எந்த பரா துருப்புக்களை இறக்கி சிங்கள ஆட்சியாளர்களை வழிக்கு கொண்டுவர இந்தியா முயற்சித்ததோ அதே பரா துருப்புக்களை இறக்கி தமிழர்களுடன் மோதவிட்ட ஜே.ஆர் எனப்படும் மனிதன் தமிழர்களை பொறுத்தவரை கொடூரன் குள்ளநரியாக இருந்தாலும் சிங்களவர்களை பொறுத்தமட்டில் ஐயத்திற்கு இடமின்றி அவர்களுக்கு அவன் ஒரு ராஜ(தந்திர)குமாரன் தான் .
என்னதான் எம் போராட்டவலு முற்று முழுதாக அழிந்து போனாலும், ஜே.ஆர் தலைமையில் தமிழர்களை ஒரு வழி பண்ண புறப்பட்ட ஜே.ஆர் உட்பட்ட ஏறக்குறைய அத்தனை அமைச்சர்களும் தம் வாழ்நாளில் சிங்களதேசமும் அவர்களின் ஏவல் படை தரப்பும் அடிவாங்கி அழிந்தத்தை தம் கண்முன்னால் பார்த்துவிட்டே இயற்கையாகவும் தாம் செய்த வினைகளை தாமே அறுத்து செயற்கையாகவும் அழிந்து போனார்கள்.
13 ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு தமிழர்கள்மேல் காடைதனத்தை கட்டவிழ்த்து ருத்ர தாண்டவமாடியவர்கள் அவர்கள் கொல்லப்படுவதை பார்த்து ரசித்து சிரித்து கேலி செய்தவர்கள் , பின்னாட்களில் அவர்களின் பல ஆயிரம் படையினர் கொல்லப்பட்டு காயப்பட்டு அவர்களை காவியபடி கொழும்பு நகர வீதிகளில் அம்புலன்சுகள் அலறியபடி செல்லும்போது இறைச்சி போகுது என்று தமது படையினரை தாமே கிண்டல் செய்தார்கள்.
எம் போராட்ட சக்தி முற்றாக அழிந்து போனதுதான் இருந்தாலும் கேட்க எவனும் இல்லையென்று தூக்கி போட்டு பந்தாடியவர்களை திருப்பி மிதி மிதியென்று மிதித்து மரண பயம் என்றால் என்னவென்று அவர்களுக்கும் காண்பித்துவிட்டே மறைந்தார்கள். அதில் ஒரு சிறு நிம்மதி