Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. 🤣 அவனுகள், இவனுகள கொண்டே மூலைல வைப்பானுவளே🤣. புத்தருக்கு பின்பக்கம் காட்டி படம் எடுத்தாலே நாடு கடத்துவாங்கள்🤣 🤣 🤣 ஆவலோடு காத்திருக்கிறோம். (நல்லா சஸ்பென்ஸ் வச்சி மர்ம நாவல் போலவே எழுதுறீங்க🤣).
  2. இதே கோவிலில் 60 வருடத்துக்கு முன்பு வரை இன்னார்தான் உள்ளே வரலாம் என ஒரு விதி இருந்திருக்கும். அதை இப்படித்தான் ஒரு தனிமனிதன் எதிர்த்து கதைத்திருப்பார். அதை இன்னொரு தனிமனிதர் “இது வெறும் பேச்சு” என கடந்து போயிருப்பார். ஆனால் அந்த விதி உடைக்கப்பட்டது. இந்த விதியும் உடைக்கப்படும். #எறும்பூர கல் தேயும். பெரியார் சீடர் ஏன் கோவிலுக்கு வருகிறார்? எனக்கு இவர் ஒரு நம்பிக்கையுள்ள சீர்திருத்தவாதியாகவே தெரிகிறார். இது பொது வீதியா? அல்லது கோவில்களுக்கு சொந்தமானதா? ஒரு பிக்குவை இந்த வீதியால் நடக்க வைத்து, ஊர் மைனர்களின் வீரத்தை சோதிக்க ஆசைப்படுகிறேன்🤣. 🤣 உங்களுக்கே கண்ணை கட்டினா… உங்கள் பிள்ளைகளை நினைக்க எனக்கு கண்ணீர் முட்டி கொண்டு வருகுது🤣. கொலிடே எண்டு கூட்டிப்போய் இப்படியா செய்வது🤣.
  3. நான் எப்போதும் ஒரே மாதிரித்தான்🤣.
  4. வித்தியாசம் - சிங்கப்பூரில் குறை-ஜனநாயகத்தை மக்கள் நலனுக்கு பாவிக்கிறார்கள். லிகுவான் யூ கூட ஆயுட்கால பிரதமர் ஆகவில்லை. அண்டை நாடுகளை பிடிக்கவில்லை. நாட்டின் வளங்களை ஆலிகார்குகளுக்கு தாரை வார்க்கவில்லை. புட்டினின் ரஸ்யா இப்படி அல்ல. அதை சிங்கப்பூரோடு எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. உங்கள் தாய்லாந்து ஒப்பீட்டு ஓரளவு நெருங்கி வரும். ஆனால் தாய்லாந்தும் ஏனைய நாடுகளில் தலையிடுவதில்லை.
  5. அவனுகள் அடிப்படைவாத முட்டாள்கள், என்பதால் நாமும் அடிப்படைவாத முட்டாள்கள் போல் நடந்துகொள்ளத்தான் வேண்டுமா?
  6. சவுக்கின் முன்னாள் மனைவி/பிள்ளையின் தாயின் கருத்து.
  7. விரிவான பதிலுக்கு நன்றி. அவர்கள் மாறவே இல்லை. ஏனைய சிங்கள அரசியல்வாதிகள் போலவே அனுரவும், ஜேவிபியும், என்பிபியும் - இனப்பிரச்சனையை அணுகுகிறன என்பதற்கு உங்கள் அனுபவம் ஒரு சோறு பதம். இதை போய் கண்டு வந்து சொன்னமைக்கு இன்னொரு நன்றி.
  8. இல்லை. நான் நம்பாமைக்கான காரணம் - என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரையை பார்த்தால் புரியும் - இது மன அளுத்தம் பற்றிய தரவு அடிப்படையில்தான் எழுத பட்டுள்ளது. இலங்கையில் பலரின் மன அளுத்தம் ரெக்கோர்ர்டில் வருவதில்லை. ஆனால் யூகேயில் சும்மா அப்செட்டா இருந்தாலே மைல்ட் டிப்ரெசன் என ரெக்கோர்ர்ட்டில் எழுதி விடுவார்கள். இதுதான் பெரிய காரணம் என நினைக்கிறேன். மற்றும்படி எது மகிழ்சி என்பது வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்றல்லவா? ஆகவே இந்த வகை கணிப்பில் எனக்கு நம்பிக்கை பெரிதாக இல்லை. ஆனால் 5 மணி நேரம் உறங்கும் நாட்டை விட 8 மணி நேரம் உறங்கும் நாட்டில் மக்கள் relaxed ஆக இருப்பார்கள் என்பது சரிதான். நாம் இங்கே இருந்து போய் அந்தரப்படுவோம், அவர்கள் ஆமை வேகத்தில் இருப்பதை பார்க்க சினமும் வரும். ஆனால் இதையே அனுபவித்து வரும் வெள்ளையினத்தவர் உங்கள் நாட்டுக்காரார் very laidback என புழுகுவார்கள். கூடவே சூரிய ஒளியை விட மனதை, உடலை தெம்பூட்டும் அருமருத்து ஏதும் இல்லை என்பது என் கருத்து.
  9. நாங்கள் பூமர் அங்கிள்கள் மாரி புறுபுறுக்கிறொமோ எண்டு சில சமயம் யோசிப்பேன். மணவறை செட் எமக்கு எம்மோடு ஒன்றிய ஒன்று, ஆனால் நிச்சயமாக 1920 இல் அந்த வழக்கம் இருந்திராது. அதே போலத்தான் தலைப்பாகை செட்டும். ஏதோ ஹிந்தி காரன் போல அல்லவா இருக்கிறது? முன்பு சால்வையை மடித்து கட்டி இருப்பார்கள். கேக் வெட்டுவது, ஹோம் கமிங், வீடியோ எடுப்பது, இவை எல்லாமுமே எமக்கு கொஞ்சகாலம் முன் போய் பர்த்தால் இருந்திராது. மாறிக்கொண்டே இருப்பதுதானே கலாச்சாரம். புறுபுறுக்கமட்டுமே முடியும்🤣.
  10. 🤣 இறக்குமதி தடை இல்லாத போதும் பல கெடுபிடிகள், விதிகள் இருந்தது. 3 வருட புதிய வாகனத்தைதான் இறக்கலாம். சலுகை பெர்மிட்டுகள் இல்லாதவிடத்து 100% முதல் 300% வரை வாகனத்தின் கொள்விலையில் வரி அடிப்பர். எப்படியும் இங்கே 18,000£ க்கு வாங்கும் காரை அங்கே குறைந்தத்து 36,000£ தான் விலை சொல்வார்கள். இனி வரி விதிப்பு இன்னும் அமோகமாக இருக்கும். ஒருவருக்கும் இதை பற்றிய தெளிவு கொஞ்சமும் இல்லை.
  11. அத்தோடு ஏனைய சிவப்பு இறைச்சிகளை விட மாட்டில் கொழுப்பு குறைவு என நினைக்கிறேன். சைவம் சாப்பிடுகிறோம் என நல்ல மரக்கறியோடு சோத்தை பாத்தி கட்டி அடித்தாலும் நீரிழிவு உட்பட நோய்கள் வரும்தானே. ஆகவே எதையும் அளவோடு சுவைத்தால் அமிர்தமே. ஆனால் என்ன செய்வது - சச்சியே சொல்லாத healthy eating காரணங்களை எல்லாம் சொல்லி சச்சிக்கு முட்டு கொடுக்க ஆசையாய் இருக்கிறது சிலருக்கு. ஓம் இப்படியும் ஒரு புரிதல் இருக்கிறது என்பதால்தன் அந்த கட்டுரையை இணைத்தேன். உங்கள் கேள்வி நியாயமானதே. என் பதிலும்.
  12. தினமும் 8 மணி என்பது உடல், உள நலனுக்கு தேவையான அளவு நித்திரை என படித்த நியாபகம். இலங்கையர் சரியாக அலராம் வைத்து 8 மணத்தியாலம் நித்திரை கொள்கிறார்கள் போலும். அண்மையில் மகிழ்சியாக மக்கள் வாழும் நாடுகள் பட்டியலிலும் இலங்கை 2வதாக வந்தது. என்ன பிரச்சினை என்றாலும் தூக்கி போட்டு விட்டு படுப்பதும் ஒரு வகையில் நல்லதுதான். https://www.deccanherald.com/amp/story/world/in-pics-5-happiest-countries-in-the-world-2024-2929684
  13. கிடாய் பற்றி தெரியாது. ஆனால் 1950கள் வரை கடுக்கன் போடும் வழக்கம் இருந்துள்ளது.
  14. வெளிநாடுகளிலும் இதுதான் நடைமுறை என நினைக்கிறேன். யூகேயில் 1968 க்கு முந்திய வாகனத்தை ஓட்டும் போது சீட் பெல்ட் தேவையில்லை.
  15. `இந்திய சாதிய அமைப்பு முறை பற்றிய சரியான புரிந்துணர்வு அற்றவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல்லை அவமதிப்பான சொல்லாகக் கருதுகிறார்கள்” என்கிறார் `தலித் முரசு’ இதழ் ஆசிரியர் புனித பாண்டியன். 👆🏼 விகடன் கட்டுரையில் இருந்து. இதுதான் என் நிலைப்பாடும். இதே போல் காந்தி தலித் மக்களை ஹரிஜன் என அழைத்த போது, அவர்கள் அதை தலையை தடவும் போக்கு (patronizing) என கூறி, தம்மை தலித் என்று தொடர்ந்தும் அடையாளப்படுத்தினார்கள். அவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள் என்பது வரலாற்று உண்மை. அந்த உண்மையை எந்த வெண் பூச்சு பதத்தாலும் மறைக்க கூடாது. ஒவ்வொரு தடவை இந்த வார்த்தை பாவிக்கப்படும் போதும் இந்த வரலாற்று உண்மை, வரலாற்று அநீதி மீள மீள நினைவுபடுத்தப்பட வேண்டும்.
  16. இல்லையே - தாழ்த்த பட்ட - என்பது சரிதானே? தாழ் சாதியினர் என்ற மோசமான பதத்தை பிரதியீடு செய்து, அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, மாறாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை குறிக்கும் பதம் அல்லவா இது? தமிழ் நாட்டில் பல முற்போக்கு சிந்தனையாளர், தலித்திய அரசியலாளர் கூட இதை பயன்படுத்துகிறரே? https://www.vikatan.com/news/tamilnadu/what-is-the-right-word-to-mention-scheduled-castes-in-tamil
  17. ஓம். இந்த சாறி சொப்பிங் என இந்தியா போகும் சடங்கு(?!), மெஹெந்தி செரிமனி, மணப்பெண், மணமகள், பெற்றார் கூட மண்டபத்துக்கு டான்ஸ் ஆடி கொண்டு வருவது (🤦‍♂️), அந்தாக்சரி பாட்டுக்கு பாட்டு, Wedding pre shoot என A படம் ரேஞ்சுக்கு வீடியோ எடுப்பது, பெண்பார்க்கும் படலம், சீமந்தம்… இவை எல்லாமுமே இந்தியாவில் இருந்து புலம்பெயர் தேசத்தில் டிரான்சிட் எடுத்துத்தான் ஊர் போயின🤣. நல்ல வேளையாக 90s teenager என்பதால் பல வீண் செலவுகளில் இருந்து தப்பித்தோம்🤣.
  18. இந்த விடயத்தில் நிலாந்தனும் ரஞ்சித்தும் ரொம்பவே உணர்சி வசப்படுகிறார்கள். பொ.த.வே நிறுத்துவதால் “செய்தி சொல்லல்” ( பொன்சேக்காவுக்கு வாக்களித்து சொன்னதை போல) என்பதை தாண்டி என்னத்தை சாதிக்ககலாம் என்ற positive case ஐ ஒருவரும் முன் வைப்பாதாக இல்லை. இதற்குள் பொ.வே ஐ ஆதரிக்கும் விக்கி ஐயாவே, இரெண்டாம் வாக்கை சிங்கள வேட்பாளருக்கு (ரணில் 🤣) போடலாம் என்கிறார். இரெண்டாம் வாக்குகளில் தேர்தல் தீர்மானிக்கப்பட்டு, அதில் தமிழ் வேட்பாளர் ஆதரவில் ரணில் வென்றால் என்ன செய்தியை அது சொல்லும்? அதே போல் @நிழலி இன்னொரு இடத்தில் சொன்னது போல் - பொ.த.வே யை இம்முறை, பொருளாதார காரணங்களுக்காக, புறக்கணித்து, தமிழர் ரணிலுக்கு போடவும் வாய்ப்பு உண்டு. இப்படி நடந்தால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை ஆகி விடும். புலிகள் கூட ஏன் பொ.த.வே என்ற தெரிவுக்கு போகவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.
  19. ஒரு கேள்வி - மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்க சஜித்துக்கு போடலாம் என நான் யாழில் எழுத, இல்லை கோட்டா வந்தால் அடக்கு முறை கூடும், அதை வைத்து நாம் தீர்வை அடைவது இலகு என எழுதியவர்களில் நீங்களும் ஒருவர் என நினைக்கிறேன். இதே லொஜிக் அனுரவுக்கும் பொருந்தாதா? அவர் நாட்டை வெனிசுவேலா போலாக்கினால் - குறுகிய காலத்தில் மக்கள் துன்பப்பட்டாலும், எமக்கு தீர்வு வர இது உதவும் அல்லவா? அப்போ தமிழர் திரளாக அனுரவுக்கு போட வேண்டும்?
  20. எனது நிலைப்பாடும் இதுவே. உண்மையில் என் போன்றோர் பக்கம் பக்கமாக நீட்டி முழக்குவதை விட - @Kavi arunasalam ஐயா வின் ஒரு ஓவியம், பலருக்கு அதிக உறைப்பை கொடுப்பதை யாழில் பல இடங்களில் கண்டுள்ளேன். கருத்தோவியமும் ஒரு கருத்துத்தான். ஆகவே “கருத்தை எழுதுங்கள்” என்ற ரஞ்சித்தின் கோபம் அடிப்படை அற்றது.
  21. There are lies, damn lies, then there are statistics என்பார்கள். பொய், கடும் பொய் அதற்கும் மேலான பொய் புள்ளி விபரப்பொய். இங்கே @ரஞ்சித் பொ.த.வே வை ஆதரிக்கும் தன் நிலையை நிறுவ இந்த வகையிலேயே புள்ளிவிபரத்தை பாவிக்கிறார் என படுகிறது. 1. சகல தேர்தல்களிலும் வன்னி, திருமலை, மட்டகளப்பில் இருந்த மிக கணிசமான முஸ்லிம், சிங்கள வாக்காளர் தெரிவை தமிழர் தலையில் கட்டி விடுகிறார். 2. உண்மையில் இந்த தேர்தல்களில் எல்லாம் தனியே தமிழர் வாக்குகளால் மட்டும் நிரம்பிய ஒரே ஒரு தொகுதி என்றால் அது யாழ் மாவட்டம் மட்டுமே. இந்த அடிப்படையில் பார்த்தால் ஜே ஆர், பிரேமதாசவுக்கு போடாமல் விட்டதால் தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது. 3. 1994 தேர்தல் தனியே தீவுபகுதியில் நடந்தது என நினைக்கிறேன் (இதே வருடம்தான் டக்லஸ் 9 எம்பி சீட் எடுத்தார்?). இங்கேயும் யாழ் மாவட்ட மக்கள் பெருவாரியாக தேர்தலை புறக்கணித்தனர், அல்லது பங்கெடுக்க விடாமல் தடுக்கப்பட்டனர். 1999 தேர்தலும் இதே போல்தான். இந்த தேர்தல்களில் பதிவான வாக்காளரில் எத்தனை சதவீதம் வாக்களித்தனர் என்ற தரவை பார்த்தால் - ரஞ்சித் காட்டு புள்ளி விபரம் ஏன் நம்பிக்கை அற்றது என புரியும். ஜே ஆர், பிரேமா தேர்தல்கள் போல இந்த தேர்தல்களும் யாழ் மாவட்ட தமிழர் சிங்கள வேட்பாளருக்கு பெருவாரியாக வாக்கு போடாத தேர்தல்களே. ஆகவே சிங்கள வேட்பாளருக்கு போடாமல் விட்டதால்தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது. 4. ரஞ்சித் போட்ட புள்ளி விபர குண்டுகளிலேயே பெரிய குண்டு இதுதான். திடீரென இங்கே கணக்கில் அம்பாறையை சேர்கிறார் (கிட்டதட்ட முழு சிங்கள/முஸ்லிம் மாவட்டம்). அதாவது பறாவாயில்லை, புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாகவும், ஏனைய தமிழ் இடங்களில் புலிகள் சொன்னதை கேட்டு மக்கள் பெருவாரியாகவும் புறக்கணித்த தேர்தல் முடிவை - மக்கள் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைத்ததன் பயன் என பக்கேஜ் செய்கிறார் 🤣. 2005 தேர்தல் முடிவால் தமிழருக்கு ஏற்பட்ட விளைவுகள், தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கான விலை. அதை என்னதான் பக்கேஜ் செய்தாலும் மாற்ற முடியாது. இதன் படி பார்த்தாலும் தேர்தல் புறக்கணிப்பு/பொது வேட்பாளர் எமக்கு ஆப்பாகவே முடியும் என்றாகும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது. 5. இங்கே சொல்லப்படும் பொன்சேக்காவின் கூற்றை உலகில் யாரும் நம்பவில்லை என்பதுதான் உண்மை. இதை சர்வ உலகமும் மகிந்தவை தோற்கடிக்க ஆக கூடியதை தமிழர் செய்தார்கள் என்றே பார்த்தது. அது மட்டும் இல்லை, இங்கேயும் பதிவு செய்யப்பட்டோரில் எத்தனை % பேர் வாக்களித்தனர் என்ற புள்ளி விபரம் - உண்மை நிலையை - அதாவது தமிழர் திரளாக பொன்சேக்காவை ஆதரிக்கவில்லை என்பதை காட்டும். 6. உண்மையில் தமிழர்கள் “தெரிவு செய்த” என்ற அடை மொழிக்கு ஏற்புடைய ஒரே ஜனாதிபதி மைத்திரிதான். அவர் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் ஒன்றும் கிழிக்கவில்லை என்பது உண்மையே எனிலும், மும்மொழி கொள்கை, குடியேற்ற வேகம், விகாரை கட்டுதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ பிரசன்னம் குறைப்பு, முள்ளிவாய்க்கால், மாவீரர் நினைவேந்தல் என பல வகைகளில் தமிழ் மக்கள், முந்திய மகிந்த, பிந்திய கோட்டா ஆட்சியோடு ஓப்பிடின், ஆசுவாசமாக இருந்த காலம் இது. ஆகவே இங்கே மைத்திரிக்கு வாக்கு போட்டது முற்றிலும் பிழை என கூற முடியாது. அத்தோடு மகிந்த எமக்கு எப்போதும் ஏற்புடையவர் அல்ல என்ற செய்திதையும் மக்கள் சொன்னார்கள். 7. இது மகிந்தவை விட மோசமான அடக்குமுறையாளனான கோட்ட வை வரவிடாமல் தடுத்து, ஒப்பீட்டளவில் அராஜகம் குறைந்த சஜித்தை மக்கள் தேர்ந்த தேர்தல். ஆனால் சிங்கள வாக்காளரின் மமதை, இனவெறி முடிவை வேறாக்கி, இறுதியில் அறகளவில் வந்து நின்றது. இங்கேயும் மக்களின் நோக்க பிழை சொல்ல முடியாது. ஆனால் சிங்கள வாக்குகள் ஒரே அணியில் திரண்டதால் நோக்கம் நிறைவேற வில்லை. முடிவாக, மேலே ரஞ்சித் ஒரு பக்கசார்பாக அணுகிய தரவுகளை வைத்து - இலங்கை தேர்தல்களில் இதுவரை தமிழர்கள் வாக்களித்த விதம் அவர்களுக்கு ஆப்பாக அமைந்தது என கூற முடியாது. பொது தமிழ் வேட்பாளர் பற்றி எனக்கு கடும் எதிர் கருத்து அதிகம் இல்லை. ஆனால் புள்ளி விபரங்களை செலக்டிவாக அணுகி அதை நியாப்படுத்த கூடாது.
  22. என்ன நடந்தது. கொஞ்சம் உண்மையை விளக்குங்கள் ப்ரோ. பழுத்த சீமானியர் நீங்கள் அனுரவின் கூட்டம் போனது வியப்பாக உள்ளது. விடுப்பு பார்க்கவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.