Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. பகிடி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    597
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8907
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31956
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/13/23 in Posts

  1. செல்லக்கிளியின் வீரமரணம் முனசிங்கவும் அவரது ராணுவமும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை அண்மித்தபோது புலிகள் அங்கிருந்து வெளியேறி விட்டிருந்தார்கள். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் ஆயுதங்களும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. புலிகளைப்பொறுத்தவரை அது ஒரு வெற்றி அணிவகுப்பு. பிரபாகரன் முன்னே செல்ல, மற்றையவர்கள் ஒற்றை நிரலில் அவரைப் பிந்தொடர்ந்து சென்றார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கிச் சென்று பின்னர் வலதுபுறம் திரும்பி தமது மினிபஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். பிரபாகரனும் அவரது போராளிகளும் இத்தாக்குதலை தாம் பரீட்சித்துப் பார்த்ததைப் போன்றே மிகவும் நேர்த்தியாக நடத்தி முடித்திருந்தார்கள். ஓவொருவரும் தமக்கு வழங்கப்பட்ட பணியினை திறம்படச் செயற்படுத்தியிருந்தார்கள். தாக்குதல் முடிந்தவுடன் தமது நேரத்தை விரயமாக்க அவர்கள் விரும்பவில்லை. அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறிவிடுவதே அவர்களின் எண்ணம். தாக்கப்பட்ட தமது ராணுவ அணியைத் தேடி மேலதிக ராணுவத்தினரும் பொலீஸாரும் அப்பகுதிக்கு வருவார்கள் என்பதும், புலிகள் தப்பிச் செல்லக்கூடிய வழிகள் அனைத்தையும் அவர்கள் தடுக்க முனைவார்கள் என்பதும் புலிகள் அறியாதது அல்ல. மினிபஸ்ஸில் ஏறுவதற்கு முன்னர் தாக்குதலில் பங்குகொண்ட அனைத்துப் போராளிகளுக்கும் பிரபாகரன் நன்றி கூறினார். தாக்குதலின் வெற்றி பிரபாகரனுக்கு மிகுந்த மனநிறைவினைத் தந்திருந்தது. அவர் உற்சாகமாகவும், உணர்வு மேலீட்டும் காணப்பட்டார். செல்லக்கிளியின் துணிகரச் செயலுக்காகவும், கண்ணிவெடிகளை இலக்குத் தவறாது இயக்கியமைக்காகவும் அவரின் பெயரை உச்சரித்து பிரபாகரன் பாராட்டிக்கொண்டிருந்தபோது , செல்லக்கிளி அங்கே இல்லையென்பதை கிட்டு உணர்ந்துகொண்டார். "செல்லக்கிளி அண்ணா எங்கே?" என்று கிட்டு ஆதங்கத்துடன் கத்தினார். மற்றைய எல்லோரைக் காட்டிலும் செல்லக்கிளி வயதில் மூத்தவர். அவரை போராளிகள் எல்லோரும் மிகுந்த மரியாதையுடனேயே நடத்தி வந்தனர். அவர் அண்ணை என்றே எல்லாராலும் அழைக்கப்பட்டு வந்தார். ஆனால், அவர் அங்கே இருக்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட மளிகைக் கடை நோக்கி விக்டர் ஓடினார். கூரையின் மீது அவர் ஏறிப் பார்த்தபோது செல்லக்கிளியின் உடலை அவர் கண்டார். அவரது நெஞ்சுப்பகுதியைக் குண்டொன்று துளைத்துச் சென்றிருந்தது. செல்லக்கிளி இரத்த வெள்ளத்தில் உயிர்பிரிந்து கிடந்தார். இது எப்படி நடந்தது? எவருக்கும் தெரிந்திருக்கவில்லை, சில அனுமானங்களைத் தவிர. இராணுவ ட்ரக் வண்டி சடுதியாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்த ராணுவ வீரர்கள் வெளியே குதித்தபோது பெரும்பாலானோர் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பெரும்பாலான இராணுவ வீரர்களின் தலையிலேயே புலிகளின் சன்னங்கள் பாய்ந்திருந்தன.ஆனால், ஒரு ராணுவ வீரர் மட்டும் ட்ரக்கின் பின்னால் ஒளிந்துகொண்டு நாலாபுறம் நோக்கியும் துப்பாக்கியினால் சரமாரியாகச் சுட்டிருக்கிறார். தமது தாக்குதல் முடிந்துவிட்டது, இராணுவத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று எண்ணிய செல்லக்கிளி அதுவரை தான் ஒளிந்திருந்த சீமேந்துச் சுவரின் பின்னாலிருந்து எழுந்திருந்த வேளை, ட்ரக்கின் பின்னால் பதுங்கியிருந்த இராணுவ வீரனின் சூடு பட்டு அவ்விடத்திலேயே இறந்திருக்கிறார். செல்லக்கிளியின் உடலைத் தூக்கித் தனது தோளில் போட்டுக்கொண்ட விக்டர், அவரைச் சுமந்துகொண்டு மினிபஸ் நோக்கி ஓடினார். இந்தச் சம்பவம் குறித்து சந்தோசம் என்னிடம் பின்வருமாறு விபரித்தார். "செல்லக்கிளியின் உடலைச் சுமந்துகொண்டு விக்டர் மினிபஸ்ஸை வந்தடைந்த போது நாம் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். செல்லக்கிளியின் மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்துகொண்டிருந்தது. விக்டரின் சீருடை முழுவதும் இரத்தத்தில் தோய்ந்திருந்தது". "அந்தச் சூழ்நிலை மிகவும் வேதனை மிகுந்திருந்தது. அதுவரை அங்கு நிலவிய வெற்றிக்களிப்பையும், உற்சாகத்தையும் செல்லக்கிளியின் மறைவு முற்றாக மாற்றிப் போட்டது. அனைவரினதும் முகங்களில் இருந்த மகிழ்ச்சி முற்றாகப் போயிருந்தது. பிரபாகரன் மெளனமானார். அவரைப்போலவே எல்லோர் முகத்திலும் சோகமும் மெளனமும் குடிகொண்டன‌. விக்டர் செல்லக்கிளியின் உடலை மினிபஸ்ஸின் பின் இருக்கைக்குக் கொண்டு சென்றார். பின்னிருக்கையில் அவரை மெதுவாகக் கிடத்திய விக்டர், செல்லக்கிளியின் கண்களை மூடிவிட்டார். தாம் கைப்பற்றிய ஆயுதங்களை எல்லோரும் செல்லக்கிளியின் பாதங்களுக்கு அருகில், மினிபஸ்ஸின் தரையில் அடுக்கினர். வீரச்சவடைந்த வீரனுக்கு அவர்கள் கொடுக்கும் இறுதி வணக்கமாக அது அமைந்தது. அந்த நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமானது" என்று சந்தோசம் கூறினார். செல்லக்கிளி நினைவாலயம் திருநெல்வேலி - 2003. மெதுவாக மழை தூறத் தொடங்கவே, மினிபஸ் அச்சுவேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடம் நோக்கி வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. பிரபாகரனே முதலாவதாக மினிபஸ்ஸிலிருந்து இறங்கினார். அவரது பாதம் தரையைத் தொட்டதும் அவர் அழத் தொடங்கினார். ஏனையவர்களும் அவரோடு இணைந்துகொண்டனர். அதுவரை தாம் அடக்கிவைத்திருந்த சோகமெல்லாம் பீறிட்டுவர அவர்கள் அழுதார்கள். தமிழ் பத்திரிக்கைகள் சிலவற்றில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து கிட்டு பின்னாட்களில் பேசியிருந்தார். பிரபாகரன் மனமுடைந்து அழுததை அப்போதுதான் தான் முதன்முதலில் பார்த்ததாக அவர் கூறியிருந்தார். செல்லக்கிளியின் இழப்பென்பது புலிகளைப் பொறுத்தவரையில் வெறும் 9 நாட்களுக்குள் நடந்த இரண்டாவது மிகப்பெரிய இழப்பாகக் கருதப்பட்டது. சீலன் ஆடி 15 இலேயே உயிர்துறந்திருக்க இப்போது செல்லக்கிளி ஆடி 23 இல் வீரச்சாவடைந்திருந்தார். சீலன் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். செல்லக்கிளியோ சீலனுக்கு அடுத்த நிலையில் இயக்கத்தில் இருந்தவர். செல்லக்கிளியின் இயற்பெயர் சதாசிவம் செல்வநாயகம். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த பழம்பெரும் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனசிங்கவையும் ஏனைய ராணுவ அதிகாரிகளையும் பொறுத்தவரை தாம் திருநெல்வேலியில் கண்ட கோரமான காட்சி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உருக்குலைந்திருந்த இராணுவ வாகனங்களைச் சுற்றி பன்னிரண்டு இராணுவ வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன. மூன்று உடல்கள் ஜீப்பின் அருகில் கிடந்தன. நான்காவது உடல் வீதியிலிருந்து சற்றுத் தொலைவில் தூக்கி வீசப்பட்டிருந்தது. அந்த உடல் தளபதி வாஸ் குணவர்த்தனவினதாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவ்வுடலின் முகத்தைத் திருப்பினார் முனசிங்க, அது வாஸினதுதான். வாஸின் வலது காதின் அருகில் குண்டு வெடிப்பால் ஏற்பட்ட ஓட்டையொன்று தெரிந்தது. அவர் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் பிறிஸ்ட்டல் சிகரெட் பக்கெட்டும் லயிட்டரும் ஜீப்பினுள் கிடந்தன. ஜீப்பிலிருந்து சுமார் 25 மீட்டர்கள் தூரத்தில் ட்ரக் நின்றிருந்தது. எட்டு உடல்கள் ட்ரக்கைச் சுற்றி வீழ்ந்துகிடந்தன. ட்ரக்கின் அடியிலிருந்து ராணுவ வீரர் ஒருவர் முனகுவதை அவர்கள் கேட்டனர். அங்கு வந்திருந்த இராணுவ வீரர்கள் அவரை வெளியே இழுத்து எடுத்தபோது அவரது கை ஒன்றும் காலும் முறிந்த நிலையில் கிடந்ததை அவதானித்தனர். அவர் சார்ஜன்ட் திகலரட்ண. யாழ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் அவரும் இறந்துபோனார். சிறிது நேரத்தின் பின்னர் அருகிலிருந்த வீடொன்றின் தோட்டத்தில் பதுங்கியிருந்த இன்னொரு ராணுவ வீரர் கால்கள் காயப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்துடன் ராணுவ வீரர்களை நோக்கி நடந்துவந்தார். ட்ரக்கிலிருந்து ஏனைய ராணுவத்தினருடன் தானும் குதித்ததாகவும், ஆனால் அருகிலிருந்த வீட்டின் கூரையில் உடனடியாக ஏறிக்கொண்டு, புலிகள் மேல் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் ராணுவ அதிகாரிகளிடம் கூறினார், ஆனால் அவரின் விபரிப்பினை எவரும் நம்பவில்லை. புலிகளின் கடுமையான தாக்குதலில் இருந்து கோப்ரல் பெரேராவும் உயிர்தப்பியிருந்தார். கால்களில் காயம்பட்ட நிலையிலும் கோண்டாவிலில் அமைந்திருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய தலைமையகத்திற்குச் சென்று அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தமது இராணுவ அணிக்கு நடந்த விபரீதத்தை கூறினார். ஆனால், பெரேரா கோண்டாவிலில் இருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முன்னரே முனசிங்கவும் பல்த்தசாரும் தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்துவிட்டிருந்தனர். கொல்லப்பட்ட ஒரு அதிகாரி உட்பட பன்னிரு ராணுவத்தினரின் உடல்களை முனசிங்கவும் பல்த்தசாரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் சேதமடைந்திருந்த இராணுவத்தினரின் ஜீப் வண்டியையும் ட்ரக்கையும் குருநகர் முகாமுக்கு இழுத்துச் சென்றனர். தாக்குதல் நடந்த இடத்தை மறித்து, சுற்றிவரத் தடைகளை ஏற்படுத்திவிட்டு முகாம் நோக்கிச் சென்றனர். திருநெல்வேலித் தாக்குதல் இலங்கையின் சரித்திரத்தை மாற்றிவிட்டது. இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தின் பாதையினை அது மாற்றிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் குணவியல்பையும் அது மாற்றிப்போட்டது. அது தமிழீழ விடுதலைப் புலிகளை போராட்டத்தின் முகப்பு நோக்கி முன்னோக்கித் தள்ளியிருந்தது.
  2. இரை தேடி வந்த பாம்பொன்று தச்சனொருவனின் பட்டறைக்குள் நுழைந்தது. பட்டறைக்குள் நுழைந்து, அங்கும் இங்கும் ஊர்ந்து திரிந்த பாம்பின் உடல் அருகிலிருந்த கூரிய வாளில் பட்டு விட்டதால் சிறியதொரு காயம் ஏற்பட்டுவிட்டது. கோபமடைந்த பாம்பு வாளை கடிக்க முற்பட்டது. வாள் தன்னை எதிர்த்துத் தாக்குவதாக தவறாக நினைத்துக் கொண்ட பாம்பின் தாக்குதலும் அதிகரித்தது. வாளின் கூரான பற்கள் பாம்பின் வாயை அறுத்ததால் பெரிதாகக் காயமேற்பட்டு இரத்தமும் வடியத் தொடங்கிற்று. இப்போது பாம்பின் கோபம் தலைக்கேறி கண்களை மறைக்க... தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல்... தன் பலம் முழுவதையும் சேர்த்து வாளை சுற்றி வளைத்து இறுக்க ஆரம்பித்தது. என்ன நடந்திருக்கும்? பாம்பின் உடல் வாளின் பற்களுக்கு இரையாகிப் போனது. எங்கும் பலத்த காயங்கள்; எங்கும் ரத்தம். என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெரியாமலேயே பாம்பு இறந்து போனது. காலையில் பட்டறைக்குள் நுழைந்த தச்சன் ரத்தம் தோய்ந்த வாளையும் துண்டாகி செத்துக் கிடக்கும் பாம்பையும் கண்டான். பாம்பின் கோபமும் தீய எண்ணமும் நிதானமற்ற தன்மையுமே அதனது சாவுக்குக் காரணமாகின... இதுபோன்றுதான்... சில சமயங்களில் கோபத்தின் காரணமாக நாம் பிறரை காயப்படுத்த முயல்கிறோம். ஆனால் நாம் பிறரை காயப்படுத்தவில்லை... நம்மை நாமே காயப்படுத்துகிறோம் என்பதை தாமதமாகவே உணர்ந்து கொள்கிறோம். சில நேரங்களில் தீய எண்ணம் கொண்டு பிறரை வீழ்த்த முற்படுகிறோம். ஆனால் நாம்தான் பலியாகி விட்டோம் என்பதை காலம் கடந்தே உணர்ந்து கொள்கிறோம். வாழ்க்கையில் சில நேரங்களில்... சில நிகழ்வுகளை, சில மனிதர்களை, சில வார்த்தைகளை, சில செயல்களை கண்டும் காணாதது போல் இருந்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும். அறிந்து கொள்ளுங்கள்! நாம் எல்லா விடயங்களுக்கும் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டிய தேவையுமில்லை. தேவையற்ற செயல், கோபம், எண்ணம் அனைத்தும் எம்மை அழித்து விடும்.
  3. பல கடைகளில் விசாரிக்கலாம் ...பெரிய புடவை கடைகளிலும். மாற்ற முடியும் அவர்கள் கல்குலேட்டரில். போட்டு காட்டுவார்கள் உதாரணமாக 100 யூரோ மாற்றுவது ஆயின். 100 *370=37000. எனப் போட்டு காட்டுவார்கள் பெரிய வித்தியாசம் இருக்காது 100 யூரோ மாற்றும்போது. கடைக்கு கடை. 100. ....150. ரூபாய் வித்தியாசம் உண்டு” பஸ் தரிப்பு இடத்துக்கு அருகில் மூன்று பக்கத்திலேயேயும். நான் மாற்றி உள்ளேன் ..மலேயன். கபே பக்கம் மாற்றவில்லை எங்க மாற்றினாலும் ஒன்று தான் 500....1000. ருபாய் பெரிய காசா ????அதுவும ஒரு ஜேர்மன்காரனுக்கு 🤣🤣
  4. வணக்கம் வாத்தியார்......! ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூவுடன் மெல்ல நீ பேசு ஆண் : கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு இரவின் மடியில் உலகம் தூங்கும் இனிய கனவில் தூங்கு ஆண் : காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் திவலையா நோயானேன் உயிரும் நீ யானேன் இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா வாராயோ எனை நீ சேராயோ ஆண் : தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி…… நீயே வாடினாயோ.........! --- தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு---
  5. சிறியண்ணை நாணயமாற்று விகிதம் குறையும் போது வங்கியில்(பாஸ்போட் கேட்பார்கள்) அன்றைய தினத்திற்குரிய மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி தருவார்கள், ஆனால் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாற்று நிறுவனங்கள் குறைத்துத் தர முயல்வார்கள். ஆகையால் இரண்டிலும் விசாரித்து எங்கு அதிமோ அங்கு மாற்றலாம். இன்னொன்று நம்பிக்கையான உறவினர்/நண்பர்களின் முறைப்படியாக வங்கிக் கணக்கிற்கு(குறித்த விகிதத்திலும் கூடுதலாக இலங்கை ரூபா கிடைக்கலாம்) அனுப்பிவிட்டு அவர்களின் மூலம் வாங்குதல்.
  6. நகைக்கடைகளில் மாற்றலாம், நல்ல நாணய மாற்றுவிகிதம் கிடைக்கும். ஆனால் மாற்றித்தரும் நாணயத்தாள்களை ஒன்றுக்கு இரண்டுமுறை கள்ள நோட்டா என்று சோதிப்பது நல்லது. வங்கிகளில் இந்த ஆபத்து இல்லை ஆனால் குறைந்த விகிதம் தான் கிடைக்கும். உங்களுக்கு ஹவாலா/உண்டியல் பேர்வழிகள் யாரையும் தெரிந்திருந்தால் அவர்களை பாவித்து நல்ல விகிதத்துடன் இலங்கையிலுள்ள வங்கி கணக்கு ஒன்றிலேயே வைப்புச்செய்துவிட்டு பிறகு எடுத்து செலவு செய்யலாம். இந்த முறையில் நல்லவிகிதமும் கிடைக்கும் வாங்கிப்பரிமாற்றம் என்பதால் கள்ளநோட்டு பிரச்சினையும் இருக்காது
  7. நீங்கள் சொல்வது சரி.. ஏனெனில் தாளையடி வழியாகத்தான் போனேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..
  8. என்னிடம் இல்லை. ஆனால் எமது சமூகத்தின் முன்னால் இருக்கிறது. அதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயக அரசியலை விட்டு வெளியேறி வெகுஜன போராட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். அவையும் நசுக்கப்பட்டால் ஆயுதப் போராட்டம் ஒன்று மீளவும் உருவாவதை எவராலும் தவிர்க்க முடியாதிருக்கும்.
  9. லூத்தவேனியாவில் ............................
  10. தற்காலிகமாக Update செய்துள்ளேன். எதனால் பிழை என்று பார்க்க வேண்டும்.
  11. இராணுவ ரோந்து அணி ‍ - நான்கு நான்கு பிராவோ நான்கு நான்கு பிராவோ என்று அழைக்கப்பட்ட ராணுவ ரோந்து அணி மாதகல் முகாமிலிருந்து வழமைபோல கிளம்பியது. இரவு 8 மணியளவில் குருநகர் இராணுவ முகாமை ரோந்து அணி வந்த‌டைந்தது. இலங்கை இலகு காலாட்படையின் முதலாவது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த அந்த அணிக்கு இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்த்தன தலைமைதாங்கினார். சுமார் ஒரு வார காலத்திற்கு முன்னர்தான் அவரது அணி மாதகல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த இராணுவ அணி குருநகர் முகாமை வந்தடைந்ததும் வாஸ் குணவர்த்தனவைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்தின் ராணுவ புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் சரத் முனசிங்க காத்துநின்றார். வாஸ் அங்கு வந்து சேர்ந்ததும், செல்லக்கிளி தலைமையில் ராணுவ ரோந்து அணிமீது யாழ்ப்பாணத்தில், நள்ளிரவிற்குச் சற்றுப்பின் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் தயாராகி வருவதாக தனக்குச் செய்தி கிடைத்திருப்பதாக அவர் கூறினார். புலிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றினைக் கொடுக்க முனசிங்க முடிவெடுத்தார். அதன்படி தன்னுடன் கொமாண்டோ அணியொன்றினை அழைத்துக்கொண்டு யாழ்நகரை ரோந்து சுற்றிவர அவர் தீர்மானித்தார். ஆகவே, வாஸ் குணவர்த்தனவின் ரோந்து அணி வழமைக்கு மாறாகா நள்ளிரவுக்கு முன்னரே யாழ்நகர எல்லையைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்று அவர் பணித்தார். 1983 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து பலமான புலநாய்வுக் கட்டமைப்பொன்றினை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். யாழ் குருநகர் இராணுவ முகாமிலிருந்து இயங்கிவந்த இந்த கூட்டுப் புலநாய்வு அணியினர், போராளி இயக்கங்களிலிருந்து கழன்று வீழ்ந்தவர்களை பணத்தாசை காட்டி தம்முடன் இணைத்துக்கொண்டனர். 1982 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில் நிறைபோதையில் தடுமாறிக்கொண்டு நின்ற இளைஞர் ஒருவரை முனசிங்க பிடித்துவந்து குருநகர் முகாமில் அடைத்து வைத்திருந்தார். விசாரணைகளின்போது அந்த இளைஞர் முன்னர் புலிகள் அமைப்பில் இணைந்து இயங்கிவந்தவர் என்றும் பின்னர் இயக்கத்திலிருந்து கழன்று வந்திருந்தார் என்பதும் தெரியவந்த‌து.புலிகளின் மூத்த உறுப்பினர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்கள் வசித்துவந்த வீடுகள் பற்றிய பல விடயங்களை அவர் அறிந்துவைத்திருந்தார். பிரபாகரன், ராகவன், ராஜன், பேபி சுப்பிரமணியம், ரகு, சங்கர் , பண்டிதர் ஆகியவர்களை அந்த இளைஞர் நன்றாக அறிந்துவைத்திருந்தார். அந்த‌ இளைஞரின் பலவீனங்களான மதுபானம் மற்றும் பணம் ஆகியவற்றினைக் கொடுத்து தமது நலன்களுக்காக அவரை இராணுவப் புலநாய்வுத்துறையினர் பாவிக்கத் தொடங்கினர். புலநாய்வுத்துறையால் அவருக்கு "சேவியர்" என்கிற பெயரும் வழங்கப்பட்டது. சீலனின் உடலை யாழ் வைத்தியசாலையில் அடையாளம் காட்டியவரும் அவரே. ஆடி 23 ஆம் திகதி இராணுவ ரோந்து அணிமீது செல்லக்கிளி தலைமையில் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார்கள் என்கிற தகவலை இராணுவத்தினருக்கு வழங்கியவரும் இதே சேவியர்தான். முனசிங்கவின் தேடுதல் வேட்டைகளின்போது அவருக்கு உதவியாக இருந்த சேவியர், புலிகளின் முக்கியஸ்த்தர்களின் வீடுகளையும் ராணுவத்தினருக்குத் தொடர்ச்சியாகக் காட்டிக் கொடுத்து வந்தார். புலிகளால் நடத்தப்படவிருப்பதாக தான் அறிந்துகொண்ட தாக்குதல் குறித்து வாஸிடம் கூறிவிட்டு, அவரைத் தன்னுடன் மதுபானம் ஒன்றினை அருந்த வருமாறு முனசிங்க அழைத்தார். "மதுபானம் அருந்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்கிற கேள்வியுடன் வாஸ் குணவர்த்தனவை அழைத்தார் முனசிங்க. "இல்லை, வேண்டாம். நான் இரவு உணவை உட்கொண்டுவிட்டு உடனடியாக மாதகல் முகாம் நோக்கிப் புறப்பட வேண்டும்" என்று வாஸ் பதிலளித்தார். பின்னர் வாஸும் அவரது ராணுவ அணியினரும் அவசர அவசரமாக தமது இரவுணவினை குருநகர் முகாமில் முடித்துக்கொண்டனர். பின்னர் முனசிங்கவைப் பார்ப்பதற்காக அவரது அறைக்குச் சென்றார் வாஸ் குணவர்த்தன. தன்னுடன் வைத்திருந்த பிறிஸ்ட்டல் சிகரெட் ஒன்றினை முனசிங்கவிடம் கொடுத்து, அதனைப் பற்றவைத்துவிட்டார் வாஸ். தானும் ஒரு சிகரெட்டினை புகைத்துக்கொண்டே முனசிங்கவுக்கு, "இரவு வணக்கங்கள்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார். தான் பயணிக்கும் ஜீப் வண்டியில் வாஸ் ஏறிக்கொள்ள மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் ஜீப்பின் பின் இருக்கைகளில் ஏறி அமர்ந்துகொண்டனர். ஜீப்பை இராணுவச் சாரதி மானதுங்க ஓட்டிச் சென்றார். பின்னால் வந்த இராணுவ ட்ரக்கில் பத்து இராணுவ வீரர்கள் ஏறிக்கொண்டனர். ட்ரக்கினை இராணுவக் கோப்ரல் பெரேரா ஓட்டிவந்தார். குருநகர் முகாமிலிருந்து கிளம்பிய இந்த ரோந்து அணி யாழ்நகர சந்தைப்பகுதியூடாக மெதுவாக ஊர்ந்து சென்று நாகவிகாரையினை அடைந்ததும் சில நிமிடங்கள் அங்கு தரித்து நின்றுவிட்டு பின்னர் நல்லூர், கோப்பாயூடாக உரும்பிராய் நோக்கித் தனது ரோந்தினை ஆரம்பித்தது. உரும்பிராயை அடைந்ததும், வாஸ் குணவர்த்தன குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு தனது அறிக்கையினைத் தாக்கல் செய்தார். "நான்கு நான்கு பிராவோ" என்று ஆரம்பித்த அவரது அறிக்கை, "எல்லாம் சாதாரணமாகவே இருக்கிறது. அமைதியாகக் காணப்படுகிறது. நாங்கள் எமது முகாம் நோக்கிச் செல்கிறோம்" என்று கூறியது. அதன்பின்னர் தனது வழமையான முகாம் திரும்பும் பாதையான கோண்டாவில், கொக்குவில், திருநெல்வேலி பின்னர் மாதகல் எனும் ஒழுங்கில் தனது முகாம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது. மளிகைக்கடையின் கூரையின் மேல் பதுங்கியிருந்த செல்லக்கிளியும் விக்டரும் வீதியை மிகுந்த அவதானத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தூரத்தில் வந்துகொண்டிருக்கும் ராணுவ வாகனங்களின் இரைச்சலினை அவர்களால் கேட்க‌ முடிந்தது. சிறிது நேரத்தின் ராணுவ வாகனங்களின் மின்விளக்குகளை அவர்களால் பார்க்க முடிந்தது. செல்லக்கிளி கண்ணிவெடியை இயக்குகம் கருவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் இருந்து சீலன் எடுத்துவந்த நான்கு கண்ணிவெடி இயக்கிகளில் ஒன்றையே செல்லக்கிளி அன்று தன்னுடன் வைத்திருந்தார். சீலன் இறுதியாகப் பங்குபற்றிய தீரமான சம்பவமும் காங்கேசந்துறைச் சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து கண்ணிவெடிகளைக் கைப்பற்றிச் சென்றதுதான். சீலன் அன்று எடுத்துவந்திருந்த கண்ணிவெடிகளைப் பாவித்தே சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலை புலிகள் செய்ய முடிவெடுத்திருந்தனர். தமது தாக்குதலை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுக்கும் மெல்லிய விசில் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். கண்ணிவெடியின் இயக்கியை செல்லக்கிளி அழுத்தினார். இரண்டு கண்ணிவெடிகளும் ஒரேநேரத்தில் வெடித்தன. மிகப் பலத்த சத்ததுடன் அவை முளங்கின‌. சுமார் மூன்று நான்கு கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்தவர்களும் அந்த வெடியோசையை அன்றிரவு கேட்டார்கள். குருநகர் முகாமிலிருந்த ராணுவத்தினரும் அந்த வெடியோசையினை மிகத் தெளிவாகக் கேட்டனர். முதலாவது கண்ணிவெடி, ஜீப் வண்டி அதன் மேலாகச் செல்லும்போது வெடித்தது. மேலே தூக்கியெறியப்பட்ட ஜீப் வண்டி வீதியின் ஓரத்தில் நொறுங்கி வீழ்ந்தது. இத்தாக்குதல் குறித்து பின்னாட்களில் தமிழ் இதழான தேவியில் பேட்டியளித்த கிட்டு, வெடிப்பின்போது ஜீப் வண்டி ஒரு தென்னைமரத்தின் உயரத்திற்கு மேலே தூக்கி வீசப்பட்டதாகக் கூறியிருந்தார். இரண்டாவது கண்ணிவெடி, ட்ரக் வண்டியிலிருந்து ஒரு சில மீட்டர் தூரத்தில், வண்டியின் முன்னால் வெடித்தது. உடனடியாக ட்ரக் வண்டியை நிறுத்திய சாரதி, கண்ணிவெடியால் உருவாக்கப்பட்ட பள்ளத்தில் அது வீழ்வதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். இரண்டு வெடிப்புக்களும் வீதியில் பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியிருந்தன. ஜீப்பில் பயணம் செய்து வந்த அனைவருமே அதிலிருந்து தூக்கி வீசப்பட்டிருந்தனர். சாரதி மானதுங்கவின் சடலம் வண்டியின் சாரதி இருக்கைக்கு அருகில் வீழ்ந்து கிடந்தது. அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் உடல் வீதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தது. பின்னால் இருந்துவந்த இரு ராணுவ வீரர்களினதும் உடல்களும் வாகனத்தின் பிற்பகுதியில் சிதைந்த நிலையில் காணப்பட்டன. அவர்களது மரணங்கள் வெடிக்கும்போதே நிகழ்ந்துவிட்டன. பின்னர் பிரபாகரனும் ஏனைய போராளிகளும் ட்ரக்கில் இருந்த ராணுவத்தினர் மீது வீதியின் இரண்டு பக்கத்திலிருந்தும் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். ட்ரக்கிலிருந்து வெளியே குதித்துத் தப்பிக்க முயன்ற பல ராணுவத்தினர் சூடுபட்டு இறந்து வீழ்ந்தனர். யாழ் மாவட்டத் தளபதி பிரிகேடியர் லைல் பல்த்தசாரும், மேஜர் முனசிங்கவும் வெடியோசையினைக் கேட்டனர். இதுகுறித்து பின்னாட்களில் என்னுடன் பேசிய முனசிங்க பின்வருமாறு கூறினார், "நான் எனது இரவுணவை முடித்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். உணவு உட்கொள்ளும் மண்டபத்திலிருந்து மிக அருகிலேயே எனது அறை இருந்தது. நான் தூங்குவதற்காக கட்டிலில் அமரும்போது அந்த பாரிய வெடியோசையினைக் கேட்டேன். நல்லூர் கோயில் இருக்கும் திசையிலிருந்தே அந்த வெடியோசை கேட்டது. அப்போது இரவு 11:20 ஆகியிருக்கும். நான் அவசர அவசரமாகக் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டேன். எனது அறையின் யன்னலில் தட்டி உடனடியாக என்னை வெளியில் வருமாறு தளபதி பல்த்தசார் அழைத்தார். நாங்கள் இருவரும் ரேடியோ அறைக்கு ஓடிச் சென்றோம். ரோந்தில் ஈடுபட்டிருந்த ராணுவ அணியுடன் தொடர்பினை ஏற்படுத்த நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அப்பக்கத்திலிருந்து எவருமே எமது அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவில்லை". "புலிகளுக்கெதிரான நள்ளிரவு நடவடிக்கை ஒன்றிற்காக‌ நாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த ஜீப் வண்டியொன்றில் நாம் ஏறிக்கொண்டோம். நான் அதனை ஓட்டிச் செல்ல, பல்த்தசார் எனக்கருகில் தாவி ஏறிக்கொண்டார். சில கொமாண்டொ வீரர்களும் எமது ஜீப்பின் பின்புறத்தில் ஏறிக்கொண்டார்கள். எம்மைப் பின்தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இராணுவ வாகனங்களும் அவற்றின் பின்னால் உயர் பொலீஸ் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஜீப் ரக வாகனமும் விரைந்து வந்துகொண்டிருந்தன. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நான் அசுர கதியில் எனது ஜீப்பைச் செலுத்திக்கொண்டு போனேன். திருநெல்வேலிச் சந்தியை அண்மிக்கும்போது ராணுவ ஜீப்வண்டியொன்று ஒரு பக்கமாக வீழ்ந்த நிலையில் நொறுங்கிப் போயிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்.
  12. திருநெல்வேலித் தாக்குதல் பலாலி வீதியையும் பருத்தித்துறை வீதியையும் இணைக்கும் குறுக்கு வீதியொன்றில் தான் ஒட்டிவந்த மினிபஸ்ஸை செல்லக்கிளி ஓரமாக நிறுத்தவும் உள்ளிருந்த பிரபாகரனும் ஏனைய தோழர்களும் இறங்கிக் கொண்டார்கள். திருநெல்வேலிச் சந்தி நோக்கி இருவர் கொண்ட சிறிய குழுக்களாகப் பிரிந்துகொண்ட அவர்கள் யாழ்ப்பாணத்திசையில் திரும்பி சுமார் 200 மீட்டர்கள் நடந்தார்கள். அவ்விடத்திலிருந்த மளிகைக்கடை ஒன்றின் முன்னால் அவர்கள் மீண்டும் கூடினர். சீமேந்தினால் அமைக்கப்பட்ட கூரையும், அதன் முன்னால் அரைப்பங்கிற்குக் கட்டப்பட்ட சீமேந்துச் சுவரும் கொண்டு காணப்பட்டது அந்த மளிகைக்கடை. சுமார் இரவு 9 மணியிருக்கும் அப்போது. அநேகமான வீடுகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ஒரு சில வீடுகளில் மட்டும் விளக்குகள் இன்னமும் எரிந்துகொண்டிருந்தன. வீதியில் சப்பாத்துக் காலடி ஓசை கேட்க, அருகிலிருந்த வீடுகள் சிலவற்றிலிருந்து குடியானவர்கள் வீட்டு யன்னல்களூடாக‌ வீதி நோக்கிப் பார்ப்பத் தெரிந்தது. தான் கொண்டுவந்திருந்த ஆயுதப் பையை வீதியில் போட்டுவிட்டு திறக்கப்பட்ட யன்னல்கள் அருகில் சென்ற விக்டர், "யன்னல்களைச் சாத்துங்கள்" என்று சிங்களத்தில் கத்தினார். பின்னர் மின்விளக்குகளையும் அணைக்குமாறு அவர் சிங்களத்திலேயே உத்தரவிட்டார். யன்னல்கள் சாத்தப்பட்டதுடன் மின்விளக்குகளும் உடனேயே அணைக்கப்பட்டுவிட்டன. சிங்கள ராணுவத்தின் கட்டளைகளுக்கு பணிந்துபோவதென்பது அப்போது தமிழருக்கு நன்கு பரீட்சயமாகியிருந்தது குறிப்பிடத் தக்கது. ராணுவத் தொடரணிகளின் பாதுகாப்பிற்காக கால்நடையாக வீதியில் ரோந்துவரும் சிங்கள ராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது இவ்வகையான கட்டளைகளை இட்டுக்கொண்டே செல்வது அக்காலத்தில் வழமையாக இருந்த ஒன்று. அன்றிரவு பிரபாகரனும் அவரது தோழர்களும் ராணுவச் சீருடையிலேயே காணப்பட்டதனால், அவர்களைச் சிங்கள ராணுவத்தினர் என்றே மக்களும் எண்ணிக்கொண்டார்கள். கடையின் அருகில், வீதியின் ஓரமாக தொலைத்தொடர்புச் சேவையின் ஊழியர்கள் கம்பிகளை புதைப்பதற்காக அகழிகளை வெட்டி வைதிருந்தார்கள். அந்த அகழிகளில் ஒன்றில் விக்டரும் செல்லக்கிளியும் தாம் கொண்டுவந்திருந்த கண்ணிவெடியினை புதைத்துக்கொண்டிருப்பதை பிரபாகரன் திருப்தியுடன் பார்த்துக்கொண்டு நின்றார். அவர்களுடன் அவர் பேசவில்லை. பின்னர் அருகில் நின்றை ஏனைய தோழ‌ர்களிடம் சென்ற பிரபாகரன் அவர்களுடன் சேர்ந்து, தாம் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக சாக்குப் பைகளிலிருந்து வெளியில் எடுக்க ஆரம்பித்தார். எச் கே ஜி 3 தான் கொண்டுவந்த ஜி 3 ரைபிளை வாஞ்சையுடன் வெளியே எடுத்த பிரபாகரன் அதன் மீது படிந்திருந்த தூசியினை மெதுவாகத் துடைத்தார். ஏனையவர்களிடம் எஸ் எம் ஜி இயந்திரத் துப்பாக்கிகள் காணப்பட்டன. புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு, விக்டர், புலேந்திரன், ஐயர், சந்தோசம், அப்பையா உட்பட வேறு சிலரும் அந்த இராப்பொழுதில் அங்கே ராணுவத்தின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்து நின்றனர். புலிகளின் தாக்குதல்க் குழுவில் மொத்தமாக 14 பேர் இருந்தார்கள். பிரபாகரன் திட்டமிட்டதைப் போலவே இரு குழுக்களாக அவர்கள் பிரிந்துகொண்டார்கள். ஒரு குழுவிற்குப் பிரபாகரன் தலைமை தாங்க, மற்றைய குழுவிற்கு கிட்டு தலைமை தாங்கினார். இத்தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் பிரபாகரனாலேயே வகுக்கப்பட்டது. சீலனைக் கொன்றதற்காக இராணுவம் மிகப்பெரிய விலையினைச் செலுத்தவேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் கூறியிருந்தார். "சீலனின் இழப்பென்பது ஈடுசெய்யப்பட முடியாதது. ஆனாலும், சீலனின் இழப்பிற்கு நாம் பெரிதாக ஒரு நடவடிக்கையினைச் செய்யவேண்டும். அவனுக்குத் திருப்தியைக் கொடுக்கும் வகையில் அது அமையவேண்டும்" என்று சீலன் கொல்லப்பட்ட நாளிலிருந்து தனது போராளிகளிடம் பிரபாகரன் இதனைச் சொல்லி வந்திருந்தார். திருநெல்வேலித் தாக்குதல் நடந்து சுமார் 8 மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு பங்குனியில் அனித்தா பிரதாப்பிற்கு செவ்வியளித்த பிரபாகரன், திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் மரணத்திற்கான பழிவாங்கலாகவும், இராணுவத்தினருக்கான தண்டனையாகவுமே தன்னால் திட்டமிடப்பட்டதாகக் கூறியிருந்தார். கல்கத்தாவில் இருந்து வெளிவரும் அரசியல் வார இதழ் ஒன்றிற்காக அனித்தா பிரதாப் பிரபாகரனை சென்னையில் செவ்வி கண்டிருந்தார். அனித்தாவினால் பிரபாகரனிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியினை நான் இங்கே இணைத்திருக்கிறேன், கேள்வி : ஆடித் தாக்குதலை நீங்கள் ஏன் நடத்தினீர்கள்? இத்தாக்குதல் நடத்தப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே? சிலரைப் பொறுத்தவரை, ராணுவத்தால் வன்புணர்வுசெய்யப்பட்ட தமிழ்ப்பெண்களுக்கான பழிவாங்கலாகவே இதனை நீங்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, உங்களின் நண்பனும், ராணுவப் பிரிவின் தளபதியாகவும் இருந்த சார்ள்ஸ் அன்டனியை ஆடி 15 இல் கொன்றுவிட்டோம் என்று கூதூகலித்திருந்த சிங்கள ராணுவத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லவே நீங்கள் இத்தாக்குதலை நடத்தியதாக நான் உணர்கிறேன். உண்மையென்னவென்றால், உங்கள் இயக்கத்தின் மிக முக்கிய தளபதி ஒருவரைச் சிங்கள ராணுவம் கொன்றுவிட்ட போதிலும், அவர்கள் மீது தீவிரமான தாக்குதல் ஒன்றினை நடத்தக்கூடிய இயலுமையும் பலமும் இன்னமும் உங்கள் இயக்கத்திடம் இருக்கின்றது என்பதைக் காட்டவே நீங்கள் இதனைச் செய்தீர்கள் என்று நான் நம்புகிறேன், இது சரிதானே? பிரபாகரன் : "சார்ள்ஸ் அன்டனி பற்றியும், திருநெல்வேலித் தாக்குதல் பற்றியும் நீங்கள் தேடி அறிந்துவைத்திருக்கும் விடயங்களில் சில உண்மைகள் இருக்கின்றன. இத்தாக்குதல் ஒரு வழியில் பழிவாங்கலாகவும், இன்னொரு வழியில் சிங்கள ராணுவத்திற்கான தண்டனையாகவுமே எம்மால் நடத்தப்பட்டது. ஆனாலும், 13 சாதாரணச் சிங்களச் சிப்பாய்களின் மரணம் ஒரு மாபெரும் புரட்சிகர விடுதலைப் போராளியான சார்ள்ஸ் அன்டனியின் மரணத்திற்கு ஒப்பாகி விடாது. எமது எதிரி மீதான எமது அமைப்பின் கெரில்லா ரீதியிலான தாக்குதலாகவுமே இதனை நாம் முன்னெடுத்தோம்". மேலும், அனித்தா குறிப்பிட்ட நான்கு தமிழ்ப் பெண்கள் மீதான சிங்கள ராணுவத்தின் பாலியல் வன்புணர்வும் தமிழ்ச் சமூகத்தை வெகுவாகப் பாதித்திருந்தது. குறிப்பாக பிரபாகரன் இதுகுறித்து மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தார். அக்காலத்தில் வந்திருந்த செய்திகளின்படி ஆடி 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மூன்று இளம் தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்ற சிங்கள ராணுவத்தினர் அப்பெண்களை தமது முகாமிற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். இப்பெண்களில் ஒருவர் பிந்நாட்களில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. சதாசிவம் கிருஸ்ண‌குமார் ‍ கிட்டு திருநெல்வேலித் தாக்குதலைத் திட்டமிடும் பொறுப்பினை கிட்டுவிடமும் செல்லக்கிளியிடமுமே பிரபாகரன் ஒப்படைத்திருந்தார். போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்கு ராணுவம் மீது தாக்குதல் ஒன்றினை மேற்கொள்வதே சரியானது என்று பிரபாகரன் உள்ளகக் கலந்துரையாடல்களில் போராளிகளிடம் பேசியிருந்தார். ஆகவே, ராணுவத்தின் இரவு ரோந்து அணி மீது தாக்குதல் நடத்துவதே சீலனின் மரணத்திற்கு தாம் கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும் என்று கிட்டுவும் செல்லக்கிளியும் முடிவெடுத்தனர்.இத்தாக்குதல் மூலம் ஆயுத ரீதியிலான பலமான அமைப்பொன்று உருவாகிவிட்டதை சிங்கள அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உணர்த்த முடியும் என்றும் அவர்கள் நம்பினர். வழமையான ராணுவ ரோந்தணி மாலை மங்கும் வேளையில் மாதகல் ராணுவ முகாமிலிருந்து கிளம்பி யாழ்ப்பாணம் குருநகர் ராணுவ முகாமை வந்தடையும். இந்த ரோந்து அணியில் ஜீப் வண்டி ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் இடம்பெற்றிருந்தன‌. குருநகர் முகாமில் தமது இரவு உணவை முடித்துக்கொண்ட அதிகாரியும் ராணுவ வீரர்களும் மீண்டும் மாதகல் முகாம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். திருநெல்வேலிச் சந்தி ‍ அண்மைய நாட்களில் ராணுவ ரோந்து அணி திரும்பிச் செல்லும் பாதையில் அமைந்திருந்த திருநெல்வேலிக் கிராமத்தை கிட்டுவும் செல்லக்கிளியும் தமது தாக்குதலுக்கான இடமாகத் தெரிவுசெய்வதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது அதன் அமைவிடம். யாழ்ப்பாண நகரில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அப்பகுதி அமைந்திருந்ததுடன், சனத்தொகை அடர்த்தி குறைந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. கட்டடங்களைக் கொண்டிருந்த பகுதியாதலால், மறைந்திருந்து தாக்குவதற்கு உகந்த பகுதியாகவும் அது காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக தாக்குதலை முடித்துக்கொண்டு தப்பிச் செல்வதற்கான பல வழிகளையும் அப்பகுதி தன்னகத்தே கொண்டிருந்தது. இரண்டாவது நேரம். ராணுவ ரோந்து அணி திருநெல்வேலியை அடையும் நேரம் நள்ளிரவு வேளையை அடைந்திருக்கும். அவ்வேளையில் வீதியில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியே வீதி கணப்படும். மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம் வீதியின் அருகில் தோண்டப்பட்டிருந்த அகழிகள் தமது கண்ணிவெடிகளைப் புதைத்துவைப்பதற்கு புலிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தன. அப்பகுதியில் அகழிகள் தோண்டப்பட்டிருப்பதை இராணுவத்தினர் அறிந்திருந்தமையினால், அவற்றினைச் சந்தேகம் கொண்டு சோதிக்கும் எண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. அப்பகுதியைப் பார்வையிட்ட பிரபாகரன் மிகுந்த திருப்தியடைந்திருந்தார். இப்பகுதியைத் தெரிவுசெய்தமைக்காக கிட்டுவையும் செல்லக்கிளியையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். தமது தாக்குதலுக்கு மிகச் சரியான இடம் அதுவே என்று அவர்களிடம் பிரபாகரன் கூறினார். செல்லக்கிளி பதுங்கியிருந்து கண்ணிவெடியினை இயக்குவதற்கு உகந்த பாதுகாப்பினை சீமேந்துக் கூரையும், அரைப்பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த சீமேந்துச் சுவரும் அவருக்குக் கொடுத்தன. அவருக்குத் துணையாக அருகே பதுங்கியிருந்த விக்டருக்கும் அப்பகுதி பாதுகாப்பு அளித்தது. கூரையிலிருந்த கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைக் கொடியினுள் கண்ணிவெடிக்கான வயர்களை அவர்களால் முழுமையாக மறைக்கக் கூடியதாக இருந்தது. மேலும், அயல் வீடுகளில் கட்டப்பட்டிருந்த சீமேந்து மதில்களுக்குப் பின்னால் தாக்குதல் அணி மறைந்துகொள்வதற்கான வசதியும் அங்கு காணப்பட்டது. எனது ஊரான அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்தோசம் என்னுடன் சில வருடங்களுக்குப் பின்னர் பேசும்போது, "தாக்குதல் நடத்தப்பட்ட‌ நாளன்று, அதிகாலையிலிருந்தே நாம் அனைவரும் பதட்டத்துடன் இருந்தோம்" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதியே தாக்குதலை நடத்துவதென்று பிரபாகரன் முடிவெடுத்திருந்தார். "அதற்கு முதல்நாள் இரவு என்னால் தூங்க முடியவில்லை. எமது தாக்குதல் வெற்றியடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டோம்" என்றும் அவர் மேலும் கூறினார். புலிகள் நடத்திய மூன்றாவது கண்ணிவெடித் தாக்குதலே திருநெல்வேலித் தாக்குதல் என்பதோடு, கண்ணிவெடித்தாக்குதலின் பின்னர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலும் இதுவாகும். புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதலை செல்லக்கிளியினால் வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கவில்லை. பொன்னாலைக் கரையோரச் சாலையில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் கடற்படையினர் அப்பகுதிக்கு வரமுன்னரே வெடித்திருந்தன. கண்ணிவெடிகள் வெடித்தபோது கடற்படையினர் ரோந்து அணி சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் வந்துகொண்டிருந்தது. இரண்டாவது தாக்குதலான உமையாள்புரப் பகுதித் தாக்குதலில் கண்ணிவெடித் தாக்குதலுடன், துப்பாக்கித் தாக்குதலும் முதன்முறையாக நடத்தப்பட்டபோது, அதுவும் நேரம் தவறியிருந்தது. ராணுவத்தினரின் ட்ரக் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடிகள் வெடித்துவிட்டன. கண்ணிவெடி வெடிக்கவைக்கப்பட்டதையடுத்து ட்ரக் வண்டியைச் சாரதி நிறுத்திக்கொள்ள, வெளியே பாய்ந்த ராணுவத்தினர் புலிகள் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே ஓடத் தொடங்க, புலிகளும் அப்பகுதியை விட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. புலிகள் எதிர்பாராத விதமாக ராணுவத் தொடரணியொன்று அப்பகுதிக்கு வந்ததனால் ஏற்பட்ட குழப்பத்தில் புலிகளின் அணியிலிருந்த சிலர் தமது காலணிகளையும் விட்டுவிட்டே ஓடியிருந்தனர். ஆகவே, திருநெல்வேலித் தாக்குதல் எப்படியாவது வெற்றியளிக்க வேண்டும் என்று தனது போராளிகளிடம் பிரபாகரன் சொல்லிக்கொண்டிருந்தார். கிளேமோர்க் குண்டு அதிகாலையிலேயே துயில்விட்டெழும் பழக்கம் கொண்ட பிரபாகரன் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாளான ஆடி 23 ஆம் திகதி வழமைபோலவே அதிகாலையில் எழுந்துவிட்டார். தனக்குத் திருப்தியாகும் வரை செல்லக்கிளியுடனும் விக்டருடனும் தாக்குதல் திட்டத்தை மீண்டும் மீண்டும் பரீட்சித்துச் சரிபார்த்துக்கொண்டார். சுமார் இரண்டு மீட்டர்கள் இடைவெளியில் அகழியினுள் கண்ணிவெடிகள் இரண்டினைப் புதைத்த செல்லக்கிளியும், விக்டரும் அவற்றிற்கான மிந்தொடுப்பினை இயக்கியுடன் இணைக்கும் வேலையில் இறங்கினர். கண்ணிவெடிகளையும் , வெளியே தெரிந்த வயர்களளையும் மண்கொண்டு மூடி மறைத்தனர். வயரின் மீதிப்பகுதியை கூரையிலிருந்து நிலம்வரை தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப் பந்தலினுள் லாவகமாக மறைத்துக்கொண்டு கூரையிலிருந்த இயக்கிவரை இழுத்துச் சென்றனர்.பின்னர் கூரையின் மீது ஏறி, மறைப்பாகக் கட்டப்பட்டிருந்த அரைச்சுவரின் பின்னால் பதுங்கிக் கொண்டு ராணுவ ரோந்து அணியின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். பிரபாகரனும் ஏனைய போராளிகளும் வீதியின் இரு மருங்கிலும் இருந்த மதில்களின் பின்னர் நிலையெடுத்து நின்றனர்.
  13. பிக்குகளால்... வெள்ளையடிக்கப் பட்ட ராஜபக்சவினர்.
  14. காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலமாக... கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டியடிக்கப் பட்டு (09.07.2022) ஓராண்டு நிறைவு. கோத்தா போனபின், அந்தப்... போராட்டத்தை நசுக்கி, அரசியல் செய்யும்... மாஃபியா அரசியல்வாதிகள்.
  15. 1983 ஆடியில் தமிழர்கள் மீது தாக்குதலை நடத்த ஜெயார் உருவாக்கிய தொழிற்சங்க அக்கிரமப் படை தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட அரசாங்கமும் தயாராகி வந்தது. பயங்கரவாதத்தினை முறியடிப்பதற்காகத் தான் கூட்ட எண்ணியிருந்த அனைத்துக் கட்சி மாநாடு ஆடி 20 ஆம் திகதி நடவாமல்ப் போனது ஜெயாருக்குக் கடுமையான சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, தமிழ்ப் போராளி அமைப்புக்களினதும், அவர்களின் நடவடிக்கைகள் தொடரபாகவும் செய்தி வெளியிடுவதில் கடுமையான தணிக்கைகளை அவர் கொண்டுவந்தார். தணிக்கையினைக் கண்காணிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான டக்ளஸ் லியனகே நியமிக்கப்பட்டார். ஆடி 23 ஆம் திகதி கூடிய பாராளுமன்றம் அவசரகாலச் சட்டத்தினை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது. தமிழர்களைத் தொடர்ச்சியாக அரசாங்கம் ஏமாற்றி வருவதால் இனிமேல் அரசுடன் பேசுவதில்லையென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்த் தலைமைப்பீடம் ஆடி 23 ஆம் திகதி மன்னார் நகரில் கூடியபோது முடிவெடுத்திருந்தது. மேலும், தம்மால் முன்வைக்கப்படும் 4 நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கச் சம்மதிக்கலாம் என்றும் அக்கட்சி முடிவெடுத்தது. அந்த 4 நிபந்தனைகளாவன, 1. சுதந்திரக் கட்சி அடங்கலாக, அனைத்துக் கட்சிகளும் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். 2. மாநாட்டில் பேசப்படும் விடயங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கான தன்னாட்சி அதிகாரம், மற்றும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை ஆகியவிடயங்களும் உள்ளடக்கப்படவேண்டும். 3. தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களில் இருந்து ராணுவம் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். 4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழர்களைப் பற்றிச் சிந்தைக்கவோ அல்லது அவர்களின் நிபந்தனைகளை ஏறெடுத்துப் பார்க்கவோ அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்தபோதிலும் சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த தமிழர்களுடனான உறவினைத் தான் புதுப்பிக்க விரும்புவதாக பாசாங்கு செய்யவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. ஆகவே ஆடி 21 ஆம் திகதி, தன்னுடன் வந்து பேசுமாறு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவர் நடராஜாவை காமிணி திசாநாயக்கவூடாக ஜெயார் அழைத்தார். இந்தச் சந்திப்பு ஜெயாரின் இல்லத்தில் நடைபெற்றது. லலித் அதுலத் முதலியும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். அன்று மாலை சிறிலங்கா பவுண்டேசன் மண்டபத்தில் இடம்பெற்ற புனிதம் திருச்செல்லவம் நினைவுப் பேருரை நிகழ்வில் நடராஜா கலந்துகொண்டபோது நான் அவரைச் சந்தித்தேன். முதலில் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை நடராஜா என்னிடம் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அச்சப்படுகிறது என்று தான் ஜனாதிபதியிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அபிவிருத்திச் சபைகள் இயங்குவதற்கான அதிகாரத்தையும், நிதியினையும் அரசாங்கம் தர மறுத்துவருவதாக அவர் ஜெயாரிடம் கூறியபோது குறுக்கிட்ட லலித் அதுலத் முதலி, "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை அரசாங்கம் ஒருபோதுமே தரப்போவதில்லை" என்று மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களைத் தருவதில் அரசாங்கத்திற்கு ஆர்வம் இல்லை. நாட்டில் தற்போது இருக்கும் நிலைமை அதற்கு ஒருபோதுமே இடம் கொடுக்கப்போவதில்லை. ஆகவே, இங்குவந்து அதிகாரங்களைப் பகிர்ந்து தாருங்கள் என்று கேட்பதை நிறுத்துங்கள்" என்று லலித் நடராஜாவைப் பார்த்துக் காட்டமாகக் கூறியிருக்கிறார். இதனால் நடராஜா விரக்தியடைந்திருக்கிறார். பின்னர் ஜெயாரின் பக்கம் திரும்பிய நடராஜா, அவரைப் பார்த்து "லலித் கூறுவது நீங்கள் எடுத்திருக்கும் முடிவைத்தானோ?" என்று கேட்டிருக்கிறார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த ஜெயவர்த்தன, "நான் கூறச்சொன்னதை அப்படியே லலித் உங்களிடம் கூறினார், அவ்வளவுதான், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், நிலைமை சற்றுச் சீராகட்டும், அதன்பின்னர் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரங்களை கொடுப்பது பற்றிச் சிந்திக்கலாம்" என்று கூறியிருக்கிறார். இதனால் சற்றுச் சினமடைந்த நடராஜா, "அதுவரை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எமது மேசைகளில் இருந்து கோப்புக்களை அங்கும் இங்குமாக அரக்கச் சொல்கிறீர்களா? " என்று வெறுப்புடன் கேட்டிருக்கிறார். நடராஜாவை ஆசுவாசப்படுத்த முயன்ற ஜெயார், நிலைமைகள் இப்போது நன்றாக இல்லை, ஓரளவுக்கு நிலைமைகள் சீரடைந்தவுடன் அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசலாம் என்று கூறியிருக்கிறார். ஜெயாரும் நடராஜாவும் பேசும்போது குறுக்கிட்ட லலித், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இக்கட்டான நிலை எனக்குப் புரிகிறது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளிலிருந்து சில நல்ல விடயங்களை தமிழர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் அவர்களிடம் காட்டவேண்டும் என்பதே உங்கள் பிரச்சினை. விளையாட்டு மைதானங்கள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கு நாம் உங்களுக்குப் பணம் தருவோம். இவ்வகையான நடவடிக்கைகள் உங்களை பரபரப்பாக வைத்திருப்பதுடன் உங்கள் மக்களையும் திருப்திப்பட வைக்கும்" என்று லலித் நடராஜாவைப் பார்த்துக் கூறினார். லலித் தன்னிடம் தருவதாகக் கூறிய வாக்குறுதியை தான் நிராகரித்துவிட்டதாக நடராஜா என்னிடம் கூறினார். அவர்களுக்குப் பதிலளித்த நடராஜா "நாம் எதிர்பார்ப்பது நிலையான தீர்வையே அன்றி நீங்கள் போட நினைக்கும் அற்பச் சலுகைகளை அல்ல" என்று கூறியிருக்கிறார். பின்னர் பேசிய ஜெயார் இந்த விடயங்களைப் பற்றி இன்னொரு கூட்டத்தில் பேசலாம் என்று கூறி அன்றைய சந்திப்பை முடித்துவைத்தார். இந்தச் சந்திப்பைப் பற்றி நடராஜா கூறியது இதைத்தான், ஜெயார் எனும் மனிதர் இனிமையாகப் பேசி தனக்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டார்.அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் நடராஜா பதவி விலகுவதிலிருந்து தடுப்பது ஒன்றே. அதில் அவர் வெற்றியும் கண்டார். நான் இதனை டெயிலி நியூஸ் பத்திரிகைக்குச் செய்தியாக அனுப்பவில்லை. எனது ஆசிரியரை தர்மசங்கடத்தினுள் ஆள்த்த நான் விரும்பவில்லை. நாம் கொடுக்கவேண்டிய செய்திக்குப் பதிலாக லலித் ஒரு அறிவிப்பை பத்திரிக்கையில் வெளியிட்டார். அதுதான் நடராஜா தனது பதவி விலகலை இரத்துச் செய்தார் என்றும் மேலதிக கலந்துரையாடல்கள் தொடரும் என்பதும். ஜெயாருக்குக் கால அவகாசம் தேவைப்பட்டிருந்தது. அவரும் அவரது அடியாட்களும் பல்வேறு செயல்களைத் திட்டமிட்டிருந்தார்கள். சிறில் மத்தியுவும் அவரது இனவாத தொழிற்சங்கமுமான ஜாதிக சேவா சங்கமயவும் தெற்கில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அனைவரினதும் விலாசங்களைச் சேகரிக்கத் தொடங்கியிருந்ததுடன் பாரிய அதிரடி நடவடிக்கை ஒன்றிற்காக விசேட படைப்பிரிவொன்றும் உருவாக்கப்பட்டு வந்தது. லேக் ஹவுஸ் அமைப்பில் இயங்கிவந்த ஜாதிக சேவா சங்கமய இல் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். என்னை ஓரளவிற்கு மரியாதையுடனேயே அவர்கள் நடத்தி வந்தனர். தமிழர் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு 3 அல்லது நான்கு நாட்களுக்கு முன்பதாக என்னிடம் ரகசியமாகப் பேசிய சிங்கள உறுப்பினர் ஒருவர்,"அசம்பாவிதம் ஒன்று நடக்கப் போகிறது" என்று கூறிவிட்டு சில நொடி மெளனத்திற்குப் பின்னர் "அவர்கள் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களினது பட்டியல் ஒன்றினையும் தயாரிக்கிறார்கள்" என்று கூறினார். ஏதோ அசம்பாவிதம் ஒன்று என்னைச் சுற்றி சூழ்கிறதென்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தமிழருக்கெதிரான வெறுப்புணர்வு வெளிப்படையாகவே அவர்களின் முகத்தில் படிந்துவருவதை நான் உணர்ந்துகொண்டேன். லங்கா கார்டியன் பத்திரிக்கையின் ஆசிரியர் மேர்வின் டி சில்வாவும் இந்தவகையான ரகசியப் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறார். அதுபற்றி பல வருடங்களுக்குப் பின்னர், 1992 ஆம் ஆண்டு மாசி 2 ஆம் திகதி வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் அவர் "மனிதர்களும் அவர்களின் செயற்பாடுகளும்" என்கிற பதிவில் எழுதியிருந்தார். "கொடூரமான அவலங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு குறைந்தது ஒருவாரத்திற்கு முன்னராவது ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாகச் செய்திகள் பரவி வந்தன. மிகக்கொடுமையான, ஒரு இனக் கூட்டத்திற்குப் பாடம் ஒன்றினைப் புகட்டுவதற்கான செயற்பாடுகளில் பரவலாக இறங்கப் போகிறார்கள் என்கிற அந்தச் செய்தி". ஆடி 23 ஆம் திகதி, நள்ளிரவு வேளை, "4 ‍ X 4 பிராவோ" என்று பெயரிடப்பட்ட ராணுவ ரோந்து அணியின் வருகைகையினை எதிர்பார்த்து பிரபாகரனும் அவரது தோழர்களும் திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் காத்திருந்தார்கள். புலிகளின் மூத்த போராளிகளான கிட்டு, ஐயர், விக்டர், புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோசம் மற்றும் அப்பையா ஆகியோர் பரபரப்புடன் வீதியின் இருபுறத்திலும் நிலையெடுத்துக் காத்திருந்தார்கள். ராணுவ ரோந்து அணி மீது கண்ணிவெடித் தாக்குதலையும் அதன்பின்னர் பதுங்கித் தாக்குதலையும் நடத்துவதே அவர்களின் திட்டம். தான் ராணுவம் மீது அன்றிரவு நடத்தவிருக்கும் இத்தாக்குதல் இலங்கையின் மொத்தச் சரித்திரத்தையும் மாற்றிப்போடவிருக்கிறது என்பதுபற்றி பிரபாகரன் சிறிதும் அறிந்திருக்கவில்லை. மறுநாள் தமிழர்கள் மீது தனது அக்கிரமக்காரர்களின் படையினை ஏவிவிட்ட ஜெயார் கூட இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தையே தனது நடவடிக்கை முற்றாக உடைத்துப் போடப்போகிறதென்பதை அறிந்திருக்கவில்லை. மிகக்கொடுமையான இரவுகளான ஆடி 23 நள்ளிரவு தொடக்கம் ஆடி 24 நள்ளிரவு வரையான காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு இலங்கை இன்றுவரை தோற்றே வருகிறது
  16. திருநெல்வேலித் தாக்குதலைத் தீர்மானித்த பிரபாகரன் ராணுவத்தினர் அன்றிரவே தமது விசாரணைகளை ஆரம்பித்தனர். சூட்டுச் சத்தம் கேட்டவுடன் வீதிக்கு வந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமகன் ஒருவரை முனசிங்க தலைமையிலான ராணுவத்தினர் பிடித்துக்கொண்டனர். அவரே புலிகளின் மறைவிடத்தை இராணுவத்தினருக்குக் காட்டிக் கொடுத்தார். வெள்ளம்பொக்கடிக்கும் கச்சாய்க்கும் இடையிலான பகுதியொன்றில் அந்த வீடு அமைந்திருந்தது. மீசாலையினைச் சேர்ந்த சின்னையா சந்திர மெளலீசன் என்பவரே அந்த வீட்டினை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார். அவ்வீட்டில் பிரபகாரன் பல தடவைகள தங்கிச் சென்றிருக்கிறார். அவ்வீட்டைச் சோதனையிட்டபோது சில ஆவணங்களும், ஒரு கண்ண்டிக் குப்பியும் காணப்பட்டன. ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட முதலாவது சயனைட் குப்பி இதுவே. சீலனினதும், ஆனந்தனினதும் வித்துடல்கள் கடுமையான பொலீஸ் பாதுகாப்புடன் தெல்லிப்பழையில் எரியூட்டப்பட்டன. ஒரு ராணுவ வீரனின் பார்வையில் என்று தான் எழுதிய புத்தகத்தில் சீலனினதும் ஆனந்தனினதும் வித்துடல்களின் ஒளிப்படங்களை முனசிங்க இணைத்திருந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி 16 ஆம் திகதி தான் எடுத்த மாவீரர்கள் இருவரினதும் ஒளிப்படங்களின் மூலப்பிரதியை அவர் என்னிடம் காண்பித்தார். சீலனின் தலைப்பகுதியிலும், கண்ணுக்கு அருகிலும் காணப்பட்ட சூட்டுக் காயங்களைப் பார்க்கும்போது மிக அருகில் இருந்து சுடப்பட்டிருப்பது புரியும் என்று அவர் கூறினார். சீலனின் புகைப்படத்தைக் காட்டிக்கொண்டே என்னுடன் பேசிய முனசிங்க, "சீலனின் உடலினைக் காட்டும் ஒரே புகைப்படம் இதுதான், ஆகவே பிரபாகரன் நிச்சயம் எனது புத்தகத்தை வாங்குவார்" என்று கூறினார். பிரபாகரனின் நீண்ட மெளனமும், சிந்தனையும் கிட்டுவால் கலைக்கப்பட்டது. சீலனின் மரணத்திற்காகப் பழிவாங்கவே பிரபாகரன் மெளனமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பதை கிட்டு பின்னர் உணர்ந்துகொண்டார். அனிதா பிரதாப், சொர்ணம் மற்றும் தமிழ்ச்செல்வனுடன் தேசியத் தலைவர் பிரபாகரனை முதன் முதலாகச் சந்தித்த சர்வதேசப் பத்திரிக்கையாளரும், அவரைத் தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து ஆய்வுகளை வெளியிட்டு வந்தவருமான அனிட்டா பிரதாப் தான் எழுதிய இரத்தத் தீவு எனும் புத்தகத்தில் "பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மிகவும் மூர்க்கத்தனமாகச் செயற்படுவார், ஒரு அடிபட்ட புலியைப் போல" என்று எழுதுகிறார். சீலனைக் கொன்றுவிட்டோம் ஏன்று ராணுவம் குகதூகலித்துக் கொண்டாடிய விதமே பிரபாகரனைத் திருநெல்வேலித் தாக்குதலைச் செய்யத் தூண்டியது என்று அனிட்டா கூறுகிறார். திருநெல்வேலியில் ராணுவம் மீது பிரபாகரன் நடத்திய தாக்குதலினைப் பார்க்கும்போது தனிப்பட்ட ரீதியில் பழிவாங்குவதற்காகவே அதனைச் செய்தார் என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார். தனது போராளிகளின் மரணத்தினை பிரபாகாரன் இலேசாக எடுத்துக்கொள்வதில்லை. அது அவரது இயல்பு. பிரபாகரனின் இந்தக் குணாதிசயத்தைக் காட்ட இரு நிகழ்வுகளை அனிட்டா விளக்குகிறார். http://www.eelamview.com/wp-content/uploads/2015/10/kumarappa-pulenthiran.jpg இந்தியச் சிங்களச் சதியால் பலியான தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் ‍ முதலாவது நிகழவு 1987 ஆம் ஆண்டு பலாலி ராணுவத் தளத்தில் தனது மிக முக்கிய தளபதிகள் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணித்தபோது இடம்பெற்றது. "1987 ஆம் ஆண்டு புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கொழும்பிற்குக் கொண்டுசெல்ல ஏற்பாடாகி இருந்தது. இந்தியா அவர்களை விடுவிக்க எவ்வளவோ முயன்றபோதும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி அவர்களைக் கொழும்பிற்குக் கொண்டுவந்து விசாரிப்பதில் பிடிவாதமாக நின்றார். கொழும்பிற்கு இழுத்துச் செல்லும் கணத்திற்குச் சற்று முன் புலிகளின் தளபதிகள் அனைவரும் சயனைட் வில்லைகளை உட்கொண்டு மரணத்தைத் தழுவிக்கொண்டனர். பிரபாகரனின் சினத்தின் மூடியை இச்சம்பவம் முற்றாகத் திறந்துவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார். சீலனின் நினைவாலயம் ‍ மீசாலை - 2003 ‍ அனிட்டா குறிப்பிடும் இரண்டாவது சம்பவம் 1994 இல் இடம்பெற்றிருந்தது. வன்னிக்கு முக்கிய செய்தியொன்றுடன் வந்துகொண்டிருந்த புலிகளின் தளபதியான லெப்டினன்ட் கேணல் அமுதனை ராணுவத்தினர் பதுங்கியிருந்து சுட்டுக் கொன்றனர். அமுதனின் தலையினை தனியே வெட்டி எடுத்துக்கொண்டு, அவரது உடலினை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர் ராணுவத்தினர். "பிரபாகரன் கடுஞ்சினம் கொண்டிருந்தார்" என்று அனீட்டா எழுதுகிறார். அக்காலத்தில் சந்திரிக்காவுடன் நடந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை விடவும் அமுதனின் படுகொலைக்கு பிரபாகரன் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அமுதனுக்கான தமது இறுதி மரியாதையினைச் செலுத்த அவரது தலையினை உடனடியாக இலங்கை ராணுவம் தம்மிடம் கையளிக்கவேண்டும் என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அப்போதைய உதவிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை, அமுதனின் தலை நன்கு பழுதடைந்த நிலையில் இருந்தமையினால் நாமே அதனை எரித்துவிட்டோம், தேவையென்றால் அத்தலையின் சாம்பலைத் தருகிறோம் என்று பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னரே பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் ஈடுபட பிரபாகரன் சம்மதம் தெரிவித்தார். சீலனின் மரணத்திற்கு பழிவாங்கலாக பாரிய தாக்குதல் ஒன்றினைச் செய்யட பிரபாகரன் தீர்மானித்தார். ஒவ்வொரு நாள் இரவு வேளையிலும் யாழ் நகரையும் சுற்றுப்புறங்களையும் ரோந்து புரியும் ராணுவத் தொடரணி மீது பதுங்கித் தாக்குவதென்று அவர் முடிவெடுத்தார். செல்லக்கிளி இத்தாக்குதலை திட்டமிடும் பொறுப்பு செல்லக்கிளியிடமும் கிட்டுவிடமும் கொடுக்கப்பட்டது. ஆகவே, ராணுவ ரோந்து அணியின் பலம், அதன் பாதைகள், ரோந்து அணி வழமையாக ஈடுபடும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் இருவரும் விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவர்களால் தயாரிக்கப்பட்ட பூரண விபரங்களுடனான தாக்குதல் திட்டம் பிரபாகரனிடம் கையளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட இடத்தினை தானே நேரில் சென்று பார்வையிட்ட பிரபாகரன் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். தேசியத் தலைவருடன் கிட்டண்ணா ஆடி 23 ஆம் திகதியை தமது தாக்குதலுக்கான நாளாக பிரபாகரன் தீர்மானித்தார். இத்தாக்குதல் நடக்கப்போவது குறித்து எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், செல்லக்கிளியைத் தேடி ராணுவம் வலைவிரித்தது. இந்த நடவடிக்கைக்கு யாழ்த் தளபதி பல்த்தசார் உத்தரவிட்டார். தனது புலநாய்வு வலையமைப்பை இந்த நடவடிக்கைக்காக அவர் முடுக்கிவிட்டார். அவரக்குச் சில வெற்றிகளு கிடைத்திருந்தன. செல்லக்கிளியின் நடமாட்டம் குறித்து அவ்வப்போது ராணுவத்திற்கு தகவல்கள் வரத் தொடங்கின. ஆடி 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செல்லக்கிளி தாக்குதல் ஒன்றினை நடத்தப்போகிறார் என்கிற தகவலும் ராணுவத்தினருக்குக் கிடைத்திருந்தது. இதனையடுத்து ராணுவ ரோந்து அணியொன்றினை ஒழுங்கமைத்துக்கொண்டு யாழ்நகரை நள்ளிரவு வேளையில் சுற்றிவரும்படி முனசிங்கவைப் பணித்தார் பல்த்தசார். அதன்படி கொமாண்டோ படைப்பிரிவு ஒன்றினை நள்ளிரவு ரோந்திற்காக முனசிங்க ஒருங்கமைத்தார். வழமையாக நள்ளிரவு ரோந்தில் ஈடுபடும் சாதாரண ராணுவ அணியை அன்று நள்ளிரவுக்கு முன்னமே யாழ்நகரை விட்டு வந்துவிடுமாறு அவர் உத்தரவிட்டார்.
  17. பிரபாகரனை வெகுவாகப் பாதித்த சீலனின் மரணம் "அவர்கள் எவராலும் கொல்லப்பட்ட இளைஞர்களை அடையாளம் காட்ட முடியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் வெள்ளை நிற டீ ஷேர்ட்டின் மேல் ஒலிவ நிற ராணுவச் சீருடையினை அணிந்திருந்தார். இறந்த இருவரினதும் உடல்களை யாழ் மருத்துவமனையின் பிரேத அறைக்குப் பொலீஸார் அனுப்பிவைத்தனர். ராணுவத்திற்கு தகவல வழங்கியவர்களில் ஒருவரான "சேவியர்" என்பவர் கொல்லப்பட்டது சீலன் தான் என்று அடையாளம் காட்டினார். என்னால் அதை நம்ப முடியவில்லை" என்று முனசிங்க கூறினார். திருகோணமலையிலிருந்து அழைத்துவரப்பட்ட சீலனின் தாயார் இறந்ததது தனது மகன் தான் என்று அடையாளம் காட்டும்வரை யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி பல்த்தசார் கூட அதனை நம்பவில்லை. கொழும்பு ஊடகங்கள், குறிப்பாக சிங்கள ஊடகங்கள் மிகுந்த வெற்றிக்களிப்போடு சீலனின் மரணச் செய்தியை வெளியிட்டிருந்தன. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியின் மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கொண்டாட‌ப்படவேண்டிய நிகழ்வாகவே கருதப்பட்டது. "புலிகள் முடிந்துவிட்டார்கள்" என்கிற செய்திகளும் வெளியிடப்பட்டன. சீலனின் மரணத்தினால் உற்சாகமடைந்த ராணுவ பொலீஸ் புலநாய்வுத்துறையினர், பிரபாகரனையும் செல்லக்கிளியையும் தேடும் நடவடிக்கைகளில் இறங்கினர். ஆனால், சீலனின் மரணத்திற்குப் பழிவாங்க பிரபாகரனும், செல்லக்கிளியும் திட்டமிட்டு வருவது அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், தனது உயிரைத் தியாகம் செய்து, தனது ஆயுதத்தைத் தன்னுடன் வந்த தோழனிடம் கொடுத்தனுப்பிய சீலனின் வீரச்செயல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அளித்திருந்த உத்வேகத்தையும் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சீலனைத் தமது கொமாண்டோக்களே சுட்டுக் கொன்றதாக ராணுவம் நம்பியது. ஆனால், அப்படி நடக்கவில்லை. தனது மரணத்திற்கு சீலனே உத்தரவிட்டார். முனசிங்க மூன்று இளைஞர்களுக்கருகில் தனது மினிபஸ்ஸினை நிறுத்தியபோது, தமது சைக்கிள்களை எறிந்துவிட்டு ஓடியவர்கள் சீலன், ஆனந்தன் மற்றும் அருணா ஆகிய மூன்று புலிகளின் போராளிகள்தான்.ஆனந்தனும் அருணாவும் சைக்கிள்களை மிதித்துச் செல்ல, சீலன் அருணாவின் சைக்கிளில் அமர்ந்து சென்றார். சீலனின் மடியில் உப இயந்திரத் துப்பாக்கியொன்று இருந்தது. ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதலில் இலக்கானவர் ஆனந்தன். ராணுவம் மறைந்திருந்த பற்றைக் காட்டிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தூரத்தில் வீழ்ந்தவர் ஆனந்தனே. அருணாவும், சீலனும் மேலும் 100 மீட்டர்கள் ஓடியபின்னர் சீலன் கீழே வீழ்ந்தார். ஆனால், முனசிங்க நினைத்தது போல சீலன் சூடுபட்டு விழவில்லை. சில காலத்திற்கு முன்னர் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது சீலனுக்கு முழங்காலில் சூடுபட்டிருந்தது. அக்காயம் முற்றாக ஆறாமல் இருந்ததோடு, அதனால் கடுமையான வலியும் சீலனுக்கு ஏற்பட்டு வந்தது. வீழ்ந்ததும் மறுபடியும் அவர் எழ முயற்சித்தபோதும் அவரால் அது முடியாது போய்விட்டது. சீலனின் சிறுவயது நண்பனும், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான அருணா, சீலனை எப்படியாவது காப்பற்றி இழுத்துச் செல்ல முயன்றுகொண்டிருந்தார். எஸ் எம் ஜி யுடன் சீலன் "ஓடு, ஓடு, இன்னும் கொஞ்சத்தூரம் ஓடினால்ப் போதும்" என்று அருணா சீலனைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தார். "என்னால் முடியாது" என்று வலியில் முனகியபடியே சீலன் பதிலளித்தார். ராணுவத்தினர் அவர்களை நோக்கித் தரையால் ஊர்ந்துவரத் தொடங்கியிருந்தார்கள். "எழுந்திரு, கிராமத்திற்கு அருகில்ச் செல்ல வேண்டும். சென்றுவிட்டால் நாம் தப்பிவிடலாம்" என்று அருணா கூறவும், சீலன் மறுபடியும் எழுந்திருக்க முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை. "என்னையோ எனது எஸ்.எம்.ஜி ஐயோ அவர்கள் கைப்பற்றிவிடக்கூடாது" என்று உறுதியுடன் கூறிக்கொண்டிருந்தார் சீலன். "நான் அவர்களிடம் உயிருடன் பிடிபடவே மாட்டேன்" என்று அக்கணத்தில் சபதம் பூண்டார். இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார். நிர்மலா நித்தியானந்தனின் வீட்டில் மறைந்திருந்தபோதும் இதனையே சீலன் மந்திரம்போல சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலேயே சீலனை நான் எப்படியாவது பிடித்துவிடுவேன் என்று முனசிங்க கர்வத்துடன் பேசியபோது, "அவரைக் கைதுசெய்ய எத்தனிக்க வேண்டாம், ஏனென்றால் சீலனை நீங்கள் உயிருடன் பிடிக்க முடியாது" என்று முனசிங்கவிடம் நிர்மலா ஒருமுறை கூறியிருந்தார். சீலன் பயமறியாதவர், துடிதுடிப்பானவர், சமயோசிதமானவர். இலட்சியத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வந்திருந்தவர். பிரபாகரனுக்கு முழுமையான விசுவாசமாகச் செயற்பட்டவர். சீலனைப் பொறுத்தவரை "தம்பி" தலைவர் மட்டுமல்ல, அவரின் குருவும் அவரே. அருணாவின் கண்களை நேராகப் பார்த்து சீலன் பின்வருமாறு கூறினார், "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்கக் கூடாது. என்னைச் சுட்டு விட்டு எனது எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு ஓடிவிடு" . அருணாவுக்கு தலையில் இடி ஒன்று இறங்கியதான அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியாது ஸ்த்தம்பித்துப் போனார். சீலனின் பொறுமை எல்லை கடந்து சென்றுகொண்டிருந்தது. அவர்களை நோக்கி ஊர்ந்துவந்த ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே முன்னேறி வந்துகொண்டிருந்தனர். "என்னடா பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று சீலன் அருணாவைப் பார்த்துக் கத்தினார். "என்னைச் சுட்டு விட்டு ஓடு, நான் சொல்றதைக் கேள்" என்று மீண்டும் அருணாவைப் பார்த்துக் கத்தினார் சீலன். அருணாவினால் எதையுமே யோசிக்க முடியவில்லை. பிரமை பிடித்தவரைப்போன்று அசைவின்றிக் கிடந்தார் அருணா. புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதியைக் கொல்ல அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. "அவர்கள் என்னை உயிருடன் பிடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை, எனது எஸ் எம் ஜி யையும் அவர்கள் எடுத்துவிடக் கூடாது" என்று மீண்டும் கத்தினார் சீலன். "இது எனது கட்டளை, சுடடா" என்று இறுதியாகக் கத்தினார் சீலன். தனது நிலைகுலைந்து அருணா அழத் தொடங்கினார். "சுடடா .... சுடடா....சுடடா....." என்று சீலன் முனகிக்கொண்டிருக்க, அருணா துப்பாக்கியின் குழலை சீலன் நெற்றிக்கும் மூக்கிற்கும் இடையே வைத்து அழுத்தினார். தனது முகத்தினை வேறுபக்கம் திருப்பிக்கொண்டே துப்பாக்கியை இயக்கினார் அருணா. சீலன் இறந்து கீழே விழ, சீலனின் எஸ் எம் ஜி யை எடுத்துக்கொண்டு, தனது பலம் எல்லாம் திரட்டி ஓடத் தொடங்கினார் அருணா. ராணுவத்தினரின் சன்னங்களில் ஒன்று அவரின் மேல் பட்டதும் கீழே வீழ்ந்தார், ஆனால் தப்பிவிடவேண்டும் என்கிற துடிப்புடன் மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினார். இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும் காயத்தை ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, மறு கையில் சீலன் இயந்திரத் துப்பாக்கியைப் பத்திரமாகப் பற்றிக்கொண்டு வயல்வெளிகள் தாண்டி கிராமத்தினுள் நுழைந்து சாவகச்சேரிப் பகுதியை அடைந்தார். வீதியால் வந்துகொண்டிருந்த கார் ஒன்றினைத் துப்பாக்கியைக் காட்டி மறித்த அருணா, சாரதியை இறங்கச் சொல்லிவிட்டு அதில் ஏறி ஓட்டிச் சென்றார். மறுநாள் காலை திருநெல்வேலிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காரினை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். காரின் ஸ்டியரிங் வீல் இரத்தத்தால் தோய்ந்திருந்தது. காரைக் கைவிட்ட அருணா, மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்வேலிப் பகுதியில் இருக்கும் புலிகளின் மறைவிடத்திற்கு வந்து சேர்ந்தார். நீர்வேலியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தில் இயக்கத்தில் நிதி நிலைமைகள் குறித்து பண்டிதர் மற்றும் கிட்டுவுடன் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு அருகில் ஓடிச்சென்ற அருணா, சீலனின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டு அவர் அருகில் மயங்கிச் சரிந்தார். சீலனின் மறைவுகுறித்து அருணா கூறியபோது பிரபாகரன் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். நெடுநேரம் எவருடனும் அவர் பேசவில்லை. அந்தப் பொழுதினை பின்னாட்களின் என்னுடன் பகிர்ந்துகொண்ட கிட்டு, "அவரின் உணர்வுகள் அக்கணத்தில் எப்படியிருந்தன என்று எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், அவர் ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருப்பது எமக்குப் புரிந்தது" என்று கூறினார். சீலனை அவர் அதிகமாக நேசித்தார். அவரின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். சீலன் தீரமானவர், புத்திசாதுரியம் மிக்கவர், அஞ்சாத நெஞ்சுரமும், தலைமை மீது அளவுகடந்த விசுவாசமும் கொண்டவர். ஆகவே, சீலனும் ஆனந்தனும் செய்த உயிர்த்தியாகங்கள் போற்றப்படவேண்டும் என்று பிரபாகரன் உத்தரவிட்டார். சீலனையும் ஆனந்தனையும் போற்றி, வணக்கம் செலுத்தும் சுவரொட்டிகள் வடக்குக் கிழக்கில் பரவலாக‌ ஒட்டப்பட்டன. அவர்களின் இயற்பெயர்களைத் தாங்கி அவை வெளிவந்திருந்தன. சீலனின் இயற்பெயரான சார்ள்ஸ் அன்டனி மற்றும் அவரது பிறந்த ஊரான திருகோணமலை உட்பட அவரின் விபரங்கள சுவரொட்டிகளில் காணப்பட்டன. அவரது வீர மரணத்தின் பின்னர் "லெப்டினன்ட்" எனும் பதவி புலிகளால் அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறே ஆனந்தனின் இயற்பெயரான ராமநாதன் அருளானந்தன் மற்றும் அவரது பிறந்த ஊரான நீர்கொழும்பு போன்ற விடயங்கள் அவரது வீரவணக்க சுவரொட்டிகளில் காணப்பட்டன. ஆனந்தன் அந்த வருடமே புலிகளுடன் இணைந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அருணாவின் இயற்பெயர் செல்லச்சாமி கோணேசன். இவர் திருகோணமலையினைப் பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் சீலனின் பால்ய வயது நண்பர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சீலனின் பெயரால் உருவாக்கப்பட்ட புலிகளின் முதலாவது மரபு வழிப் படைப்பிரிவு ‍- சார்ள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி
  18. சீலனின் வீரமரணம் காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையிலிருந்து ஐந்து கண்ணிவெடிகளை வெடிக்கவைக்கும் கருவிகள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து ராணுவத்தினர், குறிப்பாக அதன் புலநாய்வுத்துறையினர் உசார் நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர். வெடிக்கவைக்கும் கருவிகளை எடுத்துச் செல்லும் திட்டத்திற்குப் பொறுப்பாக சீலனே இருந்தார் என்பதை இராணுவத்தினை அறிந்துகொண்டனர். பாரிய தாக்குதல் ஒன்றிற்குப் புலிகள் தயாராகிறார்கள் என்பதை இராணுவத்தினர் அனுமானித்திருந்தனர். ஆகவே, புலிகள் தாக்குவதற்கு முன்னர் தாம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று தீர்மானித்த யாழ்ப்பாண ராணுவ ‍- பொலீஸ் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளர் மேஜர் சரத் முனசிங்க யாழ்க்குடாநாட்டில் புலிகளின் மறைவிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். சீலன் நினைவேந்தல் - ‍ 2003 "மீசாலைப்பகுதியில் புலிகளின் மறைவிடம் ஒன்று இருப்பதாக எமக்குச் செய்தி வந்திருந்தது. மீசாலை ‍- கச்சாய் வீதியில் இருக்கும் அடர்ந்த தென்னந்தோப்பொன்றினுள் இந்த மறைவிடம் இருப்பதாக எமக்குச் சொல்லியிருந்தார்கள். ஆகவே இதுகுறித்த துல்லியமான தகவல்கள் எமக்குத் தேவைப்பட்டன" என்று சரத் முனசிங்க என்னிடம் கூறினார். கொடிகாமம் பொலீஸ் நிலையத்திற்கு ஒருவரால் வழங்கப்பட்ட இந்தத் தகவல், குருநகர் ராணுவ முகாமில் இயங்கி வந்த ராணுவ ‍ பொலீஸ் கூட்டு புலநாய்வுத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆடி 15 ஆம் திகதி காலை 10 மணியளவில் பொலீஸ் அதிகாரி ஒருவரால் இந்தத் தகவல் முனசிங்கவிடம் வழங்கப்பட்டது. இத்துடன் மேலதிகமாக இன்னொரு தகவலையும் அந்தப் பொலீஸ் அதிகாரி வழங்கியிருந்தார். அதுதான் அந்த மறைவிடத்திற்கு மிக அருகாக மலசல கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது என்கிற அடையாளம். ஆனாலும், இந்த தகவல்கள் தெளிவானதாக இருக்கவில்லை. துல்லியமாக புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதென்பது சவாலாகவே இருக்கப்போகிறதென்று ராணுவத்தினர் கருதினர். ஆனாலும் அப்பகுதியில் தேடுதல் நடத்துவதென்று முனசிங்க முடிவெடுத்தார். "புலிகளின் தாக்குதல் ஒன்றினை முறியடிப்பது மிக மிக அவசியமானது என்று நாம் நினைத்தோம்" என்று முனசிங்க கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்திற்கான கட்டளை அதிகாரி, பிரிகேடியர் லைல் பல்த்தசாரைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார் முனசிங்க. தனக்குக் கிடைக்கப்பெற்ற புலநாய்வுத்தகவல்கள் பற்றி பல்த்தசாரிடம் விளக்கிய முனசிங்க, மீசாலைப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படும் புலிகளின் மறைவிடத்தை தேடிப் பார்ப்பது அவசியம் என்று தான் கருதுவதாகக் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட பல்த்தசார், இந்த தேடுதல் நடவடிக்கைக்கு 12 பேர் அடங்கிய கொமாண்டோ அணியையும், மேலதிகமாக ஒரு இளநிலை அதிகாரியுடன் 5 சாதாரண சிப்பாய்களையும் அனுப்பி வைத்தார். ராணுவ வண்டிகளில் புலிகளின் மறைவிடம் நோக்கிப் போகும்போது புலிகளின் ஆதரவாளர்களால் தமது பிரசன்னம் புலிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, புலிகள் தப்பிச் சென்றுவிட வாய்ப்பிருப்பதாக முனசிங்க கருதினார். ஆகவே, பொதுமக்கள் பாவிக்கும் மினிபஸ் ஒன்றினை மடக்கிப் பிடிப்பதென்று அவர் முடிவெடுத்தார். புலிகளின் சீருடையணிந்த இரு ராணுவ வீரர்களை மணிக்கூட்டுச் சந்திக்கு அருகிலிருக்கும் நீண்ட ஆளரவம் அற்ற சாலையில் மதியவேளை அனுப்பி வைத்தார். அப்பகுதியால் வந்துகொண்டிருந்த மினிபஸ் ஒன்றினை மறித்து, அதிலிருந்த சாரதியையும், நடத்துனரையும் கட்டிப்போட்டு விட்டு வாகனத்தை முகாமிற்கு ஓட்டிச் சென்றனர் ராணுவ வீரர்கள். முகாமை அடைந்ததும் சாரதியும், நடத்துனரும் முகாமின் அறை ஒன்றினுள் அடைத்துவைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் மணிக்கூடுக் கோபுரம் ‍ 2003 ஆனால், வாகனத்தை ஓட்டுவதற்கு சாரதி எவரும் முகாமில் இருக்கவில்லை. இருந்தவர்கள் எல்லாம் வேறு நடவடிக்கைகளுக்காகச் சென்றுவிட்டிருந்தனர். ஆகவே, தானே வாகனத்தை ஓட்டுவதென்று முனசிங்க முடிவெடுத்தார். நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட அனைவரும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தனர். "நாம் குருநகர் முகாமிலிருந்து பிற்பகல் 3:30 மணிக்குக் கிளம்பினோம். தேவையேற்படின் வாகனத்தை ஓட்டுவதற்கு வசதியாக இளநிலை அதிகாரி எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். எவருமே பேசிக்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கையின் பாரதூரம் பற்றி எல்லோரும் நன்கு அறிந்தே இருந்தோம். யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் நான் சற்று வேகமாகவே ஓட்டிச்சென்றேன். பின்னல் சீருடை தரித்த ராணுவத்தினர் ஜீப் ஒன்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் எம்மைப் பிந்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.மீசாலைச் சந்தியை அடைந்ததும், வாகனத்தை கச்சாய் நோக்கித் திருப்பினேன். அவ்வீதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் இருவரை எமக்கு வழிகாட்ட ஏற்றிக்கொண்டோம். தென்னந்தோப்பின் நடுவே புதிதாகக் கட்டப்பட்டு வரும் மலசல கூடம் குறித்து அவர்களிடம் கேட்பதே எமது நோக்கம். ஆனால், எங்களால் புலிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாது போய்விட்டது" என்று முனசிங்க என்னிடம் கூறினார். ஆகவே, மினிபஸ்ஸை கடற்கரை நோக்கிச் செலுத்தினார் முனசிங்க. பின்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி அவ்விடத்தை அடையுமட்டும் முனசிங்கவும் கொமாண்டோக்களும் அங்கு காத்து நின்றனர். மாலை 6 மணியாகிக்கொண்டிருந்தது, சூரியன் மெது மெதுவாக பட்டுக்கொண்டிருந்தான். மாலை நேரச் செவ்வானத்தின் அழகினை ரசிக்கும் நிலையின் முனசிங்கவோ படையினரோ அப்போது இருக்கவில்லை. முகாமிற்குத் திரும்புவதென்று அவர்கள் முடிவெடுத்தனர். முகாமிலிருந்து வந்தது போலவே, சாதாரண உடையணிந்த கொமாண்டோக்களுடன் மினிபஸ்ஸை முனசிங்க ஓட்டிச் செல்ல, சீருடையில் வந்த ராணுவத்தினர் பின்னால் ஜீப் வண்டியில் இடைவெளி விட்டு வந்துகொண்டிருந்தனர். "கொண்டமூலாய் முடக்கினூடாக நான் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு செல்லும்போது, எமது வாகனத்தின் முன்னால் மூன்று இளைஞர்கள் சைக்கிளில் செல்வதை நாம் கண்டோம். மூன்று சைக்கிள்களும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக ஓட்டிச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. வீதியின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்த சைக்கிளில் இன்னொருவர் அமர்ந்துவரக்கூடியதாக இருக்கை பூட்டப்பட்டிருந்தது. மற்றைய இருவரும் ராணுவ சீருடையினை ஒத்த மேலாடைகளை அணிந்திருந்தனர். சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்து சென்ற இளைஞனிடம் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை அவதானித்ததும் நான் மினிபஸ்ஸை உடனடியாக நிறுத்தினேன். பஸ்ஸும் கிரீச்சிட்ட சத்தத்துடன் அவர்களின் அருகில்ப் போய் நின்றது. வாகனத்தில் இருந்த இரு கொமாண்ட்டஓக்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே வெளியில்க் குதித்தனர். இதனைக் கண்டதும் தாம் பயணித்த சைக்கிள்களை வீதியின் முன்னே விட்டெறிந்த அந்த மூன்று இளைஞர்களும் வேலியின் மீது பாய்ந்து ஏறித் தப்பியோடத் தொடங்கினர். பின்னர், பற்றை ஒன்றிற்குள் நிலையெடுத்து எம்மீது தாக்கத் தொடங்கினர். அவர்களைப் பிந்தொடர்ந்து துரத்தும் கொமாண்டோக்களைத் தாமதிக்க வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது" என்று இந்தச் சம்பவம் குறித்த நினைவுகளை முனசிங்க என்னுடன் பகிர்ந்துகொண்டார். தமக்கு முன்னால்த் தெரிந்த நெல்வயலினூடாக மூன்று இளைஞர்களும் ஓடிக்கொண்டிருந்தனர். "என்னுடன் வந்த கொமாண்டோக்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். கொமாண்டோக்கள் நிலையெடுத்துத் தாக்கிக் கொண்டிருந்த பற்றையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் அந்த இளைஞர்களில் ஒருவர் சூடுபட்டு விழுந்தார். மற்றையவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர் சுமார் 200 மீட்டர்கள் தொலைவில் சூடுபட்டு விழுந்தார். மூன்றாமவர், கீழே வீழ்ந்தவரை இழுத்துக்கொண்டு ஓட முயல்வதை நான் அவதானித்தேன். ஆனால், அம்முயற்சி சாத்தியமாகாது போகவே, அவரை அங்கேயே விட்டுவிட்டு அவர் மீண்டும் ஓடத் தொடங்கினார். அவருக்கும் சூடு பட்டிருந்தது, ஆனாலும் ஓடித் தப்பிவிட்டார்" என்று முனசிங்க கூறினார். அப்பகுதியை இருள் சூழத் தொடங்கியிருந்தது. தனது வீரர்களை அப்பகுதியில் இருட்டில் தேடுதல் நடத்தவேண்டாம் என்று முனசிங்க கூறிவிட்டு குருநகர் முகாமுடன் தொடர்புகொண்டு மேலதிக படையினரை அனுப்புமாறு கேட்டார். மேஜர் அசோக ஜயவர்த்தனவின் தலைமையில் ராணுவ அணியொன்று சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வந்திறங்கியது. அவருடன் சில மூத்த பொலீஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.