யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை மேம்படுத்தும் நோக்கில் கட்டப்படும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டு மண்டைதீவு வழியால் சென்ற பொழுது மண்டைதீவில் ஆஸ்பத்திரி கட்டும் யாழ் இணைய திரி ஒன்றும் நினைவில் வந்து போனது!!!
சிறுவயதில் எனது அப்பு அம்மம்மாவுடன் இந்த வெள்ளைக்கடற்கரைக்கும் அதன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கும் ஒரேயொரு தரம் போனது நினைவில் உள்ளது.. அதன்பிறகு இம்முறை தான் போனேன்.. அங்கே போக சந்தர்ப்பங்கள் இருந்தும் இத்தனை காலமும் போனதில்லை, ஆனால் இம்முறை பார்க்க வேண்டும் போல மனதிற்கு தோன்றியது!!!இந்த வெள்ளைகடற்கரை என நான் நினைத்து வைத்திருந்தது சாட்டி என பின்னாளில் அறிந்து கொண்டேன்.
எப்பொழுதும் போல நல்லூர் மனதில் தனியான ஒரு இடத்தை பிடித்தது!!
அதிகாலையில் பொங்கல் பொங்கிய இடத்தில் மாலையில் மத்தாப்பும் சக்கர வானமும்(?) சிரித்தது!!!
பாரதியாரின் காணி நிலம் வேண்டும் கவிதையில் வரும்..
பத்து பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற்படவேணும்; - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்..
வரிகளை நினைக்க வைத்த தென்னங்காணி!!
மீண்டும் கொழும்பில் மொட்டை மாடியில் சூரிய அஸ்தமனத்தை பார்த்த மகிழ்ச்சி..சற்றே திரும்பி தூரத்தே தெரியும் தாமரை மொட்டைப் பார்த்ததும் காணாமல் போய்விட்டது!!
அவுஸ்ரேலியா திரும்பும் பொழுது மனமும் இந்த இரவின் கறுப்பு போல கவலை கொண்டது!!
இங்கே காலை வேளை சுக்கு கோப்பியை குடிக்கும் பொழுது காலஞ்சென்ற என் அம்மா உருவாக்கி விட்டுப் போன கோப்பி மரங்களையும், அவர் போட்டு தந்த கோப்பியையும் என் இலங்கை பயணத்தையும் நினைத்தபடி நிகழ்வுலகிற்கு திரும்பினேன்..!!
முற்றும்..
நன்றி
- பிரபா