Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87986
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    31932
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10205
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    20007
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/29/25 in all areas

  1. சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணத்தின் முழுமையான பாதிப்பு! 29 Nov, 2025 | 08:46 PM நிலவுகின்ற அசாதாரண வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதிப்புகள் குறிப்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 432 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் பகுதிகளில் சேதமடைந்துள்ளன. நான்கு பாதுகாப்பான இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 186 தங்க வைக்கப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 1664 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 27 குடும்பங்களை சேர்ந்த 92 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊர்க்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலனைப் பிரதேச செயலர் பிரிவில் 328 குடும்பங்களை சேர்ந்த 1035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 335 குடும்பங்களை சேர்ந்த 1085 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ஆறு பாதுகாப்பு மையங்களில் 66 குடும்பங்களை சேர்ந்த 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 14 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் அறுபது குடும்பங்களை சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 508 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 57 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 57 குடும்பங்களை சேர்ந்த 185 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 601 குடும்பங்களை சேர்ந்த 2042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும் ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களை சேர்ந்த 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒன்பது வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் எட்டு குடும்பங்களை சேர்ந்த 29 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 353 குடும்பங்களை சேர்ந்த 1104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 95 குடும்பங்களை சேர்ந்த 255 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231969
  2. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·proednsoSta0mufc51gmtai900h1m153h7cu2a0galmg306cf38at338 fgh · #கேவலமான #உண்மைகள் !!!!!! படித்தேன்!!!பகிர்ந்தேன்!!!! 1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!! 6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!! 8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!! படித்ததில் பிடித்தது:- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு கொடுங்க, உடை கொடுங்க.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க.. 6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 7. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை. 10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்.. இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்... 11.கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்.. 13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்.. 14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம். 15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க? 16. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்......!
  3. அது… பாட்டி இல்லை. அப்பா. 😂 பாட்டியை… போன கிழமை, பூனை பிடிச்சுக் கொண்டு போட்டுது. 🤣
  4. பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரணின் குழந்தைப் பருவ புகைப்படம் கட்டுரை தகவல் முகமது ஜுபைர் பிபிசி உருது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சோகம் நிரம்பிய இந்தக் கதை 17 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டார் ஜி10இல் உள்ள ஒரு சாலையில் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்தபோது, 10 வயது சிறுமியான கிரண் ஐஸ்கிரீம் தேடி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது கிரணுக்கு ஐஸ்கிரீம் கிடைத்துவிட்டது, ஆனால் அவரது பெற்றோரும், அவரது குழந்தைப் பருவமும், அவரிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கஸூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண். கராச்சியில் உள்ள எதீ மையத்தில், பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் இருந்து பிரிந்து, தனது வாழ்வின் பல கட்டங்களை அவர் கழித்துள்ளார். கிரணின் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் கண்டுபிடிக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. கிரணின் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும்கூட, அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்களோ என ஒரு கட்டத்தில் தோன்றியுள்ளது. ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு கிரண் பற்றிய தகவல் கிடைத்தபோது இந்த ஏமாற்றம் மகிழ்ச்சியாக மாறியது. கிரண் தனது பெற்றோரை சந்தித்தது எப்படி? கிரணின் தந்தை அப்துல் மஜீத் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் இந்த விஷயத்தை பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்களின் குடும்பத்துடன் தொடர்புடைய மூத்த நபரான அசாத் முனீர் இது குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கிரணின் மாமாதான் அசாத் முனீர். கஸூர் மாவட்டத்தில் உள்ள பாக்ரி கிராமத்தில் வசிக்கும் அசாத் முனீர் அந்தச் சம்பவம் குறித்து விவரித்தார். 17 ஆண்டுகளுக்கு முன்பு, கிரணுக்கு 10 வயது இருக்கும்போது, "அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி10 செக்டாரில் உள்ள என் சகோதரி, அதாவது அவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜி-10 பகுதி எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ளது, அங்குதான் அவர் ஐஸ்கிரீம் வாங்கச் சென்றார். இது 2008இல் நடந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது" என்று நினைவு கூர்ந்தார் அவர். "நீண்ட நேரமாகியும் கிரண் வீடு திரும்பாததால், அவரைத் தேடினோம், ஆனால் அவர் கிடைக்கவில்லை" என்கிறார் அசாத் முனீர். "அப்போது, கிரணை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் கிரண் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை." தான் ஐஸ்கிரீம் வாங்க வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், கனமழையில் வழி தவறிவிட்டதாகவும் கிரண் தெரிவித்தார். தனது வீட்டைத் தேடி நீண்ட நேரம் தெருக்களில் அலைந்ததாகவும், ஆனால் "வீட்டைக் கண்டுபிடிக்க முடியாததால், யாரோ என்னை இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்" என்றும் அவர் கூறுகிறார். "முதலில் நான் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்தில் தங்க வைக்கப்பட்டேன். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு பில்கீஸ் எதி என்னை கராச்சியில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் அங்கு 17 ஆண்டுகள் தங்கினேன்" என்று கிரண் பகிர்ந்து கொண்டார். கராச்சியில் உள்ள எதி மையத்தைச் சேர்ந்த ஷபானா பைசல், கிரண் 17 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்திற்கு வந்ததாகக் கூறினார். இதுகுறித்துப் பேசுகையில், "யாரோ ஒருவர் அவரை அங்கே விட்டுச் சென்றிருக்கலாம், ஒருவேளை அவர் வழி தவறியிருக்கலாம்" என்று தெரிவித்தார். "அவர் சிறிது காலம் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்தில் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், பில்கீஸ் எதி, இஸ்லாமாபாத் எதி மையத்திற்குச் சென்றார். அங்கு கிரண் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கவனித்தார். எனவே அவர் கிரணை கராச்சியில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார்." சில காலத்திற்கு முன்பு, பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்துடன் தொடர்புடைய 'மேரா பியாரா' குழு கராச்சியில் உள்ள எதி மையத்திற்குச் சென்றதாகவும், அவர்கள் கிரணை நேர்காணல் செய்து அவரது உறவினர்களைத் தேடும் பணியை மேற்கொண்டதாகவும் ஷபானா பைசல் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரண் தனது குடும்பத்தினருடன் இருக்கும் குழந்தைப் பருவ புகைப்படம். குடும்பத்தைக் கண்டறிய உதவிய நேர்காணல் லாகூரில் உள்ள "மேரா பியாரா" திட்டத்தின் மூத்த காவல்துறை தகவல் தொடர்பு அதிகாரியாக சித்ரா இக்ரம் உள்ளார். பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட "மேரா பியாரா" திட்டம், "காணாமல் போன குழந்தைகளை அவர்களது உறவினர்களுடன் மீண்டும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் விளக்கினார். ஒரு வருடத்திற்கு முன்பு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 51,000 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். டிஜிட்டல் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, காவல்துறை ஆதாரங்களும் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், "கைவிடப்பட்ட குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள வெவ்வேறு மையங்களில், எங்கள் குழுக்கள் நேர்காணல் செய்கின்றன. பின்னர் அந்த நேர்காணல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன், குழந்தையின் குடும்பத்தினரைத் தேடுகிறோம்," என்றும் சித்ரா இக்ராம் கூறினார். கிரண் விஷயத்திலும் இதேதான் நடந்ததாக அவர் குறிப்பிட்டார். "எங்கள் குழுக்களில் ஒன்று கராச்சியில் உள்ள எதி மையத்திற்குச் சென்று, கிரணையும், கைவிடப்பட்ட மற்ற பிறரையும் நேர்காணல் செய்து தகவல்களைச் சேகரித்தது." "கிரணுக்கு பெரிதாக நினைவில்லை. அவர் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் தன் உறவினர்களுடன் தங்கியிருந்தார்." கிரண் தனது தந்தையின் பெயர் அப்துல் மஜித் என்பதையும் அவரது கிராமத்தின் பெயரையும் நினைவில் வைத்திருந்ததாக சித்ரா இக்ரம் கூறினார். "நாங்கள் இந்தத் தகவலை எங்கள் கசூர் அலுவலகத்திற்கு அனுப்பி, கிரணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டோம்." அதுகுறித்துப் பேசிய கசூரில் உள்ள காவல் துறை தகவல் தொடர்பு அதிகாரி முபாஷ்ஷீர் ஃபயாஸ், "கிரண் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தபோது, அதில் கிராமத்தின் பெயரும் தந்தையின் பெயரும் இருந்தது. அது அவரது குடும்பத்தைத் தேடுவதற்கு பெரிய உதவியாக இருந்தது" என்றார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,'அப்னா பியாரா' நிகழ்ச்சி மூலம் பகிரப்பட்ட தகவல் 'ஒரே நாளில் பெற்றோரை கண்டுபிடிக்க முடிந்தது' முபாஷ்ஷீர் ஃபயாஸ் அதுகுறித்துக் கூறுகையில், முதலில், "நாங்கள் அந்தப் பகுதியின் கிராம நிர்வாகத் தலைவரையும், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியோரையும் தொடர்பு கொண்டோம். நாங்கள் அப்துல் மஜித் பற்றி விசாரித்தபோது, அங்கு பல அப்துல் மஜித்கள் இருப்பது தெரிய வந்தது. கிரணின் குழந்தைப் பருவ புகைப்படங்களை சிலருக்குக் காட்டினோம். ஆனால் அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை," என்றார். "அப்துல் மஜித் என்ற பெயரில் உள்ள பலரையும் தொடர்பு கொள்வது சாத்தியம் இல்லை. சில நேரங்களில், காவல் நிலையங்களைச் சேர்ந்த பழைய காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உதவிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்திலும், நாங்கள் அந்தப் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த பழைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டது பேருதவியாக இருந்தது. அப்போது அவர்களில் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கிரண் என்ற பெண் காணாமல் போனதாகவும், அவரைப் பலர் தேடியதாகவும் எங்களிடம் கூறினார்" என்று அவர் கூறினார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தங்களிடம் கூறியதாகவும் முபாஷ்ஷீர் ஃபயாஸ் தெரிவித்தார். "அதைத் தொடர்ந்து, அந்த அதிகாரி கிரண் இருக்கும் பகுதியை அடைய எங்களுக்கு உதவினார். அங்கு நாங்கள் மசூதிகளில் அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடு செய்தோம். அங்குள்ள முதியவர்களைச் சந்தித்தோம். அங்கிருந்து, அப்துல் மஜித் என்ற ஒருவரின் மகள் 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதை அறிந்தோம்" என்று குறிப்பிட்டார். மேலும், "எங்களது கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியது. நாங்கள் அப்துல் மஜித்தை நெருங்கினோம், நாங்கள் அவரது பகுதியை அடைந்ததும், அங்கிருந்த பலருக்கும் கிரண் காணாமல் போனது நினைவுக்கு வந்தது. எங்களை அப்துல் மஜித்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்" என்று நடந்ததை விவரித்தார். பட மூலாதாரம்,Sidra Ikram படக்குறிப்பு,கிரண் தனது தந்தை மற்றும் சகோதரருடன் ஆனந்த கண்ணீர் அப்துல் மஜீத்திடம் அவரது மகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் உள்படப் பல்வேறு புகைப்படங்களைக் காட்டியதாக முபாஷ்ஷீர் ஃபயாஸ் கூறுகிறார். "அவர்கள் எங்களுக்கு குடும்பத்தினர் இணைந்து எடுத்த புகைப்படத்தையும், கிரணின் அத்தியாவசிய தகவல்களைக் கொண்ட படிவம் பி-ஐயும் காட்டினர்." படிவம் பி என்பது பாகிஸ்தானில் குழந்தை பதிவுச் சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. அப்துல் மஜீத்தான் கிரணின் தந்தை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று அவர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து ஒரு வீடியோ கால் வந்தது, அதில் தந்தை, மகள் மற்றும் பிற உறவினர்கள் கிரணுடன் பேசிவிட்டு கராச்சிக்கு கிளம்பிச் சென்றனர். அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பிறகு, கிரண் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இறுதியில், நவம்பர் 25 அன்று அவர் வீடு திரும்பினார். கிரணின் மாமா அசாத் முனீர், தனது மருமகள் காணாமல் போனது குறித்துப் பேசுகையில், "கிரண் அப்துல் மஜித்தின் மூத்த மகள். இப்போது அவருக்கு கிரண் உள்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர் காணாமல் போனதில் இருந்து, அப்துல் மஜித்தின் கண்களில் எப்போதும் கண்ணீரை கண்டிருக்கிறேன்" என்று கூறுகிறார். மேலும், "அவர் தனது மகளைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று மட்டும்தான் கேட்பார். அவர் எப்போதும் தனது மகளின் நிலையைப் பற்றி கவலை கொண்டிருந்தார்" என்கிறார். "அவரது மகள் காணாமல் போன துக்கம் அவரை முன்கூட்டியே முதுமை அடையச் செய்துவிட்டதாகக் கூறிய அவர், அப்துல் மஜித் தனது மகளை அடையாளம் கண்டபோது, அதை முதலில் என்னிடம் பகிர்ந்து கொண்டார். முன்பு அவரது கண்களில் சோகக் கண்ணீரை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஆனந்த கண்ணீரைக் காண்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார். உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய கிரண், தனது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். சமையல், தையல் கலை மற்றும் கல்வி கற்றுக்கொண்ட பிறகு எதி மையத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். "கடினமான காலங்களில் அவர்கள் என்னை முன்னேற ஊக்குவித்து, என் மன உறுதியை உயர்த்தினர். அது மிகப்பெரிய விஷயம்" என்கிறார் கிரண். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0k1dnjevjo
  5. ஹை . ..........அம்மா, பாட்டியுடன் நான் . ....... நான் அழகா ........! 😂
  6. இப்ப 15 வருடத்துக்கு மேலாக இந்தா ஆள் போகப் போகுது என்றார்கள். ஆள் குத்துக் கல்லாட்டம் இருக்கிறார்.
  7. * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். [குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த தமிழக நண்பர்களுக்கு, மக்களுக்கு, ஊடகங்களுக்கு, அரசியற் கட்சியனருக்கு, அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவும்.]* * flash: http://ebook.yarl.com/ipkf/ * pdf zipped: Part 1 http://www.mediafire.com/?emj0zigyjyu Part 2 http://www.mediafire.com/?i5tzkzyjfny Part 3 http://www.mediafire.com/?tz1mvzdgggz * pdf: Part 1 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf Part 2 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf Part 3 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf அன்பான உறவுகளே, தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் - ஒவ்வொரு நாளும் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து - அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை. ஆனாலும் உறவுகளே - இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து - தமிழகத்திலிருந்து - எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் - பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் - தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம். ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அன்பான உறவுகளே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது - எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது - உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம். ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை. அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு - எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் - சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை - எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள். ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் - சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக - இந்தியா செய்கிறது. இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது. இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் "ராஜீவ்காந்தியின் கொலை" என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். --நன்றி: யாழ் இணையம்--
  8. உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
  9. ஓஓஓ நன்றி கந்தப்பு. இதுவரை இப்படி ஒரு விதி இருப்பது தெரியாமல் போய்விட்டது. எனக்கு மட்டுமல்ல மற்றைய உறவுகளுக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. இந்திய அணியில் ஒவ்வொரு பந்துக்கும் 6 6 6 என்று அடித்த வீரர்கள் இருக்க ஏன் இந்த வீரர்களை இறக்கி தோல்வியை தாங்களே தேடிக் கொண்டனர்.
  10. கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் நட்சத்திரன் செவ்விந்தியன் ஈழத்தின் முதலாவது விமானத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து தமிழன் என்பதற்காக டிலுக்ஸன் மோகனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றுதான் டிலுக்சன் மோகன் என்கிறவர் குறைந்தது மூன்று பேட்டிகளில் அடித்துச் சொல்லியுள்ளார். இதற்கு முதல் ஈழத்தில் யாராவது ஒரு விமானத்தை உருவாக்கவில்லையா என்று யாருமே கேட்கவில்லை. உண்மை என்னவென்றால் ஈழத்தில் இதற்கு முதலே ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல. ஈழத்தின் முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கியவரே ஒரு தமிழர்தான். இலங்கை வான் படை Wing Commander N.குணரத்தினம் என்பதே அவர் பெயர். Sri Lanka Air Force's own locally manufactured aircraft is the result of years of hard work in designing, manufacturing and test flying. Pazmany PL2 aircraft project was started in year 1977 and the aircraft made its maiden test flight on 11th April 1980. This twin seater aircraft has taken part in many a fly-past since entering the Sri Lanka Air Force service. Pazmany PL2 aircraft was built by the Aircraft Engineering Wing of the Sri Lanka Air Force, under the personal supervision of Wing Commander N. Gunarathnam. This was the first instance in the history that an aircraft has been completely built in Sri Lanka. இதற்கு முதல் பரீட்சார்த்தமாக பறந்த விமானங்களை உருவாக்கியவர் பிலிப் றே விஜயவர்த்தன இவரது விமானங்கள் பறந்திருந்தாலும் சிவில்/ இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் குணரத்தினத்தின் விமானம் வான் படையால் பயன்படுத்தப்பட்டதால் இவரே இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார். உண்மை வரலாறு இப்படி இருக்க இப்போது சோபாசக்தி முற்றிலும் தன் ஆக்கத்தை எழுதிக்கொடுத்த படுபட்சி என்கிற திருட்டு இலக்கியப்பிரதி மூலம். “ நாவலாசிரியர்” அவதாரம் எடுத்துள்ள டிலுக்சன் மோகன் அடித்து விட்டுள்ள அண்டப்புழுகுகள், ஆகாசப்புழுகுகளை ஒவ்வொன்றாக ஆதாரங்கள், தரவுகள், தருக்கங்களுடன் அம்பலப்படுத்துகிறோம். ரமணன் சந்திரசேகரமூர்த்திக்கு வெடிப்புழுகன் டிலுக்சன் வழங்கிய யூரியுப் பேட்டிதான் அண்மையது. அதில் ரத்மலானையில் தான் Aeronautical Engineering படித்து முடித்தேன் என்று சொல்லியுள்ளார். முன்னதாக Jaffna Monitor க்கு வழங்கிய பேட்டியில் தான் Ratmalana Aeronautical Engineering College ல் படித்ததாகச் சொல்லியுள்ளார். அப்படி ஒரு Engineering கொலீஜே இலங்கையிலில்லை. இலங்கையில் இன்று வரைமும் Aeronautical Engineering ல் BSe பட்டம் பெற இரண்டே இரண்டு இடங்களே உண்டு. 1. Kotelawela Defence University (KDU) 2. மொரட்டுவப் பல்கலைக்கழகம். இந்த இரண்டு இடங்களிலும் இவர் படித்திருக்க வாய்ப்பே இல்லை. இவர் அப்படிச் சொல்லவும் இல்லை. இவரின் LinkedIn பக்கத்தில் Skyline Aviation Sri Lanka வில் படித்ததாகவும் ஒரு Associate Degree பெற்றதாகவும் பதிவு உள்ளது. அங்கு டிப்ளோமா பட்டங்களே உண்டு. BSc இல்லை. ஆனால் தனது இணையத்தில் தனக்கு ஒரு BSc( Aeronautical Engineering) உண்டு என்னு அண்டப்புபுழுகை அவிட்டுவிட்டுள்ளார். இனிமேல் தான் வடிவேலுவின் கிணற்றைக் காணோம் வகையான டிலுக்சனின் அண்டப்புழுகு கொமடிகளுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம். சிரிக்க தயாராகிக் படிக்க வாருங்கள். காமெடி 1. ஈழயுத்தம் முடிந்தபின் தான் Ratmalana Aeronautical Engineering College ல்( அப்படி எதுவுமே ஈழத்தில் இல்லை) படித்துக்கொண்டிருக்கும்போது தான் விமானம் செய்யும் யோசனையை சொன்னதால் நாலாம் மாடிக்கு கொண்டு சென்று அடித்து விசாரித்தாங்களாம். பிறகு இரண்டாம் விசாரணை Air Force வைத்ததாம். தான் இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னபோது இலங்கையின் முதல் விமானத்தை இராவணற் தான் உருவாக்கியதாக Air Force சொன்னதாம். பிறகு மூன்றாம் விசாரணையை Air Force Wing Commander செய்தாராம். அவர் தன் ஆசையைக் கேட்டபின் இலங்கையின் முதல் விமானத்தை புலிகள் செய்து விட்டார்கள் என்று சொன்னாராம். உண்மையிலேயே இலங்கை வான்படை தளபதிகளோ உத்தியோகத்தர்களோ விசாரணை செய்திருந்தால் இந்த காமெடிகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இலங்கையின் முதல் விமானத்தை யார் உருவாக்கியது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அவர்களுடைய மியூசியங்களில் தமிழ் Wing Commander குணரத்தினம் உருவாக்கிய Pazmany PL‑2 light aircraft ஐ மட்டுமல்ல பிலிப் றே விஜயவர்த்தன உருவாக்கிய பல விமானங்களை மட்டுமல்ல அதற்கு முதல் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்ட பறந்த , பறக்க எத்தனித்த பல நூறு விமானங்களையும் பார்த்திருப்பார்கள். ஆக இவை டிலுக்சனதும் ஆட்டிலறியை தோளில் வைத்து அடித்ததாக கதை எழுதிய சோபாசக்தியினதும் அண்டப்புழுகுகள். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம். Archive
  11. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது. சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ராணுவத்தின் உதவியுடன் தேடல் இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன. ஏனையோரை தேடும் பணிகளுக்காக ராணுவத்தினர் இன்று வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. படக்குறிப்பு,வி.கே.முத்துகிருஸ்ணன் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலுள்ள வீடொன்றின் உரிமையாளரான வி.கே.முத்துகிருஸ்ணன், முதல் வீட்டில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஏனைய இளைஞர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார். உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சற்று மேலே வந்த தருணத்திலேயே அவருடைய வீட்டுக்கு கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இறுதி நொடியில் தப்பித்த தருணம் இறுதி நொடியிலேயே தான் தப்பித்ததாக வி.கே.முத்துகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்த குடும்பங்களுடன் காப்பாற்ற போன இளைஞர்களும் இறந்து விட்டார்கள். முதல் வீட்டை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் சென்றார்கள். மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டிலுள்ளவர்களை காப்பாற்றும் போது, மறுபடியும் மண்சரிவு வந்தது. பாரிய சத்தத்துடன் மண்சரிவு வந்தது. எனக்கு தெரிந்தளவில் 23 பேர் அந்த இடத்தில் இருந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஐந்து குடும்பங்கள் அந்த இடத்தில் இருந்தது. என்னுடைய வீட்டோடு சேர்ந்து 6 குடும்பங்கள். குறிப்பிட்டளவு உடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இன்னும் பலரை தேட வேண்டியுள்ளது. இனிமேல் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். அந்த இடத்திலுள்ள மக்களுக்கு நிரந்தர இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டார். உதவ சென்றவர் உயிரிழந்த சோகம் படக்குறிப்பு,மண்சரிவில் உறவினரை இழந்த உஷா தனது மைத்துனனை இழந்த சரசவிகம பிரதேசத்தைச் சேர்ந்த உஷா, ''சரியான மழை. அப்போது இரண்டு பேர் வந்து, பிள்ளைகள் எல்லாம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர் என மைத்துனரிடம் சொன்னார்கள். போய் உதவி செய்வோம் என்று மைத்துனர் அழைத்தார். நாங்கள் போக வேண்டாம் என கூறினோம். ஆனாலும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை பற்றிய தகவலே கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் தெரியும் இப்படியான சேதம் நடந்திருக்கிறது என்று. அவருடைய உடல் கிடைத்தது.'' என கண்ணீருடன் தெரிவித்தார். 'காப்பாற்ற சென்றவர் உயிருடன் இல்லை' படக்குறிப்பு,தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜா தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜாவும், '' அவர் என்னுடைய அண்ணாவின் மூன்றாவது மகன். அவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர் தொழில் செய்துவிட்டு வரும்போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளையை தூக்கி வந்து வீடொன்றில் விட்டுவிட்டு, வீட்டில் அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டு வருகின்றேன் என்று சொல்லி இன்னுமொரு முறை போயிருக்கின்றார். அப்படி சென்றவர் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.'' என குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cde69885rk6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.