-
Posts
15623 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
பிகு நீங்கள் எந்த மதத்துக்கும் எதிர், சார்பு என நான் எங்கேயும் எழுதவில்லை. -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
இல்லை அக்கா. நான் உங்களை கலாய்க்க இல்லை. குறிப்பாக பெண் என்பதால் போட்டுத்தாக்கலாம் என நான் நினைப்பதாக நீங்கள் கூறி இருப்பது - எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு. நான் முதலே சொல்லி விட்டேன் எனக்கு இவர்களை பற்றி தெரியாது என்று. ஆனால் ஒருவரை அல்லது குழுவை பார்த்து மதம்மாற்ற கோஸ்டி என சொல்லுவது மிக கடுமையான குற்றச்சாட்டு. ஒருவரை பிரதேசவாதி, இனவாதி, மதவாதி என சொல்வது போன்ற ஒரு பாரிய குற்றச்சாட்டு. அதை பொதுவெளியில் வைக்கும் போது ஆதாரம் கேட்கப்படுவது இயல்பானதே. அதை நீங்கள் எழுதுவதையோ அல்லது அங்கே வயித்தெரிச்சலில், மத குரோதத்தில் எழுதப்படும் விமர்சனங்களையோ வைத்து நாம் எடை போட முடியாது. நீங்கள் இங்கே இந்த நபர்கள், குழு மதமாற்றம் செய்ததை நிறுவம் வீடியோ ஆதாரம் இருந்தால் போடுங்கள். பார்த்துவிட்டு, சரியான ஆதாரம் என்றால் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை எதிர்க்கிறேன். அவ்வளவுதான். சிம்பிள். மீண்டும் சொல்கிறேன். உங்களை இங்கே குப்பையை இணைக்க சொல்லவில்லை. ஆனால் இரெண்டு குப்பை பிறந்தநாள் வீடியோவை இணைத்து விட்டு, போற போக்கில் இவர்கள் மதமாற்ற குழு என சொன்னபோதுதான் ஆதாரம் என்ன என்ற கேள்வி எழுகிறது. குற்றம்சாட்டும் நீங்கள்தான், குற்றம்சாட்டிய தளத்தில், ஆதாரத்தை கொடுக்க வேண்டும். இதை பற்றி எந்த அறிவும் இல்லாத என்னை போய் ஆராய்து பாருங்கள் என சொல்லுவது ஏற்புடையது அல்ல. -
உங்கள் நண்பர் சொன்னது போல் ரஸ்யாவை முழுவதுமாக அழிக்கும் முடிவு அன்றி, ரஸ்யாவின் கருங்கடல் பிரிவை அழித்தொழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா ஏலவே எச்சரித்துள்ளது என்றும், சீனாவும் அணு குண்டு பாவனை ஒரு லட்சுமண ரேகை என ரஸ்யாவுக்கு விளக்கி உள்ளதாயும் கேள்வி. இன்றுடன் 11 மாதம் 2 கிழமையில், உக்ரேன் யுத்ததுக்கு பொறுப்பான ஜெனரலை 5 தடவை மாற்றி விட்டார் புட்டின். அதுவும் இப்போ மாற்றப்பட்டவர் - சிரியாவில் இம்மை மறுமை இன்றி போர்குற்றம் புரிந்து - வெற்றிகளை அடைய கூடிய தளபதி என பெயர் வாங்கியவர். இவர் வந்த பின்னர்தான் உக்ரேனின் மின்சார வழங்கலை அடிக்கும் நகர்வு எடுக்கப்பட்டது. இவர் வந்ததும் பெரிய திருப்பம் வரும் என எதிர்பார்தார்கள். இப்போ இவரும் போகிறார். போரில் வென்றுகொண்டிருக்கும் அணி, பொறுபாளரான ஜெனெரலை 11 மாதத்தில் 5 தடவை மாற்றாது. மாற்றுகிறது என்றால் போர் வெற்றியளிக்கவில்லை என்பதே அர்த்தம். ஆனாலும் ஒரே ஜெனரலை மாற்றி கொண்டிருக்க முடியாது, ஒரு கட்டத்தில் ஜெனரல்கள் எல்லாம் சேர்ந்து புட்டினை மாற்றும் நிலை வரலாம். கீழே ஒரு வருடத்தில் ரஸ்யாவின் யுத்த இலக்கு எப்படி சுருங்கிவிட்டது என்பதை காட்டும் படம். அப்படியா? இங்கே அப்படி ஏதும் இல்லை. இது அவுஸின் நிதி நிலமையை இட்டா அல்லது முழு உலகுக்குமா?
-
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
பதிலுக்கு நன்றி அக்கா, இவர்கள் யாரென்று எனக்கு தெரியாது. இப்போதான் முதலில் பார்க்கிறேன். நீங்கள் அப்படி சொன்னதால் அப்படி ஏதும் இருக்குமோ என்று இந்த இரெண்டு லூசு வீடியோவையும் பார்த்து, கண் பூத்ததுதான் மிச்சம்🤣. நீங்கள் அவதானித்ததின் அடிப்படையில் ஒருவரை மதமாற்ற கும்பல் என சொல்ல உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் அதை நாமும் பார்த்தால்தானே நாம் அது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். தெரியும்தானே அக்கா, 1. வசதியை காட்டி மதம் மாற்ற முயலும் பலர் எம்மக்களிடையே உண்டு அதே போல் 2. ஒரு தமிழ் கிறிஸ்தவன் ஒரு தமிழ் இந்து பிச்சைகாரன் தட்டில் 1 ரூபாய் போட்டாலும் அதை மதமாறம் என சித்தரிக்கும் போக்கும் இப்போ 2009க்கு பின் வலுவாக அதிகரிக்கிறது. ஆகவே எதையும் தீர ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. -
அப்படியா? இங்கே இன்னும் பிரதான ஊடகங்கள் இதை சொல்லவில்லை. இப்போதைக்கு நியமித்த 3 மாதத்தில் ஜெனரல் சூரோவிகின்னை புட்டின் இடம் மாற்றியமை பற்றியே கதை ஓடுகிறது.
-
அமெரிக்காவில் ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன்
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
முந்தி எல்லாம் காக்காமார்தான் எதுக்கெடுத்தாலும் “டெத் டு அமெரிக்கா” எண்டு அதகளம் பண்ணுவார்கள். மேற்கின் கலாச்சாரத்தை இழிந்ததாக, சாத்தானின் உருவகமாக வகைப்படுத்துவார்கள். ஜும்மா முடிய கொம்பஞ்சி வீதிய வில் இருந்து கொலராடோவுக்கு கல் எறிவார்கள்🤣. இப்ப கொஞ்ச தமிழ்-தாலிபான்களும் அதே நிலையை எடுப்பதாக தெரிகிறது 🤣. -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
இந்த வீடியோக்களில் அப்படி எதுவும் காட்டவில்லையே? -
ஓம் மறந்தே போனன் - புட்டின் ஐயா கிளீன் ஷேவ் எல்லே. மீசையாவது மண்ணாவது🤣. நிற்க: மிகவும் உறுதிப்படுத்த படாத தகவல் இது. கருங்கடலில் இன்று ரஸ்ய நீர்மூழ்கிகள், துருப்புகாவி தரையிறக்க கப்பல்களின் நடமாட்டம் திடிரென்று அதிகரித்துள்ளாதாம்.
-
என்ன அண்ணை தமிழ் தடுமாறுது? மாண்புமிகு புட்டின் உக்கல் உக்ரேனுக்கு சாத்த வெளிகிட்டு, 3 நாளில் கீவை பிடிப்பேன் எண்டு சொல்லி ஒரு வருசம் ஆக போகுது.
-
பழுதான கடிகாரமும் நாளுக்கு 2 தரம் சரியான நேரத்தை காட்டும்🤣
-
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
யூடியூப் சானல் வச்சிருக்க கூடும்🤣 -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
goshan_che replied to colomban's topic in செய்தி திரட்டி
10 லட்சம் எல்லாம் பெரிசில்ல. அந்த லிஸ்டில ஜக் டானியல்ஸ்சும் இருக்கு பாருங்கோ…. அந்த மனசுதான் கடவுள்🤣. -
கனிம வளங்கள், உப்பளங்கள், நிலக்கீழ் சுரங்கங்கள் நிறைந்த, Soledar நகரை பலமாதமாக தொடர்சியா போரிட்டு தம் படைகள் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக, ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் கூலிப்படையான வாக்னர் படையின் தலைவர் அதன் டெலிகிராம் குழுவில் அறிவித்துள்ளார். நகரை தாம் சூழ்ந்து விட்டதாயும், நகர் மத்தியில் இன்னும் சண்டை நடப்பதாயும் அதே குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் இந்த செய்தி அநேகமாக உண்மையாக இருக்கலாம் என கூறியுள்ளது. https://www.theguardian.com/world/live/2023/jan/11/russia-ukraine-war-live-wagner-may-make-up-quarter-of-russian-combatants-zelenskiy-strips-kremlin-allies-of-citizenship?filterKeyEvents=false&page=with:block-63be3e3c8f08a62e1a2e1e4c#block-63be3e3c8f08a62e1a2e1e4c
-
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
யோகா பட்டறை முடிவில் நீங்களாகவே ஓடி போய் கிணற்றில் குதிக்கும் அளவுக்கு உங்களை தயார் பண்ணி எடுப்போம். அதுக்கு 8 நாள் தேவைப்படும். -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
உம்மை உடான்ஸ்சாமியார் ஆசீர்வதிக்கிறார்! நீங்கள் ஏன் என்னிடம் வந்து 8 நாள் உடான்ஸ்-யோகா பயிலக்கூடாது? -
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கூட்டமைப்பில் இருந்து பெட்டிகளை கழட்டி விட்டு ரயில் எப்படி ஓடுது என பரிசோதிக்கிறார்கள். முக குப்புற விழுந்தால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமை பட வேண்டும் என்பார்கள். பரிசோதனை வெற்றி என்றால் - இதுவே தொடரும் -
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சும்மை போலவே சிந்திக்கிறீர்கள் இப்பவெல்லாம்🤣 -
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
🤣 இதுவரைக்கும் நம்ம எப்படி? எதுவுமே செய்யல இனிமேலும் அதையே செய்துடுவோம்🤣 -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நீங்க நல்லாருக்கணும் சாமியோவ் 🤣 உங்களுக்கு மட்டும் அல்ல எமது எதிரிக்கும் அப்படித்தான். அடிக்கும் போது நீ புரட்ஸ்தாந்தா, கத்தோலிக்கமா, சைவமா எண்டு கேட்கவில்லை - தமிழனா - தூக்கி போடு தார்பீப்பாவில் என்பதே நடந்தது. -
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இண்டைக்கு டெஸ்கோ போனேன். ஹரி விண்ட்சர் எழுதிய “உதிரி” புத்தகம் £15 பவுனுக்க்கு கிடந்து காயுது. இதுவே ஹரி பொட்டர் எண்டா சாமம் 12 மணிக்கு கியூ கடைக்கு வெளியால நிக்கும். அநேகமா இரெண்டு மாதத்தில £1 டீலில் வரும் போல இருக்கு🤣. -
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஆனால் நாண்டு கொண்டு நிண்டு கூட்டமைப்பை உடைப்பது சம்+சும் அல்லவா? -
அது த.வி.கூ என நினைக்கிறேன். த. தே. கூ கட்சியும் இல்லை, PA, UNF போல பதிவு செய்யப்பட்ட கூட்டணியும் இல்லை என்றால் - யாருக்கும் உரிமை இராதே? ஆனால் சும் வழக்கு போட்டு இழுத்தடிப்பார். ஜனநாயக போராளிகள், மணி, ஈரோஸ் லொட்டு, லொசுக்கு எல்லாத்தையும் சேக்கலாம். ஆனால் ஒரு சுரேஸ், சிறீகாந்தா, சிவாஜி எண்டு லிஸ்ட கொஞ்சம் உத்து பார்த்தா…வவுத்த கலக்குதே வாலி🤣 இவர், அவரா? அப்படி எண்டால் இந்த ஆணிய புடுங்கவே வேண்டாம்.
-
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இங்கே நீங்களே கரு சொன்னதை போலதானே சொல்கிறீர்கள்? கரு சாணாக்கியனின் மீதான தாக்குதலுக்கு அவரின் மட்டகளப்பு அடையாளம் காரணம் என்கிறார். நீங்கள் பாலா அண்ணை தன் மட்டகளப்பு என்பதை சொல்லி இருந்தால் அவருக்கும் அதுவே நடந்திருக்கும் என்கிறீகள்? உங்கள் நிலைப்பாடு ஏறுக்குமாறாக இருக்கிறதே ? பிகு இங்கே பலருக்கு அடிமனதில் யாழ் மையவாதம் இருப்பதாக நான் முன்பே சந்தேகித்தே உள்ளேன். ஆனால் இந்த திரியில் அது வெளிப்பட்டதாக நான் உணரவில்லை. ஆனால் பலரின் மதவாதம் மிக கொச்சையாக பல்லிளித்தது. -
தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சாமிவோவ், இதையேதான் சாமியோவ் நான் 3ம் பக்கத்தில சொல்லி இருக்கன். சில்லறைய பூரா அக்காவின் தட்டில் போடாமல் என் தண்டிலும் கொஞ்சம் போடுங்க சாமியோவ்🤣 கரு ஆதாரம் இல்லாமல் பிரதேசவாதம் என கூறியது தவறேதான். ஆனால் அதற்கு வந்த பதில்? நீங்களும் ஒரு பக்கத்தை மட்டும் நோவதாக படுகிறது.