Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19670
    Posts
  2. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1866
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33811
    Posts
  4. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2197
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/13/23 in all areas

  1. பல விடயங்கள் மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப நிகழ்வதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனை மாற்றமில்லை, சிங்களவர்களின் சிந்தனை அப்போதிருந்தது போலவே இப்போதும் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் சிங்களவர்கள் மட்டுமல்ல அனைத்து மனிதர்களின் இயல்பு அது அதனால்தான் நிதிச்சந்தையில் Technical analysis நிகழ்வதற்கான வாய்ப்பு உருவாகிறது என கூறுகிறார்கள், கொள்கைகள் 18 வருட சுழற்சியில் இயங்குவதாக கூறுகிறார்கள்.
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 12 ஆகஸ்ட் 2023 ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் மற்றும் ஒரே ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினத்தை இஸ்ரோ தேர்வு செய்தது. அங்கு 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஏவுதளம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளத்திற்கு அருகில்தான் விண்வெளி தொழில் பூங்கா தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டினம் இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் தொடங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசினார். ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முன்பாகவே தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் வாலிநோக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES “கடந்த 1960களின் இறுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க தமிழ்நாடுதான் முதலில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதற்காக கீழக்கரை, சாயல்குடிக்கு அருகில் இருக்கும் வாலிநோக்கம் என்ற இடத்தில் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன். அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தவான் தலைமையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்பட பலர் அடங்கிய குழு அங்கு சென்று ஆய்வு செய்தது. "அங்கிருந்த தேவாலயத்தினரும் கிராம மக்களும் மாலை அணிவித்து வரவேற்றனர், ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஸ்ரீஹரிகோட்டா தேர்வு செய்யப்பட்டு அங்கு விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது,” என்று இளங்கோவன் தெரிவித்தார். குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்ந்தெடுத்தது குறித்துப் பேசும்போது அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக விஞ்ஞானி இளங்கோவன் தெரிவித்தார். அவை, "பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் விண்கலங்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து ஏவப்பட வேண்டும். அப்போதுதான் பூமியின் சுழல் வேகமான 0.5 கிமீ/செகண்ட் கூடுதலாக கிடைக்கும் (நமக்கு தேவை 8 கி மீ/செகண்ட்)," என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,BBELANGOVAN RAJAGOPALAN இவ்வாறு ஏவப்படும்போது ஒரு ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்று அவர் விளக்கினார். இந்தக் காரணத்திற்காக பல நாடுகள் வேறு கண்டங்களில் இருந்து கூட தங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகின்றன. "எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்கலங்கள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகின்றன. ஏவுகலங்களில் இருந்து பிரிந்து வரும் பாகங்கள் (உதாரணமாக சில பாகங்கள் ஏறக்குறைய 20 மீட்டர் நீளமும் 3 மீட்டர் விட்டமும் கொண்டவை) கடலில்தான் விழ வேண்டுமே தவிர மக்கள் வசிக்கும் நிலபரப்பின் மீது விழக்கூடாது. அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த விதி மிக முக்கியமானது," என்கிறார் விஞ்ஞானி இளங்கோவன். இந்த விதியை கருத்தில் கொண்டு, "ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை நாட்டின் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் ராக்கெட்டுகள் 'Dogleg maneuver' எனும் முறையில் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆனால், இந்த முறையில் ஏவும்போது எரிபொருள் அதிகமாக செலவாகும். எனவே புதிய ஏவுதளம் இலங்கை நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், எரிபொருளையும், செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்." அதுமட்டுமின்றி, ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30கி.மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் இளங்கோவன். மேலும், அந்தப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடிய பகுதியாக இருக்கக்கூடாது எனவும் புயல், மின்னல், மழையின் தாக்கமும் அங்கு குறைவாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். "தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம், மேலே சொன்ன அனைத்து அம்சங்களையும் கொண்ட ஓர் இடமாக உள்ளது. எனவே தான் இஸ்ரோ இதைத் தேர்வு செய்துள்ளது,” எனக் கூறினார். பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் பட மூலாதாரம்,BBELANGOVAN RAJAGOPALAN “ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும். அதோடு, ராக்கெட்டின் வேகத்தை நொடிக்கு அரை கிலோ மீட்டர் வீதம் அதிகரிக்க முடியும்,” என்று கூறுகிறார் மூத்த விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து. “வழக்கமாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை மீது பறந்துவிடாமல் இருக்க அல்லது ராக்கெட்டுகளில் இருந்து பிரிந்து விழும் பாகங்கள் இலங்கை மீது விழாமல் இருக்க, கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், தென் துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது. ஆனால், குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும்போது இந்த பிரச்னை எழாது. ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இது இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்கிறார் அவர். திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் இஞ்ஜினின் எரிபொருளான திரவ ஹைட்ரஜனும் கேரள மாநிலம் தும்பாவில் ராக்கெட் பாகங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES அங்கிருந்து வெகு தொலைவில், ஆந்திராவில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் கால தாமதம், பாதுகாப்பு பிரச்னை, கூடுதல் செலவு, சேதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், மகேந்திரகிரி மற்றும் தும்பாவுக்கு ஓரளவு அருகில் குலசேகரப்பட்டினம் இருப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படாது,” எனக் கூறினார். குலசேகரப்பட்டினம் சர்வதேச அளவில் கவனம் பெறும் “குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். குலசேகரப்பட்டினம் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம் பெறும்," என்று கூறுகிறார் நெல்லை சு. முத்து. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதே இஸ்ரோவின் திட்டம். சிறிய ரக ராக்கெட் பாகங்களை உருவாக்குவதும், ஒன்று சேர்த்து ஏவுவதும் எளிதானது என்பதால், "அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கான ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது மிகவும் முக்கியம்," என்கிறார் அவர். இதன் மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் "தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தகரீதியாக மிகப்பெரிய லாபம் அளிக்கும்,” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c843zmy0gpwo சிவப்பு குறியிட்ட பகுதி குலசேகரப்பட்டினம்.
  3. கஜன், விக்கி போன்றோரிடமும் பிரதேசவாதம் இருக்கலாம். எனவே செல்லாமல் இருந்திருக்கலாம். இன்றுவரை இவற்றிற்கு யாரும் சோனகர்களை நிர்ப்பந்தித்ததில்லை. இன்றுள்ள அரசியல்வியாதிகள் எதுவும் எதிர்காலத்திலும் செய்யப்போவதில்லை என்றே நினைக்கிறேன். செய்வதற்கு வக்குமில்லை. அப்படி இருந்திருந்தால் ஏற்கனவே செய்திருப்பாங்கள்! ஆவணப்படுத்த கண்டிப்பாக முயற்சிக்கிறேன். எல்லாம் PDF இலேயே உள்ளது. அதை OCR மூலம் எழுத்துருவிற்கு மாற்றத்தான் நேரமெடுக்கும். (ஆங்கிலத்திற்கு இலகு, ஆனால் தமிழிற்கு கடினம்) ------------------------------------------------------ யாழ்களத்திலையும் ஒராள் இருக்கிறார். அவர் சோனகர்🤡 என்றே எண்ணுகிறேன். கொஞ்ச மாதங்களுக்கு முன்னாலை அல்லா பற்றி பத்தியெரிஞ்ச திரியிலை வந்து குரானை நியாயப்படுத்தி வேண்டிக் கட்டிக்கொண்டு போனவர். 🤪
  4. இணைப்புகளுக்கு நன்றி சுவி.
  5. யாரோ ஒரு தெய்வாத்மா சிரிப்பு குறி வேற போட்டிருக்கு. குமுதினி படகுக்கு நிகரான படுகொலை. தலைவரின் படத்தை ஒட்டி நியாயம் கேட்பவர்களுக்கு, இது கண்ணுக்கும் புலப்படாது.
  6. சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனிதஜாதி .......! 😁
  7. முஸ்லீம் ஊர்காவல் படை என்று அழைக்கப்படும் காடையர்களால் செய்யப்படட அநியாயங்களில் இதுவும் ஒன்று.
  8. பாட்டு வரும் , உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்.......! 😍
  9. எச் எப் பாத்திமா nopsrSeotdtf43m62270a7:5cto18 a,19ic12i83167ûututul65l95 auu · வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது... வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள மலேசியா முன்னேறிவிட்டது... வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள டென்மார்க் முன்னேறிவிட்டது... வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது... வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது... வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள ஜப்பான் முன்னேறிவிட்டது... வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள அமெரிக்கா முன்னேறிவிட்டது... வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம் நம்பியுள்ள ரஷ்யாவும் முன்னேறிவிட்டது... இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும் தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,, நீர்வளம், நிலவளம், மலைவளம், வனவளம், விவசாயவளம், உற்பத்திவளம், இரத்தினக்கல் வளம், தேயிலை, தென்னை, நெல், அரிசி, இரப்பர், கோப்பி, கொக்கோ, கிராம்பு, மிளகு, ஏலம், போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம், வாழை, பலா, தூரியன், ராம்புட்டான், மெங்கூஷ் , அன்னாசி போன்ற கனிவளம், மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் முன்னேறவில்லை? சிந்தனைக்கு.......!
  10. Published By: DIGITAL DESK 3 12 AUG, 2023 | 08:29 PM இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வீரமுனை கிராமத்தில் உள்ள ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்து தஞ்சமடைந்திருந்த வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 55 பேர் 1990.08.12 அன்று இலங்கை இராணுவத்துடன் அந்தக் காலப்பகுதிகளில் சேர்ந்து இயங்கி வந்த ஊர்காவல் படையினரால் வெட்டியும், குறிப்பாக சிறுவர்கள் சுவற்றில் அடித்தும் கொல்லப்பட்டதாக கண்காளால் கண்ட கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், காயப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாட்சியங்களை அழிக்கும் நோக்குடன் காணாமலும் ஆக்கப்பபட்டதாகவும் உயிர் தப்பியவர்களால் கூறப்படுகின்றது. இன்றுடன் இந்த மக்கள் கொல்லப்பட்டு 33 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் இப்படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படாமல் இருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாக உரிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நலன்விரும்பிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறவேண்டும் என வலியுறுத்தி இன்றைய நாளில் (ஆவணி 12) வருடா வருடம் இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்திய வகையில் நினைவேந்தல்களை பல வகையான சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மேற்கொண்டு வருகின்றோம். எனவே, இலங்கை அரசாங்கமானது இவ்வாறான சம்பவங்களுக்கு முழுமையாக பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கின்று என்பதனை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த காலப்பகுதிகளில் இது போன்ற படுகொலைகள் தழிழர் பகுதிகளில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலை மற்றும் திருகோணமலை குமாரபுரம் படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கை நீதி மன்றங்களில் கண்கண்ட சாட்சியங்களுடன் வழக்கு தாக்கல்கள் மேற்கொண்ட போதும் உரிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் மறுக்கப்பட்ட வேதனையான சம்பவத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம். அதே போன்றே இன்றைய தினம் இம்மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆண்டு நினைவேந்தலினை மேற்கொள்ளப்பட்டது. எனவே, வீரமுனை படுகொலை நடந்து இன்று 33ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மீளவும் நீதிக்காக தங்களிடம் கோரிக்கை வைக்கிறோம். 01. இப்படுகொலை தொடர்பான வழக்கினை இலங்கை அரசாங்கமானது முன்னெடுக்க வேண்டும் 02. பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கப் பெற வேண்டும் 03. குற்றம் இழைத்தவர்களை நீதிக்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் 04. இம்மக்களின் தொடர் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் 05. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அதற்கான அரச தரப்பு முன்னெடுப்புகளை அறிவித்தல் வேண்டும். https://www.virakesari.lk/article/162218

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.