Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நியாயமாக பார்த்தால் - கடைசி நேரத்தில், பல வேலைபளுவுக்கு மத்தியிலும் போட்டியில் கலந்து கொண்டவருக்குத்தான் முதல்வர் பதவியை கொடுத்திருக்க வேண்டும் என விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன🤣. முன்னாள் முதல்வர் இது சம்பந்தமாக உச்ச நீதி மன்றை நாடலாமா என மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்🤣. விட்டா பதவி இழப்பு விழாவே வப்பியள் போல கிடக்கு🤣
  2. இளம் வயதில், டாஸ்மார்க், கஞ்சா, குட்கா, பெண் தொடர்பு, இப்படி தவறான வழிகளில் போன பலர், ஒரு 25-30 வயதுக்குள் யதார்த்தம் புரிந்து நல்வழிக்கு வருவது சகஜம்தான். அதே போல் சீமான் மகுடிக்கு மசியும் ஒரு batch தெளிய, இன்னொரு பேட்ச் உள்ளே வரும்🤣. சீமான் அணியில் இருந்த ரஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், இன்னும் பல முன்னாள் இளைஞர்களுக்கு சீமானின் டகால்டி வேலை பிடிபட்டதும் அவர்கள் வெளியேற அவர்கள் இடத்தை இடும்பாவனம் போன்றோர் பிடித்தனர். அடுத்து இவர்கள் போக இன்னொரு குரூப் வரும். விஜை தயவு வைத்து கூட்டணி வைத்தால் மட்டும் நாதகவில் உள்ள ஏனையோர் தேறலாம். அல்லது சீமானின் பெட்டி மட்டுமே நிறையும். ஏனையோர் டெபாசிட் இழந்து ஒட்டாண்டி ஆக வேண்டியதுதான்.
  3. சில வேளை மருந்தின் தாக்கத்தால் ஆக்ஸ்போர்ட் தானாகவே கிளம்பி அமெரிக்கா போய் இருக்குமோ?🤣
  4. @suvy @ஈழப்பிரியன் அண்ணையள், நான் ஆட்சியமைத்த பொதெல்லாம் உங்கள் பாத ரட்சையைத்தான் அரியணையில் வைத்தேன்🤣.
  5. போட்டியை நடத்தியமைக்கு பாராட்டும் நன்றியும். ஜிக்கும் நிழலிக்கும், பிரபாவுக்கும் பாராட்டுகள். நானும் டேட்டாவை தான் நம்பினேன்…விஜய பிரபாகர், செளமியா நூலிழை தோல்விகள் அவர்களை போலவே என்னையும் தடக்கி பொழுது விட்டது. நயினார் தோல்வி, விசிக வட தமிழகத்தில் பாமக எதிர் கூட்டணியில் வெற்றி - எதிர்பாராதது. நன்றி. நானும் இப்படித்தான் செய்கிறீர்கள் என்பதை ஊகித்துவிட்டேன்.
  6. நான் சொல்லியது இனவாதிகள் தந்தை, மகள் லுபென் Vs ஊழல்வாதி நிகலோய் சார்கோசி போன்றோர் பற்றி. நீங்கள் எதை நினைத்தீர்கள்🤣. பிகு இந்த இன்வாதிகளின் நதிமூலம், ரிசி மூலத்தை நோண்டினால் அவர்களே “வந்தேறிகள்” ஆக இருப்பது வழமை. உதாரானமாக பிரெக்சிற் நாயகன் Nigel Farage. Farage என்ற பெயர் பிரஞ்-லக்சம்பேர்க் எல்லை பகுதியினரது. இவரின் மனைவியிம் ஜேர்மன்காரி. (எதையோ நினைத்து பூட்டை ஆட்ட வேண்டாம்🤣)
  7. மரின் லு பென்னுக்கும், அவரின் தந்தை லு பென்னுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அவர் எல்லா இன-பிரான்சியர் அல்லாத, வெள்ளை தோல் அல்லாதவரையும் எதிர்த்து அரசியல் செய்தார். ஆனால் அது வெறி அவுட் ஆகாது என தெரிந்து கொண்டு - packaging மாத்தி, பிரெஞ்சு குடிகள் இல்லாதோருக்கு எதிரான அரசியல் செய்கிறார் மெரின். இது யூகே யில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்க்கப்பட்ட பாலிசிதான். எப்படி? இப்படி👇 1. 70, 80,90 களில் National Front, British National Party என சகல பிரித்தானியர், ஐரிஷ் அல்லாதோருக்கும் எதிரான வெளிப்படையான இனதுவேச அரசியல் செய்து மூக்குடைபட்டார்கள். 2. 2000 களில் நாம் இனத்துவேசிகள் அல்ல, ஐரோப்பிய மட்டற்ற குடிவரவு, ஐரோப்பிய யூனியனுக்கு எதிரானோர் மட்டுமே என UKIP ஐ ஆரம்பித்து - சிறுக சிறுக, கிழக்கு ஐரோப்பியர் மீது வெறுப்பை வளர்த்து - பிரெக்சிட்டை ஸ்தாபித்தார்கள். பிரெக்சிட் வாக்கு நேரம், இவர்கள் பல ஆசிய, ஆபிரிக்க வம்சாவழி வாக்காளரையும் கவர்ந்தார்கள். என்ன சொல்லி? நாம் உங்களுக்கு அல்ல, கிழக்கு ஐரோப்பியருக்கு மட்டுமே எதிரானோர். பிரெக்சிட்டின் பின் உங்களுக்கு சம்பளம் கூடும், உங்கள் நாட்டில் இருந்து ஆட்களை எடுப்பது இலகுவாகும் என பூச்சுற்றி. 3. இவ்வாறு பிரெக்சிட்டை நடத்தி முடித்த கையோடு, UKIP ஐ கலைத்து விட்டு, அடுத்து Reform UK என ஒரு பார்ட்டியை ஸ்தாபித்து இப்போ பழமைவாத கட்சியை hostile takeover செய்யும் நிலைக்கு வளர்ந்து விட்டார்கள். இப்போ இவர்களின் பிரதான எதிரி சட்ட, சட்டபூர்வமற்ற வகையில் நடக்கும் குடிவரவு. அதாவது ஆசிய, ஆபிரிக்க நாட்டில் இருந்து வருவோர், வந்து இன்னும் நிரந்தர வதிவுரிமை அடையாமல் இருப்போரே இப்போ இவர்களின் இலக்கு. 4. இதையும் பிரெக்சிட் போல் முடித்த பின் - அடுத்த இவர்களின் இலக்கு? இங்கே குடியேறி, பிரஜையும் ஆகி விட்ட வெள்ளை அல்லாதோர். அதாவது நீங்களும், நானும், ரிசி சுனாக்கும், சஜித் கானும்🤣. இங்கே படிமுறை 1 முதல் 4 வரை இந்த கட்சிகளை நடத்தியோர், பணம் கொடுத்தோர் எல்லாரும் ஒரே இனவாத சிந்தனை உள்ளோரே. காலத்துக்கேற்ப தம் packaging ஐ மாற்றி கொள்கிறனர். பிரான்சில், தந்தை லிபென் நின்றது படிமுறை 1 இல். மகள் மெரின் நிற்பது படிமுறை 2இல். ஆகவேதான் இந்த விஷ கிருமிகளை அது யூகே, பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, தமிழ் நாடு, இலங்கை எங்கேயும் எந்த காரணத்துக்காகவும், அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஆதரிக்கவே கூடாது. இந்த இனவாத கிருமிகளை விட ஊழல் வாதிகள் பரவாயில்லை. ஓம்…நீங்கள் கூட கொஞ்சம் ஆவலுடன் யாழில் எழுதி இருந்தீர்கள். நான் கொஞ்சம் பயந்துதான் இருந்தேன். நல்லவேளையாக யாருக்கோ இவரை ஆப் செய்யும் ரகசியம் தெரிந்துள்ளது. அதனால் இத்தாலியும், ஐரோப்பாவும் கொஞ்சம் நிம்மதியாக உள்ளன. அல்லது இவர் வாக்குக்காக இனவாதம் பேசும் ஆளாகாவும் இருக்கலாம். ஆனால் எல்லாரும் இவரை போல் இருக்க மாட்டாகள். கிட்டதட்ட நூறு வருடம் முன் அடோல்ப் என்ற ஒருவருக்கு இதே வாய்ப்பு கிடைத்த போது நடந்ததை மறக்க கூடாது.
  8. இந்த மதவாத முட்டாள்களும், AfD போன்ற இனவாத முட்டாள்களும் ஒரே ஆட்கள்தான், பெப்சியும், கொக்கோ கோலாவும் போல. அவர்கள் இல்லாட்டில் இவர்களையும், இவர்கள் இல்லாட்டில் அவர்களையும் நாயும் சீண்டாது🤣.
  9. எனக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. ஈழத்தமிழருக்கு ஆட்சியில் இருந்த போது எந்த நல்லதும் செய்யவில்லை. காங்கிரசின் அதே நடைமுறைகளை பின்பற்றியது. இப்போதும் - இன்றைய இந்திய வெளிவிவகார அமைச்சர் 90-94 இலங்கயில் இந்திய உயர் ஸ்யானிகராலகய உயர் அதிகாரி - பாஜக, காங்கிரஸ், ஜனதா அனைத்து இந்திய அரசுகளின் இலங்கை கொள்கையும் ஒன்றே. நிற்க: நான் பாஜக, நாதக வை எதிர்ப்பது முழுக்க முழுக்க தமிழ் நாட்டின், தமிழ் நாட்டு மக்களின் நலனை மட்டும் மனதில் வைத்துத்தான். நீங்களும் இப்படித்தா என நீங்கள் பலதடவை கூறி இருந்தாலும், நீங்கள் மேலே கேட்ட கேள்வி - உங்களின் தமிழக அரசியல் நிலைப்பாடு ஈழத் தமிழர் நலனின் அடிப்படையிலானதே அன்றி, தமிழ்நாட்டு நலனின் பால்பட்டு அல்ல என்பதை காட்டு கிறது.
  10. அதுவா கலங்குது….நம்மளும் ஏதோ நாம்தான் கலக்கின மாரி மெயிண்டேயின் பண்ணுவம்🤣 👆🏼👇🤣
  11. கொஞ்சம் பிசியாயிட்டேன் மக்காள் (முதல்வர்னா சும்மாவா, கொஞ்சம் பந்தா காட்ட வேணாமா🤣). எல்லாருக்கும் பதில் போடமுடியவில்லை மன்னிக்கவும்.
  12. காலம் கடந்தாலும் ஞானம் வந்தது மகிழ்ச்சியே. தமிழ் நாட்டில் இனிமேல் பாஜக தீண்டதகாத கட்சியாக வர வேண்டும்.
  13. பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக, பி.க.க தலைவர் கோஷான் இலங்கை அணியை மரக்கறி விற்ற அனுப்பும் கோப்பில் கையெழுத்திட்டார்…. கோஷான் சே எனும் நான்……🤣
  14. ஐயோ…. முழு குருட்டு லக்கையும் இந்த போட்டியில் வீணாக்கி போட்டேனே? இதை லாட்டரியில் பாவித்து இருந்தால் காசாய், பணமாய் மாத்தி இருக்கலாமே🤣. ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு நன்றி🙏. கொப்பி அடிப்பது என்றாலும் …முதலாம் பிள்ளையை கொப்பி அடிக்க வேணும்🤣.
  15. நீங்கள், திமுக சரியான கூட்டணி அமைக்கவில்லை, அதிமுக சரியான கூட்டணி அமைக்கவில்லை என நீட்டி முழக்கதேவையில்லை புலவர்….. திமுக, அதிமுக - பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் இப்போ டெல்லியில் கிங் மேக்கர் ஆகி இருக்கலாம் என பச்சையாகவே எழுதலாம்🤣. திமுக கண்டீனை நிரப்பலாம், அதிமுக ஒரு சீட்டிலும் வெல்லாமல் இருக்கலாம், ஆனால் டெல்லியில் யார் என்ன உருட்டினாலும் தமிழ் நாட்டின் அரசியலை 2014க்க்கு பின்னும் முன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை இந்த கட்சிகளே. எல்லாராலும் எப்போதும் கிங் மேக்கராக முடியாது (செளமியமூர்ர்த்தி தொண்டைமானை தவிர). இப்போது கூட தேர்தலுக்கு பிந்திய கூட்டை பாஜகவோடு வைத்தால், 16, 12 எம்பிகள் உள்ள நாயுடுவை, நிதீசை விட ஸ்டாலினை மடியில் வைத்து கொஞ்ச பாஜக தயாராகவே இருக்கிறது. ஆனால் அப்படி செய்தால் அதை முதல் ஆளாக நானும் நீங்களும் சந்தர்ப்பவாத கூட்டணி என எதிர்ப்போம்🤣. நல்ல தேர்ந்த அரசியல்வாதி போல் நாமும் நாக்கை பிரட்டி, பிரட்டி கதைக்க கூடாது. பிகு தேவைப்பட்டால் நாதக+பாஜக “சரியான கூட்டணியை” வரவேற்றல்க நீங்களும் தயாராகி, ஏனையோரையும் தயாராக்குவதாக எனக்கு தோணுவது பிரமைதானே🤣.
  16. விஜை+விசிக+நாதக+பாமக+கம்யூனிஸ்ட்+ தேமுதிக கூட்டணி. விஜை அல்லது அன்புமணி அல்லது திருமா முதல்வர் வேட்பாளர். மக்கள் நல கூட்டணி + நாதக + விஜை - பாஜக - மதிமுக, என இருந்தாலும், இந்த கூட்டணிக்கு என் ஆதரவு இருக்கும். தமிழ் நாட்டில் ஆளும், எதிர் கட்சிகள் பாஜக எதிர்ப்பு மோடில் இருக்க வேண்டும் என்பது இப்போதைய காலத்தின் கட்டாயம்.
  17. 🤣 நீங்கள் எல்லாம் 10%,15% என மனக்கோட்டை கட்டிய போது, ஒரு மாதம் முதலே 8% என அடித்து சொன்ன நான் ஏன் தண்ணி குடிக்க வேண்டும்🤣. திமுக வாக்கு வங்கி குறைந்தாலும் கூடினாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் அதிமுக வாக்கு வங்கி கூடியமை மகிழ்ச்சியே. என்னை பொறுத்தவரை இந்த தேர்தலின் நிஜ ஹீரோ எடப்பாடிதான்.
  18. எப்படி இதை நீங்கள் அறிந்தீர்கள்? கடிதம் எழுதத்தான் சங்கரி, சிறிதரன் இருக்கிறார்களே. நாமும் கடித இலக்கியத்தை வளர்ப்பதில் என்ன பயன் அண்ணை? தவிர, அப்படி யாரும் எழுதவில்லை என நீங்கள் எப்படி கண்டு பிடித்தீர்கள்?
  19. எல்லாருக்கும் இந்த முறை பிழை என புரிகிறது. ஆனால் யாருக்கும் சரியான வழிமுறையை பிரேரிக்க முடியவில்லை🤣. நீங்கள் இலங்கையிலே வேலை செய்ததில்லை. ஆகவே வெளிநாட்டில்தான் வேலை செய்திருப்பீர்கள். பலதசாப்த அமரிக்க வாசம் - ஆங்கிலம் அத்துப்படி என நினைக்கிறேன். வாரிசுகளும் அமேரிக்காவில் உயர் பதவிகளில். சீமானை எதிர்ப்போரை நீங்கள் கேட்க்கும் கேள்விகளை ஏன் உங்களை நோக்கியும், உங்கள் வாரிசுகளை நோக்கியும் நீங்கள் கேட்க கூடாது அண்ணை? நெத்தியடி. மேலே நீங்கள் கூட, சீமானை எதிர்பவர்கள் என்ன புடுங்குகிறார்கள் என்பதைதானே எழுதி உள்ளீர்கள்?
  20. தள்ள முதல் குதிக்கப் பார்கிறார் அண்ணாமலை. இவருக்கு டெல்லியில் ஒரு டம்மி அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, தமிழிசையை மீள மாநில தலைவராக்கப்போகிறார்களாம் என கதை அடிபடுது.
  21. அதாவது 2021 இல் 6.5% எடுத்த கட்சி, 2024 இல் 8.1% எடுத்ததை கண்டு எல்லாரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம்🤣
  22. உண்மையாக இந்த கருத்தை பார்க்க பச்சாதாபமே வருகிறது. ——- பேசுவோம்🙏 இதற்கு மேல் இந்த மரமண்டையால் இயலாது. முடிந்தால் பகிரவும்🙏.
  23. நமக்கு கிடைக்கும் பாதி மாலை மரியாதை இப்படி குருட்டு லக்கில்தான் கிடைக்கிறது🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.