Everything posted by goshan_che
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நிச்சயமாக ஊதலாம். அக்யூஸ்ட் நம்பர் வன் க்கு கூட்டணி இல்லாமலே மேடை ஏறி ஆதரவு திரட்டியவர். ஆகவே அதிமுக கூட்டணியில் சேர எந்த நெருடலும் சீமானுக்கு இல்லை. முட்டு கொடுக்கவும் தம்பிகள் இப்போதே தயார். இப்போ முடிந்த தேர்தலில் கூட அதிமுக கூட்டணியில் 6 சீட்டில் நின்றிருந்தால் 2 எம்பி யை யாவது அனுப்பி இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு “சக்தி” அவரை பாஜக இல்லாத அதிமுக கூட்டணிக்கு போகாமல் தடுக்கிறது🤣. பீஜேபி + அதிமுக கூட்டணி, நாதக வாக்கு பிரிக்கும் தொழில் - இதுதான் அந்த சக்தியின் இப்போதைய தந்திரோபாயம். இந்த கூட்டணியில் முதன்மை கட்சியாக பிஜேபி வரும் போது, நாதகவின் தொழில் வகுப்பு - வாக்கை பிரிப்பது என்பதில் இருந்து வாக்கை சேர்ப்பது என ஆகும். அப்போது இந்த கூட்டணியில் நாதகவும் சேரலாம். இதில் யாராலும் கணிக்க முடியாத புதிய factor விஜை. மாவீரன் வரும் வரை காத்திருக்கிறார். வந்ததும் உருவாகி விடுவார். நாம் தமிழரில் இருந்து விரட்டப்பட்ட தகுதிவாய்ந்த, இளைய, இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியல் மிக நீளமானது. #காளியம்மாவுக்கு எப்ப கட்டம் கட்டுவாரோ:
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நன்றி ஆனாலும் தேர்தலுக்கு தேர்தல் AfDவளர்கிறது இல்லையா. எதையும் நடக்காது என சொல்ல முடியாது. இதே ஜேர்மனியில், ஜஸ்ட் 80 வருடங்கள் முன் நாஜிகளை மக்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள். ஆகவே AfD ஆட்சியில் பங்கு எடுக்கும் நிலை வர வாய்புகள் மிக அதிகம். இப்படியான விச செடிகளை முளையிலேயே கிள்ளி விட வேண்டு. ஆனால் விகிதாசார முறை இந்த விசசெடிகளை பதியம் போட்டு வளர்க்க உதவுகிறது. 🤣. எனது கருத்தை கொஞ்சம் ஊண்டி சொல்வது உண்மைதான். ஆனால் கட்டாயம் ஏற்க வேண்டும் என திணிக்கும் எண்ணமில்லை🙏.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1. நாதக 8% என்பதை நான் எங்கேயும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஒரு மாதம் முன்பே என் கணிப்பே 8% என்பதுதான். 2. நாதகவுக்கு என ஒரு வாக்கு வட்டம் உள்ளது. உண்மையில் நீங்கள் சொல்லுவது போல் சின்னம் பார்த்து எல்லாம் இப்போ போடும் நிலை தமிழகத்தில் இல்லை. நாதக சின்னம் மைக் என்பதை பெரும்பாலானா வாக்களார், குறிப்பாக நாதக வாக்காளர் அறிந்தே வாக்களித்துள்ளனர். ஆகவே சின்னம் மாற்றம் பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை. 3. நாதக 8% எடுக்கும் என நான் சொன்னது யூன் 4ம் திகதி மட்டும் மூக்கு சாத்திரம். அதன் பின்? அதே போலவே ஏனையவையும். 4. நிச்சயம் சீமான் தொடர்ந்து 10% க்கு கீழ் வாக்கு எடுத்தபடி, அத்தனை தொகுதியிலும் டெபாசிட்டை இழந்தபடி காலத்தை ஓட்ட முடியாது. ஆகவே கூட்டணி வைப்பார் என்பது ஊகிக்க கூடியதே. 5. ஏனையவர்கள் கள்ளர், கசை போக்கிரிகள் - ஆகவே பிஜேபியுடன் கூட்டி இருந்தார்கள். சீமானும் அப்படி செய்தால்——கவனிக்கவும்——செய்தால், அவரும் அதுவே. ஆனால் “யாரோடு சேர்ந்தாவது வெல்லட்டும்” என்ற முட்டுக்கு இப்போதே @ஈழப்பிரியன் அண்ணா வந்து விட்டார். யாழ்களத்தில் இன்னும் எத்தனை பேர் இப்படி நிலைமாறுவார்கள் என்பதை காலம் விரைவில் காட்டும் என நம்புகிறேன். இதைதான் பல வருடமாக இங்கே எழுதி வருகிறேன். ஆனால் இதை செய்யும் இதயசுத்தி அவரிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை எப்போதோ பொய்த்து விட்டது. ஆனாலும் திருத்தி கொண்டால் வரவேற்க தயார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தடக்கள வீரர்கள், தடை தாண்டி ஓடுபவர்கள்….போட்டியில் ஓடுகிறோம் என பாவ்லா காட்டி விட்டு…அப்படியே ஓடிவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்🤣 முதலாவது அல்லது இரெண்டாவது 50 ஓவர் உலக கிண்ணத்தில் இந்த அணிகள் எல்லாம் - கிழக்கு ஆபிரிக்கா என்ற பெயரில் விளையாடின என பள்ளிகூட லைபரரியில் ஒரு புத்தகத்தில் வாசித்த நினைவு. 96 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசை கென்யா வீழ்த்தியது மறக்க முடியாத நிகழ்வு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஏதோ நாம் பிறந்த சொந்த வீட்டில் போய் கண்ணயரும் பீலிங் எனக்கு🤣
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
விகிதாசார தேர்தல் முறையில் நாஜிகள், முழுக்க முழுக்க அடிப்படை வாதிகளாக இருப்போர் கை ஓங்கும். அவர்கள் தயவில் ஆட்சி எனும் போது அவர்கள் கேட்க்கும் இனதுவேச சட்டங்களுக்கு பெரிய கட்சிகள் அடி பணிய வேண்டி வரும். உதாரணமாக யூகேயில் பின் என் பி, நேஷனல் புரொண்ட் போன்றோருக்கு 10% வரைக்கும் ஆதரவு இருந்தாலும் அவர்களால் அந்த அடிப்படை வாத கருத்துகளின் அடிப்படையில் எம்பி ஆக முடியாது. ஆகவேதான், யூகிப், ரிபோர்ம் என கொஞ்சம் மிதவாத முகமூடியை போட்டு கொண்டு முயல்கிறார்கள். ஜேர்மனியில் AfD யின் வளர்ச்சியும், ஏறுமுகமும் மிக ஆபத்தானது. ஒரு காலத்தில் அரசில் இந்த கட்சி வரவும் வாய்புள்ளது. பிரித்தானிய தேர்தல் முறையை ஜேர்மனி பின்பற்றினால் இந்த கட்சி இந்தளவுக்கு வளர வாய்ப்புகள் மிக குறைவு.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இதே போல நிதிஷிடமும் ஜூனியர் பார்னராக போய், சீனியர் பார்ட்னர் ஆக முயற்சித்தனர் பாஜக. நிதீசுக்கும், நாய்டுவுக்கும் பாதுகாப்பான வழி இந்தியா கூட்டணியில் சேர்ந்து அதிகூடிய சலுகைகளை அடைவதே. பிஜேபியோடு சேர்ந்தால் - பழம் இருக்க சுளை எடுத்து விடுவார்கள்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இரெண்டு வருடத்தில் ஒரே கூட்டணி என்றால் இப்பவே ஆளை ஆள் பாராட்ட ஆரம்பித்தால்தான் மெள்ள, மெள்ள நகர்ந்து, கைகோர்ர்கும் அளவுக்கு தம்பிகளையும், சங்கிகளையும் தயார் செய்ய முடியும் என்பது அண்ணாமலைக்கு புரிகிறது.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இரெண்டு முறையிலும் குறைபாடுகள் உள்ளன. விகிதாசார பிரதிநிதிதுவம், கலப்பு பிரதிநிதிதுவம் என மாறி மாறி அமல்படுத்திய இத்தாலியில் நடக்கும் ஊழல் கூத்துக்களை, நிலையற்ற தன்மையை பார்க்கிறோம்தானே. பிரிட்டனில் இப்போ உள்ள சிஸ்டமா, விகிதாரசாரமா என 2012 அளவில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, படு தோல்வியடடைந்தது. இந்தியாவும் இதே நிலைதான் என எண்ணுகிறேன். இந்தியா மட்டும் அல்ல அமேரிக்காவும் கூட. சில நாடுகளுக்கு பொருந்துவது ஏனைய நாடுகளுக்கு பொருந்தாது. கலாச்சாரம் போல அரசியல் கலாச்சாரமும் நாட்டுக்கு நாடு வேறுபடும்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இப்போதைக்கு மோடி பிரதமர், அமித்ஷா உள்துறை அமைச்சர் என்றே அரசு அமையும் என நினைக்கிறேன். தெலுங்குதேசம் - சபாநாயகர் நிதீஷ் துணை பிரதமர் என ஆட்சி அமையலாம். பிகு துணைப்பிரதமர் என்றதும் தேவிலால் பெயர் நினைவுக்கு வந்தது. 90 இன் ஆரம்பகாலத்தில் இவர் து.பி யாக இருந்தார்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
உப்பு சப்பில்லாத ஜேர்மன் அரசியலில் மட்டுமே இது சாத்தியம் 🤣. என்னை பொறுத்தவரை இது சரியான முறையும் அல்ல. இலங்கை இந்தியா அல்ல யூகேயில் கூட இப்படி நடக்குமா என்பது சந்தேகமே. அப்படி நடந்தால் இரெண்டில் ஒரு கட்சி அந்த தேர்தலோடு “இரெண்டாவது பெரிய கட்சி” என்ற நிலையை இழந்து ஒரு சிறிய கட்சி என ஆகிவிடும். ஆனால் ஜேர்மனியில் தொங்கு பாராளுமன்றம் எப்போதும் வரும் - காரணம் விகிதாசார பிரதிநிதிதுவம், ஆனால் இந்தியா, யூகே அப்படி அல்ல - இங்கே தொங்கு பாராளுமன்றம் அபூர்வம். அப்படி வந்தால் 1+3+4 என்றே கூட்டணி அரசு அமையும். யுத்தம் போன்ற அவசரகால நிலையில் 1+2 என தேசிய அரசு அமைப்பார்கள். பிகு ஸ்கொட்லாந்தின் உள்ள பாராளுமன்றத்தின் தேர்தல் விகிதாசாரம் பிரதிநிதிதுவம் மூலம்தான் நடக்கும். அங்கும் அநேகம் தேர்தலுக்கு பிந்திய கூட்டணிதான் அரசமைக்கும். ஆனால் ஒரு போதும், லேபர், எஸ் என் பி, கன்சவேடிவ் ஒன்றுடன் ஒன்று சேராது. கிரீன், லிபரல் டெமகொரட், உதிரிகளை சேர்த்து மேல் சொன்ன மூன்றில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
👇 ரெண்டா உடைகிறதா அதிமுக? மீண்டும் எடப்பாடிக்கு தலைவலி.. "இவங்க" ஒன்னு சேர போறாங்களாமே.. போச்சு போச்சு HemavandhanaPublished: Wednesday, June 5, 2024, 13:17 [IST] சென்னை: அதிமுகவுக்கு மீண்டும் அதிர்ச்சி தோல்வி கிடைத்திருக்கிறது.. இதையடுத்து, கட்சிக்குள் ஏகப்பட்ட புகைச்சல் புகைந்து கொண்டிருக்கிறதாம். இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது. மூத்த தலைவர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், போன்றவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்களாக கருதப்படும் நிலையில், எஸ்பி வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எல்லாம் பாஜகவுக்கு விசுவாசிகளாக இருப்பதாக எப்போதுமே ஒரு மறைமுகபேச்சு உண்டு. எடப்பாடி பழனிசாமி: அதனால்தான், கூட்டணியிலிருந்து பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்ட நிலையில், வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பாஜக பக்கம் தாவ இருப்பதாக, கடந்த ஒரு வருட காலமாகவே செய்திகள் கசிந்தவாறேயிருந்தது.. லோக்சபா தேர்தலுக்கு முன்புகூட இவர்களை தங்கள் பக்கம் கொண்டுவர, கொங்கு மண்டல பாஜக பிரமுகர் முயற்சித்ததாகவும் சொன்னார்கள்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விட்டு, இதுவரை யாருமே அதிமுகவை விட்டு பாஜகவுக்கு செல்லவில்லை. மாறாக, பாஜகவை கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்திருந்தனர்.. இப்படிப்பட்ட சூழலில், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக மண்ணை கவ்வியிருக்கிறது.. இதையடுத்து, அதிமுகவுக்குள் புகைச்சல் அதிகமாகி இருக்கிறதாம். இதுகுறித்து நமக்கு பிரத்யேகமாக செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. கூட்டணி பலம்: தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், கூட்டணி பலம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிப்பதாக எடப்பாடிக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் சிலர் தெரிவித்திருக்கிறார்களாம்.. கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, உதயக்குமார், செல்லூர் ராஜு, கே.சி.வீரமணி ஆகியோர், பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டிருக்கக்கூடாது என தேர்தல் ரிசல்ட் நமக்கு உணர்த்துகிறது என்று வெளிப்படையாகவே எடப்பாடியிடம் கூறியிருக்கிறார்கள். அதிமுக தலைவர்கள், தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு பேச்சும் பேசுவதாக எடப்பாடி புலம்பியிருக்கிறார். கடுப்பான எடப்பாடி: எல்லோரிடமும் கேட்டுத் தானே பாஜக கூட்டணியை முறித்தோம் ; இன்றைக்கு நான் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுத்தது போல பேசுவது என்னை சங்கடப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி. இதில், தங்கமணியும் வேலுமணியும் தான் கொஞ்சம் ஓவராகவே எடப்பாடியை காயப்படுத்துவது போல பேசிவிட்டனராம். இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் அணித் தலைவர்கள், பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தைக் கூட்டுமாறு எடப்பாடிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது... எனவே, உடனடியாக இந்த கூட்டத்தைக் கூட்டும் முடிவில் இருக்கிறாராம். கூட்டம் கூட்டப்படும் போது எடப்பாடிக்கு எதிரான குரல்கள் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று ஒரு க்ரூப் திட்டமிட்டிருக்கிறதாம். வலிமை: அதேபோல, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்பட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அல்லது பிரிந்து சென்ற ஜாம்பவான்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து அதிமுகவின் வலிமையை கூடுதலாக்க வேண்டும் என்று குரல் கொடுக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இனிமேல் எடப்பாடி தலைமையிலான ஒற்றை தலைமை என்பதை பரிசீலனை செய்து, கட்சியை வழி நடத்தவும், தேர்தல் கால முடிவுகளை மேற்கொள்ளவும் உயர்மட்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து, அதற்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து கட்சியை பாதுகாக்கும் புதிய நடைமுறையை முழுமையாக செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுக்க வைக்கும் நெருக்கடியை எடப்பாடிக்கு கொடுக்கும் ஒரு திட்டமும் விவாதிக்கப்பட்டு வருகிறதாம். வெடிக்குமா சர்ச்சை: அதாவது, இனி எடப்பாடி மட்டும் தன்னிசையாக முடிவுகளை எடுக்கவும், செயல்படவும் செக் வைக்கும் விதத்தில் இந்த திட்டம் ஆராயப்படுகிறது. ஆக, அதிமுக கூட்டும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பெரும் ரகளை வெடிக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!! https://tamil.oneindia.com/news/chennai/are-these-the-conflicts-within-the-aiadmk-and-what-are-the-challenges-faced-by-edappadi-palanisamy-611575.html
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இருக்கலாம். ஆனால் நாயுடுவின் முதல் கோரிக்கையே அமித் ஷாவை உள்துறையில் இருந்து தூக்க வேண்டும் என்பதே எனவும் பேசி கொள்கிறார்கள். அதே போல் ஆர் எஸ் எஸ் கூட யோகி அல்லது ஜேபி நட்டாவையே விரும்புகிறதாம். இந்த 10 வருடத்தில் அத்வானி ஈறாக பல பெரிய தலைகளை மோடி பகைத்துள்ளார். இப்போ அயோத்தியை கூட தக்க வைக்க முடியாமல் - தனி பெரும்பான்மையையும் இழந்து நிற்கிறார். மோடி கடக ராசியோ? அட்டமத்து சனி போட்டு ஆடுது🤣.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1990 இல் மண்டல் கமிசன் அறிக்கையை அமலாக்கியே தீருவேன் என மிகவும் நியாயமான நிலைப்பாட்டை விபி சிங் எடுக்க, அவரின் ஜனதாதளத்துக்கான ஆதரவை பாஜக விலக்கி கொள்ள அவர் ஆட்சி கழிந்தது. விபி சிங்குக்கு பதில் தாந்தான் பிரதமராக வந்திருக்க வேண்டும் என்ற கறுவியத்தில் இருந்த சந்திரசேகர், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, ராஜீவின் கைப்பொம்மை போல செயல்பட்டார். அப்போ உதயன் பேப்பரில் சந்திரசேகர் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பதாக கேலிச்சித்திரம் கூட வந்தது. இதே போல் ஒரு நெருக்கடியை ஜெயா - வாஜ்பாயின் முதலாம் அரசுக்கு கொடுத்தார். ஆனால் வாஜ்பாய் மானஸ்தன் - 13 நாளில் பதவி விலகிவிட்டார். 1996 என நினைக்கிறேன். அதன் பின் குஜ்ரால், தேவேகவுடா என மாறி மாறி மியூசிக்கல் சேர் விளையாடினார்கள்🤣. ஆனால் கூட்டணி ஆட்சிகள் மத்தியில் ஸ்திரமாக இருந்த வரலாறும் உண்டு. நரசிம்மராவ் அதிமுக கூட்டணியோடு 5 வருடம் பூர்த்தி செய்தார். அது போலவே மன்மோகன் சிங்கின் இரு தடவையும்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நிச்சயமாக. ஆனால் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் பிஜேபியின் பலம் அதன் வாக்கு வங்கி அல்ல, மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒன்று திரட்டி பின் அதை தாமே ஆட்டையை போடுவது. இந்த முறை அதிமுக இந்த வலையில் இருந்து தப்பி விட்டது. அப்படி தப்பி இருந்தாலும் பிஜேபி கூட்டணி என பல சிறிய கட்சிகளின் வாக்கை அள்ளி - 10% வாக்கு வங்கி தமது கூட்டணிக்கு என பிஜேபி காட்டும். காட்டும் அல்ல, காட்டுகிறது. அண்ணாமலை தற்போதைய பேட்டியில் “அதிமுகவுக்கு இப்போ உறைத்திருக்கும்” என சொல்லியது இதைத்தான். 2026 இல் அதிமுகவை எப்படியாவது வலையில் விழுத்துவதே பிஜேபி திட்டம் என நினைக்கிறேன். அதற்கு இந்த” 10% கூட்டணியின் தலைமை” என்ற பீடிகை கை கொடுக்கும். நாதக 6.5 இல் இருந்து 8.2 க்கு போனது ஒரு வகை வளர்ச்சி (எண்ணிக்கை வளர்ச்சி) என்றால் பிஜேபி இப்படி கூட்டணி கண்டு 10% க்கு மேல் எட்டியது இன்னொரு வகை வளர்ச்சி. இதில் தமிழ் நாட்டுக்கு அதிகம் ஆபத்தானது பிஜேபியின் வளர்சியே. காரணம் - இதை வைத்து, மத்திய அரசின் பவரை வைத்து, அமலாக்கதுறையை வைத்து, அவர்கள் அடுத்த தேர்தலில் அதிகுகவோடு 60:40 என நெருக்குவார்கள். தொடந்து இது 50:50, பின் 40:60 என நெருக்கி, அதிமுகவை அப்படியே விழுங்கி தமிழ் நாட்டின் மாற்று கட்சி என ஆகி விடுவார்கள். மாற்று கட்சியாக அவர்கள் வந்தால் - மக்கள் திமுகவை மாற்ற நினைக்கும் போது ஆட்டோமட்டிக்காக அவர்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறும் நிலை ஏற்படும். மஹாராஸ்டிரா முதல் பல மாநிலங்களில் இப்படித்தான் பிஜேபி ஆட்சியை பிடித்தது. நாதகவின் 1.5% வளர்சியை அலட்சியபடுத்துவது போல விட பிஜேபியின் இந்த வளர்ச்சியை அலட்சியப்படுத்த முடியாது என்பது என் கருத்து.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இது உண்மையில் மாநில கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான். இதேபோல் தன்னை பிரதமர் வேட்பாளராக்க கேட்டு, முறுக்கி கொண்டு கடைசி நேரத்தில் பிஜேபி முகாம் போனவர் நித்தீஷ்குமார். நிச்சயம் அவரும் மிக பெரிய கோரிக்கையை மோடியிடம் வைப்பார் என நினைக்கிறேன். 2014 முதல் தனி மெஜாரிட்டி திமிரில் ஆடிய ஆட்டத்துக்கெல்லாம் அடுத்த ஐந்து வருடம் மோடி அனுபவிக்க போகிறார்🤣.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
தமிழ் நாட்டில் நா.த.க தவிர மிகுதி அனைத்து கட்சிகளும் கூட்டணி. இதன் அர்த்தம் என்ன? 1. திமுக உட்பட எந்த பெரிய கட்சியும் 39 சீட்டிலும் போட்டி போடவில்லை. உதாரணமாக திமுக தனியே 39 தொகுதியிலும் போட்டி இட்டிருந்தால் வாக்கு சதவீதம் இப்போ இருப்பதை விட கூடி இருக்கலாம், ஆனால் சீட் எண்ணிக்கை நிச்சயமாக குறைந்து இருக்கும். 2. அதே போல் அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் அவர்கள் கட்சி வாக்குகளும் அல்ல. உதாரணமாக கனிமொழிக்கு விழுந்த வாக்குகளில், அந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக ஆதரவுவாக்குகளும் அடக்கம். அதே போல் செளமியாவுக்கும் விழுந்த வாக்கில் பிஜேபி வாக்கும் அடங்கும். ஆகவே கூட்டணியில் நின்ற கட்சிகளின் வேட்பாளர்களின் வாக்கை வைத்து அவை எல்லாமுமே அந்த கட்சிக்கான வாக்குகள் என கருத முடியாது. யாழ்கள அறிவுஜீவிகளும், அதீத அறிவுஜீவிகளும் இதை புரிந்து கொண்டால் - கூட்டணியில் நின்ற கட்சி (பாஜக)வின் சதவீதத்தையும், தனியே நின்ற கட்சி (நா த க) சதவீதத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது விளங்கும். இது மிகவும் தவறான ஒப்பீட்டு முறை. ஆனால் தாம் விரும்பும் அல்லது வெறுக்கும் கட்சிக்கு ஆதரவாக எழுத இதை பதன்படுத்தி பரப்புரை செய்யலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லா உலக போட்டியிலும் ஒரு ஜாம்பவான் ஒரு நோஞ்சானிடம் அடி வாங்கும் banana skin இருக்கும். இதுதான் அந்த போட்டியாக இருக்கும் என ஒரு குத்து மதிப்பாக அயர்லாந்தை தெரிந்தேன். பார்க்கலாம்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஒவ்வொரு தேர்தலிலும் அத்தனை தொகுதியிலும் டெபாசிட்டை இழக்கும் நாதக பாரம்பரியம் இந்த தேர்தலிலும் தக்க வைக்கப்பட்டுள்ளது. கன்யாகுமரியில் கணிசமான வாக்குகள் நாதகவுக்கு வீழ்ந்துள்ளன. சீமானை போலவே மலையாள கிறிஸ்தவ நாடார்கள் அதிகம் உள்ள பகுதி என நினைக்கிறேன். அதே போல் சீமானின் சொந்த மாவட்டமான சிவகங்கையிலும். 2026 இல் கன்யாகுமரியின், அல்லது சிவகங்கையின் ஒரு சட்டமன்ற தொகுதியில் அண்ணன் போட்டியிடலாம் ?
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இல்லை பீகாரில் பிஜேபிக்கு 12 சீட்தான். 2019 இங்கே எடுத்த காங்கிரஸ் இப்போ 3 சீட் எடுத்துள்ளது.
- IMG_7588.jpeg
- IMG_7589.jpeg
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
அட இப்படி ஒரு திரி ஓடுதா. நான் கிரிகெட் கூட பார்க்க முடியாத அளவுக்கு வாழ்க்கைல பிசியாயிட்டேன். அந்த திரியில் பலரின் @ க்கு பதில் கூட போடவில்லை (மன்னிக்க வேண்டும்). இந்த பிசிக்குள்ள பொட்டம்மான் இருக்கிறார், கபிலம்மான் நிக்கிறார், கருணாம்மான் கக்கா போறார் போன்ற திரிகளில் எல்லாம் மினகெட நேரமோ, விருப்பமோ இல்லை🙏. அதற்குத்தான் யாழில் இருக்கிறாரே ஒரு caffeine induced hallucination அடையும் கனவான் 🤣. தமிழக தேர்தல் என்பதால் எட்டிப்பார்த்தேன். பிரித்தானிய தேர்தல் பற்றி ஒரு திரி திறக்க உள்ளேன்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
🤣🤣🤣 நாதக 1. தேர்தலுக்கு முதலே நாம் தமிழர் 8% என நான் எழுதியபோது (போட்டி திரியிலும் இதையே பதிலாக கொடுத்தேன்), இல்லை, இல்லை நாதக 5% கூட எடுக்காது என ஒரு சாரரரும், 15% தாண்டும் என தம்பிகளும் சொன்னார்கள். ஆனால் போன சட்ட மன்ற தேர்தலில் எடுத்த அதே அளவை, அதாவது அண்ணளவாக 8% ஐ நாதக எடுத்துள்ளது. இது வளர்ச்சியும் இல்லை தேய்தலும் இல்லை. நாதக தேக்க நிலையில், அசையாமல் நிற்கிறது என்பதையே இது காட்டு கிறது. இதை நாதக வளர்ந்து விட்டது என தம்பிகள் இங்கும், சமூக ஊடகத்திலும் பரப்பி விடுவது -கம்பி கட்டும் கதைதான். போன தேர்தலில் 3 கட்சிகள் ஓடிய ரேசில் 3ஆவதாக வந்து விட்டு, தமிழ்நாட்டில் மூன்றாம் பெரிய கட்சி என தம்பிகள் உருட்டியது போல, இப்போ 7.9% இல் இருந்து 8.1% சதவீதம் ஆகியதை ஏதோ இமாலய சாதனை போல் உருட்டுகிறார்கள்🤣. நாதக 8% க்கு மேல் எடுத்தால் மாநில அந்தஸ்தை அடையும், நிரந்தர சின்னம் கிடைக்கும் என்பது - நாதக 8% வாக்கை பெறும் என எதிர்வு கூறிய போதே எதிர்பார்த்ததுதான். இதுவும் ஒரு வளர்ச்சி அல்ல. 15 வருடமாக அத்தனை தொகுதொயிலும் தனித்து நின்று இப்போதான் 8% எட்டி இருக்கிறார்கள், என்பதே அவர்களின் குறை வளர்சியையே காட்டு கிறது. திமுக தொடங்கி 15 வருடத்தில் ஆட்சியை பிடித்து விட்டார்கள். அதிமுக தொடங்கி அடுத்த தேர்தலியேலே. ஜெ கூட அதிமுக வை கைப்பற்றி குறுகிய காலத்தில் ஆட்சி கட்டில் ஏறினார். இந்த சின்னமும் அடுத்த தேர்தல்களில் 8% எட்டாவிட்டால் மீளவும் பறிபோகும். மதிமுகவின் பம்பரத்துக்கு நடந்தது போல. இது ஒன்றும் வளர்ச்சி இல்லை ஆனால் தம்பிகளுக்கு ஒரு ஆறுதல் பரிசு என்ற அளவில் சந்தோசப்பட்டு கொள்ளலாம். 2. சீமான், அடுத்து 2026 இல் என்ன செய்வார் என்பதுதான் இனி நாதகவின் போக்கை தீர்மானிக்கும். மோடியே, நாயுடு, நிதீஷ் ஆதரவில்தான் அடுத்த ஐந்து ஆண்டு ஆளப்போகிறார். எனும் போது முன்னர் போல் பிஜேபிக்க்காக வாக்கை பிரிக்கும் அரசியல் அதிக பலனை தருமா என்பது சந்தேகமே. அதேசமயம் 2026 இல் அதிமுக கூட்டணியில், பிஜேபி சமேத நாதக இடம் பெற்றாலும் ஆச்சரியமில்லை. (தம்பிகள் முட்டு கொடுக்க தயாராகவும்). விஜை முதுகில் ஏறி சீமான் பயணிக்க ஆசைபடுவது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் சீமானை முதல்வராக்கவோ அல்லது நாதகவை ஆட்சியில் அமர்த்தவோ தன் பலநூறு கோடி ரூபாய் தொழிலை விட்டு விட்டு விஜை வரவில்லை. அநேகமாக - 15% சீட்டுகள் என்ற அடிப்படையில் நாதக விஜையோடு சேரலாம். பாஜக நாதகவை போல் பாஜவை அலட்சியம் செய்ய முடியாது. உண்மையில் அண்ணாமலையின் வாய் துடுக்கால் அதிமுக கூட்டணியை முறிக்காமல் 15 சீட்டுக்கு ஓம்பட்டிருந்தால் - இப்போ மத்தியில்ம்மெஜாரிட்டியை நெருங்கி இருக்கலாம். அடுத்த 2026 தேர்தலில் அதிமுக, விஜை, சீமான் - இதில் இருவரை, அல்லது, மூவரையும் சேர்த்து களம் கண்டால் - பிஜேபி தமிழ் நாட்டில் சில பத்து எம் எல் ஏக்க்களை இலகுவாக அடையலாம். அதிமுக ஒரு சீட்டை பெறா விடினும் எடப்பாடி கட்சியை காப்பாற்றி உள்ளார். ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாக பிஜேபி அதிமுகவை கபளீகரம் செய்வதை கூட்டணியை முறித்து எடப்பாடி தடுத்துள்ளார். உண்மையில் அதிமுக வாக்கு வங்கியை கூட அதிக சேதாரம் இல்லாமல் காப்பாற்றியுள்ளார். ஆனால் அதிமுகவை பிஜேபி நோண்டுவதும், கைப்பற்ற முனைவது தொடரும். தன் பதவியை, கட்சியை பிஜேபியிடம் இருந்து காக்க எடப்பாடி கடுமையாக போராட வேண்டி இருக்கும். திமுக சீட்டு எண்ணிக்கையில் வெற்றி என்றாலும் - பல இடங்களில் அதிமுக+பிஜேபி+பாமக கூட்டணி அமைந்திருந்தால் திமுக கதை கந்தல்தான். திமுக+ வாக்கு வங்கி அப்படியே தேங்கி இருப்பதாக படுகிறது. அடுத்த மூன்று சட்ட சபை தேர்தலுக்கு ஸ்டாலினை அசைக்க முடியாது என்பது மாய விம்பம் என்பது மிக தெளிவாக தெரிகிறது. மிக பலமான எதிர் கூட்டணி அமைந்தால் 2026 இலேயே திமுகவை அவுட் ஆக்கி விடலாம். வோட் மிசின் வோட் மெசினில் களவு இல்லை என்பதை மீண்டும் இந்த தேர்தலும் நிறுவியுள்ளது. வோட் மெசினில் களவு செய்ய முடியுமாயின் இப்படி ஒரு தொங்கு பாராளுமன்றை அமைய விடாமல், தனி மெஜோரிட்டி வரும் படி பிஜேபி களவு செய்திருக்கும்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
மோடிக்கும் ஆர் எஸ் எஸ் சுக்கும் ஏற்பட்ட லடாயின் வெளிப்பாடு இது. பலர் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். அயோத்தி தொகுதியே அவுட்.