Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19139
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46797
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/25/23 in Posts

  1. பேசாமல் மாடிப்படியை எடுத்துட்டு ஒரு பழக்கடை போட்டு விடலாம்.......! 😂
  2. எனக்குப் பிடித்த பாடல். நன்றி சுவியர்.
  3. ராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் தண்டனைகளில் இருந்து விலக்களிக்கும் அரசின் சட்டம் 1983 ஆம் ஆண்டு ஆனி 3 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது வடக்கில் நிலைகொண்டிருக்கும் பொலீஸாரும், ராணுவத்தினரும் தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கான முழு அதிகாரத்தினையும் இனிமேல் கொண்டிருப்பார்கள். இதன் நிமித்தம் ஏற்படும் அனைத்துக் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்தும் அவர்களுக்கு பூரண விலக்களிக்கப்படும். பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட முழு அறிக்கையின் வடிவமும் கீழே, அரச படைகளையோ பொதுமக்களையோ கொல்வது குறித்து எந்த தயக்கமும் காட்டாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச படையினருக்கும் பொலீஸாருக்கும், நவடிக்கைகளின்போது ஏற்படும் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து முற்றான விலக்கு அளிக்கப்படும். பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் அரச படையினர் மனிதநேயத்தையும், நீதிவிசாரணைகள் பற்றிய அச்சத்தையும் பற்றிச் சிந்திக்காது தமது கடமையில் கவனம் செலுத்துவதற்காக இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு போர்க்காலச் சூழ்நிலையென்பதனால், இச்சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினரையும் பொலீஸாரியும் பாதுகாக்கவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. இந்த தண்டனை விலக்கு 1983 ஆம் ஆண்டு ஆனி 3 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் 15 A இன் மூலம் சட்டமாக்கப்பட்டது. இதன்படி ராணுவத்தினராலும், பொலீஸாரினாலும் சுட்டுக் கொல்லப்படும் எவரினதும் உடல்களை ராணுவத்தினரே எரித்துவிடவும், இக்கொலைகளில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவதைத் தவிர்க்கவும், இக்கொலைகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கவும் இந்தச் சட்டம் அனுமதியளிக்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கான அரசின் அங்கீகாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் போராளிகள் அரசிற்கொரு செய்தியினை வழங்கினர். தேர்தல்களில் பங்குபற்றக் கூடாது என்கிற புலிகளின் தடையினையும் மீறி உள்ளூராட்சித் தேர்தலில் பங்குகொள்ள முடிவெடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் திலகரை புலிகள் சுட்டுக் கொன்றனர். யாழ்ப்பாண வைத்தியசாலை ஊழியரான திலகர் ஆனி 4 ஆம் திகதி காலை 6:15 மணியளவில் சுடப்பட்டார். ராணுவத்திற்கும் பொலீசாருக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து பூரண விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்த 24 மணிநேரத்திற்குள் திலகர் கொல்லப்பட்டமையானது, போராளிகள் ஆயுதப் போராட்டம் மூலம் தமது இலக்கினை அடைவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனையே காட்டியிருந்தது. பொதுமக்கள் உரிமைகள் அமைப்பு ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பியிருந்த தந்தியில் அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் அரச படைகளுக்கான தண்டனைகளிலிருந்தான விலக்கிற்கெதிராக தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தது. இவ்வமைப்பின் தலைவரான குருநாகல் மாவட்ட கத்தோலிக்க ஆயர் லக்ஷ்மண் விக்கிரமசிங்கவும் செயலாளர் டெஸ்மன் பெர்ணான்டோவும் இத் தந்தியில் கையொப்பமிட்டிருந்தார்கள். நீதித்துறையின் அடிப்படை உரிமைகளை அனைத்து மக்களுக்கும் சமமாகப் பாவித்து குற்றமிழைப்பவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். இல்லாதுவிடில் ஜனநாயகத்தின் அடிப்படையான நீதித்துறையின் இலக்கணங்களை அரசு காற்றில் பறக்கவிட்டதாகிவிடும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தார்கள். இப்புதிய சட்டம் அரச ராணுவத்தினருக்கு மட்டுமல்லாமல், அரச ஆதரவுடனான சிங்கள தீவிரவாதிகளுக்கும் அனுகூலமாக அமைந்தது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து தமிழரின் வீடுகள், கடைகள், கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. வடக்குக் கிழக்கில், குறிப்பாக திருகோணமலையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டபோதும் தமிழர் மீதான கொடூரங்கள் தொடர்ச்சியாக நடந்தே வந்தன. பல குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இவற்றில் ஒருவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்திருந்தனர். ஊரடங்கு நேரத்தில் ஒருங்கமைக்கப்பட்ட சிங்களப் பயங்கரவாதிகளால் தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் அகோரத்தினை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. தமிழர் மீதான தாக்குதலில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய அதேவேளை, தாக்குதல்களிலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த தமிழர்களை. "ஊரடங்கை மீறினார்கள்" என்று சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது. பகல் வேளைகளில் தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்த ராணுவத்தினர் அங்கிருந்த ஆண்களை விசாரணைக்கென்று வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல, இக்கிராமங்களுக்குள் இரவு வேளையில் நுழைந்த சிங்களக் காடையர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், தமிழர்களின் விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்தபின் வீடுகளையும், உடைமகளையும் எரியூட்டினர். பல தமிழ்ப் பெண்கள் சிங்களக் காடையர்களால் கூடாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டனர். ஆனிமாதத்தின் பிற்பகுதியில் வடக்கிலும், திருகோணமலையிலும் சூழ்நிலை மோசமடைந்து வந்தது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து மீது ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சாரதி கொல்லப்பட்டதுடன் பல தமிழர்கள் படுகாயமடைந்தனர். காயப்பட்ட பயணிகளை அடித்துவிரட்டிய ராணுவத்தினர் பேரூந்திற்கு தீமூட்டினர். ஆனால் மறுநாள் செய்தித்தாள்களில் பேரூந்தினை தமிழ்ப் போராளிகளே தாக்கிவிட்டு சாரதியைக் கொன்று பேரூந்திற்கும் தீவைத்ததாக ராணுவம் கூறியிருந்தது. பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம், இத்தாக்குதலில் காயப்பட்டு உயிர்தப்பிய பயணிகளுடன் தான் பேசியதாகவும், இப்பேரூந்துமீது தாக்குதலை நடத்தி சாரதியைக் கொன்றது ராணுவத்தினரே என்றும், காயப்பட்ட பயணிகளை அடித்து விரட்டி பஸ்ஸிற்குத் தீவைத்தது ராணுவத்தினரே என்றும் கூறியிருந்தார். மேலும், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஆறு தமிழர்களைப் பாதுகாப்புப் படையினர் கொன்றிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். திருகோணமலையில் தமிழர்களின் நிலைமை மிகவும் பாரதூரமாக இருந்தது. இது இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வாழ்ந்த தமிழர்களுக்கு மிகுந்த வருத்தத்தினை அளித்திருந்தது. கலாநிதி எஸ்.ஏ. தர்மலிங்கமும் கோவை மகேசனும் திருகோணமலையின் நிலவரம் குறித்து தந்தி ஒன்றினை கொழும்பில் இருந்த சில வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பியிருந்தனர். திருகோணமலையில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் பாரதூரமான நிலையொன்றிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். அரசு அறிவித்த ஊரடங்கு வேளையிலும் படுகொலைகள், கடையுடைப்புக்கள், வீடெரிப்புக்கள் என்று தமிழருக்கெதிரான வன்முறைகள் தங்குதடையின்றி நடந்துவருகின்றன. இனவாதம் கொண்ட இலங்கையின் பாதுகாப்புப் படைகளே இந்த நாசச் செயல்களின் பின்னால் இருக்கின்றன. தமிழர் மீது நடந்துகொண்டிருக்கும் திட்டமிட்ட இனவழிப்பினை சிநேகபூர்வமான நாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்பதே அந்தத் தந்தி கூறிய செய்தியாகும். திருகோணமலை தமிழ் ஈழ விடுதலை முன்னணி திருகோணமலையில் நடைபெற்றுவந்த தமிழர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணம் யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. திருகோணமலையில் தமது சகோதர்கள் மீது சிங்கள அரசு , அரச ஆதரவிலான சிங்களக் காடையர் கும்பல்களும் புரிந்துவரும் கொடூரங்கள் குறித்த செய்திகளை அறிந்தபோது மனதிற்குள் பொங்கிக்கொண்டிருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது உணர்வுகளை வெளியிட இந்த ஹர்த்தால் வடிகால் அமைத்துக் கொடுத்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஹர்த்தால் பூரண வெற்றி அடைந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டன். வாகனப் போக்குவரத்து முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. யாழ்ப்பாணமெங்கும் சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மக்கள் வீதிகளுக்கு இறங்குவதையே முற்றாகத் தவிர்த்திருந்தனர். யாழ்ப்பாணத்தை ஸ்த்தம்பிக்கச் செய்த ஹர்த்தாலினால் ராணுவத்தினரும் பொலீஸாரும் கொதித்துப் போயினர். அரசு ஆத்திரத்தில் கறுவிக்கொண்டிருந்தது. ஜெயார் தனது பாணியிலேயே யாழ்ப்பாணத் தமிழரின் ஹர்த்தாலுக்குப் பதிலளித்தார். ஆடி 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சுதந்திரன் மற்றும் சட்டர்டே ரிவியூ பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. கலாநிதி தர்மலிங்கமும் கோவை மகேசனும் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்கள். அரசு சார்பாகப் பேசிய அதிகாரி டக்கிளஸ் லியனகே ஹர்த்தாலின்போது அரச உடமைகள் மீது சேதம் விளைவிக்கப்பட்டதாலேயே பத்திரிக்கைகள் மீதான தடையும், பலரின் கைதுகளும் இடம்பெற்றதாகக் கூறி அவற்றினை நியாயபடுத்தினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக அரசு கூறிய வன்முறைகளுக்கும் தமிழ் ஈழ விடுதலை முன்னணிக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. டெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற டெலா அமைப்பே இந்த வன்முறைகளில் ஈடுபட்டிருந்தது. ஓபரோய் தேவனால் இயக்கப்பட்ட டெலா இயக்கம் பஸ்வண்டிகளை எரித்து தபால் அலுவலகங்கள் உட்பட சில அரச கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தது. மேலும் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே சேவையில் ஈடுபட்டு வந்த யாழ்தேவி கடுகதி புகையிரதத்தையும் டெலா அமைப்பு பகல்ப்பொழுதில் எரித்தது.
  4. தமிழர் மீதான கூட்டுத் தண்டனைக்கான விதைகளை விதைக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம் தமிழ் மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் நன்கு ஒருங்கமைக்கப்பட்ட முறையில் தாக்குதல் ஒன்றினை நடத்திய நாளான 1983 ஆனி 2 ஆம் திகதி நான் திருகோணமலையில் இருந்தேன். அந்நேரம், மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவினால் சிங்களக் குடியேற்றப்பகுதியான சமுத்திரபுரவில் பாடசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் நான் கலந்துகொண்டிருந்தபோது திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகி எம். செல்வராஜா என்னைப் பார்க்க அவசரமாக வந்திருந்தார். "சபா, பிரச்சினை தொடங்கீட்டுது. தமிழர்களின் படகுகளை கடந்த இரவு அவர்கள் எரித்து விட்டார்கள்" என்று கூறிவிட்டு மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேராவிடம் இதுகுறித்துப் பேசியதுடன் பிரச்சினை மேலும் பெரிதாகாது பார்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். திருகோணமலையில் அதிகரித்து வந்துகொண்டிருந்த பதற்றத்தை என்னால் அன்று காலையில் இலகுவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிநின்று கடந்த நாள் நடைபெற்ற அசம்பாவிதங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே, "தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவேண்டும், அவர்களின் தலைகளை நொறுக்க வேண்டும்" என்று பேசினார்கள். லலித் அதுலத் முதலி மற்றும் ஜெயார் அடிக்கடி பாவித்த இவ்வார்த்தைகள் சாதாரண சிங்களவர்களின் நாவிலும் அப்போது தவழ்ந்துகொண்டிருந்தன. மீன்வளத்துறை அமைச்சுபற்றி நான் செய்தி சேகரிப்பதில்லை, ஆனால் அமைச்சர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். கத்தோலிக்கரான அமைச்சர் பெஸ் டஸ் பெரேராவை யாழ்ப்பாண மீனவ சமூகத்துடனும், யாழ்ப்பாண கத்தோலிக்கத் திருச்சபையுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஜெயார் பணித்திருந்தார். ஜெயாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் பெஸ்டஸ் பெரேராவும் ஒருவர். 1972 ஆம் டட்லி சேனநாயக்கவுடன் ஜெயார் முரண்பட்டபோது பெஸ்டஸ் பெரேரா ஜெயாருக்கு ஆதரவாக நின்றார். ஆபத்தான வேளைகளில் தனக்கு ஆதரவாக நின்றவர்களை பின்னர் தான் அதிகாரத்திற்கு வந்ததும் அரவணைத்துக்கொள்ளும் நற்பண்பு ஜெயாருக்கு இருந்தது. ஆகவே, 1977 ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கைப்பற்றியபோது பெஸ்டஸ் பெரேராவுக்கு மீன்பிடித்தித்துறை அமைச்சினை வழங்கினார் ஜெயார். இனப்பிரச்சினை தொடர்பான செய்திகளை சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான், பெஸ்டஸ் பெரேராவுடன் நெருங்கிப்பழகும் பல சந்தர்ப்பங்களைப் பெற்றிருந்தேன். பெஸ்டஸ் பெரேரா 1983 ஆம் ஆண்டு ஆனி 1 ஆம் திகதி திருகோணமலைக்குப் பயணமான ஊடக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். நாம் பயணம் செய்துகொண்டிருந்த வான் குருநாகல் நகர் மத்தியை அடைந்தபோது கறுப்புச்சட்டை அணிந்த இளைஞர்கள் சிலர் வீதியின் குறுக்கே, எமது வாகனத்தின் முன்னால் பாய்ந்து சாரதியை வாகனத்தை நிறுத்துமாறு பணித்தனர். ஆனால், சாரதியோ அவர்களை நோக்கி வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தவே அந்த இளைஞர்கள் விதியின் ஓரத்திற்குப் பாய்ந்து விலகிக்கொண்டார்கள். நகரில் இருந்த பல தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு சிங்களவர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்ததை வாகனத்தில் இருந்த அனைவரும் கண்ணுற்றோம். தமிழ் ஆண்கள் வீதிகளுக்கு இழுத்துவரப்பட்டு சிங்களவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழர்களைத் தேடித் தேடி வேட்டையாடிக்கொண்டிருந்த அந்தச் சிங்களக் காடையர் கூட்டத்தின் கண்களிலிருந்து என்னை, என்னுடன் வந்த சிங்களப் பத்திரிக்கையாளர்கள் காத்துக்கொண்டார்கள். எமது வாகனம் நகரின் எல்லையினைத் தாண்டிச் சென்றபோது, "நாம் சபாவைக் காப்பற்றிவிட்டோம்" என்று எனது சிங்கள நண்பர்கள் தமக்குள் குதூகலித்துக்கொண்டார்கள். அன்று காலை, வவுனியா நகரில் கொல்லப்பட்ட இரு விமானப்படை வீரர்களின் இழப்பிற்குப் பழிவாங்க நாடு முழுவதிலும், சுமார் 50 இடங்களில் தமிழ் மக்கள் மீது ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் "கூட்டுத் தண்டனை" ஒன்று சிங்களவர்களால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறான தண்டனை வழங்கப்பட்ட இடங்களில் ஒன்றான குருநாகல் நகரில் வாழ்ந்து வந்த தமிழர்களும் தண்டிக்கப்பட்டார்கள். அன்று காலை வவுனியால் பணியாற்றி வந்த நான்கு விமானப்படை வீரர்கள் நகருக்கு மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வந்திருக்கிறார்கள். பெரேரா, குணசேகர ஆகிய வீரர்கள் தமது ஜீப் வண்டிக்கு அருகே காவல் நிற்க ஏனைய இருவரும் சந்தையின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டார்கள். இவர்களின் வருகைக்காகக் காத்திருந்த நான்கு புளொட் போராளிகள் இவர்கள் இருவர் மீதும் கைக்குண்டுகளை எறிந்துவிட்டு, அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினார்கள். அந்த வீரர்கள் இருவரும் இறந்து விழ, அவர்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு புளொட் போராளிகள் தலைமறைவானார்கள். தமது விமானப்படையினர் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியது. வவுனியா நகரில் இருந்து இரு கிலோமீட்டர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் கோவில்குளத்திற்குச் சிவில் உடைகளில் சென்ற ராணுவத்தினர் அப்பகுதியில் காந்தியம் அமைப்பினால் பராமரிக்கப்பட்டுவந்த பண்ணை மீது தாக்குதல் நடத்தி, அப்பண்ணையில் இருந்த பயிர்களையும், சேமிப்பிடங்களையும், கொட்டகைகளையும் எரித்தார்கள். மேலும், பண்ணையில் பாவிக்கப்பட்டு வந்த உழவு இயந்திரங்கள், போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வான்கள் என்பனவும் ராணுவத்தால் எரிக்கப்பட்டன. தாக்குதல் ஆரம்பித்த வேளையில் பண்ணையிலிருந்து தப்பியோடிய தமிழ் விவசாயிகள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொண்டார்கள். திருகோணமலையில் தமிழரின் மீன்பிடிப் படகுகள் எரிக்கப்பட்டதன் பின்னால் இருந்தது இராணுவத்தினர்தான் என்று செல்வராஜா என்னிடம் தெரிவித்தார். "தம்மை பின்புலத்தில் வைத்துக்கொண்டு, சிங்களக் காடையர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அவர்கள் ஊக்குவித்து வருகிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். ஆனி 3 ஆம் திகதி இரவு இவ்வாறான, ராணுவத்தினரின் பின்னணியில் நடந்த தாக்குதல் ஒன்றினை திருகோணமலை நகரில் நான் கண்டேன். திருகோணமலை பிரதான வீதியில் அமைந்திருந்த மன்ஷன் விடுதியில் வெடிபொருட்கள மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக தமக்குக் கிடைத்த தகவல்களையடுத்து ராணுவம் அங்கு தேடுதல் நடத்துவதற்குச் சென்றிருப்பதாக எமக்குச் செய்தி கிடைத்திருந்தது. ஆகவே, இதுபற்றிச் செய்தி சேகரிக்க எமது ஊடக் குழு அங்கு சென்றிருந்தது. நாம் அங்கு சென்றபொழுது ராணுவம் தனது தேடுதலை முடித்துவிட்டிருந்தது. அந்த விடுதியில் வெடிபொருட்கள் எவையும் இருக்கவில்லை. செய்தி சேகரிக்கச் சென்ற எமக்கு அது ஏமாற்றத்தைத் தந்திருந்தது. ஆனால், சற்று நேரத்தின் பின்னர் எமக்கு இன்னொரு திகைப்பூட்டும் செய்தி கிடைத்தது. அப்பகுதியில் அமைந்திருந்த இன்னொரு கட்டடத்திற்கு ராணுவம் தேடுதல் நடத்தச் சென்றிருந்தது. மன்ஷன் விடுதியில் காவலுக்கு நின்றிருந்த இரு பொலீஸாரையும் கூட்டிக்கொண்டு இந்தக் கட்டடத்திற்கு ராணுவம் சென்றது. அப்போது, சந்தைப்பகுதியிலிருந்து காடையர் கூட்டமொன்று வெளியே வந்துகொண்டிருந்ததை நாம் கண்டோம். மன்ஷன் விடுதிக்குள் நுழைந்த அந்தக் காடையர் குழு அவ்விடுதியில் இருந்த அனைத்தையும் அடித்து உடைக்கத் தொடங்கியது. பின்னர், தாம் கொண்டுவந்திருந்த பெற்றொலினை விடுதி மீது ஊற்றி அதற்குத் தீவைத்தது. அந்த விடுதிக்குச் சொந்தக்காரர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெமினாதன் என்பதை நாம் பின்னர் அறிந்துகொண்டோம். இத்தாக்குதலைத் தொடர்ந்து, திருகோணமலை நகரில் தமிழர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஒருங்கமைக்கப்பட்ட வலையமைப்பும், தாக்குதல் நடத்தப்படுவதற்கான சூழ்நிலையும் அங்கு மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் உணர்ந்துகொண்டோம். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளம் வாகனச் சாரதியான சபாரட்ணம் பழணிவேலின் படுகொலை குறித்து நான் இங்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன். வைகாசி 30 ஆம் திகதி அதிகாலை திருகோணமலை நோக்கிச் செல்லும் பஸ் வண்டியில் தனது உறவினர்களை ஏற்றிவிடுவதற்காக பழனிவேல் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை பஸ்நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பழனிவேலின் வாகனம் மீது அதிகாலை 4:30 மணிக்கு வல்வெட்டித்துறை ராணுவக் காவலரணில் கடமையில் நின்ற கோப்ரல் எம் விமலரட்ண கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். கொல்லப்பட்ட பழனிவேலின் உடலை வீதியில் இழுத்துவிட்ட ராணுவத்தினர் அதன் மீது தமது ராணுவ ட்ரக் வண்டியை ஏற்றிச் சிதைத்தனர். பழனிவேலின் கொலைக்காக கோப்ரல் விமலரட்ண கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். தமிழர் மீதான கொலைகளுக்கு இறுதியாகத் தண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் விமலரட்ணதான் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்வும், இதற்கு முதல் நடத்தப்பட்ட நவரட்ணராஜா மீதான படுகொலை தொடர்பான நீதிவிசாரணையும் ராணுவத்தையும், அரசாங்கத்தையும் ஆத்திரப்பட வைத்திருந்தது. ஆகவே, இவ்வாறான நீதிவிசாரணைகளிலிருந்து தனது ராணுவத்தினரைப் பாதுகாக்க ஜெயார் தனது வழமையான சதிகளை அரங்கேற்றத் தொடங்கினார். தனது ஏவலாளிகளில் ஒருவரின் ஊடாக இப்பிரச்சினையினை பாராளுமன்றத்திலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலோ விவாதிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயார் விரும்பினார். இவ்வாறு செய்வதன் மூலம் உள்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தான் அழுத்தம் காரணமாகவே சில விடயங்களைச் செய்யவேண்டி ஏற்ப்பட்டதாகக் காட்டுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தருணத்தில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து சரத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தை அழிக்க ஜனாதிபதி முன்வரவேண்டும் என்கிற தீர்மானத்தை தனது கட்சியின் செயற்குழு நிறைவேற்றுவதை ஜெயார் உறுதிப்படுத்திக்கொண்டார். மிகவும் கொடூரமான இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பொதுமக்கள் ஆதரவினை இனவாதம் கக்கும் பத்திரிக்கைகளான தி சண், தி ஐலண்ட் மற்றும் இவற்றின் சிங்கள மொழிப் பத்திரிக்கைகள் உருவாக்கிவந்தன. ஜெயாரின் ஆட்சிக் காலம் முழுவதும் லலித் அதுலத் முதலியே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராகச் செயற்பட்டு வந்தார். ஊடகங்களுக்குத் தேவையான தகவல்களை அவரே வழங்கியும் வந்தார். அவரை ஊடகவியலாளர்கள் "செய்தியாளன்" என்றே அழைத்து வந்தார்கள். அவருக்கு எவற்றினைச் செய்தியாக்கவேண்டும், எவற்றினைச் செய்தியாக்கல் ஆகாது என்கிற அறிவு இருந்தது. அரசாங்கத்தின் நலன்களுக்காக ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர் ஊடகங்களுடன் நட்புப் பாராட்டி வந்தார். அனைத்துப் பத்திரிக்கை ஆசிரியர்களுடனும் சிநேகபூர்வமான உறவை ஏற்படுத்திக்கொண்ட லலித், திறமைவாய்ந்த நிருபர்களுடனும் தொடர்புகளைப் பேணிவந்தார். நோர்ட்டன் வீரசிங்கவும் நானும் டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் அவரது நண்பர்களாக இருந்தோம். அவருக்குத் தெரிந்தவர்களுக்கு தனது பிரத்தியே தொலைபேசி தொடர்பெண்ணை அவர் வழங்கியிருந்தார். அந்த தொலைபேசி எண்ணுடன் காலை 5:30 மணியிலிருந்து நீங்கள் அவரைத் தொடர்புகொள்ள முடியும். ஒவ்வொரு செவ்வாய் காலை உணவின்போதும் நாம் அவருடன் தொடர்புகொள்வது வழக்கம். ஒவ்வொரு புதன் நாளிலும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவிருக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பான தகவல்களை அவர் செவ்வாயன்றே எம்முடன் பகிர்ந்துகொள்வார். ஜெயாருடன் அவரது ஏவலாளிகள் இவ்வாறான நாள் ஒன்றில், தி சண் பத்திரிக்கையின் நிருபர் ஜெனிபருக்கு செய்தியொன்றினை காலையுணவை அருந்தியவாறே லலித் வழங்கியிருந்தார். செய்தியை வழங்கிய பின்னர் ஜெனிபரைப் பார்த்து, "இது உங்களுக்கான செய்தியல்ல, டெயிலி நியூஸுக்கானது. ஏனென்றால், டெயிலி நியூஸில் வரும் செய்திகளை மக்கள் அப்படியே நம்பப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களுக்கு தகவல்களையும் உங்களுக்குப் பிரச்சாரச் செய்திகளையும் நான் தர விரும்புகிறேன்" என்று கூறினார். பொதுமக்கள் கருத்தறியும் வல்லமை அதுலத் முதலிக்குக் கைவந்த கலை. தனியார் ஊடகங்களைப் பாவித்து அரசுக்குச் சார்பான பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் அவர் கைதேர்ந்து விளங்கினார்.
  5. மாடிக்கு செல்லும் படிக்கட்டு பழுதாகிவிட்டது போலுள்ளது. 😂 🤣
  6. அத்தை மகனே போய்வரவா.......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.