Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்14Points2957Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்9Points15791Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்8Points20018Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்6Points38770Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/03/24 in Posts
-
ஊருலா
7 pointsசமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும், சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன். இலங்கையில் சுற்றுலாவுக்குத்தான் இம்முறை போயிருந்தேன். பொது வேலைகள் என்று பரந்த நோக்கம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மணியனுக்கு நான் எனது வரவைப் பற்றி அறிவித்திருந்தேன். “நீ சிறிலங்காவில், எங்கே வேணுமெண்டாலும் போ. ஆனால் உன்ரை முக்கிய இருப்பிடம் எனது வீடுதான். என்னுடனேயே தங்குகிறாய்” என்று மணியன் சொல்லி விட்டான். புதுக் கட்டிடங்கள் உயர்ந்திருந்தாலும், தமிழ் பெயர்களுடன் கடைகள் பல இருந்தாலும், பாசி பிடித்து கறுப்பாக இருக்கும் மதில்கள், வீட்டுச் சுவர்கள், பள்ளம் விழுந்த வீதிகள்... என வெள்ளவத்தை முன்னர் போலவே, மாறாமல் அப்படியே இருந்தது. வெள்ளவத்தையில் கடற்கரை ஓரமாக ஆறாவது மாடியில் உள்ள மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டுக்கு மாத வாடகையாக இரண்டு இலட்சங்கள் ரூபா கேட்டார்கள். அப்படி ஒரு வீட்டில் தங்கிக் கொண்டு பல இடங்களைச் சுற்றி வரத்தான் முதலில் தீர்மானித்திருந்தேன். ஆனால் மணியன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவனது விருப்பத்துக்கு ஏற்ப அவனது வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மணியன் வீட்டின் மாடியில் ஒரு அறை எனது இருப்பிடமாகிப் போனது. முதல் நாளே இரவு படுக்கப் போகும் போது மணியன் என்னிடம் சொன்னான், “காலையில் ஏழு மணிக்கு கீழே வந்து விடு” என்று. ஏழு மணிக்கு 'சூடாக தேநீர் கிடைக்கும்' என்று மாடியை விட்டு கீழே வந்தால், “வா…வா கடைக்குப் போவம்” என்று மணியன் அவசரம் காட்டினான். பருத்தித்துறை,கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த தாமோதரத்தார், நாகேந்திரத்தின் தேநீர் கடைகள் இரண்டும் நினைவுக்கு வந்தன. இளைஞர்களாக இருந்த போது நானும் மணியனும், பொன்னையா அண்ணனின் உளுந்து வடையை பேப்பரில் வைத்து அழுத்தி எண்ணை நீக்கி, நன்னாரி சேர்ந்த ‘பிளேன் ரீ’யை பல மாலை வேளைகளில் சுவைத்து மகிழ்ந்திருந்திருக்கிறோம். ஆக மணியனும் நானும் இப்பொழுது ஏதோ ஒரு தேநீர் கடைக்குப் போகப் போகிறோம் எனக் கணித்துக் கொண்டேன். மணியனின் காரில் ஏறிக் கொண்டேன். கார் புறப்படும் போது ‘சீற் பெல்டை’ போட முயன்ற போது, “இதெல்லாம் இங்கே அவசியம் இல்லை” என்று மணியன் சொன்னான். காலை நேரம். காலி வீதியில் வாகனங்களின் சத்தம் அதிகமாக இருந்தது. ‘கோன்’ அடிக்காமல் எந்த வாகனங்களும் நகர்ந்ததாகத் தெரியவில்லை. மணியனின் கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பல வாகனங்கள் எங்களைத் தாண்டிச் செல்லும் போது அதில் இருந்தவர்கள் எங்களை முறைத்துப் பார்த்தார்கள். அல்லது எரிச்சலுடன் பார்த்தார்கள். நான் மணியனைப் பார்த்த போது, மணியன் புன்முறுவலுடன் சொன்னான், “கண்டு கொள்ளாதை. எனக்கு என்ரை கார் முக்கியம். அவையளுக்கு அவசரம் எண்டால், என்னை முந்திக் கொண்டு போகட்டும்”. ஊர்ந்து ஊர்ந்து சென்று ஒருவாறு தனது காரை ஒரு தரிப்பிடத்தில் நிறுத்தினான். ஒரு பேக்கரிக்குள் நுளைந்தான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். பாண் வாங்கும் எல்லோர் கைகளிலும் பிளாஸ்ரிக் பைகள் இருந்தன. ‘Slice Bread என்று கேட்டு அவனும் பிளாஸ்ரிக் பையில் பாண் வாங்கிக் கொண்டான். “மச்சான் சம்பலோடை பாண் சாப்பிட நல்லா இருக்கும்” என்றான். “காலமைக்கு பாண்தான் சாப்பாடோ?” “ஏன்டா, பாண் விருப்பமில்லையே? நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு சரஸ்வதி விலாஸிலே வேண்டின இடியப்பம், வெந்தயக் குழம்பு, சொதி எல்லாம் மிஞ்சிப் போச்சுடா. சூடாக்கித் தாரன். வேணுமெண்டால், நீ அதைச் சாப்பிடு. நான் பாண் சாப்பிடுறன்” சொல்லிவிட்டு என்னைப் பார்த்தவனுக்கு, இதமான காலை வெய்யிலிலும் என் முகம் வாடி இருந்தது புரிந்திருக்கும். “நீ காலமை ரீயும் குடிக்கேல்லை என்ன? வா, பால் வாங்கிக் கொண்டு போவம்” என்றவன், ஒரு பெட்டிக் கடையில் இரண்டு பால் பக்கெற்றுகளும் வீரகேசரி பேப்பரும் வாங்கினான். “வீரகேசரி வாங்கினால் தினத்தந்தி இலவசமடா” என்று சொன்னவன் அடுத்து ஒரு பழக்கடைக்கு முன்னால் நின்று கப்பல் வாழைப்பழத்துக்கு விலை கேட்டான். “ஐயா, இந்தப் பழம் இப்ப உடனை சாப்பிடலாம். இந்தச் சீப்பை வெட்டட்டே?” என்ற கடைக்காரரிடம் “ஆறு பழம் போதும்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான். “நல்ல பழம்தானேடா. ஒரு சீப்பாவே வேண்டி இருக்கலாம்” என்று கேட்ட என்னை மணியன் உடனே இடை மறித்தான். “நல்ல பழம்தான். நான் ஒரு பழம்தான் சாப்பிடுவன். சீப்பா வேண்டிக் கொண்டே வைச்சால் எல்லாத்தையும் ஒரேநாளிலே சாப்பிட்டு முடிச்சிடுவாங்கள்” மணியன் தன் வேலையாட்களை குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது. அவனுக்கு ஒரு பழம்.அவன் மனைவிக்கு ஒன்று. ஒன்றுதான் எனக்கும் வருமா? இல்லை இரண்டு தருவானா? யேர்மனியில் கிடைக்கும் பெரிய வாழைப்பழத்துக்கு இந்தச் சின்ன கப்பல் பழம் ஈடு கொடுக்குமா? கார் தரிப்பிடத்தில் ஒருவன் பச்சை உடுப்போடு காத்திருந்தான். மணியன் அவனுக்கு ஐம்பது ரூபாத் தாளை எடுத்துக் கொடுத்தான். “எதுக்கு அவனுக்கு ஐம்பது ரூபா ?” “பார்க்கிங் சார்ஜ். காரை ஒருக்கால் நிப்பாட்டி எடுத்தாலே எழுபது ரூபா. ரிசீற்றை வேண்டாமல் விட்டால் ஐம்பது” “அப்போ இந்தக் காசு அரசாங்கத்துக்குப் போகாது” “போகாது” காருக்கு வெளியே பார்த்தேன். அழுக்கான நடைபாதையில் கைகளை நீட்டிக் கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று பலர் இருந்தார்கள். பச்சை உடையுடன் ஒருவன் ஓடியோடி கௌரவமாக ஐம்பது ரூபாப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். “சமையலுக்குத்தானே வீட்டிலை ஆள் வைச்சிருக்கிறாய்? பிறகேன் கடையிலை வாங்கிச் சாப்பிடுகிறாய்?” என்று மணியனைக் கேட்டேன். “வேலைக்காரரை நாலு மணிக்கு அனுப்பிப் போடுவன். இரவுச் சாப்பாடு எனக்கும் மனுசிக்கும்தானே. ஒருநாள் இடியப்பம், அடுத்தநாள் புட்டு, பிறகு அப்பம், மசாலா தோசை, பொங்கல், கொத்து எண்டு விரும்பினதை வாங்கிச் சாப்பிடுவம். மிஞ்சுறதை அடுத்தநாள் காலமை சூடாக்கி சாப்பிடுவம். அது சுகமான வேலை” “மத்தியானத்தை எதுக்கு விட்டாய். அதுக்கும் கடையிலை வாங்கலாம்தானே?" “வாங்கலாம். எங்களுக்குத் தேவையான மரக்கறிகள் அதுவும் எங்கடை பாணிச் சமையல், மீன்,இறைச்சி எண்டு வேணும்தானே” காலை எழுந்தவுடன் பால்,பாண்,பழங்கள் வாங்குவது. பத்து மணியளவில் மரக்கறிகள், மீன் வாங்குவது, மாலையில் ஏதாவது ஒரு உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு வாங்குவது என்று ஓரிரு நாட்களிலேயை வெள்ளவத்தை எனக்கு பழகிப் போனது. கூடுதலான வரையில் மணியன் தனது பேர்ஸைத் திறக்காமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.7 points
-
ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
எங்கட இலங்கை இந்திய சனம் என்றால் , கைப்பையை மட்டுமல்ல விமானத்தில் பாவிக்க கொடுத்த ear phone, blankets எல்லாவற்றையும் அந்த அவசரத்திலும் தூக்கி கொண்டு இறங்கி இருக்கும்.7 points
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
7 points
- கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நிஷான் துரையப்பா நேற்று யாழ்களத்தை hack பண்ணினாரா? 😁 இடையில் நாலு பக்கத்தைக் காணோம்!🤪 அவருக்கு கனடாவில நல்ல சம்பளம் கிடைக்கின்றது! https://www.ontariosunshinelist.com/people/nishan-duraiappah/regional-municipality-of-peel-police-services3 points- கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
இப்பவெல்லாம் எடுத்த வீச்சுக்கு மெயின் சுவிச்சையே ஓவ் பண்ணுறாங்களே.3 points- அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
சில தவறுகளால் தரவுத் தளத்தினை (database) பின்னோக்கி நகர்த்த வேண்டிய தேவையேற்பட்டு விட்டது. இந்த வகையில் நேற்று அதிகாலை 00:00 (ஐரோப்பிய நேரம்) இல் இருந்து இரவு 21 மணி வரை பதியப்பட்ட அனைத்து விபரங்களும் இழக்கப்பட்டு விட்டது. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம்3 points- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள். யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.2 points- ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
இன்றைய பிபிசி தகவல்களின் படி, சிறிய விமானத்துக்கு பறப்பதற்கு அனுமதி அளித்து இருக்கவில்லை. ஆனால் பெரிய விமானத்துக்கு இறங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். எனவே பெரிய விமானம் தனக்கான ஓடுபாதையில் இறங்கிக் கொண்டு இருக்கும் போது, சிறிய விமானம் அதே ஓடுபாதையில் புறப்பட தொடங்கியமையால் இந்த விபத்து இடம்பெற்று உள்ளது. ஒழுங்குமுறைகளை அப்படியே கடைப்பிடிப்பதற்கு யப்பானியர்கள் உலகம் பூராவும் பெயர் போனவர்கள். மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை முறை அவர்களுடையது. வேலைக்கு போகு அவசர நேரங்களிலும் அவர்கள் ரயில் நிலையங்களில் காத்திருந்து ரயில் ஏறும் வீடியோக்கள் பல சமூகவலைத்தளங்களில் உள்ளன. விதிகளை அப்படியே கடைப்பிடிப்பார்கள்.2 points- கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
அவர் நித்திரைக்கு போனது தான் பிடிக்கல ராசா 😛2 points- அத்தான் சுட்ட இளநீர்
2 pointsகாவலூர் அகிலன் அகில் ஒரு முறை வீட்டில் உணவு சமைத்திருந்தோம் போராளிகளோடு உண்பதற்கு வந்திருந்தான் அண்ணா மேஜர் கஜன். அதற்குள் அவர்களுக்குள் ஏதோ போட்டி வந்துவிட்டது சரி சுட்டுப் பார்க்கலாம் வாருங்கள் என எல்லோரையும் அழைத்தான் அவர்களோடு அத்தானும் சேர்ந்துகொண்டார். (சாந்தன் அரசியல் துறைப்போராளி காணாமல் ஆக்கப்பட்டவர் பட்டியலில் உள்ளார்) போட்டி இளநீரைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதே...! (நிற்க ஊருக்குள் துப்பாக்கிகள் பயன்படுத்துவது தடை ஆனால் இவர்கள்தான் ஆயுதங்களை வழங்குபவர்கள் திருத்தம் செய்பவர்கள் ஆதலால் கொஞ்சம் இப்படியான செயல்களைச் செய்வர் பலமுறை தண்டனைகளும் அனுபவித்திருக்கிறான்) எல்லோருமாகச் சுட்டுச் சுட்டு வீழ்த்தி தாங்கள் எப்படிச் சுட்டோம் என்பதைக் கூறிக்கொண்டிருந்தனர் சிலர் காம்புகளின் அடியிலும் சிலர் இளநீரின் முகப்பிலும் என சுட்டிருந்தனர் இறுதியாக அத்தானிடம் துவக்கு நீட்டப் பட்டது அவர் ஒரு அரசியல் போராளி என்பதால் அது (81 )என நினைக்கிறேன். அவரை கொஞ்சம் பகுடியாக கதைத்தும் விட்டனர் ஆனால் அவர் சிரித்தபடி தன் திறமையைக் காட்டினார் துரோணாச்சாரியார் சீடனே என்ன தெரிகிறது என அருச்சுனனிடம் கேட்கும் போது பறவையின் கண்மட்டுமே தெரிகிறது என அருச்சுனன் சொன்னதுதான் எனக்கு அன்று நினைவுக்கு வந்தது எல்லோரும் ஒரு இளநீரைச் சுட்டு வீழ்த்த அவர் ஒரு குலையையே வீழ்த்தினார் . அது தவறு ஒரு இளநீரை வீழ்த்த வேண்டும் என்றவும் அவர்கள் சொன்ன இளநீரை வீழ்த்தி நான் பழய போராளி (1986 காலப்பகுதியில் பயிற்சி பெற்றவர்) அரசியலில் மட்டுமல்ல துப்பாக்கி சுடுவதிலும் நான் ஞானி என்பதை நிருபித்தார் அத்தான். அன்றோடு அவரிடம் போட்டிக்குப் போவைதை விட்டுவிட்டார்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போராளிகள் அவர்களில் பத்துப் பதினைந்துபேர் வீரமரணம் அடைந்துவிட்டார்கள் ஆனால் ஓரிருவர் புலம்பெயர்தேசத்தில் வாழ்கின்றனர் அவர்களது உலகம் மிக அழகானது என்றே நினைத்திருந்தோம் ஆபத்தானது என்பதை ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. https://www.facebook.com/photo.php?fbid=2537090856468774&set=pb.100005036528824.-2207520000&type=32 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsபொது இணக்கப்பட்டிற்கான சாத்தியம் சர்வகட்சி மாநாட்டின் இரு குழுக்களும் இணைந்து தமது இறுதியறிக்கையினை பங்குனி 15 ஆம் திகதி ஜெயாரிடம் கையளித்தன. அதனை அனைத்துக் கட்சிகளின் முன்னிலையில் பங்குனி 20 ஆம் திகதி ஜெயார் வெளியிட்டார். தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்ட மூன்று முக்கிய விடயங்கள் மிக ஆளமாக கலந்தாலோசிக்கப்பட்டு, கட்சிகளுக்கிடையே நான்கு விடயங்கள் தொடர்பாக பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். அந்த நான்கு விடயங்களையும் அவர் பின்வருமாறு விளக்கினார், 1. அரசை நடத்துவதற்கான பொறிமுறை. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் மக்களின் பங்களிப்பினை உறுதிசெய்வதற்காக மத்திய அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரங்களை பரவலாக்குவது. ஆனால், எந்தெந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்த தீர்மானங்கள் இதுவரையிலும் எட்டப்படவில்லை. 2. உள்ளூர் ஆட்சி மன்றங்களின் மீள் உருவாக்கம். ஐக்கிய தேசியக் கட்சி, கிராம அலுவலகர் மட்டத்தில் கிராம மண்டலங்களையும், உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் பிரதேச மண்டலங்களையும் தன்னிச்சையாக உருவாக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இந்த மண்டலங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய விதம் குறித்து இதுவரை ஆராயப்படவில்லை. 3. பிரஜாவுரிமையற்றவர்கள் எனும் நிலையினை இல்லாதொழிப்பது. மகா சங்கத்தினர் இதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றனர். 4. இனவன்முறைகளும் பயங்கரவாதமும். வன்முறைகளுக்கான காரணங்களும், அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளும் முற்றாக இல்லாதொழிக்கப்படுதல் அவசியம். ஜெயவர்த்தன குறிப்பிட்ட "பொது இணக்கப்பாடு" என்பதனை அமிர்தலிங்கம் நிராகரித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை அப்படியொரு பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக இதுவரையில் தாம் அறியவில்லை என்று அவர் கூறினார். இதற்கு ஜெயார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. "எனது தீர்மானமே பொது இணக்கப்பாடு" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் காட்டமாகக் கூறினார் ஜெயார். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியையும் கொடுத்த ஜெயவர்த்தன, சர்வகட்சி மாநாட்டினை வைகாசி 9 ஆம் திகதிவரை தான் ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தலிங்கம் மாநாட்டினை 7 வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கான காரணத்தைக் கேட்டார். இதற்குப் பதிலளித்த ஜெயார், சர்வகட்சி மாநாட்டின் இரு குழுக்களும் தமது அறிக்கையினைத் தயாரிக்க 7 வாரங்கள் தேவைப்படுவதாகக் சர்வசாதாரணமாகக் கூறினார். இராணுவ நடவடிக்கைக்காக சர்வகட்சி மாநாட்டினை ஒத்திவைத்த ஜெயார் ஜெயார் சர்வகட்சி மாநாட்டினை வேண்டுமென்றே 7 வாரங்களுக்கு ஒத்திவைப்பதை உணர்ந்த அமிர்தலிங்கமும், குமார் பொன்னம்பலமும் , அதனை ஆட்சேபித்து கூட்டாக அவருக்கொரு கடிதத்தினை பங்குனி 23 ஆம் திகதி அனுப்பினார்கள். அக்கடிதத்தில் அரசாங்கம் மிகப்பெருமெடுப்பில் இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தத் திட்டமிடுவதாக தாம் அஞ்சுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். அக்கடிதம் பின்வருமாறு கூறுகிறது, "பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கிறோம் என்கிற போர்வையில் தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினை அரசாங்கம் நடத்தப்போகின்றது என்கிற அச்சம் தமிழர்களின் மனதில் உருவாகியிருக்கிறது. இந்த இராணுவ நடவடிக்கைகளில் பெருமளவு அப்பாவிகள் கொல்லப்படவிருக்கிறார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்". இந்தக் கூட்டுக் கடிதத்தில் எழுப்பப்பட்டிருந்த அச்சம் நியாயமானது. ஜெயவர்த்தன உண்மையாகவே பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினைத் திட்டமிட்டு வந்தார். இஸ்ரேலில் இருந்து இராணுவ பயிற்சியாளர்களையும் , புலநாய்வு அதிகாரிகளையும் இந்த இராணுவ நடவடிக்கைக்காக அவர் தருவித்திருந்தார். தென்னாபிரிக்காவிலிருந்து இராணுவக் கவச வாகனங்களும், நவீன ஆயுதங்களும் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இத்தாக்குதல் நடவடிக்கைக்கென்று புதிதாக கஜபா ரெஜிமெண்ட் எனும் படைப்பிரிவும் உருவாக்கப்பட்டு வந்தது. தேசியப் பாதுகாப்பு அமைச்சராக லலித் அதுலத் முதலி நியமிக்கப்பட்டதோடு பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிடவேண்டும் என்கிற தெளிவான கட்டளையும், அதனை அடைவதற்கான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஜெயாரின் சவாலினை ஏற்ற புலிகள் அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட சவாலினை புலிகளும் ஏற்றுக்கொண்டார்கள். பங்குனி 24 ஆம் திகதி பருத்தித்துறையில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்தைப் புலிகள் தாக்கினார்கள். பங்குனி 26 ஆம் திகதி இரு விமானப்படை வீரர்களைக் கொன்றார்கள். சித்திரை 9 ஆம் திகதி முதலாவது கார்க்குண்டுத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டார்கள். அரச அடக்குமுறைக்கெதிராக பொதுமக்களை அணிதிரட்டி போராட்டங்களை மேற்கொண்டார்கள். ஆத்திர மேலீட்டினால் ஆரியகுளத்தில் அமைந்திருந்த நாகவிகாரையும் பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இவை அனைத்தும் ஜெயாரை கோபத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றிருந்தன. தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அதைவிடவும் பலமாகத் திருப்பித் தாக்குவதே ஜெயாரின் நடைமுறையாக இருந்துவந்தது. பழிவாங்குதலை அரசியலில் ஒரு கொள்கையாகவே அவர் கைக்கொண்டு வந்திருந்தார். ஆகவே, தமிழ்ப் போராளி அமைப்புக்களை, குறிப்பாகப் புலிகளை முற்றாக இல்லாதொழிப்பது என்று அவர் கங்கணம் கட்டினார். தமிழ் மக்கள் மீதான தனது இராணுவப் பழிவாங்கல் நடவடிக்கைக்கான புறச் சூழலை அவர் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஊடகத்துறையினைக் கொண்டு மிகக் கச்சிதமாக உருவாக்கத் தொடங்கினார். இதற்காக இரண்டுவகையான விடயங்களை அவர் மேற்கொண்டார். முதலாவது தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முற்றாக அழிப்பது. இதனைச் செய்வதற்கு மிதவாதிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இனிமேல் தேவையற்றவர்கள் எனும் நிலையினை மக்களிடையே உருவாக்குவது. ஏனென்றால், போராளிகளைக் கட்டுப்படுத்தும் நிலையினை முன்னணியினர் அப்போது இழந்திருந்தனர். இந்திய சஞ்சிகையான இந்தியா டுடேயிற்கு சித்திரை 30 ஆம் திகதி ஜெயார் வழங்கிய செவ்வியில் முன்னணியிர் தேவை அற்றுப் போய்விட்டது என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். தென்னிலங்கையின் பல ஊடகக்ங்களுக்கு தான் கொடுத்து வந்த செவ்விகளின் மூலமாகவும், தான் கலந்துகொண்ட பல கூட்டங்களில் ஆற்றிய உரைகள் ஊடாகவும் ஜெயாரின் நிலைப்பாட்டினை நாட்டிற்கு நியாயப்படுத்தும் செயற்பாட்டில் லலித் அதுலத் முதலி ஈடுபட்டார். லங்கா கார்டியனின் மேர்வின் டி சில்வாவுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேசுவதில் என்ன பலன் இருக்கப் போகிறது?" என்ற கேள்வியை லலித் முன்வைத்தார். அதற்கான பதிலையும் தானே வழங்கினார், "அவர்களுடன் பேசுவதால் எந்தப் பயனும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் தமிழ் மக்களை இப்போது பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேசாது" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஜெயாரின் திட்டத்தினைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் "பயங்கரவாத எதிர்ப்பு" நிலைப்பாட்டினை தனக்குச் சார்பாக ஜெயார் பாவிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். தனக்குச் சார்பான நாடுகளின் உதவியினைக் கொண்டு தமிழ் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிட ஜெயார் கங்க்கணம் கட்டியிருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தது. தான் பலமிழந்து போய்விட்டதை அமிர்தலிங்கம் உணரத் தலைப்பட்டார். சர்வகட்சி மாநாட்டில் பங்குனி 9 ஆம் திகதி சோபையிழந்து உரையாற்றிய அமிர்தலிங்கம் "எம்மை இந்த மாநாட்டிற்கு பேரம்பேசலில் ஈடுபட அழைத்தவரே எம்மீது வசைபாடி, எமது நம்பகத்தன்மையினை கேள்வி கேட்கும்போது, இம்மாநாடு கூட்டப்பட்டதற்கான உண்மை நோக்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான சமரசத் தீர்வு ஒன்றினைக் காண்பதல்ல என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் உறுதியாக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். மீண்டும் மீண்டும் குழுக்களை அமைத்து காலத்தைக் கடத்திய ஜெயார் ஜெயவர்த்தனா அரசியல்த் தீர்வில் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பது வைகாசி மாதமளவில் இந்தியாவுக்கும், முன்னணியினருக்கும் தெளிவாகத் தெரிந்தது. சமாதான முயற்சிகளில் இருந்து அவர் பின்வாங்கத் தொடங்குகிறார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். வைகாசி 9 ஆம் திகதி பேசிய ஜெயவர்த்தனா தான் இரு குழுக்களை அமைப்பதாக அறிவித்தார். இதன்படி முதலாவது குழு அதிகாரப் பரவலாக்கத்திற்கான பொறிமுறை, வழங்கப்படும் அதிகாரங்கள் , அவற்றின் செயற்பாடுகள் குறித்து ஆராயும். இதற்கு பிரதமர் பிரேமதாச தலைவராக இருப்பார். இரண்டாவது குழு மக்களின் அவலங்கள் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான சந்தர்ப்பங்களை அனைவருக்கும் சமமாகப் பகிர்வது, மொழி உரிமையினை நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து இக்குழு தீர்மானம் எடுக்கும். இதற்கு தேவநாயகம் தலைவராக இருப்பார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ்க் காங்கிரஸ், கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இதற்கான தமது அதிருப்தியை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியதோடு, இந்தக் குழுக்களுக்கான அமர்வுகளில் தாம் பங்கெடுக்கப்போவதில்லையென்றும், சர்வகட்சி மாநாடு மீள ஆரம்பிக்கும் வேளையில் தாம் அதில் கலந்துகொள்வதாகவும் அறிவித்தன. சர்வதேசத்தை ஏமாற்றவே முன்னணியினரை ஜெயார் பாவிக்கிறார் - போராளிகள் கூட்டத்தை ஒத்திவைத்துப் பேசிய ஜெயார், "இவ்விரு குழுக்களுக்கும் மிக முக்கியமான செயற்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வடக்கில் வாழும் பெருமளவு இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியன தொடர்பாகச் செயற்படவிருக்கும் குழுமீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதிகாரப் பரவலாக்கம் என்பது சில அரசியட் கட்சிகளில் இருக்கும் சிலருக்கான தேவை மட்டுமே. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கவனம் செலுத்துவதென்பது எதிர்காலச் சந்ததியினரின் பெரும்பாலானவர்களுக்கு நாம் வழங்கும் உதவியாகும்" என்று கூறினார். ஜெயாரின் கருத்தினை தமிழ் இளைஞர்கள் எள்ளி நகையாடினார்கள். போராளி அமைப்புக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை ஏளனமாகப் பேசினார்கள். "சர்வதேச சமூகத்தையும், மனிதவுரிமை அமைப்புக்களையும் ஏமாற்றுவதற்காகவே உங்களை ஜெயவர்த்தனா பாவித்து வருகிறார் என்று நாம் உங்களுக்கு முன்னரே கூறியிருந்தோம்" என்று அவர்கள் அமிர்தலிங்கத்தை விமர்சித்தார்கள். இதனை முன்னணியினர் பார்த்தசாரதியின் கவனத்திற்குக் கொண்டுசென்றபோது, "பொறுமையாக இருங்கள்" என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஜெயாரினால் அமைக்கப்பட்ட இக்குழுக்கள் வைகாசியில் ஐந்துமுறை கூடின. ஆனி 1 ஆம் திகதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னணியினரும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். இனப்பிரச்சினைக்கான இறுதியானதும் உறுதியானதுமான தீர்வினை உடனடியாக எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிர்தலிங்கம் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழர் தாயகத்தில் அதிகரிக்கத் தொடங்கியிருந்த இராணுவ ஒடுக்குமுறைபற்றியும் சர்வகட்சி மாநாட்டின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார். அமிர்தலிங்கம் முன்வைத்த கோரிக்கையினை ஏறெடுத்தும் பார்க்கவும் ஜெயார் விரும்பவில்லை. அவர் அப்போதுதான் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இருவாரகால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்திற்கான நடவடிக்கைகளை ஒழுங்குசெய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சீனாவிடமிருந்து பெருமளவு ஆயுதங்களைக் கோரியிருந்த ஜெயார், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஜப்பானிடமும், தென்கொரியாவிடமும் கேட்டிருந்தார்.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points- கருத்து படங்கள்
2 points2 points- கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நான் எழுதியமைக்குத்தான் நான் பொறுப்பு. உங்கள் அரை குறை விளக்கத்துக்கு அல்ல. 1. நிசானின் பின் புலத்தை வைத்து நான் அவரை சேறடிக்கவில்லை. அவர் இப்படித்தான் எமது விடயத்தை அணுகுவார் என speculation செய்யவும் இல்லை. 2. அவர் இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தார், வெள்ளை அடித்தார் என்பது சரியல்ல என்றெ எழுதி உள்ளேன். 3. ஆனால் அவர் ஒரு கனேடிய அதிகாரியாக, அந்த சீருடையில் வந்து, இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தால்…அதற்கு நாம் எதிர்வினை ஆற்றவே வேண்டும். ஏன் என்றால் அது இலங்கையின் கொலைகார அரச இயந்திரத்துக்கு வெள்ளை அடிக்கும் முயற்சி. அதை நிசான் துரையப்பாவோ…. நிக்சன் டெஸ்ட்மண்டோ…. நிக்கி டூட்வாலாவோ…..எந்த கனேடிய அதிகாரி செய்தாலும் நாம் அதை நோண்ட வேண்டும், எமது அரசியல் பலத்தை பாவித்து எதிர் வினையாற்ற வேண்டும். இப்படி செய்வதுதான் - ஒழுங்கான புலம்பெயர் தமிழ் தேசிய அரசியல். பிகு நான் நினைக்கிறேன்….யாழ்கள ஜாம்பவான்களின் அறிவாற்றல் உங்களுக்கு மிக குறைவாக உள்ளதால்…எழுதியதை கூட சரி வர வாசித்தறிய முடியாமல்…அடிக்கடி…premature புளகாங்கிதம் அடைகிறீர்கள் என.2 points- மனதும் இடம்பெயரும்
1 pointஎனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புகழ்தலுக்காகவும் காத்திருக்காது என்னால் முடிந்ததைத் துணிவுடன் எழுதுவதும் எனக்கு நிறைவைத் தருகிறது. முக்கியமாய் யாழ்களமே எனது எழுத்துக்களுக்கு ஊக்கியாய் இன்றுவரை இருக்கின்றது. அதுமட்டுமன்றி என் கதைகளை விமர்சிக்கும் அத்தனை யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகூற நான் என்றும் கடமைப்பட்டவள். சரியோ தவறோ எம் நன்மைக்காய் விடமின்றி விமர்சிப்பவர்களின் விமர்சனங்களே என் எழுத்துக்களை மெருக்கேற்றிக் கொண்டிருக்கும். நான் கேட்டவுடன் நூல் விமர்சனம் ஒன்றை எழுதித் தந்த காரைக்கவி கந்தையா பத்தமநாதன் அவர்களுக்கும், அணிந்துரையை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தந்த பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களுக்கும், அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்த யாழ்கள உறவான மூணா எனப்படும் ஆள்வாப்பிள்ளை செல்வகுமாரன் அண்ணாவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவள். என்னை எழுதுவதர்க்குத் தூண்டியதே சுமேரிய வரலாறு பற்றிய தூண்டாலே. அதுபற்றிய அடிப்படை அறிவை என்னுள் தூவிய மறைந்த நாதன் சிவகணேசன் அண்ணா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். அணிந்துரை தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராகஅறியப்படுபவர்.| அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக“மனதும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவருகின்றது.ஈழத்துத் தமிழ் புனைவு வெளி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினது பங்களிப்பால் சற்று அகலக்கால் வைத்தது என்பதை எவரும் மறுபதற்கில்லை. ஈழத்துக் குடாநாடு, இலங்கைத் தீவு என்ற நிலவியல் எல்லைகளுக்குள் நீண்ட காலம் பயணம் செய்த புனைவு வெளி, ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு என்ற செயற்பாட்டாலும் அதன் வழி உருவான கருத்துருவாக்கங்களாலும் 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்" என்ற அந்தஸ்த்தைப் பெற்றது. அதன் பேறாக, நாடுகளும், இயற்கையும் தட்ப வெப்பநிலைகளும், வாழ்வியலும் நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் நமது மனக்கண்முன் விரிந்தன. 'உலகமயமாதல்" என்ற கருத்தியல் அல்லது 'சுருங்கிய உலகு" என்ற கருத்தியலுக்கு அமைவாக எல்லாம் தான் எமது காலடியில் வந்து குவிந்தன. இதனால் புளகாங்கிதங்களும் கூடவே துயரங்களும் நம்மிடையே நிரம்பி வழிந்தன. மேற்குறித்த கருத்து நிலைகள் ஓரளவிற்குத் தேய்மானங்கண்டுள்ள நிலையில் தற்போது புலம்பெயர் தமிழ் மக்களின் தனியாள் அனுபவங்களும் கலாசாரச் சிதைவுகளும் வாழ்வியற் கோலங்களும் அரசல் புரசலாக புனைவுகளில் வெளிவரத் தொடங்கியமையின் வெளிப்பாடாகவே நிவேதாவின் இந்தத் தொகுதியில் அடங்கிய கதைகளிலும் பெரும்பாலும் முகங் காட்டுவதை இனங்காண முடிகின்றது. நமது பாரம்பரியமான பண்பாட்டில் நம் மூத்தோர் கடவுட்குச் சமமாக வைத்தென்னைப் படுபவர்கள், தாய், தந்தை, பேரன், பெயர்த்தி என அந்தத் தொகுதி நீளும் அந்தப் பெரியோரும் நம்மையும் நம் வாரிசுகளையும் “எம்மில் தம்மைக் கண்டு” மகிழ்வு கொள்பவர்கள்| நம் குடும்ப உறவுகளின் 'எல்லைக்கால்"களா நிற்பவர்கள்| அவர்களே அந்த எல்லைகளை மீறினால்… என்ற கருவை அடியாகக் கொண்ட 'தண்டனை" என்ற கதை வாசகரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடியது. நமது கலாசார விழுமியங்களைக் கேள்விக் குள்ளாக்கக் கூடியது. எனினும் தன் மனைவியை மத்திய கிழக்கிற்கு அனுப்பி விட்டு தன் சொந்தமகளையே வன்புணர்வு செய்யும் தந்தைகள் நிறைந்த உலகிற்தானே நாமும் வாழுகிறோம் என்று இதனால் சமாதானங் கொள்வதா அல்லது சிக்மன்ட் பிறைட்டின் உளவியற் கோட்பாட்டை முன்நிறுத்திக் சமாதானங்கொள்வதா அல்லது ஏங்கல்ஸ் குறிப்பிடும் 'புனசவா" குடும்பம் என்ற கருத்தியலில் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்பதா என்ற வினாக்கள் இதனூடாக மேற்கிளம்புகின்றன. இவ்வாறான கருவை வெளிப்படுத்துவதற்கு 'அயல் நோக்காத்துணிவு" வேண்டும். நிவேதாவிடம் அது நிறையவே உண்டு. அவர் பாரம்பரியத்தைத் தாங்கிப்பிடிக்கும் தூணாக நிற்க விரும்பவில்லை. 'தானம் நீ", 'மன வாழ்வு", 'மனக்குரங்கு" ஆகிய மூன்று கதைகளின் கருவை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடிகிறது. பெண்களை ஆண்களே பெரும்பாலும் ஏமாற்றுபவர்கள் என்ற பெரும்பான்மையான மதிப்பீடுகளை மறுதலித்து பெண்களும் வாய்ப்புக்கிடைத்தால் ஏமாற்றத் தயங்கார் என்ற கருத்தினை இக் கதைகளூடாக முன்வைக்கிறார் நிவேதா. தன் கல்லூரிக் காலத்தில் காதல் செய்த செந்தூரனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன்னைக் கட்டியவனுடன் போலிவாழ்வு வாழ்ந்து காதலனைக் கரம்பிடிக்கத் துடித்த நயனி, தன்னிலும் வயது கூடிய வெளிநாட்டு மணமகனைக் கரம்பிடித்து விட்டு வங்கியில் தன்னுடன் பணியாற்றும் வாகீசனுடன் வாழத்துடிக்கும் ஜீவா,கரம்பிடித்த காதலனும் கணவனுமான ரவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று மூன்று பிள்ளைகளுடன் கஷ்டஜீவனம் செய்தவருக்கு ஆபத்பாந்தவனாக வந்து கை கொடுத்து மறுவாழ்வு தந்து கடனாவுக்கு கூட்டி வந்து வாழவு தந்தவனை ஏமாற்றிய 'மனக்குரங்கு" கதையின் நாயகி" என இவர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரிகளாக நம்பிக்கைத் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை தான் நினைத்தவனை அடைதல் பெண் களுக்கான சுதந்திரம் என்ற கருத்தியலை இவ்விடத்தில் நிலைநாட்ட நிவேதா முனைகிறாரோ என்று எண்ணத்தோன்றினும் (ஏனெனில் அவரது முந்தைய கதைகள் அவ்வாறானவை) கதைகளின் முடிவுகளின் படி, நம்பி நடந்த ஆண் மக்களை ஏமாற்றிய பெண்களின் கதைகளாகவே அவற்றைக் கருத முடிகிறது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள ஆண்கள் மிகவும் கண்ணியமானவர்களாகவே உள்ளனர். நிவேதாவின் இந்த மனமாற்றம் அல்லது கருத்தியல் புலம்பெயர் வாழ்வில் பெண்களின் நத்தைக்கோலங்களின் அபத்தங்களால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமாக அல்லது பிழைவிடுபவர் எல்லாத் தரப்பிலுமஉளர் என்ற சமாதானமா? எதுவெனப் புரியவில்லை. 'மருந்தே இல்லா நோய்" என்ற கதை இன்னோர் வகைமையான பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறது. பிரான்ஸில் பிறந்த மது என்ற பெண், புலம் பெயர் நாடுகளில் இன்னமும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்ற சாதீயத் தடைகளைத் தாண்டி, பெற்றோர் திர்ப்பையும் மீறிக் காதலித்த நவீன் என்பவனைக் கரம்பிடித்து இரு குழந்தைகள் பெற்ற பின்பும் தன்கணவன் வேறோர் பெண்ணுடன் காதலுறவு கொண்டுள்ளான் என்பதை அறிந்த மது அவனைத் தீவிரமாகக் கண்காணித்து கையும் மெய்யுமாக பிடித்து அவனிடமிருந்து பிரிந்து விடுவதாக இக்கதை அமைந்துள்ளது. தன் கணவன் எல்லை மீறுகிறான் என்பதை நிதானத்துடன் செல்லிடப்பேசியின்தொழில் நுட்பத்துடன் கண்காணித்து உண்மையை வெளிக்கொணரும் திறன் வாய்ந்த வளாக அவள் உருவாக்கப்பட்டுள்ளாள். ஒரு வகையில் இரு ஒரு புலனாய்வு சார்ந்த தன்மையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை வேறோர் வகையில் 'உளவியல் நாடகம்" என்றும் கட்டமைக்கலாம். குற்றமிழைத்த ஒருவரை அவர் சந்தேகப்படும்படியாக நடக்காமல் அவருடன் இயல்பாகப் பழகி, அதனூடாகக் கண்காணிப்பு அல்லது புலனாய்வை நிகழ்த்தி இறுதியில் இக்கட்டான ஒரு சூழலில் சிக்க வைத்து குற்றவாளியின் வாயிலாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை உளவியல் நாடகம் (Phலஉhழ னுசயஅய) என்பர். உளவியலாளர் அந்த முறைமைதான் இக்கதையிலும் நடந்தேறியுள்ளது. இன்னோர் வகையில் அந்தப் பெண்ணின் ஆளுமையும் தெரிய வருகிறது. தன் கணவன் தனக்குத் துரோகம் செய்வதை எந்தப் பெண்ணால் தான் பொறுத்துக்கொள்ளமுடியும் என்ற பொதுவிதியைத் தாண்டி, கல்லானாலும் கணவன் என்ற கீழைத்தேய நியமங்களைக் கடந்து, மூக்குச் சிந்தி அழுது ஆர்ப்பரிக்காது அப்பெண் நடந்து கொண்டவிதம் அவளுக்கு மேலைத்தேய வாழ்க்கை முறை தந்த துணிவும், தன்னம்பிக்கையம் தான் என எண்ணத் தோன்றியது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தாம் விரும்பியவாறு சேர்ந்து வாழமுடியும் என்ற மேலைத்தேய அனுமதியை அனுசரித்துச் செல்கிறது. 'நான் வசந்தன்' என்ற கதை. கதையின் ஓட்டம் சராசரியாக இருந்தாலும் கதையின் முடிவில் நிவேதா எழுதிய உரையாடல் அந்த உறவின் நன்மையை அல்லது உணர்ச்சியை புரிந்துகொள் வைக்கிறது. அழைப்பு மணி அடிக்க அகிலுக்கு இதே வேலையாய்ப் போச்சு என்று மனதுக்குள் திட்டியபடி கதவைத் திறக்கிறேன். “நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய்? திறப்பை மறக்காமல் எடுத்துக் கொண்டு போ என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா?” “நான் எப்ப வருவேன் என்று நீ எனக்காகக் காத்திருப்பாய் என்று எனக்குத் தெரியுமே” என்றபடி வசந்தனை ஆசை தீர இறுக அணைக்கிறான் அகில். இதில் தெரியவருவது இரண்டு ஆத்மாக்களின் ஆழமான அன்பு தான். அது அபத்தமல்ல என்பதை நிவேதா நிறுவ முனைகிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஏனைய கதைகள் நிவேதாவின் அனுபவம் சார்ந்தவை. ஆயின் “அவனும் அவர்களும்” என்ற கதை நிவேதாவிற்கு உருவச் செழுமையுடனும் கதை சொல்ல முடியும் என்பதற்குப் பதந் சோறாக அமைகிறது. மரணமடைந்தவரே கதை சொல்லியாக மாறி, நனவோடை உத்தியில் கதையை நகர்த்திச் செல்லும் விதத்தால் அக்கதையை இத் தொகுதியின் கணிப்புக்குள்ளாகும் கதையாக மாறியுள்ளது. தவிர நிவேதாவின்கதை சொல்லும் முறை இன்னமும் நேர்கோட்டு முறையியலைத் தாண்டிச் செல்லவில்லை. ஆயின் கதைகளின் முடிவில் அதிர்ச்சி தருவதும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்துவதும் சில விடயங்களை வாசகரிடமே யுகத்துக்கு விட்டு விடுவதும் நல்ல சிறுகதைகளுக்கான குணாம்சங்கள். அவை நிவேதாவின் எழுத்துக்களில் துலங்கத் தொடங்கியுள்ளன. உரை நடையில் செம்மை சேர்வதும் அல்லது பேச்சோசை மிகுவதும் கதைகளின் களத்தைப் பொறுத்ததேயன்றி கதைசொல்லியின் மனவோட்டத்தை பொறுத்ததல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மற்றும் சுய விருப்பும் வெறுப்புகளுடனான தீர்வுகள் அல்லது அபிப்பிராயங்கள் கதை சொல்லியின் நேர்மையைச் சோதிப்பனவாய் அமைந்தால் அது வெறும் வக்கிரங்களின் வெளிப்பாடாய் அமைந்துவிடும் அபாயங்களும் உண்டு. எனவே முன்வைக்கும் கருத்தைத் தர்க்கத்துடனும் ஆதாரத்துடனும் சமூகவியல் கண்ணோட்டத்துடனும் அழகியலுடனும் படைக்கும் போது கதை சொல்லி நின்று நிலைப்பார்| கதைகள் சாகாவரம் பெறும். நிறைவாக நிவேதா எனும் கதைசொல்லி இன்றும் கடந்து செல்ல வேண்டிய களமும் காலமும் அவர் முன் விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒருமுகப்படுத்தும் திறன் நிவேதாவிடம் நிறையவே உண்டு. அவற்றைக் கலா பூர்வமாகக் கட்டமைத்து நமது புனைவு வெளியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எழுத்தாளராக நிவேதா நிலைக்க வேண்டும் என்பது என் அவா. அது ஈடேனும் என்பதில் அசைக்க முடியா நம்பிக்கையும் எனக்குண்டு. வாழ்த்துக்களுடன் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தகைசால் வாழ்நாட்பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம்1 point- தேயும் ஈழத் தமிழ்மொழி
1 pointசந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது. இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேசுதல் அல்லது ஆங்கிலத்தை தமிழ்த்தனமாகப் தமிழோடு கலந்து பேசுதல் என்ற நிலைவரம் ஈழத்தமிழ் மொழிப்பயல்வுள் ஒப்பீட்டளவிற் குறைவுதான். எந்த ஒரு மொழியும் கலப்பற்றது – பேச்சு வழக்காற்று மாற்றங்களும் – கிளைகளும் அற்றவை எனப் பேசுவது மொழியின் வரலாற்றை மறுப்பதும், அதனியல்பைப் புரிந்து கொள்ளாததன் விளைவாகவும் மட்டுமே அமையும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே தொல்காப்பியம் ‘திசைமொழிகள்’ பற்றிப் பேசுகிறது. போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த மொழிச் சொற்கள் பலவற்றை தமிழ் என்று நினைத்தே பல நூற்றாண்டு காலமாகக் கையாண்டுவருகிறோம். அது மட்டுமின்றி ஏதாவது ஒரு மொழி உயர்வானது – மற்றையது தாழ்வானது என்று கருதுவதோ அல்லது சில மொழிகளை தெய்வீக அந்தஸ்து உடையவை என்று கூறுவதோ கூட அடிப்படையில் மொழியதிகாரம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே அமையும். ஆனால் ஒவ்வொரு மொழிப் பயில்வு வட்டகையும் தனது சொற் தெரிவுகள், உச்சரிப்புக்கள் – தொனி நிலைகள் – குழும வேறுபாடுகள் சார்ந்த தனியடையாளங்கள் உடையவை என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும். அவ்வகையில் குறிப்பிட்ட பிராந்தியத்தின் மொழிப் பயில்வானது அப் பிராந்தியத்தின் மரபுரிமையும் ஆகிறது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட அந்தந்த மொழியின் இயல்புகளுக்கேற்பவே அம் மொழிகளின் மாற்றங்களும் அமைகின்றன. அதாவது குறிப்பிட்ட மொழி புதிதாக உள்ளெடுக்கும் பிற மொழிச் சொற்களும் அல்லது உருவாகும் புதிய சொற்களுங் கூட மேற்படி பயில்மொழியின், மொழியில் அம்சங்களின் உள்ளார்ந்த தர்க்கத்தின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. இவ்வகையான வாதங்களை புரியும் போது – சந்தேகமில்லாமல் ஈழத் தமிழ் மொழியானது, தமிழ் மொழி பயிலும் உலகின் பல்வேறு களங்களில் இருந்து வேறுபட்டதும் தனக்காக தனியான அடையாளங்களை உடையதுமான கட்டமைப்பு என்பதை நாம் கண்டடைய முடியும். அது ஒரு தனியடையாளம் என்ற வகையில் ஒரு பண்பாட்டு முதலீடுமாகும். எனவே ஈழத்தமிழ் இனத்துவத்தின் முக்கிய கூறாக அதன் மொழியும் – மொழிசார் வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. எமது நாளாந்த பேசு மொழி, ஆற்றுகை நெறிப்பட்ட மொழி வெளிப்பாடுகள் தொடக்கம் எழுத்து மொழி – அதன் புனைவாக்க மொழிதல்கள் உள்ளிட்ட பரந்த பரப்பு அதனோடு கூடியுள்ளது. நவீன காலத்து மேடைப் பேச்சு என்கிற வடிவமே ஈழத் தமிழிடமிருந்து உருவாகி நிலை பெற்றது என அண்மையிற் காலமான அமெரிக்க யேல் பல்கலைக்கழக மானுடவியற் பேராசிரியரான பேர்னாட் பேற் தனது கலாநிதிப்பட்ட ஆய்வில் எடுத்துக் காட்டியுள்ளார். அதேநேரம் ஈழத்தமிழ் மொழி. இலக்கணம், இலக்கியம் – உரை மரபுகள் பற்றிய ஆய்வாளர்கள் பலரும் பலவேறு ஈழத்தமிழுக்கேயான வேறுபட்ட தனியியல்புகள் பலவற்றை சுட்டிக் காட்டியுள்ளனர். அண்மையில் பட்டமேற்படிப்புக்களுக்கான பிரெஞ்சு வரலாற்று மொழிநூலியல் நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி அப்பாசாமி முருகையன் பொதுத் தமிழ் பாவனையில் இருந்து வேறுபடும் ஈழத்தமிழின் மிக முக்கியான சில இயல்புகளைச் சுட்டிக்காட்டி அது பற்றிய ஆய்வுகளின் அவசியத்தையும் – அவசரத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார். இந்த வகைப்பட்ட தனித்துவம் தொடர்பிலான கல்விசார்ந்ததும் – ஆய்வியல் ரீதியுமான (academic and research) கருத்தாடல்கள் ஒரு புறமிருக்க, ஒரு காலத்தில் செய்தி ஊடகங்கள் முதலியவற்றின் தமிழ் பிரயோகம் – மொழி நடைகள் என்பனவற்றுக்காக ஈழத் தமிழ் ஊடகங்கள் பொது மக்கள் மத்தியில் உள்நாட்டில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் புகழ் பெற்றுக் காணப்பட்டன. அவை ஈழத் தமிழின் தனியடையாளத்தை பிரதிநிதிப்படுத்தியதோடு அதனை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றும் கைங்கரியத்தையும் செய்தன. எஸ்.பி. மயில்வாகனம் தொடக்கம் இன்றைய வாழும் உதாரணங்களில் ஒன்றான. பி.எச். அப்துல் ஹமீத் வரை பலமான ஈழத்து வானொலித் தமிழின் மையமாக இலங்கை வானொலி இருந்த காலமொன்றுண்டு. பத்திரிகைகள் மொழிப்பாவனையில் எடுத்த கவனம் காரணமாக, அவை மொழிக்கல்விக்கான களமாயும் இருந்ததுண்டு. மொழியின் இயங்கு களத்தை இவை வலுப்படுத்தின. உலகறிவோடு அவை ஈழத்தமிழ் மொழியையும் அவை காவிச் சென்றன. ஆனால் இன்றைய நிலை என்ன? இன்றைய இளைய தலைமுறை ஒருவகையான தென்னிந்திய ஜனரஞ்சகத் தமிழை மிகப் பெருமையோடும், நடப்பு வழக்கின் (fashion) சிறப்புத தகமையாக பேசத் தொடங்கியுள்ளது. அது ஈழத் தமிழையோ அல்லது அதன் வேறுபட்ட பிராந்தியங்களிற் (யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு – மலையகம் என்றோ அவற்றின் உட் பிராந்திய கிளை வழக்காறுகளின் எண்ணற்ற பிரிவுகள் சார்ந்தோ) பயிலப்படும் சிறப்பு வேறுபாடுகளையுடைய மொழியையோ பேசாது புறந் தள்ளிவிட்டு இப் புதிய போக்கு வழிப்பட்டு விரைந்து செல்கிறது. அது ‘சுட்டுக் கொண்டு வருதல்’(திருடல்), ‘கேமுக்கு வாறியா?’ (சண்டை போட வருகிறாயா?), ‘செமையா இருக்குது’ (நல்லா இருக்குது) ‘டீல்’, ‘கெத்து’ என பல சொற் பிரயோகங்கள் மற்றும் ‘அவங்க’ – ‘சொல்றாங்க’ எனும் வாக்கிய முடிப்பு முறைகள் என இவை விரைந்து பரப்பப்படுகின்றன. இவை பேரளவில் பயிலப்படுதலுக்கு முக்கியமாக வெகுஜன ஊடகங்கள் காரணமாகின்றன. குறிப்பாக ஈழத் தமிழ் இளைய சமூகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுஜன சினிமாப் பண்பாட்டால் ஆக்கப்பட்டுள்ளது. பாலாபிஷேகங்களும், கட்டவுட் (cutout) பூசைகளும் ஆரம்பமாகி விட்டன. இங்கிருந்துதான் மேற்படி தென்னிந்திய ஜனரஞ்சகத் தமிழ் அதிகம் பொறுக்கப்படுகிறது. ஆனால் இதை பேரளவில் நடவு செய்யும் முகவர் வேலையை – குறிப்பாக எமது பண்பலை வானொலிகள் (FM radio) செய்கின்றன. பேராசிரியர் சிவத்தம்பி இந்த வானொலிகளை Talkative radios எனக் கூறுவார். அவை எப்போதும் – பெரும்பாலும் இந்த தென்னிந்திய சினிமா வழிவரும் வெகுஜனப் பேச்சு முறையை – சொற் பிரயோகங்களை நாடு முழுவதும், 24 மணிநேரமும் பேசிக் கொண்டிருக்கின்றன. அவற்றினைக் கேட்பவர்கள் அல்லது அதன் ரசிகர் குழாம் என்பது அதிகம் இளைஞர்களாகவும் இருக்கிறார்கள். இந் நிலைவரங்கள் ஈழத்தழிழ் மொழிக்குப் பதிலாக மேற்படி கொச்சையான இதுவுமல்ல – அதுவுமல்ல என்ற மொழிப் பயில்வொன்றை நடவு செய்து வருகின்றன. ஆனால் இது தொடர்பில் எம்மிடம் எந்தக் கேள்வியும் கிடையாது. இதன் அடுத்த பெருங்களம் தொலைக்காட்சி அலை வரிசைகளாகும். இவை வீடு முழுவதும் சதா சர்வகாலமும் புகுந்து நிற்கின்றன. ஒரு வகை சன் ரீவி மயமாக்கத் தமிழ் இன்னொரு பக்கம் மடை திறந்தோடி ஈழத் தமிழ் வீடுகளை நிறைத்து மெல்ல அவரவர் பிராந்தியத் தனித்துவ மொழியை தட்டையாக்கி மேற்படி ஜனரஞ்சகத் தென்னகத் தமிழை எல்லோர் நாவிலும் மெல்ல – அவர்கள் அறியாமலே பதிகின்றது. இதில் மிக முக்கிய இடத்தை சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டூன்கள் செய்கின்றன. 05 வயதுக்கு முன்பதாகவே ஈழத் தமிழ் குழந்தைகளின் பேசு மொழி, மேற்படி ஜனரஞ்சகத் தென்னகத் தமிழைக் இக் கார்ட்டூன்கள் வழி பெற்றுக் கொள்கிறது. இது மிகப் பெரிய ஈழத் தமிழ் மொழி இழப்புக்குக் காரணமாகப் போகிறது. நாம் இதை விடுத்து இச் சிறுபராயப் பிள்ளைகளுக்காக வாங்கும் அனைத்து Nursery Rhymes உட்பட்ட குறுமொலித் தட்டுக்கள் கூட இந் நிலைவரத்தை பேரளவில் அதிகரிக்கப் போகின்றன. (எத்தனை ஆயிரம் பக்தி பாடல்கள் ஊர்க் கோயில்கள் தோறும் வெளியிடும் ஈழப் பெருந் தலைவர்கள் தமது குழந்தைகளுக்கான மழலைப் பாடல்களை பதிவு செய்து உருவாக்குவதில் மட்டும் பெரியளவிற் கவனம் எடுப்பதில்லை). இதேநேரம் கல்விச் சாலைகள் மொழிக் கல்வியில் கொண்டுள்ள பாராமுகம் மற்றும் சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் ஆங்கில மூலக் கல்வி பற்றிய ஆய்வறிவற்ற மோகம் அல்லது தொடரும் மொழி தொடர்பான காலனியகால தாழ்வுச் சிக்கல்கள் – சமூக அந்தஸ்தை மொழியோடு இணைத்துப் பார்க்கும் நோக்குகள் என்பன பாடசாலைகளிலும் – பல்கலைக்கழகங்களிலும் காணப்பட்ட பலமான ஒரு தாய்மொழிக் கல்விப் பாரம்பரியத்தை வீழ்ச்சியடையச் செய்துவிட்டன. அத்தோடு இவற்றுக்கு வெளியாற் காணப்பட்ட பலமானவொரு மரபுவழிக் கல்விப் பாரம்பரியமும் கடந்த காலத்துக் கதையாகிப் போய் முடிந்து விட்டது. இவை யாவும் ஈழத் தமிழ் மொழியின் எதிர்கால வாழ்வை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளன. ஈழத்தமிழ் மொழியை அதன் பல்பரிமாணங்களை, அதன் பிராந்திய வேறுபாடுகளை, அவற்றின் கிளைகளோடு காத்திட என்னதான் செய்யப் போகிறோம்? தொடரும். https://ezhunaonline.com/தேயும்-ஈழத்-தமிழ்மொழி/1 point- ஜப்பான்: தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?
கெல்லி Ng பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் எரிந்து கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த பயணிகள், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி தங்கள் கைப்பைகளை விட்டுவிட்டு ஆபத்து கால வழிகளை நோக்கி ஓடினர். விமானப் பணியாளர்களின் பேச்சைக் கேட்டு, அவர்கள் தங்கள் பொருட்களை கைவிட்டு தப்பி ஓடியதே விமானத்திலிருந்த 379 பேரும் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516 தரையிறங்கிய போது ஒரு கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. இந்தச் சிறிய விமானத்திலிருந்து 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். 379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி? இவ்விபத்தில் ஒரு சிறு தடங்கலுமின்றி விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டது உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. விமானவியல் நிபுணர்களும் விமானப் பணியாளர்களும் இது மிகச் சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்த விமானப் பணியாளர்களாலும், அவர்களது பாதுகாப்பு அறிவுறுத்தலைக் கேட்டு அதன்படி நடந்த பயணிகளும்தான் இதற்குக் காரணம் என்று பிபிசியிடம் கூறினர். கிரீன்விச் பல்கலை கழகத்தின் தீவிபத்துப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் எட் கலீயா கூறுகையில், “நான் பார்த்தவரையில் தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது பயணிகள் வெளியேற்றத்தை தாமதப்படுத்தி மிகப்பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும்,” என்கிறார் அவர். மேலும், “இந்த விபத்து மிகச் சிக்கலான முறையில் நடந்தது, விமானத்தின் மூக்கு கீழ்நோக்கி இருந்தது. இது பயணிகள் வெளியேறுவதைக் கடினமாக்கியது,” என்கிறார் அவர். வெளியேறுவதற்கான காற்று நிரம்பிய சறுக்குகள் மூன்று மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஆனால், விமானம் நின்றிருந்த கோணத்தால் அவையும் சரியாகச் செயல்படுத்தப்பட முடியவில்லை. அது மிகவும் செங்குத்தாக இருந்திருக்கும். "விமானத்தின் அறிவிப்புப் பொறிமுறையும் செயல்படாமல் போனது. அதனால் விமானப் பணியாளர்கள் ஒலிபெருக்கிகள் மூலமும், சத்தமாகக் கத்துவதன் மூலமும் அறிவிப்புகளை வழங்கினர்" என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஒரு பயணிக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டதாகவும், 13 பேர் உடல் அசௌகரியத்திற்காக மருத்துவ பரிசோதனையைக் கோரியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. "பெரும விபத்து நேரிட்டிருந்தாலும் வெறும் ஐந்தே நிமிடங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்" என்று அதில் பயணித்த யமகே என்ற பயணி கூறினார். தீ மளமளவென விமானம் முழுவதும் பரவ பத்து பதினைந்து நிமிடங்கள் ஆனதாக அவர் கூறினார். 28 வயதான சுபாசா சவாதா (Tsubasa Sawada) "இது ஒரு அதிசயம், ஒருவேளை நாங்கள் இறந்திருக்கக் கூடும்" என்றார். "தீ எப்படி ஏற்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன், பதில் கிடைக்கும் வரை எந்த விமானத்திலும் பயணிக்க மாட்டேன்" என்று சவாதா மேலும் கூறினார். விபத்துக்குள்ளான விமானம், ஜப்பானின் வடக்கிலிருக்கும் சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குக் கிளம்பியது. இரண்டு மணி நேரத்தில் ஹனேடாவில் தரையிறங்கியது. அவ்விடத்தில், புத்தாண்டன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்க ஒரு சிறிய கடலோரக் காவல்படை விமானம் நின்றிருந்தது. அதனோடு பெரிய விமானம் எப்படி மோதியது என்பதைப் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பிபிசியிடம் பேசிய ஒரு முன்னாள் ஜப்பானிய விமானப் பணியாளர் தப்பித்த பயணிகள் ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ என்றார். “பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதை அறிந்து நிம்மதியாக இருந்தது. ஆனால் ஆபத்து கால வெளியேற்ற வழிமுறைகளை நினைத்தால் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. இந்த விபத்தில் விமானங்கள் மோதிக்கொண்ட விதத்தையும், தீ பரவியதையும் பார்க்கையில் இந்த விபத்து மிக மோசமாக இருந்திருக்கக் கூடும்,” என்கிறார் அந்தப் பெண். நிஜத்தில் பயணிகளை பதற்றமடையாமல் இருக்க வைப்பது மிகக் கடினம் என்ற அவர், அவர்கள் காப்பாற்றப்பட்டது கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானது என்றார். “இது பணியாளர்களின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்த பயணிகள் ஆகியவற்றால் சாத்தியப்பட்டது,” என்றார். கைகொடுத்த பயிற்சிகள் விமானப் பணிப்பெண்கள் மூன்று வார தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். இது ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். “எழுத்துத் தேர்வு, நிஜ சம்பவங்களைப் பற்றிய விவாதங்கள், செய்முறைப் பயிற்சிகள் ஆகியவை இதில் அடக்கம். விமானம் கடலில் விழுந்தால் என்ன செய்வது, விமானத்தில் தீப்பிடித்தால் என்ன செய்வது, போன்றவை கற்றுத்தரப்படும். பராமரிப்புப் பணியாளர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்றார் 10 வருடங்களுக்குமுன் பணியிலிருந்து விலகிய அந்தப்பெண். தென்கிழக்கு ஆசிய விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் விமானியும் விமானப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த மீட்புப் பணியில் உதவியது என்றார். “இங்கு பயிற்சி மிக முக்கியப் பங்காற்றியது என்று நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் யோசிப்பதற்கு நேரமே இருக்காது. பயிற்சியில் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்த மட்டுமே முடியும்,” என்றார் அவர். பயணிகள் விமானங்கள் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்கு, விமானத்தில் இருக்கும் அனைவரும் 90 வினாடிகளில் வெளியேற முடியும் என்று விமானத் தயாரிப்பாளர்கள் காண்பிக்க வேண்டும். சில சமயம் பரிசோதனை மீட்பு முயற்சிகள் உண்மையான பயணிகளை வைத்து செய்யப்படுகின்றன, என்கிறார் அவர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை கடந்த கால விபத்துகள் கடந்த கால விபத்துகளுக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அந்த விமானி. உதாரணமாக, 1977-ஆம் ஆண்டு ஸ்பெயினில் இரண்டு போயிங் 747 ரக விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 583 பேர் கொல்லப்பட்டனர். இது விமான வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இது விமானப் பணியாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாகிகள் ஆகியோரிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்திலிருக்கும் விமானி அறை மற்றும் ரேடியோ தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டன. 1985-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு விபத்தை எதிர்கொண்டது. டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குக் கிளம்பிச் சென்ற 123 என்ற விமானம், கிளம்பிய சற்றி நேரத்திலேயே ஒரு மலையில் மோதியது. அந்த விமானத்தில் பயணித்த 524 பேரில் 4 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர். இவ்விபத்திற்கான காரணமாக போயிங் நிறுவனம் விமானத்தில் செய்த பழுதுவேலையைச் சரியாகச் செயவில்லை என்று சொல்லப்பட்டது. 2006-ஆம் ஆண்டு இந்த விபத்தின் இடிபாடுகளை வைத்து ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு அருங்காட்சியகம் அமைத்தது. இது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. “அந்த விபத்திற்குப் பின், குடும்பத்தாரை இழந்து தவித்தவர்களின் வலி, வேதனை ஆகியவற்றைப் பார்த்தபின், அதுபோன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டோம்,” என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. ஜப்பான் விமானத்தில் இருந்த 379 பேரும் வெறும் ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி? - BBC News தமிழ்1 point- யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்!
ச்சும்மா ஒரு இதுக்கு சொன்னாலும் அதையே கவ்விப்புடிச்சுகொண்டு நிக்கிறியள்....🤣1 point- கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
அதை வைச்சுக்கொண்டுதானே உவ்வளவு துள்ளிக்குதிக்கிறாய் எண்ட கோபம் அவையளுக்கு வருகின்றது போலும்....💪🏽😷1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointவிழுகிறது தப்பில்லை, விழுந்தாலும் உடனே எழுந்து நிக்கணும்........! 😂1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointநன்றியண்ணா, நான் அந்த நேரத்தில் எதனையும் பதிவேற்றவில்லை என்று நினைக்கிறேன். பார்த்த அளவிற்கு எவையும் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.1 point- Subaskaran Allirajah to contest for presidency!
The Tamil diaspora is planning to field Lyca Mobile owner Subaskaran Allirajah as a candidate at the next presidential election. Allirajah, an international businessman with Sri Lankan origins, has already bought a plantation political party, ‘Arunalu People’s Alliance’. Its chairman and general secretary is Dr. A.R. Krishan. Allirajah is to launch his media campaign next month. (deshaya.lk) https://english.theleader.lk/news/7156-subaskaran-allirajah-to-contest-for-presidency இங்கு விசாரித்தபோது செய்தி உண்மையில்லை என்கிறார்கள் இரண்டு மூன்று நாளில் உண்மை தெரியும்தானே .1 point- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
60 வயது எண்டால் வயோதிபரா?1 point- ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் கஜேந்திரகுமார், கஜேந்திரன் உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
பேசாமல் ஊரடங்கு சட்டத்தைப் போட்டுவிட்டால் ஐயா தன்னாரவாரம் திரிஞ்சு போட்டு போகலாமே.1 point- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதற்குப் பெயர் ethnic cleansing இதுதான் இஸ்ரேலின் உண்மையான நோக்கம்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசில தவறுகளால் தரவுத் தளத்தினை (database) பின்னோக்கி நகர்த்த வேண்டிய தேவையேற்பட்டு விட்டது. இந்த வகையில் நேற்று அதிகாலை 00:00 (ஐரோப்பிய நேரம்) இல் இருந்து இரவு 21 மணி வரை பதியப்பட்ட அனைத்து விபரங்களும் இழக்கப்பட்டு விட்டது. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம். ரஞ்சித் இதை மோகன் பதிந்துள்ளார். உங்கள் பதிவுகள் சரியாக உள்ளது என எண்ணுகிறேன். அடுத்த பதிவைப் போடமுதல் சரி பார்க்கவும்.1 point- தூக்கு மேடையில் சதாம் உசேன் என்ன பேசினார்? கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?
உலகின் பெரும் இனப்படுகொலையாளர்கள் கண்ணாடி மாளிகையிற் காவலர்கள் புடைசூழ மக்களது வரிப்பணத்தில் ஒய்யார வாழ்வோடு இருக்கிறார்கள்.அமெரிக்காவும் அனைத்துலகும் இவர்களை எப்போது தூக்கிலிடுவார்களாம் என்று பிபிசி அறிந்து தெளிவுபடுத்தலாமே. உலகில் இனஅழிப்பை மேற்கொண்ட, மேற்கொண்டுவருவோரென மகிந்த, கோத்தா, சவேந்திரசில்வ, நெதன்யாகு...... இப்படிப் பெரும் பட்டியல் உள்ளதே.1 point- உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட சமூக நல அமைப்புகள் தீர்மானம்
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Published By: VISHNU 03 JAN, 2024 | 01:08 PM யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் புதன்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடையடைப்பும் இடம்பெற்றது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை உடனடியாக அகற்றக்கோரி உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளை பூட்டி கடையடைப்பிற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்புவிடுத்தது. போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/1730011 point- மனதும் இடம்பெயரும்
1 pointநூலை நேரில் பார்த்தால் மட்டும்தான் என்னால் மிகுதியைக் கூற முடியும். பழுப்பு நிறத்தில் வரவேண்டிய அட்டை வேறு நிறத்தில் வந்துவிட்டனர். அதனால் நானும் போடவேண்டியதாப் போச்சு. நூல் சரியான நிறத்தில் தான் வரும் என்று அவர் சொன்னாலும் நேரில் பார்த்தால்தான் தெரியும். மூணா அண்ணா என் வேண்டுகோளுக்கு இணங்க சில மாற்றங்களைச் செய்தார். அதனாலத்தான் அவரதுபோல் தெரியவில்லை. மிக்க நன்றி அண்ணா இதில் சுமே என்னும் பெயரே எனக்குப் பிடித்தமானது .😀1 point- 'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்
1 pointசமூக ஊடகங்கள் எங்கும்.. முழுக்க ஆபாசப் படங்களும்.. தனிநபர் ஆபாசச் சுருள்களும் பெருகிவிட்டன. பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே.. இப்ப சிமாட் போன் வழியாக.. காட்ட வேண்டியவையை காட்டி..பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற.. அவையோ.. சில நிமிடங்களில்.. பல ஆயிரம் பார்வைகளை தாண்ட.. பிரசித்தமுன்னு ஏ ஐ முன்னுக்குத் தள்ளுகின்றன. அதுபோக..சமூக வலை தளங்களின் ஊடாக.. இந்த பிசினஸ் இப்ப கொடிகட்டிப் பறப்பதாகக் கேள்வி. என்ன பள்ளிப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் தான்.. முன்னர் ஒரு ஏ படம் பார்ப்பதற்கே.. சமூகம் குளறியடிக்கும்.. அதில் நன்மைகளும் உண்டு. அறியா வயதில் தவறான வழியில் செல்வதை தடுப்பதாக அமைந்தாலும்.. இன்று ஒரு பாதுகாப்பும் இல்லை. எல்லாம் கையில் கிடக்குது. போனை வைச்சு என்னத்தை நோட்டுறாய்ங்கன்னு.. யார் கண்காணிக்க முடியும். இப்ப ஆபாசப்படங்களை அவரவர் விருப்பப்படி தானே எடுத்து சமூக வலையில் தரவேற்றினம். இதில.. இவை என்னடான்னா...???! இயன்றவரை.. சமூக வலையில்..நாம் காண நேரிடுபவையை.. எல்லாம் பிளாக் செய்தும் ரிப்போட் செய்தும்.. வருகிறோம். இப்படி.. எல்லாரும் செய்தால் அன்றி.. இதை தடுப்பது இலகு அல்ல. சமூக வலை ஊடகங்கள் குப்பையாகிவிட்டன. இப்ப எல்லாம் ஆன்டிங்க.. சமையல் சமைக்கிறாய்ங்களோ இல்லையோ.. ஆடையை கண்ணாடியா போட்டிட்டு வந்துடுறாய்ங்க. இதில.. கண் பகலாபாத் கிண்டு வதையா கவனிக்கும்..??!🤣1 point- இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
சொந்த இடம், நாடு உள்ள இனங்கள், நாடற்ற இனங்கள் என்ற வேறுபாடில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது. அழுதாலும், தொழுதாலும், மிரட்டினாலும் யாழ்பாணத்தில் அம்மக்கள் சுய விருப்பில் செண்டை மேளம் அடிப்பதை, டிஜே பார்ட்டிக்கு போவதை யாராலும் நிறுத்த முடியாது. தொடரூந்து பாதையில் விழுந்து படுப்பதால் அதை நிறுத்த முடியாது.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மரண பலம் - சுப.சோமசுந்தரம்
1 pointமரண பலம் -----சுப.சோமசுந்தரம் சமீபத்தில் எனக்கு ஒரு விஷயம் வேடிக்கையாகத்தான் இருந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன் சமூக வலைத்தளங்களின் Memes நாயகனாக சித்தரிக்கப்பட்டவர் திரு. விஜயகாந்த். இன்று இந்திரன், சந்திரன் என்று அதே ஊடகங்களும் அரசியல்வாதிகளும் திருவாளர் வெகுசனமும் கொண்டாடும் நபரானார் அவர். ஒரு வாரத்திற்கு முன் என் ஆச்சி (அப்பாவின் அம்மா) தனது 103 வது அகவையில் இயற்கை எய்தினாள். நான் சிறுவனாய் இருக்கும்போது என் அப்பா அரசுப்பணியில் ஒரு கிராமத்தில் பணியில் இருந்ததால் அங்கேயே ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். "எங்கிருந்தெல்லாமோ நம் ஊரைத் (பாளையங்கோட்டை) தேடி வந்து பிள்ளைகளப் படிக்க வைக்கிறார்கள். நீ இந்தப் பட்டிக்காட்டிலா (!!!) பிள்ளையைச் சேர்ப்பாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து என்னை உரிமையுடன் தூக்கி வந்து பாளையில் அந்தக் காலத்திலேயே இருந்த கான்வென்ட்டில் சேர்த்துப் படிக்க வைத்தாள் என் ஆச்சி. நான் நானாக ஆனேன். அதனால் அவளிடம் பாசத்தில் கட்டுண்டே வாழ்ந்திருக்கிறேன். கடைசிக் காலத்தில் அவளைக் கவனிக்க ஆள் அமர்த்தியபோது, செலவுக்கு என்னிடம் அதிகம் வாங்கலாம் என்றும், "அவன் எனக்காக எதுவும் செய்வான்" என்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறாள். பெற்று வளர்த்து ஆளாக்கியதற்கு அவளது பிள்ளைகள் கடமைப்பட்டவர்கள். என்னைப் பாசத்துடன் குறிப்பிட்ட காலம் வரை வளர்த்ததற்கும், கடைசிக் காலத்தில் கூட என்மீது நம்பிக்கயை வெளிப்படுத்தியதற்கும் நானும் கடமைப்பட்டவன். எனவே நாங்கள் அவள் வாழுங்காலம் இயன்றவரை அவளைத் தாங்கிப் பிடித்தோம். ஆனால் நிறைய மனிதர்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தாள். மருமகள்களுக்குக் கொடுமையான மாமியாராகவே வாழ்ந்தாள். வேற்று மனிதர்களிடமும் ஓரளவு அப்படியே ! கடைசிக் காலத்தில் தன்னைக் கவனிக்க அமர்த்தப்பட்டவர்களைக் (caretakers) கேவலமாக நடத்தியதில் சுமார் பதினைந்து பேர்களை மாற்ற வேண்டியிருந்தது. எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. அவள் வாழுங்காலம் (காரணத்தோடு) அவளைத் தூற்றிய சிலர் அவளது மரணத்தில், "103 வயது ! கொடுத்து வைத்த ஆன்மா. அதிலும் ஏகாதசி அன்று இறந்ததால் வைகுண்ட பிராப்தி !" என்றெல்லாம் அவள் புகழ் பாடினார்கள். மனதுக்குள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டேன். எனக்கு அவள் நல்ல ஆச்சி. அவ்வளவே! அதற்காக அவள் நல்லவள், உத்தமி என்றெல்லாம் நான் பேசித் திரிந்தால் அது சுயநலமாகத்தானே முடியும் ! அல்லல் பட்டவர்களின் துன்பத்தை உணர்ந்து, பிறிதின் நோய் தந்நோயாகக் கொள்ளும் பக்குவம் எனக்கு வேண்டாமா ? மரணத்திற்கு மனிதனைப் புனிதனாக்கும் ஆற்றல் உண்டோ ? நகைச்சுவை நடிகர் முத்துக்காளை ஒரு படத்தில் சொல்வதைப் போல, முடிந்தால் நாமெல்லோரும் செத்துச் செத்து விளையாடலாமோ !1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசமாதானப் பேச்சுக்களை நீர்த்துப்போகச் செய்யும் ஜெயாரின் சூழ்ச்சி தான் அகப்பட்டிருக்கும் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சிங்களப் பேரினவாதத்தின் வான்கதவுகளை அகலத் திறந்தார் ஜெயவர்த்தன. சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று தமது பரிந்துரைகளை முன்வைக்க அரசியட் கட்சிகளுக்கு மட்டுமே விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை இனவாத, மதவாத அமைப்புக்களுக்கும் அவர் விஸ்த்தரித்தார். இதன்படி ஜெயார், மகா சங்கத்தின் உச்ச பீடத்தினையும், அகில இலங்கை பெளத்த காங்கிரஸ், அகில இலங்கை பெளத்த சம்மேளங்களின் ஒருங்கிணைப்பு, அகில இலங்கை இந்து காங்கிரஸ் மற்றும் கிறீஸ்த்தவ முஸ்லீம் மத அமைப்புக்களையும் தமது அரசியல்ப் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஜெயாரின் இந்தச் செயலினை தமிழர்களும் இந்தியாவும் ஒரு சதியாகவே பார்த்தனர். சர்வகட்சி மாநாட்டின் நோக்கத்தை வலுவிழக்கப்பண்ணி, தமிழரின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தி, சிங்கள பெளத்த தேசியவாதத்தினை பலப்படுத்தும் கைங்கரியமாக இதனை அவர்கள் நோக்கினர். மகாசங்கத்தின் உச்ச பீடமும், ஏனைய பெளத்த சிங்கள அமைப்புக்களும் தமிழருக்கெதிரான கடும்போக்கு நிலையினைக் கைக்கொண்டன. சிங்களத் தீவிரவாதத்திற்கு பெளத்த பிக்குவான கலாநிதி ராகுல தேரை தலைமை தாங்கினார். இணைப்பு சி இயினை முற்றாக நிராகரித்த அவர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் கூட தமிழர்களுக்கு வழங்கக் கூடாது என்று கூறினார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நாம் இப்போது வழங்கினால், அவர்கள் அதனைக் கொண்டு தமது கனவான தமிழ் ஈழத்தை ஒருநாள் அமைத்துவிடுவார்கள். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை" என்று அவர் பிரகடனம் செய்தார். சிங்கள பெளத்த இனவாதிகளை சர்வகட்சி மாநாட்டிற்குள் இழுத்துவிட்டதன் மூலம் ஜெயார் எதிர்பார்த்த கால அவகாசத்தை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலிய படையினரின் உதவியையும், வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியையும் அவரால் பெற முடிந்தது. சர்வகட்சி மாநாட்டின் கால எல்லையைத் தொடர்ச்சியாக நீட்டித்துவந்த ஜெயார், ஒவ்வொரு அமர்விற்கும் இடையிலான கால இடைவெளியினையும் நீட்டித்துக்கொண்டார். சர்வகட்சி மாநாட்டினை இருகுழுக்களாகப் பிரித்து காலத்தை இழுத்தடித்த ஜெயார் சர்வகட்சி மாநாடு ஆரம்பித்த 7 ஆம் நளான தை 20 ஆம் திகதி பேசிய ஜெயார், இந்த மாநாடு இரு குழுக்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவித்தார். முதலாவது குழு அரசாங்கத்தின் அமைப்புக்கள் தொடர்பாகச் செயறபடும் அதேவேளை மற்றைய குழு தீவிரவாதத்தினை முற்றாக அழிப்பதில் ஈடுபடும் என்றும், ஆகவே இந்தக் குழுக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து மாநாட்டு உறுப்பினர்கள் தமது பரிந்துரைகளை முன்வைக்கலாம் என்றும் கூறினார். இக்குழுக்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் சில தினங்கள் நீண்டு சென்றன. முடிவில் பேசிய ஜெயார், இக்குழுக்கள் இரண்டினதும் நோக்கங்கள் ஒருபுள்ளியில் இணையவேண்டும் என்று கூறினார். இக்குழுக்களுக்குள் உள்வாங்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிமனாதாகக் காணப்பட்டது. இவ்விரு குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜெயார் பணித்தார். இவ்வறிக்கை உள்ளடக்கப்படவேண்டிய 7 பிரிவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. 1. நாட்டின் இறைமையினையும், சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்கும் பொறிமுறை. இப்பொறிமுறையூடாக அரசாங்கம் நாட்டின் அனைத்து இன மக்களும் நாட்டின் எந்தப் பகுதியிலும் சமாதானமான முறையில் வாழக்கூடியதும், எப்பகுதியிலும் சுதந்திரமாக தொழில் புரியக்கூடியதுமான சூழ்நிலையினை உருவாக்குவது. 2. அனைவருக்கும் கல்வியில் நீதியான சந்தர்ப்பங்களை வழங்குவது. 3. அனைவருக்கும் தொழில்வாய்ப்பில் நீதியான சந்தர்ப்பங்களை வழங்குவது. 4. காணிப்பிரச்சினையினைத் தீர்த்துக்கொள்ள பொறிமுறை ஒன்றை வகுப்பது. 5. நாட்டின் எந்த மூலையிலும் வாழும் ஒருவருக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குவது. 6. பொருளாதார வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை வழங்குவது. 7. ஏனைய விடயங்கள். சர்வகட்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை குலைத்து அதன் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஜெயார் தொடர்ந்து செயற்பட்டு வந்தார். சர்வக்ட்சி மாநாட்டின் இரு குழுக்களுக்கும் அவர் வழங்கிய பணிப்புரையில் தமிழர்களின் உரிமைகள் மிகச் சாதுரியமாகத் தவிர்க்கப்பட்டிருந்தன. அதற்குப் பதிலாக தமிழர்களின் கவலைகள் குறித்துப் பேசலாம் என்கிற நிலையினை ஜெயார் ஏற்படுத்தியிருந்தார். இலங்கைத் தமிழர் சார்பாக இந்தியாவின் தலையீட்டினை முடக்கிய ஜெயார் சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழு தை மாதத்தில் இரு தடவைகளும், மாசி மாதத்தில் மூன்று தடவைகளும் பங்குனியில் இரு தடவைகளும் கூடிப் பேசியது. ஆனால், இந்தக் கலந்துரையாடல்கள் எல்லாமே இலக்கற்று , எழுந்தமானமாக நடந்துகொண்டிருந்தன. சாமர்த்தியசாலியான தொண்டைமான், தமிழர்களின் அவலங்களில் முக்கியமானது அவர்கள் தமக்கென்று ஒரு தேசத்தைக் கொண்டிருக்காமைதான் என்று கூறியதோடு, முதலில் அதற்கு அனைவரும் சேர்ந்து தீர்வொன்றினைக் காணவேண்டும் என்று கோரினார். இச்சந்தர்ப்பத்திற்காக அதுவரையில் காத்திருந்த ஜெயாரும், இந்தியாவிற்கும், உலகிற்கும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக தான் சிலவிடயங்களைச் சாதித்துவிட்டதாகக் காட்ட இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டார். பின்னர், மகா சங்கத்தின் தலைவர்களை தன்னுடன் பிரத்தியே சந்திப்பொன்றிற்கு ஜெயார் அழைத்தார். இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் நலன்குறித்து மட்டுமே இந்தியா சட்ட ரீதியாக இலங்கையில் தலையீடு செய்ய முடியும் என்று மகா சங்கத்தினரைப் பார்த்து அவர் கூறினார். ஆகவே, நாடற்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பிரஜாவுரிமையினை வழங்கிவிட்டால் இலங்கையில் இந்தியா தலையீடு செய்யும் உரிமை இல்லாதுபோய்விடும் என்று அவர் வாதிட்டார். மேலும், பிரஜாவுரிமையற்று வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதுதான் என்று அவர் தெரிவித்தார். மகாசங்கத்தினரும் அதனை ஏற்றுக்கொண்டனர். சர்வகட்சி மாநாட்டுத் தீர்மானங்களில் பெளத்த மகாசங்கம் செலுத்திய அதிகாரம் சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக லலித் அதுலத் முதலி நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நாள் மாநாட்டின் முடிவிலும் அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். இப்பத்திரிக்கையாளர் சந்திப்புக்களுக்கு நானும் போயிருந்தேன். அன்றைய அமர்வில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமையினைத் தீர்க்க மாநாட்டின் உறுப்பினர்கள் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். இதனை மாநாட்டின் முதலாவது பெரிய வெற்றியென்றும் புகழ்ந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர் கூட்டம் நடந்துகொண்டிருந்த அறையின் கதவு மெல்லத் திறந்தது. மகாசங்கத்தின் மகாநாயக்கர்கள் வெளியே நின்றிருப்பது அனைவருக்கும் தெரிந்தது. சிங்கள பெளத்தர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கலாநிதி ராகுல தேரை எனும் பிக்கு பத்திரிக்கையாளர்களிடம் தாமும் பேச வேண்டும் என்று லலித் அதுலத் முதலியைப் பார்த்துக் கூறினார். லலித்தும் அதற்கு இணங்கினார். மகாசங்கத்தின் அதியுச்ச பீடத்தின் பரிந்துரைக்கு அமைய சர்வகட்சி மநாட்டு உறுப்பினர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க ஏகமனதாகச் சம்மதித்துவிட்டதாக அறிவித்தார். ஆகவே, இலங்கை விவகாரத்தில் இந்தியா இனிமேல் தலையீடு செய்வதற்கு எந்த முகாந்திரங்களும் இல்லையென்றும் அவர் தீர்க்கமாகக் கூறினார். தொடர்ந்து பேசிய ராகுல தேரை, இலங்கைத் தமிழர்களின் எமது நாட்டின் பிரஜைகள். ஆகவே, அவர்கள் சார்பாக இந்தியா இலங்கையில் தலையீடு செய்ய எந்த உரிமையும் கிடையாது என்றும் வாதிட்டார். மகா சங்கத்தின் அதியுச்ச அமைப்பினால் விடுக்கப்பட்ட பரிந்துரை பின்வருமாறு கூறியது, "தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக்கொள்ளும் எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ எமது நாட்டில் இருக்க முடியாது. சிறிமா சாஸ்த்திரி ஆகியோரிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அவர்களை அவர்களின் தாய்நாடான இந்தியாவிற்குத் திருப்பியனுப்பிவிடுவதன் ஊடாகவும், மீதமிருப்போருக்கு இலங்கைப் பிரஜாவுரிமையினை வழங்குவதன் ஊடாகவும் இதனை நாம் நிவர்த்திசெய்துகொள்ள முடியும். பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டிய இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை மகாசங்கத்தினர் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருந்தபோதிலும், அவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கி, பிரச்சினையினைத் தீர்த்துவைக்க மகாசங்கத்தினர் தடைவிதிக்கப்போவதில்லை" என்று கூறியிருந்தது. இந்தியாவுக்குத் திருப்பியனுப்புவதற்காக அடையாளம் காணப்பட்டிருந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையினையும் மகாசங்கத்தினரின் இந்த பரிந்துரை கோடிட்டுக் காட்டியிருந்தது. 1964 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் சிறிமாவுக்கும் சாஸ்த்திரிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் 600,000 பேரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இருந்ததுடன் மீதி 375,000 பேருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமையினை வழங்க இலங்கை ஒத்துக்கொண்டிருந்தது. இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கவென்று வழங்கப்பட்ட 15 வருட கால அவகாசத்தில் 504,000 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். மீதி 96,000 பேரும் நாடற்றவர்களாகவே இருந்தனர். ஆகவே தொண்டைமான், இந்திய பிரஜாவுரிமையற்றிருந்த 96,000 பேருக்கும் இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டிருந்தார். மகாசங்கத்தினர் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க சம்மதித்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் இவர்கள் தான்.1 point- கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
ஈழத்தமிழின துரோகிகளுக்கு இனவாத சிங்களம் செங்கம்பள வரவேற்பும் அரச மரியாதை வரவேற்புகளும் கொடுப்பது ஒன்றும் புதிதல்லவே. ஈழத்தமிழர்களே இனியாவது உங்களை சுதாகரிக்க தயாராகிக்கொள்ளுங்கள்.சிங்களம் தீயாய் வேலை செய்கின்றது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையிழந்த தமிழர்கள் மூன்று படிப்பினைகள் 1984 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டிலிருந்து மூன்று முக்கிய படிப்பினைகளை தமிழ் மக்கள் கற்றுக்கொண்டார்கள். சிங்கள மக்களும், பெளத்த மத குருக்களும் ஒருபோதுமே தமிழர்களின் அபிலாஷைகளை வழங்க விரும்பப்போவதில்லை, சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையினை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கான எந்த விருப்பமும் இல்லை, தமிழ் மக்களின் பாதுகாப்பும், நலன்களும் தமிழ்ப் போராளிகளின் ஆயுத பலத்திலேயே தங்கியிருக்கிறது ஆகிய மூன்றுமே அந்தப் படிப்பினைகளாகும். 1984 ஆம் ஆண்டு தை மாதம் 10 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பெரும் எடுப்புடன் சர்வகட்சி மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ராணுவப் பாதுகாப்புடன் மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மண்டப வாயிலில் நான் சந்தித்தேன். மாநாடு குறித்த அமிர்தலிங்கத்தின் எண்ணங்கள் குறித்து அவரிடம் வினவினேன். "சர்வகட்சி மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும், தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்று மிகுந்த நம்பிக்கையோடு அவர் பதிலளித்தார். சர்வகட்சி மாநாட்டின் மீது அமிர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தார். மாநாட்டின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு முடிந்தபின்னர் என்னுடன் பேசிய அமிர், "ஜெயவர்த்தன விசாலாமான புன்னகையோடு என்னை மாநாட்டிற்கு வரவேற்றார்" என்று மகிழ்வுடன் கூறினார். அருகிலிருந்த சிவசிதம்பரமோ, "அவ்வளவும் நஞ்சு" என்று விரக்தியுடன் கூறினார். ஆனால், மாநாட்டின் அரம்ப நாள் அன்றே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் எல்லோருமே சிவசிதம்பரத்தின் கூற்றையே பிரதிபலித்தனர். தமிழர்களை ஜெயார் முற்றாகக் கைவிட்டு விட்டதாக அவர்கள் உணர்ந்தனர். சர்வகட்சி மாநாட்டினை ஜெயார் நடத்துவதே சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் என்று அவர்கள் உணரத் தலைப்பட்டனர். மாநாட்டினை ஆரம்பித்துவைத்து முதலாவதாகப் பேசிய ஜெயார், மாநாட்டின் உண்மையான குறிக்கோள் எதுவென்பதை தனது பேச்சில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டார். "முதலாவது நாம் எமது நாட்டின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் எவ்விலை கொடுத்தாவது காத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக நாட்டின் ஒருமைப்பாடு இதுவரை இருப்பதுபோல தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மூன்றாவதாக, பிரிவினைவாதத்தினையும் வன்முறையினையும் முற்றாக அழிக்க அனைத்து அரசியற் கட்சிகளும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார். ஒற்றையாட்சி நாட்டிற்குள் வாழ்வதை தமிழர்கள் முற்றாக எதிர்த்தே வந்திருந்தனர். ஆனால், நாட்டைத் தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்குள் ஒன்றுபட்ட நாடாக வைத்திருப்பதுதான் மாநாட்டின் முக்கிய குறிக்கோள் என்று ஜெயார் கூறியதன் மூலம் வெளிப்படையாகவே தமிழரின் கோரிக்கையினை நிராகரித்திருந்தார்.மேலும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வாக எதனையும் அவர் முன்வைக்க விரும்பவில்லை. அத்துடன், இணைப்பு "சி" இல் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை அடிப்படையாக வைத்தே முன்னணியினை இந்த மாநாட்டில் பங்கெடுக்கிறார்கள் என்று தெரிந்தும் அது பற்றிப் பேசுவதையும் அவர் முற்றாகத் தவிர்த்தார். ஜெயாரரின் பேச்சைக் கேட்ட அமிர்தலிங்கம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். பேச்சுவல்லமை கொண்ட தமிழ்க் காங்கிரஸின் உறுப்பினர் குமார் பொன்னம்பலமோ இணைப்பு "பி" மற்றும் இணைப்பு "சி" பற்றிக் கேள்வியெழுப்பியதுடன், "இந்த ஆவணங்களை தயாரித்தது யார்?" என்று கேள்வியெழுப்பினார். அதற்கு சாதுரியமாகப் பதிலளித்த ஜெயரவர்த்தன, "ஓ, அவையா? அவைதான் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருந்த ஆரம்ப ஆவணங்கள்" என்று கூறினார். "அப்படியானால், அவற்றினைத் தயாரித்தது யார்?" என்று குமார் பொன்னம்பலம் மீண்டும் கேட்டார். "மாநாட்டின் செயலாளரே அதனைத் தயாரித்தார்" என்று ஜெயார் பதிலளித்தார். அதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்த குமார் பொன்னம்பலம், "மாநாட்டிற்கென்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் எல்லாமே பெற்றொர்கள் என்றால், இணைப்பு சி மட்டும் அநாதைப் பிள்ளையாக நிற்கிறது" என்று முணுமுணுத்தார். இடைமறித்த தொண்டைமானோ இணைப்பு "சி" இனை தான் இந்த மாநாட்டிற்கான ஆவணமாகக் கருதுவாதகத் தெரிவித்தார். மாநாட்டில் கூட்டாகப் பேச முன்வந்த தமிழ்த் தலைவர்கள் மாநாட்டின் முதல் சில நாட்கள் கட்சித் தலைவர்கள் தமது ஆரம்ப அறிக்கைகளை பேச ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தை மாதம் 18 ஆம் திகதி தாம் செயற்பட வேண்டிய முறைகுறித்து கூடிப் பேசினார்கள். அதன்படி அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், தொண்டைமான் ஆகியோ இணைப்பு சி இயினை முற்றாக ஏற்றுக்கொள்வதுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி பொறுந்திய பிராந்தியங்களை தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைத்து பேசி அழுத்தம் கொடுப்பதென்று முடிவாகியது. தை 19 ஆம் திகதி இந்த மூன்று தலைவர்களினாலும் அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்ட விடயங்கள் இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை முற்றாக நடைமுறைப்படுத்துவதாகவே இருந்தது. அமிரின் மாநாட்டு உரை அமிர்தலிங்கமே முதலாவதாகப் பேசினார். "இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே நாம் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் எமது அவலங்களையும், பிரச்சினைகளையும் முற்றாகத் தீர்க்கப் போதுமானவையாக இல்லாதபோதும், அதனை அடிப்படையாக வைத்து தொடர்ந்தும் பேரம்பேசலில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்திலேயே இங்கு வந்திருக்கிறோம்" என்று பேசினார். தனது ஆரம்ப உரையினை அமிர் இரு பாகங்களாக வகுத்திருந்தார். முதலாவது பகுதியில் தமிழர்கள் சரித்திர காலம் தொட்டு வடக்குக் கிழக்கில் தம்மைத்தாமே ஆண்டு வந்த தனித்தன்மையான தேசத்து மக்கள் என்று கூறினார். 1619 இல் போர்த்துக்கேயரினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் தேசம் பின்னர் ஒல்லாந்தராலும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தது என்றும் அவர் கூறினார். அதுவரை தனித்தனியாக இருந்த தமிழ்த் தேசத்தையும், சிங்கள தேசங்களையும் 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நிர்வாகத் தேவைக்காக ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தமிழர்களையும் சிங்களவர்களையும் சமமான இனங்களாக நடத்தினார்கள் என்றும் அவர் விளக்கினார். ஆனால், 1948 இல் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் சிங்களவர்களால் தமிழர்கள் இரண்டாம்தர மக்களாக நடத்தப்பட்டதோடு, வஞ்சிப்பிற்கும் உள்ளானார்கள் என்று கூறினார். பின்னர் தமிழர் மீது நடத்தப்பட்ட சிங்களவர்களின் புறக்கணிப்பையும், வஞ்சகத்தையும் தொடர்ச்சியாகப் பட்டியலிட்டுக் கூறினார். தனது பேச்சின் இரண்டாவது பகுதியில் தமிழர்கள் இழக்கப்பட்ட தமது உரிமைகளுக்காக நடத்திய அகிம்சை வழி ஜனநாயகப் போரட்டங்களின் சரித்திரத்தைப் பட்டியலிட்டார் அமிர்தலிங்கம். மேலும், தமிழரின் ஜனநாயகவழிப் போராட்டங்களை அரசும், சிங்களக் காடையர்களும் வன்முறைகளைப் பாவித்து மிருகத்தனமாக அடக்கிய வரலாற்றையும் அவர் பட்டியலிட்டார்.தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறையே தமிழர்கள் தமது பாதுகாப்பினையும், நலன்களையும் இருப்பினையும் பாதுகாத்துக்கொள்ள தனிநாட்டைத் தவிர வேறு வழியில்லை எனும் எண்ணும் நிலைக்குத் தள்ளிச் சென்றதாக அவர் கூறினார். தனிநாட்டிற்கு மாற்றீடான, வடக்குக் கிழக்கில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வொன்று முன்வைக்கப்படுமிடத்து தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட தமிழர்கள் தயாராக இருப்பதாகக் கூறினார் அமிர்தலிங்கம். குமார் பொன்னம்பலத்தின் உரை குமார் பொன்னம்பலம் அடுத்ததாகப் பேசினார். தமிழர்களின் கோரிக்கை தனிநாடுதான் என்று அவர் கூறினார். மொத்தத் தமிழினமும் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் அணிதிரண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், சிங்களவர்களைப் போன்று பாதுகாப்புடனும், நலன்கள் விட்டுக் கொடுக்கப்படாமலும், சுய கெளரவத்துடனும், சம பங்காளிகளாக சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமிடத்து தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குமார் கூறினார். ஏனைய கட்சிகளிடமிருந்து இணைப்பு சி இற்குக் கிடைத்த ஆதரவு பின்னர் பேசிய தொண்டைமானும் அப்துள் அஸீஸும் இணைப்பு சி இல் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினர். இடதுசாரிகளான லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியனவும் இணைப்பு சி இனை வரவேற்றிருந்தன. அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபைகளை அமைப்பதை தமது கட்சி ஆதரிக்கும் என்று கூறியது. இணைப்பு சி இற்கு மாநாட்டில் பங்கெடுத்த பெரும்பாலான கட்சிகள் ஆதரவளிக்க ஆரம்பித்ததையடுத்து ஜெயாரும் பிரேமதாசவும் கலக்கமடைந்தனர். இந்த சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வகையான அசெளகரியத்திற்கு முகம் கொடுத்தது என்பதனை தை மாதம் 25 ஆம் திகதி பிரேமதாச வழங்கிய உரை சுட்டிக் காட்டியிருந்தது. மேலுழுந்தவாரியாகப் பேசிய பிரேமதாச, எந்தவொரு முடிவிற்கு முன்வராதும் பிடிகொடுக்காத வகையிலும் பேசினார்.1 point- இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம்!
விமானநிலையத்தைத் தானே கொடுத்தாங்க. துறைமுகம் சீனாவிடம் தானே இருக்கு?1 point- கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
நித்திரைக்கு போகும் நேரத்தில் .....................................................................கடவுளே .1 point- மனதும் இடம்பெயரும்
1 point'மனமும் இடம்பெயரும்' நூலுக்கான 'என்னுரை'யையும் 'அணிந்துரை'யையும் வாசித்தேன். மிக நன்று. இவற்றில் நூலின் சிறப்பு தெள்ளிதின் விளங்கி நிற்பது. இவ்வாசிப்பின் மூலம் ஆசிரியர் சகோதரி நிவேதா உதயராஜனின் சில கதைகளை ஓரளவு வாசித்தேன். மேலும் வாசிக்க எண்ணம். வாசித்தவற்றை மீள்வாசிப்பு செய்யவும் எண்ணம். ஈழத் தமிழில் தற்கால சிறுகதை இலக்கியம் வாசிக்கும் அனுபவம் புதுமை. குறிப்பாக 'நான் வசந்தன்' எனும் சிறுகதையை ரசிக்கும் போது, முன்னர் என் மகள் இணையத்தில் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. நிவேதா அவர்களின் கதைக்கும் என் மகளின் கட்டுரைக்கும் தொடர்பு இல்லைதான். அவள் அக்கட்டுரை பற்றி என்னிடம் சொல்லவில்லை. தயக்கமாயிருக்கலாம். அத்தயக்கத்தை மதித்து, தற்செயலாக நான் அதனை வாசித்ததைக் காட்டிக் கொள்ளவில்லை. இருப்பினும் பேசாப் பொருள்களைப் பெண்கள் வெளியில் அதிகம் பேச ஆரம்பித்தது குறித்து மகிழ்ச்சி ஏற்பட்டது. நிவேதா அவர்கள் 2020 லேயே யாழில் பதிவு செய்தது அறிந்து கூடுதல் மகிழ்ச்சி. மேலும் அவருக்கு வெகு இயல்பாக வரும் அந்த எழுத்திற்கு வாழ்த்து. 2020ல் யாழில் பதிவான அக்கதை தொடர்பில் அங்கு எழுத இயலாததால் இங்கு எழுதிவிட்டேன். இனி மகள் எழுதிய கட்டுரையின் இணைப்பு கீழே : https://puthu.thinnai.com/2022/01/30/எது-பிறழ்வு/1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 07 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது. பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன. சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார் மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான். மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான். “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள். அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள். “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா. சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை. மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும் பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான். சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள். சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது. சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது. “நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார். “அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன். சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார். வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன. சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின. துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான். புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. https://akaramuthalvan.com/?p=13041 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 04 வீரையாவின் இடத்தைக் கண்டுபிடிக்கவே வாரங்களாயின. அவருக்கு முன்னால் இரத்த அழுத்தம் அதிகரித்து பதற்றத்துடன் அழுதபடி நின்றாள் அத்தை. எதையும் பொருட்படுத்தாமல் அத்தையளித்த சரைகளைப் பிரித்து பொருட்களைச் சரிபார்த்தார். சடங்குக்கு தேவையான பொருட்களின் பட்டியலை அத்தைக்கு தெரிவித்தது யாரென்று வீரையாவுக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாப் பொருட்களும் உபரியாக வந்திருந்தன. ரெண்டு சரை சாம்பிராணித் தூளுக்குப் பதிலாக ஐந்து வந்திருந்த போதுதான் இது செவிடன் ரத்தினத்தோட ஆளென்று அடையாளம் கண்டார். வீரையாவுக்கு வன்னி முழுதும் பக்தர்கள் பெருகியிருந்தமையால் ஏற்படும் குழப்பம் தானன்றி வேறில்லை. “அழாதே” என்று சைகை செய்து, அமர்ந்து கொள்ளெனக் கட்டளையிட்டார். நிலத்தைக் கால்களால் விலக்கித் துப்பரவு செய்து கைகூப்பி அமர்ந்தாள் அத்தை. வீரையாவின் கண்களில் சிவப்பு தரித்திருந்தது. தனது இருப்பிலிருந்து மாடப்புறா ஒன்றை எடுத்தார். கால்களில் இடப்பட்டிருந்த கட்டினை அவிழ்த்தார். அதனது கண்களில் காய்கள் வளர்ந்திருந்தன. புறாவை அத்தையின் கையில் கொடுத்து குங்குமத்தை தடவினார். சாம்பலில் குருதி இறங்குவதைப் போல புறாவின் இறகுகளுக்குள் குங்குமம் புகுந்தது. அத்தை அருவருத்தபடி புறாவை இறுக்கிப் பிடித்திருந்தாள். வெறிகொண்ட கொடுங்கரமேந்தி சிறிய வெள்ளிக்கத்தியால் புறாவின் கழுத்தை அறுத்தார் வீரையா. அத்தையின் மூக்கின் கீழ்ப்பகுதியில் புறாவின் குருதிச் சாரல். சிந்தும் குருதியை குப்பியொன்றில் பிடித்து, ஏதேதோ மந்திரங்கள் சொல்லி அடைத்துக் கொண்டார். அத்தை கண்களை மூடிக்கொண்டு “என்ர தெய்வமே” என்று உடல் நடுங்கினாள். வீரையா ஒருபிடி திருநீற்றையள்ளி குப்பியிலிட்டார். புறாக்குருதியும் நீறும் குப்பியில் கலந்தன. காட்டின் திக்குகள் அறிந்து திருநீற்றை ஊதி “தெய்வம் உன்னோட இருக்கும், தெய்வம் உன்னோட இருக்கும்” என்று சொன்னார். கூப்பிய தனது கரங்களை இன்னும் இறுக்கியபடி “நீயொரு சக்தியுள்ள தெய்வமெண்டால் என்ர மகள காப்பாத்திப் போடு” என்ற அத்தைக்கு மேலே குருவியுண்டு கனிந்த காட்டுப்பழமொன்று உதிர்ந்தது. அந்தக் குப்பியை ஒரு சிறிய துணிப் பொட்டலமாக கட்டிக்கொடுத்து “ அவளின்ர கழுத்தில இது எப்பவும் இருக்கவேணும். அவளுக்கு இதைவிடவும் ஒரு காவலில்லை. துணையில்லை. விளங்குதோ” என்றார். அத்தை பயபக்தியோடு அதை வாங்கி, அவரது காலைத் தொட்டு வணங்கி எழும் போதுதான் காட்டுக்குள் சிலர் கதைக்கும் சத்தம் கேட்டது. வீரையா விழிப்புற்று தடயங்களை அழித்தார். பொருட்களை அள்ளிக் கொண்டார். புறாக்கூடையை எடுத்துக் கொண்டார். அத்தையை தன்னோடு அழைத்துச் சிறிது தூரம் ஓடிச் சென்றார். மறைவிடத்தில் பதுங்கினார்கள். அத்தைக்கு மூச்சுத் திணறியது. அகப்பட்டால் மரணமன்றி வேறேது என்றுரைத்தபடி சத்தம் கரையும் திசை வரை காதை வளர்த்தார் வீரையா. அது புதிய போராளிகளின் அணி. பயிற்சி முடித்து காடு வழியாக நடத்திச் செல்லப்படுகிறார்கள் என்பதை வீரையா விளங்கிக் கொண்டார். “சரி நீங்கள் தாறத தந்திட்டு கெதியா வெளிக்கிடுங்கோ” அத்தை தன்னுடைய பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினாள். வீரையாவுக்கு அதில் திருப்தியில்லை. “எனக்கு நீங்கள் பிச்சை போடவேண்டாம். என்ர வேலைக்கு தகுந்த காசு குடுங்கோ” என்றார் வீரையா. “இந்த மாசம்தான் நான் சீட்டு எடுக்கப்போறன். காசு வந்ததும் உங்களிட்ட செவிடன் ரத்தினம் மூலமாய் சேர்ப்பிக்கிறன். அதுவரைக்கும் பொறுத்துக் கொள்ளுங்கோ” அத்தை சொன்னாள். வீரையா சரியென்று சொல்லி தலையசைத்து “ஊருக்குள்ள போகேக்க கவனமாய்ப் போ, எந்தக் கஷ்டம் வந்தாலும் என்ர பேரைச் சொல்லிப்போடாத, தெய்வத்தைக் காட்டிக் குடுத்த பாவம் உன்ர குலத்தையே அழிக்கும்” என்றார். “வீரையாவைச் சந்திக்க காட்டில் ஒரு பாதையிருக்கு. அது இயக்கத்திற்கும் தெரியாது, ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று கள்வெறியில் புலம்பிய வியட்நாம் பெரியப்பாவை இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் பிடித்துச் சென்றனர். இந்தச் செய்தியோடு ஊருக்குள் நுழைந்ததும் அத்தைக்கு திகில் பெருகிவிட்டது. குளித்து முடித்து சமையல் செய்தாள். உள்ளேயொரு ஆடை அணிந்து அதற்குள் உணவைப் பத்திரமாக பதுக்கிக் கொண்டாள். மீண்டும் மேலேயொரு ஆடை. மலங்கழிக்க செல்லும் பாவனையோடு போத்தில் தண்ணீரோடு காட்டிற்குள் புகுந்தாள். காடெங்கும் அசையும் மரத்தின் இலைகள், தன்னைக் கண்காணிக்கும் காலத்தின் கண்களென அத்தை பதறினாள். பதினைந்து நாட்களாக காட்டுக்குள்ளேயே அமர்ந்திருக்கும் பூதவதியின் நிலையெண்ணி அத்தையால் எதுவும் செய்ய இயலாமாலிருந்தது. பூதவதி காத்திருக்கும் கருங்காலி மரத்தடியில் வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கையில் சிறிய கோடாரியும், தலையில் பெரிய கடகமொன்றுமிருந்தது. அத்தை புதரொன்றுக்குள் படுத்துக் கொண்டாள். கருங்காலி மரத்தின் கீழே நின்றவர் பூமியின் கீழே புதையுண்டு போவதைப் பார்த்து கூக்குரலிட்டாள். சத்தம் எழவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவள் சுயத்திற்கு திரும்பிய போது பூதவதியின் மடியில் கிடந்தாள். “என்னம்மா, சின்னப்பிள்ளையள் மாதிரி காட்டுக்குள்ள எதையோ பார்த்திட்டு கத்தி மயங்கிப் போறியள்” “எடியே, அது எதோ இல்ல. எங்கட கருங்காலி முனி” “நீ முனியைப் பார்த்துக் கத்தி, புலி என்னப் பிடிச்சுக் கொண்டு போகப்போகுது” என்றாள் பூதவதி. “அது இனிமேல் நடக்காது. நான் வீரையாவ போய் பார்த்து காவலுக்கு எல்லாமும் செய்து எடுத்துக் கொண்டு வந்திட்டன்” சொல்லியபடி அந்தப் பொட்டலத்தைக் கொடுத்தாள். பொட்டலம், குருதிக் கறையோடு திருநீற்று வாசமெழும் வெள்ளை நிறச் சுண்டுவிரல் போலவிருந்தது. “இதை உன்ர கழுத்தில கட்ட வேணும். புலியில்லை. எலி கூட உன்னை நெருங்காது. வீரையா சும்மா ஆளில்லை. விளங்குதா” என்றாள் அத்தை. பூதவதி சாப்பிட்டு முடித்தாள். கழுத்தில் பொட்டலத்தை கட்டிவிட்டு அத்தை காட்டை விட்டுப் புறப்பட்டாள். பூதவதி காட்டின் நடுவே சீற்றம் கொண்டு உலரும் பேய் மகளாய் தேசம் பார்த்து வெறித்திருந்தாள். வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பிக்கப்பட்டார்கள். பிள்ளைகளைக் காப்பாற்ற வழியற்று சனங்கள் காடுகளுக்குள் பாய்ந்தனர். இரவும் பகலும் துரத்தப்பட்டனர். படையில் பலாத்கார ஆட்சேர்ப்புக்கு எதிராகக் கொதித்தனர். தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலி கேட்கப்பட்டனர். வீடுகளுக்கு நடுவே சின்னச் சுரங்கங்கள் வளர்ந்தன. மூச்சுப்பிடித்து மண்ணுக்குள் கிடந்தனர். புறாக்கூடுகளுக்குள், சுடுகாடுகளுக்குள், வைக்கோல் போருக்குள், பாழ் கிணற்றுக்குள், குளத்துக்குள் என காலத்தின் வேட்டைப்பற்களுக்குள் சிக்க விரும்பாத மாம்சங்களாய் தப்பிக்க எண்ணினர். “பூமியிலுள்ள எல்லாவற்றுக்கும் எங்கட சனங்களின் ரத்தம் தேவைப்படுகிறது” விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டிருந்த வியட்நாம் பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். வீரையா காட்டின் எந்தப் பகுதியில் இருக்கிறாரென அறியவே விசாரணை நடந்திருக்கிறது.“அது இயக்கத்திற்கும் தெரியாது. ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று நான் சொல்லும்போதே எனக்கும் தெரியாது என்று சொல்லியிருக்கவேணும். அது என்ர பிழை தான். அதுக்காக என்னை நீங்கள் துரோகி எண்டு நினைக்க வேண்டாம். கிட்டண்ணா யாழ்ப்பாணத்தில இருக்கும் போது, அவருக்கு நிறைய மாம்பழங்கள் குடுத்திருக்கிறன்” என்றிருக்கிறார். கடுமையான மழை பெய்து கொண்டிருந்த அதிகாலையில் காட்டிற்குள் போராளிகளின் நடமாட்டத்தைப் பார்த்த வீரையா வேறொரு திக்கில் ஓட்டம் பிடித்தார். ஆனால் பச்சை நிறப்பட்டுத் துணியையும், கால்கள் கட்டப்பட்டிருந்த மாடப்புறாவையும் அவசரத்தில் விட்டுச் சென்றிருந்தார். அணியின் தலைமை அதிகாரி அந்த இடத்தை ஆய்வு செய்ய கட்டளையிட்டார். ஆழ ஊடுருவி அப்பாவிச் சனங்களைக் கொன்று குவிக்கும் வன்கவர் வெறிப்படையைத் தேடிய அணியினரின் கண்களில் வீரையாவின் தளம் சிக்கியது. மறைத்து வைக்கப்பட்ட திருநீற்று மூட்டையும், பெருந்தொகைப் பணமும், நகைகளும், அறுக்கப்பட்ட புறாத்தலைகளும் கைப்பற்றப்பட்டது. பல்வேறு புலனாய்வு விசாரணைகளுக்குப் பிறகு வீரையாவின் இடமென உறுதியாயிற்று. காடெங்கும் விரவி தேடத் தொடங்கினர் போராளிகள். பூதவதியைப் போல பலருக்கு வீரையா பொட்டலம் கட்டிக் காவல் செய்திருக்கிறார். சிலரைத் தான் இயக்கத்தாலும் நெருங்க முடிந்தது. ஆனால் வீரையாவை அவர்கள் அன்று மதியமே நெருங்கிப் பிடித்தனர். வீரையா தன்னிடமிருந்த புறாக்களை அவர்களை நோக்கி வீசி தற்காத்திருக்கிறார். காட்டிற்குள் மண்டியிட்டு கைகளை உயர்த்தி “தனது எஜமானர்களின் குருத்தையுண்டு வாழும் பிராணிகள் அழிந்துபோம்” என்று மட்டும் வீரையா அறம்பாடியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட செய்தி, வன்னி நிலம் முழுக்க பாய்ந்தோடியது. அவரிடம் காவல் வாங்கியவர்கள் எச்சிலை விழுங்க முடியாமல் தொண்டையைப் பிடித்துக் கொண்டு மிரண்டனர். செவிடன் ரத்தினம் உட்பட வீரையாவிற்கும் சனங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்கள் பலரையும் இயக்கம் சடுதியாக கைது செய்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை கணக்கிடப்பட்டது. ஆனால் அவரிடம் சென்று வந்த சனங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை. அந்தக் குழப்பமே பலருக்கு உறக்கத்தை தரவில்லை. வீரையாவை இயக்கம் சுட்டுக் கொல்லுமென அத்தை நம்பினாள். பூதவதி காட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருந்தாள். அத்தை வேண்டாமென தலைப்பாடாய் அடித்துக் கொண்டாள். “எத்தன நாளைக்குத் தான் இப்பிடி காட்டுக்குள்ள இருந்து ஆந்தை மாதிரி முழிக்க ஏலும். நான் போறன். அங்க போய்ச் சாகிறன்” “எடியே, நான் கும்பிடுகிற தெய்வம் உன்னைக் காப்பாத்தும். நீ கொஞ்சம் குழம்பாம இரு” “இல்ல, இஞ்ச காப்பாத்திற உன்ர தெய்வம், எல்லா இடத்திலையும் காப்பாத்தும் தானே, என்னால இனியொரு நிமிஷமும் இஞ்ச இருக்கேலாது” பூதவதியை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அத்தை. கழுத்தில் கிடந்த பொட்டலத்தை அறுத்து எறிந்தாள் பூதவதி. கழுத்துப் புடைத்து கண்கள் சிறுத்து புறாவாக எழுந்து பறக்க முனைந்தாள். அடுத்த கணத்தில் அவளது தலை அறுபட்டு நிலத்தில் துடிக்க, காடு ஒரு குப்பியாக அவளது குருதியை நிரப்பிக்கொண்டது. அய்யோ என்ர பிள்ளை என்று அத்தை எழுப்பிய சத்தம் கேட்டு நள்ளிராப் போழ்தின் நாய்கள் மிரண்டன. தலைமாட்டில் கிடந்த லாம்பைத் தீண்டி ஊரெழும்பியது. அத்தை வெளிச்சம் எதுவுமின்றி காட்டுக்குள் நுழைந்தாள். பூதவதியின் இருப்பிடம் நோக்கி அலறித் துடித்தது தாய்மை. ஒவ்வொரு திரளிலும் காடு இருளால் அசைந்தது. அத்தை நெடுமூச்சு விட்டு பூதவதி…பூதவதி என்று அழைத்துக் கொண்டே கருங்காலி மரத்தைக் கடக்கும் போது, அதில் நின்ற உருவம் அவளை மறித்தது. அத்தைக்கு திடுக்கிடல் எதுவுமில்லை. “என்ர முனியப்பா, வழிவிடு. துர்க்கனவு. பிள்ளையைப் பார்க்கவேணும்” முனி எதுவும் கதைக்கவில்லை. அவளைப் போ என்பதைப் போல கையசைத்தது. அத்தை பூதவதியின் இருப்பிடத்திற்குப் போன போது அங்கு அவளில்லை. இருளின் தோல் கிழித்து தன் பிள்ளையைத் தேடினாள் அத்தை. இல்லை, இல்லை. பூதவதி இல்லை. கையில் அகப்பட்ட கற்றையான தலைமுடியைப் பற்றிக் கொண்டு கதறியழுதாள். அவளுடைய காலணிகள் அறுபட்டிருந்தன. பொட்டலத்தின் முடிச்சு அவிழாமல் கழன்று விழுந்திருந்தது. காடுறைத் தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் இரவை எரியூட்டின. கருங்காலி மரத்தின் கீழே நின்றிருந்த முனிக்கு தகவல் வந்தது. அது தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வாகனம் நிற்கும் திசையை நோக்கிப் போனது. அந்தக் காட்டிற்குள் மறைந்திருந்த எட்டுக்கு மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு முனியின் வாகனம் புறப்பட்டது அத்தைக்கு தெரியவில்லை. ஐந்து நாட்கள் கழித்து பூதவதி இயக்கத்தின் பயிற்சி முகாமிலிருந்தாள். அவளுக்கு ஆயுதத்தை தொடப் பிடிக்கவில்லை. தன்னால் முடியாதென மறுத்தாள். சில நாட்களுக்குப் பின் பயிற்சிக்கு ஒத்துக் கொண்டாள். மூன்று மாதங்களில் பயிற்சி முடிந்திருந்தது. வீரையாவின் பொட்டலம் கட்டப்பட்டிருந்த கழுத்தில் இப்போது நஞ்சு மாலை அணிந்தாள். பயிற்சி நிறைவு பெற்று தர்மபுரத்தில் நிகழ்ந்த போராளிகள் சந்திப்பில் பூதவதியைச் சென்று அத்தை பார்த்தாள். அவளுக்குப் பிடித்த பயித்தம் பணியாரமும், முறுக்கும் கொண்டு போயிருந்தாள். “நீ ஓடி வந்திடு. உன்ன நான் எப்பிடியாவது காப்பாத்தி வைச்சிருப்பன்” “அம்மா, எங்களை மன்னார் சண்டைக்கு அனுப்பப் போயினம். அங்க இருந்து வட்டக்கச்சிக்கு ஓடி வர ஏலுமே” “உனக்கு உந்த நக்கல் புண்டரியம் மட்டும் உதிர்ந்து தீராது என்ன” “அம்மா, உன்னோட இருந்தால் சாகாமல் இருக்க முடியுமோ சொல்லு. இஞ்ச எப்பிடியாய் இருந்தாலும் மண்ணுக்குள்ள தான். இந்தச் சாவில ஒரு ஆறுதல்” “என்னடி பிரச்சாரம் பண்ணுறியே” “பின்ன, கருங்காலி முனி மட்டும் என்ன, பயந்து செத்துப்போன தெய்வமே, துணிஞ்சு நிண்டவர் தானே, அதுமாதிரி நானும் நிண்டு சாகிறன். விடன்” “கருங்காலி முனியும் நீயும் ஒண்டோடி, என்னடி கதைக்கிறாய். துவக்கை கையில தூக்கினால் உங்களுக்கு தெய்வமும் தெரியுதுல்ல. கருங்காலி முனி, அண்டைக்கிரவு நான் ஓடி வரேக்க வழி மறிச்சு நிண்டது. பிறகு கை காட்டி போ எண்டு உத்தரவு சொன்னதெல்லாம் உனக்குத் தெரியாது” “அண்டைக்கு அங்க நிண்டது முனியில்லை. புலி. மேஜர் பகீரதன். பத்து நாளுக்கு முன்னாலதான் கிபிர் அடியில வீரச்சாவு அடைஞ்சிட்டார். “நீ முனியெண்டு நினைச்சு அவரிட்ட கதைச்சதை என்னட்ட சொல்லிச் சிரிச்சவர்” என்றாள். “இவங்கள் முனியாவும் உருமறைப்பு செய்யத் தொடங்கிட்டாங்களே” “இப்ப அவரும் முனி தான். நீ போய்ப்பார். கருங்காலி மரத்தடியில நிற்பார்” பூதவதி சிரித்துக் கொண்டு விடைபெற்றாள். “என்ர தெய்வமே” என்று அத்தை தன்னுடைய பிராணத்தை இழுத்து வெளியேற்றினாள். வீட்டிற்கு வந்து அழுதழுது நொந்தாள். சனங்களை ஏமாற்றி காசு, நகை போன்றவற்றை வாங்கியமைக்காக வீரையாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக செய்திகள் உலவின. மன்னார் களமுனையில் பூதவதி சமராடினாள். பகைவர் அஞ்சும் போர்க்குணத்தோடு எல்லையில் நின்றாள். விடுமுறை அளித்தும் வீடு செல்ல மாட்டேனென அடம்பிடித்தாள். மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான களமெங்கும் அனலாடினாள். அத்தை வீட்டுக்கு வருமாறு கடிதத்துக்கு மேல் கடிதம் கொடுத்தனுப்பினாள். பூதவதி வருவதாயில்லை. முள்ளிவாய்க்காலில் அத்தையை கூடாரத்தில் வந்து பார்த்தாள். அத்தை இப்படியே இங்கேயே தங்கிவிடு என்று கைகூப்பினாள். பூதவதி கூடாரத்தை விட்டு தனது அணியினரோடு புறப்பட்டாள். சில நாட்களில் சனங்கள் நிலத்தைக் கைகூப்பி தொழுதனர். நிலம் அவர்களை மட்டுமல்ல தன்னையும் பறிகொடுத்தது. இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பூதவதியுமொருத்தியானாள். அத்தை சோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பூதவதி வருவாள் என்று நம்பிக் காத்திருந்தாள். ஊருக்குள் எல்லோரும் மீளக்குடியமர்த்தப்பட்டனர். நீண்ட வருடங்களின் பின்னர் பன்றி வேட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் கருங்காலி மரத்தின் கீழே பெண்ணொருத்தி நின்று மறைவதைக் கண்டிருக்கிறார்கள். அவளுடைய கழுத்தில் சுண்டு விரலளவில் பொட்டலம் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், தோளில் புறாவொன்று கால்கள் கட்டப்பட்டு பறக்க முடியாமல் சிறகடித்ததாகவும் சொன்னார்கள். அத்தை மறுகணமே கருங்காலி மரம் நோக்கி ஓடிச் சென்று பூதவதி… பூதவதி… என்று நிலம் தோய அழுதாள். மரம் அசைய மேலிருந்து நறுமணம் கமழ பொட்டலங்கள் உதிர்ந்தன. அத்தை ஒன்றைப் பிரித்துப் பார்த்தாள். ரத்தம் கண்டி நாள்பட்டிருந்த பூதவதியின் கால் பெருவிரல். “என்ர தெய்வமே” யென அதைக் கண்களில் ஒத்திக்கொண்ட அத்தையை நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது காடு. அத்தையின் முன்னே தோன்றி நின்றனர் பல்லாயிரம் முனிகள். https://akaramuthalvan.com/?p=11671 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 03 திலகாவுக்கு புற்றுநோய் என்ற தகவலை சிவபாதசுந்தரம் மாமாவின் துவச வீட்டில் வைத்துத்தான் கேள்விப்பட்டோம். புதுக்குடியிருப்பிலிருக்கும் திலகாவை பார்க்க அம்மாவும் நானும் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டோம். தீர்ந்த போரின் சிறிய எச்சங்களையும் அழித்தொழிக்கும் தீவிரத்தோடு வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. “சமாதானத்திற்கான போர்” வெற்றியின் வீரப்பிரதாபங்கள் வீதிகளின் இருமருங்கிலும் காட்சியாகியிருந்தன. அப்பாவிச் சனங்களின் குருதியாற்றின் தடயம் அழிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதியில் வாகனங்கள் விரைந்தன. “பேரழிவு முடிஞ்சுது எண்டு பார்த்தால், மிஞ்சியிருக்கிற எங்களுக்குள்ளேயும் அது ஒளிஞ்சு கிடக்குது போல. பாவம் திலகா. எத்தனை இடியைத் தான் தாங்குவாள்” அம்மா புலம்பினாள். “இப்ப எல்லாருக்கும் உந்தக் கோதாரி கான்சர் தான் வருகுது. சண்டையில உவங்கள் அடிச்ச பொசுபரசுதான் வேலையக் காட்டுதாம்” பக்கத்து இருக்கையிலிருந்தவர் சொன்னார். அம்மா வலதுகையின் ஆட்காட்டி விரலால் கண்ணீரைத் தொட்டுச் சுண்டினாள். மீண்டும் பொல பொலவென கண்ணீர் பெருகியது. “அதைச் சும்மா விடுங்கோ. துடைக்க துடைக்கத்தான் எங்கையோ இருந்து உடைப்பு எடுக்குது. ஒரு பிரயாணத்தில அழுது தீர்ந்து போகிற அளவுக்கா எங்கட உத்தரிப்புகள். அதை துடைக்காம விடுங்கோ” பக்கத்து இருக்கைக்காரர் சொன்னார். அவருடைய தலையின் ஒருபகுதி பள்ளமாக இருந்தது. நான் பார்ப்பதை விளங்கிக் கொண்டவர் “சுதந்திரபுரத்தில விழுந்த அஞ்சு இஞ்சி ஷெல். மண்டையோட்ட வைச்சு பிச்சை கேக்கிறனெண்டு நினைச்ச தெய்வம் இரங்கிக் காப்பாத்தி போட்டுது” என்றார். பேருந்திலிருந்து இறங்கினோம். திலகா வீட்டை அடைவதற்கு பிரதான வீதியிலிருந்து கொஞ்சத்தூரம் நடக்க வேண்டியிருந்தது. சிலவருடங்களுக்கு முன்பு நானும் தவேந்திரன் மாமாவும் இப்படியொரு பொழுதில் இந்தப் பாதை வழியாக நடந்து போனோம். பெருமூச்சை விட்டு ஆசுவாசமானேன். தவேந்திரன் மாமா இருபதாண்டுகளுக்கு மேலாக இயக்கத்திலிருந்தவர். பல களமுனைகள் கண்டவர். உடலெங்கும் விழுப்புண் தழும்புகள். போர் மறவர். பகையறிந்த பெயர் திலகா. உக்கிரம் கொண்டாடும் காளி. தாக்குதல்களில் அவளணி பெற்ற வெற்றிகள் பெருநிரை. தவேந்திரன் மாமாவுக்கும் திலகாவுக்கும் நீண்ட வருடங்கள் காதலுறவு. இரண்டு பேரின் தளபதிமாரும் ஒப்புதல் அளிக்க திருமணம் நடந்தேறியது. தவேந்திரன் மாமாவை இனி களம் செல்ல வேண்டாமென தலைமைச் செயலகம் உத்தரவு பிறப்பித்தது. அதனை ஏற்கமறுத்து அறிக்கை எழுதினார். ஒருநாள் இரவு தவேந்திரன் வீட்டு முற்றத்தில் வந்து நின்ற வாகனத்தை விட்டு, தலைவர் இறங்கினார். இருவருக்கும் திருமணப் பரிசு வழங்கி வாழ்த்தினார். தடல்புடலாக சமைத்து விருந்துண்டார்கள். “தவா நீ இனிமேல் சண்டைக்கு போகவேண்டாம். படையணி நிர்வாகத்தில வேலையைப் பார்” என்றார் தலைவர். “இல்லை அண்ணா நான் லைனுக்கு போறன், நிர்வாகம் எனக்குச் சரிவராது” என்று மறுத்தான் போட்டார். “நிர்வாகம் சரி வராட்டி என்னோட வந்து நில், அது உனக்கு சரிவருமோ” என்று தலைவர் கேட்டதும் தவேந்திரன் மாமாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. சரியென்று தலையசைத்தார். இரவு தீர்வதற்கு முன்பு வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. அம்மாவுக்கு ஆயிரம் தவிப்புக்கள். திலகாவின் விதி நினைத்து கலங்கினாள். ஊருக்குள் ஆங்காங்கே மனிதர்களின் நடமாட்டமிருந்தது. முழுதாய் சனங்கள் இன்னும் மீளக்குடியேற்றப்படவில்லை. போராளிகளின் புழக்கத்திலிருந்த வீடுகள் இராணுவம் முகாம்களாகியிருந்தன. திலகாவின் வீடு மாமரங்களுக்கு நடுவே இருந்தது. படலையை ஒட்டியிருக்கும் வைரவர் கோவில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. “இந்தக் கோயில கூட்டித் துப்பரவு செய்து குடுத்திட்டு போவம்” என்றாள் அம்மா. உள்ளே நுழைந்ததும் பாழடைந்து சிதைந்திருந்த பதுங்குகுழியைக் கண்டேன். தென்னங்குத்திகள் உக்கிக் கிடந்தன. அதனுள்ளிருந்து வெளியேறிய வீமனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அம்மா வீமன் என்றழைத்ததும் மூன்று கால்களால் கெந்திக் கெந்தி ஓடிவந்தான். அவனுக்கு முன்னங்கால் ஒன்று இல்லாமலிருந்தது. அவனுடைய குழைவும் வாலாட்டலும் வரலாற்றின் எஞ்சுதல். அம்மாவின் கையயும் முகத்தையும் நக்கித் துள்ளிக் குதித்தான். வீமனின் சத்தம் கேட்டு சாய்மனைக்கதிரையில் அமர்ந்திருந்த திலகா திரும்பினாள். அம்மாவை அடையாளம் கண்டவுடன் எழுந்தோடி வந்து கட்டியணைத்தாள். அவளுடைய உடலில் கலக்கத்தின் நடுக்கம், ஆற்றாமையின் அலைச் சீற்றம். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல இயலாத ஆகக் கொடிய இருளில் அம்மாவும் திலகாவும் விம்மி அழுதனர். கொஞ்ச நேரம் எதுவும் கதையாமல் நின்றிருந்தோம். வீமன் தளர்ந்த தனது குரலினால் ஆனந்தம் பொங்க எட்டுத் திக்குகள் நோக்கி குரைத்தான். திலகா என்னை அணைத்து முத்தமிட்டாள். மாமரங்கள் பூத்திருந்தன. அன்றிரவு திலகாவுக்கு பிடித்த பால்புட்டை சமைத்துப் பரிமாறினாள் அம்மா. வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து நிறையைக் கதைத்தோம். திலகா என்னிடம் “ உனக்கு உந்த பங்கர் ஞாபகம் இருக்கோடா” கேட்டாள். “நானும் மாமாவும் நாலு நாளில அடிச்ச பங்கரெல்லே, எப்பிடி மறக்கேலும்”. அம்மா அடுப்படியில் அப்பத்திற்கு மா தயாரித்தாள். பிடித்தது அப்பமா? தவேந்திரன் மாமாவா? என்று கேட்டால் திலகாவின் பதில் எப்போதும் அப்பமாகவிருக்கும். நாளைக்கு காலையில் குளத்தடிக்குச் சென்று மீன் வாங்கிவரவேண்டும். அங்குள்ள குளத்து மீனுக்கு நிகர்த்த உருசை எந்தச் சமுத்திர மீனுக்கும் இல்லை. வீமன் என்று குரல் கொடுத்தேன். பதுங்குகுழிக்கு மேலே வந்து நின்று, திக்குகள் பார்த்து என்னிடம் ஓடிவந்தான். “வீமன் உந்த பங்கருக்குள்ளேயே தான் இருக்கிறான். கூப்பிட்டால் தான் வெளிய வருகிறான்” திலகா சொன்னாள். “இவ்வளவு சண்டைக்குள்ளையும் உயிர் தப்பி நிண்டிட்டான். இவனைப் பார்த்ததும் என்னால நம்ப முடியேல்ல” என்றேன். “வீமனுக்கு முன்னங்கால் போன மூன்றாவது நாள் இஞ்ச இருந்து வெளிக்கிட்டனான். எங்கட மெடிக்ஸ் ஆக்களக் கூப்பிட்டு மருந்து கட்டி உந்த பங்கருக்குள்ளேயே விட்டிட்டு போனான். இத்தனை வருஷம் கழிச்சு திரும்ப வந்தால் வாலாட்டிக் கொண்டு வைரவர் கோயில் கருவறைக்குள்ள படுத்திருக்கிறான்.” வீமன் எனக்கருகே விழித்திருந்தான். அவனுடைய மூன்று கால்களையும் தடவிக் கொடுத்தபடியிருந்தேன். கண்கள் துஞ்சி சுகம் கண்டான். திடுமென விழித்தோடி பதுங்குகுழிக்குள் புகுந்தான். அம்மா சாயத்தண்ணி போட்டுக் கொண்டு வந்தமர்ந்து, “நாளைக்கு காலம்பிறயே வைரவர் கோயிலைத் துப்பரவு செய்யவேணும், வெள்ளன எழும்பு” என்றாள். “இப்ப எதுக்கு அதெல்லாம் செய்து முறியிறியள். சும்மா இருங்கோ. நீ ஆறுதலாய் எழும்படா” என்றாள் திலகா. “நீ சும்மா இரு. வளவோட வாசலில இருக்கிற தெய்வத்தை பூசிக்காம விட்டு இன்னும் தரித்திரத்த அனுபவிக்க ஏலாது” அம்மா இறுக்கமாகச் சொன்னாள். திலகா பதிலேதும் கதையாமல் சாயத்தண்ணியைக் குடித்து முடித்தாள். பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனவைகள் பற்றி எதுவும் கதைப்பதில்லை என அம்மா உறுதி பூண்டிருந்தாள். மூவரும் ஒன்றாக உறங்கச் சென்றோம். லாம்பைத் தணித்து தலைமாட்டில் வைத்துக் கொண்ட அம்மா “வெள்ளனவா எழும்பு, உன்னை எழுப்புறத ஒரு வேலையாக்கிப் போடாத” என்றாள். அருந்திய மருந்துகளின் வெக்கையில் உறங்கியிருந்த திலகாவை அம்மா போர்த்திவிட்டாள். என்னை உறக்கம் சேரவில்லை. இந்த வீட்டில் அளவற்ற ஒளியும் மகிழ்வும் நிறைந்திருந்த தருணங்கள் கண்ணுக்குள் நிறைந்தன. ஞாபகத்தின் ஒவ்வொரு துளியும் இரவின் தாழ்வாரத்தில் கோர லயத்துடன் விழத்தொடங்கின. அடுப்படிக்குத் தண்ணீர் குடிக்க போனேன். குடத்தைச் சரித்து செம்பில் நிறைத்தேன். ஆசுவாசத்திற்கு எதுவுமில்லை. மீண்டும் படுக்கைக்குப் போனேன். தணித்து வைக்கப்பட்டிருந்த லாம்பின் வெளிச்சம் விழிப்புக்கு துணையாகவிருந்தது .” “அழுதால் பயனென்ன நொந்தால் பயனென்ன ஆவதில்லை; தொழுதால் பயனென்ன நின்னை ஒருவர் சுடவுரைத்த பழுதால் பயனென்ன; நன்மையும் தீமையும் பங்கயத்தோன் எழுதாப்படி வருமோ; சலியாதிரு ஏழைநெஞ்சே” என்றுரைத்த பட்டினத்தாரை நெய்யென என்னுள் ஊற்றினேன். உறக்கம் அழிந்தது. அகலென மனம் சுடர்ந்தது. லாம்பைக் கையிலேந்தியபடி வீட்டின் வெளியே வந்தேன். காற்றணைத்தது. ஆனாலும் மாமரங்கள் அசையாதிருந்தன. இருளினுள்ளே உடல் நுழைத்து அசையாது நின்றேன். பதுங்குகுழியிலிருந்து வெளிச்சம் பிறந்திற்று. அது நொடிக்கு முன் அணைந்த லாம்பின் வெளிச்சத்தை ஒத்திருந்தது. மெல்லமாக வீமன் என்று குரல் கொடுத்தேன். அவன் வருவதாயில்லை. ஆனால் பதுங்குகுழிக்குள் அவனுடைய நடமாட்டத்தின் ஒலி துல்லியமாகக் கேட்டது. முன்னோக்கி பாதங்களை வைத்து பதுங்குகுழியை நெருங்கினேன். வீமன் வருவதற்கும் போவதற்குமான பாதையே இருந்தது. என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே கட்டளைகள் வழங்கும் சத்தம் கேட்டது. எக்கோ – த்ரீ, எக்கோ – த்ரீ ஓவர் ஓவர்.. நான் என்ர பக்கத்தால ஒரு அணியை அனுப்புறன். உங்கட எட்டில வைச்சு ஒரு தள்ளுத்தள்ளுங்கோ. விளங்குதா! “ஓமோம்…இனியவன் நீ ரெண்டு நாகத்த எடுத்துக் கொண்டு போ. அது காணும்…டெல்டா – பைவ் நான் சொல்றது விளங்குதா” சமர்க்களத்தின் உரையாடல்கள் தொடர்ந்தன. வீமன் யாரையோ நக்கிக்கொடுத்து குழையும் சிணுங்கல். ஒளியூறித் தளும்பும் பதுங்குகுழியின் மீது ஏறிநின்று “வீமன் வெளிய வா” என்று நானும் கட்டளையிட்டேன். சில நொடிகளில் வெளியே வந்து “ தம்பியா, சுகமோடா” என்று கேட்டார் தவேந்திரன் மாமா. அதிகாலையில் விழித்தெழும்பிய அம்மா தலைமாட்டில் கிடந்த லாம்பையும் என்னையும் காணாது தவித்தாளாம். அம்மாவின் திகைப்பும் அல்லலும் திலகாவை எழுப்பியிருக்கிறது. ஒரு டோர்ச் லையிற்றை கையில் பிடித்தபடி திலகா “வீமன்” என்று குரல் கொடுத்திருக்கிறாள். பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து சென்றிருக்கிறது. மூவருமாய் சேர்ந்து என்னைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். திலகாவுக்கு கணத்தில் உறைத்து “வைரவர் கோவிலுக்கு போய் துப்பரவு செய்யிறானோ” என்றிருக்கிறாள். அங்கு சென்றிருக்கின்றனர். லாம்புமில்லை நானுமில்லை. முற்றத்திலிருந்த என்னுடைய காலடித்தடத்தைப் பார்த்து பதுங்குகுழியை வந்தடைந்து இருக்கிறாள் அம்மா. “அவன் இதுவரைக்கு வந்திருக்கிறான் திலகா. கால்தடம் இருக்கு” “இஞ்ச எதுக்கு வந்தவன். அதுவும் இந்த இருட்டுக்குள்ள” திலகா பங்கருக்கு மேலே ஏறி, மூடியிருந்த மண்ணையும் செடிகளையும் அகற்றி இடுக்கு வழியாகப் பார்த்தபோது உள்ளே நான் மயங்கிக் கிடந்திருக்கிறேன். திலகா பதறாமல் “அவனுள்ள படுத்திருக்கிறான்” என்று அம்மாவிடம் சொல்லியுள்ளாள். “பாம்பு பூச்சி இருந்தாலும்” என்று சொல்லி உள்ளே நுழைய முனைந்த அம்மாவுக்கு எந்தப்பக்கம் வாசலென்று தெரியவில்லை. “இருங்கோ வீமன் போகத்தான் ஒரு சின்ன வாசல் இருக்கு. நாங்கள் சைட்டால ஒரு பாதை வெட்டலாமென்று திலகா மண்ணை வெட்டி வீசியிருக்கிறாள்” அவளுக்கு நடப்பதெல்லாம் குழப்பத்தையே தந்தது. ஆனால் அம்மாவிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. வாசலை உண்டு பண்ணி உள்ளே நுழைந்த திலகாவுக்கு பதுங்குகுழியினுள்ளே அடர்ந்திருந்த வாசனை வெறிகொள்ளச் செய்தது. அவள் மூலை முடுக்கெல்லாம் தவா…தவா… என்று கதறியபடி மோதுண்டாள். ஆலாலமுண்டவனை பூமி குடைந்து தேடியரற்றும் அணங்கானாள். வெளியே நின்ற அம்மா உள்ளே ஓடிவந்தாள். திலகாவை அம்மா கட்டுப்படுத்தமுடியாமல் திணறினாளாம். என்னைத் தட்டியெழுப்பியும் சுயநினைவற்று மயங்கிக் கிடந்திருக்கிறேன். நடந்தவற்றையெல்லாம் பின்பு அம்மா சொன்னாள். அடுத்தநாள் பதுங்குகுழியைத் துப்பரவு செய்தோம். வைரவர் கோவிலில் இருந்த விக்கிரத்தையும், சூலத்தையும் தூக்கி வந்து பதுங்குகுழிக்குள் பிரதிஷ்டை செய்தோம். அந்த ஊரிலிருந்த சிலருக்கு அன்னதானம் கொடுத்தோம். மூன்று கால்களோடு வீமன் பதுங்குகுழிக்குள் உறங்கிக் கிடந்தான். “பங்கர் வைரவர்” என்றனர். அம்மாவும் நானும் அங்கிருந்து புறப்பட்ட போது பதுங்குகுழிக்குள் படுத்திருந்த வீமனிடம் “நாங்கள் போய்ட்டு வாறம் தவேந்திரன் மாமா” என்றேன். மூன்று கால்களும் திரிசூல இலைகளாய் எழுந்து ஒளிர விடைகொடுத்தான் எங்கள் வீமன். https://akaramuthalvan.com/?p=11341 point- விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்??? ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் திருநாவுக்கரசு உட்பட...😭 https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/0 points - கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.