Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2958
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20019
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46793
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/09/24 in Posts

  1. 3 points
    அடுத்து வவுனியா. இந்தப் பயணத்தில் மணியன் என்னுடன் கலந்து கொள்ளவில்லை. வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலேயே ரிக்கெற்றைப் பதிவு செய்து கொண்டேன். எயார் கொன்டிசனில் இடம் இல்லை என்று கையை விரிக்க சதாரண வகுப்பில் பதிவு செய்தேன். இரயில் பெட்டியில் சுத்தம் குறைவாகவும் சத்தங்கள் அதிகமாகவும் இருந்தது. இடம் வலமாக ஆடியாடிப் போய்க் கொண்டிருந்த இரயில் அநுராதபுரத்துக்கு அப்பால் சீராக, வேகமாகப் போக ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் இதைப்பற்றிக் கேட்க, “இப்ப கிட்டடியலேதான் பாதையை திருத்தினவங்கள்” என்று பதில் கிடைத்தது. வவுனியா வீதிகள் துப்பரவாக இருந்தன. நல்லதொரு மழை நேரத்தில் அங்கே மாட்டிக் கொண்டதால் கொஞ்சம் சிரமமாக இருந்தது. தங்கியிருந்த ஹொட்டலின் வாசலில் இரண்டு துவார பாலகர் போல் நாய்கள் (நிற்காமல்) படுத்திருந்தன. நாய்கள் வவுனியா வீதிகளில் மட்டுமல்ல, தெற்கே நெடுஞ்சாலையில் இடைநிறுத்தும் உணவகம் தொட்டு பருத்தித்துறை வரை அவை வீதிகளிலும் பொது வெளியகளிலும் படுத்திருந்தன. அவைகளைக் காணும் போதெல்லாம் அச்சம், மடமை இல்லாமல் எட்டிப் பார்த்தது. பருத்தித்துறை நான் பிறந்த ஊர். கைத்தடி இல்லாமல் வடக்கே கடலைப் பார்த்து உட்கார்ந்திருந்த காந்தி இப்பொழுது எழுந்து நிற்கிறார். சிலையின் அழகு முன்னதைப் போல் இல்லை. முன்பிருந்த வணிக நிலையங்கள் எதுவும் இப்பொழுது அங்கே என் கண்களில் படவில்லை. மழை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்ததால் நினைத்து வந்த பலதை ப் பார்க்க முடியாமல் போயிற்று. ஆனாலும் பலரைச் சந்திக்க முடிந்தது. புற்றளை மகா வித்தியாலத்தில்தான் என் ஆரம்பக் கல்வி இருந்தது. ஒருதடவை பள்ளியை எட்டிப் பார்த்தேன். பக்கத்தில் இருந்த புற்றளை ப் பிள்ளையார் கோவில் கேணிக்கு முன் இருக்கும் மகிழமரத்தில் குரங்குகளாக ஏறி விளையாடி மகிழம் பழங்களைச் சாப்பிட்டது நினைவுக்கு வர வயதை மறந்து மரத்தில் ஏறி பழங்களைப் பறித்துச் சாப்பிட்டேன். பழங்களைச் சாப்பிட்டதும் தொண்டையில் கரகரப்பு வந்து கொஞ்சம் சிரமப்பட்டேன். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அருகே ஒரு அம்மா சுடச்சுட தோசை சுட்டுத் தருகிறார். சுவையாக இருக்கும் எனக் கேள்விப்பட்டு ஒரு காலைச் சாப்பாட்டை அங்கே எடுத்துக் கொண்டேன். பொலித்தீனால் சுற்றப்பட்ட தட்டில் சாப்பிட்டதாலோ என்னவோ அங்கே உணவை என்னால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. அதுவும் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது, நீல நிற பிளாஸ்ரிக் குடுவையில் இருந்து அவர் தண்ணி எடுத்துத் தந்த அழகும், அந்த குடுவை இருந்த கோலமும் எனக்குத் திருப்தியாக இருக்கவில்லை. வேலாயுதம் பாடசாலைக்கு முன்னால் நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்றார்கள். அங்கேயும் பொலித்தீன் சுற்றிய தட்டில் உணவு வந்தது. பொலித்தீனின் விளைவுகளைத் தெரியாமல் இருக்கிறார்களே என்ற கவலை வந்தும் நான் எதுவும் அவர்களிடம் சொல்லவில்லை. ஏனெனில் இப்பொழுது பருத்தித்துறைக்கு நான் அந்நியன். ஹொலண்டில் வசிக்கும் ஒரு தமிழர், விஎம் (விநாயகர் முதலியார்) றோட்டில் ஒரு ஹொட்டலை வைத்திருக்கிறார். அங்கேதான் தங்கினேன். ஹொட்டலில் எங்கெல்லாம் கமரா வைக்க முடியுமோ அங்கெல்லாம் வைத்திருந்தார்கள். ஹொட்டலின் பொறுப்பாளரைக் கேட்டால், “இங்கே நடப்பதை ஹொலண்டில் இருந்து முதலாளி பார்ப்பதற்காக” எனப் பதில் வந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து மருதங்கேணி போகும் வீதியில்தான் என் வீடு இருந்தது. சந்தியில் இருந்து முதலியார் வாசிகசாலைவரை எனது உறவினர்கள்தான் வசித்தார்கள். இப்பொழுது அந்த வீதியே வெறிச்சோடி இருந்தது. உறவுகள் மட்டுமல்ல பல வீடுகளையும் அங்கே காணவில்லை. இருந்த ஒன்றிரண்டு வீடுகளும் பாழடைந்திருந்தன. அத்தி பூத்தாப்போல் ஒரே ஒரு குடும்பம், அதுவும் கணவன்,மனைவி இருவரும்தான் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. பல வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்து வீட்டைத் திருத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போய் பார்த்தேன். “ஆரெண்டு தெரியேல்லை. இடம் பெயர்ந்த ஆக்களாத்தான் இருக்கவேணும். அவையள்தான் இப்ப உங்கடை வீட்டிலை இருக்கினம். வீடு பாழடைஞ்சு போகுது, சும்மாதான் இருக்குது எண்டு ஆறுமுகமண்ணைதான் அவையளை இருக்க விட்டவர். அவர் இப்ப புற்றளையிலை தம்பிக்காரனோடை இருக்கிறார். அவருக்கும் ஏலாமல் வந்திட்டுது. வந்தனீ எதுக்கும் போய் அவரை பாரன்” தேனீருக்கு மத்தியில் அங்கே அவர்களிடம் இருந்து எனக்கு அறிவுரை கிடைத்தது. ஆறுமுகண்ணையைப் பார்ப்பதற்கு முன்னர் நான் வாழ்ந்த வீட்டைப் பார்ப்பது என்று முடிவு செய்து அங்கே போனேன். எனது அம்மா சொல்லுவார், “எனக்கு எந்தக் குறையும் எப்போதும் வராது. நாலு இளவரசர்களுக்கும் ஒரு இளவரசிக்கும் நான் தாய்” வீட்டின் கேற்றை நான் நெருங்கும் போது ஏனோ அம்மா எங்கள் சொந்தங்களுக்குச் சொல்லும் வாசகங்கள் எனக்குள் கேட்டன. 2008இல் எனது தாய் இறந்த சோகம் மறையும் முன்னர் அடுத்த ஆண்டு அண்ணன் ஒருவன் இறந்து போக எங்கள் கோட்டை தளர ஆரம்பித்து விட்டது. மிகுதியான மூன்று இளவரசர்களும் இளவரசியும் இராச்சியங்களை இழந்து இப்போ வெவ்வேறு நாடுகளில் சிதறி இருக்கிறார்கள். இதற்குள் சிதிலமடைந்திருக்கும் இந்த வீட்டுக்குள் போய் நான் எதைப் பார்க்கப் போகிறேன்? எதைத் தேடப் போகிறேன்? உள்ளே இருப்பவர்களுக்கு என்னைத் தெரியாது. அவர்களை எனக்கும் தெரியாது. அப்படியே எதுவும் தெரியாமலே இருந்து விட்டுப் போகட்டும் என்று முடிவெடுத்தேன். அம்மா வைத்த விலாட் மாமரம் பெரிதாக வளர்ந்து காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதை மட்டும் வீதியில் நின்றே கமராவில் பதிந்து கொண்டு திரும்பி விட்டேன். ஆறுமுகமண்ணையைப் போய்ப் பார்த்தேன். முதுமையும் இயலாமையும் அவரிடம் தெரிந்தது. “என்னாலை இப்ப ஏலாது தம்பி. அதுதான் அவையளை இருக்க விட்டனான். வாடகை எண்டு ஒண்டும் வேண்டிறதில்லை.சும்மா கிடந்து பாழடையிற நேரத்திலை..” “நான் உங்களைப் பாக்கத்தான் வந்தனான். வீட்டை அல்ல” நான் இதைச் சொன்ன போது அவரது முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. “உங்கடை அம்மான்ரை தையல் மெசினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தனான்” “அப்பிடியே அதை நான் பாக்கலாமா?” “அது நல்லா கறல் பிடிச்சுப் போட்டுது. சும்மா எப்பவாவது தைப்பம்” கறள் பிடித்திருந்தாலும் அது அம்மாவின் தையல் மெசின். எத்தனை தீபாவளி, தைப்பொங்கல்களுக்கு அம்மா அதைப் பயன்படுத்தி இருப்பார். அந்தத் தையல் மெசினைப் படம் பிடித்துக் கொண்டு ஆறுமுகமண்ணையிடம் இருந்து விடை பெற்றேன். பாலா எனது பாடசாலை நண்பன். நீண்டகாலமாக அமெரிக்காவில் இருந்து விட்டு இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறான். மந்திகைச் சந்தைக்கு அருகே அவனது நண்பர் இருவர்களுடன் (அவர்களும் அவனுடன் அமெரிக்காவில் இருந்தவர்கள்) இருப்பதாகச் சொன்னார்கள். தகவல் அறிந்து அவனைக் காணப் போனேன். புதிதாக, பாதுகாப்பு வசதிகளுடன் அந்த வீடு இருந்தது. வெளியில் இருந்து அழைப்புமணி அடித்தும் யாரும் வரவில்லை. பக்கத்தில் இருந்த நாகேந்திரத்தின் (தெரிந்தவர்) கடைக்குப் போய் கேட்டேன். “பாலுவோ? ஆளைப் பிடிக்கிறது சரியான கஷ்டம். அமெரிக்கப் பென்ஷனியர். ஆனால் சாமிப் போக்கு. காலமை பின்னேரம் எண்டு எந்த நேரமும் கோயில்தான். வல்லிபுரக் கோவிலுக்குப் போய் கூட்டி, குளிச்சு ஆழ்வாரைக் கும்பிட்டு எப்ப வருவார் போவார் எண்டு தெரியாது. வேணுமெண்டால் ஆளின்ரை ரெலிபோன் நம்பர்தாரன் அடிச்சுப் பாருங்கோ” ஹொட்டலுக்குப் போய் நானும் குளித்து, சுத்தமாக ‘சாமி’க்கு ரெலிபோன் எடுத்தால் பாலுவின் குரல் கேட்டது. “என்ன சாமியாராயிட்டியாம்?” பாலுவின் சிரிப்புத்தான் பதிலாக வந்தது. “தனியாக இருக்கிறாயோ? அல்லது குடும்பமாகவோ..?” “நான் கலியாணமே கட்டேல்லை” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காலை, மாலை என நேரம் தவறாமல் அட்டவணை போட்டு வடமராட்சி,மெதடிஸ் பாடசாலைகளை என்னுடன் சேர்ந்து சுத்தி வந்த பாலு ஏன் இப்படி மாறினான் என்பது எனக்கு விளங்கவில்லை. நான் இருக்கும் ஹொட்டலை சொன்னேன் வந்து பார்ப்பதாகச் சொன்னான். சொன்னது போல் அடுத்தநாள் மதியம் என்னைப் பார்க்க பாலு வந்திருந்தான். அந்த நேரம் நான் அங்கே நிற்கவில்லை. அவன் வந்த தகவல் அறிந்து ஓட்டோ பிடித்து அவன் வீட்டுக்குப் போனால் அவன் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. “பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள் கடலிலே மீன் பிடிக்க நானும் போனேன் மீன் கரையேறிப் போனதாக ஒருத்தி சொன்னாள்..” என்ற கண்ணதாசன் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. தொலைபேசியில் பல தடவைகள் அழைத்தும் பாலுவை மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று இரவு நான் மீண்டும் கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டி இருந்தது. இனி எனக்கு, பருத்தித்துறைக்குப் போக வேண்டிய தேவை இல்லை. எனது அடுத்த பயணத்தில் பருத்தித்துறை வருவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவு என்று மனது சொன்னது. பல இடங்களுக்குப் போக வேண்டும். அதிலே கிழக்கு மாகாணம் முக்கியம் என கணக்குப் போட்டிருந்தேன். மழை பெரிதாக ஆக்கிரமித்து இருந்ததால் இந்த முறை அது முடியவில்லை. அடுத்தடுத்த பயணங்களில் பார்க்கலாம். மணியனுடன் கொழும்பில் இருந்த போது, அஞ்சப்பன், சண்முகாஸ், தலைப்பாய்கட்டு, இந்தியன் மசாலா, சரஸ்வதிவிலாஸ், ஹோல் பேஸ் ஹொட்டல், … என்று ஏகப்பட்ட இடங்களில் வயதை மீறி சாப்பிட்டிருக்கிறேன். கொஞ்சம் அவகாசம் எடுத்து உடம்பைக் குறைக்க வேணும். ஊர்உலாவில் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும், யாழ் இணையத்துக்கும் நன்றி.
  2. ரொம்ப அவசரம் போல .......! 😂
  3. 3 points
    மிரிசா கடற்கரைக்குச் சென்றோம். வெளிநாட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள். “போதைப் பொருள் இங்கே தாராளம்” என்றும் சொன்னார்கள். அழகான கடற்கரை என்பதை மறுப்பதற்கில்லை. உல்லாசப் பயணிகளை கவர்வதற்காக பெரிய பெரிய ஹொட்டல்களைக் கட்ட முயன்றிருக்கிறார்கள். பொருளாதார அலைக்குள் சிக்குண்டு இப்பொழுது அவை பாதியிலேயே அநாதைகளாக, கடல் காற்றும் வெய்யிலும் பட்டு கறுத்துப் போய் நிற்கின்றன. அடுத்து காலி. இலங்கையின் இரு முனைகளில் ஒன்று பனை முனை (பருத்தித்துறை). மற்றது தெய்வேந்திர முனை(காலி). காலியில் கோட்டைக்குள்ளேயே அரச அலுவலகங்களை வைத்திருந்தார்கள். நகரின் பழமையை நன்றாகப் பராமரித்து வெளிநாட்டவர்களை க் கவர்ந்து கொண்டிருக்கிறார்கள். காலியில் இருந்த பராமரிப்பு பருத்தித்துறை (முனை)யில் எங்களிடம் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு பனை, ஒரு வெளிச்ச வீடு, இவை மட்டுந்தான் எங்களிடம் இருக்கின்றன. இருந்தாலும் பல சிங்களச் சுற்றுலாப் பயணிகளை பருத்தித்துறை வெளிச்ச வீட்டின் அருகே என்னால் காண முடிந்தது. காலியில் கடற்கரை ஓரமாக, ஒரு வீட்டை இரண்டு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். “இங்கே சிங்கறால் (Lobster) கிடைக்காதா?” என்று சும்மாதான் மணியனிடம் கேட்டேன். மாலையில் வெளியே போய்விட்டு வந்து பார்த்தால், சட்டிக்குள் இரண்டு சிங்கறால்கள் துடித்துக் கொண்டிருந்தன. “களுத்துறையும் நல்லதொரு இடம். அங்கே அனந்தரா ஹொட்டல் என்று ஒன்று இருக்கிறது. அந்தக் ஹொட்டலை வடிவமைத்தது ஒரு பிரெஞ் ஆக்கிடெக். நல்லாயிருக்கும். நான் அங்கே அடிக்கடி போவேன்” என்று மணியன் களுத்துறைக்கு அழைத்துப் போனான். மணியன் சொன்னதில் உண்மை இருந்தது. ஹொ ட்டலின் வாசலில் நான்கு இளம் பெண்கள் காத்திருந்தார்கள். நாங்கள் ஹொட்டலுக்குள் நுளைந்தவுடன், சிங்கள இசை முழங்கப் பாடியபடியே தங்களது பாரம்பரிய நடனத்துடன் எங்களை வரவேற்றார்கள். உண்மையிலேயே எங்களுக்குத்தான் அந்த வரவேற்பு நடனமா என முதலில் எனக்குச் சந்தேகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன் எங்களுக்குப் பின்னால் யாரும் இல்லை. ஆக அந்த வரவேற்பு நடனம் எங்களுக்குத்தான் என்பது தெளிவான பிறகு ஒரு உற்சாகம் பிறந்தது. ஹொ ட்டலின் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் வந்து, பணிவுடன் இரு கரம் கூப்பி வணங்கி ஆயுபவன்( ayubowan)சொல்லி வரவேற்பறையில் உட்கார வைத்தார். இருக்கையில் அமர்ந்து ஹொட்டலின் அழகை உள்வாங்கிக் கொண்டிருக்கையில் ஆடிய ரம்பைகளில் ஒருத்தி கையில் பானங்களுடன் வந்து நின்றாள். தேங்காய்ச் சிரட்டைகளில் சிவந்த குளிர் பானங்களுடன் சிதம்பரத்தை பூ வைத்த தட்டை வைத்துக் கொண்டு புன்னகைத்தாள். தேங்காய் சிரட்டைகளைக் கண்டவுடன் சட்டென்று எனது நினைவுக்கு வந்தவர்கள் அன்றைய பிள்ளைவாள்களும் முதலியார்களும்தான். 100க்கு மேற்பட்ட அறைகள். பழமைவாய்ந்த பொருட்களை காட்சிக்கும், அழகிய கலைப்படைப்புகளை சுவர்களிலும் மாட்டியிருந்தார்கள். லிப்றில் மேல் நோக்கிப் போகும் அடையாள விளக்கில் புத்தர் இருந்தார். வரவேற்பு இடத்துக்கு அருகேயே ‘பார்’ இருந்ததால் மணியன் பெரும்பாலும் அங்கேயே இருந்து விட்டான். அங்கிருந்த அழகை எல்லாம் ரசித்து விட்டு மணியனிடம் வந்தால். “ நாங்கள் இஞ்சை வாறதெண்டால் இரண்டு நாள் தங்குவம். இப்பிடி நல்லா என்ஜோய் பண்ணி Buffet இலே ஒரு பிடி பிடிச்சிட்டுப் போவம். நீயும் இருகிறாய். யேர்மனியிலை என்னத்தைத்தான் கிழிச்சியோ?” என்று என்னைக் கிண்டல் செய்தான். மாலையில் சூரிய அஸ்தமனத்திலும் நீச்சல் தடாகத்தின் அருகே ஒரு நடனம் இருந்தது. மஞ்சள்வெயிலில் பளபளக்கும் நீச்சல் குளத்தின் அருகே அந்த நடனம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இரண்டு நாட்களின் பின்னர் அனந்தரா ஹொட்டலில் இருந்து புறப்படும் போது வாசலில் வைத்து மந்திரம் சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். அங்கிருந்தவர் சொன்ன மந்திரம் அச்சு அசலாக எங்கள் ஐயர் சொல்லும் மந்திரம் போலவே இருந்தது. நாவூறு பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோ? அல்லது ரம்பைகளை மறந்து விடச் சொல்லிய மந்திரமோ? திரும்பி வரவழைவைக்கப் போகும் (வசிய) மந்திரமோ? தெரியவில்லை.
  4. சிலோன் நேவி நாட்டை விட்டு தப்பியோட கப்பலையும் குடுத்து உதவி செய்யப்போறாங்கள். 😂
  5. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை, 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனைப் படைத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான். ஏ.எச்.ஹஸ்பர்_ இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனைப் படைத்தார் செந்தில் தொண்டமான்! கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள்,500 கோலங்களுடன் பொங்கல் விழா! இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று (08)திருகோணமலையில் இடம்பெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் "பொங்கல் திருவிழா" தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். https://www.madawalaenews.com/2024/01/1008-1500.html
  6. இந்த கிணறை இந்தியாவுக்கா ,சீனாவுக்கா ,அமெரிக்காவுக்கா கொடுக்கலாம் என்று உயர்மட்ட ஆலோசனை நடக்குது. நீங்க வேற.
  7. 2 points
    அப்புறம் ஏன் அங்க போவான்? அக்கா இதில உள்குத்தொன்றும் இல்லையே?
  8. அந்தப் பிள்ளையின் இறப்பால் துயர் உற்று இருக்கும் குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு..🙏 இதில் கருத்து பகிரும் உறவுகள் தயவு செய்து இந்தப் பதிவோடு விட்டு விடுங்கள்..ஒரு பெண் பிள்ளையின் இறப்பில் கூட உங்களுக்கு வேண்டாத விமர்சனம் வேணுமா..உங்களால் ஏன் அந்த பிள்ளையை உங்கள் சகோதரியாக இல்லை ஒரு பெண் பிள்ளையாக தன்னும் நினைக்க முடியாதிருக்கிறது..?தவறாக நான் எதுவும் பகிரவில்லை..கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி படும் பாட்டை பார்த்து விட்டு தான் இந்தக் கருத்தை பகிர்கிறேன்.
  9. 2 points
    காலையில் பாண் வாங்குவதற்காக மணியனும் நானும் பேக்கரிக்குப் போயிருந்தோம். அங்கே ஒரு சிறிய கூட்டம் வரிசை கட்டி இருந்ததால் மணியன் பாண் வாங்கி வரும் வரை நான் ஓரமாக ஒதுங்கி நின்றேன். பிளாஸ்ரிக் பையில் பாணை வாங்கிக் கொண்டு ஒரு புன் சிரிப்போடு வந்த மணியன், “உனக்கு பல்லெல்லாம் ஓகேதானே?” என்று என்னைக் கேட்டான். அவன் அப்படி அதுவும் காலையிலேயே என்னைக் கேட்டது ஏன் என்று புரியாமல் விழித்து நின்ற எனக்கு, அவன் தொடர்ந்து சொல்லும் போதுதான் புரிந்தது. “எனக்குப் பின்னாலே மூண்டாவதா நின்றாரே, அவர் ஒரு டென்ரிஸ்ட். ஊர் வல்வெட்டித்துறை. வெள்ளவத்தையிலைதான் அவரின்ரை டிஸ்பென்சரி இருக்கு. நான் அவரிட்டைத்தான் பல்லைக் காட்டுறனான். எனக்கு முன் பல்லிலை ஒரு ‘ஈவு’ இருந்ததெல்லோ! அந்த இடைவெளியை மறைச்சவர் இவர்தான்” என்று தன்னுடைய பல்லைக் காட்டிச் சிரித்தான் மணியன். கதைத்துக் கொண்டிருக்கும் போதே பல் வைத்தியர் பாணுடன் எங்கள் பக்கத்தில் வந்து நின்றார். “எப்பிடி, சுகமா? கனகாலமா அந்தப் பக்கம் காணேல்லே?” “ ஓம்..ஓம். ஒருக்கால் வரத்தான் வேணும். இவர் என்னுடைய பழைய சினேகிதன். யேர்மனியிலை இருக்கிறார்” மணியன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். “அப்பிடியே! நல்லது. நாளைக்கு மகள் நியூசிலாந்திலை இருந்து வாறா. எயார் போர்ட்டுக்குப் போயிடுவன். வாறதெண்டால் செவ்வாய், புதனிலை வாங்கோ” சொல்லிவிட்டு, சிரித்து விடை பெற்றார். “டென்ரிஸ்ரட்டை போற எண்ணம் இருக்கோ? போறதெண்டால் சொல்லு” “ டென்ரிஸ்ற் சிரிக்கக்க பாத்தன். மேல் பல் வரிசையில் இடது, வலது பக்கங்களில் ஒன்றிரண்டு பல்லுகளைக் காணேல்லை. முதலிலே அவர் தன்ரை பல்லைக் கட்டட்டும். பிறகு பாப்பம்” என்று மணியனுக்குச்சொன்னேன். “சரி உன் இஷ்டம். இங்கை எண்டால் செலவு குறைவு” என்று மணியன் சொல்ல, “பல்லை விடு, பிறகு பாப்பம்.” என்று சொல்லிவிட்டு கதையை வேறு பக்கம் திருப்பினேன். “உன்னைக் கேக்கோணும் எண்டு நினைச்சனான். இப்ப சிறீலங்காவிலை முள் முருங்கை முற்றா அழிஞ்சு போச்சு எண்டு சொல்லுறாங்களே உண்மையோ?” மணியனிடம் இருந்து பதில் வரவில்லை. வீட்டில் காரை நிறுத்தி விட்டு “வா” என்ற ஒற்றை வார்த்தையுடன் தன் வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். “பார். இதுதான் முள் முருங்கை. பழைய மரம் பெருத்து உயர்ந்து நிக்கிறதாலை உன்ரை கண்ணுக்குப் படேல்லை. முள் முருங்கை மட்டுமில்லை. பனையும் வெள்ளவத்தையிலை இருக்கு. நீ மேலை இருக்கக்கை பல்கணியிலை இருந்து பார் தெரியும்” என்று சொல்லிவிட்டு, “வா சாப்பிடுவம்” என்று வீட்டுக்குள் போனான். அடுத்தநாள் மணியனின் பிறந்தநாள். கோல்பேஸ் ஹொட்டலில் மனைவி, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடினான். அன்றுதான் நான் அந்த ஹொட்டலுக்கு முதன் முதலாகப் போனேன். வெளிநாட்டுத் தலைகள் ஹொட்டலில் அதிகமாகத் தெரிந்தன. "விரும்பியதைச் சாப்பிடு" என்று என்னிடம் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தன் விருந்தை அனுபவித்தான். கோல் பேஸ் ஹொட்டலில் பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் நடக்கும் கிறிஸ்மஸ் கேக் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்மஸுக்கு ஒருமாதம் முன்பே பழங்களை மது பானங்களில் ஊற வைத்து, பின்னர் கேக் தயாரிப்பார்கள். என்னிடமும் ஒரு போத்தல் விஸ்கி தந்தார்கள். பழங்களில் ஊற்றி விட்டு வந்தேன்.
  10. 1 point
    சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும், சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன். இலங்கையில் சுற்றுலாவுக்குத்தான் இம்முறை போயிருந்தேன். பொது வேலைகள் என்று பரந்த நோக்கம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மணியனுக்கு நான் எனது வரவைப் பற்றி அறிவித்திருந்தேன். “நீ சிறிலங்காவில், எங்கே வேணுமெண்டாலும் போ. ஆனால் உன்ரை முக்கிய இருப்பிடம் எனது வீடுதான். என்னுடனேயே தங்குகிறாய்” என்று மணியன் சொல்லி விட்டான். புதுக் கட்டிடங்கள் உயர்ந்திருந்தாலும், தமிழ் பெயர்களுடன் கடைகள் பல இருந்தாலும், பாசி பிடித்து கறுப்பாக இருக்கும் மதில்கள், வீட்டுச் சுவர்கள், பள்ளம் விழுந்த வீதிகள்... என வெள்ளவத்தை முன்னர் போலவே, மாறாமல் அப்படியே இருந்தது. வெள்ளவத்தையில் கடற்கரை ஓரமாக ஆறாவது மாடியில் உள்ள மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டுக்கு மாத வாடகையாக இரண்டு இலட்சங்கள் ரூபா கேட்டார்கள். அப்படி ஒரு வீட்டில் தங்கிக் கொண்டு பல இடங்களைச் சுற்றி வரத்தான் முதலில் தீர்மானித்திருந்தேன். ஆனால் மணியன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவனது விருப்பத்துக்கு ஏற்ப அவனது வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. மணியன் வீட்டின் மாடியில் ஒரு அறை எனது இருப்பிடமாகிப் போனது. முதல் நாளே இரவு படுக்கப் போகும் போது மணியன் என்னிடம் சொன்னான், “காலையில் ஏழு மணிக்கு கீழே வந்து விடு” என்று. ஏழு மணிக்கு 'சூடாக தேநீர் கிடைக்கும்' என்று மாடியை விட்டு கீழே வந்தால், “வா…வா கடைக்குப் போவம்” என்று மணியன் அவசரம் காட்டினான். பருத்தித்துறை,கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த தாமோதரத்தார், நாகேந்திரத்தின் தேநீர் கடைகள் இரண்டும் நினைவுக்கு வந்தன. இளைஞர்களாக இருந்த போது நானும் மணியனும், பொன்னையா அண்ணனின் உளுந்து வடையை பேப்பரில் வைத்து அழுத்தி எண்ணை நீக்கி, நன்னாரி சேர்ந்த ‘பிளேன் ரீ’யை பல மாலை வேளைகளில் சுவைத்து மகிழ்ந்திருந்திருக்கிறோம். ஆக மணியனும் நானும் இப்பொழுது ஏதோ ஒரு தேநீர் கடைக்குப் போகப் போகிறோம் எனக் கணித்துக் கொண்டேன். மணியனின் காரில் ஏறிக் கொண்டேன். கார் புறப்படும் போது ‘சீற் பெல்டை’ போட முயன்ற போது, “இதெல்லாம் இங்கே அவசியம் இல்லை” என்று மணியன் சொன்னான். காலை நேரம். காலி வீதியில் வாகனங்களின் சத்தம் அதிகமாக இருந்தது. ‘கோன்’ அடிக்காமல் எந்த வாகனங்களும் நகர்ந்ததாகத் தெரியவில்லை. மணியனின் கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. பல வாகனங்கள் எங்களைத் தாண்டிச் செல்லும் போது அதில் இருந்தவர்கள் எங்களை முறைத்துப் பார்த்தார்கள். அல்லது எரிச்சலுடன் பார்த்தார்கள். நான் மணியனைப் பார்த்த போது, மணியன் புன்முறுவலுடன் சொன்னான், “கண்டு கொள்ளாதை. எனக்கு என்ரை கார் முக்கியம். அவையளுக்கு அவசரம் எண்டால், என்னை முந்திக் கொண்டு போகட்டும்”. ஊர்ந்து ஊர்ந்து சென்று ஒருவாறு தனது காரை ஒரு தரிப்பிடத்தில் நிறுத்தினான். ஒரு பேக்கரிக்குள் நுளைந்தான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். பாண் வாங்கும் எல்லோர் கைகளிலும் பிளாஸ்ரிக் பைகள் இருந்தன. ‘Slice Bread என்று கேட்டு அவனும் பிளாஸ்ரிக் பையில் பாண் வாங்கிக் கொண்டான். “மச்சான் சம்பலோடை பாண் சாப்பிட நல்லா இருக்கும்” என்றான். “காலமைக்கு பாண்தான் சாப்பாடோ?” “ஏன்டா, பாண் விருப்பமில்லையே? நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு சரஸ்வதி விலாஸிலே வேண்டின இடியப்பம், வெந்தயக் குழம்பு, சொதி எல்லாம் மிஞ்சிப் போச்சுடா. சூடாக்கித் தாரன். வேணுமெண்டால், நீ அதைச் சாப்பிடு. நான் பாண் சாப்பிடுறன்” சொல்லிவிட்டு என்னைப் பார்த்தவனுக்கு, இதமான காலை வெய்யிலிலும் என் முகம் வாடி இருந்தது புரிந்திருக்கும். “நீ காலமை ரீயும் குடிக்கேல்லை என்ன? வா, பால் வாங்கிக் கொண்டு போவம்” என்றவன், ஒரு பெட்டிக் கடையில் இரண்டு பால் பக்கெற்றுகளும் வீரகேசரி பேப்பரும் வாங்கினான். “வீரகேசரி வாங்கினால் தினத்தந்தி இலவசமடா” என்று சொன்னவன் அடுத்து ஒரு பழக்கடைக்கு முன்னால் நின்று கப்பல் வாழைப்பழத்துக்கு விலை கேட்டான். “ஐயா, இந்தப் பழம் இப்ப உடனை சாப்பிடலாம். இந்தச் சீப்பை வெட்டட்டே?” என்ற கடைக்காரரிடம் “ஆறு பழம் போதும்” என்று சொல்லி வாங்கிக் கொண்டான். “நல்ல பழம்தானேடா. ஒரு சீப்பாவே வேண்டி இருக்கலாம்” என்று கேட்ட என்னை மணியன் உடனே இடை மறித்தான். “நல்ல பழம்தான். நான் ஒரு பழம்தான் சாப்பிடுவன். சீப்பா வேண்டிக் கொண்டே வைச்சால் எல்லாத்தையும் ஒரேநாளிலே சாப்பிட்டு முடிச்சிடுவாங்கள்” மணியன் தன் வேலையாட்களை குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது. அவனுக்கு ஒரு பழம்.அவன் மனைவிக்கு ஒன்று. ஒன்றுதான் எனக்கும் வருமா? இல்லை இரண்டு தருவானா? யேர்மனியில் கிடைக்கும் பெரிய வாழைப்பழத்துக்கு இந்தச் சின்ன கப்பல் பழம் ஈடு கொடுக்குமா? கார் தரிப்பிடத்தில் ஒருவன் பச்சை உடுப்போடு காத்திருந்தான். மணியன் அவனுக்கு ஐம்பது ரூபாத் தாளை எடுத்துக் கொடுத்தான். “எதுக்கு அவனுக்கு ஐம்பது ரூபா ?” “பார்க்கிங் சார்ஜ். காரை ஒருக்கால் நிப்பாட்டி எடுத்தாலே எழுபது ரூபா. ரிசீற்றை வேண்டாமல் விட்டால் ஐம்பது” “அப்போ இந்தக் காசு அரசாங்கத்துக்குப் போகாது” “போகாது” காருக்கு வெளியே பார்த்தேன். அழுக்கான நடைபாதையில் கைகளை நீட்டிக் கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று பலர் இருந்தார்கள். பச்சை உடையுடன் ஒருவன் ஓடியோடி கௌரவமாக ஐம்பது ரூபாப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். “சமையலுக்குத்தானே வீட்டிலை ஆள் வைச்சிருக்கிறாய்? பிறகேன் கடையிலை வாங்கிச் சாப்பிடுகிறாய்?” என்று மணியனைக் கேட்டேன். “வேலைக்காரரை நாலு மணிக்கு அனுப்பிப் போடுவன். இரவுச் சாப்பாடு எனக்கும் மனுசிக்கும்தானே. ஒருநாள் இடியப்பம், அடுத்தநாள் புட்டு, பிறகு அப்பம், மசாலா தோசை, பொங்கல், கொத்து எண்டு விரும்பினதை வாங்கிச் சாப்பிடுவம். மிஞ்சுறதை அடுத்தநாள் காலமை சூடாக்கி சாப்பிடுவம். அது சுகமான வேலை” “மத்தியானத்தை எதுக்கு விட்டாய். அதுக்கும் கடையிலை வாங்கலாம்தானே?" “வாங்கலாம். எங்களுக்குத் தேவையான மரக்கறிகள் அதுவும் எங்கடை பாணிச் சமையல், மீன்,இறைச்சி எண்டு வேணும்தானே” காலை எழுந்தவுடன் பால்,பாண்,பழங்கள் வாங்குவது. பத்து மணியளவில் மரக்கறிகள், மீன் வாங்குவது, மாலையில் ஏதாவது ஒரு உணவு விடுதியில் இரவுச் சாப்பாடு வாங்குவது என்று ஓரிரு நாட்களிலேயை வெள்ளவத்தை எனக்கு பழகிப் போனது. கூடுதலான வரையில் மணியன் தனது பேர்ஸைத் திறக்காமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.
  11. உங்களுக்கு இதற்கான விடை தெரிந்தும் ஏன் கேட்கிறிர்கள் என்று புரியவில்லை ?
  12. இனம் எனும் விருட்ஷத்தை இலகுவாக அழித்து விட முடியாது, அப்படி வெளிக்கிட்டால் பல இழப்புகள், ஆபத்துகள் ஏற்படும். அதன் கிளைகளை, வேர்களை முதலில் அழித்து மரத்தை தனிமைப்படுத்தினால் அது தானாகவே பட்டு வீழ்ந்துவிடும். எதிரி இவ்வளவு பலத்தோடும் வீரத்தோடும் எம்மை விழுத்துகிறான் என்றால்; அது அவனின் சமயோசிதம் எமது விலைபோகும் தன்மையும், விலகிப்போகும், அமைதிகாக்கும் தன்மையும் காரணம். யாழில் மத, சமூக விழாக்களுக்கு கண்டி நடனம், நம்மளால அவர்கள் விழாக்களில் இடங்களில் பரதநாட்டியம் ஆடமுடியுமா, விடுவார்களா? நமது பூர்வீக தனியார் நிலங்களில் விகாரைகள் கேட்பாரின்றி எழுகின்றன, சைவ ஆலயங்கள் கேட்பாரின்றி முற்றுகை இடப்படுகின்றன, உடைத்தெறியப்படுகின்றன தடுக்க முடிந்ததா நம்மால்? பிறரால் நம்மவர் மதம் மாற்றப்படுகிறார்கள் என்று குறை கூறும் நாம், மற்றவர்களை மதம் மாற்றவேண்டாம், நம்மவர் மதம் மாறாமல் தடுக்க முயலலாமல்லவா? எமது கொள்கையில் உறுதியாய் ஒற்றுமையாய் நிற்கலாமல்லவா? முடியுமா நம்மால்? நாம் எமது தலைவர்களை எமது சார்பாக அனுப்பிவைத்தால், அவர்கள் தங்கள் சொந்த நலன்களை பெற்றுக்கொள்வதோடு திருப்தியடைந்து விடுகிறார்கள். தாங்களும் செய்வதில்லை செய்பவர்களையும் விடுவதில்லை, தடைக்கற்களாக செயற்படுகிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டு அனுமதி பெற முடியுதென்றால், ஏன் அதை தமிழாக கேட்க முயற்சிக்கக்கூடாது? ஆங்கிலமாக கேட்டால் என்ன சிங்களமாக கேட்டால் என்ன அவர்கள் தானே பயனடைகிறார்கள், அதனடிப்படையில் ஆக்கிரமிக்கிறார்கள். இதற்குத்தானா இவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைக்கிறார்கள்?
  13. 1 point
    வயதுக்கு வந்த இளைஞனை
  14. 1 point
    ஆரை வெறுப்பேத்த உந்த படம் போடனியள்? 😎
  15. ஓமண்ணை, மறைந்து வாழ்பவர்களை வெளிப்படுத்த வந்தாவோ என எண்ணுகிறேன்.
  16. யோ புரட்சி நாய்களுக்கு இடையே நடாத்தப்பட்ட ஓட்டப்போட்டியின் போதான பதிவுகள். இந்தப் பகுதிக்குள் இணைப்பது தவறு என்று நினைக்கிறேன்..இப்படியும் ஒரு போட்டி பாருங்கள்..மிருகவதை.😒
  17. உண்டியலூடாக பணம் அனுப்புபவர்களுக்கு ஆப்பு. இவ்வளவு காலமும் இங்கே பணத்தைக் கொடுத்தால் இலங்கையில் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவார்கள். இனிமேல்?நேரடியாக போய் பெற்றுக் கொள்ளலாமோ? வெளிநாடுகளில் உள்ள பலர் வட்டி கூடுதலாக வருகுது என்று இலங்கை வங்கிகளில் போட்டு வட்டியை எடுக்கிறார்கள். அவர்களுக்கும் சிக்கல் வருமோ?
  18. அண்மையில் போலி துவாராகா வரவின் போது நிறைய போராளிகள் தளபதிகள் வெளிநாடுகளில் இருந்து பேட்டிகள் கொடுத்திருந்தனர்.
  19. எனக்கு தெரிந்து ஊரில் பொங்கல் சித்திரை புதுவருடம் என்பன புதிய மண்பானையில் த் தான் பொங்கினோம். இப்போது அலுமினிய பானையா பாவிக்கிறார்கள்.
  20. முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் பிரான்ஸ் வந்த சில முக்கிய போராளிகளுக்கு இங்கே அனுதாப மற்றும் உயிராபத்து சார்ந்து மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப்பட்டது. (அந்த கதை தான் இப்பொழுதும் இங்கே பேசப்படுகிறது என்று நினைக்கிறேன்) இறுதியில் அவர்களே அதை நிறுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைவரின் மெய்ப்பாதுகாவலர்களும் அதை விட அதிகமாக பொட்டரின் மெய்ப்பாதுகாவலர்களும் விண்ணப்பித்தார்கள். அப்புறம் வரும் விண்ணப்பங்களை நீங்கள் தலைவருடையதா அல்லது பொட்டர் உடைய வலது கையா என்று கேட்கும் அளவுக்கு வந்திருந்தது. 😭
  21. கப்பலில் வந்த பலரின் நிலை இப்படித்தான். கப்பலில் பயணிகளுக்கு பரஸ்பரம் உதவியோரின் நிலையும் இதுதான். தேனீருக்கு சுடுதண்ணீர் வைத்தோர், பரஸ்பரம் உதவியோர் பலர் ஆட்கடத்தலுக்கு உடந்தை என்று குற்றச்சாட்டின் கீழ் பிரச்சனைகளை எதிர் கொண்டனர். உண்மை. ஆனாலும் நான் விபு வில் இருந்தேன், அவர்களது போராட்ட வழிமுறையை ஆதரித்தேன் என்று பகிரங்கமாக அல்லது மறைமுகமாகக் கூறினால் அவர்களது அகதிக் கோரிக்கையில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
  22. கப்பலில் வந்த போராளி ஒருவரை உளவாளியை ((எம்மவர்) வைத்து அவரின் நண்பர்களின் உரையாடல், text, email போன்றவற்றின் மூலம் புலிகளுடன் தொடர்புடையவர் என நிறுவிய பின் அவரை திருப்பி அனுப்ப கனேடிய குடிவரவு தேடி திரிந்தது. அவர் சில காலம் தலை மறைவாகி பின்னர் வேறொரு நாட்டுக்கு சென்று வாழ்கிறார்.
  23. 1 point
    ஓ....இவர் இப்பவும் பெரிய நினைப்போட தான் திரியிறார்
  24. 1 point
    பிறகேன் அங்க போவான்......! 😴 நான் 2ம் பக்கத்தில் கந்தையரின் பதிவுக்கு பதில் போட்டேன் ......பின் 3ம் பக்கத்தைப் பார்க்க பிரியனும் அதே பதில் போட்டிருக்கிறார் ........சேம் பிளட் ........! 😂
  25. 1 point
    கவி அருணாச்சலம் போன்ற வயோதிபர்கள் இடங்களை பார்க்க தான் போவார்கள் கிருபனுக்கும் இடங்கள் பிடித்து கொண்டது போல. எனவேதான் போக ஆசைப்படுகிறாரோ?? ஆகவே மனைவியும் போனால் துணையாக இருக்கும்
  26. இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் நடைபெற்றபோது இதே உன்னிக்கிரிஷ்ணன் இந்திய தரப்பால் முன்னெடுக்கப்பட்ட இரகசிய காய்நகர்த்தல்கள் குறித்த விடயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்ததாகவும், இதனாலேயே ஒப்பந்தத்தில் தான் எதிர்ப்பார்த்ததைக் காட்டிலும் இலங்கைக்கு அதிக விட்டுக்கொடுப்பினை இந்தியா செய்யவேண்டியதாயிற்று என்றும் ரோ அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்திய உபகண்டத்தின் சரித்திரத்தையே மாற்றிப்போட்ட இந்த உளவுச் சதி வெறும் பெண்ணாசையினால் ஏற்பட்டதென்று அவர்கள் கூறுகிறார்கள். பான் அம் விமானச் சேவையின் விமானப் பணிப்பெண் ஒருவரை வைத்தே உன்னிகிருஷ்ணனை சி.ஐ.ஏ மடக்கியிருக்கிறது. அப்பெண்ணும், உன்னியும் சல்லாபிக்கும் புகைப்படங்களை வைத்தே அவர் மிரட்டப்பட்டு அவரிடமிருந்த தமிழ்ப் போராளிகளின் பயிற்சிமுகாம்கள், போராளிகளின் எண்ணிக்கை, முகாம்களின் வரைபடங்கள், பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் வகைகள் ஆகிய விடயங்களும், இலங்கை தொடர்பான இந்தியாவின் இரகசிய காய்நகர்த்தல்கள் தொடர்பான விடயங்களையும் அமெரிக்கா கண்டறிந்து இலங்கைக்குச் சொல்லியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்நாட்டின் தமிழ்ப் போராளிகளின் அனைத்துப் பயிற்சிகளுக்கும் இந்த உன்னிகிருஷ்ணனே பொறுப்பாக இருந்திருக்கிறார் என்பது. ஆக, ஒரு இனத்தின் வாழ்தலுக்கான போராட்டத்தை ஒரு தனிமனிதனின் பாலியல் உணர்வு எவ்வளவு தூரத்திற்கு பாதித்திருக்கிறது என்பதற்கு உன்னியும் ஈழத்தமிழர்களும் சாட்சி. இதுகுறித்து இன்னொரு திரியே திறக்கலாம். நேரம் போதாமையினால் விட்டுவிடுகிறேன்.
  27. மேல் வீடியோவிலும் சரி, வேறெங்கும் அவர் பாய்வதற்கு முன்னரான உரையாடல் இல்லை. ஆனால், நியூ யோர்க் ரைம்சின் படி பின் வரும் உரையாடல் நடந்திருக்கிறது. Mr. Redden’s lawyer, Caesar Almase, asked the judge to sentence his client to probation. அவரது வக்கீல், அவருக்கு ஒத்தி வைக்கப் பட்ட தண்டனை கொடுக்கும் படி கேட்டிருக்கிறார். “I appreciate that, but I think it’s time he get a taste of something else,” Judge Holthus said at the hearing, just before the attack. “I just can’t with that history,” she added, appearing to refer to Mr. Redden’s criminal background. "புரிகிறது, ஆனால் இந்த முறை இவருக்கு வேறு வகையான ரேஸ்ற் உடைய ஒன்று அவசியமாகிறது. இவரது கடந்த கால வரலாற்றின் காரணமாக உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியாது" அதென்ன கடந்த கால வரலாறு? மூன்று வரையான வன்முறைக் குற்றங்களும், பல வன்முறை கலந்த குழப்படிகளும் (misdemeanor) செய்திருக்கிறார் பாய்ந்தவர். இவ்வளவு குற்ற வரலாறுள்ளவரை இன்று மீண்டும் திரும்பி வந்து 4 வருட சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறார் அதே நீதிபதி. நீதிபதியைத் தாக்கிய வழக்கு வேற நீதிபதியின் கீழ் நடக்கும், மேலும் பல வருடங்கள் சிறை கிடைக்கும். என்னைப் பொறுத்த வரை, நீதிபதி நக்கல் அடித்ததாகத் தெரியவில்லை. இது வரை வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள், அவர் திருந்தவில்லை, அதனைச் சுட்டிக் காட்டும் சொல்லாடல் தான் "வேற ரேஸ்ற்" என்பது. https://www.nytimes.com/2024/01/08/us/las-vegas-judge-attacker-sentenced.html
  28. வாழ்த்துக்கள் செந்தில் தொண்டமான் அவர்களே.... கிழக்கு வெளித்துவிட்டது....இந்தியாவின் வாடை நிறைந்துவிட்டது... இது கொஞ்சம் கவலைதான்...கிழக்கு கிழக்கிஸ்தான் என்பவர்களுக்கு நல்ல பதில்...எம்மவரினரசியலுக்கு...நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள்... தொடருக....
  29. அப்ப காலிஸ்தான் போராளிகளை எப்படி அரவனைகிரார்கள் ?இந்த கேள்வியின் விடையில் நாம் எங்கே கோட்டை விடுகிறேம் என்பது தெரியும் . இதற்கான விடை தெரிந்தும் ஒருத்தனை முட்டாள் ஆக்கவேணும் என்றே கொஞ்சம் வெளிக்கிடும் அதுகளுக்கு விடை சொல்லி நேரம்தான் வீணாகும் .
  30. 1 point
    யாழ் கள உறவுகளும் பயன் பெற ஊரில் உலாவிய இடங்களின் படங்களும் பகிர்வும் மிக்க நன்று
  31. தவறு ஆயுதம் ஏந்திய எவருக்கும் அகதி உரிமை எடுப்பது கடினம். ஆனால் அதற்கான காரணம் ஐநாவின் அகதிகள் கோரிக்கைக்கு இணங்க இருந்தால் அகதியாக ஏற்கப்படும் (அநேகமான எம்மவர் சொல்வது கட்டாய சேர்ப்பு அல்லது சந்தர்ப்பம் அல்லது மாட்டிக் கொண்டேன் அதன் காரணமாக ஏற்பட்ட இலங்கை அரசின் அச்சுறுத்தல்)
  32. கருத்துக்கு நன்றி ஜஸ்ரின். தன்னை ஒரு பெண் விரும்பாததை ஏற்க முடியாத குரூர மனம் கொண்ட காதலனால் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுவே இலங்கை இந்தியாவில் நடந்திருந்தால் கொலையாளி தப்பி சென்றிருப்பார். இங்கு ஐரோப்பாவில் கொலையாளி தப்பி வாழ்வதற்கான சாத்தியப்பாடு குறைவு என்பதால் அந்த கொலைகாரக் காதலன் தற்கொலை செய்துள்ளார். தப்பி செல்ல வசதி இருந்திருந்தால் அதையே செய்திருப்பார். 1980 களின் இறுதி 1990 களில் தொடக்கம் காலப்பகுதியில் தமிழர்களிடையே ஐரோப்பாவில் பண/ சீட்டு பிரச்சனையில் கொலைகளை புரிந்த சிலர் தப்பி கனடா போன்ற நாடுகளுக்கு சென்ற சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது. தன்னை விரும்பாததால் அசிட் வீசுவது அல்லது அந்த பெண்ணை கொலை செய்வது தமிழ் நாட்டில் கூட ஏராளமாக நடந்துள்ளன. இந்நிலையில், ஏதோ தமிழ் சமூகத்தில் இதற்கு முன்போ அல்லது அவர்களது தாயகத்திலோ கொலைகள் நடக்காது போலவும் மேற்கு நாடுகளின் கலாச்சாரம் தான் தமிழ் சமூகத்தை கொலை வன்முறைக்கு தூண்டுவது போல உலக மகா உருட்டைச் செய்ய சிலர் முனைகிறார்கள். அதற்குள் தேவையற்ற கலாச்சார சமூக இழுப்புக்கள், பூசி மெழுகல்கள். ஒரு பாலின விடயங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர பும் இல்லாத நிலையிலும் அதையும் இழுத்து கலாச்சார பிதற்றல்கள் வேறு.
  33. தகவலுக்கு நன்றி. யேர்மன் கால்பந்து தலைமுறைகளை திரு பிரான்ஸ் பெக்கன்பவர் ஒரு பேரரசராக இருந்து வழி நடத்தினார் அவரை நாம் இழந்துவிட்டோம் என்று யேர்மன் பிரதமர் வருத்தம் தெரிவித்ததை செய்தியில் பார்த்தேன்☹️ ஆழ்ந்த இரங்கல்கள்
  34. தாம் இலங்கையர் என பெருமையாக கூறுபவர்கள் அவமானப்படும் வகையில், இலங்கை ஒரு சிறுபான்மையினரினை அடக்குவதற்காக கடன் வாங்கி; இப்போது அதனை செலுத்த முடியாமல் திணறுகின்றது. இலங்கையில் இன்னமும் பயங்கரவாத சட்டத்தின் பின்னே மறைந்து கொண்டே அரசுகள் இயங்கும் கேவலமான நிலையிலேயே இலங்கை உள்ளது, இதனை பற்றி படித்த, பாமர மக்கள் கூட கவலைப்படுவதில்லை, காரணம் அந்தளவிற்கு இனவாதம் கண்ணை மூடியுள்ளது, அந்த அவமானகரமான நிலையினை கூட உணரமுடியாதவாறு எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல இருக்கும் இலங்கை குடிமக்களுக்கு, அவர்கள் அரசு கொடுக்கும் பரிசு என்ன என்பதனை காலம் தீர்மானிக்கும். இலங்கை எவ்வாறான கடன் மீழ்சீரமைப்பிற்கு தயாராகிறது என்பதனை இதுவரை தெரிவிக்கவில்லை, 87 பில்லியன் கடனினை எவ்வாறு தீர்க்கவுள்ளது? debt swap 1:1 அல்லது 1:2 என்பது கூட தெரிவிக்கபடவில்லை. நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தெரியவில்லை, ஆனால் நிறுவனங்கள் தமது கடன் மறு சீரமைப்பிற்கு 1:1 என்றால் $100 கடனிற்கு $100 செலுத்துவது 1:2 என்றால் $100 கடனிற்கு $200 செலுத்துவது. ஏற்கனவே 87 பில்லியன் கடன் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 131% இந்த 87 பில்லியனை 1:2 என செலுத்துவதாயின் 174 பில்லியன் கடனாகிவிடும், அது தற்போதய கடனினை விட இரட்டிப்பானது. இந்த கடன் சுமைகள் அனைத்தும் மக்கள் மேலேயே சுமத்தப்படும், ஆரம்பத்தில் 10 வருட பணமுறியினை பயன்படுத்தி கடன் மீழழிப்பு செய்யப்படும் என கூறப்பட்டது, இலங்கையின் கிரடிட் தரம் தாழ்வாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு ஆர்வம் காட்டுவார்கள்? இலங்கை பணமுறியில் முதலிட? அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டும் (ஆபத்தான முதலீடு). வட்டி அதிகம் செலுத்தினால் ஒரு கட்டத்தில் மீண்டும் இலங்கை கடன் செலுத்த முடியா முறிவு நிலைக்குள்ளாகும் (குறைந்த கால முதிர்ச்சி கடன்), உதாரணமாக 30 வருட வீட்டுக்கடனை 10 வருடத்திற்குள் செலுத்துவதென்றால் மீள செலுத்தும் மாதாந்த கட்டணம் அதிகரிக்கும் அதனை போல ஒரு நிலைதான். இலங்கை தொடர்ந்தும் கடன் வாங்கி கடன் செலுத்தி ஒரு ஐந்தாறு வருடங்களின் பின்னர் மீண்டும் தற்போதுள்ளதனை விட அதிக கடனுக்கு வட்டி கூட செலுத்தமுடியாமல் தற்போதுள்ள நிலையினை விட இன்னும் மோசமானநிலையில் முறிவடையலாம். இதற்கு காரணம் அரசுகள் மட்டுமல்ல அங்குள்ள மக்களின் மனங்களும்தான் காரணம். பொதுவாக பார்க்கும் போது இலங்கை இந்த நச்சுவட்டத்திற்குள்ளே தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளது அல்லது ஏதாவது புரட்சிகரமான மாற்ற்ம் நிகழ வேண்டும்.
  35. சாவகச்சேரியில் பரபரப்பு, வாலிபர் கைது. 😂
  36. வெடி ரசம் குழி - கருவாட்டு பொரியல்
  37. ஆடறுக்க முதல்...... எண்ட வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.😂 கொத்துரொட்டி போடுறமாதிரி சாட்டிலைட் அனுப்புறதை கதைக்கிறானுகள்🤣
  38. குரான் ஒரு பொக்கிஷம் அங்கேயே விஞ்ஞானம் தொடங்கி எல்லாம் அனைத்தும் உள்ளது என்றவர்கள் இன்று சாட்டிலைட் ராக்கெட் அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி என்பது சிறந்த மாற்றம் 👍
  39. தோல்வியடைந்தது என்பதை விட தொடர்சசியாக பின்னோக்கி கொண்டு செல்லும் அழிவு அரசியலே இப்போதும் தொடர்வதோடு அதை ஊக்கிவிப்பதும் நடக்கிறது. அதையே தவறு என்று கூறுனேன். அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கான மக்களின் ஆணை எப்போதும் ஜதார்ததபூர்வமான தேர்வுகளை நோக்கியதாக இருந்ததை பல தேர்தல்களில் அவதானிக்க முடியும்.(அதற்கான புள்ளிவிபரங்கள் இணையத்தில் உள்ளது.) அரசியலாளர்கள் தான் அதற்கு தவறான அர்ததத்தை கற்பித்து தவறாக வழிநடத்தினார்கள். நடந்து முடிந்த தவறான அரசியல் போகட்டும். அது இனி வேண்டாம் என்பதே எனது கருத்து.
  40. இளையராஜா திறமையானவர் மற்றும் உளவியலாக சில இடையூறினை சந்திப்பவராக இருப்பார் எனகருதுகிறேன், இளையராஜாவுக்கு கர்வம் இருப்பதாக உணரவில்லை, ஆனால் அவர் சிறுவயதில் பாதிக்கப்பட்ட ஒரு பிற்போக்கு சமூகத்தின் பாரபட்சத்தினால் ஏற்பட்ட கோபத்தினால் தன்னிலை மீறுகிறார், ஒரு சமூக போரளியின் நியாயமான கோபம் இலக்கின்றி காட்டாறு போல போவதாக உணர்கிறேன். மற்றது கர்வம் என்பது ஒருவித பெருமிதம் என கருதுகிறேன் சிலர் அதனை சில்லறைதனமாக நடப்பதனை கர்வம் என தவறாக கருதுகிறார்களோ என தோன்றுகிறது. எனக்கு கர்வம் இல்லை என்ற கர்வம் உண்டு😁.
  41. அதிகரிக்கும் வருமான வரி பொருளாதார வளர்ச்சியில் மறைமுகமான பாதிப்பினை ஏற்படுத்தும், அமெரிக்காவினது கடன் அதன் மொத்த தேசிய வருமானத்தில் 122% உள்ளது, இலங்கையின் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 131% உள்ளது, ஒப்பீட்டளவில வெறும் 9% மட்டுமே இலங்கையினை விட குறைவான கடனையுடைய அமெரிகா எப்பிடி இவ்வளவு கெத்தாக திரிய இலங்கை மட்டும் பிச்சைகாரன் மாதிரி (கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்) திரிகிறது?
  42. இளையராஜா யுகம் தொடங்கிய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் அவர் ரசிகன் நான்.எந்தவொரு பாடலையும் தவற விட்டது கிடையாது.இளையராயாவிற்கு இருக்கும் கர்வத்தை விட ஆயிரம் மடங்கு கர்வம் எனக்குண்டு. ஆயினும் மற்றவர்களை மதிக்காவிட்டாலும் மட்டம் தட்டும் உரிமை அவருக்கில்லை. ஆயிரம் இருந்தாலும் இசைக்கு ராஜா இளைய ராஜா தான். அதை யாரும் மேவ முடியாது.
  43. இந்தியாவின் அழுத்தத்தினையடுத்து சர்வகட்சி மாநாட்டில் ஜெயார் முன்வைத்த பரிந்துரைகள் ‍ இணைப்பு - சி தில்லியில் கலந்தாலோசிக்கப்பட்ட பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இணைப்பு "சி" எனும் பெயரில் அனுப்பப்பட்டது. தில்லியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணைப்பு "சி" பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவென முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளான இவை, இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையினையும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. சர்வகட்சி மாநாடில் பேசப்படப்போகும் விடயங்கள் இப்பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றிருந்தன. 1. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஒரு பிராந்திய சபையாக ஒருங்கிணைவதற்கு அந்தந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் சம்மதமும், அம்மாவட்டங்களில் நடத்தப்படும் சர்வஜன் வாக்கெடுப்பும் அவசியமாகும். 2.வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஏதாவது ஒன்று உறுப்பினர்களின் விலகினால் ஸ்தபிதம் அடையுமிடத்து, அம்மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்ட அபிவிருத்திச் சபைகளுடன் குறிப்பிட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை இணைத்துக் கொள்ளப்படலாம். 3. உத்தேச பிராந்தியம் ஒவ்வொன்றும் விரும்பினால் தமக்கான பிராந்திய சபை ஒன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும். இப்பிராந்தியத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியின் உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி இப்பிராந்தியத்தின் முதலமைச்சராக நியமிப்பார். இப்பிராந்தியத்தின் அதிகார சபைக்கான அமைச்சர்களை முதலைமைச்சரே நியமிப்பார். 4. நாட்டின் இறையாண்மை, பூகோள ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட, பிராந்திய அதிகார சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத ஏனைய விடயங்கள் யாவும் ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பொறுப்பில் இருக்கும். 5. பிராந்தியங்களின் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை அப்பிராந்தியங்களே உருவாக்க முடியும். பிராந்தியங்களுக்கான சட்டம் ஒழுங்கு, சமூக பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், நிலக் கொள்கை ஆகிய விடயங்கள் ஆகியவை பிராந்திய சபைகளினால் உருவாக்கப்படும். 6. மேலும், பிராந்தியங்களுக்கான வரி அறவிடல், சேவைகளுக்கான கட்டணம், பிராந்திய அபிவிருத்திக்கான கடன்களை மக்களுக்கு வழங்குதல், இக்கடன்களுக்கான நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து ஒழுங்குசெய்தல் ஆகியவை பிராந்திய சபைகளால் மேற்கொள்ளப்படும். மத்திய அரசினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு பரிந்துரைக்கப்படும். 7. பிராந்தியங்கள் தமக்கான உயர் நீதிமன்றங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மேல்முறையீடு தொடர்பான விடயங்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 8. ஒவ்வொரு பிராந்திய சபையும் தமக்கான அதிகாரிகள் மற்றும் பொதுச் சேவை அலுவலர்களை அப்பிராந்தியத்தில் இருந்து நியமிக்கும். வேறு பிராந்திய சபைகளில் வதியும் அதிகாரிகள் அலுவலர்களையும் ஒரு பிராந்திய சபை சேவைக்கு அமர்த்திக் கொள்ளலாம். பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பிற்காகவும், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காகவும் பிராந்திய சபைகள் தாம் உருவாக்கும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உதவியை நாட முடியும். 9. நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப இராணுவத்திற்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கடமையில் அமர்த்தப்படும் பொலீஸ் உத்தியோகத்தர்கள் இப்பிராந்தியங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். 10. திருகோணமலை துறைமுகத்தினை மத்திய அரசினால் அமைக்கப்படும் துறைமுக அதிகார சபை பொறுப்பில் வைத்துக்கொள்ளும். துறைமுகமும் அதுஅமைந்திருக்கும் பிரதேசமும் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு இச்சபைக்கு வழங்கப்படவிருக்கும் அதிகாரங்கள் பற்றி விரிவாக பின்னர் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும். 11. நிலப்பங்கீடு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்று அமைக்கப்படுவதோடு, இதன் அடிப்படையிலேயே குடியேற்றங்களை அரசாங்கம் முன்னெடுக்கும். பாரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர்த்து ஏனைய குடியேற்றத் திட்டங்கள் அனைத்துக்குமான நிலப் பங்கீடு அந்தந்த பகுதிகளின் இன விகிதாசாரத்திற்கு அமைவாகவும், ஏற்கனவே இருக்கும் இனப்பரம்பலினை பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படும். 12. அரசியலமைப்பிற்கு அமைவாக உத்தியோகபூர்வ மொழியான சிங்களமும், தேசிய மொழியான தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமுல்ப்படுத்தப்படும். இதேவகையான சட்டங்கள் தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றிற்கும் நடைமுறைப்படுத்தப்படும். 13. சர்வகட்சி மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை அரசியல் யாப்பில் இணைத்துக்கொள்வதற்காகவும், இது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்படும். இதற்குத் தேவையான செயலகத்தினையும், சட்ட அலுவலக வசதிகளையும் மத்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். 14. சர்வகட்சி மாநாட்டில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரி சபையினாலும், ஏனைய கட்சிகளின் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைப்புக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்காக முன்வைக்கப்படும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.