Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   48,025


 2. putthan

  putthan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   11,691


 3. Nathamuni

  Nathamuni

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   6

  • Content Count

   7,278


 4. புங்கையூரன்

  புங்கையூரன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   12,743Popular Content

Showing content with the highest reputation on 06/09/2019 in all areas

 1. 5 points
  டேய் புத்தா நீ கில்லாடிடா இந்த வயதிலும் 16 புள்ளி எடுத்திட்டாய் வாழ்த்துக்கள்....அது சரி நீ எப்பயாவது மட்டையை தூக்கி விளையாடியிருக்கிறீயா...
 2. 3 points
  நீங்க‌ள் வ‌ட்ட‌ தூக்க‌// பையா எனக்கென்னமோ வ னாக்கு முன்னால கா னாவ விட்டிட்டியலோ எண்டு சந்தேகமா இருக்கு
 3. 3 points
  1977 ஆம் ஆண்டுகளில் மூன்று அல்லது நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லீகள் கொண்டிருந்தனர் இன்று 20 க்கு மேற்பட்ட உறுப்பினர் அதாவதுகடந்த40 வருடங்களில் மூஸ்லீம்கள் பல்கி பெருகியுள்ளனர்.. ..1300 வருடங்களுக்கு முன்பே முஸ்லீம்கள் வாழ்ந்திருந்தாள் இன்று அவர்கள் தான் சிறிலங்காவின் பெரும்பான்மையாக இருந்திருக்க வேண்டும்....இன்று குறைந்தது 200 உறுப்பினர்களாவ்து இருந்த்திருப்பார்கள்....ஆகவே எனது ஆராச்சியின்படி முஸ்லீகள் பின்புதான் வந்துள்ளனர் பிளீஸ் என்னையும் அந்த குறுப்பினுள் இணைத்துவிடவும்...
 4. 3 points
  கிருபன், சீமான், ஆவேசமாக பேசிய பல காணொளிகள் உள்ளன. தெலுங்கன் என்னடா, தமிழனை ஆளுவது, விஜயகாந்த் எப்படி எம்மை ஆளுவது என்பது போன்ற பல வசனங்களை பேசி உள்ளார். ஆரம்பத்தில், அவரது பேச்சில், வேகம் இருந்த அளவுக்கு, நிதானம் இருக்கவில்லை. பலர் வெகுண்டார்கள். வைக்கோ போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர் வந்தால், நமக்கு ஆபத்தோ என்று பல தமிழர் அல்லாதோர் பயந்தனர். மலையாளிகள், தெலுங்கர்கள் இந்த பயத்தினை வெளிக்காட்டினர். இந்த நிலைமை சீமான் தனி மனிதனாக தொடங்கி ஆரம்பித்த போது காணப்பட்டது. விரைவிலேயே, அவரினை சரியாக அடையாளம் கண்டு கொண்ட ஒரு அறிவு சார் கூட்டம் ஒன்று, அவர் நெருங்கி, நெறிப்படுத்த தொடங்கியது. இந்த கூட்டத்தின் பங்களிப்பினால், சீமான் தனது நிலைப்பாடு குறித்த, தெளிவான முடிவுகள் எடுக்க வேண்டி வந்தது. இப்போதெல்லாம், அந்த வகையான பேச்சுக்கள் இல்லை. ஆரம்பத்தில், இவரது பேச்க்கள் காரணமாகவே அவர் வளர மாட்டார் என நினைத்த பெரிய கட்சிகள் இன்று அவரை ஒரு தீர்க்கமான எதிரியாக பார்க்கின்றன. இன்று சத்தியம் டிவி பேட்டி. அதே ஆளுடன் கடைசியாக நிகழ்ந்த பேட்டியில், சீமானின் கருத்து, மலையாளி ஆகிய தன்னை யோசிக்க வைக்கிறது என்று தனது பயத்தினை நேரடியாகவே சொன்னார். இன்று அதே ஆளிடம் சீமான் சொல்கிறார், அனுபவம், முதிர்ச்சி காரணமாக நாம் தெளிவினை பெற்று, நிலைப்பாட்டினை மாத்தி ஓடிக் கொண்டிருக்கிறோம். அன்று இருந்த ஆவேச சீமான் இன்றும் இருக்கிறார், ஆனால் அவரது கருத்தில், தெளிவு, விவேகம் காணப்படுகின்றது. அடுத்ததாக, நம்மில் பலர், பிரபாகரனை தூக்கிப் பிடிப்பதால், அவர் தமிழீழம் பிடித்து தருவதாக சொல்லி புலம் பெயர் மக்களிடம் பணம் வாங்குகிறார் என்று கருதுகிறார்கள். இந்த கருத்தை உள்வாங்கியே, வைக்கோவும் கருத்து வெளியிட்டார்.. அது உண்மையல்ல என்பது நிதானமாக சிந்திப்பவர்களுக்கு புரியும். புலம் பெயர் தமிழர் பணம் அனுப்பலாம், விடலாம், அது வேறு. ஆனால், உண்மையான காரணம், தமிழகத்தின் சாதிய தீண்டாமை. சீமான் தன்னை தலைவனாக முன் நிறுத்தினால், அவரது சாதியை சொல்லி எதிராளிகள் அரசியல் செய்வார்கள். தமிழர் இல்லாத, வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவரை, சாதியத்துக்கு அப்பால் தலைவராக ஏற்க தயாரான தமிழகம், தம்மில் ஒருவரை ஏற்கத் தயங்குகிறது. இதுவே, எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவுக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் வசதியானது. ரஜனி முதலமைச்சர் கதிரையினை ஆசையுடன் பார்க்கும் காரணமும் இதுவே. பிரபாகரனை, ஒரு வெளிநாட்டவரை, தலைவராக காட்டும் போது, அது சாதியத்தினை கடந்து சிலரால் ஏற்கப் படுகினறது. பிரபாகரன் அவர் எந்த சாதி என்பதனை, அவர் வெளி நாட்டவர் என்பதனால் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று தோன்றுகினறது. மேலும் அவர் ஒரு தமிழர் என்பது முக்கியமானதாகின்றது. இதே சீமான், முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன், என்று கிளம்பி இருந்தால், 'நாம் தமிழர்' கட்சி பெயர், நாம் தேவர் போன்ற பெயரில் ஒரு சாதிக்கட்சியாக மாறி இருக்கும். 'வன்னியர் கட்சி' யாக ஆரம்பித்தார், ராமதாஸ். கட்சி பெயரை மாத்தினாலும், குத்தப்படட சாதிய முத்திரை, நீக்கப்பட முடியாமல் தத்தளிக்கிறது. பிரபாகரனை தலைவனாக கொண்டதாக கட் சி ஆரம்பிக்க, சீமான் செலுத்திய விலை சிறை. ஆனாலும் அது சிறந்த முடிவாக உள்ளது. இந்த யதார்த்தம் புரியாமல், பிரபாகரனை ஏன் தலைவராக கொண்டுள்ளார்கள் என்று புரியாமல், பலர், இவர் எமக்கு ஈழம் பிடித்து தர தான் அவ்வாறு செய்துள்ளார் என்பதும், அந்த வகையில் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும், முதிர்சியானதாக தெரியவில்லை. அவர்களது மக்களின் அவலத்தினை போக்க, நமது நாட்டினை சேர்ந்த ஒருவர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்ற வகையில் பார்த்தால், வேறு குழப்பங்கள் வராது. நமது நாட்டில் கூட, காந்திய போராட்டம், தமிழர் விடுதலை கூட்டணி கட்சி கொடியாக உதய சூரியன் என்று இந்தியாவில் இருந்து எடுத்தோமே. அங்கே யாருமே பினாத்தவில்லையே. நாம் மட்டும் ஏன்? எம்மை பொறுத்த வரை, சீமான் வென்றால் மகிழ்ச்சி. வென்றால், தென் இந்திய முதல்வர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் ஆதரவினையும் பெற்று, இந்திய மத்திய அரசின் கொள்கை முடிவினை மாத்த முடிந்தால் நன்று. காலமாகலாம். ஆனாலும் நமது போராட்டம் ஒரு தனிமனிதனை நம்பி இல்லையே. அது 2020ம் ஆண்டு 500 வருட, போர்த்துக்கேயருடன் ஆரம்பித்த அடிமைத்தனத்தினை கொண்டாட போகின்றது. இந்த 500 வருடத்தில் நாமும் வாழும் இந்த காலப்பகுதியும் கடந்து போகும். காலம் என்ன வைத்திருக்கிறதோ தெரியாது. ஆகவே சொல்ல வருவது என்னவென்றால், தமிழகத்து அரசியலை, தனியாக, அந்த மாநில அரசியலாக மட்டுமே பாருங்கள். அதனுடன், ஈழத்து அரசியலை சேர்த்து பார்க்காதீர்கள்.
 5. 2 points
  கலியாணப்புரோக்கர்களும் அவர் பின்னே ஞானும் *இது எனது மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றிய பதிவு * யார் மனதையும் புண்படுத்த அல்ல* கலியாணப் புரோக்கர்கள் கேட்கும் கேள்விகளை விட interview ல கேட்கிற கேள்விகள் கொஞ்சமாவது easy ஆக இருக்கும் போல தோணுறது எனக்கு மட்டும் தானோ என்னவோ.. கலியாணப்புரோக்கர்களுடனான எனது சம்பந்தம் ? தொடங்கினது 2012 க்கு பிறகு தான்..என நினைவு எப்ப நான் வயசுக்கு வந்தனோ..இல்லை..இல்லை ... எப்ப வேலை கிடைச்சுதோ அப்போதிருந்தே புரோக்கர் களை தேடி அப்பாவும் அம்மாவும் ஓடத்தொடங்கி விட்டனர். என்னோட கதைத்த ப்ரோக்கர் முதல் முதல் சொன்ன விசயம் இப்போதும் என் நினைவில் உள்ளது தம்பி இப்போதைய பிள்ளையள் வலு கெட்டிகாரியள் கண்டியளோ போட்டோ தான் முக்கியம் அவளவை இப்பத்தைய நடிகர் மாரை போல ஸ்ரைலான மாப்பிளை தான் வேணும் என்கிறாளவை நீங்க கோட் போட்டு ஒரு நல்ல போட்டோ அனுப்பி வையுங்க..அத்தோட நீங்க சிங்கப்பூரே ,லண்டன் கனடா மாப்பிளை என்டா 15 வயசு வித்தியாசம் எண்டு கூட பார்க்காமல் ஓம் எண்றாளவை ,உங்களிற்கு அங்கால போற ஐடியா எதும் இருக்கே.. நான் இருக்கிற நாடு தான்டா உலகத்திலேயே பாதுகாப்பான நாடு என்று சொல்றாங்க என்டு என்ர மைன்ட் ஃவொய்ஸ் சொன்னதை அலட்சியப்படுத்தி இல்ல அங்கிள் இப்போதைக்கு அந்த ஐடியா எதுவும் இல்லை" என சரி தம்பி எதும் வந்தால் சொல்றன் என வைத்தவர் தான் ஆள் இருக்கறாரோ தெரியல இப்ப புரோக்கர் மாரோட அடுத்த புடுங்குப்பாடு வாறது போட்டோக்கு , நான் எனது தோற்றத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை எங்கேயும் நண்பர்களுடன் செல்லும் போது அல்லது சந்திக்கும் போது எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மட்டும் தான் இருக்கும் அதுவும் காமா சோமா வடிவில (அர்த்தம் கேட்காதீர்கள்) இந்த போட்டோக்களே போதும் ஆருக்கும் பிடித்திருந்தால் வரட்டும் இதற்காக சூட்டிங்கா போக முடியும் என்ற எண்ணம் சில புரோக்கர்கள் நல்ல போட்டோ அனுப்பு அனுப்பு என கேட்டு களைத்து அதோட தொடர்பையே அறுத்து கொண்டு விட்டனர் இதற்கு மேலாக ஒரு புரோக்கர் "தம்பி உங்கட certificate ஒருக்கா அனுப்புங்கோ" என்றார் என்னங்கடா இங்க என்ன வேலைக்கா ஆள் எடுக்கிறாங்க நான் என்ன டேஷ் க்கு அனுப்பணும் என நினைத்து நான் படிச்சு எடுத்தது உங்களிற்கு எதையும் ப்ரூவ் பண்ணுவதற்கு இல்லை நம்பிக்கை இல்லைன்னா கிளம்பிட்டே இருங்க ன்னு சொன்னதோட அவரும் அவுட் .. அம்மா புரோக்கர், சாத்திரி, கோயில் என ஏறி இறங்கி களைத்திட்டார் , தாவடி சாத்திரி சொன்னான் ஆவணிக்குள்ள நடக்கும் வவுனியா சாத்திரி சொன்னார் ஐப்பசிக்குள்ள நடக்கும் அம்மன் கோயில் பூசாரி சொன்ன பங்குனிக்குள்ள நடக்கும் வெற்றிலை சாத்திரி ,கண்ணாடி சாத்திரி, மாம்பழ சாத்திரி என அவர் சொன்ன பங்குனி ஆவணிக்கள் வந்ததோ இல்லையோ வருடங்கள் மட்டும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன.. நானும் அம்மா ஒவ்வொரு கெடுவாக சொல்ல சொல்ல நீயும் தான் எவ்வளவு தூரம் ஓடுவாய் வயசும் போயிடுச்சு விட்டிடணை நடக்கணும் என்டால் அதுவா நடக்கும் விடு பார்க்கலாம் என சொல்ல.. ஓகே நான் விடுறன் ஆனால் இனி எது வந்தாலும் செய்யணும் எந்த காரணமும் சொல்ல கூட எனும் நிபந்தனையுடன் தனது தேடும் படலத்தை இடை நிறுத்தி விட்டா.. புரோக்கர் மார் தான் இப்படி எனில் பொருத்தம் பார்ப்பவர்கள் இன்னும் ஒருபடி மேல என்னுடைய குறிப்பினை யாரோ பெண் வீட்டார் ஒரு சாத்திரியிடம் காட்ட அவர் சொன்னாராம் ஏற்கனவே திருமணமான குறிப்பு என :D( டேய் நானே ஒரு பொண்ணு கூட கிடைக்காமல் இருக்கன் நீ இரண்டு பொண்ணுன்னு சொல்லி இருக்க எங்க இருக்க சொல்லு பார்க்கணும் போல இருக்கு ) சாத்திரம் குறிப்பு பார்ப்பது என்பதே ஒரு மூட நம்பிக்கை..உங்களின் மனத்திருப்திக்கு நீங்க பார்க்கவிரும்பினாலும் சாத்திரம்/பொருத்தம் பார்ப்பதில் இங்கு யாருக்குமே பூரண அறிவு கிடையாது உங்களிற்கு பிடித்த குடும்ப சாத்திரியாக இருப்பினும் அவரிடம் கேட்டு விட்டு இன்னும் வேறு இரு சாத்திரிகளிடம் கேட்டு மூவரும் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டு முடிவெடுக்கிறதே மிகச்சிறந்தது. அதுவும் ஒருபகுதியினர் சாதகம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் சாதகத்தை மட்டும் காரணம் காட்டி தட்டி விடுதல் மிகத்தவறு.பெற்றோர்களே சாத்திரி மற்றும் புரோக்கர் மார்களே கொஞ்சம் கவனத்தில் எடுங்கள் மனசுக்கு பிடித்தவற்றை சாத்திரம் காரணமாக பிரிச்சிவைக்கிற பாவம் உங்களை சேராமல் இருக்கட்டும் ( *அண்மையில் நண்பன் ஒருவனுக்கு பொருந்தி வந்த திருமணத்தை சாத்திரி ஒருவர் குழப்பி அடிச்ச காண்டில கிறுக்கியது*
 6. 2 points
  மதமும் மனிதர்களும் _____________________ உங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈராக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது . இன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் அளிக்கப்பட்ட வரலாறுகளே தொடர்கின்றன .ஒரு கையில் ஜனநாயக்கதோடும் மறு கையில் ஆயுதங்களாக வியாபார உலகமாக இருக்கும் போது மனிதம் வாழுவதற்கு இடமேது . ஒரு வன்முறைக்கு இன்னும் ஒரு வன்முறை தீர்வாகாது ஒரு பிழைக்குஇன்னும்ஒருபிழையைசுட்டிக்காட்டுவது குழந்தைத்தனமானது .மனித குலத்துக்கு எதிரான எல்லாவன்முறைகளுமேகண்டிக்கத்தக்கவை . முதலாளித்துவத்தின் சுரண்டல்காரர்களின் பெயரால் மதத்தின் பெயரால் நடாத்தப்படுகின்ற எல்லா வன்முறைகளும் மனித மானிட தர்மங்களுக்கு எதிரானவையே . மதம் என்பது ஒரு மனிதனை வன்முறை இல்லாதவனாக ஒழுக்கமான ஒரு சமூகத்தை உருவாக்க முனையும் ஒரு சமூக காரணியாகும்.(social fact). ஆதி கால மனிதன் வன்முறையும் கொலையுமாக சமூக அரசியல் பொருளாதார எந்த கட்டமைப்பும் இன்றி தமக்குள் மோதி இறந்தனர் .பல பரிணாமம் கடந்து மக்கள் அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்து அவனிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைத்து ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கினான் .பின்பு மறுமலர்ச்சி (Renaissance period)காலங்களோடு சமுக அரசியல் ஜனநாயக பண்புகள் உடன் படி படியாக உலக நாகரீகம் வளர்ச்சி கண்டது . அரசியல் சமூக கலாச்சார பொருளாதார ஸ்தாபனங்கள் வளர்ச்சி கண்டு சமூக இயக்கத்துக்கு காரணமாக அமைந்தன .மதம் என்பதும் இதன் அடிப்படையில் ஆனதே .சமூகவியலாளர் கார்ல் மார்க்ஸ் கூடி மதத்தை எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை ,மதம் என்பது அவின் போன்றது என்று மதமும் பொருளாதாரமும் என்ற தனது ஆய்வுகளில் குறிப்பிட்டு இருந்தார் . முதலாளித்துவ சுரண்டலுக்கு மதம் முக்கியமானது இதனால் மதம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வேறு வேறு பாத்திரங்களில் தோவையாக இருந்தது .முதலாளித்துவ சுரண்டலாலும் தொழிலாளர் தனிமை(alienation) அடைவதால் மதத்தை தொழிலாளி நாடி போக வேண்டி இருந்ததாக கார்ல் மார்க்ஸ்சின் சோஷலிச தத்துவம் விபரிக்கின்றது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்பங்களின் நிமித்தம் மதத்தை நாடுவதும் ஆண்டவனை வேண்டுவதுக்கும் அடிப்படையாக அமைந்தது முதலாளித்துவ வர்க்க சுரண்டலாகும் .அதே வேளை குடும்பங்களை பிரிந்து இயந்திர வாழ்வோடு மனிதன் இருப்பதால் அமைதி வேண்டி ஆண்டவனை நாடுவது அவர்களுக்கு ஒரு மன அமைதியை தருவதாகவே தொழிலாளர் கருதினர் .இதயம் இல்லாத உலகில் இதயம் போன்றதே மதம் என்று மார்க்ஸ் கூறினார் . ஆகவே மதம் என்பது அமைதியை தேடுவதற்கும் மனிதனை நல்வழிபடுத்தி வன்முறை இல்லாத ஒரு சமுதாயமாக இருபதற்கு ஆன ஒரு மார்க்கமே அன்றி வன்முறைக்கும் மனித அழிவுகளுக்கும் மதம் காரணமாக இருப்பது நாகரிகமான விஞ்ஞான பூர்வமான சிந்தனைக்கு அப்பால் ஆனது .class of civilisation நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்ற தனது நூலிலே சாமுவேல் ஹன்டிண்டன் என்ற அமரிக்கா அரசியல் அறிஞர் மிகவும் தொளிவாக விபரிக்கின்றார் அதாவது யூதர்கள் தங்கள் நாகரிகமும் மதமுமே முதன்மையானதென்றும் தமது கடவுளை விட வேறு கடவுள் இல்லை என்றும் இதே போலவே இஸ்லாமியர்கள் தமது நாகரிகத்தையும் கடவுளையும் விட வேறு கடவுள் இல்லை எனவும் இதே போலவே ஏனைய மதத்தவர்களும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிளவு பட்டு நாகரீகங்களுக்கு இடையிலான மோதல்களாகவே உலகம் ஒரு வன்முறை கலாச்சாரத்தை நேக்கி நகரும் என்றார் . மனிதனின் பாதுகாப்பு நிச்சயா தன்மை இல்லாது இருப்பின் அந்த மனிதர்களின் கலாச்சாரமும் நாகரிகமும் முன்னேற்ரமான பாதையை நோக்கி நகர முடியாது. Civilization and culture cannot make progress where human life is unsafe And insecure.ஆகவே மனிதர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டிய அனைத்து பாதுகாப்பையும் உறுதி படுத்துவது அந்த நாட்டின் நல் ஆட்சியின் கடமையாகும் .ஒரு மனிதன் மத நம்பிக்கையுடனோ அல்லது மத நம்பிக்கை இல்லாது இருப்பதும் அவனது உரிமை சார்ந்ததாகும்.எந்த மதத்தையும் அவர் அவர் நம்பிக்கையுடன் பின் பற்ற யாரும் தடை போட முடியாது .இருப்பினும் மனித வாழ்வுக்கு எதிராக மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் நிறுத்த படவேண்டும். முற்போக்கு சிந்தனை உடைய மனிதர்கள்,கல்விஅறிவுடைய சமூகத்தினர் இணைந்து மதங்களின் பெயரால் கட்டு அவிழ்த்து விடப்படும் வன்முறைகளை நிறுத்தி புதியதொரு நாகரீக சமுதாயம் ஒன்றை நோக்கி நகர இவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.மனிதர்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய புதியதோர் உலக ஒழுங்கை உலக தலைவர்களும் மதகுருமார்களும் இணைந்து முன் நோக்கி நகர்த்துவார்களா . B.Uthayakumar/Oslo
 7. 2 points
  உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.
 8. 2 points
 9. 2 points
  நம்ப முடிகிறதா ...இது, வரையப்பட்ட ஓவியம்.
 10. 2 points
  எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை- என்ஜினீயரிங் பட்டதாரியின் வியாபாரம் என்ன தெரியுமா? கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சுந்தர் (வயது 28). 2011-ம் ஆண்டு பி.டெக். என்ஜினீயரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகே‌ஷன் படிப்பை முடித்தார் பட்டதாரியான அவர் வேலை தேடி பல நிறுவனங்களுக்கு நடையாய் நடந்தார். வழக்கம் போல சொந்த ஊரில் வேலை கிடைக்காததால் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.அங்கு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலில் ரூ.8 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அதில் ஜெய்சுந்தரால் நீடிக்க முடியவில்லை. பிறகு கோவை சென்று ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.ஆனாலும் குறைந்த சம்பளமே கிடைத்ததால் சுவற்றில் அடித்த பந்து போல் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார். கரூரில் உள்ள டி.என்.பி.எல். நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு மாதம் ரூ.13 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.ஆனாலும் 6 மாதமே அங்கு வேலை செய்ய முடிந்தது. இதனால் மீண்டும் மனமுடைந்த ஜெய்சுந்தர் சொந்த ஊரில், சொந்த காலில் நின்று வென்று காட்டுகிறேன் என சபதம் ஏற்றார். என்ன தொழில் செய்யலாம் என நீண்ட நேரம் யோசித்த ஜெய்சுந்தருக்கு பசியை போக்கும் தொழிலே பிரதானமாக தெரிந்தது.கரூரில் கோவை ரோட் டில் ஜூஸ் கடை நடத்தி வரும் நண்பர் மதுவின் ஞாபகம் வந்தது. உடனே கரூரில் அதிகம் விற்கும் கருவூர்காரம் எனப்படும் தட்டு வடை, எள்ளு வடை, பூண்டு வடை ஆகியவற்றை விற்கும் தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நண்பன் மது ஆலோசனை கொடுத்தார்.மற்றொரு நண்பன் கோபியும் துணை நின்றார். இதை தொடர்ந்து ஜெய்சுந்தர் வேலாயுதம்பாளையத்தில் உடனே கடையை தொடங்கினார். அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அடிக்கடி பொருட்கள் வாங்க கரூருக்கு சென்று வர வேண்டி இருந்ததால் அலைச்சல், செலவு என ஜெய்சுந்தருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதற்கும் நண்பன் மது கைகொடுத்தார். கரூரில் தொழில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று அறிவுறுத்தினார். ஆனால் கடைக்கு வாடகை, அட்வான்ஸ் என அதற்கே ஒரு பெரும் தொகை ஆகும் என்பதால் தன்னிடம் போதுமான பணம் இல்லையே என்று வருந்தினார். மற்றொரு நண்பரான கோபி, தனது ஜூஸ் கடைக்கு அருகிலேயே தள்ளு வண்டியில் பொருட்களை வைத்து விற்க உதவினார்.இதைத்தொடர்ந்து கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கருவூர் காரம் ஸ்டால் என்ற பெயருடன் தள்ளு வண்டியில் தட்டுவடை, எள்ளுவடை, பூண்டு வடை என கரூரில் மிகவும் பிரசித்தமான நொறுக்கு தீணிகளை விற்று வரும் ஜெய்சுந்தர் இதன் மூலம் தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை லாபம் சம்பாதிக்கிறார். மாதம் ரூ.18 ஆயிரம் வரை ஜெய்சுந்தருக்கு வருவாய் கிடைக்கிறது. தந்தை இல்லாத நிலையில் ஒரே மகனான ஜெய்சுந்தர் என்ஜினீயரிங் படித்து விட்டு தள்ளுவண்டி வியாபாரம் செய்கிறானே என்று தாய் சித்ரா முதலில் மனம் கலங்கினாலும் நாளடைவில் சொந்த காலில் நின்று சாதித்த ஜெய்சுந்தரின் மன உறுதியை கண்டு சித்ரா மனதை சமாதானம் செய்து கொண்டார். தினமும் காலையில் எழுந்து தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு செல்லும் ஜெய்சுந்தர் இரவு வரை வியாபாரம் பார்த்து விட்டு சம்பாதித்த பணத்துடன் வீடு திரும்புகிறார். அவ்வப்போது தனது பட்டய படிப்பு சான்றிதழையும், பட்டம் வாங்கிய போது எடுத்த புகைப்படத்தையும் பார்த்து ஜெய்சுந்தர் மனம் கலங்கினாலும் சொந்த காலில் நிற்கிறோம் என்று தேற்றிக்கொள்கிறார்.இன்று தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்கிறோம். நாளை மிக பெரிய நிறுவனத்திற்கு நாமும் சொந்தக்காரராவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை தள்ளுகிறார் ஜெய்சுந்தர்.இதுகுறித்து அவர் கூறும் போது, தனியார் நிறுவனங்களில் பல இடங்களில் வேலை பார்த்துவிட்டேன் குறைந்த சம்பளத்தில் ‘ஒய்ட் காலர் ஜாப் ’ என்ற பெயரில் வார்த்தையால் வறுத்தெடுக்கிறார்கள். அங்கு வேலை பார்த்தால் பார்த்த நபர்களையே ஒரே அறைக்குள் பார்த்து கொண்டிருக்க வேண்டும்.இப்போது எனது கடைக்கு பலதரப்பட்ட மக்கள் வருகிறார்கள். காரத்தை சாப்பிட்டு விட்டு ருசியால் கவரப்பட்டு என்னை பற்றி விசாரிக்கிறார்கள். நான் படித்த படிப்பை கேட்ட பிறகு எனது முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். படித்துவிட்டு சும்மா இருக்கக்கூடாது, எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை.அடுத்து எனது படிப்பு தகுதியை வைத்து வங்கியில் கடன் பெற்று தொழிலை விரிவுப்படுத்த போகிறேன் என தன்னம்பிக்கையோடு பேசும் ஜெய்சுந்தரின் கண்களில் நானும் வரும் காலத்தில் அதானி, அம்பானி ஆவோம் என்ற நம்பிக்கை தெரிகிறது.ஒவ்வொரு நாளும் தள்ளுவண்டியை தள்ளும் போதெல்லாம் ஒளிமயமான எதிர்காலம் ஜெய்சுந்தரின் உள்ளத்தில் தெரிகிறது. அவரது முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. https://www.maalaimalar.com/News/District/2019/06/06161848/1245065/Karur-engineering-student-owns-roadside-snack-shop.vpf இவர் முடிவு, சரியா, தவறா?
 11. 2 points
  ராஜீவ் காந்திக்கு... பிடரியில், அடி விழுந்த மாதிரி... தனக்கும் விழுந்திடுமோ... என்று, அவதானமாக அக்கம், பக்கம் பார்க்கும் மோடி.
 12. 2 points
  கோஷான் ...நீங்களும் நானும் அவுஸ் அபோர்ஜினிகளும் ...அவுஸ்ற்றொலொயிட்ஸ் என்னும் வகைப் படுத்தலுக்குள் அடங்குவோம்! அபோரிஜினிகள் சூரியனை ‘றா’ என்று அழைப்பார்கள்! எகிப்தியர்களும் அவ்வாறு தான் அழைப்பார்கள்! கொழும்பானுக்கிச் சொல்லில் போடாதிர்கள்!
 13. 2 points
  என்னட்டை கோல்ட் கலரிலை ஆறு கிரடிட் காட் இருக்கு.....வாங்க பழகலாம் ஆடலாம் பாடலாம்...... ஒரு கிழமையிலை சுவீஸ் பாரீஸ் லண்டன் எல்லாம் சுத்தி காட்டுவன்.
 14. 1 point
  மகனின் பாடசாலை கிரிக்கெட் அணி இலங்கைக்கு 2 கிழமை 2021 இல் போக தீர்மானித்து இருந்தார்கள். கண்டி, கொழும்பு, காலி ஆகிய இடங்களில் 5 ஸ்டார் விடுதிகளில் தங்கி விளையாடவும் இருந்தது. ஆளுக்கு 2500 பவுண்ட்ஸ் முடிவு செய்ய பட்டது. குண்டு வெடிப்புக்கு பிறகு இந்த கிரிக்கெட் பயணத்தை கேரளாவுக்கு மாற்றி விட்டார்கள்.
 15. 1 point
 16. 1 point
  நாளைக்கு முழுநாளும் மழையாம்
 17. 1 point
  என‌க்கும் இந்தியா அணிய‌ பிடிக்காது / இப்போது அவ‌ங்க‌ள் தான் அண்ணா (சுவர்) விரல் விட்டு என்ன‌ முடியாத‌ அள‌வுக்கு இந்தியா அணியிட‌ம் நிறைய‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் / கோலிய‌ யாருக்கு தான் பிடிக்கும் , அவ‌னின் நாட்டுக் கார‌ங்க‌ளுக்கு வேனும் என்ரா அவ‌ன‌ பிடிச்சு இருக்க‌லாம் / நான் வெஸ்சீன்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன்
 18. 1 point
  ஆனாலும் கிருபன் எனக்கு மேலே தான் நிக்கிறார்...அது தான் ஆக கடுப்பு
 19. 1 point
  நிச்சயம் சரியானது. முயன்றவன் சாதிக்கிறான். ஒரு சாதனையாளன் ஆகின்றான்.
 20. 1 point
  அபராஜிதன்... நல்ல சிரிப்பு பகிர்வு. ரசித்து வாசித்தேன்.
 21. 1 point
 22. 1 point
  இப்பதானே இன்டர்நெட் இருக்கு எதுக்கு ப்ரோக்கர்?
 23. 1 point
  மைத்திரி இந்தியாவிற்கு குடை பிடித்து மீண்டும் சனாதிபதியாக விரும்பியிருக்கலாம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , மைத்திரி ஒரு பலவீனமான தலைவர் என ஒரு குறுஞ்செய்தி பதித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
 24. 1 point
  சிறப்பான பகிர்வு, காப்புரிமைப் பற்றிய கருத்து முற்றிலும் உண்மையானது. இத்தலைப்பைப் பற்றி பல நாட்களாக எழுத வேண்டுமென்று எண்ணியிருந்தேன். புத்தக வாசிப்பில் இருக்கும் சுவை ஏனோ மின்னூல்கள் மூலமாகக் கிடைப்பதில்லை. பல்வேறு மின்னூல்களைக் கைப்பேசியிலும் மடிக்கணிணியிலும் சேமித்து வைத்திருந்தாலும், அவற்றை வாசிக்க மனம் முன்வருவதில்லை. காகித வாசனையை முகர்ந்து வாசித்துப் பழகிய எனக்கு டிஜிட்டல் வடிவில் அவ்வளவு விருப்பமில்லை. மின்னூல் வாசிப்பு கண்களுக்கு நல்லதல்ல, கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் புத்தகங்களை கையாள்வதைக் காட்டிலும் மின்னூலே சௌகரியமானதாகத் தெரிகிறது.
 25. 1 point
  கல்லடி வாங்கி விழுந்த நாய் காலைத் தூக்கி தூக்கி கட்டுறது போல இருக்கு ஹிஸ்புல்லாவின் நிலைமை!
 26. 1 point
  இது கருமன்டா இல்லை, என்ன காமம்டா இது என்று வரவேண்டும்.....!
 27. 1 point
  முசுலீம் பாடசாலை ஒன்றில் முசுலீம்வாத்தியார் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதைக் கேட்டிருக்கிறோம்.... 'அம்மா அம்மா என்று உம்மாக்கு சொல்கிறது' 'அப்பா அப்பா என்று வாப்பாக்கு சொல்கிறது' சோனகர் முதலில் வந்திருந்தால் சோனகருக்கு முன்னுரிமை கொடுத்து அந்த முசுலீம்வாத்தியாரே இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருப்பார்.... 'உம்மா உம்மா என்று அம்மாக்கு சொல்கிறது' 'வாப்பா வாப்பா என்று அப்பாக்கு சொல்கிறது'
 28. 1 point
  இந்தியாவின் அடுத்த மாநிலம் வடக்கு கிழக்கா அல்லது சிறிலங்காவா......தேர்வு சிங்கள மொடயாக்களே உங்களுடையது என மோடி சொல்லியிருப்பாரோ....
 29. 1 point
  20 வருடத்திற்க்கு முன்பு மருதடியானிடம் போயிட்டுவரான் சொல்லபோனான், அப்ப அவர் சொன்னார் என்ட தம்பி சிட்னியில செட்டில் பண்ணிட்டான் உனக்கு எதாவது உதவிகள் தேவை என்றால் அவனிட்ட கேள் என்று.....அதன் பின்பு நான் சிட்னி முருகனின் தீவிரபக்தன்..... அதோட உந்த வள்ளி வந்து அபோஜிர்னல் தொடர்பு இருக்கு என்று கதை அடிபடுது வேடுவ இனத்தவர் என்று சொ நான் முருகனை அரவணைத்துக்கொண்டேன்
 30. 1 point
  காணாமல் போன விமானத்தை கண்டு பிடித்தால்.. வெகுமதி ஆக ஐந்து லட்சமா? விமானம் காணாமல் போனதாகவே இருக்கட்டும்.... அந்த வெகுமதியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த விமானம் வாங்குவதற்கு... அந்தக் காசை பயன்படுத்துங்கள்.
 31. 1 point
  ஆனால் நீங்கள் பம்மலுக்கு சொன்னதிலயும் ஒரு விசயம் இருக்கு - அபொர்ஜினிகளும், மதுரை பக்கம் ஒரு ஊரில் வசிக்கும் தமிழ்பேசும் பழங்குடிகளும் ஒரு குறித்த mtDNA கூறைக் கொண்டுள்ளதாயும் ஆபிரிக்காவில் தொடங்கி, அவுஸ்ரேலியா வரை நீண்ட மனித இனப் பரம்பல், மதுரை வழியாக சென்றதாயும் ஒரு எடுகோள் இருக்கிறது. அதுசரி நீங்கள் எப்ப மருதடி பிள்ளையார விட்டுட்டு சிட்னி முருகனுக்கு தாவினியள்?
 32. 1 point
  தமிழரை தமிழராக தலைநிமிர்ந்து நிற்க செய்வதுதான் இன்றைய தேவையும் நாம்தமிழரின் புரட்ச்சியும். தமிழ் நாட்டை கூறுபோட்டு விற்கும் போலி திராவிட வாதிகளை அரசியலில் இருந்து ஓரம் கட்ட தேர்தலில் நிற்கவேண்டும் ஆளும் தரப்பில் உணர்வு உள்ள உண்மையான தமிழர்கள் இருந்து இருப்பின் நாம் தமிழர் என்று ஒரு கட்சியே உருவாகி இருக்காது.
 33. 1 point
  இவர் ஒரு தமிழ் தெரிந்த பிராமணர், அவ்வளவே. வேரொன்றும் தமிழர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை! தற்பொழுது எம்.பி தகுதி இல்லாமல் வெளியுறவுத் துறை அமைச்சரான இவர், இன்னும் 6 மாதத்திற்குள் எம்.பி யாக தெரிவு செய்யப்பட வேண்டும். இவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு தமிழகத்திலிருந்து தேர்வாக, அ.தி.மு.கவிடம் பி.ஜே.பி இடம் கேட்டுள்ளது. இவரும், இவருடைய கூட்டு அஜித் தோவாலும், ஒருங்கிணைந்து மலையாளி எம்.கே. நாராயணனிடம் வேலை செய்தவர்கள்.
 34. 1 point
  இந்த சோனக என்பது யோவன அல்லது யெளவன என்பதன் திரிபு. மஹா அலக்சாண்டர் தெரியும்தானே? பஞ்சாப் வரை படை கொண்டு வந்தவர். அந்த காலத்திலேயே அவரோடு வந்த கிரேக்கர்களை யெளவனர்கள் என்றே அழைதுள்ளனர். யெளவன என்பது வெள்ளைத்தோலர்களை குறிக்கும் சொல். அது அரபியாயும் இருக்கலாம். கிரேக்கனாயும் இருக்கலாம். இதே போல எகிப்துடன் சோழர்காலத்திலேயே கடல் வாணிபம் நடந்துளது. ஆகவே இஸ்லாத்துக்கு முந்திய அரேபியர்கள் தமிழ் தேசங்களுடனும்,பராகிரமபாகுவிடனும் வர்தக தொடர்பு வைத்திருந்தமை பெரிய கண்டுபிடிப்பு இல்லை. ஆனால் அவர்கள் இலங்கையின் குடிகளாக, இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை.
 35. 1 point
  நன்றி பதிவுக்கு...படம் பார்க்கத் தான் இருக்கு
 36. 1 point
  நண்பண்ட கதையோ அல்லது உங்களின்டையோ?...சிங்கப்பூரில் தான் வடிவான தமிழ் பெட்டையல் இருக்கினம்...பார்த்து முடிக்க வேண்டியது தானே எதுக்கு சாஸ்திரம்,பொருத்தம் பார்த்து கொண்டு இருக்கீறிங்கள்
 37. 1 point
  கள்ளக் காணி பிடிப்பதில் மட்டுமல்ல கள்ள வரலாறு புனைவதிலும் முஸ்லிம்கள் கில்லாடிகள்!
 38. 1 point
  35 வயதுகளிற்கு அண்மையாக திருமணம் முடித்த நண்பர் ஒருவர் சொன்னது, வயது போன இருவரை சேர்த்து விட்டது போல தானாம்! ஒருவருக்கொருவர் துணையா இருக்க வேண்டியது தான்!!! ஒரு மகள் பிறந்திருக்கிறாள்.
 39. 1 point
  சிங்களவர்கள் வரலாற்றை மாற்றிய மாதிரி இவர்களும் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள். தமிழர்கள் தான் இளிச்சவாயர்களோ?
 40. 1 point
 41. 1 point
  அப்படியே காது கொடுத்து கேட்டுட்டாலும். இலங்கை அரசிடம் வலியுறுத்துவம் எண்டு தேஞ்சி போன ரெக்கார்டு ..
 42. 1 point
  .எனது தந்தையர் சிறுவனாக இருந்த காலத்தில் அவருக்கு நாலு சகோதர்கள் எனவே அவரின் பெற்றோர்கள் சிகை அலங்காரம் செய்பவரை வீட்டிற்கு அழைத்துவருவார்களாம். வந்தவர், ஐந்து பேரினதும் முடிகளை வெட்டி அலங்காரம் செய்திடுவார். ஓம் எனது பாட்டனாரும் இணைய, ஆறுபேர். முடிந்ததும் எனது பாட்டனாரின் தம்பியின் வீடு வருபவரை பயத்துடன் அவரின் வருகையை எதிர் கொள்வோம் இனி கூறி இருக்கிறார் எனது தந்தை. காரணம் அவர் கையிலே கத்திரிக்கோல், றேசர்கத்தி, மண்டையை விறாண்டும் கூர்ப்பல்லு, சீப்பு என்பன போன்ற ஆயுதங்கள் இருக்கும் அந்த நாட்களில் சிகை அலங்கார நிலையங்கள் கிராமங்களில் இருக்கவில்லை. அதனால்தான் வீடுதேடி வந்து சிகையலங்காரம் செய்வார்கள். அப்பன் மகன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் "பொலீஸ் கட்" தான். ( காரணம் அம்மா மார் தான், அவரகள் தானே எங்கள் நிதியமைச்சர்கள்). அனேகமாக அப்படியான சிகையலங்கார அனுபவம் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் இருந்திருக்கும். பின்னர், அனேகமான ஊர்களின் சந்திகளில் சிகையலங்கார நிலையங்கள் முளைத்தன. சந்திகளில் கூடுவதற்காகவே முடிவெட்டவரும் வாலிபர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு வேறு நோக்கமும் இருந்தது என்பது இன்னொரு சுவாரசியமான விடயம். அந்த சிகையலங்கார நிலையங்கள் பலவேறு வடிவமைப்பில் இருந்தன, ஆனால், அவை எல்லாமே ஒன்று இரண்டு அன்றைய சினிமா நாயகர்களின் அழகான முடிவெட்டை கொண்டிருக்கும். அதை பார்த்து தமக்கும் அதே 'கட்' வேண்டும் என இளையவர்கள் வேண்டுவதுண்டு. நுழைந்த நாம் அங்கே, ' அண்ணை எவ்வளவு நேரம் எடுக்கும்?" எனக்கேட்டு அங்கே இருக்கும் ஈழநாட்டை மேலால் மேய்வதும் வழமை. இடைக்கிடை இளையவர்கள் வந்து தலையை வாரி செல்வதும் கண்ட காட்சிகள். பின்னர், தலைமுடியை வெட்ட முதல் அடிக்கும் "ஒருவகை நீர்", சிலவேளைகளில் தரப்படும் 'மசாச்' மற்றும் விசுக்கி முதல் போர்த்தியவருக்கு போர்த்திய வெள்ளாடை போர்ப்பது என்பன நாம் பெற்ற ஒரு வி ஐ.பி நிகழ்வாக இருக்கும். ஆனால், இன்றைய நவீன உலகில் 'அப்ஸ்' ஊடாக ஒரு நேரம் குறித்தெடுத்து புலம்பெயர் நாடுகளில் சென்றாலும் அன்றைய அந்த சுகம் இல்லை. சலூன் என்ற ஆங்கில வார்த்தை எல்லோருக்கும் தெரிந்த வார்த்தையாக மாறி தமிழாக மாறிவிட்டது
 43. 1 point
  7 நூற்றாண்டில் மெக்காவிலும் மெதீனாவிலும் இஸ்லாம் தோற்றம் பெற்றது. அதற்கு முன்னால் மெக்காவில் இருக்கும் காபாவுக்கு யாத்திரை செய்தவர்கள் கட்டாயம் சைவர்களாகத்தான் இருந்திருப்பர்!
 44. 1 point
  புத்தளம்,சிலாபம் ,நீர்கொழும்பு ,மன்னார் போன்றவற்றை காத்தான் குடி போன்று மாற்றுவதுதான் இவர்களது பிளான்....மாற்றிய பின்பு இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்ப்டுத்துவது
 45. 1 point
  நீர்வேலியான்....எனது, முக நூல் நண்பர்கள் மூலம், அந்தப் பதிவுகளை பெற்றுக் கொள்கின்றேன். எல்லாவற்றையும்... வடி கட்டி, எனக்குப் பிடித்த, ரசித்த பதிவுகளை.... யாழ். களத்தில் இணைக்கின்றேன். உண்மையில்... முகநூலில், நான்... ஒரு அங்கத்தவரே தவிர, அதில்.... எனது பக்கத்தில், மினைக்கெடுவது இல்லை. அங்கு வரும் நண்பர்களை... நன்றாக, தேர்ந்து எடுத்ததால்... நல்ல பதிவுகள், எனக்கும் கிடைக்கின்றது.
 46. 1 point
  ஆம் இவர் யோசிக்கக்கூட இல்லை, உடனடியா எழுதியது சந்தேகமாகதான் இருக்கு . யாழ் களத்தில் நிறைய சிங்கங்கள் இருக்கு
 47. 1 point
  ஒரு இனத்தை ...அழிக்க வேண்டுமெனில்...முதலில் அதன் அடையாளங்களை அழிக்க வேண்டும்...! பெரிய கோவிலுக்கு...வருகை தருபவர்கள்...விசாரிப்பார்கள் என்பதற்காகவே....பெரிய கோவிலிலிருந்த ராஜ ராஜனின் சிலையைக் கொண்டு போய்...எங்கோ ஒரு வீதியோரத்தில் வைத்தார்கள்! மனித வதையையே கண்டு கொள்ளாத இந்திய ஆழும் வர்க்கம்....எருதுகளைப் பற்றிக் கவலைப் படுவது ஆச்சரியமூட்டுகின்றது!
 48. 1 point
  பூமி இன்னும் தட்டையாக இருக்குது என்றும், சூரியன் தான் பூமியை சுற்றுது என்றும், கூர்ப்பு விதி என்று ஒன்றும் இல்லையென்றும், டார்வின் ஒரு முட்டாள் என்றும், vaccination களால் ஒரு பயனும் இல்லையென்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் / குழு இப்பவும் / எப்பவும் இருக்குது. அதைப் போன்றது தான் இப்படியான conspiracy theory களை சொல்லும் கூட்டமும் அவர்களை தேடி தேடி நம்பும் கூட்டமும் உலகில் உண்டு.
 49. 1 point
  ஈழத்தமிழர்கள் இன்றுவரை எதிர்கொண்டுவரும் இனவழிப்பிற்கும், அவலமான அடிமை வாழ்விற்கும் பிள்ளையார்ச் சுழி போட்டுத் தொடக்கிவைத்தது 1987 ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தமும், அதன் தொடர்ச்சியான இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பும்தான். இவை இரண்டும் நடைபெற்றிருக்காவிட்டால், 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்றிருக்காது, எமது விடுதலைப் போராட்டம் இந்திய சகுனிகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்காது. ஆனால், அதுதான் நடந்தது. அன்றே எமது தலைவிதியை மாற்றி எழுதிய இந்த பிராமணன் இப்போது இந்திய அரசியலில் அதிகாரத்திலிருப்பது நல்ல விடயமல்ல. உண்மையான தமிழனை வட இந்திய பிராமணர்களோ அல்லது ஹிந்துத்துவா வெறியர்களோ விரும்பப்போவதில்லை என்றாகும்போதே, இவன் உண்மையான தமிழன் அல்லவென்பது வெளிப்பட்டு விடுகிறது.
 50. 0 points
  என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும்போல மருத்துவப் பிரிவும் இறுதிநாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஓர் அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்துகொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்துதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க்கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூடதன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப்போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழவிடுதலைப் புலிகளின் இறுதியான மருத்துவமனையை, அதாவது போராளிகளால் நிர்வகிக்கப்பட்டமருத்துவமனையை பொறுப்பாக இருந்து களப்பணியாற்றியமருத்துவப் போராளி அலன் அவர்களின் நேர்காணல். மருத்துவத் துறையில் உங்களின் போராளிகள் மற்றும்மக்களுக்கான மருத்துவப் பணிகள் எப்படி இருந்தன? பெரும்பாலான பணி எனக்கு பொன்னம்பலம் நினைவுமருத்துவமனையில் தான் இருந்தது. பெரும் காலங்கள்அங்கே சத்திர சிகிச்சைகூடங்களிலையே மக்களுக்கானசிகிச்சைகளை வழங்கி வந்தேன். அத்தோடு கடற்புலிகளின்படையணி மருத்துவராகவும் கடமையாற்றினேன். அவ்வாறான காலங்களில் படையணி மருத்துவமனைகளானநெய்தல் மற்றும் முல்லை ஆகிய படையக மருத்துவமனைகள்இயங்கியபோது அம் மருத்துவமனைகளிலும் என் பணிவிரிந்திருந்தது. மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை பற்றிகூறுங்கள். உண்மையில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெரும்பாலும்மருத்துவ வளங்கள் குறைவு. அதாவது மருத்துவர்களோஅல்லது மருத்துவப் பொருட்களோ எமக்குத் தாராளமாகக்கிடைப்பதில்லை. அதனால் மக்களுக்கான மருத்துவப்பணிகளை சீர்படுத்துவதற்காக எமது தலைமையின்ஆலோசனையின் பெயரில் நவீன தொழில்நுட்பங்கள்கொண்ட மருத்துவமனைகளை 1996 ஆம் ஆண்டுதொடங்கினோம். அங்கே வாழ்ந்து வந்த அரசமருத்துவர்களின் ஆலோசனைகளும், உதவிகளும்பெறப்பட்டு போராளி மருத்துவர்களை வைத்து நிர்வகிக்கத்தொடங்கினோம். இம் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மக்களுடன்நெருங்கிப் பழகி ஆற்றுகைப்படுத்தல் முறைமை என்பதுஉச்சமாக இருக்கும். மருந்தைவிட ஒருவரின் மனதில் 'நீவருத்தக்காரன் இல்லை" என்ற நினைப்பை ஊட்டினாலேபெரும்பாலான நோய்கள் இல்லாது போய்விடும். இதுபண்டைய காலங்களில் இருந்து வந்த மரபு. அதைப் போலஅங்கே பணியாற்றிய அரச மருத்துவர்களாக இருந்தாலும்சரி போராளிகளாக இருந்தலும் சரி மக்களை நெருங்கிநின்றார்கள். பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை அரசமருத்துவமனைகளை விட சிறப்பாக இயங்கியது. அதுஎவ்வாறு சாத்தியமானது? இது தேசியத் தலைவரின் உன்னத நோக்கங்களில் ஒன்றாகஇருந்தது. பெரும்பாலான அரச மருத்துவமனைகளில்இல்லாத நவீன வசதிகள் அங்கே இருந்தன. சத்திரசிகிச்சைக் கூடம் நவீனமாக உருவாக்கப்பட்டது. இலவசமாக மக்களுக்கான மருத்துவத்தை இதனூடாககொடுக்க முடியவில்லை என்றாலும் தெற்கோடுஒப்பீட்டளவில் மிகக் குறைந்த செலவுடனானமருத்துவசிகிச்சைகளை மக்கள் பெறக் கூடியதாகஇருந்தது. அரச மருத்துவர்கள் போராளிகளுடன் இணைந்துபணியாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லை என்றே நான் கூறுவேன். அவர்களும், நாங்களும்இணைந்துதான் அதிகமான காலங்களில் பணியாற்றிஇருக்கின்றோம். அங்கே பணியாற்றிய பல மருத்துவர்களின்மிகப் பெரும் பங்கு எமது போராளி மருத்துவர்களைஉருவாக்குவதில் இருந்தது. அதேநேரம் அவர்கள்மக்களுக்கான மருத்துவப் பணியிலோ, போராளிகளின்மருத்துவப் பணியிலோ தயக்கமின்றி ஈடுபட்டார்கள். ஆனால்அவர்களின் நிர்வாகத்துக்குள் நாமோ, எமதுநிர்வாகத்துக்குள் அவர்களோ கட்டமைப்பு ரீதியாகபங்கெடுத்தது இல்லை. மக்கள் பணிக்காக நாம்இணைந்திருந்தோம் மருத்துவ தடை, பொருளாதாரத் தடை என்பன இறுக்கமாகஇருந்த காலங்களில் மருத்துவமனையை எவ்வாறுஇயக்கினீர்கள்? இது மக்களுக்காக எம் மருத்துவப் பிரிவால் இயக்கப்பட்டமருத்துவமனை. அதனால் எமது படையகமருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்கள் கடல்மார்க்கமாக கொண்டு வருவதைப் போலவே அப்பிரச்சினைகளை நாம் கையாண்டோம். அதற்காக எமதுபிரிவுக்குள் மருத்துவக் களஞ்சியம் மற்றும் கொள்வனவுப்பகுதி என்பன பிரத்தியேகமாக இயங்கின. பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை தனியார்மருத்துவமனையாக இயங்கிதால் (இலவசமாக இயங்காதநிலையில்)அனைத்து வகையான மக்களும் சிகிச்சையைபெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை அதை எவ்வாறுகையாண்டீர்கள்? எமது விடுதலைப் போராட்டம் மக்களுக்கானசுதந்திரத்துக்கானது. இதில் சிகிச்சைக்காக வரும்மக்களிடம் நாம் பணத்தை மிக முக்கியமாகஎதிர்பார்க்கவில்லை. மிக அவசரமான அல்லது முக்கியமாகசெய்ய வேண்டிய சிகிச்சைகளை நாம் இலவசமாகவேசெய்தோம். அதே நேரம் அனைத்து மக்களும் சிகிச்சைபெறக் கூடியதாக தியாக தீபம் திலீபன் இலவசமருத்துவமனையை உருவாக்கி அதனூடாக அனைத்துவகைமக்களும் சிகிச்சை பெறக் கூடிய சூழலை உருவாக்கினோம். இறுதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போதுபொன்னம்பலம் மருத்துவமனை மீது இலங்கை அரசின்வான்படை தாக்குதலை மேற்கொண்டது. அப்போது அங்கேஎன்ன நடந்தது? புதுக்குடியிருப்பு மருத்துவர் பொன்னம்பலம் நினைவுமருத்துவமனையைப் பொறுத்தவரை சத்திரசிகிச்சை கூடம், விடுதிகள், வெளிநோயாளர் சிகிச்சை பகுதி , நிர்வாகப் பகுதிஎன பல பகுதிகளை கொண்டிருந்தது. அதில் இறுதி நேரம்எமது மருத்துவமனைக்கு தாக்குதல் நடக்கலாம் என்று எமது“வான் தாக்குதல் கண்காணிப்பு பிரிவினால்" அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக சத்திரசிகிச்சைக்கூடத்தை உடனடியாக நாம் இரணைப்பாலைப் பகுதியில், சத்திரசிகிச்சைக் கூடத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்துஅங்கிருந்த இரு வீடுகளுக்கு மாற்றினோம். அதேநேரம், மல்லாவி, அக்கராயன்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் நட்டாங்கண்டல் போன்றமருத்துவமனைகளை ஒன்றிணைத்து மாத்தளன்பாடசாலையில் ஒரு மருத்துவமனையையும் இயக்கினோம். அங்கே தங்கி இருந்த நோயாளர்களை இடம் மாற்றுவதில்தாமதம் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையில் தான் எமதுமருத்துவமனை மீது சிங்கள வான்படை தாக்குதலைசெய்தது. அதில் 60 இற்கும் மேல் மக்கள் சாவடைந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். இத்தாக்குதல் திட்டமிட்டு பொன்னம்பலம் நினைவுமருத்துவமனைக்கு மட்டுமா அல்லது அரசமருத்துவமனைகளுக்கும் நடாத்தப்பட்டதா? மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சிங்களப்படைகளுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. வழமையாகவேசிங்கள தேசம் செய்கின்ற விடயம்தான். அதுவும்மருத்துவமனைகள் என்று அடையாளமிடப்பட்டிருந்தபோதும் ( சிவப்பு நிற ூ குறியீடு) எந்த மனச்சாட்சியும்இன்றி நோயாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதுசிங்களப்படைகள். அத் தாக்குதல்களில் மருத்துவர்கள், நோயாளர்கள் அல்லதுபணியாளர்கள் சாவடைந்திருக்கிறார்களா? ஓம்..., பல தடவைகள் நடந்திருக்கின்றது. இறுதிச்சண்டையில், கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை நாம் எடுத்துக் கொண்டால், கிளிநொச்சி மாவட்டமருத்துவமனை தொடக்கம் தர்மபுரம், புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, வள்ளிபுனம் எனத் தொடர்ந்து இறுதியாகமுள்ளிவாய்க்கால் வரை தாக்குதலை நடத்தியதுஇனவாதப்படை. இவ்வாறான தாக்குதல்களில் பலமருத்துவர்கள் சாவடைந்திருக்கிறார்கள். அதிலும் பலமருத்துவ போராளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சைவழங்கிக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட எறிகணைத்தாக்குதல்களில் வீரச்சாவடைந்தார்கள். குறிப்பாக மேஜர் அல்லி, செவ்வானம், இறையொளி என்றுஎமது போராளி மருத்துவர்கள் இறுதிச் சண்டை நேரம்மக்களுக்கான மருத்துவப் பணியில் அதுவும்சத்திரசிகிச்சைக் கூடத்தில் சத்திரசிகிச்சை செய்துகொண்டிருக்கும் போது வீரச்சாவடைந்தார்கள். இவ்வாறான மக்கள் பணியில் நின்ற போராளி மருத்துவர்கள்மீதான தாக்குதல்களை சிங்கள தேசம் விடுதலைப்புலிகள்மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்திருந்தது. இதுஉண்மையா? ஓம், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில்முல்லைத்தீவு மாவட்ட , கிளிநொச்சி மாவட்ட, மல்லாவிஆதார வைத்தியசாலை ஆகியவை இயங்கிக் கொண்டிருந்தபோது இராணுவம் புதுக்குடியிருப்புப் பகுதியைக்கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போதுமருத்துவமனை வளாகத்துக்குள் திட்டமிட்டு சிங்களப்படைகள் தாக்குதலை நடத்தின. அந்த நிலையில் பலநோயாளர்கள் இறந்து போனார்கள். நான் அப்போது இரணைப்பாலை மருத்துவமனையில்பணியில் நின்றேன். எனக்கு தகவல் ஒன்று வந்தது. உடனடியாக மருத்துவமனையை பின் நகர்த்துமாறுபணிக்கப்பட்டதனால் அங்கே பொறுப்பாக நின்ற மருத்துவஅதிகாரிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்துபின் நகர்ந்திருந்தனர். அங்கிருந்து வெளியேறும்போது பலமருந்துகளைத் தவற விட்டுள்ளனர் என்று அத்தகவல்தெரிவித்தது. அதனால் அவற்றை எடுத்து வருவதற்காக நான்இன்னும் ஒரு தம்பியை அழைத்துக் கொண்டுமருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே சிறுவர்கள், பெரியவர்கள் என்றவித்தியாசம் இன்றி 20 க்கும் மேலான மக்கள் இறந்துபோயிருந்தார்கள். அவர்களைக் கடந்தே நான் மருந்துக்களஞ்சியம், மருத்துவர் விடுதி என அனைத்துஇடங்களையும் அலசி அம்மருந்துகளை எடுத்து வந்தேன். ஆனால் சிங்கள வல்லாதிக்கத்தின் ஊடகவியலாளரானசமன்குமார ராமவிக்ரம, அடுத்த நாள் அரச செய்திஊடகமான ரூபவாகினியில் விடுதலைப் புலிகள் தங்கி நின்றமருத்துவமனை வளாகம் மீது நடந்த தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் பலியாகினர் என்று அறிவித்தார். இந்த இடத்தில் ஒன்றை நான் உறுதியாகக் கூற முடியும். எம்போராளிகள் இறுதி நேரத்தில்கூட வீரச்சாவடைந்தபோராளிகளின் வித்துடல்களை கைவிட்டு வருவதைவிரும்புவதில்லை. அதேநேரம் புதுக்குடியிருப்புமருத்துவமனை மீது சிங்களப்படை தாக்குதல்நடத்தியபோது எமது படையணிகள் தங்களது நிலையைபுதுக்குடியிருப்பு கேப்பாப்பிலவு வீதிக்கு அருகில்அமைத்திருந்தார்கள். இந்த நிலையில் எம் போராளிகள்வீரச்சாவடைந்திருந்தால் அவர்களது வித்துடலை கைவிட்டுவர யாரும் நினைக்க மாட்டார்கள். 12 வித்துடல்களையும்கைவிட்டு வருமளவுக்கு போராளிகள் என்றும் இல்லை. அதை விட ரூபவாகினி காட்டியதைப் போல அங்கே எந்ததுப்பாக்கிகளும் இருக்கவில்லை. தளபாடங்கள் மட்டுமேஉடைந்த நிலையில் சிதைந்து கிடந்தது. அதை விட இத் தாக்குதலில் மக்கள் தான் சாவடைந்தார்கள்என்பதற்கு நான் ஒரு சாட்சி. புதிதாக மருத்துவமனைகள் அமைக்கப்படும்போது புவியியல்நிலை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்துவதில்லையா? எங்கெல்லாம் மக்களுக்கான மருத்துவமனைகளைநிறுவுகிறோமோ அந்த இடத்தின் புவியியல் நிலையை (புPளு– புடழடியட Pழளவைழைniபெ ளுலளவநஅ ) சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கம் (ஐஊசுஊ ) ஊடாகக் கொடுப்போம். அதை விட கூரைகளில் சிவப்பு நிற குறியீட்டைவரைந்திருப்போம். இவற்றை வைத்துக் கொண்டேதிட்டமிட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்சிங்களப்படைகள். என்னைப் பொறுத்தவரை நாம்அமைவிடத்தை அடையாளப்படுத்திய பின்னரே அதிகமாகதாக்குதலை நடத்தினார்கள். நான் இரணைப்பாலையில் என் மருத்துவமனையை நிறுவிஒரு வாரமாக மக்களுக்கான சிகிச்சையை வழங்கி வந்தபோது அங்கே இருந்த தற்காலிக கொட்டகைகளில்நோயாளர்களை படுக்க வைத்திருந்தேன். அந்த ஒரு வாரமும்எந்தத் தாக்குதல்களும் நடைபெறவில்லை. ஆனால் ஒருவாரம் கழித்து மருத்துவமனையின் நிலையை அறிவித்து 3 ஆவது நாள் என் பொறுப்பில் இருந்த அம்மருத்துவமனைக்கும் தாக்குதல் நடத்தப்பட்டது. உண்மையில் அதன் அமைவிடத்தைக் கொடுத்ததுமட்டும்தான் இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும். அது மட்டுமல்ல மாத்தளனில் இருந்த மருத்துவமனைக்குநேரடியாக உந்துகணையால் (சுPபு ) தாக்குதல்நடத்தப்பட்டது. இவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டபின்பே மருத்துவமனைகள் அதிகமாகத் தாக்கப்பட்டன. அதுவும் சிங்கள அரசினால் உயர் பாதுகாப்பு வலயம் என்றுஅறிவிக்கப்பட்ட இடங்களில் அதிகமாக நடந்தது. இதுஇறுதி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டஇடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட போது மக்களின்நிலை? இலங்கை அரசு உயர் பாதுகாப்பு வலயம் 1,2,3,4 எனபடிப்படியாக குறிப்பிட்ட பிரதேசங்களை அறிவிக்கிறது. அதனால் அப் பிரதேசங்களை நோக்கி மக்கள் நகர்ந்துசென்றார்கள். அதற்குள் தாக்குதல் நடக்காது என்று நம்பிச்சென்ற மக்கள் மீது சரமாரியான தாக்குதலை செய்துமக்களை கொன்று குவித்தார்கள் சிங்களப்படைகள். ஒவ்வொரு பாதுகாப்பு வலயங்களும் முழுமையாக தாக்கிஅழிக்கப்பட்டது. குடும்பம் குடும்பமாக மக்கள் செத்துக்கொண்டிருந்த கொடுமையை அரங்கேற்றி இருந்ததுசிங்கள அரசு. உயர்பாதுகாப்பு வலயம் 1 என்று அறிவிக்கப்பட்டஉடையார்கட்டு பிரதேசத்தை இலக்கு வைத்து பாதுகாப்புவலயம் என்று அறிவித்த மறுநாளே தாக்குதலைசெய்தார்கள். அப்போது உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் மல்லாவி மருத்துவமனை இயங்கிக்கொண்டிருந்தது. அம் மருத்துவமனையை குறி வைத்துபெரும் தாக்குதல் ஒன்றை ஒருங்கிணைத்ததுசிங்களப்படைகள். உடையார்கட்டுச் சந்தியில் இருந்துபுதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் வீதியில் ஒருகிலோமீற்றர் தூரத்துக்குள் 104 ( சரியான தொகைநினைவில்லை) மக்களை கொன்று குவித்தது. பாதுகாப்புவலயத்துக்குள் பாதுகாப்புத் தேடி போன மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள். இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றார்கள். அப்படியாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த மக்களைசாகடிக்கும் திட்டமிட்ட தாக்குதலை தேவிபுரம் பகுதியில்வைத்து செய்கிறது சிங்களப்படை. அப்போது 20 பேருக்குமேலான மக்கள் அந்த இடத்திலேயே சாவடைந்தார்கள். காயமடைந்தவர்களை நான் முதலுதவி செய்துமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தேன். இறந்தஉடல்களில் பொறுப்பெடுக்கப்படாத வெற்றுடல்களைதென்னை மரங்களுக்கு கீழே பசளை போடுவதற்காகவெட்டப்பட்ட கிடங்குகளில் போட்டு அடக்கம் செய்தேன். அதைப் போல பல சம்பவங்கள் உயர்பாதுகாப்புவலயங்களில் நடந்தது. இந்த இடத்தில் நான் ஒன்றை கூற வேண்டும். இவ்வாறுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை சிங்களம்செய்து கொண்டிருந்த போது நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதை இவ்வுலகம் உணர வேண்டும். இறுதி நாட்களில் தென்தமிழீழத்தில் இருந்த போராளிகள்ஒரு விடயத்துக்காக தலைவரிடம் அனுமதிகேட்டிருந்தார்கள். அதாவது தென் இலங்கை பகுதிகளில்வாழும் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்தினால், எம்மக்கள் மீதான தாக்குதலை எதிரி கொஞ்சமாவதுகுறைக்க முனைவான் என்றும் அதனூடன திருப்புமுனையுடன் கூடிய கால அவகாசம் ஒன்று எமக்கு வேறுதயார்படுத்தல்களுக்குக் கிடைக்கும் என்றும், அதே நேரம்தென்னிலங்கையில் சிங்கள மக்கள் போரை நிறுத்தச்சொல்லி அரசுக்கு அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என்றும்அவர்கள் தெரிவித்து சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தஅனுமதி கேட்டார்கள். தலைவரோ எம் விடுதலை அமைப்பின் போரியல் நெறிக்குஅமைவாக எதிரிகளுடன் மட்டும் சண்டை இடுங்கள். சிங்களவல்லாதிக்க அரசுடன் அல்லது சிங்கள படைகளுடன்மட்டும் சண்டையிடுங்கள். நிராயுதபாணிகளாக இருக்கும்அப்பாவி சிங்கள மக்கள் மீது ஒரு சிறு காயத்தையும்ஏற்படுத்தும் தாக்குதல்களைக் கூட நடத்த வேண்டாம் என்றுபணித்தார். இவ்வாறுதான் எம் தலைவர் மக்களுக்கானபோராட்டத்தை முன்னெடுத்தார். சிங்கள அரசைப் போலகொடூர முகம் கொண்டு அப்பாவி மக்களைகொன்றொழிக்கவில்லை. அதே வேளை எம் பராமரிப்பில்எத்தனை சிங்களப் படை வீரர்கள் இருந்தார்கள்? அவர்களை எவ்வாறு நாம் பராமரித்தோம் என்பதைஇச்சிங்கள அரசு அறியாது. விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவு காயப்பட்ட சிங்களஇராணுவத்தை பாதுகாத்தது பற்றி கூறுங்கள்? நிச்சயமாக விடுதலைப் புலிகளின் மருத்துவர்களுக்குதலைவர் வலியுறுத்துவது இதைத்தான். எதிரி என்றாலும்அவன் நோயாளியாக உங்களிடம் வந்தால் எங்கள்போராளிகளைப் போலவே பாதுகாக்க வேண்டும் என்று. அதைப் போலவே எங்களை கொல்வதற்காக துப்பாக்கியோடுகளத்தில் நின்றவர்கள் காயப்பட்டு வந்தபோது அவர்களையும்எம் போராளிகள் போலவே பாதுகாத்தோம். இறுதிக் காலங்களில் என்னிடம் 6 சிங்கள இராணுவத்தினர்சிகிச்சை பெற்றார்கள். அதில் இருவர் மேஜர் தரஅதிகாரிகளாகவும், ஒருவர் லெப்டினன்ட் தரஅதிகாரியாகவும், மிகுதியானவர்கள் கோப்ரல் தரபடையினராகவும் இருந்தார்கள். அதை விட இவர்கள்என்னிடம் சிகிச்சைக்காக வந்த போது வயிறு, தலைஎன்பவற்றில் பெரும் காயங்களுடனே வந்தார்கள். இவர்கள்பூநகரி பிரதேசத்தில் நடந்த சண்டையில் காயமடைந்துகாப்பாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தார்கள். இவர்களின் சிகிச்சைகளின் பின் அவர்களை பாதுகாக்கும் பிரிவினரால் பொறுப்பெடுக்கப்பட்டிருந்தார்கள். அதில்மூவர் ஐ.சி.ஆர்.சி. ஊடாக சிங்கள அரசிடம்கையளிக்கப்பட்டார்கள். ஏனைய மூவரும் விடுதலைசெய்வதற்கான நிர்வாக வேலைகள் நடந்து கொண்டிருந்தகாரணத்தால் தனிப்பட்ட முகாம் ஒன்றில்தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் மட்டும்தானா இருந்தார்கள்? இந்த ஆறு பேரும் என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள். அதைவிட எம் மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்ற பலஇராணுவ வீரர்களை நாம் விடுவித்துள்ளோம். அதேநேரம்விடுவிப்பதற்கு தயாராக சிலரையும் சிறைக் கைதிகளாகபலரையும் விட்டுச் சென்ற மக்களின் வாழ்விடங்களில் தங்கவைத்திருந்தோம். எனக்குத் தெரிய பலர் அங்கேஇருந்தார்கள். உங்களிடம் மருத்துவ பொருட்கள் அல்லது உபகரணங்கள்போதுமான அளவில் இருந்ததா? இல்லை. உணவுப் பொருட்களுக்கு இருந்த தடையைப்போலவே மருந்துப் பொருட்களுக்கும் தடை விதித்திருந்ததுசிங்கள அரசு. அதனால் எம்மிடம் மருத்துவப் பொருட்கள்கையிருப்பில் இல்லை. அதே நேரம் கைவிடப்பட்டபுதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து நான் மீட்டுவந்த மருந்துப் பொருட்களை சிக்கனமாக பாவித்துவந்ததால் இறுதி வரை கொஞ்சமேனும் இருப்பில் இருந்தது. அதை விட மருத்துவ இருப்பு என்பது அறவே இல்லை. வலிநிவாரணி, தொற்றுநீக்கிகள் என்று எதுவுமே இல்லை. அதுவும் சிறுவர்களுக்கான தொற்றுநோய்த் தடுப்புக்குளிசைகள் எம்மிடம் கொஞ்சம் கூட இல்லாமல்போயிருந்தது. ஆனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில்இருந்து எடுத்து வந்த மருந்துகள் எமக்கு பெரிதும் உதவின. அதை விட எலும்புகள் பொருத்துவதற்கா பாவிக்கும் நுஒவநசயெட குiஒயவழைn கள் கையிருப்பு இல்லாதநிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்துஎடுக்கப்பட்டதால் இறுதி நாட்கள் வரை மிகப் பயனுள்ளதாகஇருந்தது. சிங்கள அரசின் பொருளாதாரத் தடையால் மக்கள்உணவுக்கு பெரிதும் சிரமப்பட்டிருப்பார்களே.? நிச்சயமாக, நான் சிறுவயதில் படித்த ஒரு விடயத்தை இந்தசண்டை எனக்கு நினைவூட்டியது என்பதை விட நேரடியாககாட்டியது என்றே கூறலாம். அதாவது பண்டமாற்றுப்பொருளாதாரம் என்று ஒரு விடயத்தை ஆதிகால மக்கள்செய்திருந்தார்கள். அதாவது பணம் என்ற பரிமாற்றுச்சாதனத்தைக் கண்டுபிடிக்க முதல் பொருட்களைக்கொடுத்து பொருட்களை வாங்கும் முறைமை இருந்தது. அவ்வாறான முறைமையையே எம் மக்கள் இறுதியாககையாண்டார்கள். “ஒரு கிலோ அரிசி தாங்கோ நாங்கள்உங்களுக்கு பங்கர் வெட்டித் தாறம் “ என்று கேட்டமக்கள்தான் அதிகமாக இருந்தார்கள். உழைப்புக்கு பணம்வாங்க மறுத்தார்கள். பணம் அங்கே பெறுமதியற்ற வெற்றுத்தாளாகவே இருந்தது. ஒரு சோற்றுப் பருக்கைதான் அங்குபெறுமதியாக காணப்பட்டது. இவ்வாறுதான் மக்கள்வாழ்ந்தார்கள். உண்ண உணவில்லை. தமிழீழ நிர்வாக சேவை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்ஆகியவை மக்களுக்காக கஞ்சித் திட்டம் ஒன்றைநடைமுறைப்படுத்தியதால்தான் பசியில் சாவடைந்தமக்களின் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இல்லைஎன்றால் பசியில் அங்கிருந்த அனைவருமேஇறந்திருப்பார்கள். இறுதி நாட்களில் காயப்பட்டவர்களை எவ்வாறுகையாண்டீர்கள்? உண்மையில் மிக இடர் சுமந்த காலம் அது. சண்டைதொடர்ந்து நடந்து நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கிநகர்ந்து வந்துவிட்டோம். நான் வட்டுவாகல் பகுதியில்இருந்த இரண்டு வீடுகளை சத்திரசிகிச்சைக் கூடமாகமாற்றி இருந்தேன். அதனை சுற்றி சிறு கிடங்குகளைபதுங்குகுழி போல உருவாக்கி, மேலே தறப்பாளைகட்டிவிட்டு காயப்பட்டவர்களை படுக்க வைத்திருந்தோம். இதுதான் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை. எவ்வகையான காயங்களை நீங்கள் கையாண்டீர்கள்? எல்லா வகையான காயங்களும் வந்தன. நான் இறுதியாகவட்டுவாகலுக்கு மருத்துவமனையை மாற்றுவதற்கு முன்னால்முள்ளிவாய்க்காலில் இருந்த போது அங்கே பொஸ்பரஸ்குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்தன. அதைவிட இரணைப்பாலையில் இருந்த போதே கொத்துக்குண்டுத்தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்திருந்தன. இறுதிக்காலத்தில் கூடுதலாக எல்லாவகையான ஆயுதங்களையும்இராணுவம் பயன்படுத்தி இருந்தான். இறுதிக் காலங்களிலும் மருத்துவமனையில் தங்கிநின்றார்களா ? காயப்பட்டவர்களை கொண்டு வந்து மருத்துவமனையைசுற்றி கிடத்திவிட்டு உறவினர்கள் போய்விடுவார்கள். அதனால் அங்கிருக்கும் காயங்களின் தன்மையை ஆய்வுசெய்து நாம் சிகிச்சை வழங்குவோம். உதாரணமாகஒருவருக்கு கால்களை கழட்டினால் உயிர் தப்ப முடியும்என்றால் உடனடியாக அதை செய்தோம். சிகிச்சை செய்தும்பலனில்லை உயிர் பிரிவது நிச்சயம் எனக் கருதும்காயக்காரர்களை இரத்தத்தை கட்டுப்படுத்திஅவர்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகளைச் செய்து விட்டுஏனைய காயக்காரரை கவனிப்போம். வேறு ஒன்றையும்செய்ய முடியாத நிலை. மிகக் கொடுமையான சம்பவம் ஒன்றை இப்போது பகிரவேண்டும். ஓர் இளைஞன் காயப்பட்டு வந்த போது அவனுக்குகால் மற்றும் கைகளில் காயம் இருந்தது. அதனால்சத்திரசிகிச்சை செய்து அவரை அதற்குப் பின்னானசிகிச்சைகளுக்காக அருகில் இருந்த மாமரம் ஒன்றுக்கு கீழ்சிறிய மருத்துவ பதுங்குகுழிக்குள் படுக்க வைத்திருந்தேன். அப்போது, திட்டமிட்ட தாக்குதலை மருத்துவமனை மீதுசிங்களப் படைகள் செய்தன. அத் தாக்குதலில் 50 இற்கும்மேலான மக்கள் இறந்தனர். அதேநேரம் 6 போராளிகள்வீரச்சாவடைந்தனர். பல மக்கள் மீண்டும்காயமடைந்திருந்தனர். அதில் அவனும் ஒருத்தன். அவன் வயிற்றில் காயப்பட்டிருந்தான். “ டொக்டர் என்னைக் காப்பாத்துங்கோ பிளீஸ்...” என்றுகத்தியபடி காயப்பட்டிருந்த காலை இழுத்தபடி ஓடிவருகிறான். இரு கைகளும் வயிற்றில் இருந்து வெளியேவிழுந்த குடலை விழுந்துவிடாமல் பிடித்தபடி இருக்கின்றன. எனக்கு அக் காட்சியை நினைத்தால் இப்போதும் மனம் ஒருநிலையில் இருக்காது. அப்போது எங்களின் போராளிமருத்துவரான தணிகை அவர்களும் பணியில் இருந்தார். அதனால் அந்த இளைஞனை உடனடியாக சத்திரசிகிச்சைடுயியசழவழஅல செய்வதற்காக தயார்படுத்தினேன். மருத்துவர் தணிகையுடன் இணைந்து நானும் அந்தஇளைஞனுக்கான சத்திரசிகிச்சையை செய்து முடித்தோம். அதே நேரம் அந்த நேரம் அந்த சத்திரசிகிச்சைக்கு இரத்தம்தேவைப்பட்டது. அதை தருவதற்கு அங்கே யாராலும்தயாராக இல்லாத நிலையில் மருத்துவப் போராளிஉயர்ச்சியிடம் இருந்து குருதி பெறப்படுகிறது. அக்குருதியைவைத்தே அவ்விளைஞனை காப்பாற்றினோம். இதைப் போலவே இன்னும் ஒன்று, சிறு பிள்ளை ஒன்றுதலையில் காயப்பட்டபடி என் மருத்துவமனைக்குகொண்டுவரப்படுகிறாள். அவளைக் கொண்டுவந்தது அவளதுபேரன். அவர் வந்து கத்தி அழுதபடி என் பேத்தியைகாப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார். பரிசோதித்த நான்அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன். ஆனால்முடியவில்லை. அவள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளைத் தூக்கி வந்த அந்த ஐயாவிடம்தெரியப்படுத்தலாம் என்று வந்த போது, அவர் அந்த வீட்டுவாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுசிங்கள இராணுவம் எறிகணைத் தாக்குதல் செய்கிறது. அத்தாக்குதல் நின்ற போது வாசலை உற்று நோக்குகிறேன். அங்கே அந்த வயதானவர் தலை சிதறி பலியாகி இருந்தார். இவ்வாறு பல கொடுமைகளை எம் மண் சுமந்து நின்றது. அதை விட கொடுமை என்ன என்றால் என்னிடம் என்குடும்பத் தேவைக்காக இருந்த 2 கிலோ அரிசியைகொடுத்து, மக்களைக் கொண்டு வெட்டிய ஒருபதுங்குகுழிக்குள் எம் மருத்துவமனையை சுற்றி இறந்தமக்களைப் புதைத்தேன். கடுமையான தாக்குதல்கள்நடத்தப்பட்டதால் மருத்துவமனையைச் சுற்றிப் பல மக்கள்இறந்திருந்தார்கள். எம்மால் எதையும் செய்ய முடியவில்லை. உடனடியாக அவர்களை அடக்கம் செய்ய வேண்டிய சூழல்அதனால் அவ்வாறான 47 பேரை நாங்கள் அந்தபதுங்குகுழியில் புதைத்தோம். பண்டமாற்றுபொருளாதாரத்தை எனக்கு காட்டிய இறுதிப் போர் அன்றுகொடுமையான இச்செயலையும் தந்திருந்தது. இறுதி வரை போராளிகளின் மனநிலை எவ்வாறு இருந்தது? காயப்பட்ட போராளிகள் கூட காயத்தை மாற்றிக் கொண்டுசண்டைக்கு போக வேண்டும் என்ற மனநிலையில்இருந்தார்கள். ஓரிரண்டு பேர் சண்டையைத் தவிர்த்தாலும்அநேகமான போராளிகள் களமுனைக்கு போக வேண்டும்என்பதில் குறியாக இருந்தார்கள். இறுதி நாள் என்ன நடந்தது ? 16 ஆம் திகதி வரை என் பராமரிப்பில் பல போராளிகளும்அதிகமான மக்களும் இருந்தார்கள். பெரும்பாலும் கால்உடைவுக் காயங்கள் தான் அதிகம். அவ்வாறான நிலையில்அவர்களுக்கு முடிந்தளவு அறிவுறுத்துகிறேன் “அப்பா, அம்மாஉறவுகள் யாராவது வந்தால் அவர்களுடன் போகக்கூடியவர்கள் போங்கோ என்று. அப்படி போனவர்கள்ஓரிரண்டு பேர் தான். மிகுதிப் பேர் அங்கேயே இருந்தார்கள். இறுதியாக நான் வைத்திருந்த மருத்துவமனையைஇராணுவம் சுற்றிவளைத்து விட்டது. அதன் பின் அங்கேஎதையும் செய்ய முடியாத சூழல். முடிவெடுக்க முடியவில்லை. என் மனைவியும் மகனும் என்னுடனேயே நிற்கிறார்கள். அவர்களையாவது காப்பாற்ற வேண்டிய சூழல். நான்அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் என் நண்பனின்குடும்பத்தோடு சேர்த்து விடலாம் என்று வெளிக்கிட்ட போது, “ டொக்டர் நீங்களும் எங்களை விட்டிட்டு போகப்போறீங்களா...” என்று ஒரு தம்பி கேட்டான். என்னால்அவனுக்கு எதை செய்ய முடியும்? அவர்களை எப்படிகாப்பாற்ற முடியும்? என்னால் ஒரு முடிவும் எடுக்கமுடியவில்லை. அவர்களிடம் மனைவி மகனை விட்டுவிட்டுவருவதாக உறுதி வழங்கி விட்டு வட்டுவாகலை நோக்கிசெல்கிறேன். அங்கே நண்பனின் குடும்பத்திடம் என்குடும்பத்தை விட்டுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்குவருகிறேன். என்னால் அந்த இடத்துக்கு கிட்டப் போக முடியவில்லை. அவ்வளவு எறிகணைத் தாக்குதல்கள். எப்படியோ நான்அங்கே போய் சேர்கிறேன். 150-200 மீற்றர் தூரத்தைக்கடப்பதற்கு 200 தடவைக்கு மேல் நிலத்தில் விழுந்துபடுத்திருப்பேன் அவ்வளவு தாக்குதல்கள். இவ்வாறுமருத்துவமனைக்குப் போய் சேர்ந்தபோது அப் போராளிகள்மனதில் புது தெம்பு பிறந்திருக்கும் எமக்காக நான்இருக்கிறேன் என்று நம்பிக்கை எழுந்திருக்கும். அதனால்அந்த கொடுமைக்குள்ளும் புன்னகைத்தார்கள். நான் என்னோடு பணியாற்றியவர்களை வெளியேறிச்செல்லுமாறு பணித்தேன். அதன் பின் அப்போராளிகளோடுபேசிக் கொண்டிருந்த தருணம் பின்பகுதியில் இருக்கும்கொட்டிலுக்கு போய் வர வேண்டிய சூழல் வந்தது. அவர்களும் என்னை எதிர்பார்த்திருந்தார்கள். அதனால்அவர்களிடம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற போதுஒரு தம்பி, டொக்டர் எப்பிடியும் ஆமி எங்கள உயிரோடபிடிச்சிடுவான் உங்கட குப்பிய தாங்கோ நான் சாகப் போறன்என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குதெரியவில்லை. அவனிடம் அப்பிடி ஒன்றும் நடக்காது என்றுஆறுதல் சொல்லிவிட்டு நகர்கிறேன். அதேவேளை அங்கேஇருந்த மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்ததை நான்உணர்ந்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தம்மைக்காப்பாற்றுமாறு கத்தி அழுதது இன்னும் செவிகளில்கேட்கிறது. நான் என்ன செய்ய முடியும்? எதையும் முடிவெடுக்கமுடியாதவனாய் நின்றபோது என்னுடன் பணியாற்றிய ஒருசகோதரன் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அவரைக்கூட்டிக் கொண்டு போய் என் மனைவி, மகனோடு விடலாம்என்று யோசித்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்றபோது பெரும் தொகையான 60 எம்.எம். எறிகணைகள் எம்மருத்துவமனையை நோக்கி செலுத்தப்பட்டதை பார்த்தேன். அக் குறுகிய இடத்தில் 100-200 க்கும் மேலானஎறிகணைகள் வெடித்துச் சிதறின. அத்தனையும்மருத்துவமனை என்று தெரிந்து அடிக்கப்பட்ட எறிகணைஎன்பது எனக்கு புரிந்து போனது. தாக்குதல் குறைந்த போது அங்கே செல்ல முனைந்தஎன்னைத் தடுத்து நிறுத்தினார் மற்றவர். ஆனாலும் நான்காப்பாற்றிய எம் போராளிகள் கண்ணுக்கு முன்னே தவித்துக்கிடக்க என்னால் எதையும் செய்ய முடியாமல் தவித்தேன். அப்போது என் போராளி நண்பன் ஒருவன் அங்கிருந்து தப்பிவந்திருந்தான். 'மச்சான் உன்னோட இடத்துக்கு 60எம்.எம்மால பராச்பண்ணி விட்டான். எதுவும் மிஞ்சவில்லை. எல்லாமே சிதறிப்போய்விட்டது. ஒருத்தன் கூட உயிரோட இல்ல. அவன்தெரிஞ்சுதான் அடிச்சிருக்கான்." எனக்கு எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஏமாற்றம்கண்ணுக்கு முன்னால் கொஞ்ச நேரத்துக்கு முதல்கதைத்துவிட்டு வந்த அப்போராளிகளையும் மக்களையும்காப்பாற்ற நாம் போராடிய ஒவ்வொரு விநாடிகளும் இப்படிசிதைந்து போய்விட்டது என்று மனம் உடைந்து போனது. என்னால் அந்த இடத்தை விட்டு வரவும் முடியவில்லை. மனைவி, மகனை தவிக்க விட்டு இருக்கவும் முடியவில்லை. மன நெகிழ்வோடு நான் இருந்தபோது நண்பனும் மற்றசகோதரனும் என்னை தம்மோடு வருமாறுகட்டாயப்படுத்தினர். அதற்குமேல் அங்கே ஒன்றும் இல்லைஎன்றாகிவிட்ட போது நான் எதை செய்யப்போகிறேன் என்றநினைப்பில் மீண்டும் ஒருமுறை அவ்விடத்தை திரும்பிப்பார்த்தபடி உயிரோடு வந்தும் வலியோடு வாழ்கிறேன். http://www.battinaatham.net/description.php?art=20185