-
Posts
15613 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
ரஸ்யாவில் என்றால் ஒருவர் யன்னலால் தவறி விழுந்திருப்பார் - உடனே சபாநாயகர் ஏகமனதாக தேர்வாகி இருப்பார். பிகு அமேரிக்காவை விடுங்கோ குப்பை நாடு. பூலோக சொர்க்கமாம் ஜேர்மனி (அப்படித்தானே?) யில் அண்மைய எலக்சனுக்கு பிறகு, சபாநாயகர் அல்ல - அரச்சாங்கம் அமைய எத்தனை மாதம் எடுத்தது? எனக்கு எழுதும் நேரம் மிச்சம்👍🏿
-
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதென்ன புது கதையா கிடக்கு…..🤣 -
✅ ❌ இன்னும் பார்க்கவில்லை ✅ ரைன் நதியை பாசலில் பார்க்கவில்லை ஆனால் அல்ப்ஸ் அடிவாரத்திற்கு சற்று கீழே Chur நகருக்கு அருகில் பார்த்தேன். பளிங்கு போல் இருக்கும் நதி நீர். அவ்வளவு சுத்தம். ❌ ஆக்கத்துக்கு நன்றி. நான் பார்த்த இடங்கள். பார்க்க விரும்பும் இடங்கள் உங்கள் லிஸ்டில் வருகிறதா? வேறு இடங்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்.
-
இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க -
இட்டறுதி - தனியே அந்திம காலம் மட்டும் இல்லை? எகா: இட்டறுதியா சொல்லுறன் இந்த சைக்கிளுக்கு 10000 ரூபாதான் விலை. கம்மாலை - இதுவும் கூட வடக்கிலும் புழக்கத்தில் உள்ளது. ஆனால் மட்டகளப்பில் இதை ஒரு ஆச்சரிய குறியீடாக பயன்படுத்துவார். இது “அம்மாளே” அல்லது இதை ஒத்த ஒரு தூசண வார்த்தையிம் திரிபாக இருக்குமோ?
-
நன்றி தனி. இந்த புத்தகம் சில வருடங்களுக்கு முன் ஒருவர் இந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். இது பாலினம் மாறியோர் என்பதை விட - எதிர்பால் குணங்களை வெளிப்படுத்துவோர் என்பதே சரி? அடக்க ஒடுக்கமாக இல்லாமல் dominant ஆக இருக்கும் பெண் - ஆண்மாரி. இதுவும் வடக்கிலும் பாவனையில் உள்ள சொல்.
-
இதைதான் நானும் ஜஸ்டின் அண்ணாவும் சதிக்கோட்ட்பாட்டை கட்டி எழுப்புதல் என்கிறோம். புட்டின் “அமெரிக்கா ரஸ்யன் பெடரேசனை துண்டாட நினைக்கிறது என சொன்னதும்”, அதை மனதில் பதித்து கொண்டு நீங்கள், நீங்கள் ஏலவே எடுத்த இந்த முடிவுக்கு ஆதாரத்தை தேடுகிறீர்கள். ஆதாரங்கள் முடிவுகளுக்கு இட்டு செல்லவேண்டும். ஆனால் நீங்கள் முடிவை, ஏலவே முடிவு செய்து விட்டு - ஆதாரத்தை தேடும் போது, மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக தெரிவது போல, லின்சே க்ரேம் ஏதோ அர்த்தத்தில் சொன்னதை, பிழையாக விளங்கி கொண்டு அது உங்கள் முடிவை நிறுவுவதாக நம்புகிறீர்கள். இதை நீங்கள் வேணும் என்று செய்வதாக இல்லாமல் இருக்ககூடும். பல சதி கோட்பாட்டாளர்கள் தாம் சதிகோட்பாட்டாளர் என்பதை உணருவதே இல்லை என்பது வழமைதான். ஆனால் சதிகோட்பாடுகள் உருவாகும் முறை இதுதான். அடுத்து, தரவுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்வது, முடிவுக்கு வருவது என்பது எல்லா துறைகளிலும் ஒரேமாதிரியாக இருக்கும். இதில் உயிரியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம் என்ற வேறுபாடுகள் இல்லை.
-
1951 - கொழும்பில் நடந்த கொலை - பொன்னம்பலம் குலேந்திரன்
goshan_che replied to goshan_che's topic in கதை கதையாம்
ஓம்… கீழே பிறிதொரு திரியில் யாழ்கள உறவுகள் கோகிலாம்பாள் கணவர் கொலை வழக்கை அலசி ஆராய்ந்துள்ளனர். -
ஒரு நாட்டின் தலைநகரின் மேயர் வெளிநாட்டு தூதர்களுக்கு கொடுத்த விருந்து என பார்த்தால் இது கொஞ்சம் பவிசு குறைவாகவே இருக்கிறது. மெயின் மீல்ஸ் எதுவும் இல்லாமல். வெறும் finger food ஆக உள்ளது. டீ பார்ட்டியாக இருக்கும் போல. வழமையான தூதர்களுக்கான விருந்துகளுடன் ஒப்பிடும் போது இது பஞ்ச பார்ட்டியாகவே தெரிகிறது.
-
பராவாயில்லை அரசோடு இருக்கும் தமிழ் தலைவர்களில் முதன்மையானவராக தெரிபவரே 13 முழுமையாக அமல் படுத்த வேண்டும் என கேட்பது நல்ல விசயம்தான். ஆகவே தமிழரின் ஆக குறைந்த நிலை (lowest possible position) இது என எடுத்தால் - தமிழ் தேசிய கட்சிகளுடன் பேரம் படிய 13 க்கு மேல்தான் போக வேண்டும். இந்த விடயத்தில் டக்கா இது வரைக்க்கும் தன் வகிபாகத்தை ஓரளவு பாத்திரம் அறிந்து செய்கிறார். இதை ஒரு உந்து நிலையாக கொண்டு 13 க்கு மேல் வேண்டும் என தமிழ் தேசிய கட்சிகள் அழுத்த வேண்டும்.
-
கடந்த ஆண்டு மது விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கசிப்பு விற்பனை 50% ஆல் கூடியது ? -
Sad-guru உடான்ஸ்சாமியார் அருளுரை கள்ள சாமியாருக்கும், சாமியாருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். மறைத்து வைத்த CCTV கமராவ கண்டுபிடிக்கத்தெரிந்தவன் சாமியார் கண்டுபிடிக்க தெரியாதவன் கள்ளச் சாமியார்.
-
அப்போ அமெரிக்கா மீது உக்ரேன் நியாயமான காரணத்துக்காக கையை காட்டியதும் - உங்களுக்கு கோபம் பொத்து கொண்டு வந்திட்டா🤣. நுணா, நீங்கள் எப்ப அங்கிலோ-சக்சன் அடிமை ஆனீர்கள்? சொல்லவே இல்லை🤣. சி என் என் ஐ நம்புறீங்க! அமெரிக்காவை உக்ரேன் குற்றம் சொன்னா டென்சன் ஆறீங்க! வாட்ஸ் ராங் யா?🤣 பிகு இதை உக்ரேன்-நேட்டோ உளவு அமைப்புகள் கூட்டாய் பிரித்து மேய்திருப்பார்கள். இப்போ இருவரும் கூட்டாக செய்திதளங்களுக்கு கசிய விடுகிறார்கள். Manufactured leak. என்றே நான் நினைக்கிறேன்.
-
இன்னொரு விடயம். ரஸ்யா ராணுவத்தை உடைத்தல் (இங்கே உடைத்தலை “பலவீனமாக்கல்” என்ற அர்த்தத்தில் எழுதுகிறேன்) = ரஸ்யன் பெடரேசனை துண்டாடல் அல்ல. நிச்சயமாக இந்த போரை சாக்கா வைத்து, 1. உக்ரேனின் உயிர், பொருள் இழப்பில் - ரஸ்யராணுவத்தை முடிந்தளவு பலவீனமாக்குவது 2. ரஸ்ய பொருளாதாரத்தை முடிந்தளவு பலவீனமாக்குவது 3. ரஸ்யா-ஈயூ பொருளாதார தொடர்பை அறுத்தெறிந்து விடுவது 4. பின்லாந்து, சுவீடனை ரஸ்ய எதிரணியில் வைப்பது இவை எல்லாவற்றின் மூலமும் ரஸ்யாவை ஒரு ஈரோசியா சக்தியாக வளரவிடாமல் தடுப்பது. இதுதான் அமெரிகாவின் நோக்கம். அதாவது இந்த யுத்த முடிவில் ரஸ்யாவை உடைக்காமல் ஆனால் எழுந்து நடக்க முடியாத அளவுக்கு அடித்து துவைத்திருக்க வேண்டும். இதுதான் அமெரிக்காவின் நோக்கம்.
-
ஐயோ, Miley சொன்னதில் ஒரு சதிக்கோட்பாடும் இல்லை ஐயா. Miley ரஸ்யாவை உடைக்க வேண்டும் என்றா சொன்னார்? இல்லையே. மக்ரோனும், கீசிஞ்சரும், கோஷானும் (🤣) சொன்னதையே அவரும் சொன்னார் “ஒட்டு மொத்தமாக போரில் உக்ரேன் வெல்லுவது இயலாமல் இருக்கலாம்”. ஆகவே இந்த விண்டரில் ஒரு உடன்படிக்கைக்கு வரலாம். இது உண்மையே ஆனாலும் இதை உக்ரேன் ரசிக்காது. கூடவே உக்ரேனின் நில-இறைமையை, நில-ஒருமைப்பாட்டை, அமரிக்கா அதுவும் ஒரு ஜெனரல் தீர்மானிக்கிறாரா? என்ற கேள்வி எழும். இப்படி பட்டவர்தனமாக சொல்லக்கூடாது என்பதால்தான் அவர் சொன்னதை பூசி மெழுகினர்கள்.
-
இப்படி சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஆனால் நீங்கள் லின்சே க்ரேம் when Russia breaks and they get rid of Puttin என்று சொன்னதை முழுக்க முழுக்க தவறாக, தலை கீழாக விளங்கி கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் சொல்கிறேன் இதை இங்கே உங்களை காயபடுத்த நான் எழுதவில்லை. மேலே நீங்கள் இணைத்த காணொளியை, யூகேயில் ஆங்கிலமொழி மூலம் பள்ளியில் கற்று, யூனிவர்சிட்டியிலும் படித்த ஒருவருக்கு அனுப்பி - இங்கே லின் சே கிராம் என்ன சொல்லிறார் என்பதை கேட்டுப்பாருங்கள் (ஆங்கிலத்தை பாடமாக கற்றவர் என்றால் இன்னும் நல்லம்). இப்படி பலரை உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். கள உறவுகளும் தங்கள் ஓரளவு வளர்ந்த பிள்ளைகளிடம் இதை போட்டு காட்டி கேட்கலாம். Lost in translation என்று ஒரு விசயம் இருக்கிறது. இங்கே உங்களுக்கு நடந்துள்ளது அதுதான். ஒரு மொழி தனியே சொற்களின் அந்த சொற்களின் சேர்க்கை மட்டும் அல்ல, அதையும்தாண்டி ஒரு விடயம் சொல்லப்படும் இடம், பொருள், ஏவலையும் கருத்தில் எடுத்தே பொருள் அறியப்பட வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில், ஒரு சொல்லுக்கு பல அர்த்தம் மட்டும் அல்ல - சில சொற்களுக்கு ஒத்த கருத்தும், எதிர்கருத்தும் கூட ஒரே சொல்லுக்கு வரும். மேலே லின்சே க்ராம், when Russia breaks and they get rid of Puttin என்று சொன்னதன் அர்த்தம்: (இதுவரை புட்டினின் பின்னால் அணி திரண்டு நிற்கும்) ரஸ்யாவின் (ரஸ்ய மக்களின்) ஓர்மம் உடைந்து, அவர்களாகவே (they), புட்டினை அகற்றும் போது - யுத்தம் முடியும் என்பதையே. ரஸ்யாவை துண்டாட வேண்டும் என அவர் சொல்லவில்லை. if you put what’s being said in its context, apply rules of grammar and syntax correctly and a bit of common sense - this is the only possible interpretation for what Sen. Graham said . இதை நான் வாசகர் கருத்துக்கு விடவில்லை. காரணம் இது ஒரு தமிழ்களம் - அநேகருக்கு இதை பற்றி ஒரு முடிவுக்கு வரும் அளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு அவசியமும் இல்லை. ஆனால் எனது விளக்கம் இதுதான். இதை நீங்கள் ஏற்கவில்லை என்றால் we will have to agree to disagree 🙏🏾.