Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46977
    Posts
  2. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5920
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7138
    Posts
  4. நியானி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    3076
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/15/23 in all areas

  1. நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்தை முன் தள்ளும். (பயனுள்ள திசையில் திரியை நகர்த்த முனைந்தமைக்கு ஒரு பச்சை!) உங்கள் கேள்வி "காற்றில்லை, அதனால் ஒட்சிசன் இல்லாமல் எப்படி உந்துகை கிடைக்கிறது" என்பதா?
  2. ஆண்டு: 2006 திகதி: சனவரி 7, 2006 அடிபாட்டுக் காலம்: வைகறை 2:30 மணியளவில் நிகழ்வு இடம்: சூடைக்குடா (ஃவௌல் முனை/ Foul Point) கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: திருகோணமலையின் துறைமுகத்திலிருந்து சுற்றுக்காவலுக்கென புறப்பட்ட இரு சுப்பர் டோறாக்களில் ஒன்றினை நோக்கி கடற்புலிகளின் இனந்தெரியா வகுப்பினைச் சேர்ந்த வெடிப்படகொன்று வந்துகொண்டிருந்தது. சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த டோறாக்களில் ஒன்றின் தகவல் தொடர்பு ஏந்தனம் ஒன்றில் 'முன்னால் வருகின்ற டோறா மீது மோதப்போகின்றோம்' என்ற தொனிப்பட தமிழில் தகவலொன்று முல்லைத்தீவு சல்லிப் பரப்பிலுள்ள தளமொன்றை நோக்கி அப்படகிலிருந்து அனுப்பப்பட்டது செவிமடுக்கப்பட்டது என்று சிறிலங்காக் கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து சிங்களக் கடற்படைத் தளத்திலிருந்த கடற்படை அதிகாரி அப்படகை சோதனையிடுமாறு டோறா ஒன்றிற்குக் கட்டளை பிறப்பித்தார். அதற்கிணங்க சுப்பர் டோறா ஒன்று அப்படகை நோக்கிச் சென்று அதை சோதனை செய்ய முயன்றது. அப்போது வெடிப்படகு அதன் மீது மோதி வெடித்துச் சிதறியதில் டோறா மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலை விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என்று சிறிலங்காக் கடற்படையினர் குற்றம் சாட்டினர். எனினும் இதனை முதலில் மறுத்த விடுதலைப்புலிகளின் அப்போதைய பேச்சாளர் தயா மாஸ்டர் இதற்கும் தமது அமைப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று திட்டவட்டமாக மறுத்தார், தமிழ்நெற்றிற்குத் தெரிவிக்கையில். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹோக்லண்ட், புலிகள் மீது ஐயமிருப்பினும் அவர்கள் இதை மறுத்துள்ளதால் இதற்கு அவர்கள் தான் பொறுப்பு என்று கூறிவிட முடியாது என்றும் கடற்படையினர் இது தொடர்பில் உசாவல் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இது போர் நிறுத்த மீறல் அல்ல, இது அவர்களுக்குள் இடம்பெறும் வழமையான சண்டைகளில் ஒன்றாகவே கருத முடியும் என்று பொருள்படும் படியாக மேலும் தெரிவித்தார். எப்படியாயினும் 2006 மாவீரர் வாரத்தில் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் இத்தாக்குதலில் இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம் - 3 சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 13 பேர் காயப்பட்டோர்: இரண்டு பேர் நீரினுள்ளிருந்து மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர். வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வஞ்சி எ வஞ்சியின்பன், லெப்.கேணல் நளா எ அகரெழில் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 8/01/2006 | தமிழ்நெற்: 7/01/2006 (SLN Dvora reported missing) | மாவீரர் பட்டியல் திகதி: மார்ச் 25, 2006 அடிபாட்டுக் காலம்: நண்பகல் நிகழ்வு இடம்: குதிரைமலையிலிருந்து 17 கடல்மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: ஆழ்கடலில் தரிபெற்றிருந்த தமிழீழக் கடற்படைக்குச் சொந்தமான வழங்கல் கப்பலிலிருந்து போர்த்தளவாடங்களை கரைக்கு ஏற்றிவருவதற்கென படகு ஒன்று சென்றது. அப்போது அதன் இயந்திரம் பழுதானதால் அதனால் திரும்பி வர இயலவில்லை. எனவே அதற்கான மாற்று இயந்திரம் மற்றொரு படகில் கடற்புலிகளால் அனுப்பப்பட்டது. இயந்திரத்தைக் கொண்டு சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் படகை இடைநடுவில் கடற்படையினர் வழிமறித்தனர். அப்போது தாமும் படகு அதனினுள்ளிருந்த பொருட்களும் கடற்படையினரிடம் பிடிபடக்கூடாது என முடிவெடுத்தனர், போராளிகள். அதற்கமைவாக பொதுவாக வழங்கல் படகுகளோடு பொருத்தப்பட்டிருக்கும் வெடிபொருளை வெடிப்பித்து தவிபு மரபிற்கிணங்க தம்மையும் படகையும் அழித்துகொண்டனர். இவ்வெடியதிர்வால் தமிழரின் படகை நெருங்கிய சிங்களத்தின் டோறா மோசமாகச் சேதமடைந்து கடலினுள் மூழ்கியது. அதிலிருந்த பல சிங்களக் கடற்கலவர் நீரினுள் தூக்கி வீசப்பட்டனர், வெடியதிர்வால். "இந்நிகழ்விற்கும் தமக்கும் தொடர்பு கிடையாது" என்று தவிபு சமாதான செயலகப் பணிப்பாளர் மாவீரர் புலித்தேவன் 'ரொய்ட்டர்' செய்தி நிறுவனத்திற்கு ஆங்கிலத்தில் தெரிவித்தார். எனினும் கடற்படையின் இந்நிகழ்வில் புலிகள் தொடர்புபட்டிருப்பதாகவும் ஆனால் அவர்கள் தம்மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தவில்லையென்றும் தமது படகை அழிக்கும் போது ஏற்பட்ட வெடியதிர்வே தம் டோறா மூழ்கக் காரணமென்றும் தெரிவித்தார், சிறிலங்காவின் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் அமரசிங்கே. மேலும் இதுவொரு அப்பட்டமான போர் நிறுத்த மீறல் என்றும் இதுதொடர்பில் தாம் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடிட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறிலங்கா கண்காணிப்புக் குழு, புலிகள் தாமிதில் தொடர்புபடவில்லை என்று மறுத்திருந்தாலும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் மூலம் அவர்களின் கைவரிசை மறுப்பை விலத்திட வேண்டும் என்று பொருள்படும் படியான கூற்றுரை ஒன்றை வெளியிட்டது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 8 பேர் காயப்பட்டோர்: 11 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் தமிழ்முரசு எ சுஜீந்திரன் மற்றும் பெயர் அறியில்லா 5 போராளிகள் ஆதாரம்: உதயன்: 26/03/2006 | தமிழ்நெற்: 25/03/2006 (Blast in seas off Kalpitti, 14 feared dead), 26/03/2006 (SLMM condemns Kalpitti attack, raises paramilitary issue) | மாவீரர் பட்டியல் திகதி: மே 11, 2006 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 4 மணியளவிலிருந்து சுமார் 2 மணி நேரம் டோறா மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:15 மணியளவில் நிகழ்வு இடம்: வடமராட்சிக் கிழக்குக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை குழப்பும் நோக்கோடு வலிதாக்குதலில் ஈடுபட்ட டோறாக்கள் மீதான எதிர்த் தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வில் சிங்களக் கடற்படைக்குச் சொந்தமான 'பேர்ள் குறுஸ் II' என்ற 710 படையினரை ஏற்றிவந்த படைக்காவிக் கப்பலுக்கு ஏமமாக வந்த இரு டோறாக்களே புலிகளை வலிந்து சீண்டி இழுத்தன. அதன் போது கடற்படையினர் மீது கடற்புலிகள் தம் படகுகளின் தற்காப்பிற்காக எதிர்த்தாக்குதலை நடாத்தினர். அப்போது ஒரு டோறா கடற்கரும்புலித் தாக்குதலால் 5:15 மணியளவில் மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் மற்றொன்று சேதத்துடன் பின்வாங்கிச் சென்றது. ஆனால் மேற்கொண்டு செல்லமுடியாத நிலையில் குடாரப்புக் கடற்பரப்பில் மூழ்கியது. இத்தாக்குதல் தொடங்கிய போது கடற்சமர் பரப்பிலிருந்து சில மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருந்த பேர்ள் குறுஸ் கப்பல் பன்னாட்டுக் கடற்பரப்பிற்குத் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது, கடற்புலிகளால். அக்கப்பலில் சிறிலங்காக் கண்காணிப்புக் குழு ஆட்கள் 2 பேர் இருந்ததகைக் கடற்புலிகள் நோக்கியுள்ளனர். பேந்து, அக்கப்பல் இந்தியக் கடலோரக் காவற்படையின் ஏமத்துடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இக்கடற்சமரில் புலிகளின் தரப்பில் 15 வரையான படகுகளைத் தாம் கண்டதாக சி.க.கு. தகவல் தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் எப்படகும் மூழ்கடிக்கப்படவில்லை. இத்தாக்குதலின் பின்னர், சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவிற்கு விடுதலைப்புலிகள் அனுப்பிய கடிதத்தில் சிங்களக் கடற்படையின் கடற்கலங்களில் நீங்கள் ஏறவேண்டாம் என்றும் இதுவே அதற்கான கடைசி எழுதருகை (warning) என்றும் வலியுறுத்தினர். இதற்கு முன்னர் இன்னும் இரு தடவை இவ்வாறு சி.க.கு. விற்கு சிறிலங்காக் கடற்கலங்களில் ஏறவேண்டாம் என வலியுறுத்தி புலிகள் கடிதத்தாலும் வாய்மூலம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவானது சிறிலங்காவின் கடற்கோட்டத்தையும் வான்வெளியையும் அரச சார்பற்ற எவரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் புலிகளுக்கு கடலில் நடமாட எவ்வித உரிமையும் இல்லையென்றும் திடீரென்று சிறிலங்கா அரசிற்கு சார்பாக அறிக்கையிட்டது (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக), இக்கடற்சமர் முடிந்த கையோடு. சிறிலங்கா அரசிற்கு பக்கச்சார்பான சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவின் இவ் அறிக்கையை எதிர்த்து தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அறிக்கை வெளியிட்டார். அதன் ஓரிடத்தில், "எங்களுடைய ஆட்புலத்தின் சமர்க்களத்தில் அடைந்த தற்போதைய நிலையின் அடிப்படையில் தான் நாங்கள் சமாதான முன்னெடுப்பினுள் நுழைந்தோம். எமது தாயகத்தின் அருகிலுள்ள கடலையும் வான்வெளியையும் அணுகுவதற்கான இறையாண்மை உரிமைகள் குறித்து தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை." என்றார் சீற்றமுடன் (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக). கடற்சமரிற்குப் பின்னர் 12ம் திகதி ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரிகேடியர் சூசை, அரசியல்துறையின் அறிக்கையின் தொனிப்படத்தக்க கருத்தினையே தெரிவித்திருந்தார் (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக). படிமம்: பேர்ள் குறுஸ் II படைக்காவிக் கப்பல் | படிமப்புரவு: விக்கிபீடியா மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) உடனே மூழ்கியதின் தொடரெண்: பி 418 சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 15-17 பேர் காயப்பட்டோர்: அறியில்லை விடுதலைப்புலிகளின் ஆளணியினரில், வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மலர்நிலவன், லெப். கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி, லெப். கேணல் சஞ்சனா எ புவிச்செல்வி காயமடைந்த கடற்புலிகள்: 2 பேர் சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 கல வகை: அறியில்லை ஆதாரம்: உதயன்: 12 & 13/05/2006 | தமிழ்நெற்: 11/05/2006 (SLN vessel destroyed in Vadamaradchi East), (LTTE has no rights at sea - SLMM), (LTTE refutes SLMM's controversial statement) & 12/05/2006 (SLMM has no mandate to rule on Tamils sovereign rights - Thamilchelvan) & 13/05/2006 (Soosai reiterates sovereign right to seas bordering Tamil Homeland) திகதி: சூன் 17, 2006 அடிபாட்டுக் காலம்: காலை 6:30 மணியளவில் தொடங்கியது நிகழ்வு இடம்: பேசாலைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: விடுதலைப்புலிகளின் கடற்பரப்பினுள் நுழைந்து வலிதாக்குதலில் ஈடுபட்ட சிறிலங்காக் கடற்படையின் 4 புளு ஸ்ரார் வகுப்புப் படகுகள் மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கடற்படையினரின் 3 படகுகள் அழிக்கப்பட்டன, மற்றொன்று சேதப்படுத்தப்பட்டது. சேதப்பட்டதிலிருந்து கடற்புலிகள் சில படைக்கலன்களையும் கைப்பற்றினர். கடற்படையினரோ, தமது தரப்பில் மூன்று படகுகளே சேதமாக்கப்பட்டது என்று கூறி வழக்கம் போல புலிகளின் இழப்பினை ஊதிப் பெருப்பித்துக்காட்டினர். தமக்கு வான்படையினரும் சேணேவிப் பிரிவினரும் கடலில் கடற்புலிகளை எதிர்க்கத் துணை நின்றதாக மேலும் தெரிவித்தனர். இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் யாரும் வீரச்சாவடையவில்லை என அவர்கள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இவ் அடிபாட்டைத் தொடர்ந்து கடற்படையினர் வங்காலைப்பாடு மற்றும் பேசாலைக் கடற்கரையோரங்களின் மேல் வலுத்த தாக்குதலை மேற்கொண்டனர். இதில் பேசலையைச் சேர்ந்த 68 மீனவர்களின் 43 வெளியிணைப்பு மின்னோடிகள் (OBM), 70 மீனவக் குடில்கள் மற்றும் வலைகள் என 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. வங்காலைப்பாட்டைச் சேர்ந்த 68 மீனவர்களின் 13 வெளியிணைப்பு மின்னோடிகள், 36 ஆடியிழைப் படகுகள், மூன்று 3 1/2 தொன் இழுவலை படகுகள் மற்றும் முட்டுகள் என 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதற்கிடையில், அந்த காலகட்டத்தில் ஒன்பது வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன, இதனால் சுமார் 5.7 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது. கரையோரக் குடியிருப்புகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்று மக்கள் தங்கியிருந்த வெற்றிமாதா தேவாலயத்தினுள் கைக்குண்டுகளை வீசியும் சுடுகலனால் சுட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்புகள் மீதான தாக்குதல்களில் கடற்றொழிலாளர்கள் நால்வரும் தேவயத் தாக்குதலில் மூதாட்டி ஒருவரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் மொத்தம் 54 பேர் காயமடைந்தனர். எரிக்கப்பட்ட படகு ஒன்றிலிருந்து சடலம் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. படிமப்புரவு: உதயன் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட், ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் மற்றும் கட்டைப் படகு வகைகளும் உருவாக்கப்படுகின்றன) சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட் ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் கட்டைப் படகு வகைகளும் உருவாக்கப்படுகின்றன) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 12 பேர் காயப்பட்டோர்: பலர். கடற்புலிகளின் ஆளணியினரில் காயப்பட்டோர்: 2 பேர் ஆதாரம்: உதயன்: 18 & 19/06/2006 | தமிழ்நெற்: 17/06/2006 (3 SLN boats sunk, 12 troopers killed - LTTE) & 21/06/2006 (Mannar SLN rampage causes $5m damage to property) திகதி: சூன் 28, 2006 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:25 மணியளவில் தொடங்கி 55 நிமிடங்களுக்கு தொடர்ந்து நீடித்தது. நிகழ்வு இடம்: குதிரைமலைக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடற்பரப்பினுள் 15இற்கும் மேற்பட்ட படகுகளில் சுற்றுக்கவலில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் கடற்சமராகியது. தமிழீழக் கடற்பரப்பினுள் நுழைய முற்பட்ட கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் மேற்கொண்டு விரட்டியடித்தனர். இதில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உந்துகணைத் (ஆர்.பி.ஜி பெரும்பாலும்) தாக்குதலில் கடற்படை படகொன்று எரிந்து நீரினுள் மூழ்கியது. புலிகளின் படகுகளுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை. இதன் பின்னர் புத்தளம் நகரினுள் (முஸ்லிம்களே இங்கு பெரும்பான்மை) நுழைந்த கடற்படையினரின் வானை நோக்கி வேட்டுக்கள் தீர்த்தபடி வீதியில் நின்றிருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர். அனைத்து கல்வி மற்றும் வணிக நிறுவனங்களும் 12 மணியுடன் மூடப்பட்டன. கற்பிட்டிக் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கரையை நோக்கி கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டனர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 5 பேர் காயப்பட்டோர்: பலர். கடற்புலிகளின் ஆளணியினரில் காயப்பட்டோர்: 2 பேர் வீரச்சாவடைந்தோர்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 29/06/2006 | தமிழ்நெற்: 28/06/2006 (5 SLN sailors, 1 LTTE cadre killed in sea clash - LTTE) திகதி: ஓகஸ்ட் 1, 2 & 3, 2006 அடிபாட்டுக் காலம் & நிகழ்வு இடம்: முதற் கடற்சமர்: ஓகஸ்ட் 1 எற்பாடு 2:25 - 3:00 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் நடந்து முடிந்தது | கொக்கிளாய்க் கடற்பரப்பு & உட்துறை முகாம் கடற்பரப்பு இரண்டாம் கடற்சமர்: ஓகஸ்ட் 1 எற்பாடு 5:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை | திருமலைத் துறைமுகத்தின் கடற்பரப்பு மூன்றாம் கடற்சமர்: ஓகஸ்ட் 1 மாலை 9:00 மணி முதல் ஓகஸ்ட் 2 வைகறை 3:30 மணி வரை | திருமலைக் கடற்பரப்பு நான்காம் கடற்சமர்: ஓகஸ்ட் 3 காலை வேளையில் | மூதூர் இறங்குதுறைக்கு அண்மையான கொட்டியாரக்குடா கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: இது திருகோணமலையில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட (ஓகஸ்ட் 1 - ஓகஸ்ட் 5) மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் கடற்சமர்கள் பற்றிய தகவலாகும். ஓகஸ்ட் முதலாம் திகதி எற்பாடு 2:25 மணியளவில் 850 இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரை திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி ஏற்றிக்கொண்டு வந்தது, 'ஜெட் லைனர்' என்ற கலப்பெயரைக் கொண்ட படைக்காவிக் கப்பல். அது துறைமுகத்தை அண்மித்ததும் விடுதலைப்புலிகள் துறைமுகத்தை நோக்கி 122மிமீ சேணேவி எறிகணைகள் 36ஐ ஏவினர். ஏவிய எறிகணைகள் அங்குள்ள கடற்படைக் கூட்டுப்படைத்தளத்தினுள் இருந்த கடற்படைக் கல்லூரியில் வீழ்ந்து வெடித்ததில் 6 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதால் கடற்படைத் தலைமையகமும் கடும் சேதமடைந்தது. இவ் எறிகணை வீச்சால் துறைமுகத்தினுள் நிப்பாட்டப்பட்டிருந்த பாவிக்கப்படாத சுடுகலப் படகொன்று அழிக்கப்பட்டது என்று கொழும்பு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. முதலாவது கடற்சமர் எற்பாடு 2:25இற்கும் 3:00 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் நடைபெற்றது. எறிகணை வீச்சு நடந்துகொண்டிருந்த போது கொக்கிளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் 5 படகுகள் கப்பலோடு வந்த டோறாக்களோடு மிண்டின. சிங்களக் கடற்படைக்கு சிறிலங்கா வான்படையும் வான் ஆதரவை நல்கியது. அப்போது வெடித்த கடற்சமரில் ஒரு டோறாக் கலம் மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்தோரில் 8 கடற்படையினர் கொல்லப்பட்டனர் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் ஒரு கடற்புலி வீரச்சாவடைய இன்னும் சிலர் காயப்பட்டததாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது. துறைமுகத்தின் மீதான எறிகணை வீச்சாலும் கடற்புலிகளின் தாக்குதலாலும் பின்வாங்கிய கப்பல் பன்னாட்டு கடற்பரப்பை நோக்கிச் சென்றது. பின்னர் அது, மீண்டும் துறைமுகத்தை நோக்கி வந்த போது, எற்பாடு 5:30 மணியளவில், துறைமுகக் கடலில் கப்பலை வழிமறித்து கடற்புலிகள் சுற்றிவளைத்துத் தாக்கினர். அப்போது கப்பலிற்கு ஏமம் வழங்கவென வந்த டோறாக்களோடும் பொருதினர். இக்கடற்சமர் மாலை 7:00 மணி வரை நீடித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் ஐந்து கடற்புலிகள் வீரச்சாவடைய இன்னும் சிலர் காயமுற்றதாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இக் கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் 3 கடும் சேதமடைந்து திருத்த வேலைகளுக்காக கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. இதனால் மீண்டும் ஆழ்கடலை நோக்கித் திரும்பிய கப்பல், மீண்டும் 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வான் ஆதரவோடு துறைமுகத்தை நோக்கித் திரும்பியது. அப்போது திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து மறுபடியும் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட, பெரும் கடற்சமர் மூண்டது. முடிவில், கப்பல் துறைமுகத்தை அடைந்ததாக சிறிலங்க அரசு தெரிவித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் இரு போராளிகள் வீரச்சாவடைந்ததாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. திருமலைத் துறைமுகக் கடற்பரப்பிலும் திருமலைக் கடற்பரப்பிலும் நடைபெற்ற கடற்சமர்களில் சிங்களக் கடற்படையின் இரு டோறாக்கள் சேதமுற்றதாகவும் மற்றொரு டோறா மெல்லிய சேதமடைந்ததாகவும் தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு இளந்திரையன் தெரிவித்தார். இம்மூன்று கடற்சமர்களிலும் ஒரு கலத்தொகுதியை லெப். கேணல் நிலவன் வழிநடாத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து 2ம் திகதி & 3ம் திகதி சிறிலங்காக் கடற்படையினரின் திருமலை துறைமுகத்திலிருந்ததான மூதூர் இறங்குதுறை நோக்கிய கடல்வழி தரையிறக்கத்திற்கு எதிரான கடற்புலிகளின் மற்றொரு கடற்சமர் நடைபெற்றது. இக்கடற்சமரிற்கு கடற்புலிகள் அவசரவசரமாக ஆயத்தமாகிச் சென்றனர். இதன்போது லெப். கேணல் நிலவனைக் கட்டளை அதிகாரியாக் கொண்ட இரு சண்டைப்படகுகள் மட்டுமே முதலில் சென்று கடற்படையினரை எதிர்த்தன. பின்னர் மேற்கொண்டு ஏனைய சண்டைப்படகுகளும் வந்து மிண்டி பல மணிநேரம் நகர்வினைக் கட்டுப்படுத்தினர். இக்கடற்சமரின் போது 3ம் திகதி காலை ஒரு கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு. இளந்திரையன் தெரிவித்தார். இவ்விரு நாட்களிலும் கொட்டியாரக்குடாகடற்பரப்பில் நடைபெற்ற கடற்சமரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடற்புலிகள் வீரச்சாவடைந்திருந்தனர். கடற்புலிகளின் ஒரு சண்டைப்படகும் கடும் சேதமடைந்திருந்தது. மூதூரில் மூழ்கிய படகு 'டோறா' என்று இம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை முடிந்த பின்னர் அது தொடர்பான ஊடக வெளியீட்டின் போது தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு இளந்திரையன் அறிவித்தார். ஆனால் சிறிலங்கா அரசோ தமது கடற்கலங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மூச்சுக்கூட விடவில்லை. மாறாக தமிழ்நெற்றில் வெளிவந்தவை பொய்யானவை என்று மட்டும் பரப்புரை செய்தது. படிமங்கள்: ஜெட் லைனர் படைக்காவிக் கப்பல் | வேசுபுக்கு வழியாக மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) - 2 (கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்டன) கடற்கல வகுப்புப் பெயர்: பாவனையில் இல்லாத சுடுகலப் படகு (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) - 1 (எறிகணை வீச்சில் அழிக்கப்பட்டது) சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: எறிகணை வீச்சால்: ஆகக் குறைந்தது 6 பேர் கடற்சமரில்: 8+ பேர் காயப்பட்டோர்: எறிகணை வீச்சால்: ஆகக் குறைந்தது 30 பேர் கடற்சமரில்: பலர் கடற்புலிகளின் ஆளணியினரில் காயப்பட்டோர்: 'கலத்தொகுதி கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலவன் உட்பட பலர் வீரச்சாவடைந்தோர்: ஆகக் குறைந்தது 9 கடற்புலிகள் (இது தவிபு இன் முதல் தகவல் அறிக்கையின் படி கிடைத்த மாவீரர் பட்டியல். நான்காம் ஈழப்போரின் மாவீரர் பட்டியல் முற்றாகக் கிடைக்காமல் ஊழியால் அழிந்துபோனதால் முழு வீரச்சாவு விரிப்பையும் என்னால் அறியமுடியவில்லை). முதற் கடற்சமர்: மேஜர் இசைக்கலை இரண்டாம் கடற்சமர்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் அலையழகி, 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் சூரியா, 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலாவேந்தி, கப்டன் இசையரசன், வீரவேங்கை சூட்டி. மூன்றாம் கடற்சமர்: கப்டன் இசையருவி, வீரவேங்கை வீரக்கோன் நான்காம் கடற்சமர்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் தென்றல்மாறன் ஏனைய கடற்புலிகள்: லெப். கேணல் உதயராணி எ வேதினி ஆதாரம்: உதயன்: 2, 3, 4, 5, & 6/08/2006 | தமிழ்நெற்: 1/08/2006 (Shells hit Trinco navy base, 14 killed, Dvora destroyed), (SLN ship under siege off Pulmoddai coast), 03/08/2006 (LTTE to hand over bodies of 40 SLA troopers) | கட்டுரை: லெப். கேணல் நிலவனின் வாழ்க்கை வரலாறு | த.தே.தொ. ஆவணப்படம்: நடந்து வந்த பாதையில் கடந்து சென்ற 2006 திகதி: செப்டெம்பர் 1 & 2, 2006 அடிபாட்டுக் காலம்: மாலை 9:00 மணியளவிலிருந்து வைகறை 4:00 மணியளவில் நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்பு & மணல்காடு கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் குறித்த கடற்பரப்பில் வெடித்த கடற்சமரில் சிங்களக் கடற்படையின் இரு டோறாக்கள் கடற்புலிகளால் சுட்டு தாட்டப்பட்டது. இத்தாக்குதலில் கடற்கரும்புலிகள் யாரும் பயன்படுத்தப்படவில்லை. மேற்கொண்டு நடந்த கடற்சமரில் சேதமடைந்த கடற்படை டோறா காங்கேசன் துறைமுகம் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. யாழிலுள்ள சுப்பர்மடம், கொட்டடி, முனை, கற்கோவளம், மூர்க்கம் மற்றும் புனிதநகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 900 குடும்பங்கள், புனித அந்தோனியார் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்ததால், கரையோரத்திலுள்ள சிறிலங்கா படைத்துறை நிலைகள் சூட்டிற்குட்பட்டதால், கரையோர வலுவெதிர்ப்புக் கோட்டிலிருந்து சிறிலங்கா தரைப்படையினர் தற்காலிகமாக தங்கள் நிலைகளைக் காலி செய்தனர். கரையோரத்தில் தற்காலிகமாக தமது நிலைகளை விட்டு வெளியேறிய சிறிலங்கா தரைப்படையினர் காலை 5:00 மணியளவில் தங்கள் நிலைகளுக்குத் திரும்பியதுடன், வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்களும் காலை 7:00 மணியளவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைக் காண முடிந்தது. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், காணாமல்போனோர்: 30 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை ஆதாரம்: உதயன்: 02/09/2006 | தமிழ்நெற்: 1/09/2006 (Clashes erupt off Point Pedro coast), 2/09/2006 (2 SLN Dvora vessels sunk, one damaged in Jaffna) திகதி: செப்டெம்பர் 24 & 25, 2006 அடிபாட்டுக் காலம்: மாலை 9:45 மணியளவிலிருந்து தொடர்ந்து ஐந்து மணி நேரம் நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: தென் தமிழீழத்திலிருந்து வன்னிக்குப் போராளிகளை ஏற்றிவரும் நடவடிக்கை ஒன்றின் போது ஏற்பட்ட கடற்சமர் இதுவாகும். ஏற்றிக்கொண்டுவரச் சென்ற போதே முட்டுப்பட்டுவிட்டனரா இல்லை திரும்பும் போது முட்டுப்பட்டனரா என்பது தெரியவில்லை. இவ் வெய்யக் கடற்சமரில் சிறிலங்காக் கடற்படையின் 20இற்கும் மேற்பட்ட கடற்கலங்களும் கடற்புலிகளின் பல்வேறு வகைப் படகுகளைக் கொண்ட வலுவூட்டப்பட்ட 25 படகுகளும் பொருதின. கடற்புலிகள் தரப்பில் பல படகுகள் ஆளணி காவிப் படகுகளாகும் (நடவடிக்கைக்கு ஏற்ப). ஏற்றிக்கொண்டு வரப்பட்ட தரைப்புலிகளில் சிலரும் வீரச்சாவடைந்தனர். ஆயினும் சேதங்களுக்கு நடுவணிலும் வெற்றிகரமாக தென் தமிழீழப் போராளிகள் வன்னிக்கு ஏற்றிப்பறிக்கப்பட்டனர். ஆனால் கடற்புலிகளின் கடற்கலங்களுக்கு ஏற்பட்ட சேதவிரிப்புகள் தெரியவில்லை. சேதப்பட்ட (கடுமையாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: ஆகக் குறைந்தது 5 பேர் வீரச்சாவடைந்த போராளிகள்: 6+ பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் சீராளன், 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் புயலினி, கப்டன் தாயகன் மற்றும் பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: லெப். கேணல் செவ்வேள் மற்றும் சிலர் ஆதாரம்: உதயன்: 02/09/2006 | தமிழ்நெற்: 1/09/2006 (Clashes erupt off Point Pedro coast), 2/09/2006 (2 SLN Dvora vessels sunk, one damaged in Jaffna) திகதி: ஒக்டோபர் 18, 2006 அடிபாட்டுக் காலம்: காலை 7:45 மணியளவில் தொடங்கப்பட்டு இரண்டு மணி நேரம் நடைபெற்றது நிகழ்வு இடம்: தட்சின துறைமுகம், காலி நிகழ்வு விரிப்பு: நடவடிக்கை பற்றிய தகவல்: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) - 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் - 2 செயலிழக்கச் செய்யப்பட்ட கடற்கலங்கள் - 1 கடற்கலப் பெயர்: பராக்கிரமபாகு கல வகை: கொடிக்கப்பல் (பழையது) சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கலப் பெயர்: அறியில்லை கல வகை: எரிவாயு காவி மற்றும் ஒரு இனந்தெரியாக் கடற்கலம் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில் (சிறிலங்கா அரச தகவலின் படி), கொல்லப்பட்டோர்: 3 பேர் காயப்பட்டோர்: 14 பேர் சிறிலங்காப் பொதுமக்களில் காயப்பட்டோர்: 15 பேர் தவிபு தரப்பில் நடவடிக்கையில் பங்கேற்றோர்: 15 பேர் (கடற்கரும்புலிகள், கடற்புலிகள், மற்று படையப் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்ட 5 படகுகள்) வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 8 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் ஆதாரம்: உதயன்: 19/10/2006 | தமிழ்நெற்: 18/10/2006 (Naval base in Galle attacked, mob riots in port city) | கட்டுரை: கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) விடுதலை | navypedia.org (srl_cf_parakramabahu) | போரிலக்கியப் பாடல்: காலித் துறைமுகம் மீதில் புகுந்தவர் - இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 12 திகதி: ஒக்டோபர் 20, 2006 அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிவரை முனையில், பின்னர் 7:30 மணிக்குமேல் (மொத்த நிமிடங்கள் அறியில்லை) மணல்காட்டில் நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்பு & மணல்காடு கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: நாகர்கோவில் கடற்பரப்பில் நின்றிருந்த கடற்புலிகளின் கடற்கலங்கள் மீது மாலை 6:30 மணியளவில் தாக்குதல் நடாத்திய சிறிலங்காக் கடற்படையின் கலத்தொகுதி மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதல் நடாத்தி பருத்தித்துறைக் கடற்பரப்பு வரை விரட்டியடித்தனர். இக்கடற்சமர் மாலை 7:30 வரை நீடித்தது. அவர்கள் தளம் திரும்பும் வேளையில் மணல்காடு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா வான்படையின் தாக்குதல் உலங்குவானூர்திகளும் கடற்படையினரும் கடற்புலிகளை வழிமறித்துத் திரும்பவும் வலிதாக்குதல் மேற்கொண்டனர். கடற்புலிகளும் எதிர்த்துப் பொருதினர். இதே நேரத்தில் வரணையிலிருந்த படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்புகளை நோக்கி சேணேவி எறிகணை வீச்சையும் மேற்கொண்டனர். இக்கடற்சமரில் கடற்புலிகளின் 15 வரையிலான படகுகள் பங்கெடுத்ததாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 21/10/2006 | தமிழ்நெற்: 20/10/2006 (Two SLN Dvora vessels damaged in sea clash - LTTE) திகதி: நவம்பர் 9, 2006 அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5:30 மணியிலிருந்து மாலை 7:00 மணிவரை நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்பு & வல்வெட்டித்துறைக் கடற்பரப்பு முதலாவது டோறா மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:35 மணியளவில் நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள நாகர்கோவில் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளை ஆத்திரமூட்டி தாக்குதல் நடத்த முயன்றனர், சிறிலங்காக் கடற்படையினர். இதனால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கு காவலாக நின்ற கடற்புலிகள் கடற்படையினர் மீது எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். தொடர்ந்த கடற்சமர் பருத்தித்துறையின் முனைக் கடற்பரப்பினுள் விரிந்தது. அப்போது அங்கு வைத்து சிறிலங்காக் கடற்படையின் டோறா மீது எற்பாடு 5:35 மணியளவில் கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலால் அது முற்றாக மூழ்கடிக்கப்பட்டது. பின்னர் பின்வாங்கி ஓடிய கடற்படையினரை துரத்திச் சென்ற கடற்புலிகள் வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் வைத்து நடத்திய தாக்குதலில் (கடற்கரும்புலித் தாக்குதலா என்பது தெரியவில்லை) இன்னொரு டோறா சேதமடைந்தது. இது நடந்தது 6 மணியளவில் ஆகும். அது மூழ்க முன்னர் அதிலேறிய கடற்புலிகளால் அதிலிருந்த சில படைக்கலன்கள் கழட்டி எடுத்து கைப்பற்றப்பட்டன. கடற்புலிகளால் சிறிலங்காக் கடற்படையின் சடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்த கடசமரில் கடற்படையினரை காங்கேசன் துறைமுகம் வரை கடற்புலிகள் விரட்டிச் சென்றனர். அப்போது மற்றொரு டோறா சேதப்படுத்தப்பட்டது. தொடர்ந்த கடற்சமர் மாலை 7:00 மணியோடு ஓய்ந்தது. பின்னர் கடற்புலிகள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். இவற்றை கரையிலிருந்து கண்ட ஒருவர் சாட்சியளித்துள்ளார், தமிழ்நெற்றிற்கு. கடற்புலிகளின் எந்தவொரு படகும் மூழ்கடிக்கப்படவில்லை. கடற்புலிகளின் கடற் தாக்குதலை லெப். கேணல் செழியன் வழிநடாத்தினார். இக்கடற்சமரின் போது சிறிலங்கா கடற்படைக்கும் உதவியாக சிறிலங்கா வான்படையும் களமாடியது. அதன் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்திகளும் கிபிர் தாரை வானூர்திகளும் தாக்குதலில் ஈடுபட்டன. படிமங்கள்: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) தொடரெண்: பி 416, பி 461 சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 25 பேர் காயப்பட்டோர்: அறியில்லை போர்க்கைதிகளானோர்: 4 பேர் பி 461இலிருந்து பிடிபட்டோரின் பெயர் விரிப்பு: இந்திக்க பிரசாந்த பிட்டியகுபுருவ, 30, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: EE17275) 37C இன் இயந்திரப் பொறியியலாளர், கிரிந்திஹேவ, புண்டுலு ஓயா, நுவரெலியா, சமந்த குமார ஹேவகே, 28, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: XS 25749), முன்னணி கடற்கலவர், பேலியகந்தே, கலேவேல, கமல் கேமந்த குமாரசிறி, 26, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: XS 29966) பதவிய, பராக்கிரமபுர, அனுராதபுரம். பி 416இலிருந்து பிடிபட்டோரின் பெயர் விரிப்பு: அனில் பிரியங்கே மடதெனிய, 21, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: SS38801), சாதாரண கடற்கலவர், நாலந்த, மாத்தறை வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் தாரணி, மேஜர் லவனிதா, கப்டன் சாந்தினி, லெப்டினன்ட் அகவாணன் ஆதாரம்: உதயன்: 10/11/2006 | தமிழ்நெற்: 09/11/2006 (Sea Tigers, Sri Lanka Navy clash in Trincomalee sea), (Sea Tigers sink 2 Sri Lankan attack crafts, seize armament, capture troopers) திகதி: நவம்பர் 18, 2006 அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியிலிருந்து 8:30 மணிவரை நிகழ்வு இடம்: விடத்தல்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவுக் கடற்பரப்பினுள் நுழைந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளை ஆத்திரமூட்டி தாக்குதல் நடத்த முயன்றனர், சிறிலங்காக் கடற்படையினர். உடனே பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்குக் காவலாக நின்ற கடற்புலிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். கடற்படையினரின் வலிதாக்குதலுக்கு ஆதரவாக சிறிலங்கா வான்படையின் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்திகள், கிபிர் மற்றும் மிக் தாரை வானூர்திகள் தாக்குதலில் ஈடுபட்டன. விடத்தல்தீவில் தொடங்கிய கடற்சமர் தலைமன்னார் சிறிலங்காக் கடற்படைத் தளம் வரை நீண்டது; கடற்புலிகள் கடற்படையினரைத் துரத்திச் சென்றனர். கடற்படையின் படகுகளில் மாலை 6:55 மணிக்கு ஒன்ரும் மாலை 7:50 மணிக்கு ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டன. இரண்டவது மூழ்கடிக்கப்பட்ட போது சிறிலங்காக் கடற்படைக்கு வலுவூட்டம் நடைபெற்றது. தொடர்ந்த கடற்சமரில் மற்றொரு சுற்றுக்கவல் படகும் சேதமடைந்தது. இக்கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கோ ஆளணியினருக்கோ இழப்புகள் ஏற்படவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம் சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: ~10 பேர் காயப்பட்டோர்: அறியில்லை காயமடைந்த கடற்புலிகள்: 3 பேர் ஆதாரம்: உதயன்: 19/11/2006 | தமிழ்நெற்: 18/11/2006 (Sri Lanka Navy, Sea Tigers clash in Mannar seas) ******
  3. நேட்டோ நேரடியாக வெளுக்கும் நிலையை ஏற்படுத்தினால் நல்லது தான்! ஒரு வாரத்தில் முடிவு வரலாம்!
  4. நன்றி ஏராளன் (நீண்ட பதில், மன்னிக்கவும்!) முன்கதை சந்திராயன் போன்ற ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி அதன் சுற்றுப் பாதைக்குச் செல்வதற்கு முதலில் இரண்டு ரொக்கற் இயந்திரங்களைப் பாவிக்க வேண்டும். சந்திராயன் 3 இன் தோற்றத்தில் அந்த இரண்டு பக்கமும் அமைந்திருக்கும் தாங்கிகள் தான் முதல் நிலை (Stage 1) இயந்திரம். இவற்றை ஊக்கிகள் (boosters) என்றும் அழைக்கலாம். இந்த ஊக்கிகள் முதல் சில நிமிடங்களில் எரிந்து முடித்து கழன்று பூமியில் வீழ்ந்து விடும். இதன் பிறகு, இரண்டாம் நிலை (Stage 2) ஊக்கி வேலை செய்து விண்கலத்தை பூமியில் இருந்து 22 000 மைல்கள் தொலைவு வரை தள்ளி விடும். இந்த உயரத்தில் தான் சந்திராயன் பூமியைச் சுற்றி வரும் சுற்றுப் (orbit) பாதையில் நுழையும். தன் வேலையை முடித்த பின்னர், இந்த இரண்டாம் நிலை எஞ்சின் பகுதியும் விண்கலத்திலிருந்து கழரும், ஆனால் பூமிக்கு முழுமையாக மீளுவதில்லை. இனித் தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்: சந்திராயனோ, அல்லது நிலவுக்கு முன்னர் சென்ற எந்த விண்கலமுமோ நேராக நிலவுக்குப் பறக்கவில்லை. பூமியைச் சுற்றி மிக உயரத்தில் Geo-synchronous orbit (GEO) என்ற வட்டப் பாதையில் அவை சுற்றி வந்து கொண்டிருக்கும். படிப்படியாக, 22,000 மைல்கள் உயரத்தில் இருந்து மேலதிக உயரத்திற்கு ஏறி, விண்கலம் சுற்றிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் இந்த பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி, நிலவினைச் சுற்றி வரும் ஒரு வட்டப் பாதையில் விண்கலம் இணையும். இப்படி, சுற்றுப் பாதையை மாற்றிக் கொள்ளவும் (orbit transfer), விண்கலத்தின் திசையை மாற்றிக் (maneuver) கொள்ளவும் தான் விண்கலத்திற்கு விசையுருவாக்கும் இயந்திரம் தேவை. அந்த இயந்திரத்தின் பெயர் மூன்றாம் நிலை (Stage 3) இயந்திரம். வெற்றிடத்தில், காற்றில்லாமல் வேலை செய்யக் கூடிய இந்த இயந்திரம் "உறைநிலை எரிபொருள்" (cryogenic) இயந்திரம் எனும் விசேட வகையைச் சார்ந்தது. இந்தியாவின் தயாரிப்பான உறைநிலை இயந்திரம் CE-20 சந்திராயன் 3 இல் விண்கலத்திற்குப் பின்னால் தாங்கி போல இருக்கும் பகுதி தான் CE-20 எனப்படும் உள்ளூர் தயாரிப்பான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரம். இந்த இயந்திரம் உள்ளூர் தயாரிப்பாக உருவாக வித்திட்டது, 1992 இல் அமெரிக்கா இந்தியாவின் விண்வெளி ஆய்வை முடக்க எடுத்த ஒரு நடவடிக்கை தான். 90 களில் இந்தியா இந்த கிறையோஜெனிக் இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து வாங்க முயன்றது. அமெரிக்காவும், பிரான்சும் சொன்ன விலையை விட, ரஷ்யாவின் இயந்திரங்கள் மலிவாக இருந்ததால், இந்தியா ரஷ்யாவின் கிறையோஜெனிக் இயந்திரங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. அமெரிக்காவோ, இது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஒத்தது, எனவே ஏவுகணைப் பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரண் எனக் கூறி, அடுத்த 2 வருடங்களுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை முடக்கும் வகையில் ஏற்றுமதி இறக்குமதித் தடையை விதித்தது. அன்றே, இந்தியா உள்ளூரில் கிறையோஜெனிக் இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கி, இன்று பெங்களூரில் இதற்கெனத் தனியான ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறது. அங்கே உருவாக்கப் பட்டு, தமிழ்நாட்டில் போன வருடம் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப் பட்ட ஒரு இயந்திரம் தான் இந்த CE-20. எப்படி வேலை செய்கிறது கிறையோஜெனிக் இயந்திரம்? சில நாட்கள் முன்பு ஒரு திரியில், ஐதரசன் வாயு ஒட்சிசனுடன் சேர்ந்தால் பெரும் வெப்பம் உருவாகும் என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா? அதே exothermic இரசாயனத் தாக்கம் தான் கிறையோஜெனிக் இயந்திரத்தின் செயல்பாட்டுப் பொறிமுறை. மொத்தமாக 27,000 கிலோ நிறையுடைய திரவ நிலை ஓட்சிசனும், திரவ நிலை ஐதரசனும் இந்த இயந்திரத்தின் தாங்கிகளில் சேமிக்கப் பட்டிருக்கிறது. தேவையேற்படும் போது, பம்பிகள் மூலம் இந்த திரவ வாயுக்கள் கலக்கப் பட்டு, தீயை ஒரு தீயுருவாக்கி (ignition) ஏற்படுத்த, தாரை இயந்திரம் போன்ற அமைப்பு அந்தத் தீ-வாயுக்கலவையை பின் நோக்கித் தள்ளுவதால் உந்துகை (propulsion) நிகழ்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த கிறையோஜெனிக் இயந்திரம் தொடர்ந்து இயங்க வேண்டியதில்லை: மொத்தமாக 40 நாட்கள் எடுக்கும் சந்திராயனின் நிலவுப் பயணத்தில், வெறும் 720 செக்கன்களுக்குத் தான் இந்த கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், நியூட்டனின் முதல் விதியின் படி: இயக்கத்திலிருக்கும் பொருள் தடை ஏற்படும் வரை இயக்கத்திலிருக்கும். இதனால், உராய்வில்லாத விண்வெளி வெற்றிடத்தில் தொடர்ந்த உந்துகையின்றியே சந்திராயன் நகரும். சுற்றுப் பாதைகளை மாற்றும் போது மட்டும், கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்து விசையை வழங்கும். அப்படி அது வேலை செய்ய வேண்டிய கால அளவு மொத்தமாக வெறும் 720 செக்கன்கள் என்று கணித்திருக்கிறார்கள். மேலே, சந்திராயன் ஏவப் பட்ட பின்னர், இந்தியர்கள் பெருமைப் பட்ட சந்தர்ப்பங்களை நக்கல் நையாண்டி செய்திருப்போர் கவனிக்க வேண்டிய ஒன்று: உள்ளூரில் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரத்தை உருவாக்கியமை உண்மையில் சாதனை தான். 90 களில், அமெரிக்காவின் ஒரு சில்லறைத்தனமான சேட்டைக்குப் பதிலாக நரசிம்மராவ் உருவாக்கிய உள்ளூர் முயற்சி, அதில் முழுமையாக உள்ளூர் விஞ்ஞானிகளின் பங்களிப்பு (பலர் தென்மாநிலத்தவர், தமிழர்கள் என்பது கூடுதல் பெருமை!) என்பன தென்னாசிய நாடுகளைப் பொறுத்த வரை ஒரு சிறப்பான முன்மாதிரி. இந்தியர்கள் பெருமைப் பட சந்திராயன் 3 நியாயமான காரணம் தான்!
  5. ரஞ்சித் அவர்களே நன்றி, தொடருங்கள். ஆட்சிகள், அதாவது ஆளும் தரப்புகள் மாறினாலும் எப்படிச் சிங்களம் திட்டமிட்டு இன அழிப்பை ஒரு நிரலாகவும், தெளிவாகவும் செய்துவருகிறது. சமகாலத்தில் வேறுநாடுகளில் நடைபெற்ற இன அழிப்பக்குத் தண்டனை, தீர்வு என்று நிலைமை முன்னேறிச் செல்ல நாமேன் பின்தள்ளப்படுகின்றோம்.
  6. இந்த rocket திரவ எரிபொருள் இயந்திரமா அல்லது திட எரிபொருள் இயந்திரமா? 🤣 பதிலளிக்கும் முன்னர், கேள்வியைப் புரிந்துகொள்ள வேண்டியது சிறந்த ஆசிரியருக்குரிய பண்பு. வாழ்த்துக்கள். 👍
  7. ஆண்டு: 2001 இவ்வாண்டில் பி411 என்ற தொடரெண் கொண்ட சீ சென்ரினெல் வகுப்புச் சுடுகலப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டதாக நேவிபீடியா என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் திகதியை என்னால் அறியமுடியவில்லை. திகதி: மார்ச் 21, 2001 அடிபாட்டுக் காலம்: காலை 5:00 மணியளவில் நிகழ்வு இடம்: முல்லைக் கரையிலிருந்து 8 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகுகள் மீது வலிதாக்குதல் நடாத்திய சிங்களக் கடற்படையின் டோறாக்கள் மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர் என்று அற்றை நாளே புலிகள் செய்தி அறிக்கை விட்டிருந்தாலும் மெய்யில் வலுச்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்புலிகள் மீதே சிங்களக் கடற்படையினர் வலிதாக்குதல் நடாத்தி வேண்டிக்கட்டினர். யாழிலிருந்து திருமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மூன்று டோறாக்கள் {சுப்பர் டோறாவும் (பி 422) பேபி டோறாவும் (பி 495, பி497)} முதலில் கடற்புலிகளைக் கண்டுகொண்டன. உடனே பேபி டோறாக்கள் இரண்டும் கடற்புலிகளின் மூன்று சண்டைப்படகுகள் மீது முதல் வேட்டுகளைத் தீர்த்தன. முதலில், கடற்புலிகளின் சண்டைப்படகுகளின் கலத்தொகுதிக் (flotilla) கட்டளையாளர் வழங்கல் படகுகள் சாளைத் தளத்திற்கு ஓம்பலாகச் (safe) செல்வற்காக அனைத்துக் கலமணிகளையும் (squadron) சண்டை தவிர்ப்புச் செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆயினும் கடற்படையின் படகுகள் நன்கு நெருங்கி கடற்புலிகளைத் தாக்கத் தொடங்கின. கடற்படையின் தொந்தரவு அதிகரித்ததால் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் திடீரென வலு முரட்டுத்தனமான தாக்குதலை பகையின் டோறாக்கள் மீது தொடுத்தார். வெடித்த கடற்சமரின் ஒரு சமயத்தில் சுப்பர் டோறா (பி 495) ஒன்று கடற்புலிகளின் தாக்குதலில் நிலைகுலைந்து இயந்திரம் சேதமடைந்ததால் நின்றுவிட அதன் மீது தாக்குதலை வலுப்படுத்தினர். அந்நேரம் மேலும் 8 டோறாக்கள் உதவிக்கு விரைந்து தாக்குதல் நடாத்தின. சேதமடைந்ததிலிருந்த கடற்படையினர் சிலரைக் கொல்ல ஏனையோர் கடலினுள் குதித்து வேறொரு கலத்தில் ஏறி உயிர்தப்பினர். பின்னர் டோறாவைக் கைப்பற்றி, அதிலேறி, படைக்கலன்களைக் கழட்டியெடுத்துவிட்டு சக்கை வைத்து அதை மூழ்கடித்தனர், கடற்புலிகள். அதே சமயம் உதவிக்கு விரைந்து வந்த சிங்கள வான்படையின் குண்டுதாரிகள் கடற்புலிகளை இலக்கு வைத்தன. இந்நிலையை தமக்குச் சாதகமாக்கிய கடற்புலிகள் சிங்களக் கடற்படையின் கடற்சமர் வியூகத்தினுள் நுழைந்து பகைவரோடு இரண்டறக் கலந்து சமராடினர். கடற்புலிகளின் இத்தந்திரமான வியூகத்தால் திணறிய சிங்கள வான்படை பகை-நட்புக் கடற்கலங்களை இனக்காணத் தவறி தம் டோறா ஒன்றின் மீதே குண்டுவீசி மூழ்கடித்தனர். மேற்கொண்டு கடற்புலிகளோடு பொருத இயலாமல் சிங்களக் கடற்படையினர் பின்வாங்கினர். இக்கடற்சமரின் போது மேலும் இரு டோறாக்கள் சேதமடைந்தன. ஆனால் சிங்களக் கடற்படையினரோ இச்சமரில் தமது ஒரே ஒரு டோறாவே மூழ்கடிக்கப்பட்டதாகவும் தமது வான்படையினர் வான்குண்டெதையும் வீசவில்லையென்றும் தெரிவித்தனர். இக்கடற்சமரை கடலில் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் வழிநடாத்த பிரிகேடியர் சூசை அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து தரையிலிருந்து வழிநடாத்தினார். இது புலிகளின் ஒருதலைப் பக்க போர் நிறுத்தத்தை மீறியதொரு செயலென்று புலிகள் குற்றம் சாட்டினர். மேலதிகத் தகவல்: வெடித்த கடற்சமரில் சிங்களக் கடற்படையின் 12 டோறாக்களோடு கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் மிராஜ் வகுப்பு வழங்கல் படகுகளும் பொருதின. இத்தாக்குதலில் கடற்சிறுத்தை அணியின் கட்டளையாளரான லெப். கேணல் சேரமான், லெப். கேணல் பகலவன், லெப். கேணல் கன்னியத்தம்பி, கடற்புலிகளின் மகளீர் பிரிவுத் துணைக் கட்டளையாளர் கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி, லெப். கேணல் விடுதலை, லெப். கேணல் சீராளன், லெப். கேணல் ஜெரோமினி எ விடுதலை, மேஜர் ஆழியன், மேஜர் தமிழ்நம்பி, லெப். கேணல் சிறீராம் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். சிறீராம் அவர்கள் சென்ற சண்டைப்படகில் லெப். கேணல் சேரமான் இருந்தார். கட்டளையாளர் சிறீராம் மொத்தச் சமரையும் படமாக்கியிருந்தார். இச்சமரில் ‘ராகினி’ என்ற கலப்பெயரைக் கொண்ட மிராஜ் வகுப்பு வழங்கல் படகும் பங்கெடுத்திருந்தது. டோறாவிலிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள் யாவும் இதில் தான் ஏற்றப்பட்டன. கரையில் இதிலிருந்தும் மற்றைய மிராஜ் வகுப்புப் படகிலிருந்தும் படைக்கலன்களையும் காயம் & வீரச்சாவுகளையும் பொதுமக்கள் இறக்கினர். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம்-2 (பி 495) கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை. கடற்புலிகளின் தகவலின் அடிப்படையில். ஆனால் சிங்களம் இது பெருத்த சேதத்தோடு தப்பியது என்றே கூறுகின்றது) சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 9+ பேர் காயப்பட்டடோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் தென்றல், மேஜர் கலா எ நாவுக்கரசி, கப்டன் மறவன் காயப்பட்டடோர்: ஒரு பெண் போராளி உட்பட ஆகக்குறைந்தது நான்கு போராளிகள் நிகழ்படம்: https://eelam.tv/watch/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-sea-tigers-battle_sE4OLdlDX3555zW.html https://eelam.tv/watch/2001-ltte-sea-tigers-battle-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0_fAwUpWfGhs9JNf6.html ஆதாரம்: உதயன்: 22/03/2001 | தமிழ்நெற்: 21/03/2001 (SLN gunboat sunk), (One Dvora captured, weapons stripped - VOT) | எரிமலை: மார்ச் 2001 | கட்டுரை: ‘21.03.2001 அன்று சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிகள்’ திகதி: ஏப்ரல் 16, 2001 அடிபாட்டுக் காலம்: ‘புலிகளின் குரலின்’ செய்தியின் படி: சாமம் 1:45 மணியளவில் தொடங்கியது நிகழ்வு இடம்: சாளைக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகள் வலுச் சேர்க்கும் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது வைகறைப் பொழுது 2:15 மணியளவில் சிறிலங்காக் கடற்படையின் ஐந்து டோறக் கலங்கள் இவர்களைக் கண்டுகொண்டன. பொதுவாக இந்நடவடிக்கைகள் இராப்பொழுதிலேதான் நடைபெறுவதுண்டு, சிங்களக் கடற்படையுடனான முட்டலைத் தவிர்க்க. அவை புலிகளின் படகுகள் என்பது தெரியாமல் கடற்புலிகளின் கலத்தொகுதிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி உசாவல் செய்ய முயன்ற போது கடற்புலிகளிடமிருந்து குறிகைகள் (Signal) ஏதும் கிடைக்காததால் சிங்களக் கடற்படையின் பி 462 என்ற டோறா முதலில் கடற்புலிகளை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தபடி மிண்டியது. மேற்கொண்டு ஏனையவையும் சுடத் தொடங்க கடற்சமர் மூண்டது. அச்சமயம் நாகர்கோவில் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இரு டோறாக்களும் திருமலை, காங்கேசன்துறை கடற்றளங்களிலிருந்து உதவிக்கு மேலதிக சுடுகலப் படகுகளும் அழைக்கப்பட்டு கடற்புலிகளின் கலத்தொகுதியோடு பொருதின. நடந்த கடற்சமரில் கடற்புலிகளின் சூட்டில் பி 490 என்ற தொடரெண் கொண்ட டோறாவின் இயந்திரங்கள் சேதமாகி காங்கேசன்துறைக்கு கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. கதுவீ பொருத்தப்பட்ட மற்றொரு டோறாவும் (பி 460) இராப்பார்வை ஏந்தனங்கள் (Equipments) பொருத்தப்பட்ட இன்னொரு டோறாவும் தொடர்ந்த கடற்சமரில் சேதமாகின. சிங்கள வான்படையும் சிங்களக் கடற்படைக்கு உதவியது. கடற்சமர் முடிந்த பின்னர் அப்பரப்பில் தேடுதல் நடாத்திய போது ஒரு டசினுக்கும் அதிகமான நெகிழி உருள்கலன்கள் மிதந்து வருவது கவனிக்கப்பட்டது என்று சிங்களக் கடற்படை கூறியது. பின்னர் அவற்றை ஆய்வுகுட்படுத்திய கடற்படையினர் அவற்றில் சிலதில் வான்புலிகளின் இலகு வகை வானூர்திகளுக்கான ஹை ஒக்ரேன் எரிபொருளும் சிலதில் சயனைட் தயாரிப்பதற்கான ரலிலின் டெசோசயனைட் என்ற வேதிப்பொருளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வான்புலிகளின் சிலின் 143 இலகு வகை வானூர்திகளுக்கான எரிபொருள் 15/04/2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தமிழீழத்திற்குள் கொண்டுவரப்பட்டது என்பது இக் கட்டுரை எழுதுவினைஞரின் ஊகமாகும். இக்கடற்சமரானது புலிகளின் ஒருதலைப் பக்க போர் நிறுத்தத்தை மீறிய செயல் என்று புலிகள் குற்றம் சாட்டினர். சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இழப்பில்லை காயப்பட்டடோர்: 7 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: 2ம் லெப். கவிமகள், லெப். தமிழ்மறவன் ஆதாரம்: உதயன்: 17,19/04/2001 | தமிழ்நெற்: 16/04/2001 (SLN, Sea Tigers clash off Mullaithivu) திகதி: ஏப்ரல் 20, 2001 அடிபாட்டுக் காலம்: வைகறை 3:50 மணியிலிருந்து காலை 7:00 மணி வரை நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவுக் கரையில் பொதுமக்களின் உதவியுடன் போர்த்தளவாடங்களை இறக்கிக்கொண்டிருந்த கடற்புலிகளின் நடமாட்டத்தை கரைக்கு வடகிழக்கே 32 கடல்மைல் தொலைவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களக் கலங்கள் கண்டுவிட்டு மேலதிக கடற்படையை துணைக்கு அழைத்து கடற்புலிகளோடு பொருதினர். சிங்களக் கடற்படைக்குத் துணையாக வழமை போல சிங்கள வான்படையும் வந்து சேர்ந்து சமர் புரிந்தன. இதற்கு முன்னர் நடந்த பல கடற்சமர்களின் போதும் சிங்கள வான்படை உதவிக்கு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடற்சமரில் சிங்களக் கடற்படையின் டோறா ஒன்று சேதமடைந்தது. கடற்புலிகளின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றுள் ஆகக்குறைந்தது ஒன்றாவது வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகாகும். இக்கடற்சமரில் தான் முதன்முறையாக 8 கடற்புலிகள் சிங்களக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட்ட ஒரே படகிலிருந்தே பிடிக்கப்பட்டனராம். காயத்தோடு இருந்த அவர்களில் ஒருவர் பலாலி படைய மருத்துவமனையிலும் ஏனையோர் திருமலை படைய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்தது. ஆனால் இவ்வாறு சிறிலங்காக் கடற்படையால் பிடிக்கப்பட்ட போர்க்கைதிகள் பன்னாட்டு போர்க்கைதிகள் விதிமுறைக்கு மாறாக மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தப்பட்டனர். பெண் போராளிகள் சிங்களக் கலங்களில் ஏற்றப்பட்டவுடனேயே ஆடைகள் கழையப்பட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டனர். பின்னர் திருமலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு இறக்கப்பட்டவுடன் உடைகள் கொடுக்கப்பட்டது. இவ்வாறு பிடிபட்டவர்களில் ஆகக்குறைந்தது இரு பெண் போராளிகளாவது 2002 சனவரி வரை உயிரோடு இருந்துள்ளனர். ஏனைய போராளிகளின் நிலைமை தெரியவில்லை. எவ்வாறெயினும் இதற்கு முன்னர் பிடிபட்டவர்கள் மிகக் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டதே இவர்களினதும் கதியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலதிகத் தகவல்: இவர்களில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு வெலிக்கடை மகளீர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த (சனவரி 2002 நிலவரப்படி) சுபாசினி மற்றும் விஜயகலா ஆகியோர் தொடர்பில் பன்னாட்டு மன்னிப்பு அவைக்கு கிடைத்திருந்த அறிக்கைகளிலிருந்து… சுபாஷினி: “பன்னாட்டு மன்னிப்புச் சபைக்கு கிடைத்த தகவலின்படி, விஜயரத்தினம் சுபாஷினி விடுதலைப் புலிகளின் படகில் கடலிலிருந்து திரும்பிய போது, சிறிலங்காக் கடற்படையின் சுடுகலப் படகுகள் பல அவர்களைச் சுற்றி வளைத்தன. பல மணி நேரம் கடும் சண்டை நடந்தது. விஜயரத்தினம் சுபாஷினி மற்றும் பலர் அவர்களது படகுகள் சேதமடைந்ததை அடுத்து கடலில் குதித்தனர், பின்னர் அவர் கடற்படைச் சுடுகலப் படகு ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டார். சுடுகலப் படகில் ஏறிய உடனேயே, அவளது உடைகள் அனைத்தும் கழற்றப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டன. மேலும், பத்து கடற்படை வீரர்கள் அவளது முலைகளையும் பிறப்புறுப்புப் பகுதியையும் தொட்டு அழுத்தினர். அவள் கத்திக் கொண்டிருந்த போது அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் விரல்களை அவளது பெண்குறிக்குள் விட்டனர். இந்த முழு வேதனையும் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. படகு திருகோணமலையை அடைந்ததும் அவளது உடைகள் கொடுக்கப்பட்டன. அவர் கொழும்பு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் எவ்வித குற்றச்சாட்டோ உசாவலோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பன்னாட்டு மன்னிப்புச் சபையின் அறிவுக்கிட்டியவரை, இந்தக் குற்றச்சாட்டு குறித்து எந்த உசாவலும் நடத்தப்படவில்லை.” (பன்னாட்டு மன்னிப்புச் சபை, AI Index: ASA 37/001/2002, பக்கம்: 14) விஜயலலிதா: “தங்கையா விஜயலலிதா என்ற 14 வயது தமிழ்ப் பெண், 20 ஏப்ரல் 2001 அன்று விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட போது பத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் (மேலே உள்ள வழக்கு எண். 4 ஐயும் பார்க்கவும், விஜயரத்தினம் சுபாஷினி). அறிக்கையின்படி, தங்கையா விஜயலலிதா கடற்படையின் சுடுகலப் படகில் அழைத்துச் செல்லப்பட்டு அவரது பாவாடை மற்றும் கச்சு கழற்றப்பட்டது. படகு திருகோணமலையை அடைந்ததும் அவளது உடைகள் அவளிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன. அவர் தற்போது கொழும்பு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் எவ்வித குற்றச்சாட்டும் அல்லது விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.” (பன்னாட்டு மன்னிப்புச் சபை, AI Index: ASA 37/001/2002, பக்கம்: 14) சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: 4 பேர் கடற்புலிகள் ஆளணியினரில்: வீரச்சாவடைந்தோர்: 9 பேர் தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் பவான், லெப். கேணல் கடம்பன், மேஜர் மயூரி, மேஜர் இசைவிழி, கப்டன் சுடர்வானம், லெப். மைந்தன், லெப். அறிவு எ அறிவழகன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். மதிநிலா எ நிலாவொளி காயமடைந்தோர்: சிலர் போர்க்கைதிகளானோர்: 8 பேர் முதற்பெயருடனான இயற்பெயரும் வயதும்: சிற்றம்பலம் துஸ்யந்தினி (16), தங்கையா விஜயலலிதா (14), விஜயரத்தினம் சுபாசினி (19), புவனேஸ்வரன் மலிஸ் (21), வைகரன் (19), ரவி (19), கந்தன் (19), கோடீஸ்வரன் (24) ஆதாரம்: உதயன்: 21&23/04/2001 | தமிழ்நெற்: 20/04/2001 (Four LTTE boats sunk - Navy) | மாவீரர் பட்டியல் | பன்னாட்டு மன்னிப்புச் சபையின் அறிக்கை: asa370012002en.pdf திகதி: சூன் 23, 2001 அடிபாட்டுக் காலம்: காலை நிகழ்வு இடம்: சம்பூர் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லைகொடுத்து அவர்தம் மீது தாக்குதல் நடாத்திவந்த சுற்றுக்காவல் படகுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியதோடு அதிலிருந்த கைக்குண்டு செலுத்தி, வெளியிணைப்பு மின்னோடி, தொலைத்தொடர்புக் கணம் ஆகியவற்றையும் கைப்பற்றியதாக தவிபுவினர் ஊடக வெளியீடு ஒன்றில் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த நாள் காலையில் சம்பூர் மீது சிறிலங்காக் கடற்படையின் சுடுகலப் படகுகள் சூடு நடத்தியதாக மூதூரில் உள்ள தமிழ்நெட் செய்தியாளர் தெரிவித்தார். சிறிலங்கா கடற்படையின் எறிகணை வீச்சில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், ஒரு பாடசாலை மற்றும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். கடற்படையின் எறிகணைவீச்சில் பல கால்நடைகளும் கொல்லப்பட்டதாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் கோட்டத்தின் அறிக்கைகள் தெரிவித்தன. கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: சுற்றுக்காவல் படகு சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 24/06/2001 | தமிழ்நெற்: 23/06/2001 (SLN patrol boat captured - Mutur LTTE) திகதி: செப்டெம்பர் 15, 2001 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:50 மணியளவில் நிகழ்வு இடம்: சூடைக்குடா (ஃவௌல் பொயின்ற்/Foul Point) கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வெள்ளைக்கொடி பறக்க விடப்பட்ட கட்டைப்படகு ஒன்றில் குடிமக்கள் போன்று வேடமிட்டு டோறாவை நெருங்கிய கடற்கரும்புலிகள் இலக்கை அண்மித்ததும் வெடித்துச் சிதறினர். இதில் டோறா சிறிது சேதமடைந்தது. சேதப்பட்ட (சிறிது) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: 1 ஆள் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் ஓசையினியவன், கப்டன் தமிழினியன் எ பொறையரசு சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: ஆதாரம்: உதயன்: 17/09/2001 திகதி: செப்டெம்பர் 16, 2001 அடிபாட்டுக் காலம்: வைகறை 4:30 மணியிலிருந்து நண்பகல் வரை டோறா மீது இடியன் மோதி மூழ்கிய நேரம்: வைகறை 5:30 மணியளவில் மற்றொரு டோறா சேணேவித் தாக்குதலிற்குள்ளாகி மூழ்கிய நேரம்: நண்பகல் 12:45 மணியளவில் நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கரையிலிருந்து 26-30 கடல் மைல் தொலைவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து 1200 தரைப்படையினரையும் கப்பல் ஊழியர்களையும் ஏற்றிக்கொண்டு ஏமக் கலங்களோடு காங்கேசன்துறைத் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 'எம்.வி. பிரைட் ஒஃவ் சௌத்' என்ற படைக்காவி பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்துக் கடற்புலிகளால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலின் போது கடற்புலிகளின் அனைத்து வழங்கலும் ஒருங்கிணைக்கப்பட்டு 10 சண்டைப்படகுகள், 2 வழங்கல் படகுகள், மற்றும் 8 குண்டுப்படகுகளைக் கொண்ட 5 கலத்தொகுதிகளாகப் (4 தாக்குதல் மற்றும் ஒரு வழங்கல்) பிரிக்கப்பட்ட கலக்கூட்டம் (fleet) ஒன்று ஈடுபடுத்தப்பட்டது. இந்நடவடிக்கையில் 170 கடற்புலிகளும் 24 கடற்கரும்புலிகளும் ஆக மொத்தம் 194 போராளிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வருண கிரண கடற்றடுப்பு வேலியை உடைக்க கடற்புலிகள் தம்மோடு பொருதிக்கொண்டிருந்த டோறா ஒன்றின் மீது கடற்கரும்புலித் தாக்குதலை குறித்த வைகறைப் பொழுதில் நடாத்தினர். பின்னர் ஏமக்கலங்கள் மீது கடற்புலிகள் தாக்குதலைத் தொடுக்க மேலும் 15 டோறாக் கடற்கலங்கள் திருமலையிலிருந்தும் யாழ் குடாவிலிருந்தும் துணைக்கு வந்து சேர்ந்தன. சிங்களக் கடற்படைக்கு உதவிக்கென சிங்கள வான்படையினரும் அவ்விடத்திற்கு விரைய பாரிய கடற் போரரங்காக விரிந்தது, அக்கடற்சமர். தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில் கப்பலைச் சுற்றி வளைத்தனர், கடற்புலிகள். அச்சமயம் இடியன் ஒன்று மோதியிடிப்பதற்காக 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' சொல்லிப் புறப்பட்டுச் சென்ற போது கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவசரக் கட்டளையாக இடியனை மோதியிடிக்காமல் பின்வாங்குமாறு அறிவுறுத்த மோதச் சென்ற இடியனும் கப்பலை ஒரு முறை சுற்றி வலம் வந்துவிட்டு பின்வாங்கியது. அப்போது தான் சிறிலங்காக் கடற்படையினர் வெளியுலகிற்கு அறிவிக்காமல் சிங்களப் படைத்துறையின் கடல் படைக்காவியில் தமக்குப் பாதுகாப்பாக தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகக் கொண்டுசெல்வது தெரியவந்தது. இலக்கை அழிக்காவிட்டாலும் பரவாயில்லை பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கடற்புலிகள் கப்பலைப் போகவிட்டனர். இத்தாக்குதல் மட்டும் அன்று வெற்றியடைந்திருதால் கட்டுநாயக்கா மீதான கரும்புலி நடவடிக்கை போன்று கடலிலும் உலகமே திரும்பிப் பார்க்க வல்லதொரு வரலாற்றுச் சாதனை படைத்திருப்பர். இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அதில் சென்ற படையினரை முற்றாக மீட்கும் வல்லமை சிங்களக் கடற்படையிடம் அப்போது இருக்கவில்லை. இக்கப்பாலானது கடற்கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து ஒரு மணிநேரம் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மேற்கொண்ட தொடர்ந்த சமரில் நண்பகல் 12:45 மணியளவில் நடாத்தப்பட்ட சேணேவித் தாக்குதலில் மற்றொரு டோறா மீளப்பாவிக்கேலாதளவு கடுமையாகச் சேதமடைந்தது. தொடர்ந்த சமரில் மேலும் 6 டோறாக்கள் சேதமடைந்தன. கடற்புலிகள் தரப்பில் ‘பரந்தாமன்’ என்ற கலப்பெயர் கொண்ட வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகின் கடையார் (இயந்திரப்பகுதி) தீ பற்றிக்கொண்டது. மாதவி படகும் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்து மீட்டெடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தீ அணைக்கப்பட்டது. செப்டெம்பர் 23 அன்று விடுதலைப் புலிகள் கடற்படையினரின் இந்த மனிதக்கேடயச் செயலை வன்மையாக கண்டித்ததுடன் பொதுமக்கள் யாரையும் படைத்துறைக் கப்பல்களில் போக்குவரவுச் செய்யவேண்டாம் என்று அறிவுரை கூறி கேட்டுக்கொண்டனர். நிகழ்வின் முழு விரிப்பு: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சேதப்பட்ட கடற்கலங்கள்: 7 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) - 6 கடற்கலப் பெயர்: எம்.வி. பிரைட் ஒஃவ் த சௌத் (MV Pride of the South) கல வகை: படைக்காவி படிமம்: படிமப்புரவு: Tamilnet சிறிலங்கா படைத்துறை ஆளணியினரில், கடற்படையினரில்: கொல்லப்பட்டோர்: 11-15 பேர் காணாமல் போனோர்: 7-18 பேர் (இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனரா இல்லையா என்பது பற்றித் தெரியவில்லை) தரைப்படையினரில் காயப்பட்டடோர்: 47-60 பேர் விடுதலைப்புலிகளின் ஆளணியினரில் காயமடைந்தோர்: 2 பேர் கடற்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: புனிதா (மட்டக்களப்பில் நடந்த சமரொன்றில் லெப். கேணல் தரநிலையில் வீரச்சாவடைந்தார் . இச்சமரில் இவர் தொலைத்தொடர்பாளராக பணியாற்றினார்) மற்றும் இன்னொரு போராளி வீரச்சாவடைந்தோர்: 10 பேர் கடற்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்: ‘கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர்’ லெப். கேணல் இரும்பொறை & (பெயர் அறியில்லா சண்டைப்படகின்) 'படகுக் கட்டளை அதிகாரி' லெப். கேணல் குமுதன், 'முதன்மைப் பொறியியலாளர்' மேஜர் சிவகாந்தன் எ தாஸ் எ காந், '23மிமீ சுடுகலன் முதன்மைச் சூட்டாளர்' மேஜர் நளன், '20மிமீ சுடுகலன் முதன்மைச் சூட்டாளர்' கப்டன் எழிலரசன், '25மிமீ சுடுகலன் சூட்டாளர்' லெப். திருவாணன் கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் அனோஜன் எ மாதவன், மேஜர் அருணா எ சுதா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி படிமங்கள்: தாக்குதலிற்குச் சென்ற ஏனைய கடற்கரும்புலிகளோடு (இடிக்காதோர்) லெப். கேணல் அனோஜனும் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியனும் தேசியத் தலைவருடன் உரையாடும் காட்சி | படிமப்புரவு: தவிபு பாவிக்கப்பட்ட சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: கவிர் ஆதாரம்: உதயன்: 17&18/09/2001 | தமிழ்நெற்: 16/09/2001 (Sea battle off Pt. Pedro), (Two Dvoras sunk, two damaged in clash), (Several killed, missing in naval clash) & 23/09/2001 (Tigers say SLN using civilians as human shield) | கட்டுரை: 'தமிழரை மனிதக் கேடயங்களாகப் பாவித்துத் தப்பித்த எம்வி பிரைட் ஒஃவ் சௌத்' | இத்தாக்குதலில் பங்குபெற்றிய புலிகளின் சண்டைப்படகொன்றின் கட்டளை அதிகாரி திரு புலவர் அவர்களின் வாக்குமூலம் திகதி: செப்டெம்பர் 23, 2001 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10 மணியளவில் தொடங்கி எற்பாடு வரை நீடித்தது நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 57 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வழக்கமான வலுச்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகள் மீது குறித்தக் கடற்பரப்பில் வைத்து மே 25 அன்று தொடங்கப்பட்ட 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) என்ற கடற்புலிகளின் ஆழ்கடல் ஆயுத வழங்கல் நடவடிக்கைகளை தடுக்கும் பாரிய கடல்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிங்களக் கடற்படையினர் வலிதாக்குதலில் ஈடுபட்டு மிண்டிய போது கடற்சமர் மூண்டது. சிங்களக் கடற்படைக்கு ஆதராவக சிங்கள வான்படையும் வந்து சேர்ந்தது. தொடர்ந்த கடற்சமரில் கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ள சிங்களவரின் டோறா ஒன்றை இடியன் அண்மித்த போது பகைச் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. இருந்தபோதிலும் டோறாவும் சிறிய சேதத்திற்குள்ளாகியது. கடற்புலிகள் எவ்விதச் சேதமுமின்றி கரை திரும்பினர். இங்கு கடற்சமர் வெடித்த இடத்திலிருந்து 15 கடல்மைல் தொலைவில் கடற்புலிகளின் இரு வணிகக் கப்பல்கள் போர்த்தளவாடங்களை இறக்கிவிட்டு திரும்பிச்சென்றுகொண்டிருப்பதை சிங்களக் கடற்படை கண்டதாம். சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 3 பேர் கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் நல்லமுத்து எ சிவாகரன், கப்டன் புவிமகள், ‘கடற்புலிகளின் மகளீர் பிரிவுத் துணைக் கட்டளையாளர்' லெப். கேணல் அமுதசுரபி (இவ இச்சமரில் காயமடைந்து பண்டுவம் பலனின்றி 26/10/2001 அன்று காயச்சாவடைந்தார்) கடற்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: மேஜர் திருமலை ஆதாரம்: உதயன்: 24&25/09/2001 | தமிழ்நெற்: 23/09/2001 (Tigers say SLN using civilians as human shield) திகதி: ஒக்டோபர் 5, 2001 அடிபாட்டுக் காலம்: காலை நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கரையிலிருந்து 9 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவல் சென்றுகொண்டிருந்த டோறாக் கலத்தை வழிமறித்து கடற்புலிகள் மேற்கொண்ட வலிதாக்குதலில் டோறா சேதமடைந்தது என்று உதயன் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பெருங்கடலிலிருந்து ஆயுதங்களை ஏற்றுக்கொண்டு வந்துகொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளை வழிமறித்துத் தாம் தாக்குதல் நடாத்தியதாக 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை மட்டக்களப்புக் கடலூடாக ஆயுதங்களை புலிகள் தரையிறக்கியதாக அதிகாரநிறைவு பாதுகாப்பு வட்டாரங்களை மேகோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரயிதழொன்று செய்தி வெளியிட்டிருப்பதாக உதயன் 15/10/2001 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டடோர்: 2 பேர் வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 6/10/2001 திகதி: ஒக்டோபர் 21, 2001 அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10:10 மணியளவில் தொடங்கியது நிகழ்வு இடம்: பருத்தித்துறைக்கு கிழக்கேயுள்ள ஆழ்கடல் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் வலுச்சேர்க்கும் நடவடிக்கையின் போது எரிபொருளை ஏற்றிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளுக்கும் மே 25 அன்று தொடங்கப்பட்ட 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) என்ற கடற்புலிகளின் ஆழ்கடல் ஆயுத வழங்கல் நடவடிக்கைகளை தடுக்கும் பாரிய கடல்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கும் இடையில் கடற்சமர் வெடித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகளின் ஆக்குறைந்தது ஒரு சண்டைப்படகாவது மூழ்கடிக்கப்பட்டது. இச்சமரில் கடற்கரும்புலிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். அவர் சண்டைப்படகில் பட்டறிவிற்காகப் பயணித்தவரா (கடற்கரும்புலிகள் கடற்சமர்கள் தொடர்பான பட்டறிவினைப் பெற இவ்வாறு சண்டைப்படகுகளில் செல்வதுண்டு) அல்லது இடியனில் சென்று மோதியிடிக்க முற்பட்ட போது பகைச்சூட்டிற்கு இடியன் இலக்காகிட இவர் வீரச்சாவடைந்தாரா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. கடற்படையின் டோறாக்களுக்கு சேதமேதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: 1 ஆள் (சிங்களக் கடற்படையின் தகவலின் படி) வீரச்சாவடைந்த போராளிகள்: 11 பேர் கடற்புலிகள்: 10 பேர் தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் செங்கண்ணன் எ கலாதரன், மேஜர் கொற்றவன், மேஜர் நீலவண்ணன், கப்டன் திருவாணன், லெப். தயாபரன் எ முரளி, லெப். நாவரசி, 2ம் லெப். விடுதலைவீரன், 2ம் லெப். தமிழ்வேங்கை, 2ம் லெப். கனிவிழி, 2ம் லெப். சுகனிலா கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: கப்டன் இளங்குயிலன் ஆதாரம்: உதயன்: 22/10/2001 | மாவீரர் பட்டியல் திகதி: ஒக்டோபர் 21, 2001 அடிபாட்டுக் காலம்: அறியில்லை நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: ஆழ்கடலில் நடந்த சமரிலிருந்து விலத்தி இவர்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்பினுள் நுழைந்த போது மீண்டும் சிங்களக் கடற்படையோடு முட்டுப்பட்டுக் கடற்சமரொன்று வெடித்தது. கடற்படையின் டோறாக்களுக்கோ ஆளணியினருக்கோ சேதமேதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இக்கடற்சமரில் கடற்புலிகளின் கடற்கலங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும் விரிப்புத் தெரியவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: அறியில்லை கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 9 பேர் தரநிலையுடனான பெயர்: லெப்.கேணல் கலாத்தன் எ செங்கண்ணன், கப்டன் ஈழப்பிரியன், கப்டன் நாவலன், லெப். புகழ்நம்பி, லெப். யாதவன், 2ம் லெப். கனிமதி, 2ம் லெப். சுபநிலா எ கலைநிலா, 2ம் லெப். மூவேந்தன், 2ம் லெப். தணிகைச்செல்வி ஆதாரம்:உதயன்: 22/10/2001 | மாவீரர் பட்டியல் | கட்டுரையாக்கப்பட்ட சிறப்புரை: மருதங்கேணியில் 21/10/2003 அன்று லெப். கேணல் கலாத்தன் நினைவு நூல்நிலையத் திறப்பு விழாவில் பிரிகேடியர் சூசை அவர்கள் உரைத்த சிறப்புரை. திகதி: ஒக்டோபர் 21, 2001 அடிபாட்டுக் காலம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:30 மணியளவு வரை நிகழ்வு இடம்: பருத்தித்துறைக்கு கிழக்கேயுள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களவரின் கடற்கலங்களை வழிமறித்துக் கடற்புலிகள் நடாத்திய வலிதாக்குதல். இக்கடற்சமரில் வழமை போன்று சிங்கள வான்படையும் சிங்களக் கடற்படைக்கு துணையாக வந்து எதிர் தாக்குதல் நடாத்தியது. சிங்களக் கடற்படையின் இரண்டு டோறாக் கடற்கலங்கள் சேதமடைந்தன. இவ்வலிதாக்குதலில் கடற்கரும்புலிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். அவர் மோதியிடிக்க முற்பட்டபோது வீரச்சாவடைந்தாரா அல்லது வேறெப்படியேனும் வீரச்சாவடைந்தாரா என்பது குறித்த தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் கடற்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் சிவா, கப்டன் செல்லப்பன், கப்டன் செந்தளிர், 2ம் லெப். புகழினியன் கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்: மேஜர் றோசா ஆதாரம்: உதயன்: 22/10/2001 திகதி: ஒக்டோபர் 30, 2001 அடிபாட்டுக் காலம்: எற்பாடு நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கரையிலிருந்து 17 கடல் மைல் தொலைவுக் கடற்பரப்பு கப்பல் மீது முதலாவது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:14 மணியளவில் கப்பல் மீது இரண்டாவது இடியன் மோதிய நேரம்: முதலாவது மோதியிடிப்பிலிருந்து 10 நிமிட இடைவெளியில் நிகழ்வு விரிப்பு: மக்களுக்கான எரிபொருளை ஏற்றிச்செல்கிறோம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் நிலைபெற்றுள்ள படையினருக்கான எரிபொருளை ஏற்றிக்கொண்டு திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி ஏமக் கடற்கலங்களோடு சென்று கொண்டிருந்த துன்கிந்த என்ற எரிபொருள் கப்பல் கடற்கரும்புலிகளால் மோதியிடிக்கப்பட்டு வெடித்து எரிந்தது. தாக்குதல் நடந்த சமயத்தில் கப்பலில் 16 கடற்படையினர் மற்றும் தரைப்படையினரும் 11 கப்பல் ஊழியரும் இருந்தனர். கடற்புலிகளின் துணையோடு வந்த கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை மேற்கொண்டனர். 750 இலிருந்து 1000 மெட்ரிக் தொன் அளவிலான எரிபொருளை ஏற்றிச்செல்ல வல்ல இக்கப்பலில் 120 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய், 225 மெட்ரிக் தொன் கந்தக டீசல், 275 மெட்ரிக் தொன் 'லங்கா ஓட்டோ' டீசல் ஆகியன ஏற்றப்பட்டிருந்தன. முதல் மோதியிடிப்பிற்குப் பின் சேதமடைந்த கப்பலை கடற்படையினர் மீட்க முயன்ற போது இரண்டாவது மோதியிடிப்பு நிகழ்ந்தது. இக்கப்பலின் மீதான கரும்புலித் தாக்குதலிற்குப் பின்னர் கப்பலில் நெருப்புப் பிடித்து கொழுந்துவிட்டு பின்னிரவு வரை எரிந்ததைப் பருத்தித்துறைக் கடற்கரையோரத்திலிருந்து கண்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இக்கப்பலின் தீ அணைக்கப்பட்டு காங்கேசன்துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதாக சிங்களப் படைத்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இத்தாக்குதலானது அதே ஆண்டு ஒக்டோபர் 2ம் திகதி முல்லைத்தீவிலிருந்த கடற்புலிகளின் தளம் ஒன்றின் மீதான சிங்களவரின் வான் தாக்குதலிற்குப் பழிக்குப்பழியாகவும் (இத்தாக்குதலில் கடற்புலிகள் தரப்பில் யாரும் வீரச்சாவடையவில்லை.) லெப். கேணல் கலாத்தனின் நினைவாகவும் மேற்கொள்ளப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர். வெடித்து எரிந்த (ஆனால் மூழ்கடிக்கப்படவில்லை) கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: துன்கிந்த கல வகை: எரிபொருள் தாங்கி படிமம்: படிமப்புரவு: shipspotting.com சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: இக்கப்பலிலிருந்தோரில் மூவரைக் காணவில்லை ஆனால் ஏனையோர் மீட்கப்பட்டுவிட்டனர் என்று சிங்களப் படைத்துறைப் பேச்சாளர் பிரி. சனத் கருணாரட்னேவும் எட்டுப் படைவீரர்கள் கொல்லப்பட்டதோடு பல கடற்கலவர் ஒழிந்தனர் என்று முதலாவது செய்திக் குறிப்பிலும் பல தரைப்படையினரும் கடற்படையினரும் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் வானொலி கூறியது என்று இரண்டாவது செய்திக் குறிப்பிலும் தமிழ்நெற் செய்தி வலைத்தளமுமென செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. காயப்பட்டடோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்: மேஜர் கடலரசன் எ சமுத்திரன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் எ கேசவி சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 வகுப்புப் பெயர்: கவிர் ஆதாரம்: உதயன்: 31/10/2001 | தமிழ்நெற்: 30/10/2001 (Sea Tiger attack in seas off Pt. Pedro), (Fuel ship sunk off Pt. Pedro - VoT) | பிபிசி ஆங்கிலம்: 31/101/2001 (Tamil Tigers claim tanker attack) ******
  8. ஆண்டு: 2000 திகதி: மார்ச் 6, 2000 அடிபாட்டுக் காலம்: சாமத்தில் மூன்று மணிநேரம் தொடர்ந்து நடந்தது நிகழ்வு இடம்: கொக்கிளாய் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புலிகளின் நான்கு படகுகளை கண்ட படையினர் அவற்றின் மீது வலிதாக்குதலை செய்ததையடுத்து கடற்சமர் வெடித்தது. இதில் புலிகளின் படகுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்பப்பட்டாலும் சேத விரிப்பு அறியில்லை. நான் சிங்களவரால் வெளியிடப்பட்ட தகவல்களை ஆவணத்தில் சேர்க்கவில்லை, அவை எப்பொழுதும் அள்ளுகொள்ளையாக காட்டப்படுவதால். சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள் (கிளை அறியில்லை): 12 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தவநாதன், மேஜர் குமரச்செல்வன் எ ராகுலன், மேஜர் அறிவுமங்கை, மேஜர் கிளிமொழி, கப்டன் ரஞ்சிதன், கப்டன் சுபநிலா, கப்டன் இருண்மொழி எ அருள்மொழி, கப்டன் பருதி எ கருணை, லெப். செங்கண்ணன் எ ஊரவன், லெப். திலாந்தன், 2ம் லெப். கலைத்தங்கன், வீரவேங்கை கேசவன் இவர்களில் ஆகக்குறைந்தது ஐந்து பேர் கடற்புலிகள் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். ஆதாரம்: உதயன்: 8 & 9/03/2000 | மாவீரர் பட்டியல் திகதி: மார்ச் 12, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை 7:30 மணியளவில் நிகழ்வு இடம்: நெடுந்தீவுக்கும் இரணைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: வலுச் சேர்க்கும் நடவடிக்கை (கடல் வழங்கல்) ஒன்றில் ஈடுபட்டிருந்த கடற்கரும்புலிகளை வழிமறித்த கடற்படைக்கும் கடற்கரும்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் தம்மால் இயன்றவரை சிங்களக் கடற்படையின் படகை தாக்கியழிக்கும் முயற்சியாக நெருங்கிச் சென்ற போது கடற்படையின் சூட்டில் இவர்களின் வள்ளம் வெடித்துச் சிதறியது. அதன் வெடிப்பினால் ஏற்பட்ட சிதறல்களால் கடற்படையின் டோறா ஒன்று சேதமடைந்தது. சேதப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: 4 பேர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மதன், மேஜர் பரதன், கப்டன் சுவேந்திரன் எ தினேஸ் ஆதாரம்: உதயன்: 14 & 16/03/2000 | மாவீரர் பட்டியல் | உயிராயுதம் பாகம்-8 திகதி: ஏப்ரல் 7, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியளவில் நிகழ்வு இடம்: நாகர்கோவில் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலிலிருந்த டோறாக்கள் புலிகளின் நாகர்கோவில் வலுவெதிர்ப்பு நிலைகள் (Defence points) மீது கடலிலிருந்தபடி தாக்குதல் நடாத்திக்கொண்டிருந்த வேளை கடற்புலிகளோடு முட்டுப்பட்டு மோதல் வெடித்தது. அப்போது நாகர்கோவில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணிப் போராளிகளில் சிலரான தமிழரசன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் "அப்பாச்சி" (107/105mm) என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட கனவகை படைக்கலனைக் கொண்டு முதலில் ஒரு சுப்பர் டோறா மீது சுட்டனர். சூடுபட்டு அது மூழ்கியது. அதன் கதி அறிய வந்த அடுத்த பேபி டோறாக்கும் அதே கதிதான். புலிகளின் சூட்டால் அதன் கலக்கூட்டில் ஓட்டை விழுந்து கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவிலுள்ள பிட்டி ஒன்றில் மோதி கடலில் ஓரளவிற்கு தாண்டது. தாண்ட பேபி டோறாவைக் கடற்புலிகள் கரைக்கு கட்டியிழுத்து வந்ததாக அறியப்படுகிறது. எதுயெப்படியாயினும் இவ்டோறா கரைக்குக் கொண்டுவரப்பட்டது/ கரைதட்டியது. அதிலிருந்தும் முதலில் மூழ்கியதிலிருந்தும் கடற்புலிகள் படைக்கலன்கள் மற்றும் ஏந்தனங்களைக் கழட்டியெடுத்தனர். இரு டோறாக்களிலுமாகச் சேர்ந்து மொத்தம் 35 பேர் மூழ்கியிருந்தனர். அவர்களில் 19 பேரே சிங்களக் கடற்படையால் மீட்கப்பட்டனர்; அங்கிருந்து பேருந்தில் பயணித்து வல்லிபுரக் கோவில் முகாம் நோக்கிச் சென்றார். 16 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு சிங்களப் படையினன் நீந்தி சென்று அம்பனில் கரைசேர்ந்தார். படிமங்கள்: மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: P-493 பேபி டோறா கடற்கல வகுப்புப் பெயர்: P-493 சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) படிமங்கள்: சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 16 பேர் காயப்பட்டோர்: ஆகக்குறைந்தது 1 ஆள் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 8, 9&10/04/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 7/04/2000 (Two Dvoras sunk -LTTE), (Dvora survivor swims ashore, helicopter hit), 9/04/2000 (Tigers list weapons taken from Dvoras) | கட்டுரை: " "தண்டனை எனக்கும்", தேசியத்தலைவரின் மகன் சாள்ஸின் வேண்டுகோள்" - அ.ம.இசைவழுதி திகதி: ஏப்ரல் 12, 2000 அடிபாட்டுக் காலம்: காலை 6:30 மணியளவில் நிகழ்வு இடம்: புத்தளம் முகத்துவாரத்திற்கு அப்பால் குதிரைமலையின் முனைக் கடற்பரப்பு (கற்பிட்டிக் கடற்பரப்பு) நிகழ்வு விரிப்பு: கற்பிட்டித் தளத்தில் ஊடுருவி தாக்குதல் நடாத்த முயன்ற அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவின் கட்டளையாளர் கப்டன் முத்துமணி காட்டிக்கொடுப்பால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவர் நகர்ந்த பரப்பு முசிலீம்கள் பெருவாரியாக வாழும் பரப்பாகும். அவரின் நினைவாக புகழரசன் கடற்கரும்புலிகள் அணியைச் சேர்ந்த கப்டன் வீரமணி அதே கற்பிட்டிக் கடலின் குறித்த பரப்பில் சுற்றுக்காவலில் வந்த வோட்டர் ஜெட் படகை இலக்கு வைத்து கரும்புலியாய்ச் சென்றார். கடற்புலிப் படகுக் கட்டளை அதிகாரிகளான அறிவு மற்றும் சோலைக்குமரன் ஆகியோரின் சண்டைப்படகுகள் வழிமறித்துத் தாக்க மீனவர் வேடத்திலிருந்த இவரின் படகு முன்னகர்ந்து சென்று பகைப் படகை மோதியிடித்து மூழ்கடித்து. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: 4 பேர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள் தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் வீரமணி கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: கட்டைப்படகு (Dinghy) ஆதாரம்: உதயன்: 13/04/2000 | தமிழ்நெற்: 12/04/2000 (SLN, Sea Tigers clash off Katpitty) | உயிராயுதம் பாகம் - 8 திகதி: சூன் 5, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை நிகழ்வு இடம்: வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடலில் நடைபெற்ற முறியடிப்புச் சமரின் போது இரு கடற்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டன. கடற்புலிகளின் படகொன்று கடும் சேதமடைந்து பின்னர் கட்டியிழுத்து வரப்பட்டது. நிகழ்வின் முழு விரிப்பு: (இவ்விரிப்பினுள் இரு டோறாக்கள் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் மூழ்கடிக்கப்பட்டது ஒரு டோறாவும் ஒரு றினிட்டி மறைனும் என்பது குறிப்பிடப்பட வேண்டியதுவாகும்.) மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்:2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா கடற்கல வகுப்புப் பெயர்: றினிட்டி மறைன் சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 15 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 13 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் ஆண்டான் எ சசிகரன், மேஜர் அமுதப்பிரியா, மேஜர் மதிவண்ணன், மேஜர் மருதா, கப்டன் ஜெயவதனி எ சோபனா, கப்டன் சத்தியரூபி கப்டன், இளஞ்சேரன், கப்டன் குயில்மாறன், கப்டன் சேசிகா லெப். மதிவதனன், லெப். குட்டிக்கண்ணன், 2ம் லெப். கலைமுகிலன், வீரவேங்கை மதியழகன் ஆதாரம்: மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/6/2000 (Two super-dvora gun boats sunk) திகதி: சூன் 26, 2000 அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணியளவில் தொடங்கி எட்டு மணிநேரம் நீடித்தது நிகழ்வு இடம்: பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் கப்பல் தொடரணியில் செல்லும் படைக்கலன்கள் ஏற்றிய கப்பலொன்றை அழிக்கும்படியான தலைவரின் கட்டளைக்கு கடற்புலிகள் செயல்வடிவம் கொடுத்த அடிபாடு இதுவாகும். கட்டளைக்கு ஏற்ப திட்டம் வகுத்து லெப். கேணல் பழனி தலைமையில் லெப். கேணல் ரஞ்சன், மற்றும் மேஜர் ஆழியன் ஆகியோரை படகு கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட 3 சண்டைப்படகுகளும் இவர்களோடு கடற்கரும்புலி மேஜர் சூரனைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட ஒரு வெள்ளை வகுப்புக் குண்டுப்படகில் கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானக்குமரன் மற்றும் மேஜர் சந்தனா மற்றும் இன்னும் இரு கடற்கரும்புலிகளும், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பனை கட்டளை அதிகாரியாகக் கொண்ட வெள்ளை வகுப்புக் குண்டுப்படகில் கடற்கரும்புலிகளான கப்டன் பாமினி மற்றும் கப்டன் இளமதி ஆகியோருமாக புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் எற்பாடு 3 மணிக்குப் புறப்பட்டுச் சென்று முல்லைத்தீவிற்கு உயர 60 கடல்மைல் தொலைவில் தரிபெற்றிருந்தனர். அப்போது கடலின் கடும் கொந்தளிப்பாலும் அதிகரித்து வீசிய கடற்காற்றின் வேகத்தாலும் படகுகளைச் சரியான இலக்கை நோக்கி நகர்த்துவது தடையாய் இருந்தது. ஆயினும் இதனைப் பொருட்படுத்தாது இரவுப்பொழுதில் இலக்கிற்காக காவலிருந்தனர் கடற்புலிகள். முடிவில், திருமலையிலிருந்து வந்துகொண்டிருந்த உகண கப்பலும் அதற்கான ஏம டோறக்களையும் சீரற்ற காலநிலையினையும் பொருட்படுத்தாது கடற்புலிகள் பின்தொடர்ந்து சென்று தாக்குதலைத் தொடங்கினர். அப்போது நேரம் சாமம் 1:30 மணியாகும். கடற்சமரின் ஒரு கட்டத்தில் மேஜர் ஆழியன் தனது சண்டைப்படகு மூலம் தாக்குதல் நடாத்தியபடி மேஜர் சூரனின் இடியனை கப்பலிற்கு அருகாமை வரை அழைத்துச் சென்றார். மோதுவிக்க முன்னர் மேஜர் ஆழியனின் படகில் இருந்த லெப். கேணல் சிலம்பரசன் பகைவரின் வலுவெதிர்ப்பு சற்றுத் தணிந்துகொண்டு செல்வதை அறிந்து மேஜர் சூரனின் இடியனில் இருந்த இரு கடற்கரும்புலிகளை நீரினுள் குத்திக்கும் படி கட்டளை வழங்குகிறார். அவர்களும் அப்படியே செய்தனர். பின்னர் இடியனை மோதும் படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இடியனின் தாக்குதலிற்குப் பின்னர் கப்பலிலிருந்து வலுவான சூடு கடற்புலிகளை நோக்கி ஏவல்செய்யப்பட்டது. ஆயினும் மேஜர் ஆழியன் அதற்கு முகம்கொடுத்தபடி தொடர்ந்து எதிர்த்தாக்குதலில் ஏடுபட்டார். அப்போது லெப். கேணல் பழனியும் லெப். கேணல் ரஞ்சனும் மேஜர் நல்லப்பனின் இடியனைக் கொண்டு சென்று மோதுவித்தனர். உடனே கப்பல் வெடித்துச் சிதறி அங்கேயே மூழ்கியது. சமரின் நடுவில் கடற்படையின் டோறா ஒன்றும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கு எதுவிதச் சேதமும் ஏற்படவில்லை. நீரினுள் குதித்த கடற்கரும்புலிகளை லெப். கேணல் சிலம்பரசன் தனது படகில் ஏற்றியபடி தளம் திரும்பினார். மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கலப் பெயர்: மெர்க்ஸ் உகண (Mercs Uhana) கல வகை: படைய வழங்கல் கப்பல் படிமம்: படிமப்புரவு: கப்பலில் பணிபுரிந்த ஒரு சிங்களவர் படிமப்புரவு: கப்பலில் பணிபுரிந்த ஒரு சிங்களவர் சேதமாக்கப்பட்ட (கடுமையாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 10 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் ஞானேஸ்வரன் எ ஞானக்குமார், மேஜர் சூரன், மேஜர் நல்லப்பன், மேஜர் சந்தனா, கப்டன் இளமதி, கப்டன் பாமினி. சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 2 கல வகை: வெள்ளை ஆதாரம்: மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 26/06/2000 (Arms ship destroyed - LTTE), (Ship hit in seas off Mullaithivu) | உயிராயுதம் பாகம்-8 | கட்டுரை: எம்.ரி. கொய் தண்டையல் கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசனின் வாழ்க்கை வரலாறு திகதி: செப்டெம்பர் 30, 2000 அடிபாட்டுக் காலம்: நண்பகல் நிகழ்வு இடம்: குதிரைமலைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் சிங்களக் கடற்படையின் டோறா ஒன்று கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. தாக்குதலிற்குப் பின்னர் அங்கு அனுப்பப்பட்ட மேலதிக சிங்களப் படகுகளால் மூழ்கிய கலத்திலிருந்து 7 சிங்களக் கடற்கலவர் காப்பாற்றப்பட்டனர். இக்கடற்சமரில் 2 சிங்களக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 2 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறுதிவரை கண்டுபிடிக்கப்பட்டவில்லை. ஆனால் இம்மோதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்பேதும் ஏற்படவில்லை. மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: 4 பேர் காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 1/10/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 30/09/2000 (Tigers sink FAC in Kalpity) திகதி: ஒக்டோபர் 19, 2000 அடிபாட்டுக் காலம்: இரவு நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பு நிகழ்வு விரிப்பு: சிங்களக் கடற்படையின் தகவலின் படி, வெற்றிலைக்கேணியை நோக்கி வந்துகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் கலத்தொகுதிக்கும் அங்கு சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கும் இடையில் வெடித்த கடற்சமர் இதுவாகும். கடற்சமர் பற்றி தவிபு ஒன்றும் கூறவில்லை. ஆனால் இம்மோதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்பேதும் ஏற்படவில்லை. சேதப்பட்ட கடற்கலங்கள்: 2 கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை கல வகை: படகுகள் (விதப்பான கல வகை அறியில்லை) சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை ஆதாரம்: உதயன்: 21/10/2000 | மாவீரர் பட்டியல் திகதி: ஒக்டோபர் 23, 2000 அடிபாட்டுக் காலம்: கடற்சமர்: வைகறை 5:30 மணியளவில் தொடங்கி மூன்று மணிநேரம் தொடர்ந்தது லிகினியா மற்றும் டோறா மீது இடியன்கள் மோதிய நேரம்: வைகறை 5:45 மணியளவில் தரைச்சமர்: எறிகணை வீச்சு: வைகறை 5 மணி சொச்சத்திலிருந்து கடற்சமரின் குறிப்பிட்ட காலம் வரை முற்றுகை உடைப்புச் சமர்: துல்லியமான காலம் அறியில்லை. ஆனால் எறிகணை வீசத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலையே தமது உந்துருளி சிறப்புப்படையினர் (BSF) அவ்விடத்திற்குச் சென்று புலிகளுடன் மிண்டினர் என்றும் அப்போது தம் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு 11 பேர் காயமடைந்தனர் என்று சிங்களம் தெரிவித்ததாக உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மோதல் இரவுவரை தொடர்ந்ததாகவும் உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை ஏவப்பட்ட நேரம்: சரியாக நண்பகல் 10:30 ஏவுகணை ஏவியவர்: இளம்புலி (ராதா விமான எதிர்ப்பு அணி) பாவிக்கப்பட்ட ஏவுகணை செலுத்தி: மேற்பரப்பிலிருந்து வான்நோக்கி ஏவும் ஏவுகணை - 14 (SAM-14) ஏவப்பட்ட இடம்: மார்பிள் கடற்கரையின் டயமன்ட் குன்றின் சாரலில் இருந்து ஏவி உப்பாற்றினுள் வீழ்த்தினார் நிகழ்வு இடம்: கடற்சமர்: திருமலைத் துறைமுகத்தினுள் தரைச்சமர்: எறிகணை வீச்சு: திருமலைத் துறைமுகம் மீது மார்பிள் கடற்கரையிலிருந்து கணையெக்கிகளால் (mortar) எறிகணை வீச்சு நடாத்தப்பட்டது முற்றுகை உடைப்பு: மார்பிள் கடற்கரையை அண்டிய கந்தளாய் ஊற்றுப் பரப்பு நிகழ்வு விரிப்பு: திருகோணமலைத் துறைமுகத்தினுள் கடற்கரும்புலிகளும் கடற்புலிகளும் புகுந்து மேற்கொண்ட தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலிற்காக ஆறு கடற்கரும்புலிகள் 4 கவிர் வகுப்புப் படகுகளில் மாவலி கங்கை ஆற்றிலிருந்து புறப்பட்டு திருமலைத் துறைமுகத்தை நோக்கிச் சென்றனர். அதே சமயம் நாவற்குடா மார்பிள் கடற்கரையிலிருந்து கணையெக்கிகள் மூலம் இனங்காணப்பட்ட திருமலை துறைமுக இலக்குகள் மீது எறிகணை வீச்சு நடாத்தப்பட்டது, திருமலைப் படையணியின் போராளிகளால். இந்தக் குழப்ப நிலையைப் பயன்படுத்தி வைகறை 5:30 மணியளவில் துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலி லெப். கேணல் இளங்கோ தலைமையிலான கடற்கரும்புலிகளும் பிறிதொரு இடத்திலிருந்து வந்திருந்த கடற்புலிகளும் சிங்களக் கடற்படையோடு மிண்டினர். கடற்சமரை லெப். கேணல் இரும்பொறை மாஸ்டர் வழிநடாத்தினார். வெடித்த கடற்சமரில் கடற்கரும்புலிகளின் இரு குண்டுப்படகுகள் "லிஹினியா" விரைவுப் படைக்காவி மீதும் ஒரு டோறாக் கலம் மீதும் வைகறை 5:45 மணியளவில் அடுத்தடுத்து மோதியிடித்து அவற்றை மூழ்கடித்தனர். கடற்சமர் தொடர்ந்து நடைபெற்றது. மூன்றாவது இடியன் உள்ளே வெடிக்க நான்காவது தளம் திரும்பியது. தொடர்ந்தும் கடற்றளம் மீது நடைபெற்றுக்கொண்டிருந்த எறிகணை வீச்சால் அங்கே தரிபெற்றிருந்த மேலும் ஒரு கலம் மூழ்கியது. அப்போது கடற்படைத்தளம் மீது எறிகணைகளை சரமாரியாக ஏவிக்கொண்டிருந்த திருமலை படையணிப் போராளிகள் நிலைகொண்டிருந்த மார்பிள் கடற்கரைக்கு அண்டிய கந்தளாய் ஊற்றுப் பரப்பை சுற்றிவளைத்த கடற்படையினர் மற்றும் தரைப்படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் கடும் சமர் மூண்டது. இச்சமரில் பொதுமக்கள் மூவர் காயமடைந்தனர். தரைச்சமருக்கு சூட்டாதரவு வழங்கவென வந்த எம்.ஐ. 24 வகை தாக்குதல் உலங்குவானூர்தி ராதா விமான எதிர்ப்பு அணிப் போராளி இளம்புலி அவர்களால் சரியாக நண்பகல் 10:30 மணியில் SAM-14 ஏவுகணை செலுத்தி மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது (இவ் ஏவுகணையின் வெற்றுக்கூடு தற்போது சிறிலங்காவிலுள்ள இரத்தினபுரி வான்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.). இதனை அவர் டயமன் குன்றின் சாரல் தரையைத் தொடும் இடத்திலிருந்து ஏவியிருந்தார். உலங்குவானூர்தியிலிருந்த நான்கு வான்படையினரும் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் 24ம் திகதி மட்டில் கடற்படை சுழியோடிகளால் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், சுற்றிவளைப்பை வெற்றிகரமாக உயிரிழப்பேதுமின்றி உடைத்துத் தளந்திரும்பியதாக தமிழர் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் மார்பிள் கடற்கரை மற்றும் அண்டிய பரப்புகளிலிருந்து தப்பியோடிய போராளிகளை சிங்களப் படையினர் பிடித்தாத்துடர்ந்த (pursue) போது 24ம் திகதி நாவற்குடாப் பரப்பில் குப்பி கடித்து வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்களையும் வகை-56 துமுக்கிகள் இரண்டையும் பல ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றினதோடு, மேலுமொருவர் குப்பி கடித்தபடி உயிர்காக்கப்பட்டு திருமலை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் படைத்தரப்பு தகவல் தெரிவித்துள்ளன. அவரிடமிருந்து நிகழ்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தாக்குதலின் போது புலிகளிடமிருந்து கைப்பற்றியதாக சிறிலங்காப் படைத்துறையானது கரும்புலிகள் மகாவலி கங்கை ஆற்றில் தமது கவிர் வகுப்புப் படகை ஓட்டும் காட்சி ஒன்றையும் புலிவீரனொருவன் வெறும்மேலுடன் ஒரு போர்த்தளவாடத்தை (வகை - 63 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்தியின் இரு குழல்கள் போன்று தென்படுகிறது.) தோளில் சுமந்த படி நடந்து செல்லும்படியான நிழற்படமொன்றையும் ஆதாரமாக வெளியிட்டிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் இவ்வாறொரு நிகழ்வு நடைபெற்றதாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இத்தாக்குதலினால் திருகோணமலை பட்டணமும் சூழலும் பரப்பில் கடும் பதற்றநிலை நிலவியதோடு நகரமும் அதிர்ந்தது. எறிகணைகள் மற்றும் அவற்றின் சிதறல்கள் நகரை அண்டிய குடியிருப்புகள் மீதும் வீழ்ந்தன. இதனால் மக்கள் திகிலடைந்தனர். இரவு வரை மார்பிள் கடற்கரை மற்றும் நாச்சிக்குடா பரப்புகளில் மோதல்கள் தொடர்ந்ததால் வெள்ளைமணல் மற்றும் நாச்சிக்குடா பரப்புகளிலிருந்து சுமார் 500 குடும்பங்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்ததாக அற்றை நாளே தகவல்கள் வெளியாகின. உப்பாற்று சுற்றுப்பரப்புகளிலிருந்து சுமார் 250 குடும்பங்கள் வெளியேறி ஆலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இடம்பெயந்த மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு திருமலைக் கோட்டச் செயலர் வேலும்மயிலும் நேரில்சென்று இடருதவிப் பணிகளை மேற்கொண்டார். 24ம் திகதி மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளுத் திரும்பினர். வான்காப்பு போராளி இளம்புலி அவர்களால் சுட்டுவீழ்த்தப்பட்ட எம்.ஐ.24 வித உலங்குவானூர்தியின் மீட்க்கப்பட்ட அழிபாடுகள். | படிமப்புரவு: உவர்மலை அருங்காட்சியகம் மார்பிள் கடற்கரையிலிருந்து தாக்குதல் மேற்கொண்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிகழ்படமாக சிறிலங்கா அரசு வெளியிட்டது: https://eelam.tv/watch/ம-வல-கங-க-ஆற-ற-ல-039-கவ-ர-039-வக-ப-ப-ப-படக-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html https://eelam.tv/watch/mi-24-ரக-த-க-க-தல-உலங-க-வ-ன-ர-த-ச-ட-ட-வ-ழ-த-தப-பட-ட-க-ட-ச_NsSLV9CHjoIY4Wu.html மூழ்கடிக்கப்பட்டு மேலெடுக்கப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கலப் பெயர்: லங்கா ராணி கடற்கல வகை: விரைவுப் படைக்காவி மூழ்கடிக்கப்பட்ட நிலையிலான படிமம்: கடையார் பகுதியில் இடியன் இடித்து பாதி மூழ்கியுள்ளது. | படிமப்புரவு: உவர்மலை அருங்காட்சியகம் படிமம்: 'மேலேடுக்கப்பட்டு திருத்தப்பட்ட பின்னர் கடலில் ஓடும் காட்சி | படிமப்புரவு: slnwwp' கடற்கலப் பெயர்: ரணஜய(Ranajaya) கடற்கல வகை: விரைவுச் சுடுகலப் படகு படிமம்: புலிகளின் அதிரடிக்காரர் ஏவிய உந்துகணை ஒன்று இதன் கடையாரில் பட்டு வெடித்ததில் கடையார் சேதமடைந்து, நீரில் மூழ்கி, பின்னர் மேலெடுக்கப்பட்டது. | படிமப்புரவு: உவர்மலை அருங்காட்சியகம் கடற்கலப் பெயர்: லிஹினியா (Lihiniya) கடற்கல வகை: விரைவுப் படைக்காவி படிமம்: 'கரும்புலி இடித்து மூழ்கடிக்கப்பட்டு பின்னர் மேலெடுக்கப்பட்டது | படிமப்புரவு: அறியில்லை' மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை துறைமுகக் கடற்சமரால் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில் (தொடக்கக் கட்ட அறிக்கையின் படி), கொல்லப்பட்டோர்: 2 பேர் காயப்பட்டோர்: 25 பேர் கந்தளாய் ஊற்று முற்றுகை உடைப்புச் சமரால் சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில் (ஒக்டோபர் 23, 2000 ஆம் ஆண்டு நண்பகல் 11:15 வரை - கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி), கொல்லப்பட்டோர்: 1 ஆள் காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் நித்தி எ சோழவேங்கை, மேஜர் மயூரன், மேஜர் திருமாறன் எ திருவாளவன், மேஜர் நிதர்சன், மேஜர் றோஸ்மன் எ கணேஸ், லெப்.கேணல் றெஜி எ இளங்கோ கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி படிமங்கள்: சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 3 கல வகை: கவிர் ஆதாரம்: உதயன்: 24,25,27 & 28/10/2000 | தமிழ்நெற்: 23/10/2000 (Massive assault on Trincomalee Harbour -LTTE), (Tigers destroy gunboat in Trincomalee SLN Yard), (Mi24 shot down, fighting on Marble Beach) | மாவீரர் பட்டியல் | navypedia: HANSAYA personnel transports (1983/1987) (http://www.navypedia.org/ships/sri_lanka/srl_ls_hansaya.htm) | உயிராயுதம் பாகம் - 9 திகதி: நவம்பர் 2, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை 9:45 மணியளவில் நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கரையிலிருந்து 71 கடல் மைல் தொலைவில் நிகழ்வு விரிப்பு: தொடர்ந்துகொண்டிருந்த விடுதலைப்போரிற்குத் தேவையான எரிபொருளை தொகையாகக் கொண்டுவருவதற்காக "பழனி" என்று பெயரிடப்பட்ட ஒரு எரிபொருள் தாங்கிப் படகு உள்நாட்டிலேயே கடற்புலிகளால் கட்டப்பட்டது. அது ஏமப்படகுகளின் (மகேஸ்வரி என்ற கலப்பெயர் கொண்ட வழங்கல் படகும் மூன்று சண்டைப்படகுகளும் கொண்ட கலத்தொகுதி ஒன்று) துணையோடு குறித்த ஆழ்கடலிற்குச் சென்று அங்கிருந்த தமிழீழ வணிகக் கப்பலிலிருந்து எரிபொருளை ஏற்றியபடி முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது கரையிலிருந்து 71 கடல் மைல் தொலைவில் இவர்களை சிங்களக் கடற்படையின் ஆழ்கடல் சுற்றுக்காவல் கலமான சுரணிமாலா (இசுரேலால் வழங்கப்பட்டது) வழிமறிக்க மோதல் வெடித்தது. அப்போது பழனி படகிலிருந்த கடற்கரும்புலிகளான லெப்.கேணல் பெத்தா, மேஜர் சதா, மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் வல்லவன் மற்றும் கடற்புலி லெப். கேணல் சதீஸ் ஆகியோர் தாங்கியின் பாதுகாப்பிற்குப் பொருத்தப்பட்டிருந்த படைக்கலனால் பகைக் கலத்தை நோக்கிச் சுட்டனர். ஆயினும் சூட்டுவலு கூடிய சிங்கள ஆழ்கடல் கலத்தின் சூட்டில் தமிழரின் எரிபொருள் தாங்கியால் நின்றுபிடிக்க இயலவில்லை. அதன் இயந்திரம் சேதமடைந்து நகராமல் கடலிலேயே நின்றுவிட்டது. இருந்தாலும் பின்னால் வந்துகொண்டிருந்த ஏனைய கடற்புலிப் படகுகள் சுரணிமாலாவின் முற்றுகையை உடைத்து பழனியின் கலக்குழுவினரை வழங்கல் படகான மகேஸ்வரியில் ஏற்றினர். இதன் பின்னர் 'பழனி'யின் தொழினுட்பம் பகைவரின் கையில் சிக்கக்கூடாது என்பதற்காக படகிலிருந்த எரிபொருளை எடுத்து படகு முழுவதும் ஊற்றி தன்னோடு சேர்த்துக் கொளுத்தி தானும் வீரச்சாவடைந்தார், பழனியின் தொலைத்தொடர்பாளரான கடற்கரும்புலி மேஜர் இலக்கியன். பேந்து புலிகளின் ஏமக் கலத்தொகுதி காயமடைந்திருந்த கடற்கரும்புலிகளோடும் கடற்புலிகளோடும் முல்லைத்தீவுக் கடற்புலிகளின் கடற்றளம் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது காங்கேசன்துறையிலிருந்தும் திருமையிலிருந்தும் 15 இற்கும் மேற்பட்ட சிங்களக் கடற்படையின் டோறாக்கள் திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளோடு பொருதினர். கடற்புலிகளின் கலத்தொகுதிக்கு ஆதரவாக முல்லைத்தீவிலிருந்து கடற்புலிகளின் மேலதிகச் சண்டைப்படகுகள் விரைந்து சென்று டோறாக்களின் மேல் தாக்குதலைத் தொடுக்க பாரிய கடற்சமர் வெடித்தது. தொடர்ந்த கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்றின் ஓட்டியான கடற்கரும்புலி லெப். கேணல் சல்மானும் வேறு சில போராளிகளும் வீரச்சாவடைய கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமுமடைந்தனர். கடற்படையின் வலிதாக்குதலை முறியடித்துக் கடற்புலிகளின் படகுகள் அனைத்தும் பின்னர் கரைசேர்ந்தன. சேதப்பட்ட கடற்கலங்கள்: 3 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: அறியில்லை காயப்பட்டோர்: அறியில்லை வீரச்சாவடைந்த போராளிகள்: 10 பேர் கடற்புலிகள்: 4 பேர் தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் சதீஸ் எ சதீஸ்குமார், மேஜர் குமரவேல், மேஜர் நிலவன், கப்டன் குமார் எ உயிரோவியன் கடற்கரும்புலிகள்: 6 பேர் தரநிலையுடனான பெயர்கள்: ‘கப்பல் தண்டையல்’ லெப்.கேணல் பெத்தா எ கதிர்காமரூபன், ‘சண்டைப்படகு ஓட்டி’ லெப்.கேணல் சல்மான் எ இரும்பொறை, மேஜர் சதா எ சதாசிவம், மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், 'இயந்திரப் பொறியியலாளர்' கப்டன் வல்லவன் படிமங்கள்: ஆதாரம்: உதயன்: 3/11/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (LTTE boat destroyed -SLN) | உயிராயுதம் பாகம்-9 திகதி: நவம்பர் 3, 2000 அடிபாட்டுக் காலம்: மாலை 7:45 மணியளவில் நிகழ்வு இடம்: திருமலைத் துறைமுக வாசலில் நிகழ்வு விரிப்பு: சம்பூர் கரையிலிருந்து புறப்பட்டுச் சென்ற இடியன் திருமலை துறைமுகத்தினுளிருந்து சுற்றுக்காவலிற்காக வெளியே வந்த டோறா மீது மோதி வெடித்ததில் டோறா சேதமடைந்தது. அவ்டோறா பின்னர் துறைமுகத்தினுள் கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1 கடற்கல வகுப்புப் பெயர்: டோறா சிறிலங்கா கடற்படை ஆளணியினரில், கொல்லப்பட்டோர்: பலர் காயப்பட்டோர்: பலர் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர் தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சுடர்மணி எ செங்கதிர், லெப்.கேணல் நரேஸ் கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள் படிமங்கள்: சக்கை வண்டிகள், எண்ணிக்கை: 1 கல வகை: கவிர் ஆதாரம்: உதயன்: 6/11/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (LTTE boat destroyed -SLN) ******

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.