-
Posts
15620 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
அண்ணை, நீங்கள் உட்பட பலரும் எதிர்பார்த்த குளிர்கால ஏரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லைதானே? அதுவும் ரஸ்ய நிறுவனம் ஜேர்மனியின் கையிருப்பை மிக குறைவாக வைத்து விட்டு போனபின்னும். இனி இதே பொறிமுறையில் தொடர்நியாக எதிர்கால ஒப்பந்த (futures ) அடிப்படையில் மேற்கு ஏரிபொருளை வாங்கினால் - புட்டினின் ஆயுதங்களில் ஒன்று நமுத்து விட்டது என்பதுதானே அர்த்தம்?
-
பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் – கருங்கடலில் இரகசிய மாளிகை
goshan_che replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
ஹாய், ஹலோ! வணக்கம் உறவுகளே நான் உங்கள் உடான்ஸ் சாமியார். இன்றைக்கு நாங்கள் பாக்க போறது புட்டினின் கருங்கடல் மாளிகையைதான். என்ன எல்லாரும் ஓகே தானே. சும்மா வேற லெவல்ல, வேற லெவல்ல வந்திருக்கு வீடியோ. வீடியோக்குள்ள போக முதல் இந்த சப்பிரைஸ் பட்டினை அழுத்தி, நோர்டிபிகேசன் மணியையும் மறக்காமல் அழுத்தி விடுங்க உறவுகளே… சரி இப்போ நாம வீடியோக்குள்ள போகலாம்…. பார்திங்களா உங்களை வரவேற்க எண்டே வெள்ளையும் சொள்ளையுமா நிக்கிறார் புட்டின், வாங்க போய் அவர் என்ன சொல்லுறா எண்டு பாப்பம்….. -
இதே யாழில் ஒரு காலத்தில் இந்த அணுகுமுறை பிழை என பக்கம் பக்கமாக வாதிட்டவன் நான். எதிர்மறையான மனோதத்துவ சிகிச்சை (reverse psychology) மூலம் யாழ்கள உறவுகள் எனக்கு இந்த அணுகுமுறை சரியானது என புரியவைத்து விட்டனர் 🤣.
-
100% உண்மை. ஒரு காலத்தில் அவர்களை மேல் நாடு கீழ் நாடு, பெளத்தம், கிறிஸ்தவம் என பிரித்து வைத்துள்ளார்கள். ஆனால் அநகாரிக தர்மபால போன்றோர் வந்து ஒற்றை அடையாளத்தை கட்டி எழுப்ப - அதை அப்படியே பிடித்து அதன் வழி நிற்கிறார்கள். தலைவர் அதையே எமக்கு செய்ய விழைந்தார் - ஆனால் அவரை project ஐ முடிக்க முதல் விரைந்து அனுப்பிவிட்டார்கள்.
-
இடைக்கால முடிவுரை மேலே திரட்டபடாத தேவைகளின் பட்டியலில் இருந்து பொலிஸ் அதிகாரம் என்ற திரட்டப்பட்ட தேவையையும், அந்த தேவையை எவ்வாறு நிலைகளுக்குள் சிக்கிகொள்ளாமல், நாம் நலன்களை அடையாளம் கண்டு அதனை அடைவதன் மூலம் பூர்த்தி செய்யலாம் என்பதையும் ஓரளவு விலாவாரியாகவே அலசி இருக்கிறோம். இதை போலவே, காணி, கல்வி, பூகோள எல்லை ஏனைய திரட்டப்பட்ட தேவைகளையும் இதை ஒத்த அணுகுமுறை மூலம் அணுகுவதால் நாம் சாதிக்ககூடியதாக இருக்க கூடும். நிற்க: இதை ஒரு திரியாக அன்றி கருத்தாகவே நான் எழுத ஆரபித்தேன் என்பது தெரிந்ததே. ஆனால் இதை எழுத தொடங்கியதன் பின் எனக்கு சிலது மனதில் சற்றே தெளிவாக விளங்கியது. அவையாவன; 1. ஒரு தேசிய இனமாக அபிலாசைகளை கொண்டிருப்பது தவறல்ல. ஆனால் அந்த அபிலாசைகளை அடையும் தகமை அந்த தேசிய இனத்துக்கு இருக்க வேண்டும். 2. இந்த தகமைகளில் முக்கியமானது. ஒரு தேசிய இனம் உள்ளும், புறமுமாக தாம் ஒரு கூட்டம் என உணர வேண்டும். உதாரணமாக சிங்கள தேசிய இனத்தை எடுத்தால், பல வேறுபாடுகளை கடந்து கிட்டதட்ட அனைவருமே சிங்கள மொழி அதன் பால்பட்ட சிங்கள இன அடையாளத்தை தமது என உணருகின்றனர். மலைநாட்டு சிங்களவர் தான் சிங்களவர் கீழ்நாட்டு சிங்களவர் சற்றே சிங்களத்துவம் குறைந்த சிங்களவர் என அவர்கள் நினைப்பதில்லை. மதவிடயத்திலும் அப்படியே. அவர்கள் மத்தியில் வேறுபாடுகள், நான் பெரிது நீ பெரிது போட்டிகள் இல்லாமல் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் சம-சிங்களவர் என்ற அற்புதமான புரிதல் இருக்கிறது. பெளத்ததுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும் கூட. இதனால்தான் அவர்கள் அரசியல்வாதிகள் எவ்வளவு பிடுங்கு பட்டாலும், இனம் என்று வரும் போது ஆளையாள் மேவி நடந்து இன நலனை காத்து நிற்க முடியுமாய் இருக்கிறது. நாமும் இப்படி ஒரு இனமாமக ஒரு காலத்தில் இருந்தோம். 2005 வாக்கில் ஒரு தேசமாக தேவைப்பட கூடிய தகமைகள் அனைத்தையும் கொண்டு, நம்மை ஒரு இனமாக ஒற்றை அடையாளமாக உள்ளும் புறமுமாக உணர்ந்து - ஒரு தேசிய இனமாக பரிணமித்து நின்றோம். அன்று நாம் சிங்களவரை விட ஒரு படி மேல் போய், எந்த மதத்துக்கும், பிரதேசத்துக்கும் முன்னுரிமை கொடாத ஒரு நவீன தேசிய இனமாக மிளிர்ந்தோம். அன்று நாம் ஒற்றை இன அடையாளத்தை ஏற்றது போலவே எமது தலைமையும் அந்த ஒற்றை அடையாளத்தின் பால் ஒழுகி நின்றது. அன்று நாம் இந்த உயரிய அபிலாசைகளுக்கு (higher aspirations) தகுதி உடையவராய் இருந்தோம். ஆனால் இன்று? நாமே பிரதேச ரீதியிலும், சமய ரீதியிலும் நமது ஒற்றை இன அடையாளத்தில் இருந்து விலகி ஓடுகிறோம். நாளைக்கு சாதியும் இந்த பட்டியலில் சேரக்கூடும். 2023 இல் ஒரு வெளியார் ஈழ தமிழரை உற்று நோக்குவாராயின் - ஒரு தேசிய இனத்துக்கான தகமைகள் எதையும் எம்மிடையே காண மாட்டார். மக்கள் எவ்வழியோ, தலைவர்களும் அவ்வழியே. இதையே எமது சுயநலமான, விலைபோன, பொய்யான, கோமாளி தலைவர்களும் பிரதிபலிக்கிறார்கள். 3. ஆகவே இந்த அபிலாசைகளை பற்றி எழுதுவது இப்போ எனக்கு அசந்தர்பமாக தெரிகிறது. கொஞ்சம் கற்பனாவாதமாகவும் கூட. 4. ஆகவே இப்போதைக்கு ஒரு இடைக்கால முடிவுரையை எழுதுகிறேன். புறச்சூழல் மாற்றங்கள் தொடர்ந்தும் எழுத வேண்டிய தேவையை உணர்தினால் தொடர்ந்து எழுதுகிறேன். வேறு யாரும் தொடர விரும்பினால் தொடரவும். இதுவரை பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி.
-
உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -4 உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளின் மீதான முறைப்பாடுகள் பொறுப்புகூறல் 1. ஒரு சுயாதீன முறைப்பாட்டு அமைப்பை நிறுவி (independent police complaints commission) - இதை சட்ட வலு மிக்கதாக்கி, பொலிஸாரின் நடத்தை மீது சாதாரண குடிகளும் முறைப்பாடு செய்யும், அதை விரைந்து விசாரித்து, தகுந்த தண்டனையும் கொடுக்கும் அதிகாரத்தை இந்த அமைபுக்கு கொடுக்கலாம். 2. இந்த அமைப்புக்கு ஆட்சேர்க்கும் போது தற்போது உள்ள தேசிய பொலிஸ் முறைப்பாட்டு ஆணையத்தை சேவை இன்னும் சுயாதீனமாக்கி, தேசிய அரசின் வலுவை குறைத்து, உள்ளூர் அலகின் தலைவரின் வலுவை கூட்டி ஒரு பொறிமுறையை கோரலாம்.
-
உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -4 உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளின் சேர்மானமும் ஆட்சி கூம்பும் 1. உள்ளூரியல் (localism) தத்துவத்தின் அடிப்படையாக கொண்டு, உள்ளூர் பொலிஸ் சேவையில் இருப்போர் அந்த அலகின் மக்கள் தொகையின் இன விகிதாசாரப்படி அமைய வேண்டும் என அமைத்தும். 2. இலங்கயில் எப்பாகத்தில் பொலிஸ் சேவையில் சேரவும் இரு மொழிகளும் பேசும் அளவுக்கு தேர்சியும், அதிகாரிகள் தரத்தினர் குறைந்தது இரு பாடங்களிலும் சாதாரண தர சித்தியும் அடைந்திருத்தால் அவசியம் என அமைத்தும். 3. பொலிஸ் சேவையில் சேரும் போதும் தொடர்ந்தும் கொடுக்கப்படும் பயிற்சியின் போது நாட்டின் வேறுபட்ட கலாச்சார, மொழி, பண்பாட்டியல், சமய, சமூக வேறுபாடுகளை பற்றிய முறைசார் கற்கை நெறிகளை கொடுத்து, பொலிசாரின் நிறுவன நடத்தை, கலாச்சாரத்தில் (institutional behavior and culture) நாட்டின் பல்லினதுவத்தை மதிக்கும், பேணும் பாங்கை அதிகரிக்க செய்வதன் மூலமும். நவீன, உள்ளூர்-நட்பான, இலகுவில் அணுக கூடிய உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளை அமைத்து கொள்ளலாம். 4. இந்த சேவைகளின் ஆட்சி கூம்பை பொறுத்தவரை தற்போது உள்ள பொலிஸ் சேவை கமிசனை இன்னும் சுயாதீனமாக்கி, தேசிய அரசின் வலுவை குறைத்து, உள்ளூர் அலகின் தலைவரின் வலுவை கூட்டி ஒரு பொறிமுறையை கோரலாம்.
-
தமிழர் திருநாள் வாழ்த்து உங்களுக்கும்🙏🏾
-
யாழ் தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
goshan_che replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நாங்கள் 1ம் வட்டாரம், 3ம் வட்டாரம் என குறுக்கிகொண்டே போகும் போக்காளர்… சிங்களவர்கள் ….எல்லாரையும் சுவீகரித்து…நீலப்பெருமாளை நீலப்பெருமவாகவும், அழகர்கோனை அழக்கூனாகவும் உள்ளீர்த்து கொள்பவர்கள். தமிழகத்து அருகில் நாம் இருந்தும், எங்கோ ஒரிசாவுக்கு மேல் இருந்து வந்த விஜயனின் குடிகள் எப்படி இலங்கை தீவில் 70% ஆனார்கள்? இப்படித்தான். மிகவிரைவில் சிங்களவன் தமிழரின் புக்கையை மட்டும் அல்ல, பனங்கொட்டையையும் திருடிவிடுவான். -
வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!
goshan_che replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
யாரு எங்கள் கோவணாண்டி கடவுளையா? அரோஹரா! -
வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!
goshan_che replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
🤣 யாழில் எனக்கு செய்து வைக்கப்பட்ட திருமணங்களுக்கு - எல்லாரையும் ஒரே borough வுக்குள்ள வச்சிருந்தா 3ம் உலக யுத்தம் எல்லே வந்திடும் நாதம்🤣. -
சுரத்திழந்து கொண்டிருந்த ஒரு பழந்தமிழர் விளையாட்டை, கலாச்சார அடையாளத்தை, மீண்டும் இளையோர் மத்தியில் பிரபலமாக்கிய பீட்டா, மத்திய அரசுக்கு நன்றி கோடி 🤣
-
இந்திய இராணுவத்திற்கு சிறப்பு தற்காப்புக் கலை அறிமுகம்
goshan_che replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
படம் பாக்கிறத விட்டு கன காலம் பாஸ். -
வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!
goshan_che replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
என்னது நம்ம ஹரோவா? நாங்கள் தூய Brent கண்டியளோ🤣. பிகு நேற்றுத்தான் விழா நடந்தது - எம்பி கள் எல்லாம் வேட்டி சேலையில் நின்றார்களாம். -
வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!
goshan_che replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
ஓம் நானும் அந்த தனியின் திரியில் புற்கை பற்றி அறிந்து கொண்டேன். இண்டைக்கு லண்டன் பாபா ஹரோ கவுன்சில் சார்பா பெரிய எடுப்பாய் பொங்கல் விழா வைத்தவராம். -
கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்!
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அசம்பாவிதம் நடந்தது - ஆனால் அவருக்கு இல்லையாம்🤣 -
வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!
goshan_che replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
சரி…. சரி…🤣 பொங்கல் விசேசம் எண்டால் - புக்க தான்😝 -
இந்திய இராணுவத்திற்கு சிறப்பு தற்காப்புக் கலை அறிமுகம்
goshan_che replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
பயிற்சியின் பிரத்யேக காட்சிகள் -
புதிய கூட்டணியில் இருந்து சி.வி. மற்றும் மணி வெளியேறினர்!
goshan_che replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
நம்ம அரசியலே அப்படித்தானே எசமான் போகுது🤣 -
வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!
goshan_che replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
Board of Investment = BoI ? Bandaranayake International Airport = BIA? ஏர்போர்ர்ட்டில் ஏதும் முதலீடு அனுமதி கொடுக்கிறார்களோ? நம்மதான் விபரம் தெரியாமல் இருந்துட்டோம் போல. #நன்னா பண்றேள் அட்வைஸ் போங்கோ