அப்படி ஒரேயடியாக சொல்ல முடியாது. நானும் இப்போதான் இதை ஆராய தொடங்கி உள்ளேன்.
ஆனால் ரஸ்யாவின், ரஸ்யர்-அல்லாத குடியரசுகளில் மஸ்கோ மீதான நம்பிக்கியீனம், சுரண்டபடுவதான உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருப்பதாக படுகிறது.
போரில் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது இந்த பகுதிக்கு இழப்புகள் மிக அதிகம்.
குறிப்பாக, Dagestan இல் மிக விரைவாக அந்த இன மக்கள் அழிக்கப்படுவதாகவும், எண்ணிக்கை குறைவதாயும், போரினால் இது மேலும் மோசமடைவதாய் அவர்கள் உணர்வதாயும் தெரிகிறது.
சகல வளங்களையும் புட்டின் உக்ரேன் நோக்கி திருப்புவது, பல காலம் ரஸ்யாவின் கீழ் அடங்கி கிடந்த பல இன குழுக்களை இது ஒரு “வாழ்நாளில் மீள கிடைக்காத சந்தர்ப்பம்” என சிந்திக்க வைக்க கூடும்.
இதை கொம்பு சீவி விட நேட்டோ தயார் என்பது வெளிப்படை.