாக அறிவித்து, மக்களை அந்த யாப்பினை எரிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே, அதே அரசிய யாப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது எந்தவிதத்தில் நியாயம்?" என்று அவர்கள் தலைவர்களிடம் கேட்டார்கள். யாழ்ப்பாணத்தின் பழைய பூங்கா தெருவில் தமிழ் அரசியல்த் தலைவர்களின் இந்த இரட்டை முகத்தை அம்பலப்படுத்தும் வாசகம் ஒன்று தொங்கவிடப்பட்டது, அதில் "ஏமாற்றுவதே உங்களின் புதிய அரசியல் விளையாட்டு" என்று எழுதப்பட்டிருந்தது. இளைஞர்களின் எதிர்ப்பும், போராட்டமும் தமிழர் ஐக்கிய முன்னணியினர் பாராளுமன்றத்திற்குச் சென்று சத்தியப்பிரமாணம் செய்வதை தடுக்கவில்லை. ஆடி 4 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் தோன்றிய அவர்கள் பின்வருமாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். " இலங்கைக் குடியரசுக்கு எனது பூரண விசுவாசத்தையும், தோழமையினையும் காட்டுவேன் என்றும், என்னாலான அனைத்து வழிகளிலும் நேர்மையுடன் இலங்கைக் குடியரசுக்காக நம்பிக்கையுடன் எனக்கு தரப்பட்ட பணியை செவ்வணே செய்வேன் என்றும் அமிர்தலிங்கம் ஆகிய நான் அரசியல் அமைப்பின்படியும், இந்த நாட்டின் சட்டத்தின்படியும் சத்தியம் செய்கிறேன்" என்று உறுதிமொழி எடுத்தார்கள். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதை சர்வதேசத்திற்குக் காண்பித்த அரசாங்கம், தமிழர்கள் புதிய அரசியலமைப்பினை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பறைசாற்றியது. இது இளைஞர்களை கடும் விசனத்திற்குள்ளாக்கியது. தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்ததன் மூலம், இந்த அரசியல் யாப்பிற்கு சட்டரீதியான அந்தஸ்த்தினை இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிவிட்டனர் என்று சாடிய இளைஞர்கள், பாராளுமன்றத்தினைப் புறக்கணிக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். 1972 ஆம் ஆண்டின் யாப்பு, சமாதான, ஜனநாயக வழிகளில் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இருந்த அனைத்து வழிகளையும் முற்றாக அடைத்து விட்டதனால், தமிழர்களுக்கு இன்றிருக்கும் ஒரே வழி தனிநாடுதான் என்று கூறினர். தனிநாட்டினை அடைவதற்கு இருக்கும் ஒரே மார்க்கம் ஆயுதவழிப் போராட்டமே என்று உறுதியாகக் கூறிய இளைஞர்கள், தமிழ் அரசியல்த் தலைவர்களை உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பாரிய விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பிக்குமாறு கோரினர். சிறிமாவின் செயற்பாடுகளும் இளைஞர்களின் கருத்தினை உறுதிப்படுத்தியிருந்தது. தந்தை செல்வாவினால் தனக்கு எழுதப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கை தொடர்பான கடிதத்திற்கு அவர் பதில் அனுப்பியிருக்கவில்லை. தந்தை செல்வா தனது முன்னைய கடிதம் குறித்து மீண்டும் அவரை வினவியிருந்தார். ஆனால், அவரது இரு கடிதங்களும் கிடைக்கப்பட்டது என்கிற பதில் மட்டுமே பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. தமிழர் ஐக்கிய முன்னணி கேட்டுக்கொண்ட ஆறு அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பினை மாற்றும் எந்தப் பேச்சுமே இருக்கவில்லை. ஆகவே, தந்தை செல்வாவின் முதலாவது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல புரட்டாதி 30 இற்குள் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதவிடத்து, தமிழரின் சுதந்திரத்தையும், அரசியல் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள தமிழ் தலைவர்கள் உடனடியாக வன்முறையற்ற போராட்டங்களை முடுக்கிவிடவேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், தமிழத் தலைவர்களிடம் அதற்கான துணிவு இருக்கவில்லை. இளைஞர்களோ தலைவர்கள் கூறியபடி செயற்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றனர். புரட்டாதி 17 ஆம் திகதி, துரையாப்பா விளையாட்டரங்கில் நடந்துகொண்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் 17 வயதே நிரம்பிய பிரபாகரன் குண்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டார். இத்தாக்குதல் தமிழ் இளைஞர்களை காவல்த்துறை கைதுசெய்வதைக் கண்டித்தும், அதற்கு மேலதிகமாக அரசுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாகவுமே இதனை அவர் செய்திருந்தார். இந்த களியாட்ட நிகழ்வினை அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம், ராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் சேவையினைப் பாராட்டியே இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமையாகும். ஆனால், எவருக்குமே இந்தத் தாக்குதலில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை. மார்கழி 20 ஆம் திகதி உடுவில் தொகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் வினோதனின் வீட்டின்மேல் குட்டிமணி - தங்கத்துரை அமைப்பினர் கைய்யெறிகுண்டுகளை வீசினர். இத்தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. யாழ்ப்பாணத்தில் இளைஞர்களத் தேடி பொலீஸார் நடத்திய கடுமையான கைது நடவடிக்கைகளையடுத்து வன்முறைகள் வெகுவாகக் குறையத் தொடங்கியிருந்தன. பெரும்பாலான ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் ஒன்றில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் அல்லது தப்பியோடி தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியுமிருந்தார்கள். சுமார் 2 வருடங்களும் 7 மாதங்களும் மிகவும் அமைதியாகவே கழிந்துகொண்டிருந்தபொழுது மிகவும் குறிப்பிடத் தக்க வன்முறையாக 1975 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி முன்னாள் யாழ்நகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை நடந்தேறியது.
  11. 👉 https://www.facebook.com/100004846276706/videos/477455917886679 👈 இதுக்குத் தான் சொல்றது, அடுத்தவன் வீட்டிலை, என்ன எரியுது எண்டு பார்க்காமல் நம்ம வீட்டிலை, என்ன கருகுது எண்டு பாருங்கள். 🤣
  12. தமது முடிவில் உறுதியான இளைஞர்கள் அமிர்தலிங்கம் காங்கேசன்துறையில் நிகழ்த்திய பேச்சு தமிழ் இளைஞர்களிடைய அன்றைய காலத்தில் சிங்கள அரசுமீது எழுந்துவந்த கடுமையான அதிருப்தியைப் பிரதிபலித்திருந்தது. தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் பாதையினையும், வங்கதேசத்து அவாமி லீக்கின் பாதையினையும் தமிழர்களும் பின்தொடரவேண்டும் என்று இளைஞர்கள் கடுமையான அழுத்தம் கொடுத்து வந்திருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகமும், வங்கதேச விடுதலையும் தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் மீதான நம்பிக்கையினையும், அதனையே தாமும் செய்யவேண்டும் என்கிற உற்சாகத்தினையும் கொடுத்திருந்தது. அரசியலமைப்பினை வரைந்தவர்கள் சிங்களவர்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி அதனை வரைந்ததையும், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து செவிமடுக்கவே அவர்கள் விரும்பவில்லையென்பதனையும் தமிழ் இளைஞர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். புதிய அரசியலமைப்பு நகலானது இலங்கையின் ஒற்றையாட்சியை முன்னிறுத்தியதோடு, பெளத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் நாட்டின் ஏனைய மதங்கள் மொழிகளைக் காட்டிலும் அதீத முக்கியத்துவம் கொடுத்தே வரையப்பட்டிருந்ததை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். இவை மூன்றும் சட்டமாக்கப்பட்டு அமுல்ப்படுத்தப்படும்பொழுது தமிழர்கள் இலங்கையில் முக்கியத்துவமற்றை பத்தோடு பதின்றான இனமாக கணிக்கப்படுவார்கள் என்பதனையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இது நடப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற உணர்வு இளைஞர்களிடையே உருவானது. வங்கதேசத்தில் அவாமி லீக் மக்களை ஒன்றுதிரட்டியதைப் போன்று தாமும் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். தமது இலக்கு நோக்கி துரிதமாகவும், உறுதியாகவும் அவர்கள் செயற்படத் தொடங்கினார்கள். தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்றும், அரசியல்த் தலைமைகள் அவர்களுக்கான பாதையினை வகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். அமிர்தலிங்கம் காங்கேசந்துறையில் பேசியது அன்றைய இளைஞர்களின் மனநிலையைத்தான் : தீவிரமாகப் போராடுவோம், தேவையேற்படின் இரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அன்றைய இளைஞர்களின் சுலோகமாகிப் போனது. இனவெறி ஊட்டப்பெற்று, தமிழர்களுக்கெதிராக இனவாதம் கக்கிக் கொண்டிருந்த சிங்கள ஊடகங்கள் இலங்கையின் நலன்களும், அரசியலும் எனப்படுவது சிங்களவரின் நலன்களும் அரசியலும்தான் என்று நிறுவுவதற்கு மும்முரமாக முயன்றுவந்த சூழ்நிலையிலேயே அமிரின் காங்கேசந்துறை பேச்சும் இடம்பெற்றிருந்தது. ஆகவே, அமிர்தலிங்கத்தை நாட்டுப்பற்றில்லாதவர் என்று அவை விழித்து எழுதிவந்தன. குறிப்பாக சண் எனும் பேர்போன இனவாதப் பத்திரிக்கை அமிரின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தேயன்றி சமஷ்ட்டிக் கட்சியில் அரசியல் நிலைப்பாடு அல்ல என்று எழுதியது. ஆனாலும், அமிரின் பேச்சினை இந்தியா வங்கதேசத்து விடுதலைப்போரில் வங்காளிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பின்னணியில் வைத்து அணுகப்பட வேண்டிய ஒரு விடயம் என்று ஆசிரியர்த் தலையங்கமும் தீட்டியது சண். ஆனால், இங்கே சண் உட்பட இனவாதப் பத்திரிக்கைகளோ அல்லது சிறிமாவின் அரசோ கவனிக்கத் தவறிய ஒருவிடயம் என்னவென்றால், அமிர் அன்று பேசியது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் அரசியல் அபிலாஷையும், அன்று அந்த இனம் அடைந்திருந்த விரக்தியையும் தான் என்பது. அமிரின் காங்கேசந்துறை பேசு நடந்த சில தினங்களுக்கு பின்னர் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுமாறு சிறிமாவின் அரசு யாழ்ப்பாணாப் பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரிடமிருந்து பொலீஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். மேலும், அமிருக்கெதிராக கடுமையான விமர்சனத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிறிமாவோ அரசு அவரை நாட்டுக்கு எதிரானவர் என்றும், இரட்டை நாக்குக் கொண்டவர் என்றும், தெற்கில் சிங்களவரிடம் ஒரு கருத்தையும், வடக்கில் தமிழரிடம் ஒரு கருத்தையும் முன்வைக்கும் பொய்யர் என்றும் வசைபாடியது. அதேவேளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் மேலோட்டமனாவை, தீவிரமற்றவை என்று இளைஞர்களும் தம் பங்கிற்கு அவருக்கெதிரான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருந்தனர். அரசியலமைப்பு உருவாக்கச் சபையினரால் வரையயப்பட்ட நகலினை ஆராய்வதற்கென்று சமஷ்ட்டிக் கட்சி 1972 ஆம் ஆண்டு தை 30 ஆம் திகதி ஒரு மாநாட்டைக் கூட்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட இந்த மாநாட்டின் நோக்கத்திற்கெதிராக இளைஞர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழருக்கான நீதியை ஒருபோதுமே தரப்போவதில்லையென்பதனால், அவர்களின்பின்னால் பிச்சையெடுக்கப் போகாதீர்கள் என்று அவர்கள் சமஷ்ட்டிக் கட்சியினரைப் பார்த்துக் கூறினர். தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனமே இந்த புதிய அரசியலமைப்பு என்று விழித்த இளைஞர்கள் இந்த நகலை சமஷ்ட்டிக் கட்சியினரின் மாநாட்டில் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரினர். இளைஞர்களின் அழுத்தத்திற்குச் செவிசாய்த்து சமஷ்ட்டிக் கட்சியும் அந்த நகலை தாம் நிராகரிப்பதாக அறிவித்தது. மேலும், அந்த புதிய அரசியலமைப்பு தமிழர் மீதான அடிமைச் சாசனம் என்பதனால் அதனை முற்றாக தாம் நிராகரிப்பதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உத்தேச அரசியல் யாப்பு நகலை நிராகரித்த அதேவேளை தனது மாநாட்டின் தீர்மானங்களாக 4 அம்சக் கோரிக்கையினையும் சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்தது, 1. சிங்கள மக்களுக்கான அதே அந்தஸ்த்து தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 2. இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். 3. இலங்கையைத் தமது தாய்நாடாகக் கொண்ட அனைவருக்கும் இந்நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும். 4. தமிழர்கள் தமது பூர்வீக தாயகத்தில் தம்மைத்தானே ஆள்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். என்பவையே சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நான்கு அமசக் கோரிக்கைகள் ஆகும். சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்த நான்கு அம்சக் கோரிக்கையினை இளைஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். சிங்கள யாப்புருவாக்கிகளால் நிராகரிக்கப்பட்ட தமிழரின் கோரிக்கைகளையே மீண்டும் சமஷ்ட்டிக் கட்சி தனது நான்கு அம்சக் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறது என்று அவர்கள் எள்ளி நகையாடினர். " இந்த வயோதிப அப்புக்காத்துமாருக்கு தமது பழமைவாதப் பழக்கங்களை அவ்வளவு இலகுவில் விட்டுவிடமுடியாது போலிருக்கிறது" என்று அவர்கள் கூறினர். சமஷ்ட்டிக் கட்சியினரின் செயற்பாடுகள் நம்பிக்கையிழந்த இளைஞர்கள் தாமே நேரடியாக மக்களிடம் செல்வதென்று முடிவெடுத்தனர். ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மக்கள் கூட்டங்களையும் பேரணிகளையும் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். தமது உணர்வுகளை கிராமம் கிராமமாக அவர்கள் எடுத்துச் சென்றார்கள். வீதி நாடகங்களையும், பேரணிகளையும் நடத்திய இளைஞர்கள் சிங்களவர்கள் தமிழரை அடிமைகொள்ளப் போகிறார்கள், ஆகவே எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகுமாறு மக்களை உணர்வேற்றினர். இளைஞர்களின் வழிக்கே வந்த தலைவர்கள் இளைஞர்களால் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட உணர்வு அலையினால் தலைவர்களும் ஆட்கொள்ளப்பட்டுப் போயினர். தனியான நாட்டிற்கான போராட்டத்திற்கு இரு வழிகளை அவர்கள் பின்பற்றத் தீர்மானித்தனர். கோவை மகேசன் (படத்தின் வலதுபக்கத்தில்) , செல்வநாயகம், அமிர்தலிங்கம் மற்றும் திருமதி அமிர்தலிங்கம் ஆகியோர் அண்ணாத்துரையின் இல்லத்தில். மற்றையவர்கள் தி. மு. க வின் மாணவர் தலைவர் ஜனார்த்தனம், மலையகத் தமிழ்த் தலைவர் மாவைத்தம்பி ஆகியோர். முதலாவதாக இந்த போராட்டத்திற்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவினைப் பெற்றுக்கொள்வதென்பது. தமிழகத் தலைவர்களின் ஆதரவினை ஒருங்கிணைக்க தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் 1972 ஆம் ஆண்டு, மாசி மாதம் 20 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குச் சென்றனர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்த முத்துவேல் கருனாநிதி, கல்வியமைச்சர் வி. ஆர். நெடுஞ்செழியன், முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ. வி. ராமசாமி நாயக்கர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ், தமிழர் கழகம் தலைவர் எம். பி. சிவஞானம் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர் காயித்தே மில்லத் ஆகியோரைச் சந்தித்தனர். தமிழகத்தில் அரசியல்த் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட தந்தை செல்வா, இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடிமைகளாக்க முயற்சிப்பதால், தமிழர்கள் தனிநாட்டினைக் கேட்பதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறினார். தமிழரின் தனிநாட்டுப் போராட்டம் அகிம்சை முறையிலேயே நடத்தப்படும் என்றும் அவர் அங்கு கூறினார். செல்வாவும் காமராஜரும் 1961 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், தந்தை பெரியார் மட்டுமே தந்தை செல்வாவின் வன்முறையற்ற விடுதலைப் போராட்டம் குறித்து சந்தேகத்தினை எழுப்பினார். "தர்மத்திற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு அதிகாரத்துடன் அகிம்சை வழியில் போராடி உங்களுக்கான நீதியினை வென்றுவிட உங்களால் முடியுமா?" என்று அவர் தந்தை செல்வாவைப் பார்த்துக் கேட்டார். பெரியாரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல்த் தடுமாறிய செல்வா ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "ஈற்றில் தர்மமே வெல்லும்" என்று கூறி முடித்தார். செல்வா தலைமையிலான தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழகத் தலைவர்கள் , தமிழரின் தனிநாட்டிற்கான அகிம்சை வழிப்போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை நல்குவதாக ஒப்புக்கொண்டதோடு, இதுகுறித்துப் பிரதமர் இந்திரா கந்தியுடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தனர் சென்னை மேயர் காமாட்சி ஜெயராமனினால் தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் வரவேற்பில் பேசிய அவர், தமிழக மக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தில் உற்றதுணையாக இருப்பார்கள் என்று கூறினார். அவர்களிடம் பேசிய தந்தை செல்வா தமிழர்களின் போராட்டம் வன்முறையற்ற அகிம்சை ரீதியிலேயே நடைபெறும் என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தார்மீக ஆதரவே தாம் வேண்டி நிற்பதாகவும் அவர் மீண்டும் கூறினார். சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், வைகாசி 14 அன்று தந்தை செல்வா மக்களை இன்னொரு போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தத் தொடங்கினார். தமிழ் அரசியல்த் தலைவர்களையும், முக்கிய தமிழ் தலைவர்களையும் திருகோணமலை நகர மண்டபத்தில் கூடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாடுக் கட்சியினர் மற்றும் தமிழ் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியட் கட்சி சாரா செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமான் பின்னர் பேசும்போது, இக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதன் நோக்கம் மொத்த தமிழ்ச் சமூகத்தினதும் ஒருமித்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒற்றை அரசியல் அமைப்பான தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஸ்த்தாபிக்கவே என்று கூறினார். இலங்கைத் தமிழரின் போராட்டங்களிலிருந்து அதுவரைக்கும் தனது கட்சியான தொழிலாளர் காங்கிரஸை விலத்தியே வைத்திருந்த தொண்டைமான் புதிய அரசியலமைப்பினால், தமிழர்கள் தமது பேதமைகளைக் கைவிட்டு புதிய முடிவுகளை எடுக்கும் தேவை ஏற்படுள்ளதாகக் கூறினார். தந்தை செல்வா பேசும் போது பக்கச் சார்பாக வரையப்பட்டிருக்கும் இந்த அரசியல் அமைப்பிற்கு எதிராக தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தின் முடிவில் தமிழர் ஐக்கிய முன்னணி பின்வரும் முடிவுகளி எடுத்தது, 1. புதிய அரசியலமைப்பை முற்றாக நிராகரிப்பது. 2. பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ் அமர்வை புறக்கணிப்பது. 3. புதிய அரசியலமைப்பு சட்டமாக்கப்படும் வைகாசி 22 ஆம் திகதியை துக்கதினமாக அனுஷ்ட்டிப்பது. 4. 1972 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதிக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய தாம் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அவற்றினைப் பூர்த்தி செய்வது. அந்த 6 அம்சக் கோரிக்கைகளாவன, 1. அரசியலமைப்பில் சிங்கள மொழிக்குக் கொடுக்கப்படும் அதே அந்தஸ்த்து தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும். 2. இந்த நாட்டினை தமது தாய்நாடாகக் கொண்ட அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கும் முழுமையான பிரஜாவுரிமை வழங்குவதாக இந்த அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனினதும் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படக் கூடாது. 3. மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருப்பதோடு, அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும். 4. மத, இன, மொழி வேறுபாட்டிற்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும். 5. சாதி வேறுபாட்டினையும், தீண்டாமையினையும் முற்றாக இல்லாதொழிக்கும் ஏற்பாடுகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும். 6. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே ஜனநாயக சோசலிச சமூகத்தில் மக்களின் பங்களிப்புடன் ஜனநாயகத்தின் பலத்தினை நிலைநாட்டவேண்டுமே அன்றி அரச பலத்தினால் அல்ல என்பது யாப்பில் கூறப்பட வேண்டும். இந்த ஆறு அம்சக் கோரிக்கையினை இணைத்து எழுதப்பட்ட கடிதத்தில் இந்த ஆறு கோரிக்கைகளும் அரசால் குறிப்பிட்ட காலக்கெடுவான 1972, புரட்டாதி 30 இற்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழர் ஐக்கிய முன்னணி தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள வன்முறையற்ற வழியில் போராட்டங்களை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. http://www.sundaytimes.lk/180520/uploads/Untitled-112.jpg சிங்கள இனவாதிகளால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகத் உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்டது. 20 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் இந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்று, புதிய அரசியமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு, 1. சி. அருளம்பலம் - நல்லூர் 2. ஏ. தியாகராஜா - வட்டுக்கோட்டை (தமிழ்க் காங்கிரஸ்) 3. சி. எக்ஸ். மார்ட்டின் - யாழ்ப்பாணம் (சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்) 4. எம். சி. சுப்ரமணியம் - நியமிக்கப்பட்டவர் 5. சி. குமாரசூரியர் - தபால் & தொலைத்தொடர்பு அமைச்சர் - நியமிக்கப்பட்டவர் புதிய அரசியலமைப்பு உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்ட இந்த நாளினை வடக்குக் கிழக்குத் தமிழர்கள் துக்க நாளாக கடைப்பிடித்ததோடு, அதிகாலை முதல் மாலைவரையான பூரண ஹர்த்தாலாகவும் அனுட்டித்தனர். வீதிக்கு இறங்கிய இளைஞர்கள் தமது எதிர்ப்பினைக் கறுப்புக் கொடிகளை அசைத்தும், பறக்கவிட்டும் காட்டினர். அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டதுடன், போக்குவரத்தும் பூரண ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முதல் நாளான 21 ஆம் திகதி பாடசாலைகளை மாணவர்கள் புறக்கணித்ததோடு, 22 ஆம் திகது பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஹர்த்தாலை பூரணமாகக் கடைப்பிடித்ததோடு, அரச கட்டளையான கூட்டங்கள், பேரணிகளுக்கான தடையினையும் மீறி வீதிகளிலும், சந்திகளிலும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், இலங்கையின் தேசியக் கொடிகளும், புதிய அரசியலமைப்பின் நகல்களும் மக்களால் பரவலாக எரியூட்டப்பட்டன. மக்கள் முன் பேசிய இளைஞர்கள் தமிழர்களை சிங்கள அரசு ஒரு கற்சுவரை நோக்கி நெருக்கித் தள்ளியிருப்பதாகவும், தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் முற்றான முறிவு நிலையினை அடைந்துவிட்டதாகவும், இதிலிருந்து தமிழர்கள் மீண்டுவருவதற்கான ஒரே வழி வங்கதேச சுதந்திரப் போராட்டத்தைப் பின்பற்றிப் போராடுவதுதான் என்றும் கூறினர். அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து பேரணிகளையும், கூட்டங்களையும் அரசு தடைசெய்திருந்த நிலையில், அதனை மீற விரும்பாத தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரமத்தினுள் கூட்டமொன்றினை நடத்தினர். அங்கு பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "நாங்கள் ஒரு நாட்டினுள்ளேயே இருக்க விரும்பினோம். கண்ணியமும், மரியாதையும் கொண்ட பங்களிகளாக வாழ விரும்பினோம். ஆனால், இவை எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. எம்மை தமது அடிமைகளாக வாழவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சுயகெளரவமுள்ள எந்த மனிதனும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான். நாம் சுய கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம். அது தனியான நாட்டினூடாகவே சாத்தியமென்றால், நாம் அதை நோக்கிப் பயணிக்கத் தயங்கப்போவதில்லை. நான் எனது மக்களுக்கும் இந்த உலகிற்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தனிநாட்டிற்கான பாதையினைத் தெரிவுசெய்யும்படி நாம் சிங்கள ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதைத்தான்".
  13. மக்கள் விடுதலை முன்னணியின் கலகம் சித்திரை ஐந்தாம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினர் தமது தாக்குதல்களை மொனராகலைப் பகுதியிலும், வெல்லவாயாப் பகுதியிலும் ஆரம்பித்தனர். மாலையே அரம்பிக்க திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், தவறான தொடர்பாடலினால் முன்னரேயே அரம்பித்து விட்டிருந்தது. சித்திரை 2 ஆம் திகதி வித்யோதய சங்கராமய எனும் பெளத்த விகாரையில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் நாடுதழுவிய ரீதியில் தமது தாக்குதல்களை சித்திரை 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து ராணுவ மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதென்று முடிவெடுத்திருந்தார்கள். சங்கேத மொழியில் அனுப்பப்பட்ட தந்தி ஒன்றில் "ம.வி.மு அப்புஹாமி இறந்துவிட்டார், நல்லடக்கம் 5" என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சமிக்ஞையாக அரச வானொலியில் "நீல கொப்பேயா" எனும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து மொனராகலையிலும், வெல்லவாயாவிலும் ஆயத்தமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் காலையிலேயே தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். சுதாரித்துக்கொண்ட சிறிமாவின் அரசு நாட்டின் ஏனைய பொலீஸ் ராணுவ முகாம்களை உஷார் நிலைக்குக் கொண்டுவந்தது. தாக்குதலை எதிர்பார்த்து பொலீஸாரும் ஆயத்தத்துடன் இருந்தனர். தாக்குதலை முறியடித்து, முன்னேறும் முயற்சிகளையும் பொலீஸார் மேற்கொண்டனர். தமது தவற்றினை உணர்ந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கு, தாக்குதலைத் தொடர்ந்து நடத்துவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை. சுமார் 25 - 30 வரையான இளைஞர்கள், பொலீஸ் நிலையங்களைச் சுற்றிவளைத்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பெற்றொல்க் குண்டுகளையும், கையெறிகுண்டுகளையும் பாவித்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர். நாடு முழுவதுமிருந்த 273 பொலீஸ் நிலையங்களில் 93 பொலீஸ் நிலையங்கள் மக்கள் விடுதலை முன்னணியினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. பலவீனமான பகுதிகளில் அமைந்திருந்த காவல் நிலையங்களை அரசாங்கமே மீளப்பெற்றுக்கொண்டது. சிங்களக் கலகக்காரர்கள் மிகவும் பலவீனமான ஆயுதங்களை வைத்திருந்தனர், அவர்களில் எவருக்குமே தரமான போர்ப்பயிற்சிகள் கிடைத்திருக்கவில்லை, அவர்களைச் சரியான திட்டத்தில் வழிநடத்தத்தன்னும் தலைவர்கள் இருக்கவில்லை. அவர்களின் ஆரம்ப வெற்றிகளுக்கான ஒரே காரணம் பொலிஸார் இத்தாக்குதல் பற்றி அறிந்திருக்காமைதான். ஆனால், ஆரம்பகட்டத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டவுடன், தன்னை மீள ஒருங்கமைத்த அரசகாவல்த்துறை கடுமையான எதிர்த்தாக்குதலை முடுக்கிவிட்டது. ராணுவமும் துணைக்கு அழைக்கப்பட்டதுடன், வெளிநாடுகளிலிருந்தும் உதவி கோரப்பட்டது. பல நாடுகள் உதவிசெய்ய, இந்தியாவும் தன்பங்கிற்கு உலங்கு வானூர்திகளையும், வானிலிருந்து குதிக்கும் தாக்குதல் ராணுவக் குழுக்களையும் உடனடியாக அனுப்பிவைத்தது. http://telo.org/telooldnews/wp-content/uploads/2014/11/Premawathie-Manamperi.jpg கடுமையான முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவம் சுமார் 3 வாரங்களில் கலகக்காரரின் முதுகெலும்பை முறித்துப் போட்டது. மேலும், ஆண்டின் இறுதியில் சுமார் 18,000 கலகக்காரரும், ஆதரவாளர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அரச தகவல்களின்படி சுமார் 5,000 பேர்வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், குறைந்தது 25,000 சிங்கள இளைஞர்கள் இதன்போது பலியானதை அரசு உத்தியோகபூர்வமற்ற வகையில் ஒத்துக்கொண்டிருந்தது. கடுமையான சித்திரவதைகளும், கூட்டுப் படுகொலைகளும் இடம்பெற்றதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் அரசினால் நிராகரிக்கப்பட்டன. ஹம்மெர்ஹெயில் கோட்டை ஹம்மெர்ஹயில் கோட்டை இத்தாக்குதல்களின்ப்பொது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒருவிடயம் கொழும்பில் தங்கியிருந்த சிறிமாவும், அவரது பிள்ளைகளும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றினுள் ஒளிந்துகொண்டதுதான். கொழும்பு நகர் பாதுகாப்பானதாக வரும்வரை அவர்கள் அக்கப்பலிலேயே தஞ்சமடைந்திருந்ததாக அறியமுடிகிறது. ஆனால், தமிழர்கள் ஆர்வம் காட்டிய இன்னொரு செய்தியிருக்கிறது. அதுதான் யாழ்ப்பாணம் காரைநகர் ஹம்மெர்ஹயில் கோட்டையில் அமைந்திருந்த கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீரவும் அவரது தோழர்கள் 12 பேரையும் மீட்க அக்குழு முயன்ற செய்தி. தமிழர்கள் வங்கதேச விடுதலையிலும் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தனர். இந்தியத் துணைக்கண்ட சுதந்திரத்தின்போது இந்தியா பாக்கிஸ்த்தான் எனும் இரு நாடுகளாகப் அது பிரிக்கப்பட்டது. பிரிக்கப்படுவதற்கு முன்னர், முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த பகுதிகள் பாக்கிஸ்த்தானுக்குள் சேர்க்கப்பட்டன. இந்தப் பகுதிகள் மேற்குப் பாக்கிஸ்த்தான் என்றும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் என்று இரு பிரிவுகளாக இருந்தன. பாக்கிஸ்த்தானின் இவ்விரு மாநிலங்களுக்குமிடையே சுமார் 1600 கிலோமீட்டர்கள் அகலமான இந்தியப் பகுதி அமைந்திருந்தது. பாக்கிஸ்த்தானின் இரு பகுதிகளிலும் நிலப்பரப்பில் பெரிய பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தான் ஆகும். இதனுள் பஞ்சாப், சிந்த், பாலுச்சிஸ்த்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்பகுதி ஆகிய நான்கு மாநிலங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. கிழக்குப் பாக்கிஸ்த்தானில் கிழக்கு வங்காளம் எனப்படும் பகுதிமட்டுமே இருந்தது. சனத்தொகையில் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மேற்குப் பாக்கிஸ்த்தானைக் காட்டிலும் அதிகமான மக்களைக் கொண்டிருந்தது. ஆனால், சுதந்திரத்தின்பின்னர் பாக்கிஸ்த்தானின் அரசியல்ப் பலம் மேற்குப் பாக்கிஸ்த்தானின் உயர்மட்ட வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து கிடந்தது. நாட்டின் மொத்த வருமானத்தின் பெரும்பகுதி மேற்குப் பாக்கிஸ்த்தானின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டதுடன், கிழக்குப் பாக்கிஸ்த்தான் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தது. மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்களால் தாம் புறக்கணிக்கப்படுவதாகவும், சுரண்டப்படுவதாகவும், தம்மை மாற்றாந்தாய் மனப்பாங்கோடு மேற்குவாசிகள் நடத்துவதாகவும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் அதிருப்தியடையத் தொடங்கியிருந்தார்கள். இந்தப் பிணக்கு மெதுமெதுவாக வெளிக்கிளம்பத் தொடங்கியது. பாக்கிஸ்த்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசியல் ஸ்த்திரத்தனமையினமையாலும், பாரிய பொருளாதார நெருக்கடிகளினாலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்தது. மக்களாட்சி முறை தோற்கடிக்கப்பட்டு ராணுவ ஆட்சியே அங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. மேற்கின் ராணுவ ஆட்சியினை வெறுத்த கிழக்குப் பாக்கிஸ்த்தான் மக்கள் தமது தலைவராக ஷேக் முஜிபுர் ரகுமானை தேர்வுசெய்து, மேற்கின் ராணுவ ஆட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினை ஜனநாயக ரீதியில் காட்டி வந்தனர். அவாமி லீக் எனப்படும் அரசியல்க் கட்சியை ஆரம்பித்த முஜிபுர் ரகுமான் பிரிக்கப்படாத பாக்கிஸ்த்தானில், சமஷ்ட்டி அடிப்படையில் கிழக்குப் பாக்கிஸ்த்தானுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கோரிவந்தார். 1970 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேசிய பாராளுமன்றத் தேர்தல்களில் 313 ஆசனங்களில் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி 170 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆட்சியமைக்கப் போதுமான பலத்தை முஜிபுர் ரகுமான் பெற்றுக்கொண்டபோதும், மேற்குப் பாக்கிஸ்த்தானின் ஆளும்வர்க்கம் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்ததுடன், அவரது கட்சியான அவாமி லீக்கையும் தடைசெய்தது. இதனையடுத்து பாக்கிஸ்த்தான் முழுவதும கடுமையான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன. அன்றைய பாக்கிஸ்த்தான் ஜனாதிபதி யகயா கான் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க தனது மகனான டிக்கா கானை அனுப்பிவைத்தார்.1971 ஆம் ஆண்டு பங்குனி 25 அன்று அவரது பணிப்பின்கீழ் செயற்பட்ட ராணுவம் கலகக்காரர்களுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானின் ராணுவத்தைக் கலைத்து, நிராயுதபாணிகளாக்க மேற்கு பாக்கிஸ்த்தான் ராணுவம் முயன்றது. இந்த நடவடிக்கைக்காக மேற்கிலிருந்து விமானம் மூலம் ராணுவத்தினரைக் கொண்டுவரவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. பாக்கிஸ்த்தான் ராணுவத்தில் பணியாற்றிய வங்களி இன அதிகாரிகளும், சிப்பாய்களும் ராணுவத்திலிருந்து விலகி சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் சேர்ந்துகொண்டனர். முஜிபுர் ரகுமானின் நெருங்கிய ஆதரவாளர்களும் இன்னும் பத்து மில்லியன் வங்காளிகளும் இந்தியாவுக்குத் தப்பியோடினர். அங்கே தமக்கான தற்காலிக அரசாங்கம் ஒன்றையும் அவர்கள் அமைத்தனர். கிழக்குப் பாக்கிஸ்த்தானை விடுவிப்பதற்கான போரில் ஈடுபட்டுவரும் கிழக்குப் பாக்கிஸ்த்தான் சுதந்திர போராட்ட வீரர்களான முக்திபாகினி அமைப்பிற்கு ராணுவ ரீதியில் உதவும் முடிவினை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் எடுத்தார். முக்திபாகினி கெரில்லாக்கள் இந்திய எல்லைக்குள், கிழக்குப் பாக்கிஸ்த்தானின் எல்லையோரங்களில் தொடர்ச்சியான முகாம்களை அமைத்து வந்தார்கள். இந்த முகாம்கள் மீது மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் கடுமையான ஷெல்வீச்சுத்தாக்குதலை மேற்கொண்டபோது, இந்தியாவும் பதில்த்தாக்குதல் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து மேற்குப்பகுதியூடாக இந்தியாவினுள் நுழைந்து தாக்குதல் நடத்த பாக்கிஸ்த்தான் ராணுவம் திட்டமிட்டபோது, இந்தியா முழு அளவிலான போரை மார்கழி 3 ஆம் திகதி பாக்கிஸ்த்தான் மீது ஆரம்பித்தது. இந்திய ராணுவமும், வங்காளி கெரில்லாக்களும் இணைந்து நடத்திய தாக்குதலில் கிழக்குப் பாக்கிஸ்த்தனில் நிலைகொண்டிருந்த மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவம் நிலைகுலைந்துபோனது. மார்கழி 16 ஆம் திகதி கிழக்கிலிருந்து பாக்கிஸ்த்தான் ராணுவம் முற்றாகச் சரணடைய சுதந்திர வங்காளதேசம் உருவானது. ஆயுதப் போராட்டம்பற்றிய எண்ணத்தை ஆரம்பித்திருந்த தமிழ் இளைஞர்கள் தெற்கின் தோல்வியடைந்த ம.வி.மு இன் போராட்டத்தையும், சுதந்திர வங்காளதேசத்தின் உருவாக்கத்தையும் உன்னிப்பாக அவதானித்து சில பாடங்களையும் கற்றுக்கொண்டனர். இன்று கனடாவில் வசித்துவரும் முன்னாள் போராளியொருவர் கூறுகையில், "நாம் இந்த இரு சம்பவங்களையும் மிக உன்னிப்பாக அவதானித்து வந்தோம். இவையிரண்டிலும் இருந்து ஏறாளமான பாடங்களை நாம் கற்றுக்கொண்டோம். இவ்விரு நடவடிக்கைகளும் எம்மை உற்சாகப்படுத்தியிருந்தன. எம்மை இந்த நிகழ்வுகள் வெகுவாக ஊக்கப்படுத்தியிருந்தன" என்று கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினரின் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும்கூட, அரச படைகள் மேல் தாக்குதல் நடத்துவதென்பது சாத்தியமானதுதான் என்கிற நம்பிக்கையினை தமக்கு அது ஏற்படுத்திவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார். உத்வேகமும், இலட்சியம் மீதான உறுதியும், ஆயுதங்களும் சரியான தலைமையும் வாய்க்கப்பெறுமிடத்து அரச படைகள் மேல் தாக்குதல் நடத்தி வெற்றிபெறுவதென்பது சாத்தியமானதுதான் என்பதை ம.வி. மு இனரின் தாக்குதல் முயற்சி தமக்கு ஏற்படுத்தியதாக அவர் மேலும் கூறினார். "அவர்களின் தாக்குதல் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது, அவர்களிடம் சரியான ஆயுதங்கள் இருக்கவில்லை, பயிற்சிகள் ஏதுமின்றியே அவர்கள் தாக்குதலை ஆரம்பித்தார்கள், அவர்களின் தலைமை மிகவும் பலவீனமானதாக இருந்தது, அதனாலேயே அவர்களது திட்டம் பிழைத்துப்போனது" என்றும் அவர் கூறினார். "நாங்கள் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம், கைப்பற்றும் ஒரு பிரதேசத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால், அப்பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சிக்கக் கூடாது என்பதுதான். இதன்படி, ம.வி. மு செய்தது தற்கொலைக்குச் சமனானது. ஆரம்பத்தில் பாரிய நிலப்பரப்புக்களை அவர்கள் கைப்பற்றிக்கொண்டாலும், பின்னர் ராணுவமும் பொலீஸாரும் பதில்த்தாக்குதல்களை ஆரம்பித்தபோது, அவர்களை தாம் கைப்பற்றிய இடங்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டு ஓடி ஒளித்துக்கொண்டனர். அதனேலேயே நாம் மறைந்திருந்து தாக்கிவிட்டு, மறைந்துவிடும் நகர்ப்புற கெரில்லா பாணியைக் கையாண்டோம்". "அதேவேளை, வங்கதேச உருவாக்கத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மிகவும் சிக்கலானவை. சமஷ்ட்டிக் கட்சியின் பிரச்சாரகரான மாவை சேனாதிராஜாவோ அல்லது இளைஞர்களை உசுப்பேற்றும் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் கோவை மகேசன் ஆகியோர் போதிக்கும் பாடங்களைப் போலல்லாமல் மிகவும் சிக்கலானவை" என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் இந்திரா காந்தியின் பாக்கிஸ்த்தானின் மீதான ராணுவ வெற்றியையும், வங்கதேச உருவாக்கத்தையும் பாராட்டி சமஷ்ட்டிக் கட்சியினர் 1972 ஆம் ஆண்டு தைமாதம் 12 ஆம் திகதி காங்கேசந்துறையில் 7 கட்சி பேரணியொன்றை நடத்தியிருந்தனர். அங்கே சமூகமளித்திருந்த இளைஞர்களின் தலைவர்கள், இலங்கையிலும் இந்தியா வங்கதேசத்தில் செய்ததுபோல தமிழர்களுக்கென்று தனிநாட்டை விடுவித்துதரும் என்று மக்களிடம் கூறத் தலைப்பட்டனர். ஆனால், அவர்கள் கவனிக்கத் தவறிய ஒருவிடயம் தான் வங்கதேசத்தின் விடுதலையென்பது வெறுமனே இந்திய ராணுவத்தின் நடவடிக்கையினால் மட்டுமே உருவானதல்ல என்பது. நன்கு பயிற்றப்பட்டு, நன்றாக ஆயுதம் தரித்த, வெகுவாக ஒழுங்கமைக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான வீரர்களைக்கொண்ட முக்திபாகினி எனும் கிளர்ச்சிப்படையுடன் சேர்ந்தே இந்திய ராணுவம் மேற்குப் பாக்கிஸ்த்தான் ராணுவத்தைத் தோற்கடித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சி தனது வன்முறையற்ற அகிம்சா ரீதியிலான போராட்டப் பாதையினை மாற்ற ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. அமிர்தலிங்கம் மட்டுமே அயுதப் போராட்டம் தொடர்பான சாதகமான எண்ணத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அவர்கூட மிகவும் அவதானமாக, மேலெழுந்தவாரியாக இதுகுறித்துப் பேசிவந்தார். "தமிழர்கள் தீர்க்கமான விடுதலைப் போராட்டம் ஒன்றின் மூலம் தமக்கான தனியான நாட்டினை அடைவதற்கான நேரம் நெருங்கியிருக்கிறது. இதனை அடைவதில் வெளிநாட்டு உதவியினைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டக் கூடாது. சுதந்திரம் கடையில் வாங்கும் சரக்கல்ல. ஒரு கடுமையான போராட்டம் மூலமே அதனை நாம் பெற்றுக்கொள்ளமுடியும், தேவையேற்பட்டால் நாம் அதற்காக இரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வங்கதேசத்து மக்களை முன்னுதாரணமாகப் பாவித்துப் போராட வேண்டும்" என்று அவர் கூறினார். ஆனால், போராளிகள் வங்கதேசப் போரை அரசியல்க் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் மிகவும் ஆளமாக ஆராய்ந்தனர். அதன்மூலம் அவர்கள் ஒரு முடிவிற்கு வந்திருந்தனர், "தமிழர்கள் தமக்கான தனிநாட்டினை அடைவதற்கு இந்தியா ஒருபோதும் துணை நிற்காது". தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்தவே இந்தியா வங்கதேசப் போரில் இறங்கியது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் இருந்து பாக்கிஸ்த்தானின் அச்சுருத்தலை அது எதிர்கொண்டு வந்தது. சீனாவுடனான அதன் மோதலையடுத்து வடக்கிலிருந்தும் அது அச்சுருத்தலினை எதிர்நோக்கத் தொடங்கியிருக்கிறது. ஆகவேதான், மேற்குப் பாக்கிஸ்த்தானிலிருந்து கிழக்குப் பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து, தனியான நாடாக அங்கீகரிப்பதன்மூலம், கிழக்கிலிருந்த எதிரியை அது இல்லமலாக்கியிருக்கிறது. ஆனால், இலங்கையிலோ நிலைமை வித்தியாசமானது. இலங்கையிலிருந்து ஈழத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தால், ஈழம் எனும் நட்பு அயல் நாட்டை அது கொண்டிருக்கும். ஆனால், அது இந்தியாவுக்கெதிரான இலங்கை எனும் நாட்டை உருவாக்கிவிடும். இந்த புதிய எதிரி நாடு இந்தியாவின் எதிரிகளுடன் சேர்ந்துவிடும். ஆகவேதான், இந்தியா ஒருபோதுமே ஈழம் எனும் தமிழருக்கான தனிநாடு உருவாவதற்கு எமக்கு உதவப்போவதில்லை. அவர்கள் கூறுவது சரிதான். இந்தியாவின் அன்றைய நிலைப்பாடும், இன்றைய நிலைப்பாடும் இதுதான் என்பதும் சந்தேகமில்லை.
  14. நம்பிக்கையிழந்த தமிழர்கள் சிறிமாவின் அதிதீவிர இனவாத நிலைப்பாடு தமிழரிடையே கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது, குறிப்பாக இளைஞர்களிடையே இது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் சிங்களவர்களை மேலும் நம்பத் தயாராக இருக்கவில்லை. தமிழர்களின் மனநிலை சிறிது சிறிதாக இறுக்கமடையத் தொடங்கியிருந்தது. அரசியல் யாப்புருவாக்கத்தில் அதுவரையில் பங்களிப்புச் செய்துவந்த சமஷ்ட்டிக் கட்சியை அதிலிருந்து உடனடியாக விலகுமாறு இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். "உங்களது கோரிக்கைகள் அனைத்தையுமே அவர்கள் நிராகரித்துவிட்ட பின்னரும் இன்னும் ஏன் அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்து வருகிறீர்கள்?" என்று அவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். அடங்காத் தமிழன் என்று அறியப்பட்ட சுந்தரலிங்கம் இதுதொடர்பாக தனது கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டிருந்தார், "உங்களை போகவேண்டாம் என்று சொன்னோம். உங்களை மீறி அவர்கள் தமக்கு விரும்பியதைச் செய்துவிடுவார்கள் என்று கூறினோம். இப்போது என்ன நடந்திருக்கிறதென்பதை பாருங்கள்? உங்களைத் தமது பலத்தின் மூலம் தோற்கடித்திருக்கிறார்கள். உங்கள் குரலினை அவர்கள் செவிசாய்க்கவில்லை.நாங்கள் உங்களை எச்சரித்தபடியே தமிழரின் இலட்சியத்தை பலவீனப்படுத்திவிட்டு வந்து நிற்கிறீர்கள்" என்று கடுமையாக சமஷ்ட்டிக் கட்சியினரைச் சாடியிருந்தார். சுந்தரலிங்கத்தின் விமர்சனத்திற்குப் பதிலளிக்க சமஷ்ட்டிக் கட்சி அமிர்தலிங்கத்தை நியமித்திருந்தது. பத்திரிக்கையாளர்கள் அவரைத் தொடர்புகொண்டபோது, தாம் தோற்கடிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். தனது கருத்தினை பத்திரிக்கையில் பிரசுரிக்க வேண்டாம் என்று கூறிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "அவருக்கு என்ன பதிலினை நான் கொடுக்க முடியும்? அரசாங்கத்திலிருக்கும் இடதுசாரிகள் கூட எம்மை ஏமாற்றி விட்டார்கள். இளைஞர்களின் முன்னால் நாம் இப்போது முட்டாள்களைப்போல நிற்கிறோம்" இந்த அவமானகரமான தோல்வியிலிருந்து சமஷ்ட்டிக் கட்சிக்கு வெளியே வரச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனி 21 ஆம் திகதி அரசியலமைப்புக் குழுவிலிருந்து தமது கட்சி வெளியேறுவதாக தந்தை செல்வா அறிவித்தார். தாமது முடிவுபற்றி தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "இந்த அரசியலமைப்பில் பிரஜாவுரிமை, அடிப்படை மனிதவுரிமைகள் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவர நாம் முயற்சித்தோம். ஆனால், அவை அனைத்தையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றினை அரசியல் யாப்பில் உள்ளடக்குவது குறித்தும் பேசுவதற்கு பிரதமருடனும் அரசியல் யாப்பு அமைச்சருடனும் முயற்சித்தேன். பாராளுமன்ற வாக்குப் பலத்தினால் மட்டுமல்லாமல், பரஸ்பர விட்டுக்கொடுப்பினாலும் இணக்கப்பாட்டினை உருவாக்கமுடியும் என்று நான் நம்பியிருந்தேன். ஆனால், இவை எதுவுமே அவர்களுடான பேச்சுக்களின்போது என்னால் செய்துகொள்ளமுடியாமற் போய்விட்டது. இனச்சிக்கல் குறித்து விட்டுக்கொடுப்புகளைச் செய்து இணக்கப்பட்டிற்கு வருவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அரசியல் யாப்பில் குறைந்தபட்சம் அடிப்படை உரிமைகளாவது உள்ளடக்கப்பட வேண்டும் என்று பிரதமரையும், அரசியலமைப்பு அமைச்சரையும் நாம் வேண்டினோம், எமது கோரிக்கைகளை செவிமடுக்க அவர்கள் தயாராக இருந்தபோதும், அவற்றினை ஏற்றுக்கொண்டு யாப்பில் திருத்தங்களைச் செய்ய அவர்கள் விடாப்பிடியாக மறுத்து விட்டனர்" என்று கூறினார். அரசியல் யாப்புருவாக்க சபையில் இருந்து சமஷ்ட்டிக் கட்சி வெளியேறுவதாக எடுத்த முடிவினை இளைஞர்கள் ஒரு வெற்றியாகவே பார்த்தனர். சிங்களவர்களுடனான இணக்கப்பாட்டு அரசியல் படுதோல்வியினைச் சந்தித்துவிட்டதனால், இனிமேல் வேறு போராட்ட மார்க்கங்களின் மூலமே எமது இலட்சியத்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களைத் தவிர பெரும்பாலான மக்கள் வன்முறையற்ற வழிமுறைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுப் பார்க்கலாம் எனும் எண்ணத்திலேயே இருந்தனர். புரட்சிகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் 1971 இல் அரசியலமைப்புச் சபை யாப்பினை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளை , தமிழ் இளைஞர்கள் இரு வேறு சம்பவங்களில் தமது கவனத்தைச் செலுத்தியிருந்தனர். முதலாவது பங்குனி - சித்திரை மாதங்களில் தெற்கில் இடம்பெற்று வந்த மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகம். இரண்டாவது, மார்கழியில் இடம்பெற்ற வங்கதேசத்திற்கான சுதந்திரப் போர். சாதாரண தமிழர்களோ அல்லது தமிழ் அரசியல்த் தலைவர்களோ தெற்கில் இடம்பெற்றுவந்த தீவிர இடதுசாரிகளின் ஆயுத வன்முறை பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, அது ஒரு தனிச்சிங்களப் பிரச்சினை, இரு சிங்களப் பிரிவுகளுக்கிடையேயான பிணக்கு, அவ்வளவுதான். ஆட்சியிலிருக்கும் சிறிமாவின் அரசாங்கத்திற்கும், அவ்வாட்சியுடன் முரண்பட்ட சிங்கள இளைஞர்களுக்கும் இடையேயான பிரச்சினையாகவே அதனை அவர்கள் கருதியதால், தமிழர்களுக்கும் அப்பிரச்சினைக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், வங்கதேச விடுதலைக்காக அங்கே நடந்துவந்த போர்பற்றி அதிக அக்கறை தமிழர்களால் காட்டப்பட்டது. பல தமிழர்கள் இந்தப் பிரச்சினை ஆரம்பமாகிய சமயத்திலிருந்தே அதனை மிக ஆளமாக உள்வாங்கி செய்திகளைப் பிந்தொடர்ந்து வந்தனர். தமிழர்கள் இந்தப் போரில் அதிக ஆர்வம் காட்டக் காரணமாக அமைந்தது இந்தியா, இன்னொரு நாட்டின் சுதந்திரத்திற்காக போரில் இறங்கியிருக்கிறது என்பதுதான். அதுமட்டுமல்லாமல், போரின் இறுதியில் வங்காளதேசம் எனும் புதிய சுதந்திர நாடு உருவாக்கப்பட்டதையும் அவர்கள் உன்னிப்பாக அவதானித்து வந்தார்கள். தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைக் கலகமும், வங்கதேச சுதந்திரப் போராட்டமும் கிட்டத்தட்ட 1970 இன் ஆரம்பகாலத்திலேயே உருப்பெறத் தொடங்கியிருந்தன. இந்த இரு சம்பவங்களுக்குமான அடிப்படைக் காரணங்கள் ஏறத்தாள ஒரேமாதிரியானவை. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த தெற்கின் சிங்கள இளைஞர்கள் அரசுக்கெதிரான சுலோகமாக "எங்களுக்கு தேங்காய்ப்பாலைத் தந்துவிட்டு, கொழும்பிலிருப்பவர்களுக்கு பசுப்பாலையா கொடுக்கிறீர்கள்?" என்பதை முன்னிறுத்தினார்கள். அதேவேளை வங்கதேச சுதந்திரப் போரில், "கிழக்குப் பாக்கிஸ்த்தானை மேற்குப் பாக்கிஸ்த்தான் சுரண்டுகிறது" என்பது கோஷமாக முன்வைக்கப்பட்டது.
  15. பொறுமையிழந்த தமிழ் மக்கள் 1970 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் வவுனியாவில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு கொல்வின் ஆர் டி சில்வாவின் வேண்டுகோள் பற்றி ஆராய்ந்தது. கூட்டத்தில் பேசிய தந்தை செல்வா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்ல நல்ல விடயங்களை இந்த அரசியல் யாப்பில் உள்ளடக்கியிருப்பதால் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தினைத் தவற விடக்கூடாது என்று கூறினார். சி ராஜதுரை, சி என் நவரட்ணம் ஆகியோர் இதனால் தமிழருக்கு ஏதாவது நலன்கள் கிடைக்கும் என்று நம்புகிரீர்களா என்று செல்வாவிடம் தமது சந்தேகத்தை எழுப்பினர். இறுதியில் இந்த அழைப்புப் பற்றி தமிழ்ச் சமூகத்திலுள்ள முக்கியமானவர்களுடன் கலந்துரையாடி அரசியலமைப்புச் சபையில் பங்கேற்பதா இல்லையா என்பதனை முடிவெடுக்கலாம் என்றும், அவ்வாறு பங்கெடுக்கும் பட்சத்தில் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கான தீர்வுகளை எப்படி உறுதிசெய்துகொள்ளலாம் என்பதுபற்றியும் தீர்மானிக்கலாம் என்றும் முற்றாகியது. சரியாக ஒரு வாரத்தின் பின்னர் கொழும்பு சைவ மங்கையர் கழக மண்டபத்தில் கூடிய சமஷ்ட்டிக் கட்சியினர், கொழும்பிலிருந்த பிரபலமான தமிழ் வழக்கறிஞர்கள், மூத்த தமிழர்கள் ஆகியோருடன் நீண்ட கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைகளின் முடிவில் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்வதென்று முடிவாகியது. அதேவேளை, யாப்பினை உருவாக்கும் பொழுது தமிழர்களுக்கான உரிமைகள் உள்ளடக்கப்படுவதை யாப்புருவாக்கத்தில் பங்குபற்றும் தமிழ்ப் பாரளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற கலந்தாலோசனைகளின் முடிவில் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "இக்கூட்டம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் யாப்பு உருவாக்கச் சபையில் கலந்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. மேலும், இந்த யாப்பில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகள் சமஷ்ட்டி அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை இவர்கள் அரசிடம் முன்வைப்பார்கள். மத்திய அரசிடமிருந்து கணிசமான அதிகாரங்கள் பிராந்தியங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்யும் வழியில் யாப்பு அமைய இவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தும், தாய்மொழியில் கல்விகற்கும் நிலையும் ஏற்பட அழுத்தம் கொடுப்பதுடன் அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் இருக்கவும், அவ்வாறு மீறப்படும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் ஏற்பாடுகளும் உள்ளடக்கப்படுவதை இவர்கள் உறுதிசெய்வார்கள். மேலும் அதிகாரம் மிக்க அமைப்பொன்றினை நாம் உருவாக்கி, அதன்மூலம் எமது பரிந்துரைகள் பட்டியலிடப்பட்டு அரசிடம் கையளிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றும் கூறினார். பிரதமர் சிறிமாவின் அழைப்பினையேற்று 1970 ஆம் ஆண்டு, ஆடி 19 அன்று ரோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று நாள் கருத்தரங்கின் பின்னர் அரசியலமைப்பு உருவாக்கச் சபையினை சேர்ந்து உருவாக்கினார்கள். இச்சபை புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அதனைச் சட்டமாக மாற்றவும், இறுதியில் அதனை அரசியலமைப்பாக நடைமுறைப்படுத்தவும் முடிவெடுத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனா, சமஷ்ட்டிக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ் கதிரவேற்ப்பிள்ளை, தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வி ஆனந்தசங்கரி ஆகியோர் தமது கட்சிகள் ஆதரவு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு இருக்கும் என்பதனை உறுதிப்படுத்தினர். அரசியலமைப்பை வரைவதற்காக அமைக்கப்பட்ட செயலணி அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருந்ததுடன் அரசியலமைப்பின் அடிப்படை நகலினை இனிவரும் கூட்டங்களில் வரையலாம் என்றும் முடிவெடுத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு கமிட்டி தமது பரிந்துரைகளை ஒரு நகலாக வரைந்து புரட்டாதி மாதமளவில் பிரதான அரசியலமைப்பு குழுவின் முன்னால் சமர்ப்பித்தது. அந்த பரிந்துரை நகலில் 7 தலைப்புகளின் கீழ் 60 கட்டுரைகள் வரையப்பட்டிருந்தன. தமிழர்களின் பிரதான ஐந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய அடிப்படை தீர்வுகளை இந்த நகல் கொண்டிருந்தது. சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த பரிந்துரைகளில் பகுதி 1 சமஷ்ட்டிக் கட்டமைப்புப் பற்றி விவரிக்கிறது. அதன்படி ஒரு மத்திய அரசாங்கமும் ஐந்து பிராந்திய அரசுகளும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து பிராந்தியங்களும் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தன. பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள்ஒரு பிராந்தியமாகவும், தென்னஞ்செய்கை அதிகமாகக் காணப்படும் வடமேற்கு மற்றும் வட மத்திய பகுதிகள் ஒரு பிராந்தியமாகவும், தேயிலை, இறப்பர் அதிகமாகப் பயிரிடப்படும் ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் இணைந்து மூன்றாவது பிராந்தியமாகவும், வடமாகாணம், மட்டக்களப்பு, திருகோணமலை அடங்கிய கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் இணைந்து வட கிழக்குப் பிராந்தியமாகவும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அம்பாறை மாவட்டம் தென்கிழக்குப் பிராந்தியமாகவும் வகுக்கப்பட்டிருந்தன. பகுதி ஒன்றில் மத்திய அரசும், பிராந்திய அரசுகளும் அதிகாரத்தினை எவ்வாறு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுபற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கம் பாராளுமன்றம் மூலம் நடத்தப்படும் அதேவேளை பிராந்திய அரசுகள் அவற்றிற்கான பிராந்திய அதிகார சபைகளினால் நிர்வகிக்கப்படும். இந்த பிராந்திய அலகுகளுக்கான நிர்வாக உறுப்பினர்களை அப்பிராந்தியங்களின் மக்களே தெரிவுசெய்வார்கள். பிராந்திய அலகுகள் மேலும் பல நிர்வாகக் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கான தலைவர்கள் உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்படுவார். இந்தக் கமிட்டியின் தலைவர்கள் பிராந்திய சபைக்கான உறுப்பினர்களை பரிந்துரைக்க, இவ்வாறு பரிதுரைக்கப்படும் உறுப்பினர்களால் அப்பிராந்தியத்துக்கான முதலமைச்சர் தீர்மானிக்கப்படுவார். இதன்படி மத்திய அரசாங்கம் பின்வரும் விடயங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும். சர்வதேச தொடர்பாடல்கள், பாதுகாப்பு, சட்டம் & ஒழுங்கு, காவல்த்துறை, பிரஜாவுரிமை, குடிவரவு & குடியகல்வு, சுங்கத்துறை, தபால் & தொலைத்தொடர்புத்துறை, துறைமுகங்கள், கடல், வான் மற்றும் ரயில் போக்குவரத்து, பிராந்தியங்களுக்கிடையிலான வீதிப் பராமரிப்பு, மின்சாரத்துறை, நீர்ப்பாசனம், அளவைகள், சுகாதாரம் & கல்வி தொடர்பான கொள்கை வகுப்பு, மத்திய வங்கி & பணவியல் கொள்கை. இவை தவிர்ந்த ஏனைய துறைகளும் அதிகாரங்களும் பிராந்திய சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பகுதி 4 தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழிகளாக பயன்பாட்டில் இருக்கும் என்றும், வடக்குக் கிழக்கில் நீதிமன்ற சேவைகள் தமிழ் மொழியிலேயே நடைபெறும் என்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நீதிமன்ற சேவைகள் சிங்கள மொழியிலேயே நடைபெறும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் நாட்டில் எந்தவொரு தனிமனிதனும் தனது தாய்மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பாட முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது. பகுதி 5 இன்படி, பிராந்தியங்களின் மக்களுக்கான அரச கட்டளைகள், அறிவுருத்தல்கள் அவர்களின் தாய்மொழியிலேயே அனுப்பிவைக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. பகுதி 3 ஒவ்வொரு தனிமனிதனுக்குமான அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுவதோடு தனிமனிதனுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராக அம்மனிதன் நீதிச்சேவையினைப் பெற்றுக்கொள்வ்தற்கான அடிப்படை உரிமை என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. உத்தேச அரசியலமைப்பினை வழிநடத்திச் செல்லும் குழுவும், பகுதிகளுக்குப் பொறுப்பான குழுக்களும் 1971 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து தொடர்ச்சியாகக் கூடி கலந்தாலோசித்து வந்தபோதும் கூட, சமஷ்ட்டிக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நகலினை ஏறெடுத்தும் பார்க்க அவர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை தீர்மானங்களை அரசியல் யாப்பாக்குவதிலேயே குறியாக இருந்தனர். அதன்படி அரசு முன்வைத்த தீர்மானங்களில் முதலாவதாக இலங்கை நாடு சுதந்திரமான, இறமையுள்ள சோசலிசக் குடியரசு என்பது சேர்க்கப்பட்டு, முற்றான ஆதரவுடன், ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது அடிப்படைத் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியினை மட்டுமே கொண்ட நாடாகும்". இது தொடர்பாக சமஷ்ட்டிக் கட்சி தனது கடுமையான ஆட்சேபணையினை அரசிடம் முன்வைத்தபோதும்கூட, அதனை அரசு கண்டுகொள்ளவில்லை. எஸ் தர்மலிங்கம் சமஷ்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தர்மலிங்கம் இந்த அரசியலமைப்பில் மாற்றம் ஒன்றினை பங்குனி 16 அன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அவரின் மாற்றம் பின்வருமாறு கூறியது, "இலங்கைக் குடியரசு பிரிவினையற்ற சமஷ்ட்டிக் குடியரசாக இருக்கும்" என்பதாகும். பாராளுமறத்தில் சிங்களத் தலைவர்களிடம் மன்றாட்டமாகப் பேசிய தர்மலிங்கம், இனச்சமத்துவம் இல்லையேல் நாடு பாரிய இனச்சிக்கலுக்குள் அகப்படும் என்றும், பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைக் காணும் என்றும் கூறினார். ஆகவே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக் கூடியது என்றும், இதனால் முழு நாடுமே நண்மைஅடையும் என்றும் கூறினார். ஆனால், அரச தரப்பிலிருந்த் அனைத்து உறுப்பினர்களும் தர்மலிங்கத்தின் வேண்டுகோளினை முழுமையாக எதிர்த்துப் பேசியதுடன் சமஷ்ட்டி தொடர்பில் தாம் ஒருபோது சிந்திக்கவோ செயற்படவோ போவதில்லையென்றும் கூறினர். தர்மலிங்கத்தின் பேச்சு கீழே, "உங்களிடம் சமஷ்ட்டி அமைப்புப் பற்றிப் பேச ஆணையோ அதிகாரமோ இல்லையென்றால் குறைந்தபட்சம் மத்திய அரசிடம் குவிந்துகிடக்கும் நிர்வாக அதிகாரங்கச்ளையாவது மாநிலங்களுக்குப் பகிர்ந்துகொடுக்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள்". "நான் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1947 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்ற அமர்விலேயே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் ஒற்றையாட்சி அமைப்பினை முற்றாக நிராகரித்து விட்டார்கள். அதற்கு மேலதிகமாக 1965 இல் இடம்பெற்ற தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்விற்கே தமது ஆணையைத் தந்திருக்கிறார்கள்". என்று கூறினார். ஆனால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்த ஆட்சேபணைகளுக்கும் மத்தியிலும் ஒற்றையாட்சியை மையமாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு பங்குனி 27 அன்று சட்டமாக்கப்பட்டது. தர்மலிங்கம் ஒரு தீவிர சோஷலிச ஆதரவாளர். சிங்கள அரசுத் தலைவர்களின் இனவாதப் போக்குக் குறித்து மனமுடைந்த அவர் பின்வருமாறு தமிழ்ப் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார், " இன்றைய நாள் இலங்கையின் துரதிஷ்ட்டமான நாள். எனது சிங்கள நண்பர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சிங்கள மக்கள் பற்றியும், அவர்களின் நலன்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். தமிழர் தரப்பு நியாயங்களை பார்க்க மறுக்கும் அவர்கள் , தமிழர் நலன்கள் பற்றி எதுவித அக்கறையினையும் கொண்டிருக்கவில்லை". ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்குள்ளேயே இலங்கையினை வழிநடத்த ஆரம்பித்த சிங்களத் தலைவர்கள், சமஷ்ட்டி கட்சி பரிந்துரைத்த தமிழ் மொழிக்கான அந்தஸ்த்து, உத்தியோக பூர்வ மொழிப் பயன்பாடு குறித்தும் கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்ததுடன், அதனையும் முற்றாக நிராகரித்தும் இருந்தனர். இதற்கு மாற்றீடாக அரசு முன்வைத்த அடிப்படை தீர்மானம் பின்வருமாறு கூறியது, "1965 ஆம் ஆண்டின் இலங்கை அரசியல் யாப்பின் பகுதி 33 இன் படி இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாக சிங்களம் மட்டுமே இருக்கும்" என்று கூறியது. இதன்மூலம் சிறிமாவின் அரசு முன்னைய பிரதமர் பண்டாரநாயக்காவின் 1965 ஆம் ஆண்டின் தனிச்சிங்களச் சட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழ் மொழியினை முடிந்தளவிற்கு தமிழர் பகுதிகளில் பயன்படுத்தும் சட்டத்தினை மீளவும் கொண்டுவருமாறு சமஷ்ட்டிக் கட்சியினர் முன்வைத்த கோரிக்கையினையும் அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. அத்துடன், சிங்கள மொழிக்கு விசேட அந்தஸ்த்தும், மொழிரீதியிலான வழக்குகள் பிற்காலத்தில் வருமிடத்து அதற்கெதிரானா காப்பும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. மேலும், அடிப்படை தீர்மானங்களின்படி மொழிதொடர்பான சட்டங்கள் அனைத்தும் சிங்களத்திலேயே இருக்குமென்றும், தேவையேற்படின் அச்சட்டங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான அனைத்துச் சட்டங்களும் தமிழ் மொழியிலும் இருக்கும் எனும் கோரிக்கை இந்த அடிப்படைத் தீர்மானத்தின் மூலம் முற்றாக நிராகரிப்பட்டுப் போனது. அத்துடன், நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே செயற்பாடுகள் நடைபெறவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் சமஷ்ட்டிக் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றச் செயற்பாடுகளில் தமிழ்மொழியே பயன்படுத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையும் இச்சட்டத்தின்மூலம் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்தது. கே ஜெயக்கொடி தமிழ் மொழியும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முற்றாக நிராகரிக்கப்பட்டு, சிங்களவர்களுக்கும், சிங்கள மொழிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வரையப்பட்டு சட்டமாக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக் குறித்து பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் சமஷ்ட்டிக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே ஜெயக்கொடி பாராளுமன்றத்தின் தனது ஆட்சேபணையினை பின்வருமாறு தெரிவித்தார், "நீங்கள் குறைந்தத பட்சம் வடக்குக் கிழக்கில் உள்ள நீதிமன்றங்களிலாவது தமிழ் மொழியில் நீதிமன்ற அமர்வுகளை நடத்த அனுமதியுங்கள்" என்று கோரியபோது, சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை எள்ளிநகையாடி, மறுதலித்துக்கொண்டிருந்தனர். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் பெளத்த மதத்திற்கு அதிவிசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அடிப்படை தீர்மானத்தின்படி பெளத்த மதத்திற்கான முன்னுரிமை இவ்வாறு கூறப்பட்டது, " இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முக்கிய இடம் வழங்கப்படும். மேலும், பெளத்த மதத்தினை போற்றிப் பாதுகாத்து, அதனை மேலும் வளர்ப்பது அரசுகளின் தலையாய கடமையாகும். மற்றைய மதங்களுக்கான உரிமைகள் இச்சசனத்தின் 18 ஆம் பகுதி, பிரிவு 1 "டி" இல் குறிப்பிடப்பட்டதுபோல வழங்கப்படும்" என்றும் கூறப்பட்டிருந்தது. சிங்கள பெளத்த மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி இந்த அரசியலமைப்பை வரைந்தவர்கள் இத்துடன் நிற்கவில்லை. சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் பகுதி 29 இல் குறிப்பிட்டிருந்த "சிறுபான்மையின மக்களுக்கெதிரான செயற்பாடுகளிலிருந்தான பாதுகாப்பு" எனும் சரத்து இப்புதிய அரசியலமைப்பில் முற்றாக நீக்கப்பட்டிருந்தது. சோல்பரி யாப்பு, பகுதி 29 , பிரிவு 2C இன் பிரகாரம் ஒரு மதமோ, இனமோ ஏனைய மதத்தினருக்கோ அல்லது இனமக்களுக்கோ பாதகம் விளைவிக்கும் வகையில் சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்படுவதைத் தடுக்கும் சட்டமும் இந்தப் புதிய அரசியலமைப்பில் இருந்து முற்றாக அகற்றப்பட்டது. பல லட்சம் மலையகத் தமிழரின் வாக்குறிமைகளைப் பறித்தபோது நடைமுறையிலிருந்த சோல்பரி யாப்பின் சட்டம் அம்மக்களைக் காக்க முடியாதபோதும், அச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்வரை எதிர்காலத்தில் சிங்கள மக்களின் நலன்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கையினையும் இச்சோலப்ரி யாப்பின் சட்டம் தடுத்துவிடலாம் என்று அஞ்சிய சிறிமாவோ, இந்த சரத்து முற்றாக நீக்கப்படவேண்டும் என்று அரசியலமைப்பினை வரைந்தவரான கொல்வி ஆர் டி சில்வாவிடமும் ஏனைய சிங்களவர்களிடமும் கூறியிருந்தார். அத்துடன், பாராளுமன்றமே அதியுயர் அதிகாரம் மிக்க அமைப்பு என்று கூறியதுடன், பாராளுமன்றத்தில் அதிகப்படியான பெரும்பான்மையினைக் கொண்ட சிங்களவர்களின் பலம் மேலும் அதிகரிக்கப்படுவதோடு, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையேலே நாடு இயங்கும் என்பதும் இதன்மூலம் உறுதியாகியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.