Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts
  2. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    4043
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1570
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/23/23 in Posts

  1. இது... "உக்ரைனா", "காஸா" வா... என்று தெரியவில்லை. ஆனால் காலத்திற்கு ஏற்ற புகைப்படம். வரைந்த ஓவியருக்கு பாராட்டுக்கள்.
  2. இன்பமான இரவிதுவே.........! 😍 (அருமையான பாடல்).
  3. எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வரலாற்றை நோக்கும் அவதானிகள். 1985 ஏப்ரலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதலிற்கும், 1987 ஓகஸ்டில் இந்திய இராணுவ வருகைக்கும் இடைப்பட்ட அந்தக் கனாக் காலத்தின் கதாநாயகன் கிட்டர், கிட்டண்ணா அல்லது கிட்டு மாமா தான். கேணல் கிட்டு ஒரு ஆளுமை என்றால் அவரைச் சூழு இருந்த அவரது அணியிலும் ஆளுமைகள் மிகுதியாகவே இருந்தார்கள். ரஹீம், ஜொனி, திலீபன், ஊத்தை ரவி, வாசு, கேடில்ஸ், சூசை என்ற பெயர்கள் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட நிஜ வாழ்க்கை நாயகர்களின் நாமமாகவே இருந்தது. மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் குரங்கோடு, கிட்டர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவார். கிட்டரின் குரங்கிற்கு பெயர் Bell. அந்தக் காலத்தில் இலங்கை விமானப்படை பாவித்த Bell ரக உலங்குவார்த்திகளின் பெயரையே கிட்டு தனது குரங்கிற்கும் வைத்திருந்தாராம். கட்டையான ஆள், தலையில் மொட்டை வேறு, ஆனால் அவர் தான் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி என்று சொன்னால் நம்பியே ஆகவேண்டும். ஆனையிறவு, பலாலி, கோட்டை, நாவற்குழி, பலாலி, காரைநகர், பருத்தித்துறை, என்று யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை இரண்டு வருடங்களிற்கு மேலாக முடக்கி வைத்து, யாழ்ப்பாணத்தை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, கிட்டுவின் காலத்தில் தான். கிட்டுவின் காலத்தில் தான், முதன்முறையாக சண்டையில் உயிரிழந்த இராணுவத்தின் உடலங்களை புலிகள் இராணுவத்திடம் நேரடியாக கையளித்தார்கள். தனியொருவராக ரஹீம் அந்த உடலங்களை லெப் கேணல் ஆனந்த வீரசேகரவிடமும் கப்டன் ஜெயந்த கொத்தலாவிடமும் சென்று கையளித்த கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கும். லெப் கேணல் ஆனந்த வீரசேகர, இராணுவத்தில் இருந்து விலகி பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டு விட்டார். அவரின் தம்பி தான் ஜெனிவாக்கு போய் இனவாதம் கக்கும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. தற்போதைய ஆட்சியில் சரத் வீரசேகர மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பாராளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அடிக்கடி மோதுபவர். விக்டர் விழுதான மன்னார் சண்டையில் சிறை பிடித்த சிப்பாய்களை வைத்து, முதன் முதலில் கைதிகள் பரிமாற்றம் நடந்ததும் கிட்டரின் காலத்தில் தான். அதுவும் மட்டக்களப்பு தளபதியாக இருந்து, இந்தியாவில் இருந்து வரும் போது கடலில் பிடிபட்டு, வேறு பெயரில் இலங்கைச் சிறையில் இருந்த அருணாவை, இலங்கை அரசை சாதுரியமாக ஏமாற்றி, கைதிகள் பரிமாற்றத்தில் மீட்டெடுத்த கதைகள் எல்லாம் கனாக் காலக் கதைகள் தான். அது ஒரு காலமடாப்பா... என்று அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அங்கலாய்த்து ஏங்கும் காலங்கள் அவை.. அது ஒரு கனாக்காலம்! Posted 24th November 2020 by Jude Prakash Labels: நினைவுகள் வரலாறு https://kanavuninaivu.blogspot.com/
  4. காசாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பெண் பணியாளர் இஸ்ரேலின் தாக்குதலில் குடும்பத்துடன் பலி Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 03:14 PM உலக சுகாதார பணியகம் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் தனது பெண் பணியாளர் டிமா அப்துல்இலத்தீவ் முகமட் அல்ஹாஜ்; கொல்லப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது. காசா நகரிலிருந்து இடம்பெயர்ந்து காசாவின் தென்பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்துவந்தவேளை இடம்பெற்ற குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளார் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குண்டுவீச்சின் காரணமாக டிமாவும் கணவரும் ஆறுமாத குழந்தையும் இரண்டு சகோதரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்த 50 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. ஓக்டோபர் ஏழாம் திகதி முதல் ஐநாவும் மனிதாபிமான சமூகமும் பலரை இழந்துள்ளன இன்று எல்லைகள் அற்ற வைத்தியர்கள அமைப்பு இரண்டு மருத்துவர்களை இழந்துள்ளது பாலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பு 108 பேரை இழந்துள்ளது இவர்கள் வெறுமனே பணியாளர்கள் இல்லை ஏனையவர்களின் சிறந்த வாழ்க்கைக்காக பணியாற்றியவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டிமாவின் மரணம் அர்த்தமற்ற இந்த யுத்தத்திற்கான மற்றுமொரு உதாரணம் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் வெளியேற்றப்படும்போதும் பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தங்கள் கரங்களில் அதிகாரங்களை வைத்துள்ளவர்களை இந்த மோதலை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள் கேட்டுக்கொள்கின்றோம்எனவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/169974

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.