Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்13Points19134Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்10Points46793Posts -
நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+6Points35602Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/20/23 in Posts
-
ஐரோப்பிய பிளிட்ஸ் சாம்பியன் தொடரை வென்ற தமிழ்ச் சிறுமி
ஹரோ, வட மேற்கு இலண்டனை சேர்ந்த போதனா சிவாநந்தன் என்ற 8 வயது தமிழ் சிறுமி ஐரோப்பிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன் தொடரை வென்றுள்ளார். பல அனுபவசாலி வீரர்களை தாண்டி இவர் வெற்றியீட்டியதாக பிபிசி கூறுகிறது. இவரை பிபிசி ஒரு chess prodigy, அசாத்திய திறமை உடைய குழந்தை-செஸ்-மேதை என விபரிக்கிறது. இத்தொடரில் போதனா ஒரு international master ஐ தோற்கடித்தார். ஒரு grandmaster உடன் சமன் செய்தார். செஸ் உலகமே இந்த கெட்டிக்காரத் தமிழ் பெண்ணை X வாயிலாக பாராட்டுகிறது. https://www.bbc.co.uk/news/uk-england-london-677706045 points
-
விடுதலைப் புலிகளை பாசிசவாதிகளாக காட்டும் இரகசிய முயற்சி.
எனது பொது பார்வையில் பார்வையில் 50 மேல் எமது பக்கம் காரணம் சொல்வேன். ஆனால், எனக்கு தூய தமிழ் இரத்தம் உள்ளது என்று காட்டவேண்டியுள்ளதால் எந்த தவறும் செய்யாமல் இருந்த எம்மை ஐந்து கண்டங்கள், சமுத்திரங்கள், 9 கோள்கள் துணைக்கோள்கள் சேர்ந்து எம்மை அழித்தன என்று கூறுவதே சிறந்தது. 😀4 points
-
விடுதலைப் புலிகளை பாசிசவாதிகளாக காட்டும் இரகசிய முயற்சி.
சில விடயங்களை நிக்சன் மிகவும் எளிமைப்படுத்துகிறார். தமது இந்தோபசிபிக் பிராந்திய நலனே மேற்கு நாடுகளுக்கு முக்கியம் என நிக்சன் சொல்வது சரியே. ஆனால் நிக்சன் சொல்வது போல் மேற்குக்கு இலங்கை மேல் ஒரு பாசமும் இல்லை. இலங்கயில் ஒரு சுயநிர்ணய தமிழ் மாநிலம் அமையகூடாது (தமது நலனுக்கு தீங்கு ஏற்படாவண்ணம்) என்பதிலும் அவர்கள் உறுதியாக இல்லை. ஒஸ்லோ பிரகடனம் மேற்கு அனுசரணையில் வந்ததுதான். இந்தியாவோ, சீனாவோ, ரஸ்யாவோ அப்படி ஒரு தீர்வை இலங்கையில் கனவிலும் நினைக்காது. ஆனால் அது நாம் வலிமையாக இருந்த போது இலங்கையும், மேற்கும், வேறு வழி இன்றி இந்தியாவும் இறங்கி வந்த நிலை. அதன் பின் இலங்கை+இந்தியா தந்திரமாக செயல்பட்டு, மேற்கின் நலனுக்கு புலிகள் அழிப்பு இன்றி அமையாதது என்ற முடிவுக்கு மேற்கை வரப்பண்ணினார்கள். புலிகளின் அனுகுமுறையும் இந்த முடிவுக்கு வருவதை இலகுவாக்கியது. காஸா வில், தமது நலனுக்கு ஹமாஸ் அழியவேண்டும், அதற்காக மக்கள் அழிவதும் ஏற்புடையதே என்ற மேற்கின் அணுகுமுறையை காணும் நமக்கு, 2009 இல் அவர்கள் எடுத்ததும் இதுவே என்பதை புரியமுடியும். புலிகளின் அழிவுக்கு பின், நாம் பலமற்று போன நிலையில் - அவர்களுக்கு எம்மை நோக்கி வர எந்த தேவையும் இல்லை. ஆனால் இலங்கை கிட்டத்தட்ட சகல துருப்பு சீட்டையும் தன்னகத்தே வைத்திருந்தது. தொடர்ந்தும் சீன பூச்சாண்டி காட்டுகிறது. இந்த நிலையில்தான் கொவிட், ஏனைய காரணிகள் + கொவிட்டால் நெருக்கடி அதன் வழியே அறகளை என மேற்கு இலங்கையில் இறங்கி ஆடுகிறது. ஒன்றுபட்ட இலங்கை என்பது எப்போதும் மேற்கு வலியுறுத்தியதே. பாலா அண்ணைக்கு கூட இது விளங்கியது. எமது விடயத்தில் மேற்கு ஒருபோதும் ஒரு பிரிந்துபோகும் வாக்கெடுப்பை முன் மொழியவோ, ஆதரரிக்கவோ இல்லை. ஆனால் உள்ளக சுயநிர்ணயத்தை ஏற்க மேற்கு தயாராக இருந்தது. இப்போ எம்மை மேற்கு அதை கூட கைவிட நிர்பந்திக்கிறது என்றால் - அதற்கு எமது 2009 பின்னான பலமில்லா நிலையே காரணம். 2009 ற்கு பின் நாம் ஆயுதம் இல்லா வழிகளில் எமது கூட்டு பேரம் பேசும் வலுவை அதிகரிக்க என்ன செய்தோம்? எதுவுமில்லை. என்ன செய்யலாம்? 1. எம்மில் எம்பிகள் உள்ள ஒரு கட்சியாவது சீனாவை அணுகியே ஆக வேண்டும். இது இலங்கைக்கு தேள் கொட்டிய நிலையை கொடுக்கும். மேற்குக்கும், இந்தியாவுக்கும் இலங்கையை வழிக்கு கொண்டு வந்து எமக்கு ஒரு நியாமான தீர்வை தர வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்கும். 2. புலம்பெயர் நாட்டில் ஏனை நாட்டு உளவு அமைபுகளுக்கு விலை போகாத தலைமைகளை, அடி மட்டத்தில் இருந்து உருவாக்கி (இப்போ உள்ளோர் அனைவரையும் தூக்கி அடித்து விட்டு) அடிப்படைகளை விட்டு கொடாமல் பேரம் பேசலாம். லாபி பண்ணலாம். 3. மேற்கின் பாராளுமன்ற, நிர்வாக, அரச, இராஜதந்திர, பொருளாதார கட்டமைப்பில் தனி நபர்களாக உள்ளிட்டு மேலே வந்து அழுத்தம் கொடுக்கலாம். இவற்றை செய்ய புலத்திலும், மேற்கிலும் நமது தலைவர்கள், பிரமுகர்களாக கொள்கை பிடிப்புள்ள, விலை போகாதோர் தேவை. அதை நாம் செய்யும் வரை நாம் எல்லோருக்கும் கிள்ளுகீரைகள்தான். எமக்கான நியாயமான தீர்வு ஒரு கட்டிடம் என்றால் - அதன் அத்திவாரமாக அமையப்போவது எமது புலம், புலம்பெயர் அரசியலை இனத்துக்கு நேர்மையான மனிதர்கள், வெளிப்படைத்தன்மையுடன் முன்நகர்துவது. அத்திவாரத்தையே நாம் போடாமல், மேற்கு யன்னலை தர மறுக்கிறது, சீனா கூரையை தரவில்லை, இந்தியா சுவரை இடிக்கிறது என்பதில் ஒரு பயனும் இல்லை. மேற்கிற்கு வேண்டப்பட்டவர்களாவதும், ஆகாமல் விடுவதும் எமது கையில்தான் இருக்கிறது. இந்த அத்திவாரத்தை நாம் சரியாக போட்டால், மேற்கே வீட்டை கட்டித்தரும் நிலையை காலம் உருவாக்கும்.4 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குப்பன்:- டேய் சுப்பா முதுகுல கொஞ்சம் அரிக்குது கொஞ்சம் சொறிஞ்சு விடன்... சுப்பன்:- எங்கையெண்டு சொல்லு சொறிஞ்சு விடுறன்.. குப்பன் :- வட கொரியாவுக்கு கொஞ்சம் கீழுக்கு பசிபிக் சமுத்திரத்தல.... சுப்பன்:- போடாங்......அடி செருப்பால...ஆனானப்பட்ட அமெரிக்கனே அந்த இடத்திலை சொறிய பயப்பிடுறான்.....என்னைப்போய் அங்கை சொறிய சொல்லுறாய்....எட்டி உதைச்சன் எண்டால்......பொறு இஞ்சை ஒராள் நிக்குது கேட்டுச்சொல்லுறன்.3 points
-
எப்போது வினாத் தொடுப்பீர்!
2 pointsஎப்போது வினாத் தொடுப்பீர்! ---------------------------------------------- எரிகின்ற காசாவிலிருந்து என்னதான் கிடைக்கும் எலும்புகளும் கிடைக்காது ஏனென்றால் பார்வைக்குக் சிறுமீன்போல் திமிங்கலமாய் நெளிகின்ற இஸ்ரவேலே விழுங்கிவிடும் அப்போ எதற்காக இந்தப் போருக்குள் மேற்கு மேய்கிறது அரபுலகை வெட்டுகின்ற தங்கக் கத்தியாக இஸ்ரவேல் இருக்கிறது அதனால் இருக்குமோ! எவளவு மக்கள் எவளவு பலஸ்தீனர் எவளவு சிறுவர்கள் எவளவு குழந்தைகள் எவளவு மழலைகள் அழிந்தொழிந்து போனாலும் அதைப்பற்றிக் கவலையேது! எமக்குத் தேவை எமது தேவைகள் நிறைவேற எந்தடையும் இல்லாத உலக வெளிதேவை ஊடறுப்போர் யாரெனினும் நாளையது இஸ்ரவேலேயானாலும் பாலஸ்தீனத்தை வைத்தே படை நடாத்தி அடக்கிடுவோம் இனமென்ன நாடென்ன எமக்கேதும் கவலையில்லை கவலையெல்லாம் எம்மிருப்பே காரணத்தை அறியாத உலகின் கடைநிலை மனிதனது தலைமேலும் கவிறது யுத்தவெறிச் செலவு! கண்ணாடி மாளிகையில் போர் நடக்கும் இடங்களிலே விழுகின்ற தலைக் கணக்கு எழுதுகின்ற ஐ நாவோ வெற்றுக் கடதாசி வெறும் பேச்சு நிறுவனமாய் போனதினை அறியாமல் மக்களது அங்கலாய்ப்பு! உலக மக்களெல்லாம் இனக்கொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் துணியாவிடில் தம் நலன்களுக்காக இனங்களை அழிக்கத் துணிந்திடும் ஆதிக்க சக்திகளின் தொடர்கதையாய் உலகழியும் நிலைதோன்றும் முன்னாலே உலகே விழித்தெழமாட்டாயா! இனக் கொலைகளின் பின்னிற்கும் ஆதிக்க உலகினது முகத்திலே நீ அறைந்து எப்போது வினாத் தொடுப்பாய் அதுவரை இவர்களது ஆட்டங்கள் ஓயாது! தம் தேவைகளை அடைவதற்கு அரசுகளை அழித்தொழித்து கைப்பாவை அரசுகளை நிறுவி ஆட்டுவிக்கும் ஆதிக்க உலகினது அடிமைகளாய் உலக மக்கள் உள்ளவரை ஓயாது போர்முனைகள் தணிவதும் மூள்வதுமாய் உலகம் துயரத்துள் சிதைகிறது சிதைவினிலே வாழ்கின்ற சீர் மிகு நாடுகளோ மனித உரிமையின் காவலராய் வேடமிடும் அற்பத்தனத்தாலே அழிகின்ற உலகமதை யார் வருவார் காத்திடவே! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points
-
ஜேர்மனியில்... பூப்பந்தாட்ட தரவரிசையில், முன்னிலை வகிக்கும் ஈழத்தமிழ் சிறார்கள்.
ஜேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். ஜேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குபுள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் ஜேர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர். 👉தமிழி.மார்க்கண்டு ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். 👉அனிகா .ஆனந் இவர் பல போட்டிகளில் முன்னிலை வகித்து ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் 17 வது இடத்தை பெற்றுள்ளார். 👉ஹர்சத்குமார் கர்த்திக் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி யேர்மன் தழுவிய போட்டிகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். ஜேர்மன் ரீதியிலான தரவரிசை பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தை பெற்று தகுதி நிலையை அடைந்ததுள்ளார். இறுதிப் போட்டிகளின் போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை இறுதிச் சுற்று வரை அனிகா வெளிப்படுத்தினார். தமிழி மிகவும் சிறப்பாக விளையாடி கால் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் ஜேர்மன் தழுவிய தரவரிசையில் 5 ஆம் நிலையை எட்டியிருந்தார். இதில் அதிநுட்பமாகவும் தனது திறமையையும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்தி மிக சிறப்பாக விளையாடி அனைவரினதும் பாராட்டையும் பெற்ற ஹர்சத்குமார் முதலிடத்தை பெற்று இந்த ஆண்டுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார். இரட்டையர் ஆட்டத்தில் அனிகா கால் இறுதி வரை முன்னேறி வெளியேறினார். ஹர்சவத் குமார் அரையிறுதி வரை முன்னேறி மிகக் கடுமையான போட்டியின் மத்தியில் மூன்றாம் இடத்தைத் தனது ஆக்கினார். தமிழி மிகவும் திறமையாக விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை வெற்றிகொண்டார். இந்த ஆண்டின் பூப்பந்தாட்டு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஜேர்மன் ரீதியில் இவர்கள் தங்களின் தடங்களை பதித்துள்ளனர். ஜேர்மன் தரவரிசையில் ஹர்சத் குமார் 2ம் இடத்தையும், தமிழி 3ம் இடத்தையும்.அனிக்கா 17ம் இடத்தையும் எட்டியுள்ளனர். இவர்களினது கடினமான பயிற்சியும் பெற்றோர்களின் விடாமுயற்சியும் தமிழர்களாகிய எம்மை இன்று பெருமை கொள்ள வைக்கிறது. வரும் காலத்தில் இன்னும் பல தமிழ்ச் சிறார்கள் பல சாதனைகளைப் படைக்க இவர்கள் முன்னுதாரணமாக இருக்கட்டும். ஸ்ரீ ஸ்ரீ2 points
-
வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து!
அவருக்காக வேலை செய்யத் தான் அமெரிக்க அம்மணி இருக்கிறாவே.2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலையும் காட்ட வேண்டிய தேவை ஹரிக்கு இருக்கிறது. ஹரி ஆனந்த சங்கரியின் அரசியலுக்கான அத்திவாரமே CTC தான். இங்கே ஹரிக்குத் தெரியாமல் CTC காறர் மகிந்தவைச் சந்தித்திருக்கினம் என்று சொன்னால் அது கடைந்தெடுத்த சுத்தப் பொய் என்பது கனடா வாழ் டமிலருக்கு அப்பட்டமாகத் தெரியும். இதைவிடவும், மேற்கின் ஆசீர்வாதம் இன்றி இவர்கள் அங்கே போய் மகிந்தவைச் சந்தித்திருக்க முடியுமா? கனேடிய டமில்ஸ்சைக் குளிர்விக்குமுகமாக ஹரி இப்படி ஒரு அறிக்கை விட வேண்டிய நிலை. ஏற்கனவே Trudo வின் அரசு மக்களிடம் அடி வேண்டாத குறை. இந்த இலட்சணத்தில் ஹரி அமைதியாக இருந்தாலே அது அவரின் அரசியலுக்கு ஆபத்தாக முடியும். எனவே, கனேடிய டமில்ஸ்ஸின் தலையில் வின்ரர் குளிருக்கும் ஐஸ் வைக்கும் வேலையை ஹரி செய்துள்ளார். அப்புட்டுதே. நிலை இப்படி இருக்கையில் ஏன் மேற்கு நாட்டு தமிழர் அமைப்புக்கள் திடீரென்று வரிசையாக இலங்கை செல்லவேண்டிய தேவை ஏன் எழுந்தது ? எல்லாம்இந்தியாவின் வேகமான நகர்வுகள்தான் காரணம்.2 points
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 point'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ அறிமுகவுரை இந்த ஆவணக்கட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை முஸ்லீம்; 1988 ஏப்ரல் 19ம் திகதி இவர்களை 'முஸ்லிம்கள்' என்ற தனி இனக்குழுவாக விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர் (LTTE-Muslim Accord, the satanic force, பாகம்- 1, பக்கம்: 747); ஊர்காவல்படை மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மாத்திரமே ஒருமுகப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். முஸ்லிம்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டதென்று (புலிகள் மறுத்துள்ள போதிலும்) அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவை குறித்து எதுவுமே பதிவிடப்படாது என்பதையும் முன்கூட்டிய பறைந்துகொள்கிறேன். இதைத் தொகுப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இலங்கை முஸ்லிம்கள் எப்பொழுதும் தம்மால் எழுதப்படும் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் தமது தரப்பால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைத்தையும் வேண்டுமென்று மறைத்தே தமிழர் தரப்பு மீதான கொலைப் பழிகளை விரிப்பர். அவ்விரிப்புகளில் நல்லபிள்ளை வேடமிட்டு தாம் முதலில் தமிழரைத் தாக்கவில்லை என்பது போன்றும் தமிழரே சும்மா இருந்த தம்மைத் தாக்கினர் என்பதான தோற்றப்பாட்டையும் உண்டாக்கியிருப்பர். அதாவது மெய்மைக்கு மாறாக பொய்யான தோற்றப்பாட்டை உண்டாக்கியிருப்பர். மேலும், அதில் தமிழர் தரப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்ட கொலைகள் ஏற்படுவதற்கு வழிவகுத்த தம்மால் தமிழருக்கு ஏவல்செய்யப்பட்ட படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் எழுதியிரார். ஆகவே காலம் காலமாக இருந்துவந்த இந்த முஸ்லிம் பக்கம் மட்டும் நியாயம் கேட்பு என்பதற்கு மாறாக தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளையும் எடுத்துரைக்க இவ் ஆவணக்கட்டு முயலும். மேலும் தமிழர் தரப்பும் இதுநாள் வரை வீரியமாக சிங்களவரின் படுகொலைகளை ஆவணப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அட்டூழியங்களை ஆவணப்படுத்த சிரத்தை எடுத்ததில்லை என்பது எம்தரப்பின் வலுவீனமே. ஆகவே அக்குறையினை போக்கும் படியாகவும் தமிழர் தரப்பு அனுபவித்த கொடுமைகளை எடுத்துரைக்கவும் இவ்வாவணக்கட்டு எழுதப்படுகிறது. இதில் எனது சொந்த எழுத்தாக ஆதாரங்களின் துணையோடு எழுதியிருப்பது "முன்னுரை" மாத்திரமே. மேற்கொண்டு பதிவிட இருப்பவை எல்லாம், பல்வேறு நம்பகமான வலைத்தளங்கள், மாதயிதழ்கள், நாளேடுகள் மற்றும் சில குறிப்பிட்ட பன்னாட்டு அமைப்புகளால் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஊர்காவல்படை, & காடையர்கள் பற்றியும் அவர்களால் ஈழப்போர் காலத்தில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் பற்றியும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், செய்திகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவையே ஆகும். சுருகங்கச் சொல்லின் ஒரு தொகுப்பாக இருக்கும். இவ் ஆவணக்கட்டானது தொடர்ந்து என்னால் இற்றைப்படுத்தப்பட்டு எமது தமிழ் தேசத்திற்கு இலங்கை முஸ்லிம்களின் இனவெறியால் ஏவல்செய்யப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பான ஒரு பாரிய வரலாற்றுப் பேழையாக, அடுத்தடுத்த தலைமுறைகளின் வரலாற்று அறிவுப்பெட்டகமாக பேணப்படும். *****1 point -
மாதங்களில் நான் மார்கழி.
1 pointமாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட்டும் ஒலிக்க கோதையின் திருப்பாவை காற்றினில் தவழுவதால் மாதங்களில் நான் மார்கழி என்றே பகல்கின்றான் மாதவனும் .......! ஆக்கம் : சுவி ......!1 point
-
விடுதலைப் புலிகளை பாசிசவாதிகளாக காட்டும் இரகசிய முயற்சி.
1 point
-
விடுதலைப் புலிகளை பாசிசவாதிகளாக காட்டும் இரகசிய முயற்சி.
கோசான் பெரும்பாலனவையை இயலுமானவரை விளக்கியுள்ளீர்கள்.நன்றி. சிலதுகள் நடைமுறைக்கு ஒத்துவராததையும் எழுதியுள்ளீர்கள். எமது பக்கம் என்று சொல்லி கடைசியில் அரசியல்வாதிகள் பக்கமே கையைக் காட்டிவிட்டு நாங்கள் தப்பித்துக் கொள்கிறோம்.1 point
-
இமயமலைப் பிரகடனத்திற்கு வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு!
இமயமலைப் பிரகடனத்திற்கு வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு! திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும் யுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும், இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிப்பதாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த 69 சிவில் அமைப்புக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ‘இமயமலைப் பிரகடனம்’ வெளிப்படுத்தும் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு எனும் கூற்றுக்கள், மேற்குறிப்பிட்டவற்றை முற்றிலும் புறமொதுக்கி, இப் பிரச்சினையைப் புரிந்துணர்வின்மைப் பிரச்சனையாகவும் தனிமனித-குழு அடிப்படையிலான மனித உரிமைப் பிரச்சனையாகவும் கோட்பாட்டுச் சிதைப்பினை மேற்கொள்கின்றன. இப்பிரச்சனையை அற நீக்கமும், அரசியல் நீக்கமும் செய்ய விளைகின்றன. சிங்கள பௌத்த மேலாதிக்கக் கருத்தியலின் சகிப்பு எல்லைகளுக்குள் குறுக்க முயல்கின்றன. இப்பிரகடனத்தின் ஐந்தாவது கூற்று, சிங்கள-பௌத்த கருத்தியலின் நிறைவேற்று எந்திரமாகிய அரசையும் அதன் வன்முறைக் கருவிகளான முப்படைகளையும் பொறுப்புக்கூறலில் இருந்து விடுவித்து, அரச கட்டமைப்புக்கு வெளியில் உள்ள சில பௌத்த துறவிகள், அமைப்புகள் என்பவற்றை மட்டும் அதனுடன் பிணைக்கிறது. இது மிகவும் பாரதூரமான ஒரு அரசியல் சதியாகும். கூட்டாக கையெழுத்திடப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்குப் பின்னதாக வெளியிடப்பட்ட உலகத் தமிழர் பேரவை சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தினரின் கூட்டறிக்கை, உலகத் தமிழர் பேரவையின் குரலாக மட்டுமே வெளிப்படுகிறது. சிங்கள பௌத்த மேலாண்மைக் கருத்தியலாலும் அதன் அரசியல் திட்டங்களாலும் இதுவரை விளைந்த பேரழிவுகள் குறித்த ஏற்றுக் கொள்ளுகையோ, சிறுவருத்தமோ கூட்டு அறிக்கையில் சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியத்தின் குரலாக வெளிப்படுத்தப்படவில்லை. தாயகத்தில் வாழும் மக்களின் சார்பில் பேசுவதற்கும் ஒப்பந்தங்களையும் பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கும் தாயகத்தில் அவர்களால் அமைக்கப்படும் பரந்த ‘கூட்டு முன்னணி’ ஒன்றிற்கே தார்மீக உரிமை உள்ளது என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/13637281 point
-
ஐரோப்பிய பிளிட்ஸ் சாம்பியன் தொடரை வென்ற தமிழ்ச் சிறுமி
செஸ், பூர்வீகம் தமிழ் என்று கேள்விப்பட்டேன். அதன் காரணமாகவே, சர்வதேச செஸ் போட்டி தமிழகத்தின் அண்மையில் நடந்தது. சிவனும், பார்வதியும் விளையாடினர் ளன்று ஒரு கோவிலும் இருக்குதாமே!1 point
-
துவாரகா உரையாற்றியதாக...
1 pointஅருணா போன்ற முளைகளை ஆரம்பத்திலேயே அறுத்து விட வேண்டும். இல்லையேல் இன்னும் பல கூப்பன்மா பூரான்கள் முளைக்கும்.இது ஒரு புள்ளியை நோக்கிய பயணங்களை சீரழிக்கும்.1 point
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
அட சும்மா போங்கையா...கனடாவிலை 35 வருசம்...யாழிலை 15 வருசம் ...உங்கடை காமெடிக்கு காமெடி எழுதினால்...ஏதோ 4 போர்வைக்கும் போர்த்துக்கொண்டு கிடக்கிற மாதிரி என்னை நினைத்துக் கொண்டியளோ...எந்தச் சலசப்புக்கும் அஞ்சாத சிங்கம்..(ஆஅனாலும் புலிதான்?)>..அதாவது உங்கடை சரித்திரத்தை ஆரம்பமுதலே அவதானிப்பவன்...பச்சோந்திகளையும் ..விலாங்குமீனையும் இலகுவில் அடையாளம் காணக்கூடிய அறிவிருக்குப் பாருங்கோ.. ..ஏதோநான்தான்..தமிழரின் விடிவுக்கு அட்வைஸ் பண்றமாதிரி நான் நடிப்பதில்லை...1 point
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointகட்டுரைகள் “HOME GUARDS” RAPED AND SHOT TWO TAMIL WOMEN மூலம்: https://noolaham.net/project/33/3284/3284.pdf | Tamil Times pg 18 வெளியிடப்பட்ட ஆண்டு: பெப்ரவரி 1986 மொழிபெயர்ப்பு: - The gruesome details of how, on Christmas Day, five armed home guards posing as soldiers forcibly removed two Tamil women from their house in Mutur, allegedly raped them and later shot them, were revealed at an inquest held into the death of one of the women killed, Mary Agnes Yogeswary (21), by acting Mutur Magistrate Mr. M.K. Sellarajah. The incident occurred in Mutur in eastern Sri Lanka. Dr. C.C.K. Sellathurai, DMO Trincomalee, who held the post-mortem on Yogeswary, was of the opinion that death was caused by gunshot injuries and that the victim had been raped before death. After the evidence of M.H. Mohammadu Basheer, Mary Alphonso and Parameswary was recorded, the acting Magistrate returned a verdict of homicide and ordered the five suspects to be taken into custody in this connection, and be produced before the Co-ordinating Officer Trincomalee for interrogation. M.H. Mohammadu Basheer, giving evidence, said that on 25th December at about 7 p.m. he was met by one Nawaz who was with four others. Nawaz had told witness that they were army personnel and wanted witness to show the pathway to the house of Jamil at the 64th mile post Mutur. Witness went with them. One of them gave him a gun to be kept with him. At the 64th mile post the five persons entered a house. Witness did not know whose house it was. Witness was asked to search the drawers of a table. He found some papers. He was then asked to wait outside. After about 15 minutes the five persons came out with two young women and a young man. All of them went to Periyapalam. At the Periyapalam Muslim school, witness and the young man who accompanied the two women were asked to wait outside. The five persons went into the school with the two women. After about 45 minutes one of the five men came out and asked witness to bring the youth for questioning. Witness saw the two women seated in two corners in the school building. After some time the five men, along with the two women, the youth and witness went towards Iddiman Aru. One Nawahir and witness were made to wait at a certain spot before the other four men with the two women and the youth proceeded towards the Aru (river). Nawahir had a hand grenade, a gun, a cartridge belt and a torch with him. The other four persons had guns identical to those used by army personnel. Five minutes later witness heard a gun shot and thereafter nine gun shots one after the other. Fifteen minutes later the four men returned and witness was asked to fire the gun given to him. When he declined, they gave him a cartridge and forced him to fire the gun. Through fear he fired the gun and his right shoulder was still paining. He had never used a gun before. Witness later came to know they were Muslim home guards and not army personnel. On the instructions of the leader of the mosque, witness made a statement to Mutur Police about the incident on 27th of December. Mary Alphonso, wife of Francis (34), said that at about 8 p.m. on the day in question, six persons came to their house and ordered her and her husband out. At that time witness’s sister Felicia (18), brother Jesuthasan (21) and stepsister Yogeswary (21) were sleeping inside the house. One of the men took witness into the house and searched the drawers of a table and boxes. They took two wrist watches from a drawer. That person ordered witness to undress; she refused and cried out “Amma” and ran out of the house. The men went inside the house, put up the three persons sleeping inside and took them away, saying they were being taken to the army camp for questioning. Parameswary, wife of Thavarajah (27), said her sister Yogeswary lived with her stepsister in the adjoining house. On December 26 at about 7 a.m., stepmother of witness Anthonyamma informed witness that her children had been taken by the army. She wanted witness to help her trace her children. They informed the leader of the home guards there to find out whether the two women and the youth were at the army camp. After some time they were informed that the trio were not taken by the army. A little while after, witness came to know about the discovery of Felicia near the Iddiman Aru. She was not dead and was sent to Trincomalee base hospital. On 28th, witness learnt that the dead body of Yogeswary had been found near Kaddaiparichan Aru. She identified the body as that of her sister. The body of Jesuthasan was not found. *****1 point -
துவாரகா உரையாற்றியதாக...
1 point1 point
- இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
உக்ரெயின் போரில் ரஸ்யா வென்றால் அது சீன மேலாதிக்கத்திற்கான கதவுகளைத் திறந்து விடுவதற்க்கு ஒப்பானது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது அமெரிக்கா நேரடியாக ஈடுபடாத உக்ரெயின் போருக்காகச் செலவிடும் பணத்தை விடப் பன்மடங்கு பணச் செலவை அமெரிக்காவுக்கு உண்டாக்கும். ஏனென்றால் ரஸ்யா வெல்லும் பட்சத்தில் ஐரோப்பாவை நோக்கி அமெரிக்கா தனது கடல் ஆகாய கண்காணிப்பு எதிர்ப்பு இராணுவத் தளபாடங்களை நகர்த்த வேண்டி வரும். இதனால் தாய்வானின் பிடியை அமெரிக்கா தளர்த்த வேண்டி வரும். வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் இஸ்ரெயில் போரும் இதேபோல் இருக்கலாம். இந்த இரு போர்களுக்கும் அமெரிக்கா தற்போது செலவிடும் பணம் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரத்துக்கு வாய்ப்பானவையே. இதில் ஐரோப்பாவும் பெரும் பலனடைகிறது. அமெரிக்கா உக்ரெயினைக் கைவிட்டால் இப் போரை முழுமையாக ஐரோப்பிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டி வரும்.1 point- வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் - டக்ளஸ்
தவிச்ச வடக்கிற்கு தண்ணீர் வழங்கும் பாலியாறு Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 11:50 AM மு.தமிழ்ச்செல்வன் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் தகவல்களின் படி உலகில் வாழ்கின்ற சுமார் 8 பில்லியன் மக்களில் 2.2 பில்லியன் மக்கள் சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் இன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்று பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை. இன்னும் சில வருடங்களில் இந்த 2.2 பில்லியன் மக்களுடன் யாழ்ப்பாணம் மக்களும் இணைந்துகொள்வார்கள் என்ற நிலைமையை தற்போது தடுத்திருக்கிறது பாலியாறு. பாலியாறு குடிநீர் திட்டமானது வடக்கிற்கு தண்ணீர் வழங்குகின்ற ஒரு பாரிய திட்டமாக காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் பாலியாறு குடிநீர் திட்டம் மூலம் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களில் உள்ள சனத் தொகையை விட யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு சுமார் 6 இலட்சத்து 26 ஆயிரம் மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்கள் முழுக்க முழுக்க தங்களது நீர் தேவையினை நிலத்தடி நீரின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரோ பாதுகாப்பற்றதாக மாறிசெல்கிறது. குடாநாடு என்பதனால் நன்னீர் உவராக மாறும் தன்மை அதிகரித்து செல்வது, அதிக சனத்தொகை என்பதனால் அடர்த்தி மிக்க குடியிருப்புகள் காரணமாக நிலத்தடி மாசுப்படுதல் (மலக்கழிவுகள் நிலத்தடி நீரில் அதிகம் கலந்திருப்பது), நிலத்தடி நீர் குறைவடைந்து செல்வது போன்ற நிலைமைகளால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் என்பது இன்னும் சில வருடங்களில் கேள்விக்குள்ளாகும் நிலையிலேயே இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் குளங்கள், ஆறுகள் என்பன அதிகமான காணப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் தங்களது நீர்த்தேவையினை நிலத்தடி நீரில்மட்டுமன்றி ஆறுகள்,குளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை இல்லை. இதன்காரணமாக யாழ்ப்பாணத்தின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவை தொடர்பில் பல காலங்களாக அதிகம் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. யாழ்ப்பாணத்தின் நீர்த்தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ள போதும் அவற்றின் சாதக பாதக காரணிகளை கருத்தில் கொண்டு பாலியாறு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. அதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரசு முன்னாய்ந்த நடவடிக்கைகளுக்கு 250 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்துள்ளது. பாலியாறு இலங்கையின் வடக்கே வட மாகாணத்திற்குள் காணப்படுகின்ற ஓர் ஆறு. 68.4 கிலோ மீற்றர் நீளமுள்ள பாலியாறு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் ஆரம்பித்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை கடந்து கடலுக்குள் கலக்கிறது. பாலியாறு குடிநீர் திட்டம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாலியாற்றை வழி மறித்து 4.6 கிலோமீற்றர் நீளமும், 41 அடி உயரமும் கொண்ட மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கமாகும். 1 இலட்சத்து 18,363 ஏக்கர் ( 479 சதுர கிலோ மீற்றர்) பரப்பளவு நீரேந்து பிரதேசங்களில் வருடந்தோறும் 1,317 மில்லி மீற்றர் சராசரி மழைவீழ்ச்சியிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீரைக்கொண்டு 2,562 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற மழை நீரானது வருடத்திற்கு 151 எம்சிஎம் அளவு எந்தவித பயனும் இன்றி வீணாக கடலில் சேர்கிறது. பல மில்லியன் ரூபாக்கள் செலவில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 41.2 எம்சிஎம் அளவு நீர் குடிநீருக்கு பெறப்படும். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் மீற்றர் கியூப் நீர் குடிநீருக்காக பெறப்படும். பயன்பெறும் பிரதேசங்கள் அமைக்கப்படவுள்ள பாலியாறு குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவும், மன்னாள் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளும், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிப்படவுள்ளது. திட்டத்தின் ஏனைய நன்மைகள் பாலியாறு குடிநீர் திட்டத்தினால் பின்வரும் நன்மைகள் ஏற்படும் திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். • 358 ஹெக்டயருக்கு விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசனம் • வருடம் ஒன்றுக்கு 800,000 மெட்றிக்தொன் மீன் பிடி • சுற்றுலா பயணிகள் வருகையின் மூலமான வருமானம் • மிதக்கும் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி • சுற்றுச்சூழல் நன்மை கருதி செக்கனுக்கு 08 மீற்றர் கியூப் நீர் வெளியேற்றப்படுகின்றமை • நிலம் உவராகி வருகின்றமையினை தடுத்தல் • நீர் தேக்குவதன் மூலம் ஏற்படும் மக்களின் குடிபெயர்ச்சி இன்மை திட்டத்தின் சவால்கள் • பாலியாறு திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது நீர் சேமிக்கப்படுகின்ற 2,562 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்ற அடர்த்தியற்ற ஒதுக்கப்பட்ட காடுகள் நீருக்குள் சென்றுவிடுகின்ற நிலைமை ஏற்படும். • நீர்த்தேக்க பகுதிகள் ஒதுக்கப்பட்ட காடுகள் என்பதனால் வனவளத் திணைக்களத்தின் அனுமதி பெறுவது • இப் பாரிய முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி மூலங்களை கண்டுபிடித்தல் வடக்கு குடிநீருக்கான பொருத்தமான திட்டம் மேற்படி இந்த திட்டமானது ஒப்பீட்டு ரீதியில் வடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான திட்டமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான குடிநீருக்கு ஆறுமுகம் திட்டம், இரணைமடு திட்டம், கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம், வடமராட்சி நீர்த்தேக்கம் பாலியாறு திட்டம் என பல திட்டங்கள ஆராயப்பட்டன. ஆனால் அந்த திட்டங்களில் எல்லாம் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் ஏற்பட்டன. நடைமுறைப்படுத்துவதில் சமூக பொருளாதார நெருக்கடிகள் உருவாகின. ஆனால் பாலியாறு திட்டத்தின் மூலம் அவ்வாறான எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை, அனைத்து தரப்பினர்களதும் கருத்துக்களும், உள்வாங்கப்பட்டு அவர்களது ஒப்புதல் இத்திட்டம் தயாரிக்கப்பட்டதே இதன் வெற்றியாகும். பாலியாறு திட்டத்தின் ஊடான நீர் பங்கீட்டில் கூட எவ்வித சவால்களும் உருவாகவில்லை. ஆகவே பாலியாறு திட்டம் குடிநீருக்கு தவிச்ச வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்கும் ஒரு பொருத்தமான திட்டமே. https://www.virakesari.lk/article/1721301 point- 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை ; கொலராடோ உயர்நீதிமன்றம்
இங்கு நீதிபதிகள் கட்சி சார்ந்து தான் இருக்கிறார்கள். உயர் நீதிமன்றில் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்களே கூடுதலாக உள்ளனர்.1 point- GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்தும்” ஒப்பரேசனில் ஈடுபட்டது இதை ஒட்டித்தான். யாழில் நடமாடவே பயமாக இருக்கு..1 point- இமயமலைப் பிரகடனத்திற்கு வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு!
தாயகத்தில் வாழும் மக்களின் சார்பில் பேசுவதற்கும் ஒப்பந்தங்களையும் பிரகடனங்களையும் மேற்கொள்வதற்கும் தாயகத்தில் அவர்களால் அமைக்கப்படும் பரந்த ‘கூட்டு முன்னணி’ ஒன்றிற்கே தார்மீக உரிமை உள்ளது என்பதை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைச்சாண்டா ஆப்பு... அப்ப சுரேன்..நல்லூர் வந்தநேரம் ..ஏன் விட்டுவைத்தீர்கள்...அவை ரணிலிடம் எல்லாம் வாங்கியபின் ...நீங்கள் அறிக்கைவிட்டால் எப்பிடி..1 point- இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
உங்கள் கருத்திற்கு நன்றி, ஓம் ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் பற்றி பற்றி கதைத்துள்ளோம். ஆரம்பத்தில் பொருளாதாரம் பற்றிய விவாதத்தில் ஆர்வம் இருந்தது காரணம் எனது கருத்தினை மறுதலித்து கருத்து எழும்போது அவற்றினடிப்படையில் புதிதாக அறிய சந்தர்ப்பம் ஏற்படும் என்பதால் ஆனால் பொருளாதாரம் மிகவும் அலுப்பான பாடம் என பொருளாதாரம் படித்தவர்கள் கூறுவார்கள், அதுபோல யாழிலும் பெரிதாக யாரும் ஆர்வம் காட்டுவதில்லை அதனால் கருத்தாடல் ஒரு கை ஓசை போல எந்த பலனும் இல்லாமல் போவதால் தற்போது எழுதும் ஆர்வம் இல்லை. மேலும் இந்த பணமுறியினை பொருளாதாரத்தில் leading indicator என்பார்கள். 1.சாதாரணமான வளைவு இரண்டு அச்சுகளிடையே ஒரு வானவில்லை போல தோன்றும, இது பொருளாதாரம் சீராக உள்ளதை காட்டும். 2.தட்டையான கோடு நிலையற்ற பொருளாதாரத்தினை குறிக்கும் 3.தலைகீழ் வானவில் வளைவு பொருளாதார சரிவினைஎதிர்வு கூறும். https://www.investopedia.com/terms/y/yieldcurve.asp தற்போது அமெரிக்க பணமுறி 3 ஆவது நிலையில் உள்ளது. http://www.worldgovernmentbonds.com/country/united-states/ எப்போதும் 3வது நிலையில் பொருளாதாரம் சரிவடைந்து விடும் என கூறமுடியாது, ஆனால் பொருளாதார சரிவு இடம்பெற்ற காலங்களில் இந்த 3ஆவது நிலை நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். இது முதலீட்டாளர்கள் அரச கொள்கை வகுப்பாளர்கள் பார்க்காத விடயங்களை உணர்வதால் என கருதுகிறேன்.1 point- ஜேர்மனியில்... பூப்பந்தாட்ட தரவரிசையில், முன்னிலை வகிக்கும் ஈழத்தமிழ் சிறார்கள்.
செய்தியாக்கி இணைத்த தமிழ்சிறியவர்களுக்கு நன்றி. வளர்ந்துவரும் இளைய வீர வீராங்கனைகளுக்கு வாழ்த்தும். பாராட்டும். தமிழியின் அப்பா எங்கு பூப்பந்தாட்டம் நடந்தாலும், அழைத்துச் சென்று பங்குபற்ற வைப்பவர். அவரது முயற்சி பயன்கொடுக்கிறது. அயராது முயற்சிக்கும் பெற்றோருக்கும் பாராட்டு உரித்தாகுக.1 point- GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
போலிக்கா வின் வருகை + ஜி ரி எவ், சிடிசி யின் இமாலய பேய்க்காட்டல். இரெண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை. RAW வின் ஏஜெண்டுகள் யாழ் உட்பட்ட தளங்களில் சில வருடங்களாக “மனங்களை பதப்படுத்தும்” ஒப்பரேசனில் ஈடுபட்டது இதை ஒட்டித்தான். இதன் முடிவில் சுமந்திரன் பங்களிப்போடு ஒரு வெளிப்படைதன்மை அற்ற, “மாவட்ட அபிவிருத்தி சபை” யை விட அதிகாரம் இல்லாத ஒரு பேய்காட்டல் தமிழர் தலையில் தீர்வு/ புதிய அரசியல் யாப்பு என்ற வகையில் இறங்க போகிறது. பொறுப்பு கூறலும் இல்லை, விசாரணையும் இல்லை, தீர்வு தந்தாகிவிட்டது. பிரச்சனை தீர்ந்தது. சுபம். இந்த திட்டத்துக்கு கரி ஆனந்தசங்கரி உடன்படவில்லை போல படுகிறது. ஏலவே ஐ எம் எவ் விவகாரத்தில் இலங்கையை தமிழர் நலன் சார்ந்து அழுத்திய ஒரே நபரும் இவரே. அதைகூட சாத்தியமற்ற நகர்வு என ஏஜெண்ட்ஸ் யாழில் விமர்சித்தார்கள். ஆனால் கடைசியில் ஐ எம் எவ், இலங்கையின் இராணுவ பாதீட்டில் கைவைத்தது. இலங்கைக்கும், ரோவுக்கும் முகத்தில் கரி. இவ்வாறாக சுயாதீனமான, வெளிப்படையான நடவடிக்கைகள் சிலதை கரி எடுப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது. ஆகவேதான் அவர் மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.1 point- துவாரகா உரையாற்றியதாக...
1 pointஉண்மைகளை வெளியே கொண்டுவாருங்கள். ஆள் மாறாட்டங்கள் இனத்திற்கே ஆபத்தானது.1 point- இமாலயபிரகடனம் - தெளிவற்றதாக காணப்படுகின்றது - நாட்டின் சகவாழ்விற்கும் ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது அவசியம்- மெதகம தம்மானந்த தேரர்
1 point- கருத்து படங்கள்
1 point1 point- GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
Ekuruvi Tamil · கனடிய தமிழர் பேரவை முன்னாள் தலைவர் ஒருவர் கனடிய தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்துவதாக இலங்கை அரசை வந்து சந்தித்துள்ளார் . அவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர், அவரது தலைமையில் இயங்கிய கனடிய தமிழர் பேரவையின் அலுவலகர் ஒருவர் மீது பாலியல் குற்றசாற்றை பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து நேரடியாக அவரிடம் சமர்ப்பித்த போது அதை விசாரிக்காமல் தட்டிக் கழித்து விட்டார் . அன்றிலிருந்து அவரும் அந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு உடந்தையாக நான் கருதுகின்றேன் . தமிழ் சமூகத்துக்கான எந்தவித தகுதியும் அற்ற ஓருவர் எப்படி எங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் ? இதை வன்மையாக கண்டிக்கின்றேன் . மேலும் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பினை தடுப்பதற்கும் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் கனேடிய அரசாங்கத்தின் முதுகில் குத்தும் துரோகத்தனத்தை இவர்கள் செயல் ஏற்படுத்தியிருக்கின்றது. கனேடிய அரசாங்கம் தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்கு பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் அயராத உழைப்பே காரணமாகும். கனேடிய அரசாங்கம் தடை செய்த இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து அவரகளின் அன்யையும் ஆசியைப் பெற்றுக் கொண்டமை மூலம் இவர்கள் கனேடித் தமிழர்கள் முகங்களில் கரி அள்ளிப் பூசிவிட்டுள்ளார்கள். இனி கனேடிய அரசிடம் தமிழர்கள் எந்த உதவியையும் பெற முடியாத அவலத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த செயல். எங்களை போன்ற தாயக கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கும் இவர்களின் பொருப்பற்ற கோமாளி செயல் இடையூறை ஏற்படுத்துகின்றது . நவஜீவன் அனந்தராஜ் @Kandiah57.....இப்பிடித்தான் ..கபிதான் ..இதைப்போல்தான் கொட்டுவார்....நானும் இதை மேய்ஞ்சுதான் பிடித்தனான்...ஒரு கல்லிலை இரண்டு மாங்காய் என்பது இதுதானோ..1 point- GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
இது பில்டப்புத்தான்...உள்ளேபோனால் ..ஒன்றுமே இருக்காது...இந்த யாழில் இதுபோல எத்தினையை பார்த்திட்டம்....1 point- வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் - டக்ளஸ்
இந்த பாலியாறு கிளிநொச்சி மாவட்த்தின் கீழ் வருகின்றது. அடுத்தவருடம் முதல் யாழ் மாவட்த்திட்கு கடல் நீரை நண்ணீராக்கும் (RO வாட்டர்) திடத்தின்மூலம் நீர் வழங்கப்படும். அநேகமாக எல்லா இடங்களும் இதன்மூலம் நீரை பெற்றுக்கொள்ளும். பாலியாறு திடடமானது அநேக வருடங்களாக பேசப்பட்டு பணம் ஒதுக்கினாலும் செயட்படுத்தப்படவில்லை. இங்கு நீர் தேக்கிவைக்கப்பட்டு வழங்குவதட்கான ஒரு திடடம். மழை இல்லாவிட்ட்தால் அது பிரச்சினையாக இருக்கும். யாளிட்கு வருடம் முழுவதும் நீர் வழங்கமுடியாது. இருந்தாலும் ஓரளவிட்கு தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த திடத்தின் மூலம் யாழின் சில பகுதிகளும், பூநகரி, மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளுமே உள்ளடக்கப்படும். இந்த திடத்திற்கு எட்கேனவே கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி சில வேலைகள் நடந்தாலும் அது காரணங்களால் தடைபட்டு போயுள்ளது. நிறைவேற்றினால் நல்லதுதான்.1 point- GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
இதற்கு காணொளி ஆதாரம் உள்ளதா? கரி ஆனந்தசங்கரி கதைப்பதை ஏன் இணைக்கமுடியவில்லை?1 point- பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான மாணவர்களுக்கு பிணை
கிழக்கிலே தாடி வைத்தவர்கள்தான் இப்போது அதிகமாகிக்கொண்டு போகிறார்கள். எனவே இப்படியான சோகங்களை எதிர்பார்க்கலாம்.1 point- GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
சும்மா போங்க” கொஞ்சம் தானே கேட்டேன் பார்த்து கொஞ்சம் தாருங்கள்” நான் பலமடங்காக திருப்பி தருவேன் 🤣 என்ன செய்வது கேட்டு வாங்க வேண்டிய நிலமை. ஆனால் நீங்கள் கேட்காம கொடுக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும்1 point- தவறாக பயன்படுத்தப்படும் தமிழர்களின் அரசியல் வெற்றிடம்
தவறாக பயன்படுத்தப்படும் தமிழர்களின் அரசியல் வெற்றிடம் ஆய்வாளர் அருஸ்1 point- அமெரிக்கா, சீனாவை விஞ்சி சிப் உற்பத்தியில் தைவான் கொடி கட்டிப் பறப்பது எப்படி?
இந்த சிலிகான் சிப்ஸ் போறபோக்கைப் பார்த்தால் ஒரு குண்டூசியின் தலையளவு சிப்ஸில் கூட நிறைய விடயங்களை பொதிந்து வைத்து விடுவார்கள்போல இருக்கின்றது......வளரட்டும் தொழில்நுட்பம் ......! 👍1 point- சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை!
இப்படி எல்லாம் வாய் சவாடல்கள் விட்டுக்கொண்டு திரிந்தால் தன் அடுத்த தேர்தலில் தமிழர்களின் பிரதேசங்களில் வெற்றி பெற்று 16 எம்பிக்களையும் தாங்கள் பெற்று கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள் போலும்.1 point- துவாரகா உரையாற்றியதாக...
1 pointநெடுமாறனுக்கும் காசி ஆனந்தனுக்கும் நாட்டு அச்சுறுத்தல்கள் இருக்கலாம். யார் கண்டார்? ஆனால் டென்மார்க்கில் வசிக்கும் அருணாவிற்கு அந்த சாத்தியம் குறைவு அல்லது இல்லை. எனவே அருணா அவர்கள் துவாரகா பற்றிய காணொளிக்கு ஒரு அறிக்கை அல்லது ஏதாவது தகவல்கள் சொல்லியே ஆக வேண்டும். ஈழ மக்கள் பிரச்சனை அவர்கள் வீட்டுப்பிரச்சனை அல்ல. வந்து கண்டது கிண்டது எல்லாத்தையும் உளறிப்போட்டு போவதற்கு...... நீங்கள் நேரடி தொடர்பில் இருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.1 point- துவாரகா உரையாற்றியதாக...
1 pointடென்மார்க் அருணா அக்கா ஒரு பேட்டி குடுத்து பிரச்சனையை முடிக்க வேணும். 😛1 point- GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
ஹிந்தியாவின் அனுசரணையில் நடக்கும் நாடகம் இது. நாய் வாலை நிமிர்த்தலாம் என்று போயிருக்கினம். இருக்கிற கோவணத்தையும் இழந்து திரும்புவினம். ஆனால் இதுகளால் சர்வதேச அரங்கில் நல்லிணக்கம் கூக்குரல் இன்னும் பலமடையும். இதனால்.. தமிழர்களின் இழப்புக்கு எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை. சிறுகச் சிறுக கட்டிய சில நம்பிக்கைகளும்.. சிதைக்கப்பட்டதாகவே முடியும்.1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 08 அபாயம் நெருங்கியதென அச்சப்பட்டு அசையாது நின்றான் சங்கன். கலவரத்தோடு உடல் வியர்த்து மூச்செறிந்தவன் சட்டென கருவறைக்குள் பதுங்கினான். அவனை விழிப்புற வைத்த சத்தம் சில நிமிடங்களிலேயே வெட்டுண்டது. அரிய விலங்கென மடிந்திருந்த தன்னுடலைத் தளர்த்தி விரித்தான். ஆறடி உயரமான ஆகிருதி. தலையுயர்த்தி எழுந்தான். வைரவர் விக்கிரகத்தை அடியோடு தகர்த்து அதனடியிலிருந்த தகடுகளை எடுத்தான். பழமையான ஐம்பொன் சிலைகளை ஈரச்சாக்கில் போட்டான். உண்டியலைப் பிளந்து நாணயங்களை மணல் நிரப்பப்பட்ட சிறிய பைக்குள் போட்டான். தாள் காசுகளை ஈரமான உள்ளாடைக்குள் சுருட்டி வைத்தான். தன்னுடைய தடயங்கள் ஏதேனும் விடுபட்டு இருக்கிறதாவென மீளாய்வு செய்தான். எதுவுமில்லை. காலடித்தடங்களையும் அழித்து கோவிலை விட்டு வெளியேறினான். எத்தனையோ களமுனைகளில் வேவு பார்த்து வென்ற கண்கள். எதிரியின் காலடி வரை ஊர்ந்து சென்று நோட்டமிட்ட தீர உடல். எத்தனையோ பகலிரவுகள் சடமென உருமாறி பகைவர் வழியில் அமைந்திருந்த வல்லபம் சங்கனுடையது. மனுஷ வாடையறியும் கூர் நாசி. பாம்பின் லாவகமாய் நிலம் நீந்தி மறைபவன். தேரைகள் மறைந்து கொள்ளும் இடுக்குகளில் கூட இருந்தான் என்பார்கள். எதிரின் தோல்வியைத் தீர்மானிக்கும் வேவுக்காரன். இயக்கத்தின் தலைவரால் பலமுறை கெளரவிக்கப்பட்டவன். தளபதிகளின் நேசன். சங்கன் பணியாற்றிய களமுனையில் எதிரிகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் அதிரடியாக முறியடிக்கப்பட்டன. மண்ணை அபகரிக்கும் வன்கவர் வெறியர்களுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் சங்கன் ஒரு சுருட்டை பாம்பு. அவனிருந்த இடத்தை யாரும் அறியார். எதிரிகளின் காலடிக்குள் மிதிபட்டும் மனுஷ பாவனை காட்டாமல் மரக்குத்தியென கிடந்தது தப்பியவன். அத்தனையும் தடயமற்று அழிந்து போயிற்றே என்று கலங்கிய கண்களையும் துடைக்காமல் சாக்குப்பையை சுருக்கிட்டு கட்டினான். பசி எரிந்து உளம் புகையும் ஏழ்மையின் வயிற்றில் துடிதுடிக்கும் புழுவான வாழ்வு சங்கனுக்கு நேர்ந்திருந்தது. கோவிலை விட்டு வெளியேறி கோபுரத்தை வணங்கினான். கற்பூரச் சட்டியில் இரண்டு பெட்டி காவடி கற்பூரத்தை வைத்துவிட்டு மெல்ல நடக்கத்தொடங்கினான். கொஞ்சத் தூரத்திலேயே அவனைத் தன்னுள் புகுத்தியது இருள். அதிகாலையிலேயே வைரவர் கோவில் பூசாரியின் ஓலம் சனங்களை அழைத்தது. ஐம்பொன் சிலைகள், தகடுகள், உண்டியலென ஒன்றும் மிச்சமில்லாமல் துடைத்து வழிக்கப்பட்டிருந்தது. சூறையில் வேர் பிளந்து தரைவிழுந்த மரமென கருவறை விக்கிரகம் தூக்கி வீசப்பட்டிருந்தது. சனங்கள் மண்ணைவாரி தம்மிலடித்துக் கொண்டனர். “எங்கட ஊர்க்காரன் வைரவரில கை வைச்சிருக்க மாட்டான். கேணியடிக்காரர்கள் தான் வேலையைக் காட்டியிருக்கினம்” முதல் அனுமானத்தைச் சொன்னார் செல்லையா. “அண்ணா என்னவாய் இருந்தாலும் பொலிஸ்ல போ கேஸ் குடுப்பம். அதுதான் முறையாய் இருக்கும்” என்றவர் கொக்குவில் மாமா. “இவ்வளவு சண்டைக்குள்ள தப்பி, கஷ்டப்பட்டு திரும்பவும் ஊருக்கு வந்தோமெண்டு நினைச்சு கோயிலை புனரமைப்புச் செய்தால், களவெடுத்துக் கொண்டு போறாங்களே” என்றனர் ஊர்ப்பெண்கள். “இப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள். கேணியடி ஊருக்குள்ள புகுந்து ஒவ்வொருத்தனையும் பழி சொல்லி அடிக்கப் போறியளோ” என்று குரல் உயர்த்தினார் விநாயகம். “முதலில கேஸ் குடுக்கலாம். வெளிக்கிடுங்கோ” அழுத்தமாகச் சொன்னார் கொக்குவில் மாமா. “எல்லாத் துன்பத்துக்கும் இவங்கள் தான் காரணம். இவங்களிட்ட போய் நிண்டு எங்கட தெய்வத்தோட சிலை களவு போட்டுதெண்டு முறைப்பாடு கொடுக்க எனக்கு விருப்பமில்லை” என்றார் செல்லையா. “நீங்கள் சொல்றதெல்லாம் நூறுவிதம் சரிதான், ஆனால் வேற என்னதான் வழி. தொடர்ந்து களவு கொடுத்திட்டு இருக்கேலுமோ” கொக்குவில் மாமா கேட்டார். “நாட்டைப் பறிச்சு வைச்சிருக்கிறவனிட்ட போய், கோயிலில களவு போச்செண்டு சொல்லுறதோ” செல்லையாவின் பதில் கேள்வியில் கோபம் அதிகரித்திருந்தது. ஒரு வெள்ளைத்துணியில் சில்லறையை முடிந்து கோவில் வாசலில் கட்டிய செல்லையா “இந்த அநியாயத்த செய்தவன் எவனாயிருந்தாலும், இன்னும் ரெண்டு நாளில இங்க வந்து நிப்பான். வைரவர் பொல்லாதவர். அவற்ற கோபத்துக்கு ஆளானால் அவன்ர குலம் தழைக்காது” என்றார். சில நாட்களிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து கேதீஸ்வர குருக்கள் வரவழைக்கப்பட்டார். விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. களவாடியவனே விரைவில் எல்லாப் பொருட்களையும் கொண்டு வந்து ஒப்படைப்பான் என அருள் வாக்கு சொன்னார் பூசாரி. சனங்களும் அப்படி நிகழவேண்டுமென விரும்பினர். சங்கன் திருடிய பொருட்களை முந்திரித் தோப்பொன்றில் புதைத்து வைப்பது வழக்கம். ஏற்கனவே தாமரைக்குள முருகன் கோவிலில் திருடிய தங்க வேல் ஒன்றும் அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வியாபாரப் பேரம் சரியாகப் படியவில்லை. பத்தர் காந்தியோடு மல்லுக்கு நின்றான். “இந்த வேல உருக்கி தங்கக்கட்டியா மாத்திறத்துக்கு எனக்கு கூலி வேண்டாமடாப்பா, ஆனால் நான் சொல்ற விலைக்கு தா” “பத்தரே, நான் சொல்றது தான் காசு. உங்களால வாங்க முடியுமா, முடியாதாவெண்டு சொல்லுங்கோ. எனக்கு உங்கட கூலி இனாமெல்லாம் வேண்டாம்” “உனக்கு உதவி செய்ய இஞ்ச வேற ஆருமில்லை. என்னைத் தவிர எந்தப் பத்தனும் இந்த வேலைக்கு துணிய மாட்டான். விளங்கி நட” “பத்தரே, கரட்டி ஓணான் வெருட்டி**க்குமாம். நீங்கள் அதுக்குத் தான் முயற்சிக்கிறியள். அது என்னட்ட சரிவராது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனான். ஐம்பொன் சிலைகளையும் தகடுகளையும் புதைத்துவிட்டு, சில்லறைகளை எண்ணி முடித்தான். இரண்டாயிரத்து நான்கு ரூபாய் இருந்தது. முந்திரித் தோப்பிலிருந்து வீட்டுக்கு போகிற வழியிலிருந்த முருகன் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் குற்றியை இட்டு கும்பிட்டான். “முருகனே, நான் செய்யிறது பிழை தான். ஆனால் வேற என்ன செய்ய ஏலும் சொல்லு. இத்தனை துன்பங்களைத் தந்த அரசாங்கத்தையே தண்டிக்காத நீ, உன்னட்ட களவெடுத்த என்னையும் தண்டிக்க மாட்டாய் என்றொரு நம்பிக்கை. என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று உன்திரு வடியை உறுதியென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க” என்று பாடிக்கொண்டான். எதிர்ப்பட்ட எல்லோரும் சங்கனைப் பார்த்து அகமகிழ்ந்து புன்னகைத்தனர். “சங்கன் நாளைக்கு ஒரு கிணறு வெட்டிருக்கு வாறியோ” வழிமறித்த கிளியனிடம் வருகிறேன் என்றான். கொக்குவில் மாமா பொலிஸ் ஸ்டேசனில் முறைப்பாடு கொடுத்தார். கோவிலில் களவாடியவனை பிடித்து தரவேண்டுமென ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் கடிதம் எழுதி அளித்தார். இவ்வளவு தாமதமாக வந்து முறைப்பாடு தந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியுமென பொலிஸ் ஆவேசம் கொண்டது. “தெய்வம் பிடிச்சுத் தருமெண்டு வெயிட் பண்ணினாங்கள். அது நடக்கேல்ல, அதுதான் உங்களிட்ட வந்திருக்கிறம்” என்றார். பொலிஸ்காரர்கள் புல்லரித்துப் போனார்கள். கண்டிப்பாக அவனை கைது செய்துவிடுவோமென சிலர் நம்பிக்கையளித்தனர். இந்தச் செய்தியை ஊர்முழுவதும் தேநீரோடு பருகியது. சங்கன் எல்லாவற்றையும் அவதானிக்கத் தவறுவதில்லை. வீட்டு முற்றத்தில் மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலின் கையில் லேசாக அடித்து நெஞ்சோடு தூக்கி அணைத்தான். சமையலிலிருந்த மலரினி வெளியே வந்து உங்கட மோளுக்கு ஒரு லோட் மண் வாங்கினால், இருபது வயசு மட்டும் சாப்பிடக் காணும்” என்றாள். வீட்டுக்குப் பின்னாலிருந்த சிறிய கொட்டிலில் இரண்டு போதல்களில் கள்ளு இருந்தது. பொரித்த சூடை மீனோடு கள்ளைக் குடித்து முடித்து அங்கேயே உறக்கம் கொண்டான். மலரினியும் சங்கனும் போராளிகளாக இருந்தவர்கள். ஒரே களமுனையில் சந்தித்துக் கொண்டவர்கள். வேவு அணிக்கு தலைமை தாங்கிய சங்கன் களமுனையிலுள்ள ஏனைய படையணிகளுக்கு வழங்கிய தகவல்கள் மாபெரும் வெற்றிகளை அளித்தது. மலரினி மகளிர் படையணியொன்றின் முக்கியமான தாக்குதல் அணித்தலைவியாக இருந்தாள். நிலமும் பனையும், களமும் சேனையும் சொந்தமாகவிருந்த நாட்களில் இருவரும் காதல் உறவெய்தினர். பின்னர் எல்லாமும் கானலெனக் கலைந்தவொரு காலத்தில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டனர். போராளிகளாகவிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்பு திருமணம் செய்தனர். முதற்குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் வந்துதித்த பெண் குழந்தைக்கு நந்திக்கடல் என்று பெயர் சூட்டினான் சங்கன். பல்வேறு களவுச் சம்பவங்களை ஆராய்ந்து பொலிஸ் தேடுதலை நடத்தியது. கோவிலில் நிகழ்த்தப்படும் களவுகளில் மட்டுமே எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லையென ஒரு சிறந்த புள்ளியை இனங்கண்டார்கள். திறமையாக திட்டமிடப்பட்டு ஒரு குழுவால் செய்யப்படுவதாக உத்தேசித்தார்கள். தடயமில்லாத ஒன்றின் பின்னால் பயணிக்க இயலாது. அது ஒன்றாகவோ நூறாகவோ கூட இருக்கலாம். பொலிஸ் கைவிரித்தது. எங்கும் பிடி கிடைக்காமல் துருவித் துருவி விசாரித்தனர். சங்கன் கூலி வேலைக்குச் சென்றான். கிணறு வெட்டுவது உடல் வருத்தும் பணி. தசை தசையாக நோவெழும். வயிறு முட்ட கள்ளுக் குடித்தாலும் அலுப்புத் தீராது. இன்று வேலை முடிந்ததும், நேராக பத்தர் ஒருவரைப் பார்க்கச் செல்ல வேண்டும். இவனோடு இயக்கத்தில் இருந்த தோழமை. இப்போது வட்டக்கச்சியில் இருக்கிறான். பொன்னுருக்கும் கூடம் வைத்து சின்னச் சின்ன வேலைகள் செய்வதாக அறிந்திருந்தான். ஒருதடவை சென்று அவனிடம் கதைத்துப் பார்க்கலாமென சங்கனுக்குத் தோன்றியது. வட்டக்கச்சியிலுள்ள வெத்திலை பத்தரின் வீடு தேடிக் கண்டுபிடித்தான். உள்ளே இரண்டு நாய்கள் கட்டப்பட்டிருந்தன. வெளியே நின்று பட்டாம்பூச்சி என்று அழைத்தான் சங்கன். இரண்டு கைகளுமில்லாது வீட்டு வாசலில் வந்து நின்றவொரு உருவம் “நீங்கள் ஆர்” என்று கேட்டது. சங்கனால் அந்தக் குரலை உணர முடிந்தது. “பட்டாம்பூச்சி நான் வியட்நாம். உந்த நாயளைப் பிடி மச்சான்” என்றான். அந்த உருவம் அற்புதமொன்றைக் கண்டதைப் போல திகைப்படைந்து சங்கனை நோக்கி ஓடிவந்தது. அப்போதுதான் பட்டாம்பூச்சியின் முகத்தைப் பார்த்தான் சங்கன். தீக்காயத்தின் தழும்பு மெழுகெனவிருந்தது. கண்கள் எரியும் திரியென சிவந்திருந்தன. வெறிகொண்ட சூனியம் தங்கிய மேனி. “பட்டாம்பூச்சி நாயளைப் பிடி, நான் வியட்நாம்” என்றான். பட்டாம்பூச்சி நாய்களை விரட்டினான். உள்ளே வாங்கோ என்பதைப் போல ஒரு தலையசைப்பு. சங்கன் அவனைக் கட்டித்தழுவினான். பட்டாம்பூச்சி பெருங்குரலெடுத்து விம்மி அழுதான். “ஏன் மச்சான் இப்பிடி குழந்தையள் மாதிரி அழுகிறாய், அழாதே” என்றான். “நீ வீரச்சாவு எண்டு கேள்விப்பட்டனான். அதுவும் ஆனந்தபுரம் பொக்சில. அங்க நிண்டனியோ” பட்டாம்பூச்சி கேட்டான். “நீ கேள்விப்பட்ட மாதிரியே வீரச்சாவு அடைஞ்சிருக்கலாம். ஆனால் இப்ப கிடந்தது உத்தரிக்க வேண்டியிருக்கு” “இயக்கத்திலையும் சரி, சாவிலையும் சரி முடிவு நாங்கள் எடுக்க ஏலாது. ஏற்கனவே எழுதின தாளில கோடுபோட முடியாதெல்லே” “டேய், பட்டாம்பூச்சி தத்துவம் கதைக்கிறது இன்னும் குறையேல்ல. நீ எங்க காயப்பட்டனி. இப்படி எரிஞ்சு போய் இருக்கு” தன்னுடைய இல்லாத கைகளின் மீதத்தைக் காட்டி “இது ரெண்டும் மாத்தளனில போனது. அதுக்குப் பிறகு மெடிஸ்ல இருந்தனான். அங்க பொஸ்பரஸ் குண்டு முகத்தை எரிச்சுப்போட்டுது” “இப்ப முந்திய விட நல்ல வடிவாய் இருக்கிறாய் மச்சான்” “ஓமடா, வெளிநாட்டில தான் கலியாணம் பார்க்கினம். போட்டோவ பார்த்த ஒரு பிள்ளையும் நீ சொன்ன மாதிரி சொல்லுதில்லை.” “ஏன் இஞ்ச இருக்கிற பிள்ளையை நீ கலியாணம் செய்ய மாட்டியோ. உனக்குத் தானே தொழிலிருக்கு” “இப்ப என்ர முடிவுகளை நான் எடுக்கிறதில்லை. நான் எடுத்த முடிவுகள் முள்ளிவாய்க்காலோட முடிஞ்சுது. இனிமேல் அக்காமார் சொல்றத கேட்டு நடப்பம்” “அதுசரி, உன்னட்ட ஒரு விஷயம் சொல்லவேணும். அது எங்கட இயக்க ரகசியத்துக்கு ஒப்பானது. நீ ஆரிட்டையும் சொல்லமாட்டேன் என்றால் சொல்லுகிறேன்” “வியட்நாம் எனக்கு எந்த ரகசியமும் நீ சொல்ல வேண்டாம். நான் அதை வைச்சு என்ன செய்யேலும் சொல்லு” “இல்ல,நீ எனக்கொரு உதவி செய்ய வேணும். அது உன்னால மட்டும் தான் முடியும்” “எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்ல. சரி என்ன விஷயம் சொல்லு” சங்கன் எல்லாவற்றையும் சொல்லி இறுதியில் “அந்த வேல் இப்பவும் என்னட்டத் தான் இருக்கு. நீ உருக்கித் தரவேணும். எங்களை மாதிரியிருந்து இண்டைக்கு கஷ்டப்படுகிற ஆக்கள் நிறையப் பேர் இருக்கினம். அவையளுக்கு பிரிச்சு குடுக்கலாம்” என்றான். பட்டாம்பூச்சி சரியென்று தலையசைத்தான். மூன்று நாட்கள் கழித்து அதனை எடுத்துவரும்படி சொன்னான். சங்கன் சந்தோசத்தோடு விடைபெற்றுச் சென்றான். மழையும் மின்னலும் இரவில் விழுந்தன. சங்கன் நனைந்து நடுங்கியபடி நெருப்புக்குச்சியைத் தட்ட முயற்சித்தான். சிறுஞ்சுடர் அணிந்த அவளது கண்கள் சங்கனைப் பார்த்தது. அவளது கழுத்தில் அணியப்பட்டிருந்த அலங்கார நகையைக் கழற்றி பையில் போட்டான். கைகளைத் துடைத்து மீண்டுமொருமுறை நெருப்புக்குச்சியைத் தட்டினான். அம்மன் முகத்தில் மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது. சங்கன் அவளது நெற்றியில் குங்குமமிட்டு வணங்கினான். கையில் கிடைத்த ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றி அங்கிருந்து வெளியேறினான். கோவிலின் வெளிப்புற கதவடியில் கறுப்பு நிறச்சேலை அணிந்த குமரியொருத்தி ஆங்காரமாய் சங்கனை இடை மறித்தாள். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. எடுத்தவற்றையெல்லாம் என் கழுத்தில் அணிவித்து உன் உயிரைக் காப்பாற்று என்றாள். “நீ ஆர், உனக்கேன் அணியவேண்டும்” “நான் தெய்வம். உன்னைக் காத்து நிற்கும் தெய்வம்” “சமாதானத்துக்கான யுத்தம், நல்லிணக்கத்திற்கான அரசு, போர்க்குற்ற உள்ளக விசாரணை போல காத்து நிற்கும் தெய்வம், எவ்வளவு பெரிய பம்மாத்து. சனியனே தள்ளி நில்” என்று சுட்டியலை எடுத்து ஓங்கிய சங்கனைக் கண்டு தெய்வம் மறைந்தது. மின்னல் விழுந்தது. இடி முழங்கிற்று. எப்போதும் போல் காற்றின் அரவம் அன்றில்லை. சங்கன் முந்திரித் தோப்புக்குள் நுழைந்து மண்ணைத் தோண்டி நகையையும் சிலைகளையும் புதைக்க ஆயத்தமானான். அப்போது மின்னல் வெளிச்சமொன்று பூமியில் விழுந்தது. அவனின் முன்னே ஓருருவம் நிற்பதைப் போல எண்ணினான். வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகத்தைக் கண்டான். ஒளிதுலங்கிய கண்கள். விடுதலையின் கனல் சுமந்த நிமிர்வின் மேய்ப்பன். கம்பீரத்தின் ஞானம் தரித்தவன். திகைப்புக்கும் மிரட்சிக்கும் உள்ளாகிய சங்கன் “தெய்வமே எங்களை ஏன் கைவிட்டாய்” என்று எழுந்தோடிப் போனான். அவனை இறுக அணைத்தபடி அந்த உருவம் சொல்லிற்று. “ஒரு மகத்தான தோல்வியைக் கூடத் தராது யுத்தம் தான் எங்களை கைவிட்டது. இதன்பொருட்டு என்னோடு பொருதாதே இளையவனே” மீண்டும் ஒரு இடி மின்னல். சங்கனை அணைத்த உருவம் அப்போதில்லை. முந்திரித்தோட்டம் முழுதும் சுழன்று பார்த்தான் எவருமில்லை. எடுத்து வந்த பொருட்களை புதைத்தான். அங்கிருந்து வீட்டுக்கு நடக்கலானான். அந்தப் பேரிருளிலும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து மண்ணள்ளித் தின்னும் நந்திக்கடலைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “தெய்வம் எங்களைக் கைவிடாது” என்றான். நந்திக்கடல் தனது கைகளில் கிடந்த மண்ணை சீற்றம் கொண்டு குருதியால் துருப்பிடித்த இரவின் முகத்தில் எத்தினாள். https://akaramuthalvan.com/?p=13351 point- துவாரகா உரையாற்றியதாக...
1 point"நான் தேடி அறிந்த வரையில்" இது உண்மையே. எனது வாய்வுக்களை நான் கீழே விடுகிறேன், வாசித்துப் பாருங்கள்.யே. அவர் நான்கு முகப்புப் படங்கள் வைத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. அதில் இரண்டு மட்டும் தான் என்னால் காணக்கூடியவாறு உள்ளது. ஏனைய இரண்டையும் பார்க்க முடியவில்லை. ஆகையால் அவற்றில் இரண்டு சேரமான் கொடுத்துள்ள மூன்றில் இரண்டாக இருக்கலாம் என்பது "என் துணிபு" மேலும் சோத்துமானின் திரைப்பிடிப்புகள் தொகுக்கப்பட்டவையாகத் தெரியவில்லை. அவை உண்மையானவையே. இதே போன்ற "Pray for Sri Lanka" முகப்புப் படங்களை தேடிப் பார்த்து அறிந்துகொண்டேன். இவை பொதுவெளியில் வெளியான பின்னர் இவர் அவற்றை தனது வேசுபுக்கில் மறைத்துள்ளார்/ நீக்கியுள்ளார் (எனது கண்காளல் அதனைக் காண முடியவில்லை.). அத்துடன் சேரமான் சொல்வது போல மே 19, 2016 அன்று இவர் உண்மையிலையே கேக் வெட்டி யாரோ ஒருவரினது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அதற்கான படங்களும் உள்ளன. மேலும் மேற்கண்ட நிகழ்படத்தில் அவரே வாக்குமூலம் ஒத்துக்கொண்ட பின்னர், இது பற்றி நாம் நோண்ட வேண்டியதில்லை. -------------------------------------------------------------------- சரி இப்போது சோத்துமான் இவற்றை வெளியிட வேண்டிய நோக்கம் என்ன? அவர் அதை அவ்வாறு வேசுபுக்கில் போட்டதால் ஒன்றும் பெரிதில்லை, எதையும் இழந்திடப் போவதுமில்லை. வெளிநாடுகளில் சிறிலங்காவின் கொடியை முகப்பில் போட்டு விட்டு மாவீரர் நாளிற்கு ஸ்ரேரஸ் போடும் பலரை எனக்குத் தெரியும் என்றெல்லாம் நான் முட்டுக்கொடுக்க மாட்டேன். சோத்துமான் இதனை இப்போது பரப்புவது எதற்கெனில், தான் பங்கு பற்றியுள்ள போலித் துவாரகா நாசத் திட்டம் தோல்வியில் சென்றதால் அதற்கு எதிராக வலுவான சாட்சியாக இருக்கும் இவரை ( இவரது மரபணு சோதனை என்பது மிக வலுவானது) கோதாவிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக மட்டுமே. இந்தப் படங்களை எம்மை ஆதரிக்க அல்லது பார்க்கத் தூண்டுவது என்பது தோல்வியில் உள்ள இத்திட்டத்திற்கான மெய்யானவர்கள் தரப்பின் வலுவான வலுவெதிர்பாக உள்ள இவரையும் இவரது மரபணு சோதனைக்குத் தயார் என்ற இவரது முடிவையும் இல்லாமல் செய்வதோ அல்லது அவ்வாறு ஏதேனும் நடைபெற்றால் இது போன்ற படங்கள் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்வதோ தான் சேரமானின் திட்டமாகும் என்பது என்னுடைய துணிபு. ஆகையால் நாம் இதனை அறிந்து இவருக்கு எதிராக எதையும் செய்யமல் இருத்தல் போலித் திட்டத்தை இல்லாதொழிக்கும் குறுகிய கால நன்மையைத் தரும் (ஆயினும் இவர்கள் இப்போலித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்பது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளில் இருந்து எம்மால் ஊகிக்கக்கூடியவாறு உள்ளது.). ஆயினும், இப்படங்களை அறிந்து வைத்துக்கொள்ளுதல் இவர் தொடர்பாக நாம் அறிந்து வைத்துக்கொள்ள உதவும்.1 point- நடனங்கள்.
1 point- 'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்
1 pointஎன்னதான் நளபாகம் செய்ய தெரிந்தாலும்…பகலாபாத் எப்படி கிண்டுவது எண்டு யூடியூப்பில் சமையல் குறிப்பு பார்த்து அறிந்து கொள்வதில் தப்பொன்றும் இல்லையே?1 point- 'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்
1 pointஅவை எல்லாமே பாசப் படங்கள்தான் எவ்வளவு அன்பாக அன்னியோன்னியமாக அரவணைத்து பழகுகிறார்கள்.......பின் எதற்காக அவற்றை ஆ பாசப் படங்கள் (பாசமில்லாத படங்கள் ) என்று விளிக்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை......! 😴 வெள்ளிக்கிழமையும் அதுவுமா ....சே......என்ன வாழ்க்கையடா சாமி.......! 😁1 point- யாழில்.புளியமரங்களை நட பணிப்பு
1 pointபுளியமரம் மட்டுமன்றி இலுப்பை, வேம்பு போன்ற எண்ணெய் வித்துள்ள மரங்களும் நடவு செய்யலாம்......பிற்காலத்தில் வருமானத்துக்கு உதவும்.......! 👍1 point- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
மாவீரர் ஒருவர் கப்டன் செந்தில்1 point- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
எயிற்றர் அவர்களும் மகன் படைய மருத்துவர் உயற்சியும்1 point - இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.