Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88827
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33811
    Posts
  3. satan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10275
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/11/23 in all areas

  1. அரச வேலைவாய்ப்பிற்காக வன்னியில் குடியேறி வாழ்வதை நிராகரித்த யாழ்ப்பாணத் தமிழர்களும், எல்லைக்கிராமங்களில் தமிழர் தாயகக் காப்புச்சுவர்களாகக் குடியேறிய மலையகத் தமிழர்களும் அருளப்புவின் முன்னோடியான வன்னிக் குடியேற்றமும், கித்துள் ஊற்றில் தமிழ் இளைஞர்கள் குடியேற எடுத்த முயற்சியும் வித்தியாசமானவை. ஏனென்றால், யாழ்ப்பாணத்துத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அரசுச் சேவையில் இணைவதே முக்கிய இலக்காக இருந்தது. ஆகவேதான் வன்னியில் சிங்கள எல்லைக்கிராமங்களில் குடியேற அருளப்பு விடுத்த வேண்டுகோள்களை எவரும் செவிசாய்க்க முன்வரவில்லை. அவ்வாறே 1977 ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்கள் வன்னியில் குடியேறுமாறு யாழ்ப்பாணத்துத் தமிழர்களை அழைத்தபோது அதற்கான ஆதரவினை வழங்க அவர்கள் தவறிவிட்டனர். தேவநாயகம் ஆனால், தமிழ் மக்களில் ஒருபகுதியினரான மலையகத் தமிழர்கள், தாம் வேலை செய்துவந்த தேயிலை இறப்பர்த் தோட்டங்களை விட்டு வெளியேறி வடக்குக் கிழக்கில் குடியேறி விவசாயம் செய்வதற்கு விருப்புடன் முன்வந்தனர். 1970 களில் ஆங்கிலேயக் கம்பெனிகள் தேசிய மயமாக்கப்பட்டபோது அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களில் பலர் வேலைவாய்ப்பினை இழந்திருந்ததுடன், பலர் தாம் காலம்காலமாக வாழ்ந்துவந்த பிரதேசங்களை விட்டும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆகவே அவர்கள் வடக்குக் கிழக்கு நோக்கி, குறிப்பாக வவுனியா மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்கள் நோக்கி நகர ஆரம்பித்தனர். அரசியல் பின்புலம் கொண்ட தமிழ் அமைப்புக்கள் மலையகத் தமிழர்களை இப்பகுதிகளில் கூடியேற்றினர். 1975 ஆம் ஆண்டில் கல்க்குடா தொகுதியில் அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகத்தின் முயற்சியினால் சில குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. தமிழர் இவ்வாறு குடியேற்றப்பட்டமையினை அரசு கடுமையாக எதிர்த்திருந்ததுடன், பொலீசாரைக் கொண்டு இந்த குடியேற்றத்தை உடனேயே கலைத்துவிடுமாறும் ஆணையிட்டது. அரச ஆணைக்கு அமைவாக மலையகத் தமிழர்கள் குடியேறிய கல்க்குடாப் பகுதியில் கொட்டகைகளை பொலீஸார் எரியூட்டினர். பலர் தாக்கப்பட்டதோடு, கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து தேவநாயகமும், தொண்டைமானும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு தந்திமூலம் விடுத்த வேண்டுகோளில் இலங்கைப் பிரதமரான சிறிமாவுக்கு இதுகுறித்து அழுத்தம் கொடுக்குமாறு கேட்டிருந்தனர். திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் தமிழ்க் குடியேற்றப்பகுதியான புணாணை - இன்று முற்றான ராணுவமயமாக்கலினூடாக சிங்கள மயமாக்கப்பட்டுவருகிறது பொலீஸாரால விரட்டியடிக்கப்பட்ட தமிழ்க் குடியேற்றவாசிகள் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி சண்முகநாதனிடம் முறைப்பாடு செய்யவே, வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகநாதனும் பொலீஸார் நடந்துகொண்ட முறை சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்தார். இதன்மூலம் அத்தமிழர்கள் புணாணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீளவும் குடியேற வழி அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்த ஆரம்பகால மலையகத் தமிழர்களின் குடியேற்றங்களின் வெற்றியினையடுத்து மேலும் பல மலையகத் தமிழர்கள் வடக்குக் கிழக்கின் எல்லையோராங்களில் குடியேற ஆரம்பித்தனர். இவ்வாறான குடியேற்றங்கள் 1977 ஆம் ஆண்டின் தமிழர் மீதான திட்டமிட்ட இனக்கலவரத்தின் பின்னர் பலமடங்காக அதிகரித்ததுடன், பின்னாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் தொடர்ச்சியாக இக்குடியேற்ற எண்ணிக்கை அதிகரித்து வரலாயிற்று. இனக்கலவரத்தின் பொழுது தமிழ் மக்கள் தமது வாழ்நாள் சேமிப்புக்களை இழந்து மிகவும் ஏழ்மையான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையினை கண்ட இளைஞர் அமைப்பொன்று, கொழும்பில் அமைந்திருந்த பாரிய அகதிமுகாமான சரஸ்வதி மண்டபத்தில் கூடி, வடக்குக் கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்களைக் குடியேற்றி அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கென்று ஒரு அமைப்பை உருவாக்கினர். தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் என்று பெயரிடப்பட்ட இந்த அமைப்பின் தலைவராக முன்னணி தொழிற்சங்கவாதியான நித்தியானந்தாவும், செயலாளராக வர்த்தக வழக்கறிஞரான கந்தசாமியும் தெரிவுசெய்யப்பட்டனர். திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லைப்பகுதிகளில் தமிழ் அகதிகளை குடியேற்றியபோதும் இவ்வமைப்பு ஏனைய தொண்டர் நிறுவனங்களுக்கான உதவிகளை வழங்குவதிலேயே அதிக சிரத்தை எடுத்திருந்தது.
  2. ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான். ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு... "ஹலோ..! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! . "நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? . "வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..! கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா?" இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" . இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.. சாரி..! எனக்கு விருப்பம் இல்லை... நான் ஒரு ஆப்பர் தரேன். என்னை லவ் மேரேஜ் பண்ணா... ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்..! சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க? இப்ப புரியுதா... நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!
  3. யாரும் பொறாமைப்படக் கூடாது..........! 😂
  4. காந்தியத்தை திட்டமிட்டுச் சிதைத்த சிங்களப் பேரினவாதம் சிங்களப் பேரினவாதத்தின் தூண்களில் ஒன்றான அன்றைய பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, ஜெயாருடன் வவுனியா நகருக்கான உதவிப் பொலீஸ் அத்தியட்சகராக ஹேரத் எனும் சிங்கள இனவாதி நியமிக்கப்பட்டதன் பின்னர் காந்தியத்திற்கெதிரான பிரச்சாரங்கள் வேகம்பெறத் தொடங்கின. பொலீஸ் மா அதிபரூடாக பாதுகாப்பு அமைச்சிற்கு ஹேரத் அனுப்பிய பல அறிக்கைகளில் "சட்டத்திற்குப் புறம்பான இந்தியக் குடியேற்றவாசிகளை" உடனடியாக அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிக்கைகள் ஜனாதிபதி ஜெயார் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் தொடர்ச்சியாக கவனத்தில் எடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, அன்று பொருளியல், வர்த்தக மற்றும் கப்பற்றுரை அமைச்சராகவிருந்த இன்னொரு பெயர்பெற்ற இனவாதியான லலித் அதுலத் முதலியிடம் காந்தியம் குறித்து விசாரித்து தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜெயார் பணித்தார். இதற்கமைய 1982 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் ஆரம்பத்தில் காந்தியம் பற்றி விசாரிக்கவென்று இப்பகுதிக்குச் சென்றிருந்தார் லலித் அதுலத் முதலி. காந்தியம் தொடர்பான தனது விசாரணைப் பயணம் பற்றி வெளித்தெரியாதிருக்க, அப்பயணத்தை அமைச்சர் ஒருவரின் சாதாரண பயணமாகக் காட்டிக்கொண்ட லலித் அதுலத் முதலி, மாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சந்தையொன்றைத் திறக்கவே தான் வந்ததாகக் காட்டிக்கொண்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தைப்பற்றிய செய்திகளைச் சேகரிக்க அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இருந்தேன். மாங்குளம் விருந்தினர் மாளிகையில் நாம் தங்கவைக்கப்பட்டதோடு சனிக்கிழமை இரவு ஒன்றுகூடல் ஒன்றும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அந்த ஒன்றுகூடலில் வவுனியா நகரின் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ஹேரத்தும் பங்குகொண்டிருந்தார். பத்திரிக்கையாளர்களிடையே பேசிய ஹேரத், வவுனியாவில் இடம்பெற்றுவரும் விவசாயக் குடியேற்றங்களினால் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்டார். இலங்கையில் வாழத் தகுதியில்லாத இந்திய வம்சாவளித் தமிழர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், காந்தியமும் சட்டத்திற்கு முரணான வகையில் வவுனியா மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான காணிகளில் குடியேற்றிவருவது பாரிய குற்றமாகும் என்று அழுத்தமாகக் கூறினார். பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தவுடன், தனிமையில் என்னுடன் உரையாடவேண்டும் என்று அழைத்த ஹேரத், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவனான என்னிடம், இக்குடியேற்றங்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தவன் என்கிற ரீதியில் எனது உணர்வுகளை அறிந்துகொள்ள எத்தனித்தார், "இக்காணிகள் யாழ்ப்பாணத்து விவசாயிகளுக்குத்தான் கிடைக்கப்பட வேண்டும். ஆனால், அவர்களோ இந்தியர்களைக் குடியமர்த்துகிறார்கள்" என்று என்னைப் பார்த்துக் கூறினார். மறுநாள் அப்பகுதியில் வியாபாரம் செய்துவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் நான் பேசியபோது, வவுனியாவில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குடியேற்றப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தவர்கள் கிளர்ந்தெழவேண்டும் என்று தம்மை ஹேரத் நச்சரித்துவந்ததாகக் கூறினார்கள். மாங்குளத்தில் லலித்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தையினைத் தொடர்ந்து நாம் வவுனியாவில் காந்தியத்தினால் அமைக்கப்பட்டிருந்த விவசாயக் குடியேற்றக் கிராமங்களைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே விளைச்சல் மிகுந்த காணிகளில் செழிப்பாக விவசாயம் செய்துவரும் இந்திய வம்சாவளித் தமிழர்களை நாம் கண்டோம். லலித் அதுலத் முதலியோ ராணுவத்துடனும், பொலீஸாருடனும் ரகசியச் சந்திப்புக்களை அவ்வேளை நடத்திக்கொண்டிருந்தார். இந்த கூட்டங்களிலேயே இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்த விவசாயக் குடியேற்றங்களிலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பின்னர் அறிந்துகொண்டோம். ஆனால், தமது இந்த நாசகாரத் திட்டத்தினை உடனடியாகச் செய்ய அரசு எத்தனிக்கவில்லை. ஆகவே, தமது சதிச் செயலுக்கான உகந்த சூழ்நிலையினை தமது செய்தி ஊடகங்களைக் கொண்டு சிறுகச் சிறுக அரசு உருவாக்கத் தொடங்கியது. இவற்றுள் ஒன்றுதான் இக்குடியேற்றங்களூடாக காந்தியம் அமைப்பு மலையகத் தமிழர்களை புளொட் அமைப்பிற்காக சேர்த்துவருவதான பிரச்சாரம். சித்திரை 6 ஆம் திகதி வவுனியா நகரில் இயங்கிவந்த காந்தியம் அலுவலகம் பொலீஸாரினால் முற்றுகையிடப்பட்டதோடு, வைத்தியர் ராஜசுந்தரமும் கைதுசெய்து இழுத்துச் செல்லப்பட்டார். அவரது அமைப்பினால் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அலுவலகங்களும் பொலீஸரினால் மூடப்பட்டன. கொழும்பு வை எம் சி ஏ கட்டிடத்தில் தங்கியிருந்த திரு டேவிட் அவர்களும் கைதுசெய்யப்பட்டார். குருநகர் ராணுவ முகாமில் கடுமையாக விசாரிக்கப்பட்ட பின்னர் வைத்தியர் ராஜசுந்தரமும், டேவிட் அவர்களும் பணாகொடை ராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டனர். அங்கு கடுமையான சித்திரவதைகளூடாக அவர்களிடமிருந்து பலவந்தமாக வாக்குமூலங்களை பொலீஸார் பெற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்காகவும் வாதாடிய வழக்கறிஞர் குமாரலிங்கம், ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் டேவிட் அவர்கள் கடுமையான மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடலிலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், நீதிமன்ற ஆணை ஒன்றினூடாக டேவிட் அவர்களை தான் சந்திப்பதற்கான அனுமதியினையும் பெற்றுக்கொண்டார். இதன்படி, நீதிமன்றம் கொழும்பு நீதிமன்ற வைத்தியர் சல்காடோ ஆவர்களை டேவிட் அவர்களையும் ராஜசுந்தரத்தையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தது. வைத்தியர் சல்காடோ வழங்கிய அறிக்கையில் ராஜசுந்தரம் மீது கடுமையான சித்திரவதைகளும், தாக்குதல்களும் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் அவரது உடலில் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் சிறில் மத்தியூ ஊடாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ராஜசுந்தரம் மற்றும் டேவிட் ஆகியோர் மீது கடுமையான பிரச்சாரத்தை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். திரு டேவிட் அவர்களுக்கு அபகீர்த்தியை உருவாக்கும் விதத்தில் நடந்துகொண்ட சிறில் மத்தியூ, டேவிட் தங்கியிருந்த கொழும்பு யை எம் சி ஏ அறையிலிருந்து பாலியல் உணர்வினைத் தூண்டும் சஞ்சிகைகள் பலவற்றை பொலீஸார் கண்டெடுத்ததாகக் கூறி சில சஞ்சிகைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், பொலீஸாரினால் சாட்சியங்களாக கைப்பற்றப்பட்ட அச்சஞ்சிகைகள் தன்னிடம் எவ்வாறு கிடைக்கப்பட்டன என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். மேலும், ஊடகங்களை தனது பிரச்சாரக் கருவிகளாகப் பாவித்த பொலீஸார், புலிகள் இயகத்திற்கும், புளொட் அமைப்பிற்கும் இடையிலான பிணக்கினைத் தீர்த்துவைக்க ராஜசுந்தரம் முயன்றுவந்ததாகவும், பிரெஞ்சு அதிகாரிகளை தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கும்படி கோரியிருந்ததாகவும் பொய்ச் செய்திகளைக் கசியவிட்டிருந்தனர். ஆனால், பொலீஸாரினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க போதுமானவை அல்ல என்று சட்ட மா அதிபர் அலுவலகம் அறிவித்தது. இவ்வகையான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டிருக்க இலங்கை தனது சரித்திரத்தை நிரந்தரமாகவே மாற்றப்போகின்ற 1983 ஆண்டு தமிழினம் மீதான அரச ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட இரத்தக்களரி நோக்கிச் சாய்ந்துகொண்டிருந்தது.
  5. காந்தியம் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடையில் சிங்களப் பொலீஸாராலும், சிறைக் காவலர்களாலும் படுகொலை செய்யப்பட்ட வைத்தியர் ராஜசுந்தரம் (காந்தியம்), குட்டிமணி மற்றும் தங்கத்துரை காந்தியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான கட்டட வடிவமைப்பாளர் திரு டேவிட் அவர்கள் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தினால் ஆதரிக்கப்பட்ட ஒரு அமைப்புத்தான் காந்தியம். இவ்வமைப்பு இரு இலட்சியவாதிகளான வைத்திய கலாநிதி எஸ் ராஜசுந்தரம் மற்றும் கட்டிட வடிவமைப்பாளர் எஸ் அருளானந்தன் டேவிட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. 1970 களின் ஆரம்பித்திலிருந்தே அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்திருந்தபோதும், 1977 ஆம் ஆண்டில் தமிழர் மேல் அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் பின்னரே காந்தியம் அமைப்பை இவர்கள் உருவாக்கினார்கள். மீள்குடியேற்றப்பட்ட அகதிகளுக்கான விவசாய ஆலோசனைகள், உதவிகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான பொருட்கள் ஆகியவற்றினை காந்தியம் வழங்கி வந்தது. குடியேற்றப்பட்ட அகதிகளின் பிள்ளைகளுக்கான பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களை இவ்வமைப்பைச் சேர்ந்த தான்னார்வத் தொண்டர்கள் நடத்தி வந்தனர். அமெரிக்க தொண்டர் நிறுவனமான கெயர் இச்சிறுவர்களுக்கு திரிபோஷா போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிறையுணவினையும் வழங்கி வந்தது. இதற்கு மேலதிகமாக நோவிப் மற்றும் ஒக்ஸ்பாம் ஆகிய வெளிநாட்டு தொண்டர் அமைப்புக்களும் இந்த அகதிகளுக்கு உதவிவந்தன. இக்குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு இருவருடங்களுக்குள் தம்மைத்தாமே பராமரித்துக்கொள்ளவும், தமக்குத் தேவையான உணவினை தாமே தயாரித்துக் கொள்ளும் நிலைமைக்கும் வளர்ந்திருந்தன. வைத்திய கலாநிதி ராஜசுந்தரமும், மனைவியான வைத்திய கலாநிதி சாந்தி காராளசிங்கமும் 1967 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவுசெய்துவிட்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்து சென்று வாழ்ந்து வந்தனர். 1977 ஆம் ஆண்டு தமிழர் மேல் சிங்கள அரசு திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட தாக்குதல்களினால் மன உழைச்சலுக்குள்ளான இவர்கள் இருவரும் வன்னிக்குத் திரும்பி வந்து ராஜசுந்தரம் முன்னர் ஈடுபட்டிருந்த அகதிகளைக் குடியேற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவதென்று தீர்மானித்தனர். அதற்கமைய, சாந்தி காராளசிங்கம் வவுனியா நகரில் மருத்துவ சேவை நிலையமொன்றினை ஆரம்பிக்க, ராஜசுந்தரமோ காந்தியத்தின் தலைமைக் காரியாலயம் அமைந்திருந்த வவுனியா நகரிலிருந்து அகதிகளுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வைத்தியர் ராஜசுந்தரத்தின் மனிதாபிமானச் செயற்பாடுகள் வவுனியாவில் பணிபுரிந்து வந்த சிங்கள அரச அதிகாரிகளுக்கும் பொலீசாருக்கும் வெறுப்பினை ஏற்படுத்தி வந்தது. ஆகவே, அவருக்கெதிராகவும், காந்தியம் அமைப்பிற்கெதிராகவும் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரத்தினை அவர்கள் மேற்கொண்டு வந்தனர். காந்தியம் அமைப்பின் செயற்பாடுகளுக்கெதிரான விஷமத்தனமான பிரச்சாரங்களை சிங்கள ஆங்கிலப் பத்திரிக்கைகள் காவி வெளிவரத் தொடங்கின. இப்பிரச்சாரங்களின் அடிப்படையாக காந்தியம் அமைப்பின் மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அரசுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து வருகிறார்கள் என்பதாகவே இருந்தது. ஆனால், ராஜசுந்தரம் அவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, குறிப்பாக அதன் தலைவர் அமிர்தலிங்கத்திற்கெதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதனை அவருக்கெதிராகப் பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்பி வந்த பொலீஸார் அறிந்திருக்கவில்லை. மேலும், புலிகளுடன் அன்று செயற்பட்டு வந்த உமாமகேஸ்வரன் தலைமையில் புலிகள் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பண்ணையொன்றினை நடத்திவருவதையும், உமாமகேஸ்வரனுடன் ராஜசுந்தரம் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதனையும் பொலீஸார் அறிந்திருக்கவில்லை. 1978 ஆம் ஆண்டு மார்கழி மாதமளவில் முதலாவது உழுந்துப் பயிர்ச்செய்கை மிகுந்த விளைச்சலைக் கொடுத்திருந்தது. இதன்மூலம் வைத்தியர் ராஜசுந்தரம் தலைமையிலான குடியேற்றத்திட்டம் வெற்றிகரமாக இயங்கிவருவது தெரிந்தது. ஒருமுறை ராஜசுந்தரம் அவர்கள் வெளிநாட்டு விருந்தினர் ஒருவரை தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தபோது, அவர் வியந்துபோனார். பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டில் ஒன்றிற்குள் அந்த வெளிநாட்டு விருந்தினரை அமரவைத்து அருந்துவதற்கு சிற்றுண்டிகளை வழங்கிக்கொண்டே தனது உள்ளக்கிடக்கையினை அவரிடம் வெளிப்படுத்தினார் வைத்தியர் ராஜசுந்தரம். "இத்திட்டம் தொடர்பாகக் கடுமையான அழுத்தங்கள் தெற்கிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பொலீஸாரும், சிங்கள அதிகாரிகளும் இத்திட்டத்தினைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மதவாச்சியிலிருந்து சிங்களக் காடையர்களை அழைத்துவந்து எமது பண்ணைக் குடியேற்றத்தை அழித்து, அகதிகளை விரட்டப்போவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன" என்று தான் நம்புவதாக அவர் கூறினார். "இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எமக்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. இக்குடியேற்றத்திலிருந்து சில இளைஞர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியினை வழங்குவதன் மூலம் தம்மைத்தாமே அவர்கள் பாதுகாத்துக்கொள்ளமுடியும்" என்று அவர் கூறினார். புளொட் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் இவ்வாறான ராணுவப் பயிற்சிகளை குடியேற்ற இளைஞர்களுக்கு வழங்க ராஜசுந்தரம் ஆவண செய்தார்.
  6. இலங்கை ஆசியாவுக்குள் இருக்கிறது பிரியன் .......இது அவுசுக்குள் ஐரோப்பா......ஆசியாவுக்குள் என்றால் நாலு அவுஸ் வைக்கலாம்......! (ஆசியாவையும் இரசியாவின் பக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் ஐரோப்பாவுக்குள் கொண்டு வருகிறார்கள்)
  7. அவுஸ் உறவுகள் பார்த்திட்டு ஐரோப்பாவை கழுவி ஊத்தப் போகிறார்கள்.........! 😂
  8. அன்புள்ள அப்பா வணக்கம்.......! 😁
  9. குஸ் குஸ் / கோழி, காளான் சேர்த்து செய்து பாருங்கள்..........! 👍
  10. சதுப்பு நிலக் காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்.........! 😴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.