Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87986
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  3. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2135
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    31932
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/01/25 in all areas

  1. எமது பாடசாலை குழுமத்தில் அரசாங்கம் வழங்கிய வங்கி விபரம் பற்றிய தகவலை இணைத்தார்கள். நானும் இதைத்தான் கூறினேன். பாதிக்கப்பட்ட எமது உறவுகள், சொந்தங்களிற்கு நேரடியாகவே நாம் உதவி செய்யலாம். அரசாங்கம் ஊடாக செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு செல்லும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அபாய அறிவிப்புக்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மாத்திரமே வழங்கப்பட்டதாக ஒரு செய்தி சில தினங்கள் முன் பார்த்தேன்.
  2. வாலி எழுதிய சிவாஜி படப் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று👍🏾
  3. நிவாரண உதவிப் பொருட்களை பொதுமக்கள் வழங்குவதற்காக யாழ். மருத்துவ பீடத்தில் பொருட்கள் சேகரிப்பு மையம் ஒன்றை ஆரம்பித்து உள்ளோம். இன்றைய தினம் காலை 7.00மணியிலிருந்து பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் (ஆடியபாதம் வீதி) அமைக்கப்பட்ட இடத்தில் சேகரிப்பு மையம் உள்ளது. உதவி செய்ய விரும்பும் மக்கள் உடனடித் தேவையான பொருட்களான - குழந்தையுணவுகள் (பிஸ்கட், பால்மா, ரஸ்க்) - அணையாடைகள் ( Sanitary pads & Diaper) (பெண்களுக்கு & குழந்தைகளுக்கு) - குழந்தைகளுக்கான சோப் - தொற்றுநீக்கிகள் - நுளம்புவலை - பிளாஸ்டிக் பாய் - படுக்கை விரிப்புகள் - தேயிலை - பால்மா - சீனி - நுளம்புத் திரி - பிஸ்கெட் வகைகள் - பொதி செய்யப்பட்ட உணவுகள் - தண்ணீர் போத்தல்கள் - தறப்பாள் - Towels போன்றவற்றை வழங்கலாம். முதற்கட்ட நிவாரணமாக இன்றைய தினம் காலை 11 மணிக்கு, பாரவூர்தி செல்ல இருக்கிறது. தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை சேகரிப்பு பணி தொடர்ந்து நடைபேறும். சேகரிப்பு மையம் தொடர்பான அனைத்து பணிகளும் யாழ் மருத்துவபீட மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும். நன்றி. A Relief Supply Collection Centre has been established at the Faculty of Medicine, Jaffna for the public to donate essential items. From 7.00 a.m. today, the collection point will be functioning at the main entrance area (Aadiyapatham Road). Those who wish to extend their support may contribute urgently needed items such as: - Baby food (biscuits, milk powder, rusks) - Sanitary items (sanitary pads & diapers for women and children) - Baby soap - Disinfectants - Mosquito nets - Plastic sheets - Bed sheets - Tea - Milk powder - Sugar - Mosquito coils - Biscuit varieties - Packaged food items - Bottled water As the first phase of relief, a lorry carrying supplies will depart at 11.00 a.m. today. The collection process will continue until further notice. All activities related to the collection centre are being coordinated by the Student Union of the Faculty of Medicine, Jaffna. Thank you. தன்னார்வலர்களால் எம்மிடம் கையளிக்கப்படும் இடரனர்த்த உதவிப்பொருட்களை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு பகிர்ந்து கொள்வதற்காக, உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் சேகரிப்பு மையம் - யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் (இராமநாதன் வீதி) அமைக்கப்பட்டுள்ளது. ☎️தொடர்புகளுக்கு - லஜிதன் : +94 76 205 6557 (தலைவர், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) - கஜேந்திரன் : +94 76 090 0982 (தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம்) பேரனர்த்தத்துக்குள்ளாகியிருக்கிற எங்களது மக்களை மீட்டெடுக்கும், உயரிய பணியில் உங்களையும் பங்காளர்களாக அன்புரிமையுடன் அழைக்கின்றோம். - ஒருங்கிணைப்பாளர் : ம.தனுஷன் (உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்) +94 77 530 2813
  4. இந்த இளைஞன் இறுதி வரை மற்றவர்களை பாதுகாப்பாக வெளியேற உதவி செய்து விட்டு கடைசியில் ஆபத்தில் சிக்கிக் கொண்டவர் என சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர்.
  5. கெட்டவன் கருப்பு · Suivre Stsdeporno641h u93t3n8826622t883vo4,082b 01e:gcrmec26acg715g · ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம். அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார். அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க. அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க. அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர். கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம். இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் , "நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ.........!
  6. முகப் புத்தகத்திலும் எழுதிப் போட்டு கிடந்தது.தாக்கபட்டு இறந்த இந்த நபரும் அவரது துணைவியாரும் படிக்கும் பிள்ளைகளை தவறான வழிக்கு கொண்டு போகிறார்களாம்.இவரை விட இவரது மனைவியே (போதைகளை விற்று கூடுதலாக) தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் எழுதிஇருந்தது.எதனால் இப்படி நடந்தது என்று யூருப்காரர்களோ , பத்திரிகைகாரர்களோ இவர்களின் அயலவர்களிடம் போய் விசாரித்த போது அவரகளே சொல்லி இருக்கிறார்கள்.இந்தக் குடும்பம் பற்றி.ஊரிலிருப்பவர்களுக்கு இருப்பதை வைத்து வாழ முடியாமலிருக்கிறது.
  7. சிறப்பான நடவடிக்கை. படிக்க வந்துவிட்டு சொறி சேட்டை செய்பவர்கள் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வியை தொடர அனுமதிக்ககூடாது.
  8. திருநெல்வேலி சம்பவம் போதைப்பொருளுடன் சம்மந்தப்பட்டது என இலங்கை நண்பர் ஒருவரிடம் கேட்டபோது கூறினார். பிரான்ஸ் இளைஞர் பற்றிய செய்தி இணைப்பை தாருங்கள். @விசுகு அவர்கட்கு தெரியுமா சம்பவம் பற்றி. தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை விட போதைப்பொருள் பிரச்சனைகளை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டுவதாக இன்னோர் இலங்கை நண்பர் கூறினார்.
  9. கோலியின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை - சாதனை சதத்தின் 3 முக்கிய கட்டங்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒருநாள் போட்டி இன்னிங்ஸின் முதல் 25 பந்துகளிலேயே கோலி 2 சிக்ஸர்கள் அடிப்பது இதுவே மூன்றாவது முறை கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து: நாண்ட்ரே பர்கர் வீசிய பந்து 'அவுட் சைட் எட்ஜ்' ஆகி பௌண்டரி எல்லையை அடைந்தது. நான்காவது ஓவரின் நான்காவது பந்து: பந்து பேட்டரின் காலில் பட, தென்னாப்பிரிக்க அணி எல்பிடபிள்யூ அப்பீல் செய்கிறது. ஆனால், நடுவர் மறுத்துவிடுகிறார். நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்து: டிஃபண்ட் செய்ய பேட்டர் முற்பட, 'இன்சைட் எட்ஜ்' ஆகி ஒரு ரன் கிடைக்கிறது. யஷஷ்வி ஜெய்ஸ்வாலை அந்த ஓவரின் முதல் பந்தில் பர்கர் வெளியேற்ற, அந்த ஓவரின் மிச்ச பந்துகளை சந்தித்தது விராட் கோலி. ராஞ்சியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவருடைய இன்னிங்ஸ் இப்படி சில எட்ஜ்களும், அப்பீலுமாகத்தான் தொடங்கியது. ஆனால், ஒருசில பந்துகளிலேயே அதையெல்லாம் நிவர்த்தி செய்த விராட் கோலி, 120 பந்துகளில் 135 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 52வது சதம். இதன்மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) முறியடித்தார் விராட் கோலி. ஆனால், கோலியின் இந்த இன்னிங்ஸ் சீராக ஒரே மாதிரியானதாக இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப தன் அணுகுமுறையை அவர் மாற்றவேண்டியிருந்தது. அதனால் அவர் தன் ஆட்டத்தை மூன்று கட்டங்களாக வடிவமைத்தார். கட்டம் 1: ஃபீல்டிங் வியூகத்தை தகர்த்த கோலி முதல் பந்தில் எட்ஜ் மூலம் பௌண்டரி கிடைத்த அவருக்கு, அடுத்த 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவர் சந்தித்த பத்தாவது பந்தில் ஒரு ஸ்டிரெய்ட் டிரைவ் அடித்து, தான் நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தினார் கோலி. அதன்பிறகு அவர் கொஞ்சம் வித்தியாசமான பாணியிலேயே தன் இன்னிங்ஸை அணுகினார். முதல் 18 பந்துகளில் 12 ரன்கள் அடித்திருந்த கோலி, அடுத்த 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு பந்துகளை சிக்ஸரும் அடித்தார். வழக்கமாக ஒன்றிரண்டு ரன்களாக அதிகமாக ஓடியும், பவுண்டரி மூலமுமாகவே பெரும்பாலான ரன்களை சேர்க்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் தான் சந்தித்த முதல் 25 பந்துகளிலேயே இரண்டு முறை சிக்ஸர் அடிப்பது இதுவே மூன்றாவது முறை என்கிறது இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வலைதள தரவு. அதிலும், முதலில் பேட்டிங் செய்த தருணங்களில் இதுவே முதல் முறை. தென்னாப்பிரிக்க அணி விராட் கோலியை நெருக்கடிக்குள்ளாக்க ஒரு முயற்சி செய்தது. 30 யார்ட் வட்டத்துக்குள் இருக்கும் முக்கிய ஃபீல்டிங் பொசிஷன்களில், ஃபீல்டர்கள் வழக்கமாக நிற்கும் இடத்திலிருந்து சற்று முன்னே நின்றார்கள். கோலியின் பிரதான ஷாட்கள் மூலம் வரும் ரன்களைக் கட்டுப்படுத்தி அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த அவர்கள் அந்த முயற்சியை செய்தனர். இந்நிலையில் தான் வழக்கமாக தரையோடு ஆடும் விராட், வான் நோக்கி அதிகம் அடிக்கத் தொடங்கினார். பட மூலாதாரம்,Getty Images இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூட இதைப் பற்றி X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "விராட் கோலி இந்த இன்னிங்ஸில் காட்டும் ஆக்ரோஷம் முக்கியமாக ஃபீல்டிங் பொசிஷன்களால் தான். 'உங்கள் ஃபீல்டிங் மூலம் நீங்கள் எதையும் நிர்ணயிக்க முடியாது' என்று அவர் சொல்லும் செய்தி தெளிவாகப் புரிகிறது. அந்த எண்ணம்! அந்த அறிவிப்பு!" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சிக்ஸர் அணுகுமுறையை முதல் பவர்பிளேவுக்குப் பின்னருமே கோலி தொடர்ந்தார். கார்பின் பாஷ் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் அவர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி விராட் கோலி ஒருநாள் போட்டி இன்னிங்ஸில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடிப்பது இது மூன்றாவது முறை. 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 360 என்ற இலக்கை சேஸ் செய்த போது கோலி 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அன்று, ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவரின் அதிவேக ஒருநாள் சதத்தை (52 பந்துகள்) பதிவு செய்திருந்தார் அவர். பெரிய இலக்கு என்பதால் அந்த அதிரடி தேவைப்பட்டிருந்தது. அதேபோல், 2023ல் இலங்கைக்கு எதிராக அவர் 8 சிக்ஸர்கள் அடித்தார். அப்போதுகூட சதம் அடிக்கும்வரை அவர் 1 சிக்ஸர் தான் அடித்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 71 ரன்கள் அடித்திருந்தபோதே 5 சிக்ஸர்கள் அடித்துவிட்டார் கோலி. தங்கள் ஃபீல்டிங் மூலம் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற தென்னாப்பிரிக்காவின் வியூகம், கோலியின் எதிர்பாராத அதீத அதிரடியால் தகர்ந்து போனது. கட்டம் 2: ஆடுகளம் மற்றும் விக்கெட் வீழ்ச்சிக்கு எதிராக நிதானம் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது 61 பந்துகளில் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார் கோலி. அப்போது அவர் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடித்திருந்தார். ரோஹித்தும் மற்றொரு பக்கம் அதிரடி காட்டியதால் இருவரும் நெருக்கடி இல்லாமல் ஆட முடிந்தது. அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்கள் அடித்திருந்தார் கோலி. ஆனால், ரோஹித் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் ரன்ரேட் குறைந்தது. சரியாக அந்த சமயத்தில் ஆடுகளத்தின் தன்மை மாறியது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவானது. அடுத்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் வேகமாக ரன் சேர்க்கத் தடுமாறினார்கள். அதனால் அங்கு தென்னாப்பிரிக்காவின் கையும் சற்று ஓங்கியது போல் தோன்றியது. இப்படியான சூழ்நிலையில் விக்கெட் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்த கோலி, நிதானமாக ஆடத் தொடங்கினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆடுகளத்தின் தன்மை மாறிய பிறகு அதிரடியைக் குறைத்து நிதானமாக விளையாடினார் விராட் கோலி ரோஹித் ஆட்டமிழந்த பிறகு அவர் சந்தித்த முதல் 40 பந்துகளில் அவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்தார். சிக்சர் ஏதும் அடிக்கவில்லை. போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, "20-25 ஓவர்களுக்கு ஆடுகளம் நன்றாக இருந்தது. ஆனால், அதன்பிறகு மெதுவாகிவிட்டது" என்று குறிப்பிட்டார். முதலில் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங்குக்கு ஏற்ப அதிரடி காட்டியவர், அதன்பின் சூழ்நிலையை உணர்ந்து அப்படியே தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருந்தார். இதன்மூலம் விக்கெட் வீழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நன்கு ஆடிக்கொண்டிருக்கும் விராட் கோலி ஒருபக்கம் இருந்ததால், மற்றொரு சீனியர் வீரர் கே.எல்.ராகுல் செட்டில் ஆகவும் அது உதவிகரமாக இருந்தது. ஆடுகளம் சற்று மெதுவாகியிருந்தாலும், கோலியின் அணுகுமுறையால் தென்னாப்பிரிக்க அணியால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. இது இறுதி கட்டத்தில் இந்தியா அதிரடி காட்ட உதவிகரமாக இருந்தது. கட்டம் 3: பெரிய இலக்கை நோக்கிய அதிரடி இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது பேட்டிங் செய்வது சற்று சாதகம் இருக்கும். அதனால்தான் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அதனால், பெரும்பாலான வல்லுநர்கள் இந்திய அணி 330 முதல் 340 ரன்கள் வரை எடுக்கவேண்டும் என்று கருதினார்கள். 38வது ஓவருக்குப் பின்பான கோலியின் அதிரடி இந்தியாவை அந்த இலக்கு நோக்கிப் பயணிக்கவைத்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,38வது ஓவருக்குப் பிறகு மீண்டும் அதிரடியைக் கையில் எடுத்தார் கோலி. அதனால் இந்தியாவின் ரன்ரேட் மீண்டும் உயரத் தொடங்கியது ராகுல் ஓரளவு களத்தில் செட் ஆனபிறகு மீண்டும் வேகமாக ஆடத் தொடங்கினார் கோலி. சுப்ரயன் வீசிய 39வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் (அவர் சந்தித்த 5 பந்துகளில்) எடுத்தார். ஓட்னீல் பார்ட்மேன் வீசிய அடுத்த ஓவரிலுமே இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கோலி. ஒருகட்டத்தில் குறைந்திருந்த ரன்ரேட், இந்த இரண்டு ஓவர்களில் காட்டிய அதிரடியால் மீண்டும் அதிகரித்தது. 38வது ஓவர் முடிவில் 6.13 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், 43வது ஓவரில் அவர் அவுட் ஆகும்போது 6.44 ஆக அதிகரித்தது. இதைத் தக்கவைத்த இந்திய அணி கடைசியில் 349 ரன்கள் எடுத்து, போட்டியை 17 ரன்களில் வென்றது. முறியடிக்கப்பட்ட சாதனையும் விமர்சனங்களுக்கான பதிலும் இந்த சதம், சர்வதேச அரங்கில் கோலி அடித்திருக்கும் 83வது சதம். ஒருநாள் போட்டிகளில் 52வது சதம். இதன் மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. கோலி, 2027 உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று கருதப்படுவதால், ஒருநாள் போட்டிகளில் அவர் மேலும் சில சதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார் விராட் கோலி கோலிக்கு 37 வயது ஆகியிருந்தாலும், அவருடைய ஷாட்களில் இருந்த துல்லியம், அவரது அணுகுமுறையில் இருந்த உறுதி, ஓடுவதில் இருந்த வேகம், நீண்ட இன்னிங்ஸை ஆடிய ஃபிட்னஸ் அனைத்துமே இன்னும் முன்பைப் போல் இருப்பதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள். சில வாரங்களுக்கு முன், பெரிய இடைவெளிக்குப் பின்பு கோலி ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய போது அவருடைய ஃபார்ம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. அங்கு முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் டக் அவுட் ஆனதால், விமர்சனங்கள் வலுப்பெற்றன. தொடர்ச்சியாக ஆடாமல் இருப்பதால் அவர் தடுமாறுகிறார் என்று பலரும் கூறினார்கள். ஆனால், சிட்னியில் அரைசதம், இப்போது ராஞ்சியில் சதம் என அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய ஃபார்மை நிரூபித்திருக்கிறார் விராட் கோலி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mpw72j7x9o
  10. அத தெரண கருத்துப்படம்.
  11. Benitto Kumar · வியாபாரியின் அகந்தையை உடைத்த தெனாலி ராமன். சிறுகதை. வெகு நாட்களாக வெளியூரில் தங்கியிருந்த புத்திக்கூர்மையின் உருவமான தெனாலி ராமன், ஒரு நாள் தன் ஊரான ஹம்பி நகருக்குத் திரும்பி வந்தான். ஊருக்குள் நுழைந்தவுடனே எங்கும் மக்கள் கூட்டம், கிசுகிசுப்பு, பரபரப்பு! எல்லோரும் ஏதோ ஒரு அதிசயத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். “என்ன விஷயமாக இப்படி ஊரே கலகலப்பாக இருக்கிறது?” என்று வியப்புடன் ராமன் தன் வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு அவன் வேலைக்காரர்கள் இருவரும் கூடி ரகசியமாக ஆலோசனை செய்வது போல பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட தெனாலிக்கு சந்தேகம் வந்தது. ஒருவனை அழைத்து, “ஏய்! என்ன விஷயம்? ஊரும் பேசுது… நீங்களும் பேசுறீங்க?” என்று கேட்டான். பயந்து நடுங்கிய வேலைக்காரன் சொன்னான்: “ஐயா… நம்ம ஊருக்கு ஒரு வடநாட்டு வியாபாரி வந்திருக்காராம். அவரிடம் ஒரு அதிசயமான சவால் இருக்காம்…” “என்ன சவால்?” என்று தெனாலி கேட்டான். “அவர் வைத்திருக்கும் ஒரு பொருளின் எடையை சரியாகக் கண்டுபிடித்தால், எடைக்கு எடை பொன் தருவேன் என்கிறாராம். தவறினால்… நம்ம வாழ்க்கை முழுக்க அவருக்கு அடிமையாக வேலை செய்ய வேண்டுமாம்!” இந்தக் கொடூரமான நிபந்தனையைக் கேட்ட ராமன் சற்று சிந்தித்து, நேராக அரச சபைக்குச் சென்றான். அங்கு மன்னர் கிருஷ்ணதேவராயர் அந்த வியாபாரியின் சவாலை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார். தெனாலி வந்ததும் மன்னர் மகிழ்ச்சியுடன், “இந்தச் சவாலுக்கு நீயே தீர்வு காண வேண்டும்!” என்று உத்தரவிட்டார். தெனாலி ராமன் வியாபாரியைப் பார்த்து, “எந்தப் பொருளின் எடை வேண்டும்?” என்று கேட்டான். கர்வமாகச் சிரித்த வியாபாரி சொன்னான்: “வீதியில் நிற்கும் என் யானையின் எடை சொல்ல வேண்டும்!” சபையே அதிர்ந்தது. யானையை தராசில் எப்படி நிறுத்துவது? இதற்கெல்லாம் எடை கருவியே இல்லையே! அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் தெனாலி ராமன் சற்றும் கலங்கவில்லை. “நான் நாளை காலை பதில் சொல்கிறேன்!” என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றான். இரவில் தன் மனைவியிடம் இந்தச் சிக்கலைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவனது புத்தியில் திடீரென மின்னல் போல ஒரு யோசனை உதித்தது. நதி… படகு… மரக்கட்டைகள்… மாபெரும் புத்திசாலித்தனம்! அடுத்த நாள் காலை, மன்னர், மக்கள், வியாபாரி ஆகிய அனைவரும் ஆவலோடு நதிக்கரையில் கூடியிருந்தனர். தெனாலி ராமன் முதலில் யானையை ஒரு பெரிய படகில் ஏறச் செய்தான். யானை ஏறியதும் படகு நீரில் எவ்வளவு ஆழம் அமிழ்ந்தது என்பதை குறிக்கும் வண்ணம் படகின் உட்புறத்தில் ஒரு கோடு போட்டான். பிறகு யானையை இறக்கிவிட்டு, அதே படகில் மரக்கட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, படகு முன்னர் யானை ஏறிய போது அமிழ்ந்த அதே அளவு வரை நிரப்பினான். பின்னர் மன்னரைப் பார்த்து, “அரசே! இப்போது இந்த மரக்கட்டைகளைத் தனித் தனியே எடை போடுங்கள். அவை அனைத்தின் மொத்த எடைதான் யானையின் உண்மையான எடை!” என்றான். அரச சபையே ஆனந்த அதிர்ச்சியில் முழங்கியது. மன்னர் கிருஷ்ணதேவராயர் மகிழ்ச்சியில் திளைத்தார். மன்னர் வியாபாரியை நோக்கி, “நீ சொன்ன சவாலை எங்கள் தெனாலி நிறைவேற்றிவிட்டான். இப்போது நீ சொன்னது போல பரிசைத் தந்தே ஆக வேண்டும்!” என்றார். ஆனால் அப்போது தெனாலி ராமன் இடைமறித்து, “மன்னர் பெருமானே… இவன் ஒன்றைத் தெளிவாகச் சொல்லவில்லை! ‘எடைக்கு எடை பொன்’ என்று சொன்னான்… எந்த எடைக்கு? என் எடைக்கா? அல்லது யானையின் எடைக்கா?” என்று கேட்டான். இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் வியாபாரியின் முகம் வெளுத்துப் போனது. யானையின் எடைக்கு ஈடான பொன் கொடுக்க அவனால் முடியாது! அவனது சூழ்ச்சியும், பல நாடுகளில் மக்களை அடிமையாக்கிய பாவமும் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே மன்னர் உத்தரவிட்டார்: “இப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனுக்கு சிறையே சரியான தண்டனை!” என்று அவனைச் சிறையில் அடைத்தார். மன்னர் தெனாலி ராமனைப் புகழ்ந்து, பெரும் அளவு பொன்னும் பரிசுகளும் வழங்கினார். மக்கள் அனைவரும் ஒரே குரலில் கூறினார்கள்: “வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு!” கருத்து: யாரையும் துன்புறுத்தி மகிழாதே. அகந்தையால் வாழ்பவன் ஒருநாள் தன் அகந்தையாலேயே வீழ்வான்.......!
  12. மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் ........ சிவாஜி & பத்மினி .......! 😍
  13. * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். [குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த தமிழக நண்பர்களுக்கு, மக்களுக்கு, ஊடகங்களுக்கு, அரசியற் கட்சியனருக்கு, அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவும்.]* * flash: http://ebook.yarl.com/ipkf/ * pdf zipped: Part 1 http://www.mediafire.com/?emj0zigyjyu Part 2 http://www.mediafire.com/?i5tzkzyjfny Part 3 http://www.mediafire.com/?tz1mvzdgggz * pdf: Part 1 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf Part 2 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf Part 3 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf அன்பான உறவுகளே, தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் - ஒவ்வொரு நாளும் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து - அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை. ஆனாலும் உறவுகளே - இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து - தமிழகத்திலிருந்து - எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் - பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் - தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம். ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அன்பான உறவுகளே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது - எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது - உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம். ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை. அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு - எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் - சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை - எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள். ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் - சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக - இந்தியா செய்கிறது. இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது. இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் "ராஜீவ்காந்தியின் கொலை" என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். --நன்றி: யாழ் இணையம்--
  14. மாவிலாறு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மீட்பு 01 Dec, 2025 | 10:46 AM திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, திங்கட்கிழமை (01) நிலவரப்படி, மூதூர் பகுதியில் பாதிக்கப்பட்ட 309 பேரை கடற்படையினர் மீட்டு கல்கந்த விகாரையில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர். மேலும், ஒரு கடற்படை படகு மூதூர் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232116

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.