Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15619
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. தியரிப்படி, ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுனர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். பொதுவாக அதே மாநிலத்தை சேர்ந்தவர் ஆளுனராக இருந்தால், அவர் அங்கே அரசியல் செய்ய அல்லது செய்வதாக தோற்றப்பாடு ஏற்படும் என்பதால், தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு சமாந்திரமாக இன்னொரு உள்ளூர் ஆள் இருக்க கூடாது என்பதாலும் வேற்று மாநிலத்தவரை போடுவார்கள். ஆனால் நடைமுறையில் எதிர்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆளுனர்கள் குட்டி தாதாக்கள் போல் நடப்பதுதான் வழமை. சிலர் இதில் வெற்றி பெறுவர். பலர் மூக்குடைவர்.
  2. நிச்சயமாக. இத்தோடு குபேர யோகம் அடித்துள்ள இன்னொரு நாடு நோர்வே. ஆனால் அமெரிக்கா, யூகே போல் முதலைகள் லாபத்தை பங்கு போடாமல் அங்கே ஓரளவு செல்வம் சமச்சீராக நோர்வே மக்களிடம் பகிரப்படும்.
  3. அந்த ஆசை யாருக்குத்தான் இல்லை? ஆனால் இது அது அல்ல. சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி, வியாழேந்திரன் ஆதரவாளர் எனில் அவர்கள் உங்களை விட மூர்க்கமாக சாணக்கியனை எதிர்ப்பர். யாழில் முதன் முதலில் சாணக்கியனை கடுமையாக எதிர்க்க தொடங்கியவர் அக்காதான். ஆனால் உங்கள் காரணத்துக்காக அல்ல. ஏன் இல்லை? அவரும் ஒரு வட கிழக்கு எம்பி தானே? எப்படி நாம் வேறு, வேறு என சொல்கிரீர்கள்?
  4. செய்திருக்கலாம் -ஆனால்திரி கண்ணில் பட்ட போது எல்லாரும் தம்பங்குக்கு ஆளாளுக்கு சேறு பூசி விட்டிருந்தார்கள். இல்லை கொள்ளி இல்லை - இன்னொரு உறவு இந்த சந்தேகதை சொல்லி இருந்தார். யாழில் 5ம் படைகள் நிறையே உள்ளன - எனவே இந்த சந்தேகம் நியாயமானது. ஆனால் அப்படி இல்லை என நான் நினைக்கிரேன்.
  5. இதில் பிழை கரு விலும் நீங்கள் உட்பட சகபாடிகளிடமும் 50:50 என்பது என் கருத்து. நீங்கள் யாரும் சாணாக்கியன் மீது பிரதேசவாதத்தால் விமர்சனம் வைக்கவில்லை. உங்கள் விமர்சனம் - அவரின் சும் முடன் இணைந்த சுத்துமாத்து அரசியல் பற்றியே இருந்தது. கரு இதை தவறாக பிரதேசவாதம் என வகைப்படுத்தினார். பிரதேசவாதம் என்பது சும்மா தூக்கி எறியும் வசவு அல்ல. அது ஒரு பெரும் குற்றச்சாட்டு. அதை பாவிக்க முன் அவர் யோசித்திருக்க வேண்டும். சரி பிழையாக பாவித்து விட்டார் - ஒரு சக தமிழன் நம்மை தவறாக விளங்கி கொண்டுள்ளார், அவருக்கு அதை தன்மையாக விளங்கபடுத்த எத்தனை பெயர் முயன்றீர்கள்? மாறாக அவருக்கான பதில், சாணாக்கியனின் குடும்பத்தை இழுத்து, ஒரு காரணமும் இல்லாமல் அவரின் மதத்தை இழுத்து, உப்பு சப்பில்லாத பெயரை இழுத்து, பாலா அண்ணை மட்டகளப்பா என நக்கலடித்து முடிந்திருந்தது. ஒரு சில்லறை மேட்டர் இது. இதில் கூட தமிழ் தேசியம் பேசும் தமிழருக்கிடையே புரிந்துணர்வு, விட்டு கொடுப்பு இல்லை. நாங்கள் என்னத்தை கிழிச்சி என்னத்தை தைக்கப்போறம் தீர்வு எடுத்து. பிகு கரு என்ற பெயரை மட்டும் வைத்து அவரை கருணாவின் ஆள் என நான் நினைக்க இல்லை. கருணா ஆதரவாளர் என்றால் (உ+ம் @ரதிஅக்கா) - அவர் உங்களை விட மோசமாக சாணக்கியனை எதிர்ப்பார். கரு முன்னரும் தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதியதை நான் காணவில்லை.
  6. அட்லீஸ்ட் உக்ரேனில் போய் பங்கராவது வெட்டி கொடுக்கலாம் 🤣
  7. எல்லாராலும் தேடி அறிய முடியும் என்றால் எல்லாரும் உங்களை போல தரவு சுத்தமாக அல்லவா எழுதுவார்கள்? தனது வாழ்நாள் முழுவதும் எமக்காக உழைத்த மனிதன் - பாலா அண்ணையின் பூர்வீகம் என்ன என்பதை கூகிள் ஒரு நொடியில் காட்டி விடும். ஆனாலும் பிழையாக எழுதுகிறார்களே? அதுவும் நீங்கள் சொன்ன விடயத்தை நான் உண்மையில் மேலோட்டமாக தேடிப்பார்த்தேன் - இன்னும் ஆழமாக தேட வேண்டும் போல் இருந்தது - ஆகவே இது சாதாரணமாக தேடி எடுக்கும் விடயம் அல்ல. கூகிள்-பின்னான உலகில் அறிவு என்பது - எங்கே தேடுவது அதில் எது நம்பக்கூடியது என்பதை தெரிந்து வைத்திருப்பதே - அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை, குறிப்பாக துறைசாரா, துறைகளில்.
  8. காணிக்காரன் செலவில்லாமல் மலசலகூட குழி கிண்டி எடுத்திட்டான்.
  9. இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு? அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து? பொலிஸ் அதிகாரத்தோட? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்களுக்கு இன்னொரு அரிய தலைவன் வாய்க்கக்கூடும். அதுவரை இப்படியே இந்த மதவாத, பிரதேசவாத, இனவாத சகதியில் கிடந்து உழலுங்கள்.
  10. இன்றைய நிலமைக்கு, ”இந்தியா தலையிடவேண்டும், மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்” என கூவுவதற்கு என்ன ரேட்டாம்?
  11. உண்மையில் நான் இங்கே கேட்ட கேள்வி அவர் துறைசார்ந்ததல்ல. அவர் கொடுத்த பதிலில், அதை வாசிக்கும் போது அடுத்து என் மனதில் வந்த கேள்விகளுக்கும், அடுத்தடுத்த வரிகளில் பதில் இருந்தது (நான் கேட்காமலேயே). துறைசாரா ஒரு விடயத்தை பற்றி இப்படி ஒரு பூரணமான பதிலை எப்படி கொடுக்க முடிகிறது? அந்த விடயதான கிரகிப்பு வியக்கத்தக்கது. அதனால் # அட எப்புர்ரா விருது
  12. 🤣 இல்லை விளங்கநினைப்பவன். நீங்கள் மிக நிதானமா கருத்தாளர். இதே மாதிரி சிந்தனை எனக்கும் உண்டு. குமுதம் அல்லது விகடனில் 90களில் ப்ரியா கல்யாணராமன் ஒரு இமயமலை பிரயாண கட்டுரை எழுதினார். போய் பார்க்க வேண்டும் என நினைப்பதுண்டு. ஆகவே உங்கள் அனுபவம் எப்படி என அறிய ஆவல்.
  13. தெரியவில்லை @island. நான் போன சமயங்களில் - சாதாரணமாகத்தான் சமூகவலைத்தள பாவனை இருந்தது. ஆனால் நான் சிங்கபூர் அரசியல் பேசுவதில்லைதானே. ஒருக்கா நேரம் கிடைக்கும் போது தேடிப்பார்க்கிறேன்.
  14. நன்றி அண்ணா. மிக தெளிவான விளக்கம்👍🏿👏🏾 பிகு மருத்துவம், அரசியல், பாராளுமன்ற நடைமுறைச்சட்டம், வரலாறு, இராஜதந்திரம் என கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல்துறைகளில் தரவுபூர்வமாக நீங்கள் கொடுத்த தகவல்கள் பிறிதொரு படிநிலை, பிறிதொரு படிநிலை (அதாவது வேறலெவல், வேறலெவல்🤣). ஆகவே உங்களுக்கு “அட எப்புர்றா” விருதை வழங்கி கெளரவிக்கிறேன்👏🏾👏🏾👏🏾
  15. பெளத்த-சிங்கள மகாவம்ச மனோநிலையின் ஏக போக உரிமையை தமக்குள் கூட, ஒரு இம்மியளவு கூட விட்டுகொடுக்க இவர்கள் தயாரில்லை என்பதை இது காட்டுகிறது.
  16. நன்றி இதில் நிபந்தனை 1ஐ பற்றி அறிந்திருந்தேன். மிகுதியை இப்போ அறிந்தேன்🙏🏾. ஒரு கேள்வி நிபந்தனை 1 ஐ நிறைவேற்ற (to reduce the minimum from 50 to 1) காங்கிரசின் நிலை சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமா? அப்படி என்றால் நிலைசட்டம் மாற்றும் வாக்கெடுப்பில் முழு நீலகட்சி+சில சிவப்பு கட்சி சேர்ந்தாலே நிபந்தனையை ஒன்றும் இல்லாமல் ஆக்க முடியும் அல்லவா?
  17. அதே போல் ஒரு கலகத்தில் ஒருவர் உயிரிழந்தார் என பிரதமர் பதவி விலகிய அரசியல் கலாச்சாரம் இலங்கையில் இருந்துள்ளது - ஒரு காலத்தில். லேடியா, மோடியா என சவால் விடாமல் 39 லோக்சபா இடங்களில் 10 பிஜேபிக்கு கொடுத்து கூட்டணியில் சேர்ந்திருந்தால் போயிருப்பாரா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.