Everything posted by goshan_che
-
தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
உண்மையில் எனக்கு த.பொ.வே வை நிறுத்துவதால் அதிக பாதகமா, சாதகமா என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. ஆனால் இதை இட்டு நான் அதிகம் அலட்டி கொள்ள போவதில்லை. எனக்கு தமிழ் அரசியல்வாதிகள் மீது அதீத நம்பிக்கை உள்ளது. இவர்கள் ஒரு போதும் ஒரு அணியில் வந்து ஒரு பொதுவேட்பாளரை ஆதரிக்க போவதில்லை. இவர்கள் மாறி மாறி பேசி, நிலாந்தன் எழுதி கொண்டிருக்க தேர்தல் வந்து விடும்🤣. ஆகவே இதையிட்டு மண்டையை உடைப்பதை தவிர்கிறேன்.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
தனியே முஸ்லிம்கள் மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்களிடமும் மாட்டு இறைச்சி உண்ணும் வழக்கம் உண்டு. இப்படியே போனால் நாளைக்கு எல்லாரும் மரக்கறிதான் சாப்பிட வேண்டும் என சொல்வார்கள்.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
கொல்லான், புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்றுதான் வள்ளுவர் கூறுகிறார். இது புலால் (சகல வகை இறைச்சி) உண்ணாதோரை உயிர்கள் மெச்சும் என மட்டுமே சொல்கிறது. அதாவது புலால் மறுத்தலை ஏற்றுகிறது. இது மீனுக்கும், கோழிக்கும், ஆட்டுக்கும் பொருந்தும் (புலால் மறுத்தல் அதிகாரம் முழுவதும்). இதில் இருந்து தனியே மாட்டை உண்ணாமைக்கு கோடு கீற முடியுமா? மாட்டை கொல்ல கூடாது என்பது ஒரு மதம் சார் நம்பிக்கை. அதை ஏனையோர் மீது திணிக்க, வள்ளுவரை இழுத்தாலும், முடியாது. இல்லை வள்ளுவர் வாக்கின் படி ஒழுகுவோம் என்றாலும் ஓகே, மீன், முட்டை, கோழி என சகலதையும் தடைசெய்யும் போது மாட்டையும் தடை செய்யலாம். உணவு என்பது அவரவர் தனி உரிமை. மீதேனை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். இது உண்மைதான். ஆனால் இது பால், வெண்ணை, தயிர், சீஸ் க்காக வளர்த்து, பின் கொல்லாமல் இயற்கை மரணம் அடையும் மாடுகளில் இருந்தும் வரும். ஆகவே சகல பால்-விளை பொருட்களையும் தடை செய்ய வேண்டும். உண்மையில் பால் கொடுக்க முடியாத மாடுகளை இறைச்சியாக்குவதன் மூலம், மாடுகள் வெளிவிடும் மீதேனின் அளவு குறைகிறது என்பதே உண்மை. ஆகவே ஒன்றில் பால் உட்பட எந்த தேவைக்கும் மாட்டை வளர்க்க கூடாது, அல்லது மாட்டை எல்லா உணவு தேவைகளுக்காகவும் வளர்க்கலாம்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இந்த நெஸ்கபேயில் ஏலவே சீனியை அள்ளி கொட்டி இருப்பார்கள். கோப்பி சுவை - அதை நெஸ்கபே கோப்பி என்று சொன்னால் நெஸ்கபே காரன் செருப்பால் அடிப்பான். ஆனால் இது பொதுவாக பெரேரா அண்ட் சன்சை ஒத்த இடைத்தர கடைகளில்தான். கீழ் மட்ட கடைகளில் கோப்பி இராது ஆனால் டீ கிடைக்கும். ஆனால் அதிலும் டின்பால் போடுவார்கள். நாமாக கேட்டால் பால்மாவில் போடுவார்கள். கொழும்பில் Barista, Java Lounge போன்ற பல கடைகளில் மிக தரமான கோப்பி அருந்தலாம். ஆனால் இந்த cafe culture கொழும்பை தாண்டி இல்லைத்தான்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இந்த சீட் பெல்ட் விசயம் மிக மோசமான பிரச்சினை. ஒவ்வொரு முறையும் இங்கே இருந்து ஏற்பாடு செய்யும் போதும் - பெல்ட் இருக்கா, வேலை செய்யுமா என கேட்பேன். ஆம் என்பார்கள். அங்கே போனால் இராது அல்லது வேலை செய்யாது. 2000 க்கு பிந்தி வந்த வாகனங்களை அமர்த்தினால் இந்த பிரச்சனை குறைவு. புத்தள பாதை - அவ்வளவு மோசம் இல்லை. தவிர புத்தளம்-அனுராதபுரம் இடையே ஓரளவு சுத்தமான கழிப்பறையுடன் கூடிய சேர்விஸ் நிலையமும் உண்டு. வேகமாக ஓடுவதற்காக, பொலிஸ்சுக்கு கப்பம் கட்டுவதை தவிர்க்க காட்டு பாதை வழியாக உங்கள் ஓட்டி வந்துவிட்டு, சாட்டு சொல்லியுள்ளார் என நினைக்கிறேன். நான் அறிய கியூபாவும் இலங்கையும்தான் உலகில் வாகனம் வாங்கினால் விலை appreciate (கூடும்) நாடுகள். கொவிட்டுக்கு முன்பே, வெளிநாட்டில் £100 ம் பெறாத 1992 ஆம் ஆண்டு டவுன் ஏஸ் வானை, இலங்கையில் 20 இலட்சம் என்பார்கள். இப்போ காசு பெறுமதியிழந்து விட்டது. வாகன இறக்குமதி தடை. வாகனங்கள் 2019இல் வாங்கிய விலையின் பலமடங்கு போகிறன. ஆனால் இதில் ஒரு நல்ல விடயம். வெளிநாடு போல், வாகனத்தை உடனே தூக்கி எறியாமல் - எந்த பிழையையும் அங்கே ரிப்பேர் செய்ய முடிகிறது. மீள்சுழற்சி எனப்பார்க்கின் இது 👍.
-
மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா
சே…சீசனை மிஸ் பண்ணீட்டனே☹️.
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை என்ன? பட்டியல் இதோ…, லேப்டாப், பென் டிரைவ், கஞ்சா; சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் மற்றும் கார் ஓட்டுனர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் இங்கே WebDesk11 May 2024 23:23 IST சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் மற்றும் கார் ஓட்டுனர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் Listen to this article பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், மொபைல் போன், வெப் கேமரா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச் செட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நேற்று (மே 10) சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு லேப்டாப், செல்போன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர். இந்தநிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கைப்பற்ற பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி சவுக்கு சங்கர் வீட்டில், குடும்ப அடையாள அட்டை, ஐபாட் டாப், மொபைல் போன், இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பணம், கம்ப்யூட்டர் மானிட்டர், டி.வி.ஆர், ஐந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக், பழைய பாஸ்போர்ட், சிகரெட் ஆஸ்ட்ரே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து, 3 லேப்டாப், 10 ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், செல்போன், நான்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சவுக்கு சங்கரின் கார் ஓட்டுனர் வீட்டில் இருந்து, 3 லேப்டாப், ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், சிறிய கஞ்சா பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-seizes-ganja-laptop-hard-disk-from-youtuber-savukku-shankar-home-office-4556569 யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல்துறை நடவடிக்கை யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது. யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது. காவல்துறையினர் குறித்த அவதூறு பேச்சு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். https://www.maalaimalar.com/amp/news/state/gangster-law-pounced-on-youtuber-savukku-shankar-717930
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
தனி ஒரு மனிதனுக்கு மாட்டு கொத்து இல்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்! இவ்வண், உடான்ஸ் சாமியார் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிஸ்டேக் & மாட்டுகொத்து நுகர்வோர் பேரவை
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆனாலும் சவுக்குக்கு மாவு கட்டு போட்டது கொஞ்சம் ஓவர்தான். அதே போல் அவராக அவதூறாக பேசினால் அன்றி நேர்காண்பவரை எல்லாம் தூக்கி உள்ளே வைப்பது பேச்சுரிமை மீறல். பேட்டி கொடுப்பவர் உளறுவதற்கு அவர் மட்டுமே பொறுப்பு.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
🤣 சொன்னேன் என நினைத்தேன் 🤣 நியாயமான ஒப்பீடு. ஆனால் ரஸ்யாவில் இருப்பது போல் தாய்லாந்தில் தனி மனித சுதந்திரத்தில் அதிகம் இறுக்கம் இல்லை. அப்ப போகாமல்தானா அங்கே பாலும் தேனும் ஓடுவதாக எழுதினீர்கள்🤣
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
நியாயமான பயம்தான்🤣
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
எப்படி நிலமையள்?
-
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ம் திகதிக்குள் - தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்17-ஆக் 16 இடையே நடக்கும் என இலங்கை தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக இலங்கை ஆங்கில, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.thehindu.com/news/international/sri-lanka-to-hold-presidential-election-between-september-17-and-october-16-election-commission/article68156936.ece/amp/ டிஸ்கி தமது பிடியை தளரவிட விரும்பாத இராஜபக்சேக்கள் பாராளுமன்ற தேர்தலை முதலாவதாக நடத்துமாறு ஜனாதிபதிக்கு அளுத்தம் கொடுத்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
பதில் சொன்னே. சரி கொஞ்சம் நீட்டி சொல்கிறேன். சிங்கப்பூர், தாய்லாந்து இரெண்டுமே மட்டுபட்ட சுதந்திரம் உள்ள நாடுகள். ஆனால் இரெண்டுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. சிங்கபூரில் அரச கொள்கை நடைமுறையை எதிர்த்து செயல்பட முடியாது. ஆனால் தாய்லாந்தில் இந்த இடம் அரச கொள்கைகளுக்கு அன்றி, அரச குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கபூரில் முதலாளிதுவ அமைப்பின் நலனை பேணவும், மக்களின் பொது நன்மைக்காகவும், மக்களின் சுதந்திரத்தை அரசு பரவலாக மட்டுப்படுத்துகிறது. தாய்லாந்தில் அரச குடும்பம், இன்னும் பல தனியார் கூட்டுகளின் நலனை பேண குறிப்பிட்ட விடயங்களின் மக்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தினாலும், பாலியல் சுந்தந்திரம் உட்பட பலதில் மிகவும் தாராளவயமாக இருக்கிறனர். இப்படி இருப்பது கூட மக்களை கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையே. இலங்கையிலும் சட்டபூர்வ கஞ்சா பாவனை, ஏற்றுமதி, சட்ட பூர்வ பாலியல் தொழில், இரவு நேர பொருளாதாரம், கசினோ தீவுகள் என தாய்லாந்து பாணி பொருளாதாரத்தை நிறுவி, தொடர்ந்தும் தற்போதுள்ள ஆளும் வர்க்கத்தின் இருப்பை தக்க வைக்கும் முறை ஒன்றை டயனா முன்னெடுத்தார். மக்கள் நலனை பொறுத்தவரை தாய்லாந்து சிஸ்டத்தைவிட சிங்கபூர் சிஸ்டம் சிறந்தது. ஆகவே டயனா முன்வைத்த, இலகுவில் நடைமுறை படுத்த கூடிய தாய்லாந்து பாணியா? அல்லது….. இதுவரை இலங்கை அரசியல்வாதிகள் வாயால் வடைசுட்ட சிங்கப்பூர் பாணியா? இதைத்தான் நான் சுட்டினேன்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
அனைவரும் ஒரு மாதிரி இல்லை. உண்மையில் தம்மை தமிழர் என உணர்வோர் சொற்பமாக இருக்கத்தான் செய்கிறனர். ஆனால் இவர் அணுகிய சூழமைவை வைத்து பார்த்தால் - காரியம் நடக்க கதை விட்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
என்னது படம் இல்லாமலா🤣. படம் கதே பசுபிக்கில் ஏறும் போதே ஆரம்பித்து விட்டதே🤣. சுவாரசியமாக உள்ளது தொடருங்கள். அநேகமாக உங்கள் மூலம் டியூட்டி ப்ரீ விலையில் வாங்கி, வெளியில் விற்பார் என நினைக்கிறேன்.
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம்
ஓம் ஒரு fix க்கு என்னவும் செய்வார்கள்.
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம்
இந்த செய்தி முதல் நாள் வாசித்த போதே - கூட இருந்த ஒருவர் ஈடுபடாமல் இப்படி நடக்க சாத்தியம் இல்லை என்றே நினைத்தேன்.
-
யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
கண்கள் பனிக்கிறது. வாழ்துக்கள். இதுதான் காதல் என்பதா❤️❤️❤️ அரித்திராவும் இணைந்து கொண்டால் இன்னும் சந்தோசமாக இருக்கும்.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
இல்லை நான் தாய்லாந்து, சிங்கப்பூர் பற்றி எழுதினே. நீங்கள் சம்பந்தமில்லாமல் நாம் வாழும் நாடுகள் பற்றி கேள்வி கேட்கிறீர்கள். அதுதான் தாய்லாந்தின் அரசியல், வரலாறு, சமூகவியல் இதை பற்றி உங்கள் அனுபவம் என்ன என அறிந்தால் என் பதிலை அதைற்கேற்ப கொடுக்கலாம். அதுதான் கேட்டேன். கட்டாயம் போக வேண்டியதில்லை ஆனால் தாய்லாந்து பற்றிய உங்கள் புரிதலை என்னால் ஆழம் அறிய வேறு வழிகள் எனக்கு தெரியவில்லை.
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
நீங்கள் தாய்லாந்து போயுள்ளீர்களா?
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
குறை ஒன்றும் இல்லை “மறை”மூர்த்தி கண்ணா🤣 எல்லாரும் விக்கத்தான் நிற்கினம். எதை என்பதில்தான் வேறுபாடு🤣
-
டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
ஆளாளுக்கு இலங்கையை சிங்கபூராக்குவோம் என நடக்காததை கதைத்து கொண்டிருக்க, இலங்கையை தாய்லாந்தாக்க புறப்பட்ட தீர்க்கதரிசி🤣.