Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    15827
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88827
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    39346
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33811
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/19/23 in Posts

  1. இந்த வருட மாவீரர் நாளில் துவாரகா எனும் பெயரில் கொள்கைப் பிரகடனம் செய்தவரையும், அவரை இயக்கும் சேரமான், அப்துல்லா, கிருபாகரன் போன்றோரையும் முட்டுக்கொடுக்கும் இன்பராசா, காசி ஆனந்தன், நெடுமாறன் போன்றோரையும் வெளிப்படையாகக் கண்டிக்க முடியாமல் உள்ளதே. தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருப்பதனாலா? அப்படி என்றால் இப்படியான நம்பிக்கையுள்ளவர்களைத்தான் இந்தக்கும்பல் குறிவைத்து செயற்படுகின்றது என்பது புரியவில்லையா?
  2. ஆம்லெட் போடுவதை வைத்து, கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு-ன்னு என்று கண்டுபிடிச்சிடலாங்க இதப் படிங்களேன் கணவன்: என்னம்மா! தொட்டுக்க இத்தன இருக்கும் போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க! வாம்மா.. வந்து உட்கார்,, எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! மனைவி: இருங்க.. உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க. அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க. அதுக்கு தான். இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம். ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! இன்னைக்கு ஸ்பெஷல்? மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க கணவன்: அவ்ளோதானா? மனைவி: முடியலைங்க! இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! சாப்பிடலாமா? மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன்! ஆம்லெட் போட்டுடறேன்! இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா இது? வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே. எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே? மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா? இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா இது? இத்துனூன்டு இருக்கு. முட்டைய கலக்க கூட இல்ல! அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க? மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க! இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! ஆஃபாயில் போட்டிருக்க? நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல? மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு! இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க! --------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா? இன்னைக்கு ஒன்னும் செய்யலையா? மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு! ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க! இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்? மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க! இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? அதாங்க.. நம்ம ஆளு (கணவன்) "என்னம்மா" என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ!! என்னம்மா இப்படி பண்றீங்களேம்ம்ம்ம்ம்ம்மா....
  3. "நான் தேடி அறிந்த வரையில்" இது உண்மையே. எனது வாய்வுக்களை நான் கீழே விடுகிறேன், வாசித்துப் பாருங்கள்.யே. அவர் நான்கு முகப்புப் படங்கள் வைத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. அதில் இரண்டு மட்டும் தான் என்னால் காணக்கூடியவாறு உள்ளது. ஏனைய இரண்டையும் பார்க்க முடியவில்லை. ஆகையால் அவற்றில் இரண்டு சேரமான் கொடுத்துள்ள மூன்றில் இரண்டாக இருக்கலாம் என்பது "என் துணிபு" மேலும் சோத்துமானின் திரைப்பிடிப்புகள் தொகுக்கப்பட்டவையாகத் தெரியவில்லை. அவை உண்மையானவையே. இதே போன்ற "Pray for Sri Lanka" முகப்புப் படங்களை தேடிப் பார்த்து அறிந்துகொண்டேன். இவை பொதுவெளியில் வெளியான பின்னர் இவர் அவற்றை தனது வேசுபுக்கில் மறைத்துள்ளார்/ நீக்கியுள்ளார் (எனது கண்காளல் அதனைக் காண முடியவில்லை.). அத்துடன் சேரமான் சொல்வது போல மே 19, 2016 அன்று இவர் உண்மையிலையே கேக் வெட்டி யாரோ ஒருவரினது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அதற்கான படங்களும் உள்ளன. மேலும் மேற்கண்ட நிகழ்படத்தில் அவரே வாக்குமூலம் ஒத்துக்கொண்ட பின்னர், இது பற்றி நாம் நோண்ட வேண்டியதில்லை. -------------------------------------------------------------------- சரி இப்போது சோத்துமான் இவற்றை வெளியிட வேண்டிய நோக்கம் என்ன? அவர் அதை அவ்வாறு வேசுபுக்கில் போட்டதால் ஒன்றும் பெரிதில்லை, எதையும் இழந்திடப் போவதுமில்லை. வெளிநாடுகளில் சிறிலங்காவின் கொடியை முகப்பில் போட்டு விட்டு மாவீரர் நாளிற்கு ஸ்ரேரஸ் போடும் பலரை எனக்குத் தெரியும் என்றெல்லாம் நான் முட்டுக்கொடுக்க மாட்டேன். சோத்துமான் இதனை இப்போது பரப்புவது எதற்கெனில், தான் பங்கு பற்றியுள்ள போலித் துவாரகா நாசத் திட்டம் தோல்வியில் சென்றதால் அதற்கு எதிராக வலுவான சாட்சியாக இருக்கும் இவரை ( இவரது மரபணு சோதனை என்பது மிக வலுவானது) கோதாவிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக மட்டுமே. இந்தப் படங்களை எம்மை ஆதரிக்க அல்லது பார்க்கத் தூண்டுவது என்பது தோல்வியில் உள்ள இத்திட்டத்திற்கான மெய்யானவர்கள் தரப்பின் வலுவான வலுவெதிர்பாக உள்ள இவரையும் இவரது மரபணு சோதனைக்குத் தயார் என்ற இவரது முடிவையும் இல்லாமல் செய்வதோ அல்லது அவ்வாறு ஏதேனும் நடைபெற்றால் இது போன்ற படங்கள் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்வதோ தான் சேரமானின் திட்டமாகும் என்பது என்னுடைய துணிபு. ஆகையால் நாம் இதனை அறிந்து இவருக்கு எதிராக எதையும் செய்யமல் இருத்தல் போலித் திட்டத்தை இல்லாதொழிக்கும் குறுகிய கால நன்மையைத் தரும் (ஆயினும் இவர்கள் இப்போலித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்பது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளில் இருந்து எம்மால் ஊகிக்கக்கூடியவாறு உள்ளது.). ஆயினும், இப்படங்களை அறிந்து வைத்துக்கொள்ளுதல் இவர் தொடர்பாக நாம் அறிந்து வைத்துக்கொள்ள உதவும்.
  4. எப்படி புரிய வைப்பதுனு புரியலையே
  5. நெடுமாறனுக்கும் காசி ஆனந்தனுக்கும் நாட்டு அச்சுறுத்தல்கள் இருக்கலாம். யார் கண்டார்? ஆனால் டென்மார்க்கில் வசிக்கும் அருணாவிற்கு அந்த சாத்தியம் குறைவு அல்லது இல்லை. எனவே அருணா அவர்கள் துவாரகா பற்றிய காணொளிக்கு ஒரு அறிக்கை அல்லது ஏதாவது தகவல்கள் சொல்லியே ஆக வேண்டும். ஈழ மக்கள் பிரச்சனை அவர்கள் வீட்டுப்பிரச்சனை அல்ல. வந்து கண்டது கிண்டது எல்லாத்தையும் உளறிப்போட்டு போவதற்கு...... நீங்கள் நேரடி தொடர்பில் இருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.
  6. போதமும் காணாத போதம் – 08 அபாயம் நெருங்கியதென அச்சப்பட்டு அசையாது நின்றான் சங்கன். கலவரத்தோடு உடல் வியர்த்து மூச்செறிந்தவன் சட்டென கருவறைக்குள் பதுங்கினான். அவனை விழிப்புற வைத்த சத்தம் சில நிமிடங்களிலேயே வெட்டுண்டது. அரிய விலங்கென மடிந்திருந்த தன்னுடலைத் தளர்த்தி விரித்தான். ஆறடி உயரமான ஆகிருதி. தலையுயர்த்தி எழுந்தான். வைரவர் விக்கிரகத்தை அடியோடு தகர்த்து அதனடியிலிருந்த தகடுகளை எடுத்தான். பழமையான ஐம்பொன் சிலைகளை ஈரச்சாக்கில் போட்டான். உண்டியலைப் பிளந்து நாணயங்களை மணல் நிரப்பப்பட்ட சிறிய பைக்குள் போட்டான். தாள் காசுகளை ஈரமான உள்ளாடைக்குள் சுருட்டி வைத்தான். தன்னுடைய தடயங்கள் ஏதேனும் விடுபட்டு இருக்கிறதாவென மீளாய்வு செய்தான். எதுவுமில்லை. காலடித்தடங்களையும் அழித்து கோவிலை விட்டு வெளியேறினான். எத்தனையோ களமுனைகளில் வேவு பார்த்து வென்ற கண்கள். எதிரியின் காலடி வரை ஊர்ந்து சென்று நோட்டமிட்ட தீர உடல். எத்தனையோ பகலிரவுகள் சடமென உருமாறி பகைவர் வழியில் அமைந்திருந்த வல்லபம் சங்கனுடையது. மனுஷ வாடையறியும் கூர் நாசி. பாம்பின் லாவகமாய் நிலம் நீந்தி மறைபவன். தேரைகள் மறைந்து கொள்ளும் இடுக்குகளில் கூட இருந்தான் என்பார்கள். எதிரின் தோல்வியைத் தீர்மானிக்கும் வேவுக்காரன். இயக்கத்தின் தலைவரால் பலமுறை கெளரவிக்கப்பட்டவன். தளபதிகளின் நேசன். சங்கன் பணியாற்றிய களமுனையில் எதிரிகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் அதிரடியாக முறியடிக்கப்பட்டன. மண்ணை அபகரிக்கும் வன்கவர் வெறியர்களுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் சங்கன் ஒரு சுருட்டை பாம்பு. அவனிருந்த இடத்தை யாரும் அறியார். எதிரிகளின் காலடிக்குள் மிதிபட்டும் மனுஷ பாவனை காட்டாமல் மரக்குத்தியென கிடந்தது தப்பியவன். அத்தனையும் தடயமற்று அழிந்து போயிற்றே என்று கலங்கிய கண்களையும் துடைக்காமல் சாக்குப்பையை சுருக்கிட்டு கட்டினான். பசி எரிந்து உளம் புகையும் ஏழ்மையின் வயிற்றில் துடிதுடிக்கும் புழுவான வாழ்வு சங்கனுக்கு நேர்ந்திருந்தது. கோவிலை விட்டு வெளியேறி கோபுரத்தை வணங்கினான். கற்பூரச் சட்டியில் இரண்டு பெட்டி காவடி கற்பூரத்தை வைத்துவிட்டு மெல்ல நடக்கத்தொடங்கினான். கொஞ்சத் தூரத்திலேயே அவனைத் தன்னுள் புகுத்தியது இருள். அதிகாலையிலேயே வைரவர் கோவில் பூசாரியின் ஓலம் சனங்களை அழைத்தது. ஐம்பொன் சிலைகள், தகடுகள், உண்டியலென ஒன்றும் மிச்சமில்லாமல் துடைத்து வழிக்கப்பட்டிருந்தது. சூறையில் வேர் பிளந்து தரைவிழுந்த மரமென கருவறை விக்கிரகம் தூக்கி வீசப்பட்டிருந்தது. சனங்கள் மண்ணைவாரி தம்மிலடித்துக் கொண்டனர். “எங்கட ஊர்க்காரன் வைரவரில கை வைச்சிருக்க மாட்டான். கேணியடிக்காரர்கள் தான் வேலையைக் காட்டியிருக்கினம்” முதல் அனுமானத்தைச் சொன்னார் செல்லையா. “அண்ணா என்னவாய் இருந்தாலும் பொலிஸ்ல போ கேஸ் குடுப்பம். அதுதான் முறையாய் இருக்கும்” என்றவர் கொக்குவில் மாமா. “இவ்வளவு சண்டைக்குள்ள தப்பி, கஷ்டப்பட்டு திரும்பவும் ஊருக்கு வந்தோமெண்டு நினைச்சு கோயிலை புனரமைப்புச் செய்தால், களவெடுத்துக் கொண்டு போறாங்களே” என்றனர் ஊர்ப்பெண்கள். “இப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள். கேணியடி ஊருக்குள்ள புகுந்து ஒவ்வொருத்தனையும் பழி சொல்லி அடிக்கப் போறியளோ” என்று குரல் உயர்த்தினார் விநாயகம். “முதலில கேஸ் குடுக்கலாம். வெளிக்கிடுங்கோ” அழுத்தமாகச் சொன்னார் கொக்குவில் மாமா. “எல்லாத் துன்பத்துக்கும் இவங்கள் தான் காரணம். இவங்களிட்ட போய் நிண்டு எங்கட தெய்வத்தோட சிலை களவு போட்டுதெண்டு முறைப்பாடு கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்றார் செல்லையா. “நீங்கள் சொல்றதெல்லாம் நூறுவிதம் சரிதான், ஆனால் வேற என்னதான் வழி. தொடர்ந்து களவு கொடுத்திட்டு இருக்கேலுமோ” கொக்குவில் மாமா கேட்டார். “நாட்டைப் பறிச்சு வைச்சிருக்கிறவனிட்ட போய், கோயிலில களவு போச்செண்டு சொல்லுறதோ” செல்லையாவின் பதில் கேள்வியில் கோபம் அதிகரித்திருந்தது. ஒரு வெள்ளைத்துணியில் சில்லறையை முடிந்து கோவில் வாசலில் கட்டிய செல்லையா “இந்த அநியாயத்த செய்தவன் எவனாயிருந்தாலும், இன்னும் ரெண்டு நாளில இங்க வந்து நிப்பான். வைரவர் பொல்லாதவர். அவற்ற கோபத்துக்கு ஆளானால் அவன்ர குலம் தழைக்காது” என்றார். சில நாட்களிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வர குருக்கள் வரவழைக்கப்பட்டார். விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. களவாடியவனே விரைவில் எல்லாப் பொருட்களையும் கொண்டு வந்து ஒப்படைப்பான் என அருள் வாக்கு சொன்னார் பூசாரி. சனங்களும் அப்படி நிகழவேண்டுமென விரும்பினர். சங்கன் திருடிய பொருட்களை முந்திரித் தோப்பொன்றில் புதைத்து வைப்பது வழக்கம். ஏற்கனவே தாமரைக்குள முருகன் கோவிலில் திருடிய தங்க வேல் ஒன்றும் அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வியாபாரப் பேரம் சரியாகப் படியவில்லை. பத்தர் காந்தியோடு மல்லுக்கு நின்றான். “இந்த வேல உருக்கி தங்கக்கட்டியா மாத்திறத்துக்கு எனக்கு கூலி வேண்டாமடாப்பா, ஆனால் நான் சொல்ற விலைக்கு தா” “பத்தரே, நான் சொல்றது தான் காசு. உங்களால வாங்க முடியுமா, முடியாதாவெண்டு சொல்லுங்கோ. எனக்கு உங்கட கூலி இனாமெல்லாம் வேண்டாம்” “உனக்கு உதவி செய்ய இஞ்ச வேற ஆருமில்லை. என்னைத் தவிர எந்தப் பத்தனும் இந்த வேலைக்கு துணிய மாட்டான். விளங்கி நட” “பத்தரே, கரட்டி ஓணான் வெருட்டி**க்குமாம். நீங்கள் அதுக்குத் தான் முயற்சிக்கிறியள். அது என்னட்ட சரிவராது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனான். ஐம்பொன் சிலைகளையும் தகடுகளையும் புதைத்துவிட்டு, சில்லறைகளை எண்ணி முடித்தான். இரண்டாயிரத்து நான்கு ரூபாய் இருந்தது. முந்திரித் தோப்பிலிருந்து வீட்டுக்கு போகிற வழியிலிருந்த முருகன் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் குற்றியை இட்டு கும்பிட்டான். “முருகனே, நான் செய்யிறது பிழை தான். ஆனால் வேற என்ன செய்ய ஏலும் சொல்லு. இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ, உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை. என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று உன்திரு வடியை உறுதியென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க” என்று பாடிக்கொண்டான். எதிர்ப்பட்ட எல்லோரும் சங்கனைப் பார்த்து அகமகிழ்ந்து புன்னகைத்தனர். “சங்கன் நாளைக்கு ஒரு கிணறு வெட்டிருக்கு வாறியோ” வழிமறித்த கிளியனிடம் வருகிறேன் என்றான். கொக்குவில் மாமா பொலிஸ் ஸ்டேசனில் முறைப்பாடு கொடுத்தார். கோவிலில் களவாடியவனை பிடித்து தரவேண்டுமென ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் கடிதம் எழுதி அளித்தார். இவ்வளவு தாமதமாக வந்து முறைப்பாடு தந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியுமென பொலிஸ் ஆவேசம் கொண்டது. “தெய்வம் பிடிச்சுத் தருமெண்டு வெயிட் பண்ணினாங்கள். அது நடக்கேல்ல, அதுதான் உங்களிட்ட வந்திருக்கிறம்” என்றார். பொலிஸ்காரர்கள் புல்லரித்துப் போனார்கள். கண்டிப்பாக அவனை கைது செய்துவிடுவோமென சிலர் நம்பிக்கையளித்தனர். இந்தச் செய்தியை ஊர்முழுவதும் தேநீரோடு பருகியது. சங்கன் எல்லாவற்றையும் அவதானிக்கத் தவறுவதில்லை. வீட்டு முற்றத்தில் மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலின் கையில் லேசாக அடித்து நெஞ்சோடு தூக்கி அணைத்தான். சமையலிலிருந்த மலரினி வெளியே வந்து உங்கட மோளுக்கு ஒரு லோட் மண் வாங்கினால், இருபது வயசு மட்டும் சாப்பிடக் காணும்” என்றாள். வீட்டுக்குப் பின்னாலிருந்த சிறிய கொட்டிலில் இரண்டு போதல்களில் கள்ளு இருந்தது. பொரித்த சூடை மீனோடு கள்ளைக் குடித்து முடித்து அங்கேயே உறக்கம் கொண்டான். மலரினியும் சங்கனும் போராளிகளாக இருந்தவர்கள். ஒரே களமுனையில் சந்தித்துக் கொண்டவர்கள். வேவு அணிக்கு தலைமை தாங்கிய சங்கன் களமுனையிலுள்ள ஏனைய படையணிகளுக்கு வழங்கிய தகவல்கள் மாபெரும் வெற்றிகளை அளித்தது. மலரினி மகளிர் படையணியொன்றின் முக்கியமான தாக்குதல் அணித்தலைவியாக இருந்தாள். நிலமும் பனையும், களமும் சேனையும் சொந்தமாகவிருந்த நாட்களில் இருவரும் காதல் உறவெய்தினர். பின்னர் எல்லாமும் கானலெனக் கலைந்தவொரு காலத்தில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். போராளிகளாகவிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பு திருமணம் செய்தனர். முதற்குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் வந்துதித்த பெண் குழந்தைக்கு நந்திக்கடல் என்று பெயர் சூட்டினான் சங்கன். பல்வேறு களவுச் சம்பவங்களை ஆராய்ந்து பொலிஸ் தேடுதலை நடத்தியது. கோவிலில் நிகழ்த்தப்படும் களவுகளில் மட்டுமே எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லையென ஒரு சிறந்த புள்ளியை இனங்கண்டார்கள். திறமையாக திட்டமிடப்பட்டு ஒரு குழுவால் செய்யப்படுவதாக உத்தேசித்தார்கள். தடயமில்லாத ஒன்றின் பின்னால் பயணிக்க இயலாது. அது ஒன்றாகவோ நூறாகவோ கூட இருக்கலாம். பொலிஸ் கைவிரித்தது. எங்கும் பிடி கிடைக்காமல் துருவித் துருவி விசாரித்தனர். சங்கன் கூலி வேலைக்குச் சென்றான். கிணறு வெட்டுவது உடல் வருத்தும் பணி. தசை தசையாக நோவெழும். வயிறு முட்ட கள்ளுக் குடித்தாலும் அலுப்புத் தீராது. இன்று வேலை முடிந்ததும், நேராக பத்தர் ஒருவரைப் பார்க்கச் செல்ல வேண்டும். இவனோடு இயக்கத்தில் இருந்த தோழமை. இப்போது வட்டக்கச்சியில் இருக்கிறான். பொன்னுருக்கும் கூடம் வைத்து சின்னச் சின்ன வேலைகள் செய்வதாக அறிந்திருந்தான். ஒருதடவை சென்று அவனிடம் கதைத்துப் பார்க்கலாமென சங்கனுக்குத் தோன்றியது. வட்டக்கச்சியிலுள்ள வெத்திலை பத்தரின் வீடு தேடிக் கண்டுபிடித்தான். உள்ளே இரண்டு நாய்கள் கட்டப்பட்டிருந்தன. வெளியே நின்று பட்டாம்பூச்சி என்று அழைத்தான் சங்கன். இரண்டு கைகளுமில்லாது வீட்டு வாசலில் வந்து நின்றவொரு உருவம் “நீங்கள் ஆர்” என்று கேட்டது. சங்கனால் அந்தக் குரலை உணர முடிந்தது. “பட்டாம்பூச்சி நான் வியட்நாம். உந்த நாயளைப் பிடி மச்சான்” என்றான். அந்த உருவம் அற்புதமொன்றைக் கண்டதைப் போல திகைப்படைந்து சங்கனை நோக்கி ஓடிவந்தது. அப்போதுதான் பட்டாம்பூச்சியின் முகத்தைப் பார்த்தான் சங்கன். தீக்காயத்தின் தழும்பு மெழுகெனவிருந்தது. கண்கள் எரியும் திரியென சிவந்திருந்தன. வெறிகொண்ட சூனியம் தங்கிய மேனி. “பட்டாம்பூச்சி நாயளைப் பிடி, நான் வியட்நாம்” என்றான். பட்டாம்பூச்சி நாய்களை விரட்டினான். உள்ளே வாங்கோ என்பதைப் போல ஒரு தலையசைப்பு. சங்கன் அவனைக் கட்டித்தழுவினான். பட்டாம்பூச்சி பெருங்குரலெடுத்து விம்மி அழுதான். “ஏன் மச்சான் இப்பிடி குழந்தையள் மாதிரி அழுகிறாய், அழாதே” என்றான். “நீ வீரச்சாவு எண்டு கேள்விப்பட்டனான். அதுவும் ஆனந்தபுரம் பொக்சில. அங்க நிண்டனியோ” பட்டாம்பூச்சி கேட்டான். “நீ கேள்விப்பட்ட மாதிரியே வீரச்சாவு அடைஞ்சிருக்கலாம். ஆனால் இப்ப கிடந்தது உத்தரிக்க வேண்டியிருக்கு” “இயக்கத்திலையும் சரி, சாவிலையும் சரி முடிவு நாங்கள் எடுக்க ஏலாது. ஏற்கனவே எழுதின தாளில கோடுபோட முடியாதெல்லே” “டேய், பட்டாம்பூச்சி தத்துவம் கதைக்கிறது இன்னும் குறையேல்ல. நீ எங்க காயப்பட்டனி. இப்படி எரிஞ்சு போய் இருக்கு” தன்னுடைய இல்லாத கைகளின் மீதத்தைக் காட்டி “இது ரெண்டும் மாத்தளனில போனது. அதுக்குப் பிறகு மெடிஸ்ல இருந்தனான். அங்க பொஸ்பரஸ் குண்டு முகத்தை எரிச்சுப்போட்டுது” “இப்ப முந்திய விட நல்ல வடிவாய் இருக்கிறாய் மச்சான்” “ஓமடா, வெளிநாட்டில தான் கலியாணம் பார்க்கினம். போட்டோவ பார்த்த ஒரு பிள்ளையும் நீ சொன்ன மாதிரி சொல்லுதில்லை.” “ஏன் இஞ்ச இருக்கிற பிள்ளையை நீ கலியாணம் செய்ய மாட்டியோ. உனக்குத் தானே தொழிலிருக்கு” “இப்ப என்ர முடிவுகளை நான் எடுக்கிறதில்லை. நான் எடுத்த முடிவுகள் முள்ளிவாய்க்காலோட முடிஞ்சுது. இனிமேல் அக்காமார் சொல்றத கேட்டு நடப்பம்” “அதுசரி, உன்னட்ட ஒரு விஷயம் சொல்லவேணும். அது எங்கட இயக்க ரகசியத்துக்கு ஒப்பானது. நீ ஆரிட்டையும் சொல்லமாட்டேன் என்றால் சொல்லுகிறேன்” “வியட்நாம் எனக்கு எந்த ரகசியமும் நீ சொல்ல வேண்டாம். நான் அதை வைச்சு என்ன செய்யேலும் சொல்லு” “இல்ல,நீ எனக்கொரு உதவி செய்ய வேணும். அது உன்னால மட்டும் தான் முடியும்” “எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்ல. சரி என்ன விஷயம் சொல்லு” சங்கன் எல்லாவற்றையும் சொல்லி இறுதியில் “அந்த வேல் இப்பவும் என்னட்டத் தான் இருக்கு. நீ உருக்கித் தரவேணும். எங்களை மாதிரியிருந்து இண்டைக்கு கஷ்டப்படுகிற ஆக்கள் நிறையப் பேர் இருக்கினம். அவையளுக்கு பிரிச்சு குடுக்கலாம்” என்றான். பட்டாம்பூச்சி சரியென்று தலையசைத்தான். மூன்று நாட்கள் கழித்து அதனை எடுத்துவரும்படி சொன்னான். சங்கன் சந்தோசத்தோடு விடைபெற்றுச் சென்றான். மழையும் மின்னலும் இரவில் விழுந்தன. சங்கன் நனைந்து நடுங்கியபடி நெருப்புக்குச்சியைத் தட்ட முயற்சித்தான். சிறுஞ்சுடர் அணிந்த அவளது கண்கள் சங்கனைப் பார்த்தது. அவளது கழுத்தில் அணியப்பட்டிருந்த அலங்கார நகையைக் கழற்றி பையில் போட்டான். கைகளைத் துடைத்து மீண்டுமொருமுறை நெருப்புக்குச்சியைத் தட்டினான். அம்மன் முகத்தில் மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது. சங்கன் அவளது நெற்றியில் குங்குமமிட்டு வணங்கினான். கையில் கிடைத்த ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றி அங்கிருந்து வெளியேறினான். கோவிலின் வெளிப்புற கதவடியில் கறுப்பு நிறச்சேலை அணிந்த குமரியொருத்தி ஆங்காரமாய் சங்கனை இடை மறித்தாள். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. எடுத்தவற்றையெல்லாம் என் கழுத்தில் அணிவித்து உன் உயிரைக் காப்பாற்று என்றாள். “நீ ஆர், உனக்கேன் அணியவேண்டும்” “நான் தெய்வம். உன்னைக் காத்து நிற்கும் தெய்வம்” “சமாதானத்துக்கான யுத்தம், நல்லிணக்கத்திற்கான அரசு, போர்க்குற்ற உள்ளக விசாரணை போல காத்து நிற்கும் தெய்வம், எவ்வளவு பெரிய பம்மாத்து. சனியனே தள்ளி நில்” என்று சுட்டியலை எடுத்து ஓங்கிய சங்கனைக் கண்டு தெய்வம் மறைந்தது. மின்னல் விழுந்தது. இடி முழங்கிற்று. எப்போதும் போல் காற்றின் அரவம் அன்றில்லை. சங்கன் முந்திரித் தோப்புக்குள் நுழைந்து மண்ணைத் தோண்டி நகையையும் சிலைகளையும் புதைக்க ஆயத்தமானான். அப்போது மின்னல் வெளிச்சமொன்று பூமியில் விழுந்தது. அவனின் முன்னே ஓருருவம் நிற்பதைப் போல எண்ணினான். வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகத்தைக் கண்டான். ஒளிதுலங்கிய கண்கள். விடுதலையின் கனல் சுமந்த நிமிர்வின் மேய்ப்பன். கம்பீரத்தின் ஞானம் தரித்தவன். திகைப்புக்கும் மிரட்சிக்கும் உள்ளாகிய சங்கன் “தெய்வமே எங்களை ஏன் கைவிட்டாய்” என்று எழுந்தோடிப் போனான். அவனை இறுக அணைத்தபடி அந்த உருவம் சொல்லிற்று. “ஒரு மகத்தான தோல்வியைக் கூடத் தராது யுத்தம் தான் எங்களை கைவிட்டது. இதன்பொருட்டு என்னோடு பொருதாதே இளையவனே” மீண்டும் ஒரு இடி மின்னல். சங்கனை அணைத்த உருவம் அப்போதில்லை. முந்திரித்தோட்டம் முழுதும் சுழன்று பார்த்தான் எவருமில்லை. எடுத்து வந்த பொருட்களை புதைத்தான். அங்கிருந்து வீட்டுக்கு நடக்கலானான். அந்தப் பேரிருளிலும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “தெய்வம் எங்களைக் கைவிடாது” என்றான். நந்திக்கடல் தனது கைகளில் கிடந்த மண்ணை சீற்றம் கொண்டு குருதியால் துருப்பிடித்த இரவின் முகத்தில் எத்தினாள். https://akaramuthalvan.com/?p=1335
  7. பாறையில் பூத்த மலர்கள்......! 😂
  8. மித்துஜாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றெல்லாம் உருட்டிப் பிரட்ட வேண்டாம். ஆதரிக்கவில்லையெனில் வந்தது போலி என்று எழுதுங்கள் பார்க்கலாம். இஸ்ரேல் ஒரு வல்லரசான அங்கீகரிக்கப்பட்ட நாடு. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சிம்ம சொப்பனம். எனக்குப் பிடித்த நாடு. ஆகையால் நான் போடபோகிறேன் என்றேன். இதில் தப்பேதும் இல்லை. தலைவரை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்றுவிட்டு வீரச்சாவடைந்த தலைவரையும் அன்னாரின் குடும்பத்தினரையும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கூவித் திரிவதேன்? ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?
  9. அவர் எப்படியாவது இருந்திட்டுப்போகட்டும்.. அவர் என்ன தான் தான் பிரபாகரன் அல்லது துவாரக என் பின்னால் வாருங்கள் என்று சொல்லாதவரை அவர் எவராகவாவது இருந்திட்டு போகட்டும்.. அவரிடம் இருந்து எமக்கு தேவை அவர் அப்பாவின் டி.என்.ஏ.. அதை அவர் தர தயார் என்று சொல்லிவிட்டார்.. இப்ப உங்களுக்கு துவாரகா வாற என்று சொன்னவர்கள் மூலம் அவரின் ஒரு தலைமுடியை வாங்கி பொதுவெளியில் கொடுங்கள்.. தமிழ் ஒலிக்கு துவாராக வீடியோ வாங்கி கொடுத்தவர்களால் முடியையும் வாங்கி கொடுக்க முடியும் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல்..
  10. நன்றி முதல்வன். பார்க்கிறேன்🙏
  11. உலகின் சிறப்பான பாலங்களில் ஒன்று பிரான்சில் இருக்கின்றது.........நானும் சிலமுறை இந்தப் பாலத்தின் வழியாக சென்றிருக்கின்றேன்.......! 👍
  12. கருணைக்கிழங்கை இவ்வளவு பெரிதாக வெட்டி வறுத்து நான் பார்த்ததில்லை......அனால் நல்லா இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.......இப்பவெல்லாம் யூ டியூபில் காட்ட வேண்டும் என்பதற்காக கண்டபடி எல்லாம் செய்கிறார்களோ தெரியவில்லை.........! 😂
  13. போதமும் காணாத போதம் – 07 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது. பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன. சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார் மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான். மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான். “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள். அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள். “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா. சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை. மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும் பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான். சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள். சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது. சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது. “நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார். “அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன். சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார். வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன. சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின. துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான். புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. https://akaramuthalvan.com/?p=1304
  14. போதமும் காணாத போதம் – 01 October 2, 2023 வீரயுகத்தின் அந்தி நந்திக்கடலில் சாய்ந்து ஆண்டுகள் இரண்டாகியிருந்தன. செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சொற்ப சனங்கள் சொந்தவூர்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டனர். வரிசையில் நிற்க வைத்து அடையாளங்களைச் சரிபார்த்து ஆவணங்களை தருவித்து இராணுவப் பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டனர். செத்துப்போனாலும் சொந்தக் காணியில் சாகவேண்டும் என்பவர்களுக்கு நிம்மதி திரும்பிற்று. ஒரு பெருங்கனவு சிதைந்து உருக்குலைந்து மண்ணோடு மண்ணாகியிருந்தது. அளவற்ற தியாகமும், உயிரிழப்பும் அந்த மண்ணில் வெறித்திருந்தது. சொந்தவூரில் இறக்கிவிடப்படும் வரை அம்மாவோ அக்காவோ எதுவும் கதையாமல் வந்தனர். வழிநெடுக பனைகள் தலையற்றும் நிமிர்ந்து நின்றன. வீட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டோம். புதர்கள் மண்டிக்கிடந்தன. வீட்டுக் கூரையில் கறையான் படை. சுடுகாட்டமைதி. வாசலற்ற வீடு. சொந்த வீட்டினுள் செல்வதற்கு வழியற்று நின்றோம். எந்தத் துயரத்திலும் கண்ணீர் சிந்தாத அம்மா தனது காலடி மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளி வான் நோக்கி எறிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அது சாபமோ, பிரார்த்தனையோ யாரறிவார்? காணியைத் துப்புரவு செய்வது அவ்வளவு கஷ்டமாயிருக்கவில்லை. இரண்டு காட்டுக்கத்திகளாலும் மண்வெட்டியாலும் மரங்களையும் புதர்களையும் புரட்டிப்போட்டோம். வீட்டினுள்ளே எழுந்திருந்த பாம்பு புற்றுக்களை எதுவும் செய்யாமல் அடுத்தநாள் பார்த்துக் கொள்ளலாம் என்றாள் அம்மா. பார்த்தீனியத்தின் நாற்றம். இரவானதும் மாமரத்தின் கீழே அம்மாவும் நானும் அக்காவும் படுத்துக் கொண்டோம். நான்கு வருடங்களுக்குப் பிறகு சொந்தக் காணியில் நித்திரையாவது கனவெனத் தோன்றியது. அம்மாவுக்கு நித்திரை வரவில்லை. அவள் லாம்பைத் தீண்டி வைத்துவிட்டு எழுந்திருந்தாள். காற்றில்லாத இரவு. அம்மாவிடம் அனலின் விறைப்பு. அவள் மெல்ல எழுந்து கிணறு நோக்கிப் போனாள். வெட்டப்பட்ட செடிகளும், புற்களும் கும்பியாகி கிடந்தது. என்ன தோன்றியதோ! லாம்பிலிருந்து மண்ணெண்ணையை ஊற்றி கும்பியில் தீ வைத்தாள். அந்த இரவுக்கு அப்படியொரு வெளிச்சம் தேவையாகவிருந்தது. தீயின் சடசடப்பு பச்சையத்தில் எழுந்தது. அக்கா பயந்தடித்து நித்திரையிலிருந்து எழுந்தாள். புன்னகைத்தபடி நெருப்பு என்றேன். ஏற்கனவே சித்தம் குழம்பியிருந்த அவள் வெளிச்சத்தைப் பார்த்து வெருண்டிருந்தாள். நந்திக்கடலில் இறப்பதற்கு விஷம் தேடி அலைந்து களைத்தவள் அக்கா. “ஊழியில சாவு வாய்ப்பதெல்லாம் ராசியடி மோளே” என்று ஆச்சி சொல்லியும் அவள் கேட்கவில்லை. அக்காவுக்கு சித்தம் குழம்பியதை அம்மாதான் முதலில் உணர்ந்தாள். ஆனால் என்னிடமோ யாரிடமோ அதனைச் சொல்லாமல் தவிர்த்தாள். முள்ளிவாய்க்கால் நாட்களில் கட்டுப்படுத்தமுடியாமல் போயிற்று. பதுங்குகுழிக்குள் இருந்தபடி வெறித்துப் பார்த்து அழுவாள். யாரேனும் சமாதானம் சொன்னால் வெளியே எழுந்து ஓடுவாள். பிறகு அந்தக் கூடாரங்களுக்குள் அவளைக் கண்டுபிடிப்பது பெரியதொரு வாதை. என்னிடமொரு பழங்கால செபமாலையிருந்தது. டச்சுக்காரர்களின் தேவாலய அருங்காட்சியத்திலிருந்து அதனைக் களவாடியிருந்தேன். எங்கு சென்றாலும் என்னோடு வருகிற நிழலது. அக்காவின் கழுத்தில் அதனை விளையாட்டாக அணிவித்து உனக்கு வடிவாக இருக்கிறது என்றேன். அவள் சிலுவையைப் பிடித்து அறுத்தாள். செபமாலையை பதுங்குகுழிக்கு வெளியே எறிந்துவிட்டு “போடா கள்ளா” என்று அழத்தொடங்கினாள். சாவுகள் மலிந்து விளைந்த படுகளத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்க்க எண்ணி பலமுறை முயன்றும் தோற்றாள். ஒருநாள் இரவு அவளைப் பதுங்குகுழியில் காணாமல் தேடித்திரிந்தோம். நீரடர்ந்த குளத்து ஒற்றைப்பனையின் கீழே நின்றாள். அவள் இன்னும் நந்திக்கடல் வீழ்ச்சியை அறியவில்லை. எரியும் நெருப்பைப் பார்த்தபடி அம்மா….அம்மா என்று கூப்பிட்டாள். எந்த அசைவுமின்றி எரிந்தசையும் ஒளியின் முன்னே இரவு முழுவதும் நின்றாள் அம்மா. அடுத்தநாள் காலையில் மீண்டும் துப்பரவு பணிகளைத் தொடங்கினோம். வீட்டினுள்ளே இருந்த புற்றை வெட்டியெறிந்தோம். பாம்பில்லை. புற்று மண்ணை அம்மா பத்திரமாக எடுத்து வைத்தாள். காணி கொஞ்சம் வடிவெய்தியிருந்தது. கிணறு இறைக்க வேண்டும். வீடு வேயவேண்டும் என பெரிய பட்டியல் போட்டோம். நாங்கள் இடம்பெயர்கையில் மண்ணுக்குள் புதைத்து வைத்த அம்மிக்கல்லையும், சில பொருட்களையும் எடுக்கலாமென்று அகழ்ந்தோம். எல்லாமும் இருந்தது. இரண்டு பெரிய புகைப்பட அல்பங்கள் பொலித்தீன் படையால் காக்கப்பட்டிருந்தது. அக்கா ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டினாள். வீரயுகத்தின் நாயகர்கள் பலர் உயிர்ப்புடன் இருந்த புகைப்படங்கள். அக்கா எல்லோரையும் பார்த்து புன்னகை செய்து, அவர்களின் பெயர்களையெல்லாம் மறவாமல் சொன்னாள். அம்மிக்கல்லை எடுத்து தென்னைமரத்தின் கீழே வைத்தோம். அம்மியில் அரைத்த சம்பலும், ரொட்டியும் சாப்பிடவேண்டுமென சொன்னேன். அம்மா சரியென்று தலையசைத்தாள். அன்றைக்கு வெளியில் அடுப்பு மூட்டி, மாவைக் குழைத்து ரொட்டி சுட்டோம். சம்பலுக்கு வெங்காயம் போடாமல் வெறும் மிளகாயை தேங்காய்ப் பூவோடு அரைத்தோம். அக்கா நன்றாகச் சாப்பிட்டாள். அவளுக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது என்றாள் அம்மா. ஊரில் ஏனையோரும் தங்களது வீட்டையும் வளவையும் சீராக்கியிருந்தனர். பொதுக்கிணற்றை எல்லோரும் பணம் போட்டு இறைத்துச் சுத்தம் செய்தனர். கள்ளருந்திக் கூத்திசைக்கும் கனவான்கள் பனைமரங்களின் பாளையைச் சீவி முட்டியைக் கட்டிக் காத்திருக்கத் தொடங்கினர். கள்வெறிக்கு நிகர்த்த இன்பம் ஈழருக்கு வேறில்லை. காவோலையில் கருவாட்டைச் சுட்டு இரண்டு தூசணங்களோடு பொழுதை மங்கலமாக்கும் அப்புமார் பனைக்கு கீழே அமர்ந்திருந்து கதையளந்தனர். வசந்தம் வருமென்றில்லை, ஆனாலும் நாம் பூப்போம் என்பதைப் போல பெண்கள் கூந்தல் நனைத்து வழிநெடுக காற்சங்கிலி ஒலிக்க நடந்து போயினர். கனரக ஆயுதங்களின் வெற்றுக் கோதுகளைச் சேமித்து பூஞ்செடிகளை நட்டுவைத்து சின்னஞ்சிறுசுகள் தங்களை ஆமி இயக்கமாய் பாவித்து சண்டை செய்து விளையாடினர். கிளித்தட்டு விளையாடும் இளையோர்கள் வேர்த்தொழுக மறிக்கின்றனர். அடிக்கின்றனர். இரவானதும் விளக்குகள் திரி குறைக்கப்பட்டு வீடுகள் குளிர்கின்றன. வெறுமை அழிந்து உடல்கள் இன்பம் நுகர்கின்றன. காற்றில் ஈரம் திரும்புகிறது. கிளைகளில் அசையும் மலர்களில் தேன் அடர்ந்து திரள்கின்றது. ஊரில் மனுஷ வாசனை தளும்பத் தளும்ப முட்டிகளில் கள் நிரம்பிற்று. ஒரு மாதத்தில் வீட்டை திறமாகச் சரிப்படுத்தியிருந்தோம். அக்காவும் நானும் யாழ்ப்பாணத்திலுள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மா மட்டுமே வீட்டிலிருந்தாள். ஒரு குழம்பும் சோறும் வைத்துச் சாப்பிடுவது அவளுக்கு போதுமானதாக இருந்தது. உறைப்புக்கு கொச்சி மிளகாய் காய்த்திருந்தது. ஒருநாள் சந்தைக்குச் சென்று திரும்புவதற்குள் அம்மாவைத் தேடி வந்திருந்த ஆச்சியொருத்தி வீட்டின் முன்னால் குந்தியிருந்துள்ளாள். நடுவெயில் வெக்கை வீச தலைவிரிகோலமாய் வெள்ளைச் சீலை உடுத்தியிருந்த ஆச்சியைப் பார்த்த ஊரவன் “ஆரன வேணும்” என்று கேட்டிருக்கிறார். ஆச்சி வீட்டைக் காண்பித்து “இவள் தான்” என்றிருக்கிறாள். “சந்தைக்குப் போயிட்டாள். வரப்பிந்தும். அவள் வருகிற வரைக்கும் என்ர வீட்டில வந்து இருங்கோ. அவள் வந்ததும் இஞ்ச வரலாம்” “அவள் வரட்டும். நான் இதிலையே இருக்கிறன்” “நீங்கள் எங்க இருந்து வாறியள்” “உதில இருந்துதான். நடந்து வந்தனான்.” “உதில எண்டால் எங்க” “எனக்கு சரியான பசி. அவளைச் சோறு கொண்டுவந்து தரச் சொல்லு. என்னைக் கொஞ்சம் குளிப்பாட்டச் சொல்லு. நான் வெளிக்கிடுறன்” என்றெழுந்த ஆச்சியின் வெண்கூந்தல் மண்வரை நீண்டு, அவளது தடத்தையே அழித்திருக்கிறது. “எங்க இருந்து வந்தனியள், உங்கட பேர் என்ன, எதுவும் சொல்லாமல் போனால், அவளிட்ட நான் எப்பிடிச் சொல்லுவன்” என்று கேட்ட ஊரவனைப் பார்த்து “நீ அவளிட்ட சூலக்கிழவி வந்தனான் என்று சொல்லு, என்னை நல்லாய்த் தெரியும்” என்றிருக்கிறாள். ஊரவன் அவளுடைய பதிலைக் கேட்டு உறைந்து நின்றார். முன்னே நடந்து சென்றவள் வெயிலானாள். கண்கள் கூசுமளவுக்கு வெளிச்சம் வந்தடைந்த ஊரவன் மயக்கமுற்று வீதியில் விழுந்தான். அம்மா வீட்டுக்கு வந்ததும் இந்தச் செய்தியை அவரே சொன்னார். “உன்னைத் தேடி சூலக்கிழவி வந்து தனக்கு பசிக்குதாம், குளிக்க வேணுமாம், வந்து பார்க்க சொல்லுது” என்றார். அம்மாவிடம் அந்தத் தகவலைச் சொன்னதும் ஊரவனுக்கு இந்தச் சம்பவத்தின் அனைத்து துளிகளும் மறந்து போயிற்று. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆற்றாமையும் சந்தோசமும் பொலிந்த அம்மா கொட்டடி காளி கோயிலை நோக்கி ஓடினாள். வழிநெடுக அவள் காளியை நோக்கி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.“இஞ்ச உள்ள ஒருத்தரிட்டையும் வராமல் என்ர வீடு தேடி வந்த உனக்கு நான் என்ன செய்வேன். என்ர ஆச்சியே” என்றபடி கோயிலிருக்கும் இடத்தை அடைந்தாள். சதுப்புக் காணியில் வெள்ளம் தேம்பி நின்றது. புதர்களும் செடிகளும் மண்டி வளர்ந்திருந்தன. காளி செடிகளுக்குள் புதைந்திருந்தாள். ஓடுகளற்ற கோயில் கூரையையும் கொடிகள் சடைத்து பிடித்திருந்தன. ஆழமிக்க தண்ணீரில் இறங்கி நடந்தாள். எதற்கும் அஞ்சாதவள் தாய். உக்கிரம் பெருகி தளும்பித் தளும்பி அழுதபடி புதர்களை பிடுங்கி எறிந்தாள். ஈரச்சருகுகளின் வாசனையும் பூச்சிகளும் குமைந்து கிடந்தன. வெடிக்காத எறிகணையொன்று குத்திட்டிருந்து. துருவேறிய அதன் மேற்பரப்பில் லட்சோப லட்ச சனங்களின் குருதியுறைவு. காளியின் பீடம் தகர்ந்திருந்தது. எங்களுடைய குலத்தின் விலா எலும்பு சூலம். எங்கே எங்கள் விலா எலும்பு! அம்மா பிய்த்துக் கொண்டு அலறினாள். விஷப்பூச்சிகள், எதையும் பொருட்படுத்தாமல் சருகுகளை கைகளால் அகற்றினாள். ஒரு படை விலக இன்னொரு படை. சருகுகள் அழுகிக் கிடந்தன. நாற்றம் குமட்டியது. முறிந்து துருப்பிடித்த சூலத்தை கண்டெடுத்து நெஞ்சோடு அணைத்து “என்ர ஆச்சி, உன்னைக் கைடவிடமாட்டேன்” என்ற அம்மாவின் குரல் பேரிகையாக ஒலித்தது. அவளது இரு கால்களுக்குமிடையால் துயின்றிருந்த நாகமொன்று படமெடுத்தபடி அசைந்து அருளியது. மண்ணில் சரிந்திருந்த சூலத்தை நிமிர்த்தி ஊன்றிய அம்மா, புதர்களில் மலர்ந்திருந்த செங்காந்தள் மலர்களை ஆய்ந்து படைத்தாள். சூலத்தில் சூட்டப்பட்ட செங்காந்தள் மலர்களின் நெருப்பு இதழ்கள் கனன்று நிறத்தன. வளவை மொத்தமாய் துப்புரவு பண்ணி, அடுத்தமாதமே பூசையைத் தொடங்கவேண்டுமென எண்ணம் தகித்தது. ஊழியுண்ட பெருநிலத்தின் மீதியாய் தன்னைப் போலவே காளியும் காந்தள் மலர்களோடு வெறித்திருப்பதை அவளால் ஏற்கமுடியாதிருந்தது. தெய்வமும் வாழ்வுக்கு மீளட்டுமென்று மண்ணை வேண்டிக்கொண்டு புறப்பட்டாள். கொட்டடி காளி காந்தள் மலர்கள் சூடி நின்ற அன்றிரவு அம்மா விளக்கு வைத்தாள். வெகு விரைவிலேயே கோவில் வளவைத் துப்பரவு செய்து வழிபாடு தொடங்கியது. முறிந்து போன சூலத்தை வைத்து வழிபடுவது ஊருக்கு நல்லதில்லை என்று பலர் சொல்லியும் அம்மா கேட்கவில்லை. அதே சூலம் புளிபோட்டு மினுக்கி மீண்டும் வழிபடு பீடத்திற்கு வந்தது. காந்தள் மலர்கள் மீண்டும் சூடப்பட்டது. கொட்டடி காளிக்கு இப்போது காந்தள் காளி, கார்த்திகைப் பூ காளி எனப் பலபெயர்கள். கோயிலை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில் எல்லா மாதங்களிலும் காந்தள் பூக்கள் மலர்கின்றன. அது காளியின் அற்புதம் என்கின்றனர் சனங்கள். நீண்ட வருடங்களின் பின்னர் காந்தள் காளி அம்மாவின் கனவில் வந்தாள். அவளுடைய முகத்தில் ஒருவித உலர்ச்சியிருப்பதைக் கண்ட அம்மா “ஏதேனும் உடம்பு சுகமில்லையா” என்று கேட்டாளாம். காளி ஓமென்று தலையசைத்திருக்கிறாள். என்னவென்று கேட்க காளி பதில் சொல்லாமல் உம்மென்று இருந்திருக்கிறாள். சித்தம் பிசகிய அக்காவிடம் கனவைச் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. எல்லாவற்றையும் கேட்ட அக்கா, தன்னுடைய கனவிலும் காளி வந்தாள் என்றாள். அம்மா திகைப்புற்று “என்ன சொன்னவா” என்று கேட்டாள். “காளிக்கு ஒரு காயமிருந்திருக்கு. ஷெல் காயம். ஒரு பீஸ் துண்டு காளியின்ர தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடுறா” என்றாள் அக்கா. அம்மாவுக்கு வந்த கோபம் ஆறாமல் “போடி விசரி, உனக்குத் தான் மண்ட பீஸ்” என்றாள். “அதுதான் நானும் சொல்றேன். காளிக்கு மண்ட பீஸ். கொட்டடி காளிக்கு மண்ட பீஸ்” என்று அக்கா அரற்றத் தொடங்கினாள். அப்போதும் சூலம் மண்ணில் நிமிர்ந்து நிற்க காந்தள் மலர்கள் கனன்று மலர்ந்தன. https://akaramuthalvan.com/?p=847
  15. ஒரு நிலையாக இருந்து படிக்கமுடியவில்லை, வலி விடுகுதில்லை தல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.