Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88760
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20318
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19607
    Posts
  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    16594
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/24/26 in Posts

  1. ஆசை, தோசை, அப்பளம், வடை…. 😁 😂 🤣 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன்…. நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.” இது… சுத்துமாத்து சுமந்திரனுக்காகவே எழுதிய பாடல். 😂 பைத்தியக்காரன் கதைப்பதை எல்லாம், சீரியசாக எடுக்கக் கூடாது. 🤣 இவர், அனுர அரசில், பிரதம மந்திரி பதவிக்கும் ஆசைப் பட்ட ஆள். 😁 அதுதான்…. சென்ற தேர்தலில், கட்டின கோவணத்தையும் உருவி விட்டு… வீட்டில் குந்த வைத்திருக்கிறார்கள். 😁 😂 🤣
  2. பொன்ஜூர் ரூஸோ! ஷோபாசக்தி இருநூற்று முப்பது வருடங்கள் பழைமையான சாம்பல்நிறச் சமாதிமீது நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்த மனிதரைப் பார்த்தபோது, அபினா அச்சமடைந்தார் என்பதைக் காட்டிலும் அவர் வியப்பில் உறைந்துபோனார் என்பதே உண்மை. அவரது வயோதிப மூளை தடுமாறியது. சமாதியின்மீது படுத்துக்கிடப்பது தத்துவவாதி ஜோன் ஜக் ரூஸோ என்றுதான் அபினா நினைத்தார். ‘கருணையைக் காட்டிலும் உயரிய ஞானம் எதுவுமில்லை’ எனச் சொன்ன ரூஸோ இறந்தபோது, அவரது உடல் பெப்லியர் தீவில் புதைக்கப்பட்டது. பதினாறு வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கத்தால் ரூஸோவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பாரிஸ் நகரத்திலுள்ள ‘பந்தியோன்’ மணிமண்டபத்திற்கு அரசு மரியாதைகளுடன் கொண்டுவரப்பட்டு, வோல்த்தேயரின் உடலுக்கு அருகே சமாதி வைக்கப்பட்டது. இவர்களுக்கு அருகேதான் விக்டர் ஹூகோவும், அலெக்ஸாந்தர் டுமாவும், ஜோசப்பின் பாக்கரும், எமில் ஸோலாவும் நீள்துயிலில் இருக்கிறார்கள். பொன்நிறமான பந்தியோன் மணிமண்டபம் கட்டடங்களின் அரசி போன்று நகரத்தின் மையத்தில் உயர்ந்து நிற்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு இது தேவாலயமாக இருந்தது. புரட்சியின் போது, இந்தத் தேவாலயம் பிரான்ஸின் மாண்புமிகு எழுத்தாளர்களதும் கலைஞர்களதும் அறிஞர்களதும் உடல்களைச் சமாதி செய்து வைக்கும் மணிமண்டபமாக மாற்றப்பட்டது. மண்டபத்திலிருந்து குறுகிய படிகளின் வழியே கீழே இறங்கிச் சென்றால், அங்கே சிலுவை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசாலமான பாதாள மண்டபத்துள், அரை இருளில் இவ்வாறாக எண்பத்துமூன்று சமாதிகள் இருக்கின்றன. இவற்றைப் பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வெயில், பனி பாராமல் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். காலை பத்து மணிக்குத்தான் மணிமண்டபத்தைப் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடுவார்கள். மணிமண்டபத்தின் தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறுமணிக்கே வேலைக்கு வந்துவிடுவார்கள். இன்று, சிலுவை வடிவப் பாதாள மண்டபத்தைச் சுத்தம் செய்யவேண்டியது அபினாவின் முறை. அபினா இங்கே வேலைக்கு வந்து சரியாக முப்பது வருடங்களாகின்றன. அவர் வேலைக்குச் சேர்ந்த அதே வாரத்தில்தான் ‘ஸ்ஸோ’ நகரத்தில் புதைக்கப்பட்டிருந்த மேரி கியூரியின் உடல் அறுபது வருடங்களுக்குப் பின்பு தோண்டி எடுக்கப்பட்டு, இந்த மணிமண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டுச் சமாதி வைக்கப்பட்டது. அப்போது அபினாவுக்கு இருபத்தைந்து வயது. அவர் வட ஆபிரிக்காவிலிருந்து அகதியாக பிரான்ஸுக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. வோலோவ் குடியில் பிறந்து, சிறிய பாலைவனக் கிராமத்தில் வசித்திருந்த அபினாவுக்கு பாரிஸ் நகரம் மிரட்சியைத்தான் கொடுத்தது. இயல்பிலேயே கூச்ச சுபாவத்தைக் கொண்டிருக்கும் அபினா அந்நியர்களுடன் பேசுவதற்குத் தடுமாறினார். வாயை மூடிக்கொண்டு வேலைக்கு வந்து திருத்தமாக வேலையைச் செய்துவிட்டு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தார். அப்போது மணிமண்டபத்தின் வாயில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த நடுத்தர வயதுப் பிரெஞ்சுக்காரருக்கு அபினாவின் இந்தப் போக்கு அதிருப்தியைக் கொடுத்தது. ஒருவரையொருவர் பணியிடத்தில் காலையில் சந்திக்கும்போது ‘உங்களுக்கு நல்ல நாளாகட்டும்’ என்ற பொருள்தரும் ‘பொன்ஜூர்’ எனும் வணக்கத்தைச் சொல்வது பிரெஞ்சு நடைமுறை. ஆனால், அபினா ‘பொன்ஜூர்’ எனப் பாதுகாப்பு அதிகாரிக்குச் சொல்வதில்லை. அப்படி ஒரு கண்டிப்பான வழக்கம் இருக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. பாதுகாப்பு அதிகாரி, தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளரிடம் இது குறித்து முறையிட்டார். மேற்பார்வையாளரும் அபினாவின் நாட்டவர்தான். அவர் இந்த ‘பொன்ஜூர்’ நடைமுறையை அபினாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, வாயில் பாதுகாப்பு அதிகாரிக்கு அவசியம் வணக்கம் வைக்கவேண்டும் என்றார். அபினா கற்றுக்கொண்ட முதல் பிரெஞ்சு வார்த்தை ‘பொன்ஜூர்’. அன்று முழுவதும் அபினா பரீட்சைக்குப் படிப்பது போன்று இந்த ‘பொன்ஜூர்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சாடனம் செய்தவாறேயிருந்தார். அவரது நீண்டு தடித்த நாக்கில் அந்த வார்த்தை தங்காமல் வழுக்கி விழுந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் காலையில் அபினா வேலைக்கு வந்தபோது, வாயில் பாதுகாப்பு அதிகாரி வழக்கமாக அமர்ந்திருக்கும் இருக்கையில் அவரைக் காணவில்லை. ‘பொன்ஜூர்’ சொல்லும் அபாயத்திருந்து தப்பித்தேன் பிழைத்தேன் என்று எண்ணிக்கொண்டே அபினா அங்கிருந்து வேகமாக நகர்ந்தார். துடைப்பத்தை எடுத்துக்கொண்டு கழிப்பறைகளைச் சுத்தம் செய்யச் சென்றார். வரிசையிலிருந்த முதலாவது கழிப்பறையின் கதவை அபினா தள்ளித் திறந்தபோது, உள்ளே வாயில் பாதுகாப்பு அதிகாரி சிறுநீர் கழித்துக்கொண்டு நின்றிருந்தார். அவர் திடுக்கிட்டுத் திரும்பி அபினாவை உணர்ச்சியற்ற சாம்பல்நிறக் கண்களால் பார்த்தார். அபினாவுக்கு என்ன செய்வது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நேற்றிலிருந்து உச்சாடனம் செய்துகொண்டிருக்கும் ‘பொன்ஜூர்’ மந்திரம் எதிர்பாராமல் அவரது நாவிலிருந்து நடுக்கத்தோடு உருண்டு விழுந்தது. அதைச் சொல்லிவிட்டு அபினா அங்கிருந்து வேகமாக அகன்றுவிட்டார். பாதுகாப்பு அதிகாரி அபினாவின் மேற்பார்வையாளரைத் தேடிச் சென்று அவரிடம் சொன்னார்: “அந்தப் பெண் எனக்கு ‘பொன்ஜூர்’ சொல்லத் தொடங்கியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், மெனக்கெட்டு என்னைத் தேடி வந்து கழிவறைக்குள் கண்டுபிடித்து அவள் வணக்கம் சொல்ல வேண்டியதில்லை.” இவ்வாறாகத்தான் முப்பது வருடங்களுக்கு முன்பு அபினா பிரெஞ்சு மொழி பழக ஆரம்பித்தார். இப்போதுவரை அவரது வாயில் தங்காமல் பிரெஞ்சு மொழி வழுக்கிக்கொண்டேயிருக்கிறது. என்றாலும், எதிர்ப்படும் எல்லோருக்கும் ‘பொன்ஜூர்’ வணக்கத்தை அபினா சொல்லிக்கொண்டேயிருந்தார். தானாகவே போய் உளமும் முகமும் மலரச் சொல்வார். மெத்ரோவில், தெருவில், சந்தையில், மணிமண்டபத்தில் என எல்லா இடங்களிலும் தன்னுடைய புன்னகையால் தோய்ந்த வணக்கங்களை அளித்தார். தற்போது வாயில் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவன் போலந்து நாட்டு இளைஞன். அவனுக்கு “என் மகனே…பொன்ஜூர்…” என அபினா வணக்கம் சொல்லிவிட்டு, வேலையைத் தொடங்கினார். பாதாள மண்டபத்தில் இருக்கும் எந்தச் சமாதியில் எவரின் உடல் இருக்கிறது என்பதை இந்த முப்பது வருட அனுபவத்தில் அபினா அறிந்து வைத்திருந்தார். வோல்த்தேயரின் சமாதியைத் பூப்போல துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு, ரூஸோவின் சமாதியைச் சுத்தம் செய்ய அபினா வந்தபோதுதான், அந்தச் சமாதியின் மீது ஒரு மனிதர் படுத்து உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அபினாவின் இருதயம் வழுவி அவரது பருத்த வயிற்றுக்குள் விழுந்த சத்தமோ என்னவோ அவருக்கே கேட்டது. அதே நேரத்தில் அவரது பச்சை குத்தப்பட்டிருந்த தடித்த உதடுகள் அகலப் பிளந்து அப்படியே நின்றன. என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறியவர் ‘பொன்ஜூர் ரூஸோ’ எனத் திறந்த வாய் மூடாமலேயே முணுமுணுத்துவிட்டு, வாயைக் கைகளால் பொத்தியவாறே ஓடிச் சென்று, படிகளில் ஏறி மூச்சிரைப்புடன் மணிமண்டபத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மணிமண்டபத்தின் நிர்வாகிகள் இருவர் அலுவலகத்திற்குள் இருந்தார்கள். அபினா தட்டுத்தடுமாறி அவர்களிடம் சொன்னார்: “பொன்ஜூர்…. தனது சமாதியிலிருந்து… திரு. ரூஸோ வெளியே வந்துவிட்டார்.” 2 பந்தியோன் மணிமண்டபத்துள் ரூஸோவின் சமாதிமீது படுத்திருந்தவரது பெயர் கதிரன் சிவபாலன். அவருக்கு நாற்பத்தைந்து வயது. சற்றே வழுக்கையான தலையும் ஒல்லியான உடலும் கொண்ட கரிய மனிதர். “இந்தக் கறுப்பனையா அந்தப் பெண்மணி ரூஸோ எனச் சொன்னார்?” என ஆச்சரியத்துடன் மணிமண்டபத்தின் நிர்வாகி தனது உதவியாளரிடம் கேட்டார். பீட்ரூட் போன்ற நிறமும் உருவமும் கொண்ட உதவியாளர் சதை மடிப்புகள் விழுந்த தனது தாடையைத் தடவியவாறே சற்று யோசித்துவிட்டு “ரூஸோ அடிமை ஒழிப்பு குறித்து நிறைய எழுதியிருப்பதால், ரூஸோ ஒரு கறுப்பரே என அந்தப் பெண்மணி நினைத்திருக்கக்கூடும்” என்றார். “அந்தப் பெண்மணிக்கு எழுதப் படிக்கவே தெரியாதே… வேலை ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பம் வைக்கவே அவருக்குத் தெரியாது. ஒட்டகம் போன்ற ஏதோவொன்றைத்தான் வரைந்து வைக்கிறார்” என்றவாறே நிர்வாகி தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டே நிமிடங்களில் பாரிஸ் நகரக் காவல்துறையினர் அங்கே வந்துவிட்டார்கள். சென்ற வாரம்தான் கொள்ளையர்கள் ‘லூவர்’ அருங்காட்சியகத்திற்குள் நோகாமல் நுழைந்து நெப்போலியனின் மனைவியின் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்… அதற்குள் பந்தியோன் மணிமண்டபத்தில் ஒரு சம்பவமா எனக் காவல்துறையினர் அலறியடித்துக்கொண்டு அங்கே வந்திருந்தார்கள். சமாதிமீது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கதிரன் சிவபாலனை உலுக்கி எழுப்பிய காவல்துறை அதிகாரிகள் அவரது கைகளில் விலங்கை மாட்டிவிட்டு, மணிமண்டபத்தின் அலுவலக அறைக்கு அழைத்துவந்து உட்கார வைத்தார்கள். சிவபாலனுக்கோ எந்தப் பதற்றமுமில்லை. அவர் உற்சாகமாகத் தனது கால்களை ஆட்டியவாறே “ஒரு தேநீர் கிடைக்குமா?” என ஆங்கில மொழியில் கேட்டார். காவல்துறையினர் அவருக்குத் தேநீர் வழங்கிவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினார்கள். 3 பாரிஸில் ‘லிபி வட்டம்’ என்றொரு தமிழ் இலக்கியக் குழுவினர் ஏழெட்டு வருடங்களாகவே இயங்கிவருகிறார்கள். நாவல் – சிறுகதை வாசிப்பு, விமர்சனம் என அவ்வப்போது கூட்டங்களை நடத்துவார்கள். இந்தக் கூட்டங்களுக்குப் பதினைந்து – இருபது பேர் வருவார்கள். லிபி வட்ட உறுப்பினர்களே ஏழெட்டுப் பேர் இருக்கிறார்கள். எல்லாக் கூட்டங்களிலும் அதே முகங்கள்தான் திரும்பத் திரும்பக் காணப்படுகின்றன. லிபி வட்டத்தினர் உலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் தீவிரமான கருத்துகளைக் கொண்டவர்கள். பேச்சைத் தொடங்கும்போதே “எனக்கு தஸ்தயேவ்ஸ்கி மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, அந்தோனியோ கிராம்ஷி மீது அதிருப்தி இருக்கிறது” என்றெல்லாம் அதீத தன்நம்பிக்கை மிளிரப் பேசக் கூடியவர்கள். தேசியம், தலித்தியம், பெண்ணியம், மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என எல்லாவற்றைப் பற்றியுமே அவர்களிடம் ஆளுக்கொரு திட்டவட்டமான கருத்து இருந்தது. அவர்கள் எல்லோருமே வாரத்திற்கு ஆறு நாட்கள் கடுமையாக வேலை செய்பவர்கள். இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பது அரிது என்றாலும், இலக்கியத்திற்காகக் காசு செலவழிப்பதில் பின்நிற்காதவர்கள். தமிழில் வெளிவரும் அநேகமான நூல்களை பாரிஸ் தமிழ் புத்தகக் கடைகளில் அறாவிலைக்கு வாங்கியாவது வாசித்துவிடுவார்கள். வாசித்தவற்றைத் தங்களுக்குள் தீவிரமாக விவாதிப்பார்கள். அவர்களுடைய பொதுவான கருத்துப்படி தற்போது இலங்கைத் தமிழ் இலக்கியத்துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுணக்கத்தை உடைப்பதற்குத் தங்களால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் தீவிரமாகச் சிந்தித்தபோதுதான், இலங்கையில் சிறுகதைப் பரிசுப் போட்டியொன்றை நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசு என்றெல்லாம் கொடுத்தால் ஆறுதலுக்காக எழுதுபவர்களும் கதைகளை எழுதி எல்லோரது நேரத்தையும் வீணடிப்பார்கள் என்பதால் ஒரேயொரு கதைக்குத்தான் பரிசு. மரத்தில் ஒரேயொரு கனி என்றால்தான் பறவைகளின் கவனம் சிதறாது என்பது லிபி வட்டத்தினரின் எண்ணம். தேர்வு செய்யப்படும் கதைக்கு இலங்கை நாணயப் பெறுமதியில் ஒரு இலட்சம் ரூபாயுடன் விருதுக் கேடயமும் கொடுப்பது எனவும் பரிசு பெறும் எழுத்தாளருக்கு பிரான்ஸ் விசா கிடைத்தால், அவரைப் பரிசளிப்பு விழாவுக்கு அழைத்துக் கவுரவித்து அனுப்புவது எனவும் முடிவு செய்தார்கள். லிபி வட்டத்தினரிடம் பரிசுப் போட்டி வைப்பதைத் தவிர இலக்கியத்திற்குப் பொருந்தாத இன்னொரு குணமும் உண்டு. அவர்கள் நேரம் தவறாமையை மிகக் கறாராகக் கடைப்பிடிப்பார்கள். குறித்த நேரத்திற்கு ஒரு பார்வையாளர்கூட வரவில்லை என்றாலும், வெற்று நாற்காலிகளை வைத்துக்கொண்டே கூட்டத்தை ஆரம்பிக்க அவர்கள் தயங்கியதில்லை. அவர்களுடைய கூட்டத்திற்கு வருவதென்னவோ பத்திருபது பேர் என்றாலும், ஒரு மாநாட்டையே நடத்துவது போன்ற கண்டிப்பான திட்டமிடலுடன்தான் ஒழுங்குகளை மேற்கொள்வார்கள். சிறுகதைப் போட்டிக்கு நடுவர்களாக வெளியாட்களை அவர்கள் நியமிக்கவில்லை. எங்களுடைய பரிசு, எங்களுடைய பணம், எங்களுடைய முயற்சி என்பதால் நாங்களே சிறந்த கதையைத் தீர்மானிப்போம் என்பது அவர்களது நிலைப்பாடு. அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லையென்று ஒரேயடியாகச் சொல்லிவிடவும் முடியாது. அவர்களைப் பேச விட்டால் புதுமைப்பித்தனை விட எஸ்.பொன்னுத்துரை ஏன் முக்கியமானவர் என ஒருநாள் முழுவதும் விரிவாகப் பேசுவார்கள். இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில்தான் சிறுகதைப் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. கதிரன் சிவபாலன் என்ற அறிமுக எழுத்தாளர் எழுதியிருந்த ‘மாறிலி’ என்ற சிறுகதைதான் பரிசு பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறைகளில் ஈடுபடுவோரின் கனவான் தந்திரங்களைச் சித்திரித்து யதார்த்தமாகவும் எள்ளலாகவும் அந்தச் சிறுகதை எழுதப்பட்டிருந்தது. எழுதியவரின் முதற்பெயர் ‘கதிரன்’ என இருப்பதால் அவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவராகவே இருப்பார் என லிபி வட்டத்திலுள்ள ஒவ்வொருவருமே தமக்குள் எண்ணினார்களே தவிர, அந்த எண்ணத்தை எவருமே அடுத்தவருக்கு வெளிப்படுத்தவில்லை. சிவபாலனுக்கு பிரான்ஸ் விசாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடக்கியபோதுதான், சிவபாலன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராக இருக்கிறார் என்பது லிபி வட்டத்தினருக்குத் தெரிய வந்தது. அரசாங்க உத்தியோகத்தர் என்பது பிரான்ஸ் விசா கிடைப்பதற்குப் பெரும் சாதகமான விஷயம். தவிரவும், லிபி வட்டம் கலாசார அமைப்பாக பிரான்ஸில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் சாதகமான விஷயமே. லிபி வட்டத்தினரால் ‘ஸ்பொன்சர்’ கடிதம் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டு சிவபாலனுக்கும் கொழும்பிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், விசா கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்திலேயே லிபி வட்டத்தினர் இருந்ததால், பரிசளிப்பு விழாத் தேதியை பொதுவெளியில் அறிவிக்காமலேயே இருந்தார்கள். பிரெஞ்சுத் தூதரகத்தில் நூறு கேள்விகள் கேட்டுக் குடைந்த பின்பாக சிவபாலனுக்கு இரண்டு வாரங்களுக்கான விசா வழங்கினார்கள். அந்தச் செய்தியை அறிந்ததும் லிபி வட்டத்தினர் உற்சாகத்தில் குதித்தனர். பரிசளிப்பு விழாவுக்கான தேதி உடனடியாகவே பொதுவெளியில் அறிவிக்கப்பட்டது. சிவபாலனை இரண்டு வாரங்கள் கவுரமாகவும் சிறப்பாகவும் பாரிஸில் உபசரித்து, எந்தக் குறையுமில்லாமல் விழாவை நடத்தி முடித்து, விருதுக் கேடயத்துடன் அவரை இலங்கைக்கு வழியனுப்புவது வரையான திட்டங்களை லிபி வட்டத்தினர் பார்த்துப் பார்த்துச் செதுக்கத் தொடங்கினார்கள். சிவபாலன் பாரிஸிலுள்ள தனது உறவினர்களின் வீட்டில் தங்கவே விரும்புவார் என்றே லிபி வட்டத்தினர் நினைத்தார்கள். ஆனால், அப்படியெல்லாம் தனக்கு உறவினர்கள் அய்ரோப்பாவிலேயே கிடையாது என்று சிவபாலன் தொலைபேசியில் லிபி வட்டத்தினரிடம் தெரிவித்தபோது, அவர்களுக்கு இது புதினமாகக் கிடந்தது. அய்ரோப்பாவில் சொந்தக்காரர்களே இல்லாத ஒரு யாழ்ப்பாணத்தானா என்று அவர்கள் வாயைப் பிளந்தார்கள். “சிவபாலன் மலையகத்தைச் சேர்ந்த ஆளாயிருக்கலாம்… இப்ப யாழ்ப்பாணத்தில படிப்பிக்கலாம்” என்று ஒருவர் தனது ஊகத்தை வெளியிட்டார். லிபி வட்டச் செயற்பாட்டாளர் கருணானந்தன் வீட்டில் முதல் வாரமும், இன்னொரு செயற்பாட்டாளரான அலெக்ஸ் வீட்டில் அடுத்த வாரமும் சிவபாலனைத் தங்க வைப்பதாக முடிவானது. பாரிஸைச் சுற்றிக்காட்டும் பொறுப்பை ‘பசுமை’ மதியரசு ஏற்றுக்கொண்டார். இதற்காகவே வேலையிலிருந்து இரண்டு வாரங்கள் விடுப்பு எடுக்க அவர் முடிவு செய்திருந்தார். லிபி வட்டத்தினர் எல்லோருடைய வீட்டிலும் முறைவைத்து சிவபாலனை விருந்துக்கு அழைப்பது என்பது அவர்களது பெரு விருப்பம். இந்தத் திட்டங்கள் எல்லாவற்றையும் பிசகில்லாமல் வகுத்த பின்பும் அவர்களிடம் ஒரு கேள்வி எஞ்சியிருந்தது. எழுத்தாளர் சிவபாலன் எப்படியான மனிதராக இருப்பார்? தொலைபேசியில் பேசும்போது கொஞ்சம் அப்பாவித்தனமாகவும் அதேவேளையில் தன்னடக்கத்துடனும் பேசுகிறார். “எனக்கும் இலக்கியத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லைப் பாருங்கோ… நான் படிச்சது கணிதம், படிப்பிக்கிறதும் கணிதம். பின்ன, கொரோனா காலத்தில வீட்டுக்கேயே அடைஞ்சு கிடைக்கேக்க என்ர மனிசி வாசிக்கிற கதைப் புத்தகங்களில சிலதை எடுத்து வாசிச்சுப் பார்த்திருக்கிறன். உண்மையா நடந்த ஒரு சம்பவத்தை வைச்சுக் கதை எழுதியிருக்கிறன். எனக்கு நீங்கள் தந்த பரிசு இலக்கியத்துக்காக கிடைச்சது இல்ல… உண்மைக்கு கிடைச்சதுதான்” என்றார். தொலைபேசியில் பேசியதைப் போலவேதான் நேரிலும் சிவபாலன் இருந்தார். மிக மென்மையான குரலிலும் தொனியிலும் பேசினார். அடிக்கடி அலைபேசியை உருட்டி அதில் ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டால் மிக நீளமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். இருபது வருட ஆசிரியப் பணியால் இந்தப் பண்பு அவரிடம் வந்திருக்கலாம். சிவபாலன் பிரான்ஸுக்கு வந்த அன்றிரவு, லிபி வட்டத்தின் பொருளாளர் காண்டீபன் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேசையில் மதுவும் இருந்தது. தனக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்று சிவபாலன் புன்னகையுடன் சொன்னார். அன்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சிவபாலனுக்குத் தூக்கம் கண்களை அழுத்தினாலும் புன்னகையுடன் சமாளித்துக்கொண்டிருந்தார். பேச்சு சிவபாலனின் ‘மாறிலி’ சிறுகதையில் வந்து நின்றது. கருணானந்தனே முதலில் ஆரம்பித்தார். “உண்மையில மாஸ்டர்… அற்புதமான ஒரு கதை எழுதியிருக்கிறியள். படிச்சால் கண்ணீரும் வருகுது ஆனால், அதை மீறிக்கொண்டு கோவமும் வருகுது. உதுதான் கதையின்ர வெற்றி. டொமினிக் ஜீவாட கதையளிலும் இந்தப் பண்பு இருக்கு. ஒரு தலித்துக்குக் கிடைக்கிற கொடுமையான வாழ்க்கை அனுபவம் எங்கிட லிபி வட்டத்தில இயங்கிற ஒருத்தருக்கும் இல்லை எண்டதுதான் உண்மை. ஆனால், உங்கிட கதை அந்த அனுபவத்தை எங்களில தொற்ற வைச்சிற்றுது. ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டுது. அதுதான் எழுத்தின்ர வீரியம்! கலையின்ர தரிசனம்! பெரிய விஷயம் மாஸ்டர்!” மூர்த்திக்கு உரத்த குரல். “மாஸ்டர் உங்கிட கதையில ‘காடல்முனை’ எண்டொரு ஊர் வருது. நான் கேள்விப்பட்டதேயில்ல…” “கேள்விப்பட்டிருக்க மாட்டியள். அதொரு சின்னக் கிராமம். வடமராட்சியில இருக்கு. அதுதான் என்ர ஊர்” என்றார் சிவபாலன். சிவபாலனை நாளுக்கு ஒவ்வொரு இடமாக ஈஃபிள் கோபுரம், அருங்காட்சியகங்கள், வெர்சாய் அரண்மனை என்றெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக்காட்ட வேண்டும் என்று மதியரசு திட்டமிட்டிருந்தார். அதன்படியே ஈஃபிள் கோபுரத்திற்குப் போய்விட்டு வரும் வழியில், தமிழர்களின் கடைத்தெருவான லாசப்பலுக்கு சிவபாலனை தேநீர் அருந்த அழைத்துச் சென்றார். சிவபாலன் ஈஃபிள் கோபுரத்தைப் பார்த்தபோது “இதைப் பார்த்துப்போட்டு மகாத்மா காந்தி ‘இரும்புக் குப்பை’ எண்டு சொன்னவராம்… சரியாத்தான் சொல்லியிருக்கிறார்” என்றார். அந்தக் கோபுரத்தையே பார்த்து ஆச்சரியப்படாத சிவபாலன் தமிழர்களின் கடைத்தெருவைப் பார்த்து ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார். பாரிஸில் இப்படி ஓர் இடம் இருக்குமென அவர் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. தமிழர்களின் கடைத்தெரு என்பதை விடக் கடைத் தெருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏழெட்டுத் தெருக்களில் கடைகள் பரவியிருந்தன. நடுவிலே சிங்களத்தில் பெயர்ப் பலகை போட்டு இரண்டு சிங்களக் கடைகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் அந்த வீதிகளிலே தேநீர் அருந்தியவாறும், வெற்றிலை சப்பியவாறும், வீதியில் நின்று அரட்டையடித்தவாறும் இருந்தார்கள். சிவபாலனின் கணித மூளை கடகடவெனக் கணக்குப் போட்டு லாசப்பல் டவுன், பருத்தித்துறை டவுனைவிடப் பெரிது எனக் கண்டுபிடித்தது. அடுத்தநாளிலிருந்து மதியரசு எங்கேயாவது அருங்காட்சியம் அல்லது அரண்மனைக்குப் போகலாமென்றால், சிவபாலன் “நாங்கள் லாசப்பலுக்குப் போவம்” என்றார். “மாஸ்டர் அங்க என்ன கிடக்கெண்டு அதைப் பார்க்கோணும் எண்டுறியள்?” என்று மதியரசு சற்றுக் குழப்பத்துடனேயே கேட்டார். “தமிழ் சனங்களைப் பார்க்க ஆசையாக்கிடக்கு.” “ஹோம் சிக்! மாஸ்டருக்கு ஊருக்குப் போற எண்ணம் வந்திற்றுது போல… இன்னும் நாலு நாள்தானே… கூட்டத்தை முடிச்சுக்கொண்டு போயிடலாம் மாஸ்டர். கவலைப்படாதேயுங்கோ” என்றார் மதியரசு. 4 பரிசளிப்புக் கூட்டத்தில் சிவபாலன் தனது உரையை இவ்வாறு தொடங்கினார்: “முதலில் லிபி இலக்கிய வட்டத்து நண்பர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எடுத்த முயற்சியால்தான் நான் இப்போது உங்கள் முன்னே நின்று இந்தக் கவுரவத்தைப் பெறுகிறேன்…” சிவபாலன் பேசி முடித்தபோது, மதியரசுவுக்குக் கண்ணீரே வந்துவிட்டது. யாரும் பார்க்காதவாறு இரகசியமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். ‘சிவபாலனிடம் பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கலாம்’ என்று அறிவிக்கப்பட்டபோது, சபை சர்வ அமைதியாக இருந்தது. வழமையாகவே இப்படித்தான் நடக்கும் என்பது லிபி வட்டத்தாருக்கும் தெரியும். அந்த அமைதியை உடைத்தெறியும் தந்திரமும் அவர்களுக்கு அத்துப்படி. அவர்களில் ஒருவரே முதல் கேள்வியைக் கேட்டுவிட்டால், பின்பு சபையோர் நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு கேள்விகளைக் கேட்பார்கள். கேட்காவிட்டால் தமது மாண்பு குறைந்துவிடும் என்பது போல் கேள்விகளுடன் முண்டியடிப்பார்கள். எனவே, முதல் கேள்வியை கருணானந்தனே கேட்டார்: “நாற்பது வயதுக்குமேலே இலக்கியம் எழுத வந்து வெற்றிபெற்ற ஒரேயொரு எழுத்தாளர் என கி.ராஜநாராயணனைச் சொல்வார்கள். நீங்கள் நாற்பத்தைந்து வயதிலே உங்களது முதல் சிறுகதையை எழுதியிருக்கிறீர்கள். இது தொடருமா?” சிவபாலன் தனது வழக்கப்படி நீளமாகவே பதிலளித்தார். “நான் எழுதியது எனது சொந்தக் கதை. விரக்தியின் உச்சத்தில் இருந்து நான் எழுதிய கதை. இருபது வருடங்களுக்கு மேலாக நான் ஆசிரியராக இருக்கிறேன். என்னுடைய கல்வித் தகமைக்கும் பணிமூப்புக்கும் உரிய பதவி எனக்குக் கிடைக்காமலேயே இருக்கிறது. இப்போது நான் தலைமையாசிரியராக ஆகியிருக்க வேண்டும். ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் தலைமையாசிரியராக வரக்கூடாது என்பதற்காக ஆதிக்கசாதியினர் பல தந்திரமான நடவடிக்கைகளைக் கையாள்கிறார்கள். இது யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. மாவட்டக் கல்வித்துறையில் அதிகாரம் உயர்ந்த சாதி எனச் சொல்லப்படுபவர்களிடமே குவிந்திருக்கிறது. இதற்கு எதிராக நான் பல வழிகளில் போராடிப் பார்த்துவிட்டேன். எல்லாத் திசைகளிலும் நிராகரிப்பே எனக்குக் கிடைத்தது. என்னுடைய கதையில் வரும் ஆசிரியர் கோபமுற்றுத் தனது வேலையையே ராஜினாமா செய்துவிடுகிறார். நான் விரக்தியோடு ஒரு கதை எழுதினேன். அவ்வளவுதான்.” “அய்யா… யாழ்ப்பாணத்தில் இப்போது சாதி ஒடுக்குமுறை இல்லை என்கிறார்களே. கதைக்காக நீங்கள் மிகைப்படுத்திச் சொல்கிறீர்களா?” என்றொரு கேள்வி சபையிலிருந்து வந்தது. “இப்போது சாதி ஒடுக்குமுறை இல்லை என உங்களிடம் யார் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சொன்னவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவராக நிச்சயமாக இருக்கமாட்டார். வட்டுக்கோட்டையில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் குடியிருப்புத் தாக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டவர்கள் தேரில் வடம் பிடிப்பதைத் தவிர்ப்பதற்காக இராணுவத்திரை, இயந்திரத்தை வைத்துத் தேர் இழுத்த சம்பவங்கள், ஒடுக்கப்பட்ட சாதியினரின் குடியிருப்புக்கு நடுவே ஆதிக்க சாதியினரின் சுடுகாடு, சாமிக்குப் பூ வைத்த ஒடுக்கப்பட்ட சாதி இளைஞன் தாக்கப்பட்டது போன்ற மிகச் சில சம்பவங்கள் மட்டும்தான் வெளியே வந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். உயர்சாதி எனச் சொல்லப்படுபவர்கள் எங்களைச் சக மனிதர்களாகவே மதிப்பதில்லை என்பதே உண்மை.” கேள்விகளுக்குச் சிவபாலனின் பதில்கள் எப்போதும் போலவே மிக விரிவாகவும் தெளிவாகவுமிருந்தன. ஒவ்வொரு பதிலுக்கும் லிபி வட்டத்தினர் கைதட்டினார்கள். விழா முடிவில் ஒட்டுமொத்தச் சபையுமே எழுந்து நின்று கைதட்டி, சிவபாலனுக்கு மரியாதை செலுத்தியது. 5 வியாழக்கிழமை சிவபாலனின் விசா முடிகிறது. அன்றுதான் அவர் இலங்கைக்குத் திரும்ப வேண்டும். திங்கட்கிழமை காலையில், சிற்பக்கலையில் சிறந்த ‘நோத்துறு டாம்’ தேவாலயத்தைப் பார்வையிட சிவபாலனை, மதியரசு அழைத்துச் சென்றிருந்தார். “கெதியாக் கோயிலைப் பார்த்து முடிச்சிட்டு லாசப்பலுக்குப் போய் தமிழ் ஆக்களைப் பார்ப்பம்” என்றார் சிவபாலன். அவர்கள் காரில் லாசப்பலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, சிவபாலன் அலைபேசியில் ஏதோ ஆராய்ந்தவாறே வந்தார். பின்பு அவர் மதியரசுவிடம் “நான் இப்பிடியே பிரான்ஸிலேயே நிக்கலாம் எண்டு பார்க்கிறன்…நீங்கள் ஃப்ளைட் டிக்கெட்ட கான்ஸல் பண்ணுங்கோ” என்றார். லாசப்பலில், அம்மாளாச்சி உணவகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது “மாஸ்டர் ஒரு நிமிசம் இருங்கோ… இந்தா வாறன்” எனச் சொல்லிவிட்டு மதியரசு உணவகத்திற்கு வெளியே வந்து, மூர்த்தியை அலைபேசியில் அழைத்து “மாஸ்டர் இங்கேயே நிற்கப் போறாராம்” என்றார். “நிற்கப் போறாரோ? இதென்னடாப்பா கரைச்சல்” என்று பதறினார் மூர்த்தி. மூர்த்தியின் மூலமாக லிபி வட்டத்தினருக்கு உடனடியாகச் செய்தி பரவியதும், அவர்கள் எல்லோருமே கலவரமானார்கள். சிவபாலன் பிரான்ஸ் விசா வாங்குவதற்காக ‘ஸ்பொன்சர்’ கடிதம் கொடுத்த தங்களுக்கு எதுவும் சட்டச் சிக்கல் ஏற்படுமா எனக் கலந்தாலோசித்தார்கள். சட்டச் சிக்கல் வராது என்பது தெளிவானதும் கொஞ்சம் நிம்மதியானார்கள். எனினும், பரிசளிப்பு விழாவுக்கு என அழைத்துவிட்டு, விசா முடிந்த பின்பும் அவரை இங்கேயே தங்கவைப்பது நியாயமற்றது என்ற முடிவுக்கே அவர்கள் வந்தார்கள். அன்றிரவு மகிந்தன் வீட்டில் சிவபாலனுக்கு விருந்து ஏற்பாடாகியிருந்தது. இதைப் பற்றி அங்கே பேசலாம் என்று லிபி வட்டத்தினர் முடிவெடுத்தார்கள். வழமைபோல அன்று விருந்து உற்சாகமாக இல்லைத்தான். ஆனால், சிவபாலன் வழமையைவிட உற்சாகமாக இருந்தார். மூத்தவர் கருணானந்தனே பேச்சைத் தொடக்கினார். “மாஸ்டர்… இஞ்சயே நிற்கப்போறதாச் சொன்னீங்களாம்… மெய்யே?” “ஓம். அப்பிடித்தான் யோசிச்சிருக்கிறன்!” “உங்களுக்கு விசா முடியுதெல்லே மாஸ்டர்… பிறகு எப்பிடி?” “நான் இஞ்ச அரசியல் தஞ்சம் கேட்கலாம் எண்டு முடிவெடுத்திருக்கிறன்.” சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. அலெக்ஸ் அந்த அமைதியை உடைத்தார். அவருடைய வீட்டில்தான் சிவபாலன் இப்போது தங்கியிருக்கிறார். “இலங்கையில சண்டை முடிஞ்சு பதினாறு வருசமாகுது மாஸ்டர். நீங்கள் நினைக்கிற மாதிரி லேசா அகதி விசா எடுக்க ஏலாது. கிடைக்காது எண்டதுதான் உண்மை.” “நான் சண்டையைக் காரணம் காட்டி விசா கேட்கப் போறதில்ல. சமூகப் பாகுபாடு, சமூக ஒடுக்குமுறை. அதைக் காரணம் காட்டியும் விசா கேட்கலாம் எண்டு ஜெனிவா அகதிச் சட்டத்தில இருக்குத்தானே…” “அப்பிடி இல்லையே மாஸ்டர்…” “இருக்குதுங்கோ… உங்களுக்குத் தெரியாதே? நான் ‘நெட்’டில எல்லாம் தேடி வாசிச்சுத்தான் இந்த முடிவெடுத்தனான்.” “ஆனால், நீங்கள் இலக்கிய விழாவுக்கு எண்டு விசா எடுத்து வந்தனிங்கள். பிறகு என்னெண்டு அகதி விசா கேட்கலாம்?” “முந்தியும் இலங்கையிலயிருந்து வேற வேற இலக்கிய விழாக்களுக்கு விசா எடுத்து வந்த சில ஆக்கள் அகதி விசா போட்டிட்டு இங்கேயே இருக்கினம்தானே?” “அதுவும் ‘நெட்’டில வந்திற்றுதோ?” என்று கொஞ்சம் சலிப்புடன்தான் கேட்டார் மூர்த்தி. “அது பிழைதானே மாஸ்டர்… சட்டவிரோதம்” என்றார் கருணானந்தன். “அகதியா வாற ஆக்கள் எல்லாருமே சட்டவிரோதமா இப்பிடி ஏதாவதொரு வழியிலதானே இங்க வாறது. நீங்களும் அப்பிடித்தானே வந்திருப்பீங்கள்?” “உண்மைதான் மாஸ்டர்… ஆனால், அகதியா வாற அளவுக்கா இலங்கையில சாதிப் பிரச்சினை இருக்குது?” என்று வெடுக்கெனக் கேட்டார் மகிந்தன். “இருக்குது எண்டுதானே ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில சொன்னனான்!” “மாஸ்டர்… நீங்கள் அங்க படிப்பிக்கிறீங்கள். அந்த நல்ல வேலையை விட்டிட்டு இஞ்ச நிண்டு எங்களோட சேர்ந்து கூட்டித் துடைச்சு வேலை செய்யப் போறீங்களே?” “மரியாதையோட கூட்டித் துடைக்கலாம் எண்டு நினைக்கிறன். இந்த ரெண்டு கிழமையா ஊரைச் சுத்திப் பார்த்திட்டன். எல்லாருக்கும் எல்லாரும் மரியாதை. உங்கிட எல்லாற்ற வீட்டையும் வந்து நான் சாப்பிடுறன், தங்குறன். என்ன சாதியெண்டு நீங்களும் பார்க்கயில்ல. நானும் பார்க்கயில்ல. லாசப்பலைப் பார்க்க எவ்வளவு சந்தோசமாக் கிடக்கு! என்னென்னவோ சாதி ஆக்கள் வெளிநாட்டுக்கு வந்து ஒரு வலுவான சமூகமாக உருவாகியிருக்கிறியள். அதுதான், லாசப்பல் போக வேணும் எண்டு நெடுகவும் மதியரசிட்டக் கேக்கிறனான். எனக்கு அகதி விசா கிடைச்சா என்ர குடும்பத்தையும் இஞ்ச கூப்பிடலாம். நான் படுற அவமானத்தை என்ர பிள்ளையளும் அங்க கிடந்து படவேண்டாம். சாதி பார்க்காம வாய்ப்புத் தாற நாடு இது!” “மாஸ்டர்… இந்த நாட்டில நான் முப்பது வருசம் அகதியாக இருந்த அனுபவத்தில சொல்லுறன்…” என்று மூர்த்தி என்னவோ சொல்ல ஆரம்பிக்க “நான் மூவாயிரம் வருசமா அகதி” என்றவாறே மூர்த்தியின் கண்களைப் பார்த்தார் சிவபாலன். கருணானந்தன் முடிவாகச் சொன்னார்: “மாஸ்டர்! நீங்கள் குறை நினைக்க வேணாம். நாங்கள் ஸ்பொன்சர் கடிதம் தந்துதான் நீங்கள் இஞ்ச வந்திருக்கிறியள். தயவு செய்து நீங்கள் திரும்பிப் போகத்தான் வேணும். பின்னடிக்குப் பிரச்சினை வேணாம்!” சிவபாலன் அமைதியாக இருந்தார். லிபி வட்டத்தினர் தாங்கள் ஒழுங்கமைத்த திட்டப்படியே செயலாற்றினார்கள். செவ்வாய்கிழமையன்று ‘கொன்கோர்ட்’ சதுக்கத்தைப் பார்க்க சிவபாலனை மதியரசு அழைத்துச் சென்றார். எக்காரணம் கொண்டும் லாசப்பலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என மதியரசுவுக்கு லிபி வட்டத்தினர் அறிவுறுத்தியிருந்தனர். புதன்கிழமையன்று காலையில் ‘வைட் சேர்ச்’ பார்க்க சிவபாலனை அழைத்துச் சென்ற மதியரசு மாலை நான்கு மணியளவில், பந்தியோன் மணிமண்டபத்தைப் பார்க்கச் சிவபாலனை அழைத்துச் சென்றார். அதுதான் சிவபாலன் பாரிஸில் பார்க்கப் போகும் கடைசி இடம். நாளை அதிகாலையில் இலங்கைக்குப் புறப்படும் விமானத்தில் அவரை வழியனுப்பிவைக்க லிபி வட்டத்தினர் எல்லோருமே விமான நிலையத்திற்குச் செல்வதாகத் திட்டம். பந்தியோன் மணிமண்டபத்துள் நுழைவதற்குப் பார்வையாளர்கள் பெருங் கூட்டமாகக் காத்திருந்தார்கள். நீண்ட வரிசையில் நின்று நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு மதியரசுவும் சிவபாலனும் உள்ளே நுழைந்தார்கள். இன்னும் ஒரு மணிநேரத்தில் மணிமண்டபத்தை மூடிவிடுவார்கள். சன நெரிசலோடு நெரிசலாக அவர்கள் சிலுவை வடிவப் பாதாள மண்டபத்தில் சமாதிகளைப் பார்த்துக்கொண்டு மெதுமெதுவாக நகரும்போதே, ‘மணிமண்டபத்தை மூடும் நேரமாகிவிட்டது, பார்வையாளர்கள் வெளியேறவும்’ என்ற அறிவிப்பு ஒலிபெருக்கியில் கேட்டது. பார்வையாளர்கள் குறுகிய படிகளில் மேலேறிச் சென்று கும்பலாக வெளிவாசலை நோக்கி நகர்ந்தார்கள். சிவபாலன் மதியரசுவைப் பார்த்தார். மதியரசு வெளிவாசலில் பார்வையை வைத்தவாறே முன்னே நகர்ந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்த சிவபாலன் அப்படியே திரும்பி, சனக் கும்பலுக்குள் நுழைந்து பாதாள மண்டபத்தை நோக்கி நடந்தார். பாதாள மண்டபத்திற்குள் எங்கெல்லாம் கமெராக்கள் இருக்கின்றன என அவர் முன்பே கணக்குப் போட்டு வைத்திருந்தார். அந்தக் கமெராக்களின் பார்வையில் சிக்காமல் நடந்து சென்று ரூஸோவின் சமாதிக்குப் பின்னால் இருளில் மறைந்துகொண்டார். 6 பந்தியோன் மணிமண்டபத்தின் அலுலக அறைக்குள் சிவபாலனை விசாரணை செய்து முடித்த காவல்துறை அதிகாரி பெருமூச்சொன்றை வெளியேற்றியவாறே சிவபாலனின் கைகளிலிருந்த விலங்கை அகற்றிவிட்டு, ஆங்கில மொழியில் சொன்னார்: “திரு. கதிரன் சிவபாலன்! விமானத்தில், ரயிலில், கப்பலில், காய்கறி மூட்டைக்குள் மறைந்திருந்துவிட்டு அகதித் தஞ்சம் கோரியவர்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். சமாதிக்குப் பின்னால் மறைந்திருந்து தஞ்சம் கோரும் ஒருவரை நான் இப்போதுதான் சந்திக்கிறேன். நல்வரவாகுக! இந்தத் துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருக்கும் தொண்டு நிறுவனம் இங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் இருக்கிறது. நீங்கள் அங்கே சென்றால், முறையாக அகதித் தஞ்சம் கோருவதற்கு அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.” சிவபாலன் அந்தத் துண்டுச் சீட்டை வாங்கிக்கொண்டு உற்சாகத்துடன் மணிமண்டபத்தின் வெளிவாசலை நோக்கி நடந்தார். அந்த வாசலின் கதவுகள் கண்ணாடிகளாலானவை. கண்ணாடியைத் துடைத்து அபினா சுத்தம் செய்துகொண்டிருந்தார். கண்ணாடியில் மங்கலாக சிவபாலனின் உருவம் தோன்றியபோது, அந்த உருவத்தைப் பார்த்து “பொன்ஜூர் ரூஸோ” என்றார் அபினா. (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு சிறப்பு மலரில் வெளியாகியது. டிசம்பர் -2025) https://www.shobasakthi.com/shobasakthi/2026/01/24/பொன்ஜூர்-ரூஸோ/?fbclid=IwdGRleAPhQjZleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEelNjOvGfSYhzJwAYJxWdJm9TyKgcRk8KiKMQxqneSDw-oVgxu_mlHIvnSlhg_aem_TPU71sFRoGyA0LOMc86Lyg
  3. முகாமுகம் சிறுகதைத் தொகுப்பு முன்னுரை இத்தொகுப்பிலுள்ள ஆறு சிறுகதைகளும் ஈழப்போருக்குப் பின்னைய காலத்தில் எழுதப்பட்டாலும் ஈழப்போரைப்பற்றிய கதைகள். உண்மைக்கதைகளை மையமாகக் கொண்ட சிறுகதைகள். ஒவ்வொரு கதையிலும் குறைந்தது ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் பாத்திரமாக வருகிறார். புலிகளின் தலைவர் பிரபாகரன், பிரதித்தலைவரான புலனாய்வுத் தளபதி பொட்டம்மான், புலிகளின் சிறந்த இராணுவத் தளபதியாக அறியப்பட்ட கருணா அம்மான், புலிகளில் முதல் கேணல் பட்டம்பெற்ற கிட்டு, புலிகளில் முதல் பிரிகேடியர் பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாத்திரங்களாக வருகிறார்கள். இது எப்படி நடந்திருக்க முடியும்? ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விட போர் வியூகங்களையே எம் பள்ளிக்காலத்தில் கேட்டு வளர்ந்தோம். எங்களுக்கு துடுப்பு மட்டையையை விட கால்பந்தாட்ட பந்தை விட ஆடுகள மைதானங்களை விட ஏ.கே 47 துப்பாக்கி, கிரனேட், போர்க்களங்கள் பற்றியே அதிகம் தெரியும். விளையாட்டு வீரர்களை விட ஈழப்போராளிகளைப் பற்றியே அதிகம் தெரியும். ஈழ யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் நெப்போலியன் காலத்து யுத்தங்களைப்பற்றி லியோ ரோல்ஸ்ரோய் எழுதிய போரும் சமாதானமும் என்ற நாவல். அது என்னில் பெரிய உத்வேகமாகப் படிந்துவிட்டது. இக்கணம் இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது நான் மேலே கேட்ட கேள்விக்கும் விடை கிடைக்கிறது. ரோல்ஸ்ரோய் நெப்போலிய யுத்தங்களை தன்னூலுக்கு பாடுபொருளாக்கியது போல நான் என் சிறுகதைகளுக்கு ஈழயுத்தத்தை பாடுபொருளாக்கியிருக்கிறேன்.ரோல்ஸ்ராயின் மாதிரியை நான் பின்பற்றத் தொடங்கியபின் என் பாதை இலகுவானது. கதைகளுக்கு குறைவிருக்கவில்லை. மழைபோலப் பொழியத்தொடங்கியது. எழுதினேன். இச்சிறுகதைத் தொகுதி சிறப்பாக வந்திருக்கிறதா என்பது வாசகர்களாகிய உங்களின் முடிவு. பாராட்டுக்களை விட விமர்சனங்களையே நான் அதிகம் விரும்புவது என் சிறுகதைகளைப் படித்த சிலர் முகநூலில் உள்பெட்டியில் வந்து நீங்கள் உண்மையிலேயே விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தீர்களா? எவ்வளவு இவ்வளவு துல்லியமான விபரங்களை எழுதுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக அமைச்சர் கதிர்காமர் கொலைபற்றிய முகாமுகம் கதையைப்பற்றி. [போரைப்பற்றி போர்த்தளபாடங்களைப் பற்றிய ஆரம்ப அறிவில்லாதவரும் இன்றைய இணைய உலகில் முக்கியமான தகவல்களை இணையத்தில் பெறலாம். முகாமுகம் கதைக்காக குறிப்பாக குறிபார்த்துச்சுடும் துப்பாக்கிகளைப்பற்றி சிலமணிநேரம் நான் இணையத்தில்,செலவளித்தே இக்கதையை எழுதினேன்] விடுதலைப் புலிகளில்,குறிப்பாக இரண்டாம் ஈழ யுத்தத்திற்குப் பிறகு போய்ச்சேர்ந்தவர்கள் பதினெட்டு வயதிற்கு குறைந்த சிறுவர்கள். குடும்பத்தாலோ சமூகத்தாலோ பாரபட்சம் காட்டப்பட்டு வஞ்சிக்கப்பட்டட உளச்சிக்கல்களின் பாதிப்பால் இயக்கத்தில் சேர்பவர்கள். ஐந்து வயதிலும் ஏழு வயதிலும் பெற்றோரை இழந்த நான் சட்டப்படி ஒரு அனாதை. ஆனால்,நான் கொடுத்து வைத்தவன். எனக்கு அற்புதமான தாத்தாவும் சின்னம்மாக்களும் தாய் மாமன்களும் இருந்தார்கள். அவர்களால் குறைகளின்றி வளர்க்கப்பட்டடவன் நான். ஒருபோதுமே நான் விடுதலைப்புலிகளின் உறுப்பினராக இருக்கவில்லை. என் முதல் கவிதை நூலை என் சின்னம்மாக்களுக்கு சமர்ப்பணம் செய்தேன். இந்நூல் என் தாய்மாமன்களுக்கு. - நட்சத்திரன் செவ்விந்தியன்
  4. தோழர் இது அரசு பேருந்து அவர்கள் வைத்ததுதானே சட்டம் ? 😄
  5. @ஏராளன் இன் ஏரியா விடுவிக்கப்பட்டுள்ளது. சந்தோசம்.
  6. அநுர அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் எம்.ஏ.சுமந்திரன் அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (31.10.2024) நடத்திய ஊடக சந்திப்பின் போது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்னைய காலத்தில் நாங்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு வருகின்ற வரைக்கும் மத்திய அரசில் நாங்கள் பங்குபெறக் கூடாது என்கின்ற கருத்துக்கள் நிலவின. கட்சியினுடைய கொள்கை ஆனால், அது கட்சியினுடைய கொள்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அமைச்சுப் பதவிகளை எடுத்த ஒரு காலகட்டமும் இருந்திருக்கிறது. ஆகவே, அப்படியான ஒரு சூழ்நிலை வருகின்ற போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அந்த நேரத்தில் தான் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். எனினும் என்னுடைய சொந்த நிலைப்பாடு செல்லையா குமார சூரியரைப் போலவோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவைப் போலவோ தனி ஒரு அமைச்சராக அமைச்சரவையில் போய் சேருவதென்பது மக்களுக்கு நன்மை பயக்காது. அமைச்சுப் பதவி ஆனால், முருகேசு திருச்செல்வம் போல் கட்சி சார்பாக – கட்சியினுடைய தீர்மானமாக மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் சேர்ந்தார். ஆனால், அமைச்சராக இருந்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனத் தெரிந்த உடனேயே கட்சியின் கட்டளைப்படி அரைவாசிக் காலத்திலேயே அமைச்சுப் பதவியை அவர் பதவிவிலகல் செய்து வெளியே வந்தார். அது வித்தியாசமான ஒரு விடயம். எங்களுடைய மக்களையும் கட்சியையும் பிரபலப்படுத்தி இரண்டோ, மூன்று பேர் அமைச்சரவையில் சேர்ந்திருந்து செயற்பட்டு எங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதென்பதும் நாங்கள் கண்கொண்டும் பார்க்க மாட்டோம். அப்படியான தெரிவு எங்களுக்குக் கிடையாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது என எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran ) தெரிவித்துள்ளார். https://www.athirady.com/tamil-news/news/1740963.html
  7. என்னா ...சாரே ...நம்ம யாழ் சுமந்திரன் விசுவாசிகளுக்கு கோபம் வரப்போகுதே...பார்த்து..பார்த்து
  8. பார் சிறி, நீங்கள் அரசாங்கம் காட்டும் இடத்தில் எல்லாம் கையோப்பம் இட்டால் ஏன் அரச கட்டுபாட்டில் உள்ள திணைக்களம் உங்களை விசாரிக்க போகிறது. பார் சிறி, இதை இப்போதும் விலக்காமல் மேற்பார்வை செய்வது அனுர அரசல்லவா? இது மட்டும் போதுமே - பிரதமருக்கு எதிராக வாக்களிக்க? இராணுவ அதிகாரிக்கு ஆதரவு கொடுத்தீர்களா இல்லையா? நீங்கள் உங்களுக்கும், குடும்பத்துக்கும் மட்டுமே உரியவர். நசுவல் கள்ளன், அமசடக்கி.
  9. இவ்வளவு நடந்த பின்னும், ஆறஅமர்ந்து தமது தவறுகளை சீர்தூக்கி பார்த்து திருந்தும் எண்ணம் இல்லை, மக்களை குறைகூறுவதும் வெற்றியடைந்தோருக்கு சேறடிப்பதும் வறட்டு கௌரவம் பேசுவதும் அவர்களது முட்டாள்தனத்தை காட்டுகிறது. டக்கிலஸை கட்டியணைக்கிறார்கள், ஸ்ரீதரனுக்கு சேறடிக்கிறார்கள். பின், அனுரா கட்சி தங்கள் கட்சி நிலவரங்களை விமர்சிக்கிறார்களாம். இவர்களே தங்கள் கட்சிக்காரரை விமர்சித்தால் கேட்கிறவர்களும் விமர்சிக்கத்தானே செய்வார்கள், அல்லது உண்மையா என தேடத்தான் செய்வார்கள்.
  10. ❤️முன்னின்று நடத்தியமைக்கு நன்றியும், பாராட்டும்.
  11. கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ள 4850 ரூபா கடை உரிமையாளர் திரு ரி.முருகசோதி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன். இருப்பு இருப்பு 205,845.67-4875=ரூ 200,970.67 சதம் இன்று 23/01/2026 4850 ரூபா வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். வைப்புச்செய்த இலத்திரனியல் பற்றுச்சீட்டு. மட்டமாக 30000 ரூபா தருவதாக கேட்டேன், சம்மதித்துள்ளார். 4 லீற்றர் அசிற் காசு 3200 ரூபா இன்று தெரிந்த பாமசி நண்பரின் வங்கிக் கணக்கிற்கு 33200 ரூபா மாற்றியுள்ளேன். ஏற்கனவே சம்பளம் 20000 ரூபாவை பாமசியில் வாங்கிவிட்டார். மிகுதி பத்தாயிரம் ரூபா மற்றும் அசிட் காசு 3200 ரூபா இன்னும் சென்று பெறவில்லை. வாங்கியதும் 30000 ரூபா பெற்றுக்கொண்டேன் என கையெழுத்து பெற்று படத்தைப்போடுகிறேன். இருப்பு இருப்பு 205,845.67-4875=ரூ 167,745.67 சதம் இன்று 23/01/2026 33200 ரூபா வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். பொன்னாலை 3 இயலாமையுடையவர்களின் மலசலகூடப் புனரமைப்பிற்கான மொத்தச் செலவு பொருட்கள் வாங்கிய காசு (கணேசா காட்வெயார்) 84850 கொமட், பூட்டும் பொருட்கள், கொண்டுவந்த ஓட்டோ காசு 44500 அசிட் 3200 சம்பளம் 30000 மொத்த செலவு 162550 மலசலகூடக்குழியில் இருந்து காற்று வெளியேற இரண்டு குழாய்கள் நேற்று பொருத்திவிட்டார். இதன் மூலம் பிளாற் வெடிக்காமல் இருக்கும் என நினைக்கிறேன். பொன்னாலை மூன்று சகோதரர்களில்(நடமாடமுடியாது) இருவர் ஏதாவது ஒன்றில் சாய்ந்தபடி தான் இருப்பார்கள், ஒருவர் மட்டும் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் இருப்பார். கழுத்து எலும்புகளில் ஏற்படும் பிரச்சனையால் தான் இவர்களுக்கு இந்த வருத்தம் என சகோதரி கூறினார். சகோதரிக்கு 2 மகள்கள் இரண்டாவது மகளுக்கும் அதன் தாக்கம் உள்ளது, ஆனால் நடமாடுகிறார். இவர்களைப் போன்ற 5 வேறு வேறு சிறார்களுக்கு கொழும்பில் சத்திரசிகிச்சை செய்ய அழைத்தவர்களாம். அதில் முதலாமவருக்கு செய்த சத்திரசிகிச்சை வெற்றியளிக்காது கோமாவிற்கு போனதால் ஏனையவர்களை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறினார். அங்கே நிறைய உறவுகளுக்குள் திருமணமாகி ஜெனற்றிக் வருத்தக்காறர் இருக்கிறார்கள். 3 மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் ஏதாவது நடத்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுடன் கலந்துரையாடிய போது உணர்ந்தேன். டிசம்பர் 3 ஆம் திகதி நிகழ்விற்கு 2 பேர் வந்தவர்கள், அழைத்து வராதவர் சண்டையாம் தன்னை அழைத்து செல்லவில்லை என. இந்த மகத்தான பணிக்கு உதவிய அத்தனை யாழிணைய உறவுகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.❤️🙏💪 உங்கள் கருத்துகள், நன்கொடைகள், கரிசனைகள் எல்லாவற்றிற்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் எல்லோரதும் ஆதரவோடு தொடருவோம்.
  12. 1979 ல் புறப்பட்ட கப்பல்கள் இன்னும் போய் சேரல்லையா? 😂
  13. நல்லா இருக்கு. இரு ஆலோசனை கருத்துகள். யாழ் என்பது தேவைதானா? முன்னோடி என்ற பெயரே போதும் என நினைக்கிறேன். யாழ்.கொம் உறுப்பினர்கள் ஒருங்கிணைக்கும் அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 என்பதை subtitle ஆக போடலாம்? இதில் இந்த திரிக்கான இணையசுட்டியையும் சேர்க்கலாம்? ஏனையோர் கருத்துக்களையும் பார்ப்போம்.
  14. அத தெரண கருத்துப்படங்கள்.
  15. இதையும் நாமே செய்து கொடுக்கலாம் என்பது என் அபிபிராயம். வாத்தியார் அண்ணா, குசா அண்ணா, யாயினி அக்கா இவர்களோடு ஏனையவர்களும் உங்கள் கருத்தை சொல்லவும். பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு புலரிடம் இருந்து எடுக்க தேவையில்லை. கீழே வாத்தியார் அண்ணா சொன்னது போல், இவ்விரண்டு வேலைகளையும் pilot ஆக செய்வது என்பது நாம் கூடி எடுத்த முடிவுதான். அதை அப்படியே செய்வோம். குசா அண்ணை கேட்டது நாம் தொடர்ந்தும் திருத்தபணிகளையா அல்லது புதிய கட்டுமான பணிகளையா செய்யப்போகிறோம் என்பதையே. தொடர்ந்து புதிய கட்டுமானப்பணிகளைத்தான் செய்ய போகிறோம். வேறு யாரும் இதுபோல் திருத்த பணி உதவி கோரின், அதை அப்போது பரிசீலிப்போம்.
  16. சரணாகதி ராமராஜன் மாணிக்கவேல் பார்த்தன் அதிகமாகத் திரௌபதியிடம் பேசியதில்லை. அவளும் அப்படித்தான். அவனிடம் அவள் அதிகமாகப் பேசியது இல்லையே தவிர, மற்றவர்களிடம் பேசாமல் இருந்தது இல்லை. அவள் சக்கரவர்த்தினி அல்லவா? கல்லும் முள்ளும் மண்டிய வெறும் கட்டாந்தரையில், அத்தனை பெரிய அதிசய அரண்மனை கட்ட வேண்டும் என்றால், எத்தனை எத்தனை கட்டளைகள் பிறப்பித்திருப்பாள்! இந்திரப்பிரஸ்தம் கண்ட ஸ்ரீசக்கரவர்த்தினி! எண்ணங்கள் இல்லாதவனுக்கு ஆசைகள் இல்லை. ஆசைகள் இல்லாதவனுக்குக் கனவுகள் இல்லை. கனவுகள் இல்லாதவனுக்கு இலக்குகள் இல்லை. இலக்குகள் இல்லாதவனுக்குச் செயல்கள் இல்லை. செயல்கள் இல்லாதவனுக்குக் கட்டளைகள் இல்லை. கட்டளைகள் இல்லாதவன் தலைவன் இல்லை. தலைவன் ஆக முடியாதவன் எப்படி அரசனாவது? அரசன் ஆகாதவன் எப்படிச் சக்கரவர்த்தியாவது? அவள் சக்கரவர்த்தினி அல்லவா? நிறையப் பேசுவாள். நிறைவாகப் பேசுவாள். ஆனாலும் அவள் பார்த்தனிடம் அதிகம் பேசியதில்லை. நெஞ்சகலில் தீபம் ஏற்றும் அவளின் அகல்விழிச் சிறு அசைவில், யுகங்களைத் தாண்டும் நீண்ட கதையாடல்கள் நடந்த நினைவுகள் நெஞ்சில் பூக்கும். அதனால் அவளிடம் பேச வேண்டும் என்ற நினைப்பே அவனுக்கு எழுந்ததில்லை. ஆனால் அவளிடம் இப்போது பேசத் தவிக்கிறான். அஸ்தினபுரியிலிருந்து கானகம் வந்த நாள் முதல், அவளிடம் தனியே பேச வேண்டும் என்ற தவிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அந்தத் தவிப்பால் விலகி விலகி நிற்கிறான். அங்கு அந்தக் கொடும் செயல் நடக்கும்போது வெறும் தூசாக இருந்துவிட்டு, இங்கு எப்படி அவளிடம் பேசுவது? அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைக்கும்போதெல்லாம், கண்ணனையே அழைக்கிறான் என்று அறிந்தாள். அவள் கண்ணனின் பெண்வடிவம் என்ற மயக்கம் அவனுக்கு உண்டு. தனக்குள் கண்ணனே எழுகிறான் என்பதையும் கண்டாள். அன்பு, பிரியம், பக்தி கலந்து அவன் “கிருஷ்ணை” என்று அழைக்கும்போது, அவள் உணர்வு நரம்புகள் மீட்டப்படும். அவள் மனக்கொடியில் “கிருஷ்ணை” என்ற அவன் வாய்ச் சொல் மலர்ந்து மலர்ந்து தேன்வடிப்பதை, ரகசிய மணமாய் நுகர்வாள். ஆனாலும் அவள் சக்கரவர்த்தினி அல்லவா? அவளால் காதல் படிக்கட்டில் இறங்க முடியாது. அவளால் இறங்க முடியாது என்பதால், இவனால் ஏறவும் முடியாது. அதனால்தான் அவளிடத்தில் அவன் அதிகம் பேசியதில்லை. ஆனால் இப்போது அவளிடம் பேச வேண்டும் என்று தவிக்கிறான். பார்த்தன் “திரௌபதி” என்று அழைப்பதைத் தவிர்ப்பான். தவறி “திரௌபதி” என்று அழைத்துவிட்டால், அவன் உடலும், கைகளும், காற்றும் அறியாமல் நடுங்குவதை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். இப்போதெல்லாம் அவன் “கிருஷ்ணை” என்று தன்னை அழைத்த பின்புதான் திரும்புகிறாள். “திரௌபதி” என்ற அந்தப் பெயர், அவள் தந்தை துருபதன் நினைவை எழ வைக்கிறது. ஞாபகத்தீ எரிய வைக்கிறது. குருவுக்காக என்றாலும், யாருக்காக என்றாலும், மனிதனை மனிதன் சிறுமைப்படுத்தும் கணம் சுகமாக இருக்கலாம். அந்தக் கணத்தில் வெற்றி பெற்றதாய்க் களிப்புறலாம். அந்தக் கணத்தைத் தாண்டிவிட்டால், அந்தக் கணம் இறக்கி வைக்க முடியாத, அணைக்க முடியாத கனமான கனல் கல் என்றாகிவிடுகிறது. அது அழுத்திச் சுட்டுக்கொண்டே இருக்கும். யுகங்களைக் கடந்தும் கூட அது அணைவதே இல்லை. கணத்தில் செய்த பிழைகளை யுகங்கள்வரை ஓடியும், உழைத்தும் திருத்திவிட முடியுமா? யுதிஷ்டிரன் திரௌபதியைச் சூதில் வைத்த கணம் எத்தனை சிறுபொழுது? இமைக்கணம். அதன் வலி யுகங்களின் வலி; யுகமாந்தர்களின் வலி. அதைத் திருத்திவிட முடியுமா? கணங்களைக் காத்த மனிதன் யுகங்களைக் காத்தவன் ஆகிறான். மகிழ மரத்தில் சாய்ந்து நின்று, நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு, வானத்தின் நீலத்தையும், மேகங்களின் சித்திரத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்த்தன், ஓடை ஓரத்தில் அவிழ்ந்த கூந்தலோடு அமர்ந்திருந்த திரௌபதியைப் பார்த்ததும் திடுக்கிட்டான். காண்டீபம் ஏந்தும் கைகள் நடுங்கின. கை நடுக்கத்தில், சிறு நரம்புகள் பாம்புகள் போலப் புறங்கையில் அசைந்தன. பதறும் கால்களுக்குக் கீழே பூமி பிளந்துவிடாதா? எப்படி அவளிடம் பேசுவேன்? திரௌபதி ஓடையின் கரையில் கிடந்த சந்தன நிற வட்டக்கல்லின்மேல், பெரிய வாழைப்பூவைக் கொய்து குந்த வைத்ததுபோலக் குந்தி, பீமன் தேடிக் கொண்டுவந்த புல் அரிசியைச் சமைப்பதற்காகக் கழுவிக்கொண்டிருந்தாள். வண்டிச் சக்கரம் அளவுக்குப் பெரியதாக இருந்த அந்தக் கல்லைப் பீமன் வெகு தூரத்திலிருந்து தன்னந்தனியாய்த் தூக்கிவந்து அவளுக்காகப் போட்டுவைத்தான். ராஜ நாகங்கள் மலையில் புரள்வதுபோல, அவிழ்ந்த கூந்தல் கற்றைகள் காற்றில் அவள் முதுகிலும், கல்லிலும் புரண்டன. அவளுக்கு எத்தனை நீளமான கூந்தல்! அவள் கொண்டை போடும்போது, தலையின்மேல் ஒரு தலை இருப்பதுபோல இருக்கும். பொன்னும், மணியும், முத்தும், ரத்தினமும், இந்திர நீலமும், மரகதமும், மாணிக்கமும், பூங்காடும் நிறைந்த அவள் கொண்டை, வண்ண மீன் விளையாடும் கடலை உருட்டிக் கொண்டையாக வைத்ததுபோல் குளிர்ந்து ஜொலிக்கும். ஊர்ப் பெண்கள் எல்லாம் அவள் போடும் கொண்டையை நினைத்து, கனவிலும் பெருமூச்சு விடுவார்கள். கூடியிருந்தால் அலர் பேசுவார்கள். தனித்திருந்தால் உள்ளுக்குள் ரகசியமாய்ப் புகழ்வார்கள். சில நேரம் புழுங்குவார்கள், சில நேரம் அழுவார்கள், சில நேரம் சிரிப்பார்கள். அந்தக் கூந்தல் அவர்களைப் பித்துக்கொள்ளச் செய்தது. சிக்கில்லா அவள் கூந்தலில் சிக்கிக்கொள்ளாத மனம் உண்டா? ஆடவர்களைப்பற்றித் தனியாக என்னச் சொல்ல? கொடுத்தே பழக்கப்பட்ட கர்ணன்கூட அவளிடம் எடுக்க நினைத்தான் என்றால்… அந்தக் கூந்தலில் பார்த்தன் குழந்தையாகத் தவழ்ந்த காலம் வரம். யாருடைய சாபம், அதே கூந்தல் துச்சாதனன் கையில் அவளை இழுத்து வரும் கயிறானது? காலம் எத்தனை கொடியது! பதிமூன்று ஆண்டுகள் கழித்தேனும் அவள் கொண்டையிடுவாளா? காலமே அறியும். உச்சம் பெரும் எல்லாமும் நீச்சம் பெறும் என்றால் உச்சம் எதற்கு? அதில் என்ன பெருமை? சிறுமையைக் கடந்துதான் பெருமை, பெருமைப்பட வேண்டும் போலும். பார்த்தன் ஆழமாக மூச்சை இழுத்து, நெஞ்சுக்குள் நிறுத்திப் பையப்பைய விட்டான். கண்ணின் இமைச் சுவர்களில் நீர் திரண்டு நின்றது. வெண்விழி நரம்புகள் சிவப்பேறின. கண்களை மூடித் திறந்தவன், தலையை மெல்ல ஆட்டிக்கொண்டு மீண்டும் திரௌபதியை நோக்கினான். விழியில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளி, அவன் கால் பெருவிரல் நகத்தில் பட்டுத் தெறித்தது. வெந்நீர்த் துளி விழுந்ததுபோல் காலை உதறினான். அவள் உடுத்திருந்த மரவுரிச் சேலை, ஓடையில் இருந்து எழுந்த குளிர்ந்த காற்றில் அசையும்போது, அக்கினிக் குண்டத்தில் மலர்ந்த அனல் மலர்போலத் தெரிந்தாள். கரையில் இருந்த கல்வாழைப் பூக்கள் காற்றில் அசைந்து அசைந்து அவள் தலையைத் தொட்டன. மேகத்தில் நட்சத்திரங்கள் பூப்பதுபோல இருந்தது. வாயில் பசும்புற்கள் வழிய ஓடிவந்து திகைத்து, அங்கும் இங்கும் பவழம் போன்ற கண்களால் குழந்தைபோலப் பார்த்து, அவளை முகர்ந்துவிட்டுப் போகும் வெண்முயல்கள்! தண்ணீர் குடித்துவிட்டுப் போகும் மான்கள் அவள் முகம் நோக்கி முகம் நீட்டும்! ஆண் மயில்களின் சேட்டைக்கு அஞ்சுவதுபோல, அவள் அருகில் வந்து மேயும் பெண்மயில்கள்! பழமரங்களில் கொஞ்சும் கிளிகள் கொத்தி எடுத்து வந்த பழங்களை அவள் காலடியில் போட்டுவிட்டு, அவள் தோள்மீது அமர்ந்து கொஞ்சின. சொந்த வீட்டில் விளையாடும் குழந்தைகள் போல, இலக்கின்றி ஓடையில் நீந்தின மீன்கள்! கழுவிக்கொண்டிருந்த அரிசியில் கைப்பிடி அள்ளி ஓடையில் எறிந்தாள். ஒரு பிடி அள்ளி மயிலுக்கும், கிளிக்கும், அணிலுக்கும் கரையில் தூவினாள். மீன்கள் எல்லாம் அந்த அரிசி விழுந்த இடத்தை நோக்கிக் குவிந்தன. ஓடையில் மீன்கொத்துகள் மலர்ந்தன. திரௌபதி இதழ்கள் மெல்ல விரிய, மீண்டும் ஒரு பிடி அள்ளிப் போட்டாள். மீன்விழியாள் மீனோடு விளையாடினாள். அன்னை வயதில் ஒரு குழந்தை அங்கு களித்துக்கொண்டிருந்தாள். பார்த்தன் குனிந்து காலடியிலிருந்த மகிழம்பூ ஒன்றை எடுத்து, அவளுக்குள் இருந்து வெளிப்படும் குழந்தையை விரட்ட, அவள்மேல் வீசப் போனான். ஏதோ நினைத்து நிறுத்திப் பூவை முகர்ந்தபடி, மரத்தில் வலது காலை ஊன்றிச் சாய்ந்து நின்று, அவளை மீண்டும் பார்த்தான். நரம்புகள் ஓடிய அவன் கால், மரத்தின் கிளைபோலத் தோன்றியது. மகிழ மரத்தில் ஏறிக்கொண்டிருந்த சித்தெறும்புகள், அவன் பாதத்தின் சிறு வரிகளை நோக்குவதுபோல நின்று, தலை அசைத்து முகர்ந்தன. கூச்சத்தில் பார்த்தன் பாதத்தைச் சற்று அசைத்தான். சித்தெறும்புகள் வளைந்து வரிசையாக மரத்தில் ஏறின. கிருஷ்ணை, பார்க்கப் பார்க்கப் புதிதாகத் தோன்றிக்கொண்டே இருந்தாள். எங்குதான் இந்த அழகுப் பெண்களுக்குள் மறைந்திருக்கிறது? பார்க்கும் தோறும் புதையல்போல வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இத்தனை நாளாய் இவளை நாம் பார்க்கவே இல்லையோ?” என்ற ஐயம் அவனுக்குள் எழுந்தது. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்துக்கொண்டான். யுதிஷ்டிரரும் பீமனும் அவர்கள் செயலில் மூழ்கியிருந்தார்கள். திரௌபதி மீண்டும் கைப்பிடி அரிசியை அள்ளி மீனுக்குப் போட்டாள். ஒரு பெரிய மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்து அவள் பாதத்தை முத்தமிடுவதுபோல் வாயைக் குவித்துத் திறந்து துள்ளியது. ஒரு துள்ளலில் அதன் வால் அவள் காலைத் தீண்டியது, கூச்சத்தில் சிலிர்த்து மகிழ்ச்சியில் வாய்விட்டுச் சிரித்து, கல்லில் உட்கார்ந்திருப்பதை மறந்து, அரிசியோடு கீழே சாய்ந்தாள். பார்த்தன் அங்கு எப்படிப் போனான் என்று உணரும்முன், அவளை ஒரு கையிலும் அரிசியை ஒரு கையிலும் பற்றித் தூக்கி ஒரு சுற்றுச் சுற்றிச் சமதளத்தில் விட்டான். மகரந்தம் நிரம்பிய மரகதத் தாம்பூலத்தில் நிற்பதுபோல, மஞ்சள் பூ பூத்த புல்தரையில் கால்களை அழுத்தி நின்றாள். மஞ்சள் பூப் பூத்த புற்கள் அவள் பாதத்தை மூடிக்கொண்டன. பார்த்தன் தலையிலிருந்து உதிர்ந்திருந்த மகிழம் பூக்கள் அவள் நெஞ்சில் விழுந்து, அவள் தனங்கள் தாங்க, மணத்தது. மகிழம்பூ வாசத்தில் அவள் மூச்சை சற்று ஆழமாக இழுத்தாள். பார்த்தன் கண்களைப் பார்த்தவள், ஆடையைச் சரி செய்வதுபோல் நகர்ந்துகொண்டாள். பார்த்தன் தன் விரல்களில் அனல் கங்கு ஒன்றைத் தொட்ட வலியை உணர்ந்தான். ”கிருஷ்ணை” என்று அழைக்கப் போனவன் நா மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வியர்த்தது. கருப்பு வெள்ளை பளிங்கினால் செய்த மேகக் கோட்டையில் பதித்த இரத்தினத் தாம்பூலம் போன்ற மாலைச் சூரியன். வெண் பொன் வைர மணல் உருளும் சலசலக்கும் குளிர்ந்த நீர் ஓடை. அதன் அலை விசிறியிலிருந்து எழுந்து வரும் தென்றல். பூ, காய், கனி வாசம். ஓடையில் விளையாடும் மீன்கள். பூமரத்தில் விளையாடும் அன்றில்கள். கானம் பாடும் குயில்கள். வெண்பூக்கள் சூடிய நாணல் புற்களுக்கு இடையில் தவமிருக்கும் கொக்குகள். ஓடையின் உயரத்தில் ஓடைக்கு விசுறுவதுபோலச் சிறகடிக்கும் மீன்கொத்திகள். அக்கரையில் மேயும் பசுக்கூட்டங்கள். அணைத்து அமர்ந்திருக்கும் வானரங்கள். புல்லுக்கும் வலிக்காமல் நடந்து போகும் யானைகள். இந்த இடத்தில் மனைவியைத் தொடும்போது வியர்க்குமா? பார்த்தன் மனம் சிந்தனை அறுபட்டு நின்று போனது. தூரத்தில் நீலக்குயில் ஒன்று கூவ, எதிர் குரல் எழுந்ததும், பலாமரத்தில் இருந்த குயில் வெளிப்பட்டது. தூரத்தில் பீமன் பெரிய பெரிய பாறைகளைத் தூக்கிக் கொண்டு வந்து, விழுது விட்ட ஆலமரத்தடியைச் சுற்றிப்போட்டு உட்காரும் மேடை செய்தான். யுதிஷ்டிரர் இங்கு இல்லாததுபோல, வடக்கே இருந்த குளக்கரையில் அரசமரத்தடியில் குத்துக்காலிட்டு குனிந்து அமர்ந்திருந்தார். தோளில் கிடந்த அங்கவஸ்திரம் பூமிக்குப் போர்த்திவிட்டதுபோலக் கொஞ்சம் தோளில் கிடந்தது. இப்பொழுதெல்லாம் அவர் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை. நடுங்கும் கைகளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதால் கைநீட்டிக் கூட யாரிடமும் பதில் விடுப்பதில்லை. ஏதோ ஒரு விடையைத் தேடிக் கொண்டே இருந்தார். நெற்றியில் அடிக்கடி கோடுகள் தோன்றி மறைந்தன. பீமன் அவர் அருகில் போகாமல் பார்த்தன் பார்த்துக் கொண்டான். திரௌபதியே பீமன் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். நடுங்கும் கைகளால் முன்னால் கிடந்த வெண்மணலைச் சமன் செய்து, அரசச் சருகொன்றால் எதையோ எழுதுவதும் அழிப்பதுமாக இருந்தார். வாழ்வின் சம்பவங்கள் எழுதி அழிக்கக் கூடியவைதானா? திரௌபதியிடமிருந்து நகர்ந்து போக வழி தேடிய பார்த்தன், கல்லின் மீது கிடந்து துடித்த பெரிய மீனைச் சமையலுக்காகப் பாய்ந்து போய்த் தூக்கினான். ”இனியவரே, அது என் பாதத்தைத் தொட்டுவிட்டது. அது வாழட்டும், அதன் குடி பெருகட்டும். நீரில் விட்டுவிடுங்கள்” என்றாள். பார்த்தன் சிலையாகி விட்டான். கண்கள் இமைக்க மறந்துவிட்டன. ஆடைக்குள் தொடைத் தசைகள் ஆடின. நெஞ்சுக்குள் இருதயம் மலரும் ஓசை கேட்டான். வலது கையில் தலைகீழாய் தொங்கிய மீன் தனது விடுதலைக்காகப் பார்த்தன் கையில் துடித்துக் கொண்டு இருந்தது. பார்த்தன் இன்னும் சிலையாகத்தான் நின்றான். ஆனால், அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் இரு கரங்கள் குவிந்து மொட்டாகின. ”இனியவரே!” என்றாள் முன்னினும் இனிமையாக. செவி குளிர்ந்து, காது மடலில் மென்சூடு பரவிக், காது முடிகள் கூச்செறிந்தது. சிற்பத்தில் பூத்த புன்னகை. சொட்டிவிடுமோ என்பதுபோல இதழ்கனியில் தேன் ஈர மினுமினுப்பு. நோக்கி உளம் உருகினான். இந்திரப்பிரதஸ்தத்தில் வாழும் வரை இவளை ஆசையும் அகங்காரமும் கொண்ட பேரரசியாக மட்டுமே பார்த்து, மனம் விலகி இருந்ததை நினைத்து வெட்கினான். மனைவியரைக் கணவர்கள் புரிந்துகொள்வதே இல்லையோ? மனைவியர்கள் கணவர்கள் புரிந்துகொள்ளும் வட்டத்திற்கு அப்பாலுக்கு அப்பால் நின்று ஆடுகிறார்களோ? எத்தனை மூச்சடக்கிப் பாடிப்போனாலும் தொட முடிவதில்லை. இவள் யார்? அருகில் கிடந்த கருங்கல்லில் சிறு குழந்தையைப்போல துள்ளி ஏறி நின்று ”இனியவரே!” என்றாள் கர்ஜனையாக. அட்சயப் பாத்திரம் போலக் கையில் அரிசிப்பானை. குரலின் கடுமையில் கண்கள் விரிந்தன. அகன்ற கண்களும் அவிழ்ந்த கூந்தலும் மகிடன் தலையில் கொற்றவை எனக் காட்சிக் கொடுத்தாள். உடல் அதிர்ந்து, அகத்தில் பனித்துளி சொட்டிடக் குளிர்ந்தான். எண்ணங்கள் ஒழிந்தவனாய், யாரோ தன்னை இயக்குவதுபோலத் துரிதமாய் சென்று மீனை ஓடையில் விட்டான். மீன் ஆற்றில் நீந்தும் போதுதான் தனக்குள் தான் இருப்பதை உணர்ந்தான். திரௌபதி நீந்தும் மீனைப் பார்த்தாள். அவள் விழிகளும் நீந்தி மகிழ்ந்தன. ”கிருஷ்ணை” பார்த்தன் வாயில் இருந்து வார்த்தை வெளிப்படவில்லை. ஆனாலும் திரௌபதிக்குக் கேட்டது. திரௌபதி, கானக வாழ்க்கையை எளிமையிலும் எளிமையாக, ஏதிலியாகப் பன்னிரண்டு ஆண்டுகள் எப்படி கடத்துவது என்று எண்ணும் அறியாச் சிறுமிபோல நோக்கினாள். ”என்ன? இனியவரே” கண்களால் கேட்டாள். செவிவரை நீண்ட விழியும், கருங்குருவியின் இறகு இதழ் போன்ற இமை முடியும் அவள் கண்களை விசாலமாக மலரச் செய்தது. அவள் முகத்தைக் குழந்தையாக வடித்து வைத்தது. ‘’அஸ்தினாபுரத்தில் இத்தனை நடந்தபிறகும், இவளால் என்னை எப்படி இனியவரே என்று அழைக்க முடிகிறது. அதில் கேலி இல்லை. ஐவர்மீதும் இன்னும் அதிகப் பரிவிருக்கிறது. இவளால் மட்டும்தான் அது முடியுமோ’’ என்று நினைத்தபடியே ”எங்கு நின்றாலும் கருவறைப் பீடத்தில் நின்று அருளும் அன்னை எனவே தெரிகிறாய் தேவி” என்றான். திரௌபதி வாய்விட்டுச் சிரித்தாள். கானகம் முழுவதும் சிரிப்பொலி அலை அலையாய்ப் பரவியது. அவள் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஓடையில், பெரும் காடு நகர்ந்து வந்ததுபோல் புழுதிப் பறக்க வந்து நீர் அருந்திக் கொண்டிருந்த எருமைக் கூட்டத்தின் தலைவன், நீர் வழியும் வாயோடு அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, வயிறு அதிர உறுமி, தலை தாழ்த்தியது. அவள் பாதங்களுக்கு இருபுறமும் வளைந்த வாள் போல அதன் கொம்பு மட்டும் காட்சி கொடுத்தது. எருமைகளின் வாசம் பிடித்து வந்த சிங்கக் கூட்டத்தின் முதல்வன் கோரைப்புல் புதரிலிருந்து ஓசை இன்றித் தலை நீட்டியது. அருகில் அடி பெருத்து நின்ற செண்பக மரத்திலிருந்து உதிர்ந்த செண்பகப் பூவில் ஒன்று காற்றில் மிதந்து வந்து, இதுதான் இடம் என்பதுபோல அவள் சென்னியில் விழுந்து, பாதத்தைத் தொட்டு, வான்பார்த்து மலர்ந்து அமைந்தது. பீடம் அமைத்துவிட்டு, மரக்கட்டைகளைப் பிளந்துகொண்டிருந்த பீமன், கோடரியைத் தரையில் ஊன்றித் திரும்பிப் பார்த்துக் கண்களைச் சுருக்கிக் கேள்வி எழப் புன்னகைத்தான். யுதிஷ்டிரன் திரும்பி முதல்முதலில் நிமிர்ந்து கூர்ந்து பார்த்தான். அவன் கைகள் நடுங்கவில்லை. நெஞ்சம் நிமிர்ந்தது. மீண்டும் பிறந்ததுபோலப் புன்னகைத்தான். குத்துக்காலில் உட்கார்ந்திருந்தவன் அங்கவஸ்திரத்தை இழுத்துத் தரையில் படாமல் தோளில் போட்டுக் கொண்டு, தரையில் அழுந்த உட்கார்ந்தான். உடம்பிலிருந்து பெரிய எடை இறங்கியதுபோல உடலை அசைத்தான். ”எதுவும் தூரத்தில் இல்லை, எல்லாம் அருகில்தான் இருக்கிறது” என்று தரையில் கிறுக்கினான். காதலி முன் பேச்சு வராமல் தவிக்கும் காதலன்போலப் பார்த்தன் தலை குனிந்தான் தலை குனிந்தான். நீண்ட நாட்களுக்குப் பின் இதழில் மென்னகை பூத்தது. தன்னாலும் சிரிக்க முடியும் என்பதை நம்பினான். சில விஷயங்கள் எளியவைதான். அது எளியவை அல்ல என்பதை வாழ்க்கை உணர்த்துகிறது. ‘’விஜயரின் வில் பேசும் என்பது தெரியும். விஜயரும் பேசுவார். அதுவும் கவிதை பேசுவார் என்பது இன்றுதான் அறிந்தேன். இதற்காக நாம் கானகம் வரவேண்டியிருக்கிறது. விலை அதிகம்தான். ஆனாலும் அதுவும் நன்று. கண்ணனின் தோழருக்குக் கவிதை வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஒருவேளை கண்ணனின் தங்கையிடம் கற்றிருப்பார்.” என்று மீண்டும் சிரித்தாள். ஒரு சொல்லும் அவளிடம் கேலி இல்லை. ஆனால் பார்த்தனுக்கு வலித்தது. கண்ணனின் தங்கை என்றபோது அதில் கனல் இருந்தது. அவள் நெஞ்சம் ஏறி இறங்கி மூக்குச் சிவந்து மூச்சுச் சீறியது. விஜயன் என்ற பெயரை அவள் உச்சரித்ததும் காயத்தில் கொதி எண்ணெயை ஊற்றியதுபோல எரிந்தது. உலகில் யாரிடமும் தோற்காத காண்டீபம் ஒரு புல் என இருக்கும் காலமும் வரும் என்று அவன் எண்ணியது உண்டா? அவள் பார்க்காமல் இருக்க விழிகளைத் திருப்பிக் கொண்டான். அவளும் அவள் விழிகளைத் திருப்பிக் கொண்டாள். அங்கிருந்து நகர்ந்துவிடத் திரும்பினான் பார்த்தன். ‘இனியவரே’ என்ற அவள் குரலின் குழைவு அவனை நகரவிடவில்லை. திரும்பாமல் நிலம் நோக்கி நின்றான். திரௌபதியின் வாசம் அருகில். திரும்பியவன் அவள் இமைகளின் ஈரத்தைச் சுண்டுவிரலால் நீக்கினான். ”உயிர் போகிற வலி இருந்தாலும் யானைகள் அலறாது, துடிக்காது இனியவரே” என்றபடி அவள் தன் முந்தானையால் அவன் கண்களை ஒற்றினாள். ”நாம் வெறும் மனிதர்கள் மட்டும் தேவி” என்றபோது அவன் உதடுகள் கோணின. ”மனிதம் மட்டுமே வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் இனியவரே!” என்றவள் விலகி நின்று ”என்னிடம் என்ன பேசவேண்டும், சில நாட்களாய் அவதிப்படுகிறீர்கள்” என்றாள். ‘எப்படி அறிந்தாள்?” அன்னையின் வடிவு. குழந்தையின் முகம். தித்திக்கும் சொற்கள். உடல் முழுவதும் பரவும் பரிவு. அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் என்ற தவிப்பு. கைகளை இறுக்கி மூடிக்கொண்டான். என்ன நடந்தால் என்ன? அன்பு, காமம், ஆசை, கோபம் எல்லாம் இடம் கிடைக்கும் போதெல்லாம் துளிர்த்துவிடுகிறது. அதன் விழைவு வேர்கள் அறுபடுவதே இல்லையோ? இமைக்கணத்தில் துளி என விழுந்து கடலாகித் தடம் தெரியாமல் ஆழ மூழ்கடித்து விடுகிறது. மீன் துள்ளி அவள் காலுக்கடியில் விழுந்தபோது அவள் கல்லில் இருந்து சாய்ந்தது தெரியாமல் அல்ல, நான் தாங்கிக் கொள்வேன் என்ற தைரியத்தில்தானா? பார்த்தன் கால்களை அழுந்த பூமியில் பதித்தான். இதழ்கள் மலர்ந்தன. பார்வை அகத்திற்குத் திரும்பியது. நெற்றிப்பொட்டில் மனம் குவிந்து நின்றது. தலைக்குமேல் வானம் விரிந்து விரிந்து போனது. தலைக்குள் ஒளி வட்டங்கள் மின்னின. சென்னியில் திருவடித் தாமரை மலர்ந்தது போன்ற சிலிர்ப்பு. ”கானகத்திற்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் காண்டீபப் பயிற்சி செய்யவே இல்லை. நீங்கள் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள். பீமருக்குத் தனியாகப் பயிற்சி தேவை இல்லை. அவர் செய்யும் ஒவ்வொரு வேலையும் மல்லருக்கான பயிற்சிதான். பேரரசருக்கும் அப்படித்தான். சொல்வளர் கட்டுக்குள் புகுந்து சொற்கனிகள் உண்டு சொல்லாகவே மாறிவிடுவார். அவர் வேண்டும் என்றால் பகடை பழகலாம். இதை கோபத்தில் சொல்லவில்லை. அவர் உண்மையை தேடுபவர். தோல்வி பொய் என்று அவருக்குத் தெரியும். அவர் பொய்யைப் பொய்யாக்கிவிடுவார்.” இளையவர்கள் இருவரும் பரியும் பசுவும் மேய்க்கிறார்கள். அதுவே அவர்களுக்கு வித்தையும் ஞானமும் கொடுத்துவிடும். நீங்கள் படித்தது தனுர்வேதம். அதை ஓதவேண்டியது உங்கள் கடமை. கல்வி கற்பவனையே காதலிக்கிறது. கல்வி விலகா காதலி. என்றும் இளையவள். எப்பொழுதும் இனியவள். அவள் தன்னைக் காதலிப்பவனை அமுதூட்டிச் சிரஞ்சீவி ஆக்குகிறாள். நீங்கள் வில்வித்தை கற்பதில் ஓய்வு கொள்ளாதீர்கள். யார் கண்டார்கள், நாம் பெரும் போர் செய்தே நம் நாட்டை மீட்க வேண்டி இருக்கலாம்.’’ என்றவள் ‘’இளையவர்கள் பசி தாங்க மாட்டார்கள். அவர்கள் வருவதற்குள் சமைத்துவிட்டு வருகிறேன்.” என்று அவன் பதிலுக்குக் காத்திராமல் குடிலுக்கு நடந்தாள். ”ஏன் எனக்குப் பசிக்காதா?” என்றவன், இவ்வளவு நெருக்கமாகக் கிருஷ்ணையிடம் பேசியது உண்டா? என்ற எண்ணத்தில் மூழ்கினான். அவளுக்குள் பரவிய கூச்சம் நடையில் தெரிந்தது. இடுப்பில் வைத்திருந்த அரிசிப் பானையை இடது கையால் அழுந்த அணைத்தபடி, வலது கையால் சேலையை இழுத்து மார்பை மூடியவள், பின்புறம் புடவைச் சுருக்கத்தைத் தடவி இழுத்துச் சரிசெய்தாள். “அவர்கள் முன் நான் குந்தி அத்தையாகிறேன்,” என்றாள், திரும்பாமல் நடந்து போனாள். அந்த கணத்தில் அவளின் உயரம் கூடியதுபோல் அவன் உணர்ந்தான். அவள் மெல்லச் சிரிப்பது அவள் முதுகில் தெரிந்தது. குடிலுக்குள் நுழையும் முன், தத்தித் தத்திப் பின்னால் வந்த பறவைகளுக்கு அரிசியை அள்ளித் தூவிவிட்டு, குடிலுக்குள் நுழைந்தாள். குடிலுக்கு அருகில் படர்ந்திருந்த வசந்த மல்லிகைக் கொத்து ஒன்று அவள் தோளில் தட்டியது. பார்த்தன் காண்டீபத்தை எடுத்தான். மலைக் குகையில் தன் துணை மற்றும் குட்டிகளுடன் படுத்திருந்த ஆண் சிங்கம் எழுந்து, பிடரி உலுக்கிக் கர்ஜனை செய்தது. காண்டீபத்திலிருந்து எழுந்த ஒலி, எதிர்ச் சிங்கம் கர்ஜிப்பதுபோல் காடே அதிர்ந்தது. பார்த்தன் அம்பை எய்து எய்து, கணக்கிலாத் தூரத்தை இலக்கை வென்றுகொண்டிருந்தான். தானே தனக்குக் கற்பித்துக் கொண்டிருந்தான். தன்னைத் தானே வென்றுகொண்டிருந்தான். குருவும் சீடனும் ஒன்றாகும் புள்ளியில் நின்று மையம் கண்டான். அந்த நொடி முடிந்ததும், “இன்னும் வெகுதூரம்” என்பதுபோல் வெறுமையில் விழுந்தான். அந்த வெறுமையை வெல்ல மீண்டும் தொடங்கினான். கல்வியோ, கலையோ, அதன் ஆடலே இதுதானோ? தேடல், தெளிவு, உண்மை; உண்மை, தெளிவு, தேடல். கீழிருந்து உச்சிக்கு. உச்சியிலிருந்து தரைக்கு. எங்கே நிற்பது? காண்டீபத்திலிருந்து அம்பு பறந்துகொண்டே இருந்தது. திரௌபதி பொங்கும் பானையில் கழுவிய அரிசியை அள்ளிப் போட்டாள். அவிழ்ந்து அவளை மூடியிருந்த கூந்தல் அடுப்பில் பட்டுவிடாமல் சற்றுத் தள்ளி அமர்ந்து, ‘பார்த்தன் என்ன கேட்கப்போகிறான்’ என்ற நினைப்பில் எரியும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் எரியும் தழல் ஒளி, அவள் கூந்தலில் நுழைந்து அவளை அக்கினிச் சிலை போல் செய்தது. உடைத்த விறகுகளை அள்ளிச் சேர்த்து, மழையில் நனைந்துவிடாமல் இருக்கப் பாதுகாப்பாய், ஆலமர அடியில் வீடுபோல் இருந்த பொந்தில் வைத்த பீமன், தாமரைக் குளத்திற்கு நீந்தப் போனான். யுதிஷ்டிரர் குளித்துவிட்டு வந்து கமலாசனத்தில் அமர்ந்து தன்னில் மூழ்கினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரால் தியானத்தில் அமர முடிந்ததை, பார்த்தன் அம்பு எய்தபடியே பார்த்தான். ஒரு அம்பை அதிவேகத்தில் எய்து, அது இலக்கைத் தொடப்போகும்போது, மறு அம்பை எய்து அதைத் தடுத்து, தன்னிடமே வரவழைத்தான். வந்த அம்பைத் தன் கை அம்பால் அடித்து, இரண்டையும் ஒன்றாகவே வானுக்கு அனுப்பினான். அங்கிருந்து இரண்டும் பிரிந்து, இருவேறு பாதையில் அவனிடமே வந்தது. இரண்டு அம்பையும் பிடித்து, அம்பறாத் தூளியில் இட்டவன், காண்டீபத்தைக் கண்ணில் ஒற்றி, மகிழ மரத்தில் மாட்டி வைத்துவிட்டு நீர் ஆடப் போனான். நகுலனும் சகாதேவனும் காட்டில் தேடிக் கொணர்ந்த தேன், கனிகள், கிழங்குகளைத் திரௌபதியிடம் கொடுத்துவிட்டு, மாடுகளையும் பரிகளையும் அவற்றிற்குரிய இடத்தில் கட்டினார்கள். சகாதேவன் பால் கறந்து, அருகில் உள்ள ஆசிரமத்திற்கு எடுத்துப்போனான். நகுலன் தேடி எடுத்துவந்த நோய் தீர்க்கும் மூலிகைகளை ஆசிரமத்தில் கொடுக்க அவன்கூடச் சென்றான். வன உயிர்கள் தீயில் மடிந்துவிடக் கூடாது என்பதால், அவர்கள் இரவில் அனல் எழுப்புவதில்லை. கதிரவன் இருக்கும்போதே ஐவரும் உண்டார்கள். திரௌபதி, ஐவரும் உண்டபின் உண்டாள். நகுலனும் சகாதேவனும் அவளுக்கு உதவினார்கள். அஸ்தினபுரியிலிருந்து வந்த பின்பு இன்றுதான் பார்த்தன் பாடினான். மெல்லிய ராகத்தில் பாடியபடி, மகிழ மரத்தடியில் நிலவொளியில் காத்திருந்தான். அவனையும் அறியாமல், தாளத்திற்கு ஏற்றவாறு அவன் கைகள் அபிநயம் பிடித்தன. நிலவொளியில் நிழற்சிலைபோல நடந்து வந்த திரௌபதி, பார்த்தன்முன் அவன் தொடாத தூரத்தில் அமர்ந்தாள். பார்த்தனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. “இனியவரே!” நீண்ட நாட்களுக்குப் பின் “விஜயரைப் பார்த்தேன்” என்று திரௌபதி பேச்சைத் தொடங்கினாள். “உன்னால்தான் மீண்டேன் தேவி! பேரரசர் கூட மீண்டுவிட்டார்” “நல்லது. வாழ்வென்பதே அதுதானே இனியவரே! நிலவின் ஒளியால் அந்த இடத்தை மனதில் அழியாச் சித்திரக்கூடமாக்கினாள். சற்றுமுன் பார்த்த இடமா இது?” என்று அதிசயித்தான். “உங்கள் மனைவியிடம் பேச இத்தனை நாள் ஏன் தவித்தீர்கள்?” அவள் நீண்ட, கூர்ந்த நாசி, கற்சிலையின் நாசிபோல் நிலவொளியில் பளபளத்தது. அதில் ஒரு காலத்தில் மின்னிய மாணிக்க மூக்குத்தியை எண்ணினான் பார்த்தன். பெரும் மூச்சு எழுந்தது. “பகடையாட்டத்திற்குப் பின்னும், துச்சாதனன் கொடும் செயலுக்கு மௌனமாய் இருந்தப் பின்னும் உன்னோடு பேச முடியும் என்று என்னை நான் எப்படி நம்ப வைப்பது, தேவி!” பார்த்தன் குரல் தழுதழுத்தது. மேலும் பேச முடியாமல், மேலே பார்த்தான். முழு நிலவின் ஒளி, இலைகள் வழியாகப் பனித் துகளாக வழிந்தது. தூரத்தில் விளா மரத்தைச் சுற்றி மின்மினிகள் பறந்தன. திரௌபதியின் நீண்ட மூச்சொலியால் அசைந்து திரும்பி, அவளைப் பார்த்தான். நிலவொளியில் நெய்த துகில் கூடத்திற்குள் கொலுவிருப்பதுபோல் சிலையாகி இருந்தாள். அவள் கண்கள் தூரத்தை நோக்கின. அவள் தனக்குள்ளேயே பார்க்கிறாள் என்று பார்த்தன் புரிந்து கொண்டான். சிலையின் புன்னகைபோல அவள் முகத்தில் புன்னகை படர்ந்திருந்தது. “எப்போதும் எப்படிப் புன்னகையோடு இருக்கிறாள்? எப்படி அந்தக் கணத்தைக் கடந்தாள்? கனத்தைத் துறந்தாள்? “இதை எப்படி அவளிடம் கேள்வியாய்க் கேட்பது? துகில் உரியும்போது எப்படி இருந்தது என்றா? கண்ணன் துகில் வழங்கியபோது எதை உணர்ந்தாய் என்றா? எப்படி இந்த நிகழ்விலிருந்து மீண்டாய் என்றா? ஏன் அந்த நிகழ்வை நினைத்தேன்? நடக்கக் கூடாதது நடந்துவிட்டால் அதை மறந்துவிட்டுச் செல்ல வேண்டும். ஏன் அதை மனதில் ஓட்டி ஓட்டிப் பார்த்தேன்? திரௌபதி மன ஓட்டத்தைப் படித்துவிட்டாள். “இப்போது எப்படி கேட்பது? என்ன கேட்பது?” பார்த்தனால் பேச முடியவில்லை. பொய் சொல்லவும் விருப்பம் இல்லை. ‘கண்டுபிடித்துவிடுவாள்’. “சொல்லுங்கள் இனியவரே! என்ன என்னிடம் கேட்க வேண்டும்?” “வேண்டாம் தேவி, அதைக் கடந்து செல்வோம்” “இது நடக்காதது அல்ல, விஜயரே! எந்த இழிவும் நமக்கு நடக்காதவரை அது சம்பவம் மட்டும்தான். நமக்கு நடந்தால் மட்டும்தான் துயரம்.” பார்த்தன் பதறிப்போனான், நெஞ்சு ஏறி இறங்கித் துடித்தது. “இந்த இழிவை நீங்கள், நான், எல்லோரும் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் நமக்கு வலித்திருக்காது. வலிக்காததற்கு ஒரு காரணம் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும். கடந்துபோயிருப்போம்.” பார்த்தன் தலை கனத்தது, பின் மண்டையில் படீர் படீர் என்று அறைந்துகொண்டான். அதற்குமேல் பேசாமல் எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்தான். தோள்பட்டை இறுகிக் கனத்தது. உடலின் ஒவ்வொரு அணுவிலும் கனல் ஊசிகள் ஏறும் வலி. விழுந்து புரளலாம்போல் இருந்தது. “வேண்டாம், செல்வோம்” என்றான். ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. அவள் இனிமையாக ஏதேனும் பேச மாட்டாளா? என்று மனம் ஏங்கியது. உடலில் அமுதம் ஊறாதா? என்று தவித்தான். கானல் நீரைத் தேடி ஓடுபவன் நாவில், பனிக்கட்டி மழை விழ வேண்டாம்; விசும்பின் துளியாவது விழுந்தால் போதுமே! ஆண் எவ்வளவு பெரிய சுயநலக்காரன்! பெண்ணிடம் அவன் வேண்டிக்கொண்டே இருக்கிறான். அவள் காயங்களிலும் தேன் ஊறாதா என்று நக்கிப் பார்க்கிறான். பார்த்தனுக்கு ‘ஓ’ என்று கத்திக்கொண்டு ஓடி, அருகில் உள்ள ஓடையில் குதிக்க வேண்டும்போல் அகம் எரிந்தது. திரௌபதி சற்று நகர்ந்து, மெல்லக் கை நீட்டி அவன் நெஞ்சத்தைத் தொட்டாள். குழைவான குளிர் விரல்கள். பார்த்தன் நெகிழ்ந்தான். அந்தக் கைகளை அப்படியே நெஞ்சோடு வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும்போல் உருகினான். கண்கள் சிவந்து காந்தியது. “அமைதி அடையுங்கள்” என்றாள். தன் கையை எடுத்துத் தனது மடியில் வைத்துக் கோர்த்துக்கொண்டாள். காற்றில் பறந்த முடி, அவள் நெற்றியில் சுருண்டு விழுந்து, கண்களை மறைத்து அழகைக் கூட்டியது. தனது விரலை நீட்டி அதை ஒதுக்கப் போனவன் நிறுத்திக்கொண்டான். அவளே தனது புறங்கையால் ஒதுக்கினாள். அந்த நொடியில் அவளுக்குள்ளிருந்து ஒரு மயில் எழுந்து எட்டிப் பார்த்து மறைந்தது. அவள் தொண்டைக்குழி மெல்லத் துடித்தது. அவள் கழுத்தோரம் சுருண்டிருந்த பூ முடிகள், நிலா ஒளியில் ஈரம் கொண்டிருந்தன. இரவில் மலரும் பவழ மல்லி வாசம் கனமாக வந்து தாக்கியது. அருகில் இருந்த குளத்திலிருந்து அல்லிகள் மலரும் வாசம் எழுந்து வந்து சூழ்ந்தது. அதற்குமேல் அங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணினான். “தேவி, நீ குடிலுக்குச் செல். நான் மல்லர் உருவாக்கி வைத்திருக்கும் புல் படுக்கைக்குச் செல்கிறேன்” என்றான். குரலில் கனமும் கண்டிப்பும் இருந்தது. திரௌபதியின் உடலில் ஒரு சிலிர்ப்புத் தோன்ற, மெல்ல அசைந்து இதழ் பிரியாமல் புன்னகைத்தாள். பார்த்தனுக்கு அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளை அருகில் வைத்துத் தாங்கிக்கொள்வதும் கடினமாக இருந்தது. “ஆணுக்கு உடம்பு ஒரு ஆயுதம் மட்டும்; அது போட்டி போடும், வெட்டும், வெட்டப்படும். பெண்ணுக்கு உடம்பே இதயம். கையளவு இதயம் கொண்ட ஆணுக்கு அது எப்படிப் புரியும்? வயதோ, கல்வியோ, குலமோ அதைப் புரியவைத்துவிட முடியாது. அதனால்தான் பெண்ணின் உடல் இங்கு காட்சிக்கு இழுக்கப்படுகிறது.” அவளுக்குள் அனல் எழுந்து ஆடியது. கண்ணாடிக் குவளைக்குள் வைக்கப்பட்ட தீபம்போல் அவளுக்குள் எரியும் அனலை அவன் பார்த்தான். “குளிர்ந்த நதியில் தீபத்தை ஏற்றி மிதக்க விடுவதுபோல், குளிர்ந்திருந்த அவளுக்குள் மீண்டும் அனலை ஏற்றி வைத்து விட்டேனோ?” என்று முகம் வாடினான். “என்ன கேட்க நினைத்தேன்?” அவனுக்குள் கேள்வியே எழவில்லை. அவளிடம் பேச வேண்டும் என்ற வேட்கையில் குழப்பிக்கொண்டேனா? ஏதாவது உதவி செய்வதுபோலப் பேசியிருக்கலாமே? ஏன் சிறு விஷயத்தையும் பெரியதாகக் குழப்பிக்கொள்கிறேன்? பெரிய வலி ஏற்படும்போது, சிந்தனை சிறு சிறு விஷயங்களைக் கையாள முடியாமல் தவிக்கிறது. அவன் முக வாடலைக் கண்ட திரௌபதி, அவன் மகிழ மெல்லச் சிரித்தாள். “விடுங்கள் விஜயரே! பெரும் பிரச்சினைகள் வரும்போது பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்று எழுந்தவள், தன் பின்புறத்தைத் தட்டி அங்கிருந்த புற்களைப் பறக்கவிட்டாள். கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் நடுவிலிருந்து எழுந்தவள், அவர்கள் உடன்வரச் செல்வதுபோல் சென்றாள். எங்கிருந்தாலும் அவள் சக்கரவர்த்தினிதானே! “தேவி!” நின்று திரும்பிப் பார்த்து, “என்ன வேண்டும், குழந்தாய்?” என்பதுபோல் நோக்கினாள். “தேவி! அந்தக் கணத்தில் எப்படி கண்ணனை அழைத்தாய்?” “இத்தனை நாளாய் இந்தக் கேள்விக்குத்தான் தவித்தேன், கிடைத்துவிட்டது!” என்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் அவனை உந்தி எழுப்பியது. திரௌபதி முகம் ஒளிர்ந்தது. விழிகள் கனிந்தன. இதழில் புன்னகை பூத்தது. விளா மரத்தைச் சுற்றிப் பறந்த மின்மினிகள் ஏனோ நகர்ந்தன. அதனால் தூரத்தில், அவள் சிரசுக்குப் பின்னால் மின்மினிகளின் ஒளிக்கோலம். “நம்மிடமிருந்து நம்மைத் துறப்பது அத்தனை எளிதில்லை, விஜயரே! அந்தக் கணத்தில் என்னிடமிருந்து என்னை நான் துறந்தேன், இனியவரே! அந்தக் கணம் எனக்கு வாய்த்தது. எனக்குள் நான் இல்லாதபோது வேறு யார் அங்கு இருப்பார்கள்? கண்ணன் வந்தான் என்றார்கள்.” என்றவள், காற்றும் கசங்காமல் மெல்ல நடந்தாள். பெண்வேடமிட்ட கண்ணன் நடந்து போவதுபோல் இருந்தது. குனிந்து கையில் கிடைத்த மகிழ மலர்களை அள்ளி, அவள் பாதம் பதிந்த இடத்தில் தூவினான். திரௌபதி திரும்பாமல் கடைக்கண்ணால் அதை நோக்கிப் புன்னகைத்துத் தன் நெஞ்சத்தைப் பார்த்தாள். மாலையில் பார்த்தன் சிரசிலிருந்து விழுந்த மலர்கள் அவள் தனத்தின்மீது மணத்துக் கொண்டிருந்தன. https://solvanam.com/2026/01/11/சரணாகதி/
  17. பின்பக்கம் பார்த்தால் யாரும் ஏறமாட்டார்கள்.
  18. மாதுளை மரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T.தம்பிமுத்து எழுதி ‘நியூ யோர்க்கர்’ சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை : The pomegranate tree. தமிழில்: எழுத்துக்கினியவன் சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான். விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கறுப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!” ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை. மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமாவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதற்றமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் – எங்கள் மைத்துனன் – ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார். ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத ‘நிலாவரை’ கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார். இரத்தின மாமா வீட்டில் நாங்கள் இருந்தபோதும்கூட வேட்டை, நீச்சல் பயணங்கள் போயிருக்கிறோம் என்றாலும் அங்கே எங்களை மிகவும் கவர்ந்தது மாதுளம்பழங்களும் நாட்கணக்கில் தொடரும் இரத்தின மாமாவின் நெடுங்கதைகளும்தான். கிராமத்தினருக்கு இரத்தின மாமாவின் மேல் பயங்கலந்த மரியாதை இருந்தது. அவர் ஒரு ராங்கிபிடித்த, பிடிவாதக்கார, இலகுவாகத் திருப்தி செய்ய முடியாத, ஆனால் நல்ல மனமுள்ள சர்வாதிகாரி. அவர்தான் ஊர்ப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தின் தலைவர். அப்பப்பா காலமான போது, அவருடைய பிள்ளைகள் யாரும் அந்தக் கிராமத்தில் வசிக்கவில்லை. இரத்தின மாமா, அப்பப்பாவின் மைத்துனர் என்கிற முறையில், அப்பப்பாவின் முறையான வாரிசாக, அச்சுவேலியின் முதற்குடிமகனாகத் தன்னைத்தானே வரிந்து கொண்டார். அத்தோடு கிடைக்கும் எல்லா விதமான விசேட உரிமைகளும் தனக்குத்தான் என எதிர்பார்த்தார். ஆறு மாமா இதற்கு முற்றிலும் பலத்த எதிர்ப்பு. கிராமத்தின் ‘உடையார்’ என்ற முறையில் சட்டத்துக்கும் நீதிக்கும் பொறுப்பான தான்தான் அச்சுவேலியின் நியாயமான முதற்குடிமகன் என்று நினைத்தார். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை கிராமத் தலைவர் யார் என்பதில் ஐயம் எதுவுமே இருக்கவில்லை. அவர் தெருவில் நடந்து வந்தால் ஊர் மக்கள் மரியாதை காட்டி தத்தம் வீடுகளுக்குள் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொள்வார்கள். நாங்கள் சிறுபிள்ளைகள் ஊர்த் தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் ஓடித்திரியும் போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மண்டியிட்டு மரியாதை தந்தமை நகரத்துப் பிள்ளைகளான எங்கள் கண்களுக்கு வியப்பாகத் தெரிந்தது. எங்களோடு பேச முதல் அவர்கள் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையையோ தோளில் போட்டிருந்த துண்டையோ கழற்றி இடையில் சுற்றிக்கொள்வார்கள். ஏனென்றால் அவரது பேரப்பிள்ளைகளுக்கு முன்னால் பகட்டாக அணிந்துகொள்வது மரியாதையின்மை என்று கருதப்பட்டது. ஊருக்கு வருகை தரும் வெளியூர்ப் பிரமுகர்களுக்கு ஊரார்களை அறிமுகப்படுத்தும் பணியை அப்பப்பாவும், அவருக்கு முதல் அவரது தகப்பனும்தான் எப்போதுமே செய்வார்கள். ஆறு மாமா, இரத்தின மாமா இரண்டு பேருக்குமே அந்த உரிமை தங்களுக்குத்தான் வரவேண்டும் என்ற ஆசை. ஊரில் நடக்கும் எல்லாத் திருமண அல்லது மரண வீட்டு ஊர்வலங்கள் தன் வீட்டுக்கு நூறு யார்ட் அண்மைக்கு வந்ததும் தத்தம் வாத்தியக் கச்சேரிகளை நிறுத்திவிட வேண்டும் என்ற கட்டளையை இரத்தின மாமா அறிவித்த கையோடேயே ஆறு மாமாவும் அதே கட்டளையைப் பிறப்பித்தார். அப்பப்பாவுக்கு இன்னுமொரு சலுகையும் இருந்தது. வருடப்பிறப்பு நாளில் ஊரிலுள்ள எல்லா நாதஸ்வரக் கோஷ்டிகளும் அவரது வீட்டுக்குப் போய்த்தான் முதலாவது கச்சேரி வைக்க வேண்டும். ஆறு மாமா இந்தச் சலுகையைத் தனக்கென்று எடுத்துக்கொண்டதும் இரத்தின மாமா கோபம் கொந்தளிக்க ஆறு மாமாவோடும் அவரது குடும்பத்தோடும் பல வாரங்கள் பேசாமலேயே விட்டுவிட்டார். ஆறு மாமா சாதுரியமாகப் பெருமனதுடன் வேட்டைக்குப் பிறகு வழமையாகச் செய்வது போல ஒரு காட்டுப்பன்றித் தொடையை அனுப்பி வைத்த பிறகுதான் இரத்தின மாமாவின் கோபம் தணிந்தது. இப்படி உரிமைகளைத் தம் வயமாக்குவதற்கு இரண்டு மாமாக்களும் சமர் செய்யும்போது, அதன் விளைவுகள் அச்சுவேலியின் ஒவ்வொரு கல் வீட்டிலும் ஓலைக் குடிசையிலும் எதிரொலித்தன. மரபுவழிகளை மிகக் கவனமாகப் பேணும் ஒரு கிராமம்தான் அச்சுவேலி. கிராமத்து ஆண்கள் தங்கள் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். திருமண, மரண வீட்டு ஊர்வலங்கள் போகும் போது புழுதி பறக்கும் ஊர் வீதிகளில் விரிக்கும் வெள்ளைத் துணிகளை வழங்குவது ஊரிலுள்ள வண்ணாரின் உரிமை. அதை ஊர்த் துணிக் கடைக்காரர் செய்ய முனைந்தால் ஊர் பொங்கியெழுந்து தர்ம அடியிலோ கொலையிலோதான் முடிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குத்தான் திருமண ஊர்வலங்களில் மண் கலயங்களைக் காவிக்கொண்டு செல்லும் உரிமை இருந்தது. அவர்கள் மண்பானைகளுக்குள் ஊதி ஒரு ஆழமான ஒத்ததிரும் தொனியைக் கிளப்புவார்கள். ஒவ்வொரு சில அடிகளுக்குப் பிறகும் நகர்வதை நிறுத்திச் சில வெள்ளி நாணயங்கள் பானைக்குள் போடப்படும் வரை பொறுத்திருப்பார்கள். நகை வேலை செய்யும் உரிமை ஒரு விசேடமான தட்டார் சாதியினருக்கே. பனந்தென்னைகளில் ஏறிக் கள் இறக்கும் உரிமை இன்னொரு சாதியினருக்கு மட்டும்தான். அனேகமாக எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முன்னுரிமை வரிசை பேணப்பட்டது. உதாரணமாக, இரண்டு கிராமக் குடும்பங்கள் கொண்டாட்டங்களில் முதலில் பாடும் உரிமையைப் பாரம்பரியமாக வைத்திருந்தன. வேறு யார் பாடகர்கள் இருந்தாலும் பரவாயில்லை, முதலில் ஒரு குடும்பம் பாடிய பிறகு அடுத்த குடும்பம் தொடரும். மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினருக்குத்தான் திருமண, மரண வீட்டு விருந்துகளில் எஞ்சியிருக்கும் உணவுகளைச் சேகரிக்கும் உரிமை இருந்தது. செத்துப் போன மாடுகளைக் கொண்டு செல்லும் உரிமை நளவர்களுக்கு மட்டும்தான். சில உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டும்தான் காலணிகளை அணியும் உரிமை. இத்தகைய எழுதப்படாத விதிகளெல்லாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்கப்பட்டன. இப்படியான ஒரு பாரம்பரியம் எங்கெங்கும் படர்ந்திருந்த ஒரு பின்னணியில்தான் மற்றப்படி நல்ல மனதுகொண்ட இரத்தின மாமாவும் ஆறு மாமாவும் தங்களுடைய உரிமைகளுக்காக மல்லுக்கட்டினார்கள். பண்பாடு, பாரம்பரியம் என்ற உணர்ச்சிகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன. வருங்காலத்தில் எந்தக் குடும்பம் ஊரில் முன்னின்று தழைத்தோங்கி வளரும் என்பது அப்போதே தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தது. அதேநேரத்தில், போட்டிக்கு நின்ற இரண்டு குடும்பங்களுக்குமிடையில் ஒரு நிரந்தரமான பிணைப்பு வரப் போகிறது என்ற ஒரு கதை ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தக் கதை பரவிய கோடைகால விடுமுறையில் எனக்கு எட்டு வயதுதான் என்றாலும், குடும்பங்கள் இரண்டுக்கும் இடையில் நிலவிய இறுக்கமான பதற்றம் எல்லோருக்கும் போல எனக்கும் புரிந்திருந்தது. ஒருநாள் இரத்தின மாமா வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு மீன்காரி தன் பனையோலைக் கடகத்தைக் காவிக்கொண்டு வந்தாள். நிலத்தில் கடகத்தை இறக்கி வைத்துக் கவிழ்த்தாள். வழக்கம் போலப் பெரிதும் சிறிதுமாகப் பலவகை மீன்கள் அதிலிருந்து கொட்டுண்டன. சூறை, வாள்மீன், இறால், நண்டு, கணவாய், சிங்கி இறால், நெய்த்தோலி என்று பலவகை. வல்லையோ பருத்தித்துறையோ ஏதோ பக்கத்தூர்க் கடற்கரை மணல் வைரத்துகள்கள் போல இன்னும் அந்த மீன்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. மாமிக்கும் அவரது இரண்டு சமையற்காரருக்கும் துணையாக வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் ஓடிவந்தார்கள். சமையற்காரர்தான் இறுதி முடிவு எடுப்பவர் என்றாலும், மாமிக்கு முன்னால் வைத்தே பேரம் பேசினார்கள். சமையற்காரர் திருப்தியடைந்து சம்மதம் கொடுத்ததும் மாமியும் சம்மதம் தெரிவித்துத் தலை ஆட்டுவார். அந்தக் காலை வெளிச்சத்தில் மீன்கள் கைமாறக் கூட்டத்தின் கலகலப்பு ஏறிப் பிறகு இறங்கித் தணிந்தது. கொஞ்சம் கலகலப்பு அடங்கிய நேரம் மீன்காரி சட்டென்று மாமியைப் பார்த்து “ஆறு ஐயாவின்ர மகனைச் சுந்தரி அம்மாவுக்குப் பேசுறீங்கள் எண்டு பத்தர் சொன்னார்” என்றாள். எங்களது மைத்துனன் ராஜாவைப் பற்றித்தான் அவள் சொல்கிறாள் என்று அறிந்ததும் எனது காதுகளைத் தீட்டிக்கொண்டேன். இரத்தின மாமாவுக்கு மகன்கள் கிடையாது. சுந்தரி ஒரே மகள். பக்கத்தில் விருந்தினரை உபசரிக்கும் ‘சாலை’ என்ற கொட்டகையில் நின்றிருந்த சுந்தரி நாணத்துடன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவளுக்குப் பதினாறு வயது. இதுவரை அவளுக்கு நூறு தடவைகளாவது கல்யாண வரன் பேசி வந்த கதை கேட்டிருப்பாள். முதலாவது வரன் பேச்சு வந்த போது அவளுக்கு மூன்று வயது இருந்திருக்கலாம். அல்லது ஒரு வயதாகக் கூட இருந்திருக்கலாம். மாமி பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார். “பெடியன் நல்ல வடிவு” மீன்காரி, சுந்தரியைத் திரும்பிப் பார்த்தபடி இளம் பெண்களைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பதற்குப் பேசும் தெவிட்டுகின்ற குரலில் தொடர்ந்தாள், “படிப்பிலும் கெட்டிக்காரனாம்.” சுந்தரி வெட்கத்துடன் கலகலவென்று சிரித்தபடி, கையில் போட்டிருந்த காப்புகள் கிணுகிணுக்கத் தன் சேலையைச் சரி செய்துகொண்டாள். “சாத்திரியார் பொருத்தம் பாக்கிறார்” மாமி ஒப்புக் கொண்டார். “பொருத்தம் எண்டால்தான் மிச்சம் எல்லாம் நடக்கும்.” “நீங்கள் ஒரு லட்சம் சீதனம் குடுக்கிறியளாம்! மாப்பிளைக்கு அது சரிதான். எப்பவோ ஒருநாள் அரசாங்க அதிபரா வந்திடுவார்” மீன்காரி, சுந்தரியைக் கடைக்கண்ணால் பார்த்தபடி தொடர்ந்தாள். மாமி பதிலேதும் சொல்லவில்லை. மீன்காரி கடகத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நழுவிப் போனாள். நகை செய்யும் ‘பத்தர்’தான் அச்சுவேலியின் செல்வந்தக் குடும்பங்களின் பாரம்பரியக் கல்யாணத் தரகர். ராஜாவுக்கும் சுந்தரிக்கும் திருமணப் பேச்சைக் கொண்டு நடத்துகிற இந்தத் தரகர் கொஞ்சம் அளவுக்கு மிஞ்சிப் புளுகிற, செருக்கு மிகுந்த, எப்போதும் குங்குமப் பொட்டு வைத்த, சிறிய, மாநிற மனிதர். அவரது தரகு வேலைத் திறமையும் எதையும் பேசி நிறைவேற்றி வைக்கக் கூடிய ஆற்றலும் அச்சுவேலிக்கு வெளியே கூடப் பேர் போனவை. தொலைவிலுள்ள திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கூடக் கூலிக்குத் தரகு வேலை செய்து வெற்றி கண்டவர். மெல்லிய திசுக் காகிதத்தில் பென்சிலால் வரைந்த தனது நகை வடிவமைப்புகளைக் காவிக் கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்யும்போது, அவர் வயதுவந்த வாலிபர்களினதும் யுவதிகளினதும் படங்களையும் ஒரு கட்டாகக் கொண்டு செல்வார். தனது தரகுத் தொழிலைத் திறந்த மனப்பான்மையுடன் அணுகுபவர். ஒரு சாதாரண பெண்ணுக்குப் பெரிய சீதனத்தோடு -ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் – பேசுவதும், ஒரு அழகான பெண்ணுக்குச் சில ஆயிரங்களோடு பேசி முடிப்பதும் அவருக்கு ஒன்றுதான். தனது இரண்டு கலைகளையும் -தரகு வேலையையும் நகை செய்யும் பத்தர் வேலையையும் -ஒன்றிணைத்ததால் மிகப் பெரிய செல்வந்தராகி விட்டார். தரகு வேலைக்குச் சீதனத்தின் பத்து வீதத்தை அறவிடுவார். திருகோணமலைக்கோ கொழும்புக்கோ பயணம் செய்யும்போது, கையில் போட்ட தங்க வளைகாப்பும், விரலில் போட்ட வைர மோதிரமும், வேட்டிக்கு மேல் அணிந்திருக்கும் வெள்ளை ஐரோப்பிய மேலங்கியும் அவரது செல்வந்தத்தை உலகத்துக்குப் பறைசாற்றின. இரத்தின மாமா தன் மகளை ஆறு மாமாவின் மகனுக்குக் கைபிடித்துக் கொடுக்கப் பண்ணினால் அது இந்தப் பத்தரின் தரகு வேலையின் சிகரமாகி விடும். அன்று மாலை, காகங்கள் எல்லாம் முருங்கை, வேப்ப மரங்களில் சென்றடைய, வௌவால்கள் இலுப்பம் பழங்களை வேட்டையாடப் படையெடுக்கத் தொடங்கிய நேரத்தில், அச்சுவேலியின் எல்லா வீடுகளிலும் ஒரே செய்தியைப் பற்றித்தான் கதை நடந்தது. இரத்தின மாமா கிணற்றடி மாதுளை மரத்திலிருந்து ஆறு பழங்களை ஆறு மாமா வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம் (இதற்கும் பிறகு நடந்ததற்கும் தொடர்பு ஏதாவது இருந்ததா என்று நான் பிறகு யோசித்ததுண்டு). பத்தரின் தரகு வேலையால் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருமண நாளுக்கு முதல் நாள் மாலை சீதனப் பேச்சு முடிவுற்றுச் சீதனம் மாப்பிள்ளையிடம் கையளிக்கப்படும். திருமண நாள் அருகே வர, இரத்தின மாமாவின் வீட்டில் வேலைகள் மும்முரமாக நடந்தன. பச்சையும் மஞ்சளுமான தென்னோலைகளால் வேயப்பட்ட கிடுகுகளால் பந்தல்கள் கட்டப்பட்டுக் கொன்றை, சம்பங்கி, வெள்ளையும் இளஞ்சிவப்புமான செவ்வரளி, செம்மஞ்சள் நிறத் தென்னம்பூ போன்ற பலவகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டன. கூரைக்குக் கீழே வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டன. தரையில் இந்தியக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. ஒரு பந்தலில் மிகையாக அலங்கரிக்கப்பட்ட கூரைக்குக் கீழே உயர்த்தி வைக்கப்பட்ட திண்ணைதான் மணவறை. அதிலே நண்பர்களோடு மணமகன் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால் ஒரு பித்தளைக் குடத்தின் மேல் வெற்றிலைகளும், மஞ்சள் எலுமிச்சம் பழமும், பூக்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவை மகப்பேற்றுக்கான சின்னங்கள். இரத்தின மாமா காசியிலிருந்து கையால் நெய்யப்பட்ட சரிகை வேலைப்பாடுள்ள கூறைப்புடவை ஒன்றைக் கொண்டுவர ஒழுங்குபடுத்தியிருந்தார். குங்கும நிறத்தில் மின்னிய அந்தப் புடவையின் விலை அந்தக் காலத்திலேயே மூவாயிரம் ரூபாய். வளவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து உள்ளூர்த் தவில் வாத்தியக்காரரைத் தவிர, தஞ்சாவூரிலிருந்து இரண்டு சங்கீதக் கோஷ்டிகளை வீட்டுக்குள் கச்சேரி வைக்கக் கொண்டுவந்திருந்தார். ஒவ்வொரு விருந்தினரின் வருகையையும் வாசற் தவில்காரர் அறிவிக்க, சிறுவர் குழாம் சீனப்பட்டாசு வெடிப்பதற்கு ஓடிப் போக, உள்ளேயிருக்கும் ஒரு சங்கீதக் கோஷ்டி கச்சேரியை ஆரம்பிக்க, மக்கள் கையிலிருக்கும் எல்லா விதமான ஆயுதங்களாலும் வெடிவைத்துக் கோலாகலமாக விருந்தினர்களை வரவேற்பார்கள். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் திருமணப் பரிசுகள் ஊர்வலமாக வந்தபடி இருந்தன. இரண்டு பேர் சுமக்கும் ஒரு தடியின் இரண்டு பக்கமும் தொங்கும் வாழைக் குலைகள், இலுப்பெண்ணை, நல்லெண்ணைச் சாடிகள், கால்நடைகள், கோழிகள், அரிசி மூட்டைகள், சாராயப் போத்தல்கள், சுருட்டுப் பெட்டிகள், கத்தரி, பலா, முருங்கை போன்ற காய்கறிகள், மாம்பழம், பப்பாசிப்பழம், ஜம்பு போன்ற பழவகைகள். கொஞ்சம் வறிய மக்கள் திருமண விருந்துக்குச் செய்யப்படும் கறிகளுக்குக் கூட்டுச் சேர்ப்பதற்காகத் தேங்காய்களை அனுப்பி வைத்தார்கள். திருமணத்துக்கு முதல் நாள் ஒருவர் மாமரத்துக்குக் கீழே உட்கார்ந்தபடி மணித்தியாலக் கணக்காக நெற்றியில் பொட்டாக அணிவதற்காகச் சந்தனம் அரைத்துக்கொண்டிருந்தார். அரைத்த சந்தனம் வெள்ளிப் பேழைகளில் போடப்பட்டு விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்குப் பன்னீர் தெளித்த பிறகு, சந்தனப் பொட்டு போடுவதற்காக நீட்டப்படும். வெளியே மாந்தோப்பில் மூன்று கல் வைத்த அடுப்புகளில் பென்னாம்பெரிய கிடாரங்கள் சோறு கறி சமைப்பதற்காக வைக்கப்பட்டன. திருமணத்துக்கு முந்நூறு விருந்தினராவது வருவார்கள். அதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சமூக வேலையாட்களுக்கும் மிஞ்சிய உணவு வழங்கப்படும். அது எல்லா விருந்துகளின் பின்னரும் நடக்கும் பாரம்பரிய வழக்குமுறை. முதலில் பெண்கள் ஆண்களுக்கு உணவு பரிமாறுவார்கள். அதற்குப் பிறகு பெண்களும் வேலையாட்களும் சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்து வேலையாட்களுக்குப் புளியந்தோப்பிலோ மாந்தோப்பிலோ உணவு வழங்கப்படும். ஏனென்றால் அவர்களுக்கு வீடுகளுக்குள் வர அனுமதி கொடுப்பதில்லை. ஒரு தேர்ந்த பரிசுக் கிடாய் ஆடு வெட்டப்பட்டது. பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டன. சலவைக்கார வண்ணார் ஊர்வலம் செல்வதற்கு விரிப்பதற்காகக் கட்டுக் கட்டாக வெள்ளைத் துணி கொண்டுவந்தார். இரண்டு யானைகள் பாகர்களோடு வந்தன. மாப்பிள்ளையும் பெண்ணும் அவற்றில்தான் கோவிலுக்குப் போய் வருவார்கள். பக்கத்து ஊர் சங்கீதக் கோஷ்டிகளெல்லாம் அருகில் கூடாரம் போட்டிருந்தார்கள். சாத்திரியார், வழக்கறிஞர், பத்தர் அவர்களோடு ஆறு மாமா பிற்பகல் நேரம் வருவார். அப்போதுதான் சீதனம் பேசி நிர்ணயிக்கப்படும். இரத்தின மாமா முற்றத்தில் ஒரு மேசைக்கருகே உட்கார்ந்திருந்தார். மேசையில் ஒரு கிண்ணத்தில் மாதுளங்கொட்டைகளும் அதற்கருகே ஒரு போத்தல் சாராயமும் வைக்கப்பட்டிருந்தன. நானும் என் ஐந்து சகோதரர்களும் இரத்தின மாமாவைச் சுற்றி முண்டியடித்துக்கொண்டு நின்றோம். அவர் சிவப்பும் தங்கமுமாகச் சரிகை வைத்த தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடைய மேலங்கி முழங்கால் வரைக்கும் தொங்கியது. மேலே கழுத்துவரைப் பொத்தான் போடப்பட்டிருந்தது. அடிக்கடி கொஞ்சம் மாதுளங்கொட்டைகளை வாய்க்குள் போட்டு, ஒரு மிடறு சாராயமும் குடித்தார். பத்தர் சாத்திரியாருடன் வந்து சேர்ந்தார். “இருங்கோ” என்று சொன்ன இரத்தின மாமா “எங்கே இந்த ஆறு? தாமதமாப் போச்சு…” என்று கேட்டார். “கெதியா வந்திடுவார்” என்று பத்தர் தேற்றினார். இரத்தின மாமா பொறுமையில்லாமல் மேசையில் விரல்களால் தாளம் போட்டார். இன்னும் கொஞ்சம் சாராயம் குடித்தார். தட்டாருக்கோ சாத்திரியாருக்கோ சாராயம் கொடுத்து உபசரிக்கவில்லை. சாதி ஒழுங்குமுறையில் அவர்களுக்கு உட்காரும் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் சேர்ந்து உண்பதற்கோ குடிப்பதற்கோ தகுதி வழங்கப்படவில்லை. இரத்தின மாமா சிந்தனையில் மூழ்கியிருந்தார். இன்றைய தினம் அவரது செல்வத்தின் பெரும்பகுதியைக் கொடுத்து விடப் போகிறார். தனக்கென்று இருந்த வீட்டையும் கொஞ்சம் வருமானத்துக்காக ஒருசில வயற்காணிகளையும் மட்டும்தான் வைத்துக்கொள்ளப் போகிறார். சீதனம் கொண்டு வருவதற்கு யாராவது மகன் இருந்திருந்தால் அவரை இது இவ்வளவாகப் பாதித்திருக்காது. கடைசியில் ஆறு மாமா ஒரு வழியாக வந்து சேர்ந்தார். வெள்ளைத் தலைமுடி குடுமியாகப் போடப்பட்டு, உருக்கி வார்த்தது போல இருந்த அவரது காதுகளில் கடுக்கன் தோடுகள் தொங்க, மிகவும் ஒல்லியாக மிடுக்காக இருந்தார். அவரும் முழங்கால் வரைக்கும் கறுப்பு நிற மேலங்கி அணிந்திருந்தார். “இதைக் கெதியா முடிப்பம்” என்றார் இரத்தின மாமா. “சரி, சரி” என்றபடி உட்கார்ந்த ஆறு மாமா, ஒரு சின்ன வெள்ளி உரலையும் உலக்கையையும் பையிலிருந்து எடுத்து அதற்குள் கொஞ்சம் வெற்றிலை பாக்கைப் போட்டு இடிக்க ஆரம்பித்தார். இரத்தின மாமா தாழ்த்திய குரலில் பேச ஆரம்பித்தார். “சகுனங்கள் எல்லாம் சரியாம். சாதகமும் நல்ல பொருத்தம் எண்டு சாத்திரியார் சொல்லுறார்.” எனது இருதயம் அடிக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. ‘சகுனம்’ என்ற சொல் ஏதோ பயங்கர மர்மங்களின் ஆட்டங்களை நினைவுக்குக் கொண்டுவந்தது. “அப்பிடித்தான் கேள்விப்பட்டன்” வெற்றிலை பாக்கை இடித்தபடி ஆறு மாமா சொன்னார். விருந்தினர் பந்தலில் பெண்கள் பரிவாரம் சூழ நின்ற சுந்தரியைக் கண்டேன். எல்லோரையும் போல அவளுக்கும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்திருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நாணமும் தன்னடக்கமும் கொண்டவளாய் நின்றாள். வழக்கறிஞர் கை நிறைய வீடு – காணி உறுதிகளைத் தூக்கிக் கொண்டு முற்றத்துக்கு வர, இரத்தின மாமா அவற்றைக் கையில் வாங்கிக்கொண்டார். “சுன்னாகத்து வயல் காணி எல்லாவற்றையும் எனது மகளுக்கு எழுதிவிடப் போகிறேன்” என்று இரத்தின மாமா ஆறு மாமாவைப் பார்த்துச் சொன்னார். “தவறணைக்குப் பின்னாலே உள்ள போயிலைக் காணி எப்பிடி?” ஆறு மாமா கேட்டார். “அதுவும் அவளுக்குத்தான்” என்றார் இரத்தின மாமா. ஆறு மாமா தொடர்ந்து வெற்றிலை பாக்கை இடித்துக்கொண்டிருந்தார். “அது இரண்டுக்கும் இருபத்தையாயிரம் பெறுமதி” இரத்தின மாமா தொடர்ந்தார் “ஐம்பதாயிரம் காசாக. மிச்சத்துக்கு இந்தக் காணியில் ஒரு பங்கையும் பக்கத்து வீட்டையும் குடுக்கிறன். வா, எல்லைக் கோட்டைக் காட்டுறன்.” அத்துடன் அவர்கள் எழுந்து கிணற்றடி நோக்கிப் போனார்கள். நானும் எனது சகோதரர்களும் பின் தொடர்ந்தோம், மற்ற வீட்டுக்காரர்களும் கூட்டமாகத் தொடர்ந்தார்கள். இரத்தின மாமா கிணற்றடியில் நின்று, மாதுளந்தோப்பின் நடுவே வளர்ந்திருந்த ஒரு மாமரத்துக்கு அப்பால் சுட்டிக் காட்டி “இதுதான் எல்லை” என்றார். “ஓ” என்றார் ஆறு மாமா. “பக்கத்துக் காணிக்குக் கிணறில்லாட்டி என்ன பிரியோசனம்? இரத்தின மச்சான், எல்லைக் கோட்டைக் கிணத்துக்கு நடுவால போடு. அப்பிடியெண்டா பக்கத்துக்கு வீட்டுக்குத் தண்ணி உரிமை இல்லாமல் போகாது.” இரத்தின மாமாவின் முகம் கறுத்தது. தனக்குப் பிரியமான மாதுளை மரத்தை ஏறிட்டுப் பார்த்தார். சீதனக் காணிக்குக் கிணற்றுக்கு நடுவில் எல்லைக் கோடு போட்டால், அந்த மரம் இனி அவருக்குச் சொந்தமில்லை. “கிணறு பாவிக்கிற உரிமையை எழுதித் தாறன்” இரத்தின மாமா சொன்னார், “ஆனால் எல்லைக் கோடு மாமரத்தடியோட போகட்டும்.” “நியாயமில்லாமல் கதையாத” ஆறு மாமா பதில் சொன்னார், “கிணத்துக்குள்ளால எல்லை போகட்டும். அதுதான் இலகுவான தீர்வு.” “இல்லையில்லையில்லை!” இரத்தின மாமா பிடிவாதத்துடன் முகத்தைக் கோணினார். பத்தர், இரத்தின மாமாவின் காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். அது இரத்தின மாமாவை மிகவும் குழப்பிவிட்டது. பத்தர் பிறகு ஆறு மாமாவின் பக்கம் திரும்பி ஏதோ சொன்னார். “நான் சொல்லுறதைக் குறை நினைக்காத இரத்தி… கிணறு அல்லது கிணத்தின் பாதி என்ர மகனுக்கு வாற காணியில கட்டாயம் இருக்க வேணும்” ஆறு மாமா சொன்னார். பத்தர் மீண்டும் இரத்தின மாமாவின் காதில் ஏதோ குசுகுசுத்தார். இரத்தின மாமா “இல்லை!” என்று அடித்துச் சொல்லிவிட்டார். பத்தர், ஆறு மாமாவின் பக்கம் திரும்பி சலாம் போட்டுவிட்டு “கிணத்தில என்ன இருக்கு? நீங்கள் எப்ப வேணுமெண்டாலும் இன்னுமொரு கிணத்தைக் கிண்டிப் போட்டுப் போகலாம்” என்றார். “நான் கேட்ட மாதிரி எல்லைக் கோடு போடாட்டில்…” ஆறு மாமா தனது உரிமைகளைப் பாதுகாக்கும் கறாரான தொனியில் சொன்னார், “இந்தக் கலியாணம் நடக்காது!” “ஐயா! ஐயா!” பத்தர் கைகளைப் பிசைந்தபடி கெஞ்சினார். “மடையன்!” என்று இரத்தின மாமா முணுமுணுக்க, ஆறு மாமா திகைத்துப் போனார். இலங்கையில் ‘மடையன்’ என்று சொல்வது பெரிய அவமரியாதை. “சுத்த மடையன்” என்று திரும்பவும் சொன்ன இரத்தின மாமா, “பாழாப்போன கலியாணம்!” என்று சொல்லிவிட்டுத் தோப்புக்கூடாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சீதனப் பேச்சுவார்த்தை குழம்பியதால் திருமணம் நிறுத்தப்பட்டது. பந்தல்களும் தோரணங்களும் அவிழ்க்கப்பட்டன. அன்றிரவு சாப்பிடும்போது “அந்தப் பிசாசு! அவன் என்ர கிணத்தடி மாதுளையைத்தான் கண் வச்சான்!” என்று இரத்தின மாமா கத்தினார். அடுத்த நாள், மலாயாவில் பெரிய தோட்டம் வைத்திருந்த தன் மைத்துனருக்கு அவரின் மகனுக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் பேசிக் கடிதம் அனுப்பினார். இரண்டு வாரத்துக்குள் மாப்பிள்ளை வந்து சேர்ந்தான். திருமணம் கோலாகலமாக நடந்தது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு மின்னியற்றி இயந்திரம் வாடகைக்கு எடுத்து வீட்டைச் சுற்றியும் மரங்களுக்கு மேலும் வண்ண மின்சார விளக்குகளெல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணிவிட்டார். இந்த விளையாட்டெல்லாம் ஆறு மாமாவைப் பிரமிக்க வைக்கத்தான். ஆறு மாமா திருமணத்துக்கு வருகை தரவில்லை. ஆனால், கொஞ்ச நாள் போனதும் இரத்தின மாமாவுக்குக் காட்டுக் கோழியும், காட்டுப் பன்றித் தொடைகளும், மான் இறைச்சியும் வழக்கம் போல வேட்டைக்குப் பின்னர் அனுப்பி வைக்கத் தொடங்கினார். ராஜாவுக்குக் கல்யாணப் பேச்சு நேரம் சுந்தரிமேல் காதல் பிறந்து விட்டதால், பல வருடங்கள் கல்யாணம் வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றான். பிறகு ஒருநாள் ஒரு கொழும்புப் பெண்ணைச் சந்தித்ததும் மனம் மாறிவிட்டான். அவளுக்குப் புத்தளத்தில் பெரிய தென்னந்தோப்புகள் இருந்தன. அவள் டென்னிஸ் விளையாடுவாள். கார் கூட ஓட்டத் தெரியும். அவள் உதட்டுச் சாயம் பூசி, கையில்லாத ரவிக்கையும் அணிந்ததைப் பார்த்து ஊரார் திகைப்பில் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால் அவள் ஆறு மாமாவின் வயதான காலத்தில் நல்ல மருமகளாக அவரைச் சந்தோஷமாக வைத்திருந்தாள். அவளுக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு டென்னிஸ் மைதானத்தையே ஆறு மாமா கட்டிக் கொடுத்தார். ஆனால் அவளுக்கு மூத்த மகன் பிறந்த கையோடு அவளது டென்னிஸ் ஆர்வம் விட்டுப் போயிற்று! இரத்தின மாமா இறந்தபோது, எனக்குப் பத்து வயதுகூட இல்லை. ஆனால் வேலைக்காரி ஒரு கிண்ணத்தில் கிணற்றடி மாதுளைமரத்தின் பழக் கொட்டைகளைக் கொண்டு வரும்போது அவரது வட்டமான, சுருக்கமில்லாத முகத்தில் மலரும் மகிழ்வு எனக்கு இப்போதும் கண் முன்னால் தெரிகிறது. அந்த மரம் அச்சுவேலி முழுக்கப் பிரபலமான மரமாக இருந்தது. இன்னும் இருக்கிறது. Artist : Arpitha Reddy எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது. https://thadari.com/the-pomegranate-tree-t-tambimuttu-short-story/?fbclid=IwdGRleAPHMyRleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeCFdVxcuG8DMvh6BM5WiRfhB9f2VThtnfL0rsSEfZH3RPMi9z_Vw_uwQTi2Y_aem_tH25YO_Qwhrh963g_Z5J3w
  19. தொல்லை இல்லை இரண்டு ஊர்லையும் ஓட்டலாம்..
  20. பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்! adminJanuary 23, 2026 குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட வசதி, விலை உயர்ந்த மெத்தைகள் மற்றும் சொகுசுத் தளபாடங்களுடன் இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அறைக்குள் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியேறுவதற்கு எனத் தனியாக ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை மூடிவிட்டால், உள்ளே வாகனம் இருப்பதோ அல்லது ஆட்கள் இருப்பதோ வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மகிந்த ராஜபக்ச இரவு நேரங்களில் தங்குவதில்லை. ஆனால், அவசரமாக வந்து பல மணிநேரம் தங்கியிருந்து தனது இரகசிய விடயங்களில் ஈடுபடுவார். ‘ஹசினி’ என்ற பெண்ணும் அங்கு வந்து தங்குவதாகக் குறிப்பிட்ட தேரர், அந்த கிராமத்து மக்களுக்கே இப்படியொரு அறை இருப்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த விகாரையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் மகிந்த ராஜபக்சவே திறந்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227331/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.