Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15606
  • Joined

  • Last visited

  • Days Won

    175

Everything posted by goshan_che

  1. சம்சாரி சந்நியாசி ஆகலாம், சந்நியாசி சம்சாரியும் ஆகலாம் ….. ஆனால்…. பப்பு… அப்பு ஆகலாமா என்பதுதான் தெரியவில்லை. அண்டை நாட்டு மன்னன் போல் ஒரு “அண்டர்ஸ்டாண்டிங்” ஏற்பாட்டை சொல்கிறாரோ?
  2. தோழர், பப்புவின் திருமண ஆசையை “வினோத செய்திகள்” பகுதியில் இணைச்சீங்க பாருங்க தோழர். அங்க நிக்குறீங்க 🤣
  3. உடான்ஸ்சாமி என்ன வேலை செய்கிறார்? சதா யாழில் மினகெடுகிறாரே? அரச பணத்தில் வாழ்கிறாரா? அல்லது தெருவோர யாசகரா? ஓய்வூதியக்காரரா? கட்சிகள், புலநாய்வு ஏஜென்சிகளிடம் பணம் வாங்குகிறார? இப்படி பலவாறு யோசித்து மண்டையை உடைக்கும் உறவுகளுக்கு ஒரு வழியாக இன்று பதில் கிடைத்திருக்கும். # 9 வருடக்காத்திருப்பு 🤣
  4. சபாஷ் சர்மா. அப்படியே ஷாப்டர் வழக்கை விசாரிக்க சர்மாவை கூட்டி வந்தால் - இந்நேரம் காடாத்தி பாலும் ஊற்றி இருக்கலாம். சும்மா வச்சு இழுத்து கொண்டிராமல்.
  5. இந்த சொல்லின் அர்த்தம், தோற்றுவாய் என்ன சாத்ஸ்? செங்கை ஆழியான் ஒரு கதையில் ஒரு போத்துகேயருக்கு வேலை பார்த்த ஒரு பாத்திரத்தை குறிக்க பாவித்திருப்பார்.
  6. இப்படி ஏமாந்த கடைசி ஆளும் நீங்கள் இல்லை. முதல் ஆளும் நீங்கள் இல்லை🤣.
  7. ரணிலுக்கு ஜனாதிபதி ஆசையை விட இன்னுமொரு ஆசை உண்டு: அமைதிக்கான நோபல் பரிசு! இதை அடைய ஒரு தீர்வை எமக்கு தந்ததாக நாடகம் ஆட வேண்டும். இலங்கை பொருளாதாரத்தை மீட்க வேண்டும். இதை வைத்து நாம் எமகு தேவையானதின் 50% ஆவது அடைய முயல வேண்டும். பிகு சும்முக்கும் இந்த நோபல் பரிசு மேல் ஒரு கண் இருக்குமோ?
  8. நன்றி, நான் இங்கே வேணும் என்றே அலகின் தலைமைபீடத்தையும் (முதலமைச்சர்), உள்ளூர் பொலிசின் அரசியல் தலைமை பீடத்தையும் வெவெவ்வேறாக வைத்திருக்க பிரேரித்தேன். இதன் அடிப்படையாக நான் கொள்வது பொலீசின் சுயாதீனத்துவத்தையே. உதாரணமாக வட அயர்லாந்து பொலிசை எடுத்தால். தீர்வுக்கு முன்னதாக அது மாகாண (வட அயர்லாந்து), மத்திய (யூகே) அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் அது இருந்தமை ஒரு தவறாக கருதப்பட்டது. பின்னர் மேலே உள்ளதை ஒத்த ஒரு பொறிமுறை தீர்வின் அம்சமாக ஆகியது. அதே போல் இங்கிலாந்திலும் படிப்படியாக உள்ளூர் பொலிஸ் சேவைகளின் அரசியல் தலைமைதுவத்தை முழுநேர அரசியல்வாதிகளிடம் இருந்து விலத்தும் போக்கு உள்ளது. இலங்கையில் இப்போ பொலிஸ் அதிகாரம் முழுவதும் உள்நாட்டு அமைச்சர், ஜனாதிபதியிடம் குவிந்துள்ளதை நான் ஒரு தவறாக காண்கிறேன். அதன் பிரதி போல், உள்ளூர் பொலிஸ் அதிகாரங்களை கட்டாயம் முதல் அமைச்சரிடம் கொடுக்த்தான் வேணுமா? பொலிஸ் ஆணையாளரை + குழாமை மக்கள் நேரடியாக தேர்வது, அல்லது தேர்தெடுக்க பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூடி ஒரு ஆணையமாக செயல்படுத்தும் போது, கூடிய ஜனநாயக பொறுப்பு கூறலும், ஓருவரிடத்தில் அதிகாரம் குவிவதும் தடுக்கப்படும். அதாவது முதல்வர் அரச பரிபாலனத்தை செய்ய, ஆணையர் அல்லது ஆணையம் சுயாதீனமாக பொலிஸ் வேலையை செய்யலாம் அல்லவா?
  9. நன்றி நொச்சி. கருத்து வைக்கவில்லை என்ற கவலையை விட, நான் சொல்வதை சீர்தூக்கி (scrutinize) பார்ப்பது குறைவாக உள்ளதே என்பதே என் அங்கலாய்ப்பு. ஏமாற்று பட்டதான்பாலான “விரக்தி” எனக்கும் உண்டு. எனக்கும் தீர்வு வரும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் நம் தெரிவுகளை இட்டு நமக்குள் பேசி தெளிவதில் பிழையில்லை என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நம்புகிறேன். நன்றி அண்ணா.
  10. கிறிஸ்மஸ் பார்ட்டி ஓவராய் போனதால் ஹங் ஓவர்🤣 தரவு பிழை: முரசை கடிக்கிறார்
  11. ஓம் சி.ப அப்பா தயவில் தேசிய அணியில் இடம்பெற்றவர். தண்ணி கண்ணை கட்டி விட்டது🤣
  12. முற் குறிப்பு இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம். கோசான் லூஸ்தனமா கற்பனை காண்கிறார் எண்டு நினைக்கிறார்களோ தெரியவில்லை🤣. அல்லது மேற்கின் திட்டத்தை கோஷான் விக்கிறார் என்ற ஐயமோ? அல்லது எழுதுவதை குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம். தர்க்கம்தான் ஒரு விடயத்தை வழுக் களையும். ஆகவே கருத்துக்களை சொல்லுங்கள். எது எப்படியோ 1.3 K பார்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன். —————- உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -3 என் கருத்து உள்ளூர், தேசிய பொலிஸ் படைகளின் அரசியல் தலைமை 1. உள்ளூர் பொலிஸ் சேவையின் அரசியல் தலைமை பொறுப்பை இருவகையில் கைக்கொள்ளலாம். அ. மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பொலிஸ் கமிசனர்கள், இரண்டு அல்லது மூன்று உதவி கமிசனர்கள். இந்த முறையில் கட்சி சார்ந்து அல்லது சாராமல் யாரும் நான்கு பேர் சேர்ந்து ஒரு அணியாக (candidate +3 running mates) போட்டியிடலாம். ஆனால் நால்வரில் தலா ஒரு தமிழர், முஸ்லிம், சிங்களவர் இருக்க வேண்டும். ஆ. அல்லது அலகின் தேர்தெடுக்க பட்ட அரசியல் சபையின் உறுப்பினர்களில் இருந்து கட்சி விகிதாசார அடிப்படையிலும், பெரும்பான்மை இனம்: சிறுபான்மை இனங்களின் கூட்டு 50:50 ஆக இருக்கும் படியும் ஒரு பொலீஸ் ஆணையத்தை அமைக்கலாம். மேலே உள்ள (அல்லது இதை ஒத்த) பொறிமுறைகள் - ஒரு அலகில் வாழும் சிறுபான்மைக்கும் தம்மை ஒழுங்கு படுத்தும் பொலிஸ் மீது நம்பிக்கை, எமது என்ற உணர்வை கொடுக்கும் (confidence and sense of ownership). உதாரணமாக தற்போதைய வடக்கு மாகாணம் ஒரு “அலகு” எனில் அதன் உள்ளூர் பொலிஸ் மீது சோனகரும், சிங்களவரும். அதே போல் தற்போதைய மத்திய மாகாணம் ஒரு “அலகு” எனில் அதன் உள்ளூர் பொலிஸ் மீது தமிழரும், சோனகரும் நம்பிக்கை வைக்க, எமது என உணர இது வழிகோலும். 2. மேலே போல்ட் செய்யபட்ட “நம்பிக்கை” “எமது என உணர்தல்” என்ற தத்துவங்களின் (principles) அடிப்படையில் தேசிய பொலிசின் அரசியல் தலைமையையும் உருவாக்கலாம் (ஏலவே பொறிமுறை பற்றி சொன்னதால் - நீட்டி முளக்கவில்லை).
  13. நீங்கள் சொல்வது சின்ன பகவதி ரமித் ரம்புக்வெல, பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் வெளிக் கதவை திறந்து “உச்சா” போக வெளிகிட்டதை பற்றிய செய்தி என நினைக்கிறேன்.
  14. ஆண்டவரே, 89 வருடமாக இருக்கும் ஆனந்தசங்கரி என்ற பிரச்சனையை தீர்த்து வைக்கமாட்டீரா?🤣
  15. எம்மாடி…ஆத்தாடி…அரசியல்…ஆட்டம்…சும்மாடி… அரைத்த “மாவை”….. அரைப்போமா….. தமிழரசை ரெண்டா…உடைப்போமா…. சும்மா…. சம்மா…. சும்மா… சம்மா… சாணக்ஸ்….விக்கி…. அம்மம்மா…..
  16. 🤣 வந்தே மாதரம்… வருதே மூ…..ம்…. கொண்டுவா பாத்திரம்…. பிடிச்சுக்கோ சீக்கிரம்…. என்ற மகுட வாக்கியத்தையும் இந்திய கொடியில் பொறித்து விற்க எண்ணியுள்ளேன்🤣
  17. கொழும்பில் இருந்து பாரமான தீர்வு பொதியை தூக்கி போக ஆள் வேணும் எண்டு கேட்டபடியால், கொழும்பு போய் யாழ் போகிறேன்🤣
  18. பேசலாம் யுவர் ஆனர் - ஆனால் எல்லாத்துக்கும் ஒரு வரலாற்று பின் புலம், நடக்கும் எண்ணிக்கை இருக்கும். அதை விட்டு விட்டு மேலோட்டமான ஒற்றுமைகளை மட்டும் வைத்து இரெண்டும் ஒன்றென சொல்ல கூடாது. பெண்கள் மீதான அடக்குமுறை என்பது மனித குல வரலாற்றின் கருக்கலில் இருந்து வருகிறது. நிறுவன மயப்பட்டது. அதை பெண்களால் வஞ்சிக்கபடும் ஆண்களோடு ஒப்பிடவே முடியாது. அதாவது - புலிகள் மாற்று இயக்கத்தை அடித்ததும், இலங்கை தமிழரை அடித்ததும் ஒன்றே என வாதாட முடியாது. 👏🏾 சபாஷ் அற்புதமான கருத்துகள்.
  19. ரொம்ப மிரட்டலா இருக்கே😂 எதிர்வுகூறல்கள் தர்கரீதியாக உள்ளன. புதிய வேலைக்கு வாழ்த்து. எல்லா வகையிலும் மிரட்டி விட்டு, கடைசியாக ஒரு நிம்மதியான நம்பிக்கையை தந்துள்ளீர்கள்.
  20. ஒருவர்: இலங்கையில் தமிழர் மீதான ஆண்டாண்டு கால இனவாதத்தை அலசவேண்டும். இன்னொருவர்: வெள்ளவத்தையில் சோமவன்ச மீது சோமசேகரம் இனவாதமாக நடந்ததை ஏன் யாரும் அலசுவதில்லை? மற்றொருவர் : இதை நான் முன்பே எழுதி உள்ளேன். தமிழர் மீதான இனவாதத்துக்கு நிகரானதே சிங்களவர் மீதான இனவாதமும். இரெண்டும் ஒரே அளவிலானவையே. இரெண்டையும் தீர்க்க வேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.