Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    29
    Points
    8910
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46797
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/23/24 in all areas

  1. யாழ்ப்பாணம் வந்து சித்தியைப் பார்ப்பது என்று முடிவெடுத்த கணத்திலேயே இன்னொரு விடயத்தையும் நிச்சயம் செய்யவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியிருந்தேன். அதுதான் வன்னிக்குச் செல்வது. குறிப்பாக பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பூடாக 2009 இல் எமது மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பாதை வழியே சென்று முள்ளிவாய்க்காலை அடைவது. அங்கிருந்து வட்டுவாகல் பாலத்தினூடாகச் சென்று முல்லைத்தீவு நகரை பார்ப்பது. இந்த விடயம் குறித்து வீட்டில் பேசியிருந்தால் நிச்சயம் எனது பயணம் தடைப்பட்டிருக்கும். ஆகவே, இதுகுறித்து மூச்சு விடுவதையே தவிர்த்திருந்தேன். ஆனால் தவறாது மைத்துனரிடம் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு இப்பயணத்தை ஒழுங்குபடுத்துமாறு கேட்டிருந்தேன். அவரும் தனக்குத் தெரிந்த வான் சாரதியொருவரை ஒழுங்கு செய்து தனது வேலைக்கும் லீவு போட்டுவிட்டதாக அறிவித்தார். கரவெட்டியில் எனது தாயருக்குக் கொடுக்கப்பட்ட சீதன வீடொன்று இருந்தது. அதனை எனது சித்தியொருவர் வாங்கிக்கொண்டார். ஆனாலும், அவ்வீடு எப்போதும் எனக்கு அம்மம்மாவினதும் அம்மாவினதும் வீடுதான். சித்தியும் என்னைத் தனது மகன்களில் ஒருவராக நடத்திவந்தார். ஆகவே இலங்கை வரும்போது அவரையும் பார்த்துவிட விரும்பினேன். அவருக்கும் வயது 70 ஐக் கடந்திருந்தது. அவ்வாறே எனது தாயாரின் இன்னொரு தங்கையும் கரவெட்டியில் இருந்தார். அவரையும் பார்த்துவிட நினைத்தேன். இனிமேல் எப்போது வரக்கிடைக்கப்போகின்றதோ? அல்லது அவர்களுக்குத்தான் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? என்கிற கேள்விகள் மனதில் எழ, அவர்களைப் பார்த்துவிட கரவெட்டிக்குச் செல்ல ஆயத்தமானேன். மைத்துனர் வீட்டிற்குச் சென்று, சித்திமாருக்குக் கொடுப்பதற்கென்று கொண்டுவந்த சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு கண்ணாதிட்டி வீதியிலிருந்து யாழ்ப்பாணம் அரச போக்குவரத்து நிலையத்திற்குச் சென்று, நெல்லியடியூடாக பருத்தித்துறை செல்லும் 750 ஆம் இலக்க பேரூந்து தரித்துநிற்கும் பகுதிக்குச் சென்றேன். காலை வெய்யிலே கொழுத்த ஆரம்பித்திருந்தது. 1980 களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்த அதே பேரூந்துத் தரிப்பிட நிலையக் கட்டடம், அழுக்காக, சிறிய இடிபாடுகளுடன் காணப்பட்டது. பஸ்நிலையச் சுற்றாடல் குண்டும் குழியுமாக, மழைநீர் தேங்கிச் சேறாகிக் கிடந்தது. 40 வருடங்களுக்கு மேலாகியும் அப்பகுதி மாறவில்லை. ஒரே வித்தியாசம் மணிக்குரல் விளம்பர சபையின் பாட்டுக்களும் ரேலங்கியின் கணீரென்ற குரலும் இல்லாததுதான் என்று தோன்றியது. ஒரு அரை மணித்தியாலம் அங்கு நின்றிருப்பேன். பருத்தித்துறை செல்லும் பேரூந்து வரவேயில்லை. நண்பன் தொலைபேசியில் வந்தான், "எங்கயடா நிக்கிறாய், பஸ்ஸில ஏறீட்டியோ?" என்று கேட்க, "இன்னும் இல்லை, பஸ் ஸ்டாண்டில நிக்கிறன்" என்று சொல்ல. "மச்சான், சி.டி.பி பஸ் பெரிசா ஓடாது, மினிபஸ்ஸ் ஸ்டாண்டுக்குப் போனியெண்டால் பஸ் கிடைக்கும்" என்று கூறினான். அதன்படியே செய்தேன். அரச பேரூந்து நிற்கு சாலைக்கு வெளியே தனியார் பஸ் நிறுத்துமிடத்தில் மினிபஸ் ஒன்றிலிருந்து , "பருத்தித்துறை, பருத்தித்துறை" என்று கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஏறி அமர்ந்துகொண்டேன். இறுதியாக யாழ்ப்பாணத்தில் மினிபஸ் ஒன்றில் ஏறியது 1986 இல் என்று நினைக்கிறேன். கோண்டாவிலில் இருந்த காலத்தில் பாடசாலை பஸ்ஸைத் தவறவிட்டு விட்டால் யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து கச்சேரி நோக்கிச் செல்லும் மினிபஸ்ஸில் ஏறிக்கொள்வோம். அக்காலத்திற்குப் பிறகு மீண்டும் ஏறியிருப்பது இன்றுதான், ஏறத்தாள 37 ஆண்டுகளுக்குப் பின்னர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். யாழ்ப்பாண நகரப்பகுதியில் வேண்டுமென்றே மெதுவாக ஓட்டிச் சென்றார் சாரதி. போகும் வழிநெடுகிலும் மக்களைக் கூவி அழைத்து ஏற்றிக்கொண்டார் நடத்துனர். வயோதிபர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் என்று பல்வேறு வயதினரும் ஆங்காங்கே ஏறி இறங்கிக்கொண்டார்கள். நடத்துனர் இளவயதுக்காரர், ஓரளவிற்கு கண்ணியமாகவே பயணிகளுடன் நடந்துகொண்டார். இருமுறை வீதியின் அருகாக அமைக்கப்பட்டிருந்த ஆலயங்களுக்கு அருகில் வாகனத்தை மெதுவாக நிறுத்தி உண்டியலில் பணம் போட்டுவிட்டு வணங்கினார். இந்து, கிறிஸ்த்தவம் என்று அவர் வேறுபாடு காட்டவில்லை. இருபாலையினைத் தாண்டியதும் வாகனம் வேகமெடுத்தது. ஆசுர வேகம். பின்னால் அரச பேரூந்து வந்திருக்கலாம். அதுவரை மெதுவாக ஓடிக்கொண்டிருந்தவர் திடீரென்று தூக்கத்தால் விளித்துக்கொண்டவர்போல செலுத்திக்கொண்டுபோனார். அச்சுவேலிச் சந்தியப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வண்டி அச்சுவேலியை விடுத்து ஆவரங்கால் ஊடாக வல்லை வெளி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. வல்லைவெளி பற்றி ஒரு சிறிய அனுபவம் இருக்கிறது. உங்களுக்குச் சலிப்பில்லாமல் இரத்திணச் சுருக்கமாக (சும்மாதான்) சொல்லிவிடுகிறேன். பாடசாலை விடுமுறைநாட்களில் தெல்லிப்பழைக்கோ அல்லது கரவெட்டிக்கோ போவது வழமை. அவ்வாறே 1987 ஆம் ஆண்டு ஆடியில் வாரவிடுமுறை ஒன்றிற்காக கரவெட்டியில் அமைந்திருக்கும் அம்மமாவின் வீட்டிற்குத் தம்பியுடன் சைக்கிள் சென்றிருந்தேன். அன்றிரவு நாம் உறங்கிக்கொண்டிருக்கையில் வானத்தில் மின்னல் வெட்டியது போன்ற வெளிச்சமும் அதனைத் தொடர்ந்து பாரிய வெடியோசையும் கேட்டது. சத்தம் கேட்டுப் பலர் வீடுகளை விட்டு வெளியே வந்துவிடவே தெருக்களில் மக்கள் கூடிநின்று அங்கலாய்ப்புடன் பேசுவது கேட்டது. எவருக்கும் நடந்தது என்னவென்று அப்போது தெரியாது. காலை விடிந்தவுடன் சித்தி என்னையும் தம்பியையும் உடனேயே கோண்டாவிலுக்குச் சென்றுவிடடுமாறு கூறினார். "கொப்பர் கொல்லப்போறார், இஞ்ச என்ன நடக்கப்போகுதோ தெரியாது, வெளிக்கிடுங்கோ" என்று கூறவும், நானும் தம்பியும் அவசரமாக புறப்பட்டுவிட்டோம். நாவலர் மடத்திலிருந்து வல்லை வெளிநோக்கிப் போகும் சாலையில் எம்மைத்தவிர வேறு எவரையும் அந்தக் காலை வேளையில் காண முடியவில்லை. மனதில் பயம் தொற்றிக்கொள்ள, வேகமாக சைக்கிளை உதைந்துகொண்டு போய்க்கொண்டிருந்தோம். மூத்தவிநாயகர் கோயிலடி, குஞ்சர் கடையடி, வல்லை வெளியின் ஆரம்பம் என்று வீதியின் எந்தப்பக்கத்திலும் சனநடமாட்டம் இருக்கவில்லை. சிறிதுதூரம் வல்லை வெளியில் ஓடியிருப்போம், வீதியின் வலதுபக்க வெளியில் ஒரு சில நூறு மீட்டர்களுக்கப்பால் வரிசையில் இராணுவம் கரவெட்டி நோக்கி தொண்டைமானாறு பகுதியிலிருந்து முன்னேறிக்கொண்டிருந்தது. எம்மை நிச்சயம் கண்டிருப்பார்கள், நினைத்திருந்தால் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் சுடவில்லை, மெதுவாக சைக்கிளை விட்டுக் கீழிறங்கி உருட்டத் தொடங்கினோம். பின்னால் வந்த வயோதிபர் ஒருவர், "தம்பியவை உதில நிக்காதேயுங்கோ, ஏறி ஓடுங்கோ. எப்ப சுடத் தொடங்குவாங்களோ தெரியாது" என்று சொல்லிக்கொண்டு எங்களைக் கடந்து போனார். அவரைப் பிந்தொடர்ந்து நாமும் வேகமாக சைக்கிளில் ஏறி மீண்டும் ஓடத் தொடங்கினோம். வல்லைவெளி என்கிற பெயர் கேட்கும்போதெல்லாம் நினைவிற்கு வருவது இந்தச் சம்பவமும் சந்நிதிக் கோயில் தேர் எரிப்பும் தான்.
  2. மாலை ஆறு மணிக்கு எழுந்திருப்போம் என்று நினைக்கிறேன். இன்னமும் வெளிச்சம் இருந்தது. வீட்டின் வெளிப்பகுதியிலிருந்து பேசத் தொடங்கினோம். கொழும்பில் கல்விகற்ற நாட்களில் நடந்தவை, தெரிந்த நண்பர்கள் பற்றிய விபரங்கள், அந்தநாள்க் காதல்கள், குடும்ப வாழ்க்கை என்று பல விடயங்கள் அலசப்பட்டன. நண்பர்களுடனான தனி விடுமுறைக் காலங்கள் குறித்துப் பேச வேண்டும். நாம் நாமாக இருப்பது நண்பர்களுடன் இருக்கும் வேளையில் மட்டும் தான் என்று நான் நினைப்பதுண்டு. எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக, கூச்சமின்றி, என்னைப்பற்றி என்ன நினைப்பான் என்கிற சிறிய அச்சமும் இன்றி எந்த விடயத்தையும் பேசமுடியும். உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்துக்களிருக்கலாம். ஆனால், நான் உணர்ந்துகொண்டது இதைத்தான். ஆகவே, பல விடயங்களை ஒளிவுறைவின்றிப் பேசினோம். ஏமாற்றங்கள், துரோகங்கள், வஞ்சனைகள், பிணக்குகள் கூட சம்பாஷணைகளில் வந்துபோயின. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடும்போது ராசா அண்ணையையும் கூடிவரலாம் என்றே ஆரம்பத்தில் நண்பன் சொன்னான். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது கூடத் தெரியாது, ஆகவே நானும் உடனேயே ஓம் என்று கூறிவிட்டேன். ஆனால், உரும்பிராயிலிருந்து கிளம்பும்போது எமது முடிவை மாற்றிக்கொண்டோம். "மச்சான், அண்ணை வந்தால் எங்களால சுதந்திரமாக் கதைக்கேலாது. நீ அவரோட ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பாய், அவர் நிக்கட்டும், நாங்கள் போட்டு வருவம். அவர் நாளைக்கு நாளண்டைக்கு எப்படியும் அங்க போவார்" என்று கூறவும் நானும் சரியென்றேன். ஆக, இந்தப் பயணம் நானும் நண்பனும் மட்டும் எமது கடந்தகால வாழ்க்கையை அலச, எடைபோட, சுக துக்கங்களை அலச நடத்தப்பட்டது என்றே வைத்துக்கொள்ளலாம். சிட்னியிலிருந்து கிளம்பும்போது "நீங்கள் பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தான் போறியள்" என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டை ஓரளவிற்கு உறுதிப்படுத்தியிருக்கிறது அக்கராயன் நோக்கிய எனது பயணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தபின்னர் 9 மணியளவில் இரவுணவு ஆயத்தமாகியிருந்தது. தேங்காய்ப்பூ பிசைந்த மா ரொட்டி. கூடவே கோழிக்கறி. அருமையான சாப்பாடு. பேசியபடியே இரவுணவை முடித்தோம். இருள் படர்ந்த இரவு, சுற்றியிருக்கும் மரங்களில் கூடுகளுக்குள் அடைக்கலாமிவிட்ட குருவிகளின் இரைச்சல். இடைக்கிடையே கிளைகள் வழியே தாவித் திரிந்த குரங்குகள், இடைவிடாது இரைச்சலிட்டுக் கொண்டிருந்த சில்வண்டுகள், இவை எல்லாவற்றிற்கிடையிலும் தொலைவில் கேட்ட புகையிரதச் சத்தம் என்று பல வருடங்களுக்குப் பின்னர் நகரத்தின் சலசலப்பும், அவசரமும் இன்றி, சிட்னியிலிருந்து வெகு தூரத்தில், மறுநாள் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஒரு இரவை முற்றாக உணரவும் அனுபவிக்கவும் முடிந்தது. 10 மணியளவில் தூங்கியிருப்போம். காலை 5 மணிக்கே தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல நண்பனுக்கு சிரமம் கொடுக்காது காலைக்கடன்களை முடித்துவரலாம் என்று கிளம்பினேன். வெளியில் வெளிச்சம் மெதுமெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டு வெளியே வரும்போது அந்த அம்மா காப்பி கொண்டுவந்திருந்தார். குடித்துக்கொண்டிருக்க நண்பன் எழும்பிவந்தான். "எப்படி நித்திரை?" என்று கேட்டேன். "மச்சான், சொன்னால்க் குறைநெய்க்கக் கூடாது, நல்லாத்தான் குறட்டை விடுறாய் நீ" என்று சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அட, இங்கையுமா? கடந்த சில‌ மாதங்களாக நித்திரை கொள்வதென்பது என்னைப்பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாகவே மாறியிருந்தது. இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் தூங்கினாலே போதும் என்கிற நிலையில்த்தான் நான் இருந்து வருகிறேன். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒழுங்குகள் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து இருந்த நித்திரையும் காணாமற் போய்விட்டிருந்தது. விமானத்தில் தூக்கம் வராது என்பதனால் சில நாட்களாகவே தூங்குவதென்பது பெரிய பிரச்சினையாக மாறிப்போயிருந்தது. ஆகவேதான், அக்கராயனில் தங்கிய இரவன்று அசதியில் நன்றாகவே நான் தூங்கியிருக்க வேண்டும். அது நண்பனின் தூக்கத்தைக் கலைத்துப் போட்டு விட்டது. காலை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. காலையுணவு இடியப்பமும் சொதியும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்குத் தயாரானோம். நண்பனின் மோட்டார்ச் சைக்கிள் வியாபார ஸ்த்தாபனம் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்திருக்கிறது. அடிக்கடி தொலைபேசியில் நிலையத்தின் ஊழியர்களைத் தொடர்புகொண்டு அலுவல்கள் கிரமமாக நடப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும், ஒருநாள் என்னுடன் செலவிட்டதனால் காலையிலேயே நிலையத்திற்குச் சென்று காரியங்களை மேற்பார்வை செய்ய நினைத்திருக்கலாம். "உன்ர பிளான் என்ன?" என்று கேட்டான். "கரவெட்டிக்குப் போய், மற்றைய இரண்டு சித்திமாரையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவிடம் போய்வரவேண்டும். இண்டைக்கு அதுமட்டும்தான்" என்று கூறினேன். தோட்டத்தில் கிடந்த தேங்காய்கள் சிலவற்றை அங்கிருந்தவர்கள் உரித்து காரில் வைத்தார்கள். அவற்றையும் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம். அக்கராயன் வந்த அதே பாதை வழியே திரும்பினோம். முன்னைநாள் மாலை மாவீரர் தினம் நடைபெற்ற கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் அநாதரவாகக் கிடந்தது. சுற்றிவரக் கொடிகள் இன்னும் அசைந்துகொண்டிருக்க, மக்களின்றி அமைதியாகக் கிடந்தது. முதள்நாள் கண்ட தென்னங்கன்றுகளும் காணாமற் போயிருந்தன. அக்கராயனிலிருந்து கிளிநொச்சி வரையிலான வீதிகளில் பல விடங்களில் மாவீரர்தின ஏற்பாடுகளின் மிச்ச சொச்சங்களை காலையிலும் காண முடிந்தது. மன்னார் பூநகரி நாவற்குழி பாதை வழியே யாழ்ப்பாணம் திரும்பினோம். இடையில் நிற்கும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவிற்கு வேகமாகவே வண்டி பயணித்தது. காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நண்பன் என்னை இறக்கிவிட, கன்னாதிட்டி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  3. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அக்கராயன் பகுதி வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட எழில்மிகுந்த சாலையும் இப்பகுதியிலேயே இருக்கிறது. பிற்பகல் 3 மணியளவில் அக்கராயனில் அமைந்திருக்கும் நண்பனின் குடும்பத்திற்குச் சொந்தமான கமத்தினை அடைந்தோம். 90 ஏக்கர்கள் வயற்காணியும், தோட்டக்காணியும் கொண்ட பாரிய காணித்தொகுதி அது. நண்பனின் சகோதரர்கள் அனைவருக்கும் இங்கே காணித்துண்டுகள் அவர்களது தந்தையினால் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. வயல்கள் விதைக்கப்பட்டிருந்தன. அண்மையில் பெய்த கடும் மழையினால் வயல்களுக்குள் வெள்ளம் நிற்பது தெரிந்தது. நண்பனின் கமத்தில் பணிபுரிவோர் அடுத்த மழை ஆரம்பிக்கும் முன்னர் மருந்தடிக்கும் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறே தோட்டக் காணிகளில் தென்னை மரங்களும் பழம் தரும் மரங்களும் காணப்பட்டன. சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுவதே அரிதாகும் அளவிற்கு அக்காணி சோலைபோன்று காட்சியளித்தது. மரமுந்திரிகை, தேக்கு மரங்களும் வரிசைக்கு நேர்த்தியாக நடப்பட்டிருந்தது. நண்பனின் சகோதரகள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்வதுண்டு, குறிப்பாக வெளிநாட்டில் வசிப்போர். விருந்தாளிகள் வந்தால் தங்குவதற்கென்று சகல வசதிகளுடனும் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றினை அவர்கள் கட்டியிருந்தார்கள். மேற்கத்தைய பாணியில் அமைக்கப்பட்ட குளியல் அறைகள், கழிவறைகள், விருந்தினர் மண்டபம், படுக்கையறைகள் என்று நகரப்பகுதியில் இருந்து தொலைவாக அமைந்திருக்கும் ஒரு விவசாயக் கிராமத்தில் இவ்வாறான வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையினைக் காண்பது அருமையே. இந்த விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கவும், வயற்காணிகளையும், தோட்டக்காணிகளையும் பராமரிக்கவும் என்று சில பணியாளர்கள் இங்கே வசித்துவந்தனர். அவர்களுக்கென்று தனியான வீடுகளும் அங்கே கட்டப்பட்டிருந்தன. நாம் செல்லும் வழியில் கிளிநொச்சி நகரில் இருந்த அங்காடியொன்றிலிருந்து மீன்கள் சிலவற்றையும், இறால்களையும் வாங்கிச் சென்றிருந்தோம். நண்பனின் விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கும் அம்மா ஒருவர் அவற்றைத் துப்பரவு செய்து சமைக்கத் தொடங்கினார். சற்று ஓய்வெடுத்தபின், கமத்தில் இருந்த கிணற்றில் குளித்துவிட்டு சுற்றவர இருக்கும் காணிகளைப் பார்ப்பதற்கு நடந்துசென்றோம். நண்பனின் சகோதர்களின் காணிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. சிலவற்றில் எல்லைகளே காணப்படவில்லை. இடையிடையே செல்லும் குறுக்கு வீதிகள் அவற்றை பிரித்துச் சென்றபோதும், அவை அனைத்துமே ஒரே பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. இக்காணிகளில் இருந்த பனை மற்றும் தேக்கு மரங்களில் மயில்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். மயில் இங்கு அடிக்கடி காணப்படும் ஒரு பறவை. அப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து மயில் அகவுவது கேட்டுக்கொண்டே இருக்கும். அக்காணிகளை அண்டிய வீடொன்றிற்குச் சென்றோம். நன்கு பரீட்சயமானவர்கள். அவ்வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவன் சண்டைக்கு வளர்க்கும் வெள்ளடியான் சேவல்களை வைத்திருந்தார். குறைந்தது 80 இலிருந்து ‍ 100 வரையான சேவல்களும், குஞ்சுகளும் அவரிடம் இருந்தன. தமக்குள் சண்டைபிடிக்கும் சேவல்களைத் தனியாகப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். இப்போதும் சண்டைக்கு சேவல்களை வளர்க்கும் வ‌ழக்கம் இருக்கிறதா என்று கேட்டபோது, ஆம், ஆட்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். கறிக்கும் எடுப்பது உண்டு என்று அந்த இளைஞன் கூறினார். அப்படியே காணிகளிருந்து வெளியே வந்து வீதிக்கு ஏறினோம். அதுதான் ராசா அண்ணை மரம் நட்டு வளர்த்த வீதி. வீதியின் ஒரு எல்லையிலிருந்து மற்றைய எல்லைக்கு நடந்து சென்று சுற்றவர இருக்கும் வயற்காணிகளைக் கண்டு களித்தோம். இடையிடையே புகைப்படங்கள், செல்பிகள். வீதிக்குச் சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலுக்கு மேலாக சீமேந்தினால் பாலம் ஒன்றைக் கட்டியே நண்பனின் வீட்டிற்குச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அக்கட்டிலிருந்து சிறிது நேரம் பழங்கதை பேசினோம். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கப் பசியெடுத்தது. நாம் கொண்டுவந்திருந்த மீன், இறால் என்பவற்றைக் குழம்பாக வைத்திருந்தார் அந்த அம்மா. அவற்றுடன் கரட் சம்பலும், உருளைக்கிழங்குக் கறியும் பரிமாறப்பட்டது. வீட்டுக்கிணற்றில் ஆசைதீர குளித்த குளியலும், தோட்டக்காணிகளைச் சுற்றிவர நடந்த நடையும் களைப்பினையும் பசியினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்க வயிறார உண்டோம். தோட்டத்தில் காய்த்த பப்பாளிப்பழமும், வாழைப்பழமும் கொண்டுவந்தார்கள். சிறிது நேரத்தில் களைப்பு மிகுதியால் தூங்கிப்போனோம்.
  4. இது இந்த திரியுடன் சம்பந்தப்படுவதால் இதை இங்கு எழுதுகிறேன்.. அண்மையில் எனது சகோதரம் எனது பல தடைகள் அட்வைஸ்கள் எச்சரிக்கைகளை தாண்டி நிராகரித்துவிட்டு வெளிநாடு வந்துவிட்டான்.. அது சரி அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்லுவார்கள்.. நான் கடவுளை நம்பாதவனாக இருந்தும் என் மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவராக உள்ளார். அவரையே நம்பவைக்கவோ மாற்றவோ முடியவில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. சரி இப்போ விடயத்துக்கு வருவோம்.. தம்பி வெளிநாடு போக தேர்ந்தெடுத்த நாடு ஜேர்மன். ஜேர்மனை தேர்ந்தெடுக்க அவன் சொன்ன காரணம்தான் என்னை தூக்கி வாரிப்போட்டது.. இவ்வளவு காலம் ஜரோப்பாவில் இருந்தும் எனக்கு இந்த விடயம் தெரியாதது வெக்ககேடாக இருந்தது.. அதைவிட பல்கலைக்கழகத்துக்கு வருடம் 7-8 ஆயிரம் பவுன்ஸ் பிளஸ் தங்குமிடம் உணவு போன்ற வாழ்க்கை செலவுகளுக்கு அதே அளவு பணம் என்று கொட்டி ஒரு காலத்தில் நானும் படித்தேன் இன்றும் பலர் கனடா அவுஸ்த்திரேலியா என்று பல மில்லியன் களில் படிக்க போகிறவர்களுக்கு இடையில் இங்கிலீஸ் மீடியத்தில் ஒரு சதம் செலவுகூட இல்லாமல்( பதிவு செய்தல் போன்றவற்றிற்கு ஒரு சில நூறு யூரோக்கள் மட்டும்) தம்பி ஜேர்மன் படிக்கபோய் இருக்கிறான் என்பதை இப்போ வரை என்னால் நம்ப முடியவில்லை.. இத்தனைக்கும் அவன் ஒரு அவரேஜ் ஸ்டுரன்ற். பிறைவேட்டாகதான் தன் முதல் பட்டத்தை இலங்கையில் முடித்தான். எந்த ஸ்கொலர்சிப்பிலும் போகவில்லை.. ஸ்கொலர்சிப்பும் இல்லை அப்ப ஈயூ சிற்றிசனும் இல்லை வெளிநாட்டுக்காரன் ஆன உன்னை எப்பிடியேடா ஜேர்மனில பிறியா படிக்கவிட்டவங்கள் என்டு கேட்டால் எட அண்ணா லூசுப்பயலே யூறோப்பிய சிட்டிசனா இருந்தும் இது தெரியாம இருக்கிறியே ஜேர்மனில கல்வி ஜெர்மன் சிற்றிசன் மற்றும் ஈயூ சிட்டிசன் மட்டுமன்றி அனைவருக்குமே பிறி என்டு ஒரு குண்டைபோட்டான்.. என்னடா நம்ம குசா தாத்தா தமிழ்சிறி அண்னை கந்தையா அண்னை சாந்தி அக்கா கவி அருணாசலம் என்டு எக்கச்சக்கமான ஜேர்மன் காரர் இருந்தும் யாரும் இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லையே.. எத்தனையோ குடி பெயர்வு சம்பந்தம்மான திரிகளில் யாழில் உரையாடி இருப்பம் யாரும் இதைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லையே என்று நினைத்து விட்டு கண்டிப்பாக நான் இதைப்பற்றி யாழில் எழுதவேணும் என்டு நினைத்து உடனும் போனை எடுத்து இதை ரைப்பண்ணுறன்.. இதனால் ஒரு ஏழை மாணவனாவது பயன்பெற்றால் அதைவிட சந்தோசம் எனக்கு வேறு இல்லை.. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே” அடுத்த அடுத்த பதிவுகளில் எப்படி அனுமதி பெற்றான் என்ன செய்யவேணும் போன்ற அனைத்து தகவல்களையும் தொடர்கிறேன்..
  5. காலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன். ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம். மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன். சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன‌. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று கண்டிவீதியில் ஏறினோம். செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான். கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன். மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது. நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம். ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை அள்ளித் தெளித்திருந்தன‌. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது. கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெய‌ர்கள் உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்ற‌து போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. எனது தம்பியின் பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.
  6. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் காமன்வெல்த் சதுரங்க சம்பியன்ஷிப், ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள உலக கேடட் சம்பியன்ஷிப், தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப், கசகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப், மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மேற்கு ஆசிய இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். மிக சிறுவயதில் சதுரங்க போட்டி மேடைகளை கலங்கடித்து வரும் அவர் அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப் 2023/24 - இறுதிப் (U08 திறந்த) போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவான 450 வீரர்களுடன் மோதி, சிறந்த முதல் பத்து வீரர்களுக்குள் தெரிவாகி, தேசிய தெரிவின் இறுதிக்கட்ட போட்டியான இலங்கை தேசிய இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் 2024 - சூப்பர் லீக் நிகழ்வுகளுக்கும் தகுதி பெற்றார். இப்போட்டியானது கொழும்பு புதிய விளையாட்டு அமைச்சக பெவிலியன் ரொரிங்டனில் நடைபெற்றது. இது முதல் பத்து வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக மோதும் (ரவுண்ட் ராபின்) சவால் நிறைந்த போட்டியாக இருந்த போதும், இதில் 8/9 புள்ளிகளைப்பெற்று 08 வயது திறந்த பிரிவின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் அதி உன்னத வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டார். அது மட்டுமன்றி இலங்கையில் 08 வயதுப்பிரிவில் அதிகூடிய சர்வதேச தரவரிசைப் புள்ளிகளை (நிலையான மதிப்பீடு 1116) வைத்திருக்கும் பெருமையையும் நயனகேஷன் தனதாக்கியுள்ளார். இவர் கடந்த ஆண்டில் பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தின் தேசிய போட்டியில் 07 வயது திறந்த பிரிவில் சாம்பியன் வென்றதன் ஊடாக கிறீஸ் நாட்டில் நடைபெற்ற போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். அத்துடன் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற ஆசிய பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்குபற்றி 6 ஆம் இடத்தினை பெற்றுக் கொண்டார். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்று வரும் இந்த 8 வயது இளம் சதுரங்க வீரர் வேணுகானன் நயனகேஷன் தனது 4 வயதிலிருந்து சதுரங்கத்தை விரும்பி கற்றுக் கொள்ள ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து விதமான சதுரங்கப் போட்டிகளிலும் இவரது வயதுப் பிரிவில் 90 வீதமான சாம்பியன் பட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சதுரங்க_மேடைகளை_தன்வசமாக்கும்_யாழின்_மைந்தன்.!
  7. கந்தையா அண்ணா ... கவனம் பொடியனுவல் பக்கம் 9க்குள்ள உங்கள கொண்டு போக ட்ரை பண்ணுறாங்கள்!! 😂
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரபஞ்சம் எதனால் ஆனது என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே தொடர்கிறது. 16 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இயற்கை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதை விட சில விஷயங்கள் மிகவும் உற்சாகமானவையாக இருக்கின்றன. ஒரு புதிரை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளும் போது அந்த அற்புதமான தருணத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பொதுவாக அந்த புத்திசாலித்தனமான மனங்களில் ஒன்று அல்லது பலர் அதைப் புரிந்து கொண்டதற்காக தங்கள் ஆன்மாவையும், இதயத்தையும், வாழ்க்கையையும் பயன்படுத்தினர். அறிவியல் பல்வேறு ஆராய்ச்சிகளில் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் பல கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் சில நீண்ட காலமாக உள்ளன. மற்றவை நாம் அதிக அறிவைப் பெறுவதால் புதிய கேள்விகளாக உருவெடுத்தன. நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தெரியாததை நீங்கள் அறிவீர்கள். எனவே, மிதிவண்டி எப்படி நிமிர்ந்து நிற்கின்றது? என்பது முதல் புரிந்துகொள்ள முடியாத அரிய பகா எண்கள் வரை அறியப்படாத தகவல்கள் ஒரு பரந்த கடல் போல் உள்ளன. அருமை. கேள்விகள் ஒருபோதும் தீர்ந்துவிடக்கூடாது. ஏனெனில் அவை பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் மட்டுமல்ல. தத்துவ ஞானி தாமஸ் ஹோப்ஸ் கூறியது போல் ஆர்வம் என்பது மனதின் காமம் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், நாங்கள் உங்களுக்கு 5 கேள்விகளை அளிப்பதாக மட்டுமே உறுதியளித்திருந்தால் எந்த ஐந்தைத் தேர்ந்தெடுப்பது? சரி, மிகுந்த சிரமத்துடன், அறிவியலுக்கு இன்னும் புலப்படாத 5 புதிர்களைப் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொடக்கத்தில் பூமி ஒரு குழம்பைப் போல் இருந்திருக்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 1. பிரபஞ்சம் எதனால் ஆனது? பிரபஞ்சமே கேள்விகளின் ஆதாரமாக உள்ளது: அது உருவானதுக்கு முன்பு என்ன இருந்தது; இது எல்லையற்றதா அல்லது வெறுமனே மகத்தானது தானா; இது தனித்துவமானதா அல்லது பலவற்றில் ஒன்றா...? ஆனால் இந்த நேரத்தில் விஞ்ஞானிகள் அதன் கட்டமைப்பின் 5% தன்மையை மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பாக இது சிறிய விஷயம் இல்லை என்றாலும், ஆர்வத்தைத் தூண்டும் ஒன்றாக உள்ளது. அணுக்கள், அவற்றின் கூறுகள் - புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்கள் - மற்றும் நியூட்ரினோக்கள், எதுவும் இல்லாதது போல் பொருள் வழியாக (பூமி முழுவதும் கூட) செல்லக்கூடிய மழுப்பலான துகள்கள் பற்றி பேசுகிறோம். இவை அனைத்தும் இப்போது நமக்குப் பரிச்சயமானவையாகத் தெரிகின்றன. ஆனால் அணுவைப் பற்றிய சிந்தனை கிமு 5 ஆம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கிரேக்கர்கள் அதற்கு ஒரு பெயரைக் கொடுத்திருந்தாலும், அது 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேதியியலாளர் ஜான் டால்டன் மிகவும் உறுதியான வாதத்தை உருவாக்கினார். இது அனைத்து பொருட்களும் மிகமிகச் சிறிய, பிரிக்க முடியாத, அணுத் துகள்களால் ஆனது என்ற ஆச்சரியமான முடிவுக்கு இந்த வாதம் இட்டுச் சென்றது. அதனால், பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. ஆனால் அதிலும் ஒரு பெரிய மர்மம் உள்ளது. அது கணிசமானது. அதே நேரம் மற்ற 95% எதனால் ஆனது என்ற கேள்வி எழுகிறது இல்லையா? அதில் இதுவரை அறியப்பட்ட விஷயம் என்னவென்றால், தோராயமாக 27% அளவுக்கு இருள் தான் பரவியிருக்கிறது என்பதே. இது முதன்முதலில் 1933 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களை ஒன்றாக இணைக்கும் கண்ணுக்கு தெரியாத பசையாக செயல்படுகிறது. அது பெரும் நிறையைக் கொண்டிருப்பதாலும், ஈர்ப்பு விசையாலும், அறியப்பட்ட 5% பொருண்மையை ஈர்க்கும் போது அளக்க முடியும் என்பதால், அது அருகாமையில் இருப்பதாக அறியப்படுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத அளவில் மர்மமானதாக இருந்தால், இன்னும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பிரபஞ்சத்தின் 68% அளவுக்கு இருண்ட ஆற்றல் உள்ளது. 1998 முதல் அதன் இருப்பை நாங்கள் அறிவோம். இது ஈதரைப் போன்றது என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள். இது இடத்தை நிரப்புகிறது என்பதுடன் பெருகிய முறையில் அதிக வேகத்தில் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை இயக்குகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். மற்றும் இன்னும் கொஞ்சம் தெரிய வேண்டுமென்றால், அதற்குப் பல கருதுகோள்கள் உள்ளன. ஆனால் பல தசாப்தகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மர்மம் நீடிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். 2. உயிர் எப்படி உருவானது? "தொடக்க கால குழப்பம்" என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று பொருள். சோவியத் ஒன்றியத்தில் 1920களில் அலெக்சாண்டர் ஓபரின் மற்றும் பிரிட்டிஷ் மரபியலாளர் ஜேபிஎஸ் ஹால்டேன் ஆகியோரால் ஒரே நேரத்தில் மற்றும் தன்னிச்சையாக முன்மொழியப்பட்ட கருதுகோள், இதற்கான பதிலளிக்கப் போட்டியிடும் பல கோட்பாடுகளில் ஒன்று. பூமியின் தொடக்க காலத்தில், கடல்கள் வாழ்க்கைக்கு முக்கியமான எளிய ரசாயனங்களால் நிரம்பியிருந்தன. வளிமண்டலத்தில் வாயுக்களின் கலவை மற்றும் மின்னல் ஆற்றல், அமினோ அமிலங்கள், புரதங்களின் கட்டுமானத் தொகுதிகள் ஆகியவை இருந்தன. பல விஞ்ஞானிகளுக்கு, பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கும் சிறந்த பதில் இதுதான். ஆனால் அது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்படாதது அது மட்டும் அல்ல. உண்மையில், வாழ்க்கையைப் பற்றி அறிய, அது எங்கிருந்து தொடங்கியது என்பதில்கூட அனைவரிடமும் உடன்பாடு இல்லை. கடலில், மற்ற புவி வெப்பக் குளங்களில், பனிக்கட்டியில் அல்லது பூமியிலிருந்து வெகு தொலைவில் அது இருப்பதாக நம்பும் அறிஞர்கள் உள்ளனர். (மேலும் அது சிறுகோள்கள் அல்லது விண்வெளி தூசியுடன் இங்கு வந்தது என்றும் பலர் கருதுகின்றனர்). பிறகு எப்போது? ம்ம்... சரியாகத் தெரியவில்லை; உயிரின் தோற்றத்தின் தருணமும் சந்தேகத்தில்தான் உள்ளது. பூமி உருவான பிறகு, 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பும், 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பும், பழமையான உறுதிப்படுத்தப்பட்ட புதைபடிவங்களின் காலத்திலும் இது நிகழ்ந்தது என்பது நமக்கு உறுதியாகத் தெரியும். ஆனால் பொறிமுறை என்ன என்பது இன்னும் சிக்கலானது. அமினோ அமிலங்கள் புரதங்களில் ஒன்று சேர்க்கப்படுவது சாத்தியம்தான். ஆனால் ஜீன்களை எடுத்துச் செல்லவும், தன்னைப் பிரதியெடுக்கவும், ஒரு நொதியைப் போல மடிந்து செயல்படவும் கூடிய டிஎன்ஏவின் நெருங்கிய உறவினரான ஆர்என்ஏவுடன் வாழ்க்கை தொடங்கியது என்ற கருதுகோள் போல பிரபலமாக இல்லை. மற்றொரு யோசனை என்னவென்றால், முதல் உயிரினங்கள் எளிய நிறைகள் அல்லது குமிழ்கள், "புரோட்டோசெல்கள்" வாழ்க்கையின் கூறுகளுக்கு கொள்கலன்களாகச் செயல்பட்டன என்பதுதான். எனவே அறிவியலின் மிக ஆழமான கேள்விகளில் ஒன்றுக்கு இன்னும் உடன்பாடான பதில் இல்லை. வாழ்க்கை ஏன் தொடங்கியது என்ற இந்தக் கேள்வியைக் கேட்க நாங்கள் துணியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். 3. நம்மை மனிதனாக்குவது எது? இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்று. மனிதன் மட்டும் ஏன் விதிவிலக்காக தோன்றினான்? மொழி, நம்மைப் பிரதிபலிக்கும் போது நம்மை அடையாளம் கண்டுகொள்வது, கருவிகளை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் திறன் அல்லது சிக்கலான சிக்கல்களைத் தீர்க்கும் திறன் போன்றவை மனிதனை பிற அனைத்து உயிரினங்களிலிருந்தும் விதிவிலக்காக்குகிறது. ஆனால் ஆக்டோபஸ்கள் மற்றும் காகங்கள் போன்ற விலங்குகள், பெயரிடுவதற்காக மட்டுமே இந்த இரண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன, படிப்படியாக அந்த மேன்மை வளாகத்தை எடுத்துக்கொண்டன. மற்றும் டிஎன்ஏ பற்றி என்ன சொல்வது? மனித மரபணு சிம்பன்சியின் மரபணுவுடன் 99% ஒத்துப் போகிறது. இது குடும்பத்தின் ஒரு பகுதி என்று சார்லஸ் டார்வின் சுட்டிக்காட்டியதாகத் தோன்றியபோது பலரைப் பயமுறுத்தியது. நமது மூளை பெரும்பாலான விலங்குகளின் மூளையை விட பெரியது என்பது உண்மைதான்: உதாரணமாக, கொரில்லாக்களை விட மூன்று மடங்கு அதிகமான நியூரான்கள் நம்மிடம் உள்ளன. ஆனால் யானை போன்ற விலங்குகள் ஒருவேளை நம்மை மிஞ்சும் என்பதை எண்ணி பார்த்தால் அதற்கு பதில் இருப்பதாகத் தெரியவில்லை. தடிமனான முன் புறணி இருப்பதாலா? அல்லது எதிர் கட்டைவிரலா? ஒருவேளை நமது கலாசாரம், அல்லது சமைக்கும் திறன் அல்லது நெருப்பில் நமது தேர்ச்சி? ஒருவேளை ஒத்துழைப்பு, இரக்கம் மற்றும் திறன்களின் பகிர்வு என பலதரப்பட்ட விஷயங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவற்றில் ஏதேனும் நம்மை மனிதர்களாக்குகிறதா அல்லது வெறுமனே ஆதிக்கம் செலுத்துகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். 4. உணர்வு என்றால் என்ன? திடீரென்று உணர்வுகள் நம்மை மனிதனாக ஆக்குகின்றன. ஆனால் அது என்னவென்று புரியாமல் அறிவது கடினம். நிபுணர்களின் கூற்றுப்படி, உணர்வுகளைக் கொண்டுள்ள உறுப்பு மனித மூளை. அறியப்பட்ட பிரபஞ்சத்தில் மிகவும் சிக்கலான விஷயம், பத்தாயிரம் கோடி இடைவிடாத செயலில் உள்ள நரம்பு செல்கள் உயிரியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதுடன் சிந்திக்கவும் உதவுகின்றன. இது ஒலிகள், நறுமணங்கள் மற்றும் அனைத்து வகையான சுற்றுச்சூழல் சமிக்ஞைகளுக்கும் பதிலளிப்பது மட்டுமல்லாமல் தகவல்களைத் தக்க வைக்கவும் அனுமதிக்கிறது. மேலும், பல தகவல்களை ஒருங்கிணைத்து செயலாக்குவதன் மூலம், எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக நம்மைத் தாக்கும் அந்த உணர்ச்சித் தூண்டுதல்களை நாம் ஒருமுகப்படுத்தலாம் என்பதுடன் தடுக்கவும் செய்யலாம். கூடுதலாக, எது உண்மையானது அல்லது எது இல்லாதது என்பதை வேறுபடுத்திப் பார்க்கவும், பல எதிர்கால காட்சிகளை கற்பனை செய்யவும் இது நமக்கு உதவுகிறது. ஆனால் இது ஒரு கணினி அல்ல, அதைவிட உயர்வானது. இது நமக்கு ஒரு உள் வாழ்க்கையை அளிக்கிறது: நாம் நினைப்பது மட்டுமல்ல, நாம் சிந்திக்கிறோம் என்பதையும் அறிவோம். நாம் தனித்துவமாக இருப்பதன் தனித்துவமான அனுபவத்தை சுயம் எவ்வாறு உருவாக்குகிறது? சுருக்க சிந்தனையை எப்படி சாத்தியமாக்குகிறது? ‘நனவு’ என்பது மூளையைப் பற்றிய மிகவும் ஆச்சரியமான விஷயம் என்பதுடன் நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். 5. நாம் ஏன் கனவு காண்கிறோம்? விஞ்ஞானிகள் மற்றும் தூக்க நிபுணர்கள் நாம் எப்போது கனவு காண்கிறோம் என்பதை நன்றாக அறிந்துள்ளனர். பொதுவாக தூக்க சுழற்சியின் விரைவான கண் இயக்கத்தின் (REM) பகுதியின் போது கனவுகள் தோன்றுகின்றன. நாம் ஏன் கனவு காண்கிறோம் என்பது யாரும் தெரியாத புதிராகவே இருக்கிறது. கனவுகள் திருப்தியற்ற (பெரும்பாலும் பாலியல்) ஆசைகளின் வெளிப்பாடுகள் என்று சிக்மண்ட் பிராய்ட் நம்பினார்; மற்றவர்கள் ஓய்வில் இருக்கும் மூளையின் சீரற்ற பிம்பங்களைத் தவிர கனவுகள் என்பவை வேறில்லை என்று ஊகிக்கிறார்கள் . சில ஆய்வுகள் கனவுகள் நினைவகம், கற்றல் மற்றும் உணர்ச்சிகளில் ஒரு பங்கு வகிக்கும் என்பதைக் காட்டுகின்றன. அவை அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தை பிரதிபலிக்கும் அல்லது விடுவிப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம் அல்லது சவாலான அனுபவங்களை அவிழ்ப்பதற்கான ஒரு மயக்கமான வழியாகவும் இருக்கலாம். சாத்தியமான அச்சுறுத்தல்களை உருவகப்படுத்த அல்லது சமூக சூழ்நிலைகளை முன்கூட்டியே ஒத்திகை பார்க்க அனுமதிப்பதன் மூலம் நமது கனவுகள் ஒரு வகையான உயிர் வாழும் பொறிமுறையை வழங்க முடியும் . ஆனால் ஒருவேளை அவை ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் மூலம் மட்டுமே தோன்றுகின்றன என்று கருத முடியாது. திடீரென்று அவை நாம் தூங்கும் போது நமது மூளையின் இடைவிடாத செயல்பாட்டின் துணை விளைபொருளைத் தவிர வேறில்லை என்பதே உண்மை. இன்னும் கவிதையாக, கால்டெரோன் டி லா பார்காவை நினைவு கூர்ந்தால், அவை: கனவுகள், வாழ்க்கையைப் போலவே, கனவுகளும் கனவுகள் மட்டுமே. https://www.bbc.com/tamil/articles/cq51vpw052eo
  9. நீங்கள் (இந்தியா) கோவில் கட்டுதல்(ஆத்மீக துறை_) பழ்கலைகழகம் அமைத்தல்(கல்வித்துறை) இசை நிகழ்ச்சி (கலைத்துறை) இப்படி பழைய பஞ்சாங்கத்தின் படி ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட ,சீனாக்காரன் வந்து நவீன ராஜந்திரங்களை பாவித்து உங்களை நாட்டை (சிறிலங்காவை) விட்டு துண்டை கானோம் துணியை கானோம் என ஒட வைப்பார்கள் .... பிறகு யூ டியுப்பில் வந்து கோவில் கட்டி கொடுத்தேன்,பழ்கலைகழக்ம் கட்டி கொடுத்தேன் பாட்டு பாடினேன் ...ஐயோ என்னை அடிச்சு கலைத்து விட்டார்களே என அழவேண்டி வரு
  10. உலகை தலைகீழாக மாற்ற போகும் புதிய கருவி.. செல்போனுக்கு பதில் இனி மேல் எல்லார் கையிலும் இதுதான் இருக்க போகுது..
  11. இந்தியா பாக்கிஸ்தான் இங்லாந் தென் ஆபிரிக்கா இந்த‌ அணிக‌ள் வ‌ர‌க் கூடும்........நியுசிலாந் அணியும் ந‌ல்லா விளையாடின‌ம்.............இதில‌ திற‌மையை காட்டினால் தான் அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ளை போட்டி போட்டு கொண்டு வேண்டுவின‌ம் இல‌ங்கை அணியில் ஒரு த‌மிழ‌ன் இட‌ம் பிடித்து இருக்கிறார்............என‌து பார்வையில் அவ‌ருக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு...............இந்த‌ உல‌க‌ கோப்பை இல‌ங்கையில் இந்த ஆண்டு ந‌டை பெற‌ இருந்த‌து அர‌சிய‌ல் கிரிக்கேட்டுக்குள்ளும் வ‌ர‌............உல‌க‌ கோப்பையை தென் ஆபிரிக்காவில் ந‌ட‌த்துகின‌ம் அண்ணா.................
  12. லவ் இஸ் பைன் டார்லிங் .......! 😍
  13. அன்றைய காலங்களில் அரச உத்தியோகத்தர்களும்(கொழும்பு தவிர) ஏதாவது ஒரு வழியில் உடம்பு களைக்க வேலை செய்தவர்கள். சில பலர் தங்கள் சுய தேவைகளுக்காக தோட்டம் கூட செய்தனர்.வயல் வேலைகளும் செய்தனர். நடந்து திரிந்தனர். சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தனர். நோய் நொடிகளும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று மரக்கறி விலை ஏறிவிட்டது என புலம்பிக்கொண்டு சகல நோய்களையும் சுமந்து அவதிப்படுகின்றனர். 😂
  14. யாழ்ப்பாணத்துக்கான எனது பயணத்தின் ஒற்றை நோக்கமே சித்தியைப் பார்ப்பதும், அவருடன் ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களைச் செலவிடுவதும் தான். ஆனால், அது சாத்தியப்படாது என்பது அவருடனான முதலாவது சந்திப்பிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அதற்கு மேலாக, அவரை அவரது அறையிலிருந்து வெளியே அழைத்துவருவதற்கு அவருக்கு உதவி தேவைப்பட்டது. பிறரை எந்தவிதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் அவர், ஆகவே தன்னைப் பார்க்க வருவோரிடத்தில் நீங்கள் அலைக்கழிய வேண்டாம், இடைக்கிடை வந்தால்ப் போதும் என்று கூறியிருக்கிறார். அடுத்தது, மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் அவரால் ஓரளவிற்கு மேல் சக்கர‌நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளவும் முடியாது. 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் அங்கிருப்பதே கஸ்ட்டமாகத் தெரிந்தது. அவரைப் பார்ப்பதற்காகவே நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடிவெடுத்திருந்தேன். எனது மொத்தப் பயணத்தினதும் காலம் வெறும் 7 நாட்கள்தான். ஒவ்வொருநாளும் போய் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாதென்று நினைத்தேன். இடையில் இருக்கும் இரண்டு நாளில் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று ஒரு ஆசை. 1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தின் தெருக்களில் யாழ்ப்பாணத்தவர்களில் ஒருவனாகச் சுற்றப்போகிறேன் என்பதே மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் என்று தெரியவில்லை, திடீரென்று முழிப்பு வந்தது. நேரம் 5 மணிதான். இனித் தூங்க முடியாது, மைத்துனரோ நல்ல நித்திரை. அக்குடும்பத்தில் ஆறுபேர். பாடசாலைக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என்று அனைவருமே காலை வேளையில் அவசரப்பட்டு ஆயத்தப்படுவார்கள். ஆகவே, அவர்களின் நேரத்தை வீணடிக்காது, சிரமம் கொடுக்காது எனது காலைக் கடன்களை முடிக்க எண்ணினேன். அதன்படி 5:30 மணிக்கு குளித்து முடித்து வீட்டின் வரவேற்பறையில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி நேற்றைய உதயனைப் படிக்கத் தொடங்கினேன். மைத்துனரின் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயமும் இருக்கிறது. அருகில் இருக்கும் சிறிய கோயிலில் இருந்து காலை 5:45 மணிக்கு மணியோசையும் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் சுப்ரபாதமும். அமைதியான அந்தக் காலை வேளையில், மனதிற்கு ஆறுதலைத் தரும் அந்த இசையயைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இருந்த மூன்று நான்கு நாட்களில் அதனை முற்றாக அனுபவித்தேன். இந்த அமைதியும், பரவசமும் எங்கும் இல்லை. ஏனையவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழத் தொடங்கினார்கள். மைத்துனரின் மனைவி சுடச் சுட கோப்பி கொடுத்தார். அருந்திவிட்டு மாமியோடும் மைத்துனரோடும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க காலையுணவு வந்தது. அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்ட விதம் அருமை. தமது வீட்டில் ஒருவனாக என்னையும் நடத்தியது பிடித்துக்கொண்டது. நிற்க, முதலாவது நாளில் நான் சந்தித்த முக்கியமான இன்னொருவரைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். நண்பனுடன் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும்போது, ராசா அண்ணையைப் (நண்பனின் மூத்த சகோதரர், எனக்கும் நெருங்கிய நண்பர்) பற்றிக் கேட்டேன். "இருக்கிறாரடா, பாக்கப்போறியோ?" என்று கேட்டான். "உங்களுக்கு நேரமொருந்தால்ப் போகலாம்" என்று நான் கூறவும், ராசா அண்ணையைப் பார்க்க ஆரியகுளத்திற்கு வாகனத்தை ஓட்டினான். ராசா அண்ணை சற்று மெலிந்து காணப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரிலும் சிறிய மாற்றங்கள். ஆனால் அதே புன்சிரிப்பும், அன்பான வார்த்தைகளும். சில நிமிடங்கள் ஆளையாள் சுகம் விசாரித்துக்கொண்டோம். "உங்களைப்பற்றிச் சிறிய கதையே எழுதினேன் அண்ணை" என்று நான் கூறியபோது, "என்னைப்பற்றி எழுத என்ன இருக்கிறது?" என்று கூறிச் சிரித்தார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். உரும்பிராயில் இருக்கும் சபரிமலை ஆலயத்திற்கு தனது வேலைத்தளத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனுடன் போகவிருந்தவரை நாம் நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். சுடச்சுட கோப்பியும் வடையும் கொடுத்தார். அதிகநேரம் அவரைக் காத்திருக்க வைக்க விரும்பவில்லை. "நான்கு நாட்கள் நிற்கிறேன், இன்னொருநாள் வந்து ஆறுதலாகப் பேசலாம்" என்று கிளம்பி வந்துவிட்டோம். சரி, பழையபடி இன்றைய நாளுக்கு வரலாம், ஒரு 7:30 - 8 மணியிருக்கும். நண்பன் தொலைபேசியில் வந்தான். "மச்சான், இண்டைக்கு என்ன பிளான் உனக்கு?" என்று கேட்டான். "ஒண்டுமில்லை, சில நண்பர்களைப் பார்க்க வேண்டும். உரும்பிராயில் எனது நண்பர் ஒருவரின் தகப்பனாரைச் சென்று சந்திக்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான்" என்று கூறினேன். "சரி, பின்ன வா அக்கராயனுக்குப் போவம். நானும் கமத்துக்குப் போய் ஒரு மாசமாகுது, ஒண்டு இரண்டு மாத்து உடுப்பும் கொண்டுவா, அங்க இண்டைக்கு இரவு நிண்டு வருவம்" என்று கூறினான். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. நண்பன் அடிக்கடி அக்கராயனில் உள்ள கமம் பற்றிப் பேசியிருக்கிறான். கொழும்பில் இருந்த காலங்களில் கமத்திலிருந்து வருவோரைக் கண்டு நான் பேசியிருக்கிறேன். ராசா அண்ணையும், நண்பனும் அக்கராயன் பற்றி அந்நாட்களில் பேசும்போது நானும் அங்கிருந்திருக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறேன். அந்த அக்கராயனைக் காணச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறதென்றால் எனது மகிழ்ச்சிபற்றிக் கேட்கவும் வேண்டுமா? இந்த அக்கராயன் பற்றிக் கூறவேண்டும். வன்னியில் இருக்கும் பச்சைப் பசேல் என்கிற விவசாயக் கிராமங்களில் ஒன்று அக்கராயன். 13 ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைக் கலைத்துவிட்டு இப்பகுதியை தமிழ் மன்னனான அக்கராயன் ராசன் ஆண்டுவந்ததால் இதனை அக்கராயன் என்று அழைக்கிறார்கள். 70 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் தங்கி நின்று விவசாயம் செய்வதற்கு பொதுமக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கமம் செய்வதற்கு 10 ஏக்கர்களும், வீடுகட்டி தோட்டம் செய்வதற்கு 5 ஏக்கர்களும் என்று மொத்தமாக 15 ஏக்கர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு வேலை நிமித்தம் சென்று வாழ்ந்தவர்கள் நாடுதிரும்பத் தொடங்கியிருந்தார்கள். அவ்வாறு மலேசியாவிலிருந்து நாடுதிரும்பிய நூறுபேருக்கும் அக்கராயனில் இந்த 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. அப்படி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பங்களில் ஒன்று எனது நண்பன் ஜெயரட்ணத்தின் குடும்பமும். அவர்கள் பிற்காலத்தில் இன்னும் பல நிலங்களைப் பணம் கொடுத்தும் வாங்கியிருந்தார்கள். அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே இப்பகுதியில் கிட்டத்தட்ட 90 ஏக்கர்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது. அக்கராயனில் ஜெயரட்ணத்தின் குடும்பத்தாரின் காணிகள் இருக்கும் பகுதியை ஊடறுத்து ஒரு அழகான சாலை செல்கிறது. வன்னியில் இருக்கும் மிகவும் ரம்மியமான சாலைகளில் முதன்மையானது அது. அப்பகுதிக்குச் சென்று அதனைக் காட்சிப்படுத்தாத யூடியூப் பதிவாளர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகவும் பிரபலமானது. அதற்கான காரணம் இந்தச் சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து பாதையினை மூடிக் குடைபோல காத்துநிற்கும் மரங்களும், சாலையின் ஒருபுறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தெரியும் பச்சைப் பசேல் என்ற வயற்காணிகளும் மறுபுறம் தெரியும் தென்னை மற்றும் கமுகு மரத் தோட்டங்களும்தான். இச்சாலையினைப் பலர் சொர்க்கத்தின் வாசற்படி என்று கூறவும் கேட்டிருக்கிறேன். இதில் விசேசம் என்னவென்றால், சாலையை அணைத்து வளர்ந்து நிற்கும் மரங்களை வைத்தது வேறு யாருமல்ல, அதே ராசா அண்ணைதான். சுமார் 600 மீட்டர்கள் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் இந்த மரங்களை அவர் நட்டிருக்கிறார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாட்டிற்கு அமைதி திரும்பிவிட்டதாக நினைத்து பலர் நற்காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். அப்படி இறங்கியவர்களில் ஒருவர் ராசா அண்ணை. அக்கராயனில் தமது கமம் இருந்த பகுதியூடாகச் செல்லும் சாலையின் இரு பக்கத்திலும் மரங்களை அவர் நட்டார். அவ்வாறு நட்டுக்கொண்டுவருகையில் இந்தியா ராணுவம் எம்மீதான தாக்குதலைத் தொடங்கியிருந்தது. இந்திய வல்லாதிக்கம் வன்னியை ஆக்கிரமித்த காலத்திலும் ராசா அண்ணையின் மர நடுகை தொடர்ந்து நடந்துவந்தது. அப்படியான‌ ஒரு நாளில் ராசா அண்ணையை இந்திய ராணுவம் தாக்கியது. புலிகள்மீதான ஆத்திரம் வீதியில் மரம் நட்டவர் மீது பாய்ந்தது. ஆனால், அவர் அன்று செய்த இந்த நற்காரியத்தின் பலனை இன்று அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு வருவோரும் அனுபவிக்கிறார்கள். தனது நோக்கம் கனகபுரத்திலிருந்து அக்கராயன் முழுவதற்குமான வீதியின் இரு புறத்திலும் மரங்களை நடுவதுதான் என்று அண்மையில் கூறியிருந்தார். அவரது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  15. முதுகில் குத்துதலில் வலி வலியது. பாவம் அந்த மக்கள்.
  16. அருமை. தொடருங்கள் ரகு. முடிந்தால் படங்களை இணையுங்கள்.
  17. தாயக நினைவுகளை இரைமீட்க்கும் போது அழகான இசை போல மனம் ரசிக்கும் .இளைஞ்சன் போல ஒரு உத்வேகம் வரும் கூடவே மெல்லிய சோகமும் இழந்த்தை எண்ணி ஏக்கமும் வரும். அழகாக கோர்வையாக கதை நகர்கிறது. பகிர்வுக்கு நன்றி தொடருங்கள். கூடவே பயணிக்கிறோம்.
  18. தொடருங்கோ அண்ணை
  19. இது மிக நல்லதொரு வரவேற்கத்தக்க திட்டமும் ஆரம்பமும். பேருந்து சங்கத்தின் சொட்டை காரணமும், எதிர்ப்பும் கண்டிக்கத்தக்கது.
  20. சாதாரண வீடு மாதிரி 3 மாடி வீட்டினை கட்டியுள்ளார்கள் . சும்மா அத்திவாரம்(Piling இல்லை ) போட்டுள்ளார்கள் . அதே நேரம் தூண்களுக்கு(Column ) இரும்பு கம்பி(Reinforcement ) பாவிக்கவில்லை .
  21. அதுசரி, கட்டுரையின் இறுதியில் கூறப்பட்ட விடயம் தொடர்பாக முந்தநாள் ஜேர்மனியில் நடைபெற்ற போராட்ட ஊர்வலங்கள் பற்றி ஜேர்மன்காரர் வாய் திறக்கவில்லை. 😀
  22. பயணக் கதை நன்றாக தொடர்கிறது.... வாழ்த்துக்கள்
  23. தனி நபர் தாக்குதல் இல்லை. நீங்கள் அவர்களிடம் தஞ்சம் அடைந்து கொண்டு அவர்களை பற்றி விமர்சிப்பதைத்தான் எழுதினேன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ண கூடாது. இன்றும்கூட மத்திய கிழக்குநாடுகளில் மேற்கத்திய நடடவர் வாழ்கிறார்கள். அரபுக்கள் யாரும் அவர்களை பின்பற்றுவதில்லை. ஆனால் அவர்கள் மேட்கு நாடுகளுக்கு சென்றால் அரபிகள் என்று சொல்ல முடியாது. உள்ளத்திலுள்ளது எதுவோ அதுதான் வெளிப்படும். யாரும் பலவந்த படுத்த தேவையில்லை. 😜 இதுதான் அவர்களின் இரட்டை வேடம். அனால் இதே பெண்ணை தனியாக விடடாள் முஸ்லீம் என்று அடையாளம் காண முடியாது. இது எல்லாம் மாய்மாலம்.
  24. இவ்வளவு இருக்க பற்றி மாலைதீவில் வைத்திய சாலைகள் கட்டி, பாதுகாப்பு வழங்கி, இன்னும் சொல்லை முடியாத அளவு அபிவிருத்திகளை செய்த இந்தியாவையே தள்ளி விடுவார்களாக இருந்தால் இலங்கை இந்தியாவை தள்ளிவிட அதிக காலம் செல்லாது. அரசியல் நிலைமைகள் அப்படிதான் மாறிக்கொண்டு போகின்றது. இப்போது சீனா ஜேவிபி இனருக்கு ஆதரவு வழங்கி வளர்த்து வருவதை உங்களில் எதனை பேருக்கு தெரியுமோ தெரியாது. இப்போது இந்தியா முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகில் திருப்பதி வெங்கடாச்சல (Copy) கோவில் கட்டிட போகிறார்கள். இப்போதே இங்கு மக்கள் குழம்பி விடடார்கள். இது இன்னும் சீனாவுக்கு சாதகமாக போகின்றது. கட்சி அவரை நீக்கிய பின்னரும் அவரது கருத்துக்கு மற்றவர்களின், மற்றைய அரசியல் கட்சிகளின் கருத்தைவிட அதிக பெறுமதி இருக்கும். இந்தியாவை தவிர மற்றைய நாடுகளை , இலங்கை அரசை அணுகுவது மிகவும் இலகு. அது நிச்சயம்.
  25. இந்தியாவில் அயோத்தியில் புதிய இராமர் கோவிலில் சங்கிகள் திரண்டிருக்க திறப்பு விழா கோலாலமாக நடந்து கொண்டிருக்கிறது அதே நேரத்தில் நம்ம இராவணன் யாழ் ஆகாய பரப்பில் அவசரமாக எங்கோ விரைவாக சென்று கொண்டிருப்பதை பலர் கண்டதாக யாழிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன Sinnakuddy Mithu (நன்றி)
  26. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நெருக்கடியான சூழலில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவருக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. அனைவரையும் இணைத்துப் பயணிக்கத் துணிய வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த தலைமையாக இருக்க முடியும். தமிழ்த் தேசிய அரசியலில் உதிரிகளாக நின்று எதையும் அடையமுடியாது என்பதைப் புரிந்து கொண்டு புதிய தலைவர் செயற்பட்டால் மட்டுமே தமிழருக்கு நன்மை.
  27. புலி எதிர்ப்பு 🤔 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை சொல்கின்றீர்களா
  28. தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. Posted on January 22, 2024 by சமர்வீரன் 112 0 தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. – குறியீடு (kuriyeedu.com)
  29. காலேல 12 இடியப்பம், 11 மணிக்கு tea வடை, மத்தியானம் மலை மாதிரி சோறு, இரண்டு மணிக்கு வெயில் சூட்டுக்கு fanta சோடா. பின்னரம் மிக்ஸ்ர் கொண்டல் கடலை and Tea. இரவைக்கு beer with கொத்து ரொட்டி இப்பிடி சாப்பிட்டுகொண்டு சனம் 35 வயசுக்கு மேல் வாழுதே.. அதே பெரிய விஷயம்
  30. வணக்கம் @Cruso வின் சொற் பிரயோகங்கள் தவறு தான், உணர்ச்சி வசப்படும் பொழுது வார்த்தைகளை அவதானமாகக் கையாள வேண்டும். ஆனால் நான் குறிப்பாக உங்களுக்கு @MEERA பதில் அளித்ததன் நோக்கம், பெரும்பான்மை சைவர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் அச்ச உணர்வை விளங்கி அவர்களை விட கொஞ்சம் பக்குவமாக இருந்தல் வேண்டும் என்பதால்த் தான். ( ஜனநாயக சமூக அமைப்பில் பெரும்பான்மையோரிடம் அது வேண்டப்படும் ).இதன் பொருள் சிறு பான்மை கிறிஸ்தவர்கள் நினைத்தபடி வாள் சுழற்றலாம் என்பதல்ல. 2010-2011 வாக்கில் நான் ஒரு முறை தற்போதைய இந்திய மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களை இன்னொருவர் சகிதம் சந்திக்கக் கிடைத்தது. அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி. கொமான்வெல்த் ஊழல், 2 ஜி ஊழல் என்று காங்கிரஸ் ஆட்சிக்கு போதாத காலம். நிர்மலா இரண்டோரு வருடங்களுக்கு முன் தான் பிஜேபி இல் இணைந்து இருந்தார்.அப்பொழுது அவர் BJP இன் உத்தியோக பூர்வ ஊடகப் பேச்சாளர். (சந்திப்பின் நோக்கம் அது எவ்வாறு அமைந்தது போன்ற விபரங்களுக்குள் போக விரும்பவில்லை) அவர் அப்போது பகிர்ந்து கொண்ட ஒரு விஷ(ய)த்தை இங்க சொல்வது சாலப் பொருத்தம். ஸ்ரீலங்கன் ஹிந்துத் தமிழர்கள் தமது தலைவர்களாக ஹிந்துத் தலைவர்களையே தெரிவு செய்ய வேண்டும் எனவும், western Agenda வை ஸ்ரீலங்காவில் நடைமுறைப் படுத்த விளையும் கிறிஸ்தவ தலைவர்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சில காலத்துக்குப் பின்னர் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் ஒரு செவ்வியில் ஏன் யுத்தம் முடிந்து இவ்வளவு காலம் போன பின்பும் இன்னமும் இந்திய அரசு 13ம் அரசியல் அமைப்புச் சட்டத்தை அமுல் படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை தமிழர்களின் முடிவெடுக்கும் இடத்தில் கிறிஸ்தவர் ஒருவர் இருக்கும் வரைக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்றும், கிறிஸ்தவ தமிழர்களுடன் பேசுவதில்லை என்பதே மத்திய அரசின் நிலை என்றும் பட்டவர்த்தனமாக தெரிவித்தார். அர்ஜுன் சம்பத் ஒரு ஜோக்கர் என்ற போதிலும் அவரின் தகவலை நாம் கடந்து சென்று விட முடியாது. இப்பொழுது சீனிதம்பி ஜோகேஸ்வரன், சச்சிதானந்தம், போன்றவர்கள் முலம் இந்தியா நடப்பிக்கும் அரசியலைக் கவனியுங்கள், ரணில் போன்ற மிதவாத சிங்களர்வர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று துடிக்கும் இந்தியாவைக் கவனியுங்கள். மைத்திரி ரணில் அரசுடன் தமிழ் அரசுக் கட்சி நடத்திய பேச்சு வார்த்தை ஓரளவு முன்னேற்றம் அடைந்த பொழுது யார் ஈஸ்டர் குண்டு வெடிப்பை நாடாத்தி குழப்பதை ஏற்படுத்தி இருக்க முடியும் என ஊகியுங்கள் இரண்டு வருடம் முன்பாக எதற்க்காக இங்கிலாந்து திடீர் என்று இலங்கையில் ஒரு குண்டு வெடிப்பு நடக்கலாம் என்று அறிவித்தது என்று யோசியுங்கள் விக்னேஸ்வரன் எதற்காக அர்ஜுன மூர்த்தியை சந்தித்தார் என்று கேளுங்கள் இப்பொழுது சுமத்திரனை ஓரம் கட்ட காட்டப்படும் முனைப்பினைப் பாருங்கள் எனக்கு சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர் என்பது பிரச்னை இல்லை, ஆனால் அவர் மிதவாதி, அதி தீவிரத் தன்மை அற்றவர், இப்போது இருக்கும் தமிழர் நிலையை ஒரு படியேனும் மேலே தூக்கி விட வேண்டும் என்று யோசிப்பதால் அவர் இப்போதைக்கு அடைய முடியாத் தமிழ் கனவைக் காண்பதில்லை.முக்கியமாக இந்தியாவிடம் இருந்து தூர விலகி இலங்கைத் தமிழர் இருக்க வேண்டும் என்று விரும்பவர் ( அப்படி நினைக்க அவரின் கிறிஸ்தவ மன நிலையும் ஒரு காரணம் எனினும் அந்த நிலைப்பாடு எல்லாத் தமிழர்க்கும் பலன் அளிக்கும் ) அதனால் நாம் இலங்கை தமிழர் அரசியலுக்குள் இந்தியா புகுந்து எப்படி அரசியல் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்க்க இந்தியாவால் ஆட்டுவிக்கப் படாதவராக தமிழ் அரசுக் கட்சி தலைவர் இருத்தல் வேண்டும். அவர் எந்த மதம் என்பது பிரச்னை ஆக இருக்கக்கூடாது. இல்லையேல் எமது நிலைமை ஆப்பிழுத்த குரங்கின் நிலை தான். ஆனால் நிலைமை நாம் எதிர் பார்ப்பது போல் அமையாமல் திரும்பத் திரும்ப தமிழர் அரசியல் இந்தியாவின் கால்களையே சுற்றிக்கொண்டு இருக்கும் என்றால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவ இந்து சண்டை வந்து நாம் மேலும் சீழ் பிடித்த இன்னும் septic ஆகி விட்ட இனமாக போய் விடுவோம். இங்கே யாழில் சிலர் கதைக்கும் கதைகள் நாம் பயப்படும் படி காரியங்கள் நடைபெறுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
  31. "திருந்தாத மனிதன் இருந்தென்ன லாபம். "
  32. இன மானம் காத்த அரணே போற்றி! பெண் மாண்பு காத்த மாண்பாளனே போற்றி! பன்முகத்தன்மை கொண்ட பன்முகனே போற்றி! ஆரிய குடி கெடுத்த தமிழ் மகனே போற்றி போற்றி!! போற்றி போற்றி!!
  33. சுமந்திரனின், எல்லா ராசதந்திரமும்... வீணாய் போய் விட்டதே. 😂
  34. வாழ்த்துக்கள் சிறிதரன்...இருவரும் அரசியல் தெரிந்த மேதைகள் ... யார் ஊடக பேச்சாளர்? சம்பந்தன் சுமத்திரனை உள்வாங்கி தமிழ்தேசியத்தை ஆட்டம் காண வைத்தது போல.... சிறிதரன் நம்பிக்கையான உண்மையான தமிழ் தேசிய பற்று உள்ள இளைஞர்களை உள்வாங்கி தனக்கு அடுத்த கட்ட செயல் வீரர்களை உருவாக்க வேண்டும்... இன்றைய இக்கட்டான் நேரத்தில் தமிழ் தேசியத்தை நீக்க பல கோணங்களிலிருந்து செயல் படுகின்றனர். சர்வதேசமும் தமிழ் தேசிய நீக்கத்தை விரும்புகிறது .இந்தியா ஒருபடி மேலே சென்று இந்து அடையாள அரசியலை திணிக்க முயல்கிறது..இவை யாவற்றையும் சுளிச்சு வெட்டி ஒடி தமிழ் தேசியத்தை தக்க வைப்பார்களா இவர்கள்?
  35. உலக கோப்பை நடைபெற்றபோதே தமது வசதிக்கு ஏற்றபடி தமக்கு அனுகூலமாக அமையும்படி பல ஆட்டங்களில் புகுந்து விளையாடினார்கள் என கருத்து கூறப்பட்டது. என்ன செய்வது இவர்கள் டிசைன் அப்படி.
  36. பிரதான போட்டியாளர்களில் வெற்றி குறித்து சந்தேகம் டெைந்துள்ள வேட்பாளரின் ஆதரவாளரால் தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு எழுதப்பட்ட மறைமுகமான மடலாகவே கருதவேண்டியுள்ளது.தமிழர்களின் அரசியல் தலைவிதியை தமிழரசுக்கட்சிதான் வென்றெடுக்கும் என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டு இந்த மடல் எழுதப்பட்டுள்ளது.தமிழரசுக்கட்டியின் செயலற்ற தன்மையால் அந்தக்கட்சி அரசியல் அரங்கிலிருந்து கிடப்பில் போடப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது கூடதமிழரசுக்கட்சியோ அதன் சின்னமோ உள்வாங்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி உதயசூரியன் சின்னத்தை முடக்கிய காரணத்தினாலேயே தமழரசுக்கட்சியையும் அதன் சின்னத்தையும் தூசுதட்டி 4கட்சிகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு பாவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் மகூட்டமைப்பின் தலைவராக தமிழசுக் கட்சியின் தலைவரே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான சம்பந்தர் நியமிக்கப்பட்டார்..2009 வரை அடக்கி வாசித்த தமிழசுக்கட்சி 2009 இன் பின்னர் பிற கட்சிகளை ஒதுக்க ஆரம்பித்தது.அதன் விளைவே தமித்தேசியக் கூட்டமைப்பின் உடைவும் தமிழரசுக்கட்சியின் சிதைவும் அதனாலேயே எற்பட்டடு. தமிழசுக்கட்சிதான் தமிழர்களுக்கு உரிமையைப் பெற்றுத்தரும் என்று மாயையை விட்டு அனைத்துத் தமிழ்கட்சிகளோடும் இணக்கப்பாட்டை ஏற்படுத்ததக் கூடிய தலமையே தமிழலசுக்கட்சிக்குத்தேவை.
  37. இதை நான் மிகப் பெரிய பகிடி என்று சொன்னால் இந்தத் திரியும் கிழித்துத் தொங்க விடப்படும். 😂 உள்ளூரில் வெள்ளைச் சீனிக்கு மாற்றீடாக பனஞ்சீனியைப் பாவிக்கலாம். அதற்காகப் புரளிகளைப் பரப்பக் கூடாது.
  38. பாஷையூரிலிருந்து நாம் படித்த பாடசாலையான பத்திரிசியார் கல்லூரி வழியால் சென்றோம். பழைய நினைவுகள் வந்து போயின. நான் படிக்கும் காலத்தில் இருந்த உயர் வகுப்புக்கள் இருந்த பகுதி முற்றாக காணாமற்போயிருந்தது. பாடசாலையின் மத்திய வகுப்புக்கள் இருந்த பகுதிக்கு அதனை மாற்றியிருப்பதாக நண்பன் சொன்னான். ஒரு சில கட்டடங்களைத்தவிர 80 களில் இருந்ததுபோன்றே அப்பகுதி தெரிந்தது. அப்படியே சேமக்காலை வீதிவழியாக கடற்கரை வீதிக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதி நோக்கிச் சென்றோம். அப்பகுதியில் பாரிய மாற்றம் ஏதும் இல்லை. சின்னக்கடைக்கும் பண்ணைப்பகுதிக்கும் இடையில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. சிறியதுதான், ஆனாலும் அவர்களின் பிரசன்னம் நன்றாகவே தெரிந்தது. அப்படியே புதிதாகக் கட்டப்பட்டுவரும் யாழ்ப்பாண மாநகரசபைக் கட்டத்தையும் பார்த்துக்கொண்டே பண்ணைப்பகுதிக்கு வந்தோம். சுற்றுலாத்தளம் போல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மக்கள் நிறைந்தும் காணப்பட்டது. கோட்டையின் பின்பகுதியில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை கொண்டுவந்த பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்க, அதில் வந்தவர்கள் அப்பகுதியில் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கொத்துரொட்டிக் கடைகள், சிற்றுண்டிக் கடைகள், ஐஸ் கிறீம் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட் கடைகள் என்று அப்பகுதியெங்கும் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களில் தமிழர்களைவிடவும் சிங்களவர்களே அதிகமாகக் காணப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தைச் சென்று பார்ப்பதென்பது அவர்களைப்பொறுத்தவரையில் விருப்பமான ஒரு பொழுதுபோக்கு என்றே நினைக்கிறேன். நான் யாழ்ப்பாணம் வந்த ரயிலில்க் கூட பெருமளவு சிங்களவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். பலவிடங்களில் இவர்களின் பிரசன்னம் இருந்தது. பண்ணையிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பாதையில் கடற்படை முகாமிற்கு சற்று முன்னர் வாகனத்தை நிறுத்திக்கொண்டோம். இறங்கி, இருபக்கமும் தெரிந்த இயற்கை அழகை மாலைச் சூரியன் மங்கும் வேளையில் படமெடுத்தேன். ரம்மியமாகவிருந்தது. இதேபகுதியை பலமுறை யூடியூப் தளத்தில் பலர் பதிவேற்றியிருக்கிறார்கள். மிகவும் அழகான‌ பகுதி. என்னைப்போலவே வேறு சிலரும் அப்பகுதியில் நின்று படமெடுப்பது தெரிந்தது. அன்று கார்த்திகை விளக்கீடு. யாழ்நகரெங்கும் வீடுகளின் முன்னால் விளக்குகள் ஏற்றப்பட்டு மிகவும் அழகாகத் தெரிந்தது. நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அவனது வீட்டிலும் பிள்ளைகள் விளக்கீடு வைத்திருந்தார்கள். வீட்டின் முன்னால், முற்றத்தில், மதிலின் நீளத்திற்கு என்று பல விளக்குகள். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பார்த்ததற்குப் பின்னர் இன்றுதான் விளக்கீட்டினை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஊரை விட்டு எப்போதுமே நீங்கியதில்லை என்கிற உணர்வு ஒருகணம் வந்துபோனது. ஊரில் வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.கைலாசபிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் அவனது வீடு. கோயிலின் சுற்றாடல் என்றால் கேட்கவும் வேண்டுமா? அப்பகுதி விளக்கீட்டில் தெய்வீகமாகக் காட்சியளித்தது. பின்னர் அவனது பிள்ளையை வகுப்பிலிருந்து கூட்டிவர கட்டப்பிராய்ப் பகுதிக்குச் சென்றோம். போகும்போது நல்லூர்க் கோயிலூடாக செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. என்னைப்பொறுத்தவரை நல்லூரே யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று எண்ணுவதுண்டு. கோயிலின் கம்பீரமும், அழகும் என்னைக் கவர்ந்தவை. அதனைப் பார்க்கும்போதே மனதிற்கும் இனம்புரியாத சந்தோசமும், பெருமையும் ஒருங்கே வந்துபோகும். இரவு விளக்கு வெளிச்சங்கள் கோயிலை இன்னும் அழகுபடுத்த, காரில் பயணித்தவாறே சில படங்களையெடுத்தேன். நாளை மாவீரர் நாள். நல்லூர் திலீபன் நினைவிடத்தில் பாரிய பந்தல்கள் இடப்பட்டு மக்கள் அப்பகுதியில் கூட்டமாக நின்று மாவீரர் நாள் ஒழுங்குகளைச் செய்துகொண்டிருப்பது தெரிந்தது. பந்தலின் முன்னால் நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள். இளைஞர்கள் விருப்புடன் வந்து அப்பகுதியில் பணிகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்கும்போது மக்களின் மனோநிலை எப்படியிருக்கிறதென்பது புரிந்தது. கட்டப்பிராயில் பருத்தித்துறை வீதியிலேயே வகுப்பு நடைபெற்றது. வாகனத்தை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த இரவு வேளையிலும் பருத்தித்துறை வீதி மக்களும் வாகனங்களும் நிறைந்து காணப்பட்டது. குறுகலான வீதி, ஆனாலும் இருபுறமும் செல்லும் வாகனங்கள் வேகத்தைக் குறைக்காது, இலாவகமாக வீதியின் இடதுபக்கமும், வலதுபக்கமுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கிடையே மோட்டார்சைக்கிள்கள், முச்சக்க வண்டிகள், நடந்துசெல்லும் மனிதர்கள் என்று ஒரே கலேபரம். நண்பனின் பிள்ளை வகுப்பு முடிந்து வந்ததும், அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வீடு வந்தோம்.
  39. மாலை 5:30 இலிருந்து 6 மணிக்குள் பாஷையூரிலிருக்கும் ஓய்வுபெற்ற கன்னியாஸ்த்திரிகளைப் பராமரிக்கும் இல்லத்திற்குச் சென்றோம். பாஷையூர் அந்தோணியார் கோயிலில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில் உயர்ந்த மதில்களாலும் தென்னை மரங்களாலும் சூழப்பட்ட கட்டடம் அது. வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. திறக்கத் தெரியவில்லை. குமுழியைத் திருகித் திருகிப் பார்க்கிறேன், முடியவில்லை. நண்பன் காரில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, "கூப்பிட்டுப் பாரடா" என்று சொல்லவும், கொஞ்சம் சத்தமாக கேட்டைத் தட்டினேன். உள்ளிருந்து பெண்ணொருவர் வந்து திறந்துவிட்டார். அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் குமிழையையே இவ்வளவு நேரமும் திருகியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். "நீங்கள் போட்டு வாங்கோ, நான் ஆட்டொ பிடித்து போய்க்கொள்கிறேன்" என்று நண்பனைப் பார்த்துக் கூறினேன். "இல்லை, நீ முடிச்சுக்கொண்டுவா. நான் நிக்கிறன். இண்டைக்கு உன்னோட யாழ்ப்பாணம் சுத்துறதுதான் வேலை" என்று அன்புடன் கட்டளையிட்டான். சரியென்று கூறிவிட்டு கட்டடத்தினை நோக்கி நடந்தேன். உள்ளே சென்றதும் என்னை அமரச் சொல்லிட்டு யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். சித்தியின் பெயரைச் சொன்னேன், சிட்னியில் இருந்து வருகிறேன் என்றும் கூறினேன். இருங்கள், வந்துவிடுவா என்று கூறப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் போயிருக்கும், சித்தி வந்தார். சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். நான் அவரை ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். உருவமே மாறி, நலிந்து, தோல் சுருங்கி, மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார். பேசுவதே அவருக்குக் கடிணமாக இருந்தது. சிறிதுநேரம் அவரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, "எப்படி அன்ரா இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். சிறிய புன்முறுவல், "83 வயதில் இருக்கும் ஒருவர் எந்தளவு சுகநலத்துடன் இருக்கமுடியுமோ, அந்தளவு சுக நலத்துடன் இருக்கிறேன்" என்று சொன்னார். "அப்படித் தெரியவில்லையே?" என்று கேட்டேன். அதற்கும் ஒரு புமுறுவல். பல விடயங்களை அவர் மறந்திருந்தார். அவர் தொடர்பாக நான் கூறிய விடயங்களை அதிசயத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். "அப்படியெல்லாம் நடந்ததா?" என்று அடிக்கடி கேட்டார். எனது அன்னை, தம்பி, அக்கா என்று நெருங்கிய உறவுகள் தொடர்பாக அவருக்கு நினைவு இருக்கிறது. ஏனையவர்கள் தொடர்பாக அவர் அதிகம் பேசவில்லை. ஆனால், நான் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே எனது குடும்பம் பற்றி கேட்பார், ஒரே பதிலைச் சொல்லுவேன். ஒருசில நிமிடங்களின் பின்னர் அதே கேள்விகள், நானும் சலிக்காமல் அதே பதில்களைக் கூறுவேன். நான் திருமணம் முடித்ததைக் கூட அவர் மறந்திருந்தார். அடிக்கடி, "முடிச்சிட்டீரா, எத்தனை பிள்ளைகள்?" இதுதான் அவர் அடிக்கடி கேட்ட கேள்விகள். சிறிது நேரம் பேசிவிட்டு அமைதியானார். "என்ன, பேசாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை, நீர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், பல யோசனைகள்" என்று கூறினார். மீண்டும் அதே மெளனம். அவர் வலியினால் அவஸ்த்தைப்படுவது தெரிந்தது. ஒரு 35 - 40 நிமிடங்கள் வரை பேசியிருப்போம். அதன்பின்னர் அவரால் தொடர முடியவில்லை. "கஸ்ட்டமாக இருக்கிறதோ, அறைக்குத் திரும்பப் போகிறீர்களோ?" என்று கேட்டேன். "ஓம், கனநேரம் இதில இருக்க ஏலாது, நாரி நோகுது" என்று சொன்னார். கொண்டுவந்த சில பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரது சக்கர நாற்காலியை மெது மெதுவாக உருட்டிக் கொண்டு உள்ளேயிருக்கும் மண்டபம் போன்ற பகுதிவரை செல்ல‌, அங்கிருந்த பெண்ணொருவர், "இனி விடுங்கோ அண்ணா, நாங்கள் அவவைக் கூட்டிச் செல்கிறோம்" என்று சொன்னார். நான் சித்தியிடம் விடைபெற்றுத் திரும்ப, அவரிடம் யாரோ, "ஆரது சிஸ்ட்டர்?" என்று கேட்பதும், "அது என் அக்காவின் மகன், அவுஸ்த்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறான்" என்று அவர் கூறுவதும் கேட்டது. வாயிலில் காரில் பொறுமையுடன்ன் காத்திருக்கும் நண்பனை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  40. அடுத்த தேர்தலில் மறக்காமல் வந்து வாக்குப் போட்டுவிட்டு போங்கோ.
  41. அம்பிகா அக்கா தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருக்கின்றாரா என்று தெரியவில்லை! அவர் மனிதாபிமானப் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபடுகின்றார். இப்போது சிறிலங்காவின் யுக்திய நடவடிக்கைக்கு எதிராக தினமும் X (ருவிற்றரில்) பொங்கிக்கொண்டு இருக்கின்றார்.! அம்பிகா அக்கா தமிழரசுக் கட்சியின் தலைவராக வரும்போது நானும் வேலையில் இருந்து நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு தமிழர் பகுதிகளில் போஸ்ரர் ஒட்டுகின்ற வேலையாவது செய்வேன்😃
  42. புகையிரதம் முழுவதும் சிங்களவர்கள். ஓரிரு தமிழர்கள். பேச்சிற்குக் கூட தமிழர் ஒருவரை அருகில் காண முடியவில்லை. எப்போதாவது இருந்துவிட்டு தமிழில் பேசுவது கேட்கும், அதுவும் சில சொற்கள்தான். வெளிநாட்டிலிருந்து வரும் தமிழர்களைக் கூடக் காணவில்லை. ஆனால், சிங்களவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். பல குடும்பங்கள் யாழ்ப்பாணம் செல்வது தெரிந்தது. யாழ்ப்பாணாத்தில் பார்க்கப்போகும் இடங்கள், இதுவரை எத்தனை முறை யாழ்ப்பாணம் வந்தாயிற்று என்கிற விபரங்கள் அவர்களிடையே பகிரப்பட்டன. அடிக்கடி வந்திருப்பார்கள் போலும். சிலர் இராணுவத்தினரின் குடும்பங்களாக இருக்கலாம். சுமார் 3200 ரூபாய்கள் கொடுத்து குடும்பங்களாக அடிக்கடி வந்துபோவதென்பது சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தவரை சற்றுக் கடிணமாகவே இருக்கலாம். ஆனால், நீங்கள் இராணுவத்தினரின் குடும்பத்தவர் என்றால் ஒருவருடத்திற்கு குறைந்தது இருமுறையாவது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு இலவசமாக வரமுடியுமாம். இடையிடையே வடை, பழங்கள், தேநீர் என்று விற்றார்கள். பலருக்கு தமிழும் தெரிந்திருந்தது. ரயிலில் இருக்கும் சிற்றுண்டிச் சாலையாக இருக்கவேண்டும், ஊதா நிறத்தில் மேற்சட்டையணிந்து காலையுணவும், மதிய உணவும் விற்று வந்தார்கள். இரு முட்டை ரோல்களை வாங்கி உண்டேன், பசிக்குப் பரவாயில்லை போல இருந்தது. புளியங்குளம் புகையிரத நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரை மறித்து வைத்திருந்தார்கள். பின்னால் வரும் இன்டர்சிட்டி புகையிரதத்திற்கு இடம் கொடுக்க வேண்டுமாம். ஒற்றைத் தண்டவாளத்தில் யாழ்ப்பாணம் செல்வதால் வரும் பிரச்சினை. மைத்துனனுக்கும் நண்பனுக்கு மாறி மாறி தொலைபேசி அழைப்புக்களை எடுத்தேன். நண்பனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மைத்துனனுடன் பேசி ரயில் 3 மணிக்குத்தான் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என்று கூறினேன், "வாங்கோ, மகனை அனுப்பி வைக்கிறன்" என்று மைத்துனன் கூறினார். வன்னியூடாக ரயில் செல்லும்போது யன்னல்வழியாக நிலங்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன். இனந்தெரியாத வலியும் பெருமூச்சூம் என்னை ஆட்கொண்டது. இங்கே அவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்கள் கால்பட்ட தடங்களும், அவர்கள் குருதிசிந்திப் போரிட்ட இடங்களும் அவர்களின்றி அநாதரவாகக் கிடப்பது போலத் தோன்றியது. இத்தனை இடங்களை மீட்க எத்தனை ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்தோம், இன்று எல்லாமே வீணாகிப்போய், அநாதைகளாக நாமும் எமது தேசமும் இருப்பது கண்டு வேதனைப்பட்டேன். இருபுறமும் அவ்வப்போது தெரிந்துமறைந்த ஆக்கிரமிப்பின் அடையாளங்களான படைமுகாம்களும், தலைமையகங்களும், வீதியோரங்களில் நேர்த்தியாக மெழுகப்பட்டு, எமது தேசத்தை ஆக்கிரமித்த களிப்பில் கம்பீரமாக வர்ணப் பூச்சில் காணப்பட்டன. ஆனையிறவின் பிற்பகுதியூடாகச் செல்லும்போது தெரிந்த சிங்கள பெளத்த தேசம் எம்மீது கொண்ட வெற்றியின் அடையாளமான சிங்கள பெளத்த இராணுவ வீரன் ஒருவனின் சிலையும், அதனைப் பார்வையிடவென இன்றும் வந்துசெல்லும் கூட்டம் கூட்டமான சிங்களவர்களும், அப்பகுதியில் இராணுவம் அமைத்திருக்கும் உணவு விடுதியும் கண்ணில்ப் பட்டது. விரக்தியும், வெறுப்பும், வேதனையும் ஒருங்கே பற்றிக்கொள்ள முகத்தினை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஒருவாறு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது புகையிரதம். இறுதிப்பெட்டிக்கு முன்னால் உள்ள பெட்டி எனது. பொதிகளை இறக்கிக்கொண்டு இறங்கினேன். இனம்புரியாத சந்தோஷம், எங்கள் ஊர் என்று ஆனந்தம். முன்னால் மெதுமெதுவாகச் செல்லும் பயணிகளைத் தவிர்த்து, கடந்து, வாயிலில் நின்ற ஊழியரிடம் பயணச் சீட்டைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன். முன்னால் யாழ்ப்பாணம் சிரித்துக்கொண்டு நின்றது. மூன்று மூன்றரை மணியிருக்கும், வெய்யில் தகதகத்துக்கொண்டிருந்தது. புகையிரத நிலையம் முன்னால் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் வந்திறங்குவோரை ஏற்றிச் செல்லக் காத்திருக்கின்றன. என்னைக் கூட்டிச்செல்ல மைதுனரின் மகன் வருவான் என்று நானும் காத்திருக்கத் தொடங்கினேன். நிலையத்தின் முன்னால் உள்ள வட்ட வடிவ மலர்த்தோட்டத்தின் வேலியின் மேல் சாய்ந்துகொண்டு யாழ்ப்பாணத்திற்கு வரும் பயணிகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். நண்பன் அழைப்பில் வந்தான். "ம‌ச்சான், சொறியடா வர ஏலாமல்க் கிடக்கு, இண்டைக்கு மட்டும் உன்ர மச்சானின்ர வீட்டில தங்கு, நாளையிலிருந்து என்ர பொறுப்பு" என்று கெஞ்சுவது போலக் கேட்டான். "இல்லை ஜெயரட்ணம், நான் மைத்துனரின் வீட்டில் தங்குகிறேன், அவர்களுக்கும் சந்தோசம், நீங்கள் கரைச்சல்ப்பட வேண்டாம்" என்று கூறினேன். "இல்லையில்லை, நாளையில இருந்து என்ர பொறுப்பு" என்று கூறிவிட்டுத் துண்டித்தான். சில நிமிடங்கள் சென்றிருக்கும், ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன், ஸ்கூட்டர் ஒன்றில் அமர்ந்தபடி, கையில் இன்னொரு ஹெல்மெட்டுடன் என்னைப் பார்த்துக்கொண்டு, வாயில் சிறிய புன்னகையுடன் நிற்பது தெரிந்தது. அருகில்ப் போய், "நீங்கள் சுவியின்ர மகனோ?" என்று கேட்டேன். "ஓமோம்" என்று சிரித்துக்கொண்டே தலையசைத்தான் மைத்துனரின் இளைய மகன். "சரி, வாங்கோ போவம்" என்று அவன் கூறவும், பைகளில் ஒன்றை ஸ்கூட்டரின் அடிப்பகுதியிலும் மற்றையதை எனது மடியிலும் வைத்துக்கொண்டு கன்னாதிட்டி வீதியில் இருக்கும் மைத்துனரின் வீட்டிற்குச் சென்றோம். போகும் வழியெல்லாம் இதயத்துடிப்பு அடங்க‌ மறுத்துவிட்டது. இந்த வாகன‌ நெரிசலுக்குள் எப்படித்தான் ஓட்டுகிறார்களோ என்று அதிசயத்துடன் பார்த்துக்கொண்டு வந்தேன். வீட்டையடைந்ததும் முதலாவதாக மாமியைச் சந்தித்தேன் (தகப்பனாரின் சிறிய தங்கை, சிறியவயதில் எங்களை பார்த்துக்கொண்டவர், அன்பானவர்). என்னைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு. அப்படியே அவர் முன்னால் கதிரையில் இருந்துகொண்டு நெடுநேரம் பேசினேன். பல விடயங்கள் இருந்தன பேசுவதற்கு. மைத்துனரின் மனைவி அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர். நான் வருவது தெரிந்து வேளைக்கு வேலையினை முடித்து வந்திருக்க வேண்டும். வீட்டில் சமைத்த உணவு பரிமாறப்பட்டது. அருமையான சுவை, நெடுங்காலத்திற்குப் பின் யாழ்ப்பாணத்தில் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட‌ திருப்தி. அவர்களுடன் ஓரிரு மணிநேரமாவது பேசிக்கொண்டிருந்திருப்பேன். நண்பன் மீண்டு தொலைபேசியில் வந்தான், "மச்சான், வாசலில நிக்கிறன், சொல்லிப்போட்டு வா, வெளியிலை போவம்" என்று கூறினான். எனது "சித்தியைப் போய்ப் பார்க்க முடியுமா?" என்று கேட்டேன். "அதுக்கென்ன, வா போவம்" என்று சொன்னான். உடனே வீட்டினுள் சென்று சித்திக்கென்று கொண்டுவந்த சில பொருட்களை அள்ளி ஒரு பையில் போட்டுக்கொண்டு கொழும்புத்துறை நோக்கிக் கிளம்பினோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.