ஒரு வைர வியாபாரியின் மகன் தன்தந்தையிடம் வந்து கேட்டானாம், அப்பா நான் வாழ்க்கையின் பெறுமதியை எப்படி அளப்பது? எப்படி அதற்கேற்ப என் வருங்காலத்தை அமைத்துக்கொள்வது என்று கேட்டானாம். அதற்கு அப்பா, நாளைக்கு வா நான் சொல்லித்தருகிறேன் என்றாராம். அடுத்தநாள் மகன் வந்தபோது அவன் கையில் ஒருவித கல்லைக்கொடுத்து இதை நீ உன்கையில், மற்றவரின் கண்ணில் படும்படி வைத்துக்கொண்டு குப்பை கொட்டும் இடத்தில் காலையிலிருந்து மாலைவரை நில். என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். மாலையில் வீடு வந்தமகன், அந்தக்கல்லை யாரும் பெரிதாக எண்ணவில்லை, ஏதோ வந்து பார்த்துவிட்டுப்போய் விட்டார்கள் என்றானாம். அடுத்தநாள் இதை பல்பொருள் அங்காடியில் வைத்துக்கொண்டு நில் என்றாராம், மாலையில் வந்த மகன் அதை சிலர் வந்து பார்த்தார்கள் சில்லறை விலை கேட்டார்கள் என்றானாம். மறுநாள் படித்தவர்கள் கூடும் இடமான நூல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தாராம், வந்த மகன் சொன்னாராம், யாரும் பெரிதாக அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, வந்து பார்த்தார்கள் அது என்ன விலை என்று கேட்டார்கள் போய் விட்டார்கள் என்றானாம். இன்னொருநாள் மிகுந்த ஆடம்பரமான செல்வர்கள் கூடுமிடத்தில் வைத்துக்கொண்டு நிற்கும்படி கூறினாராம். மகனுக்கு ஒரே ஆச்சரியம், என்னதான் சொல்லித்தருகிறார், கடைசியாக இதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணிக்கொண்டு போய் நின்றாராம். அவன் அங்கே நின்ற போது ஒரு பணக்காரர் அலங்கார உடையுடன் பெரிய காரில் வந்து இறங்கினாராம், இவனது கையில் கிடந்த கல்லைக்கண்டதும் அவனருகில் சென்று என்ன இங்கே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்துச்சென்று விலையுயர்ந்த ஆசனத்தில் அமரவைத்து உபசரித்து அவனது கல்லின் பெருமையையும் விலை மதிப்பையும் கூறினாராம். அவர் யாருமல்ல, வைர வியாபாரி. அதே போலவே நாம் மற்றவர்மேல் காட்டும் மரியாதை, அன்பு, இரக்கம் போன்றவையும். அதை மதிக்கத் தெரிந்தவர்களுக்கே அதன் பெருமை புரியும். நீங்கள் அவரின் குடும்ப பின்னணி, எதிர்காலம், வயதை எண்ணி மன்னித்திருந்தாலும் அவர் அதை உங்களில் பிழை இருந்தபடியாலேயே அதை செய்தீர்கள் என தவறாக நினைத்திருக்கலாம். இருந்தாலும்; உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி என்று ஒரு வார்த்தை சொல்ல தகுதியற்றவரோ என எண்ணத்தோன்றுகிறது. உங்களில்தான் பிழை என கருதுவாராகில் அவர் மீண்டும் தவறு செய்ய வாய்ப்புண்டு, அப்போ யாரும் உங்களைப்போல் பெருந்தன்மையாக நடந்துகொள்ளப்போவதில்லை, ஏற்கெனவே சிலர் இந்த விடயத்தில் அவரைப்பற்றி புரிந்திருப்பார்கள், அவரது செயலுக்கான குறிப்பும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், அப்போ அவர் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வதுடன் அதற்க்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டி வரலாம். போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்ட போது, அவருக்கு தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக எப்படி நடக்கவேண்டுமோ அப்படி மரியாதை செலுத்தியிருப்பார். ஆனால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரை மன்னிப்பு கேட்க செய்யாமல் காட்டிய பெருந்தன்மையை அவர் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கலாம். எது என்னவாக இருந்தாலும் பெரியவா பெரியவாள் தான்!